அரசாங்கத்தின் போக்கு பிடிக்காம போராளியா வாழும் ஹீரோ தற்கொலைப்படையா மாறி செய்யும் ஒரு அட்டாக்கில் மிஸ் ஆகி போலீசால் பிடிக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படறார்.தூக்கு தண்டனைக்கைதியா இருக்கும் அவர் , அவரைத்தூக்கில் போடப்போகும் ஆள் , ஜெயில் ஆஃபீசர் இவர்கள் 3 பேருக்கும் இடையே நிகழும் வாத விவாதங்கள் , சம்பவங்கள் தான் கதை .
சாதா ஜனங்களுக்குப்புரிபடாத , புரிபடத்தேவை இல்லாத ஒரு சப்ஜெக்டை மனித நேய இயக்குநர் ஏன் கையில் எடுத்தார்?னு தெரியல.சிறை தண்டனை பெற்ற கைதிகளுக்கான ஆதரவுப்படம்னு சால்ஜாப்பு சொல்ல முடியாம போராளி கம் தீவிரவாதிக்கு ஆதரவா படம் பயணப்படுவதால் பார்வையாளனுக்கு ஏற்படும் குழப்பங்கள் ஒரு பெரிய மைனஸ்
ஹீரோவா போராளியா ஆர்யா. ஆஜானுபாவமான உயரம் , உணர்ச்சிகளை வெளிக்காட்டாத பாறை முகம், தெனாவெட்டு இவை எல்லாம் இயற்கையாகவே ஆர்யாவிடம் இருப்பதால் கேரக்டரை உள் வாங்கி நடிப்பதில் அவருக்கு பெரிய ரிஸ்க் எதுவும் இல்லை . .குட் ஆக்டிங்க்
இன்னொரு ஹீரோவா தூக்கு தண்டனைக்கைதிகளை தூக்கில் போடும் ஆளாக விஜய் சேதுபதி.. இவர் இரண்டாம் ஹீரோவாக நடிப்பதைக்குறைத்துக்கொள்வது அல்லது தவிர்ப்பது அவரின் முன்னேற்றத்துக்கு நல்லது. நட்புக்காக , பழக்கத்துக்காக என அவர் அடிக்கடி இப்படி செகண்ட் ஹீரோவாக நடித்தால் மலை உச்சியை அடைய வேண்டிய பயணத்தில் அடிக்கடி ஓய்வு மண்டபத்தில் தங்கிச்செல்லும் பெண்ணின் பின்னடைவு போல் ஆகி விடும். குடிகாரராக ஓப்பனிங்கில் இவர் பேசும் டயலாக்கிற்கு ஆடியன்ஸ் அப்ளாஸ் அ<ள்ளுது.ஆனால் போகப்போக எடுபடவில்லை
நாயகியாக வில் போல் புருவம் கொண்ட கார்த்திகா. மிலிட்ரி டிரஸ்சில் அவர் ஸ்லோ மோசனில் ஓடி வரும்பொபோது இயக்குநரின் கண்ணியத்தையும் மீறிய கிளாமரில் பரிமளிக்கிறார்,
கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக ஷாம், போலீஸ் ஆஃபீசர்க்கான மிடுக்கும் ஜெயிலருக்கான தோரணையும் அருமை, ஆனால் ஆர்யா , விஜய் சேதுபதி நடிப்புக்கு முன் பிரமாதப்படுத்த முடியவில்லை.அவர் கெட்டப்பில் மீசை இருப்பது போல் காட்டி இருக்கலாம்
பின்னணி இசை பிரமாதப்படுத்தவில்லை. ஒளிப்பதிவு பாடல்கள் இசை எல்லாம் சராசரி ரகமே இயக்குநர் தன் முந்தையப்படங்களில் பாடல்கள் ஒளிப்பதிவுக்கு தனி கவனம் செலுத்தி இருந்தார்.
மனதைக் கவர்ந்த வசனங்கள்
1 நீ கொஞ்ச நாள் ல சாகப்போகும் தூக்கு தண்டனை கைதி.என்ன எழுதப்போறே?
எல்லாரும் தான் சாகறோம்..சாகறதுக்கு முன் என்ன செய்யறோம்கறதுதான் முக்கியம்
2 இந்த உலகத்துல எல்லா கண்டுபிடிப்புகளும் மக்களுக்காகத்தான்.ஆனா பணத்துக்காக அதை செய்வது தப்பு
3 ஷாம் (S I ) = உன் கிட்டே ஒரு விஷயம் பேசனும்
விஜய் சேதுபதி= சாரி சார்.சரக்கடிச்ட்டு இருக்கும்போது நான் பேச மாட்டேன்
4 பாலு ஒரு குற்றவாளி .அவனைத்தூக்கில் போட ஏன் தயங்கறே?
பாலு குற்றவாளி னு யார் சொன்னா?
பாலுவே சொல்வான்.டவுட்னா கேட்டுப்பாரு
5 சட்டப்படி எக்ஸ்பீரியன்ஸ்டு ஹேங்க்மேனைத்தான் என்னை தூக்கில் போட விடனும். இவனைப்பார்த்தா காமெடியன் மாதிரி இருக்கான்? # பு
6 அரசாங்கத்துக்காக வேலை செய்யும் எல்லா இன்ஃபார்மர்சுக்கும் இப்படி கெட்ட பேர் தான் கிடைக்கும் @ பு
7 உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்னு சொல்றோம், ஆனா உலக முதலாளிகள்தான் ஒண்ணு சேர்றாங்க # பு
8 மக்களுக்காகத்தான் போராளிகள் பாடுபடறாங்க. ஆனா உலகம் அவங்களை தீவிரவாதினு சொல்லுது # பு
படம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 இயற்கை ,ஈ ,பேராண்மை போன்ற மாறுபட்ட கதைக்களனில் முத்திரை பதித்த ஜனநாதனின் புறம்போக்கு பொதுவுடைமை ஜெயில் பின்னணியில்
2 அம்மா ராதா பரிசல் ஓட்டுச்சு.பொண்ணு கார்த்திகா புல்லட் ஓட்டுது.அடடே!
3 ஸ்டாப் னு வாசக பனியன் போட்டு இருக்கு கார்த்திகா.ஹீரோ எதும் ஆரம்பிக்கவே இல்லையே?
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 முழுக்க முழுக்க ஜெயில் பின்னணியில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்னும் பெருமையை தட்டிப்பறிக்குது ( மகாநதி பாதிதான்)
2 வசனகர்த்தா கம்யூனிச வசனங்களில் அப்ளாஸ் அள்ளறார்
3 தீவிரவாதிக்கான சீரியஸ்னெஸ் எதுவும் கார்த்திகாவிடம் காண முடியாதது மைன்ஸ்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 ஜெயிலில் புரட்சி செய்யும் ஆர்யா 2000 பேர் இருக்க வேண்டிய ஜெயிலில் 3000 பேர் இருக்காங்க என வசனம் பேசும்போது அவருடன் ஜஸ்ட் 85 பேர்தான் இருக்காங்க., அட்லீஸ்ட் 500 பேரையாவது காட்ட வேண்டாமா> ஆனானப்பட்ட கலைஞரே கட்சிக்கூ ட்டத்தில் ஆள் சேர்க்கப்போராடும்போது நீங்க ஏன் அப்டி பண்ணலை>
2 பல்லாண்டு வாழ்க படத்தில் எம் ஜி ஆர் தூக்கு தண்டனைக்கதிகளுக்காக ஆதரவா வசனம் பேசுவார் , அப்போ ஏற்பட்ட பரிதாபம் கூட இந்தப்படத்தில் கைதிகளிடம் ஏற்படலை, அல்லது அதுக்கான சம்பவங்களை திரைக்கதையில் காட்டலை
3 வித்தியாசமான இயக்குநரான ஜனா சராசரி மசாலா இயக்குநர். போல் பொருந்தாத இடத்தில் டூயட் , ஜெயிலில் குத்தாட்டம் என மதி மயங்கியது’’’’’ ஏனோ?
4 உயிரே படத்தில் மனீஷா கடைசி வரை மனதில் சலனங்களுக்கு இடம் கொடாமல் இருப்பார். ஆனால் கார்த்திகா என் கடைசி ஆசை என்னனு கேட்கலையா> ஆர்யா கிட்டே கேட்டு டான்ஸ் ஆடி கில்மா பண்றார், தீவிரவாதிகளுக்கு ஆசையே இருக்கக்கூடாதே ம், அதென்ன கடைசி ஆசை?
5 பொதுவா தீவிரவாதிங்க தற்கொலை தாக்குதலில் சொதப்பல் ஆனா ஆல்ட்டர்நேட்டிவ் அரேஞ்ச்மெண்ட்ஸ் வெச்சிருப்பாங்க, அதுவும் ரிமோட்டை ஒரு பெண் கையில் தரும் ஆர்யா சப்போஸ் கடைசி கட்டத்தில் அவர் மனசு மாறினா என்ன செய்ய > என எதுக்கும் ரெடி ஆகலையே? அது ஏன்
6 ஆர்யாவைத்தூக்கில் போடத்துடிக்கும் ஷாம் சிம்பிளா என்கவுண்ட்டரில் போட்டுத்தள்ளி இருக்கலாமே? அடிக்கடி அதுதான் அவர் ரூட் னு டயலாக் வேற பேசறார்.
7 தூக்கு தண்டனை நிறைவேற்றும் ஆள் என்ன என்ன ஃபார்மாலிட்டிஸ் செய்வார்? என ஜெய்ல் ஆஃபீசருக்கு தெரியாதா> ஷாம் ஏன் விஜய் சேதுபதியிடம் விளக்கம் கேட்கறார்?
8 தூக்கு தண்டனை நிறைவேற்றும் ஆள் அதிக அனுபவம் உள்ள ஆளா இருக்கனும்னு சட்டம் சொல்லுது, ஆனா விஜய் சேதுபதிக்கு 28 வயசு போல் காட்டறாங்க,
’’
9 தூக்கு தண்டனை கைதி தப்பி ஓடும்போது அவனை சுடாதீங்க , உயிரோட பிடிக்கனும்னு ஒரு டயலாக் வருது. முழங்காலுக்கு கீழே சுடலாமே?
10 தீவிரவாதியா வரும் கார்த்திகா ஸ்லீவ்லெஸ் பனியன் எல்லாம் போட்டுட்டு வருது. அது என்ன கிளப்ப்புக்கா போகுது> டிரஸ் மேட்சிங்கா இல்ல. ஆனா கிளுகிளுப்பா இருக்கு,. ஆனாலும் நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு
11 தூக்கு தண்டனைக்கைதிக்கு ஒரு நாள் முன்னதாகவே அறிவிக்காமல் தூக்கு போடுவது சமீபத்தில் நிகழ்ந்த ஒரு தீவிரவாதி தூக்கு போல் இருக்கு, சென்சார் விதி எப்படி இதை அனுமதிச்சுது>
12 நல்ல இயக்குநர் தவறான கதைக்கருவை தவறான முன் உதாரணம் ஆக்கி எதிர்மறை கருத்துடன் திரைக்கதை அமைத்திருப்பது நல்ல சினிமாவுக்கு நல்லதல்ல
12 நல்ல இயக்குநர் தவறான கதைக்கருவை தவறான முன் உதாரணம் ஆக்கி எதிர்மறை கருத்துடன் திரைக்கதை அமைத்திருப்பது நல்ல சினிமாவுக்கு நல்லதல்ல
சி பி கமெண்ட் . புறம்போக்கு பொதுவுடமை - முன் பாதி கம்யூனிச வசன ஆதிக்கம், பின் பாதி இயக்குநரின் ஆதிக்கம் - விகடன் மார்க் = 41 . ரேட்டிங் = 3/5 ஏ செண்ட்டர் ஃபிலிம்
ஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 41
குமுதம் ரேங்க் ( கணிப்பு) p= ok
ரேட்டிங் = 3 / 5
ஈரோடு ராயல் தியேட்டரில் படம் பார்த்தேன்