Showing posts with label புறம்போக்கு. Show all posts
Showing posts with label புறம்போக்கு. Show all posts

Sunday, March 08, 2015

புறம்போக்கு -ஆர்யா, விஜய்சேது பதி, ஷாம், கார்த்திகா யார் டாப்?-இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். பேட்டி

  • ‘புறம்போக்கு’ படத்தில் விஜய்சேதிபதி, கார்த்திகா
    ‘புறம்போக்கு’ படத்தில் விஜய்சேதிபதி, கார்த்திகா
  • ‘புறம்போக்கு’ படத்தில் விஜய்சேதிபதி, ஷாம், ஆர்யா
    ‘புறம்போக்கு’ படத்தில் விஜய்சேதிபதி, ஷாம், ஆர்யா
‘‘இந்த சமூகத்தின் எல்லா பிரதிபலிப்புகளும் சிறைச்சாலைக்குள்ளும் இருக்கிறது. சிறைக்குள் ஒரு பயங்கரவாதியும் இருந்திருக்கிறான். உலகை மாற்றி அமைக்க முயற்சித்த ஒரு புரட்சியாளனும் இருந்திருக்கிறான். ‘சிறைச்சாலைக்குள் நுழையும்போது ஒரு கிராமத்துக்குள் நுழையும் மனநிலையோடு செல்’ என்கிறார் மாவோ.
‘புறம்போக்கு’ படத்தின் வழியே நானும் அப்படித்தான் நுழைய முயற்சி செய்திருக்கிறேன்’’ என்று பேசத் தொடங்குகிறார், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.
‘புறம்போக்கு’ படத்தின் படப்பிடிப்பை முடித்து, டப்பிங் மற்றும் ஒலி, ஒளிக் கலவை பணிகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தவரிடம் பேசியதிலிருந்து…
இந்தப் படத்துக்காக ஆர்யா, விஜய்சேது பதி, ஷாம், கார்த்திகா ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
குலுமணாலியில் பனிப்பொழிவோடு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி னோம். வாசல் கடந்து இறங்கினால் 2 அடி முதல் 3 அடி வரை பனி இருக்கும். 60 பேர் கொண்ட குழுவோடு சரியாக திட்டமிட்டு புறப்பட்ட பயணம் அது. கிட்டத்தட்ட 50 நாட்கள்.
ஒட்டுமொத்த யூனிட்டுக்கும் இன்ஷூரன்ஸ் எடுக்கப் பட்டு படப்பிடிப்புக்கு புறப்பட்டோம். எந்த பாதிப்பும் இல்லாமல் படப்பிடிப்பை முடித்தோம். ஒரு கட்டத்தில் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது. அந்த பாதிப்புக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி பயனுள்ளதாக இருந்தது.
இரவு மரங்கள் மீது தூங்கும் பனி காலை 7 மணிக்கு சூரியன் உதித்ததும் உருகிவிடும். மரங்களில் பூத்திருக்கும் அந்த பனித் துளிகளை படமாக்குவது எனது திட்டம். அதனால் அதிகாலை நேரத்திலேயே ஆர்யாவும், கார்த்திகாவும் மேக்கப் போட்டுக்கொண்டு தயாராக இருந்தனர். ‘ஃபர்ஸ்ட் காப்பி’ அடிப்படையிலான தயாரிப்பு என்பதால் எல்லா முடிவு களையும் நானே எடுக்க முடிந்தது.
இப்படத்துக்கு இயல்பான ஆட்கள் அமைந்தது இலகுவாக படப்பிடிப்பை நகர்த்த உதவியது. ஆர்யாவுக்கு ஷூட்டிங் இல்லை என்றால்கூட அன்று செட்டில் இருப்பார். இதனால் யாருடைய பகுதியையும் எப்போது வேண்டுமானாலும் எடுக்கும் சூழல் அமைந்தது.
அரசியலை ஆழமாக உற்று நோக்கு பவர் நீங்கள். நம் நாட்டில் கார்ப்பரேட் கலாச்சாரம் வேரூன்றி வருகிறதே?
ஏங்கெல்ஸ் ஒரு இடத்தில் குறிப்பிட் டுள்ள விஷயம் இங்கே நினைவுக்கு வருகிறது. ஒரு கிராமத்தில் ஆண்டொன் றுக்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல் உற்பத்தி செய்கிறார்கள். அதற்காக 5000 பேர் வேலையும் செய்கிறார்கள். நிகர லாபமாக ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கிறது. இந்த நேரத்தில் அந்த கிராமத்துக்கு ஒரு வங்கி வருகிறது.
அதே நிலத்தில் நெல்லுக்கு பதில் புல் விளைவிக்கலாம் என்றும், அதை ஆடுகளுக்கு உணவாக்கி, வளர்ந்த ஆடுகளை விற்கும்போது ஆண்டுக்கு ஒன்றரை கோடி லாபம் கிடைக்கும் என்றும் யோசனை கூறுகிறது வங்கி. மேலும், இந்தப் பணிக்கு 5000 பேர் தேவையில்லை. கிராமத்தில் இருக் கும் 500 பேர் உழைத்தால் போதும் என்ற யோசனையையும் முன் வைக்கிறது.
நல்ல யோசனை என்று கிராம மக்கள் ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஆண்டின் முடிவில் வங்கி கூறியதுபோல நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால், அந்த கிராமத் தில் வேலையில்லாமல் இருந்த 4500 பேரும் ஊரைவிட்டு வெளியேற வேண் டிய கட்டாயம் உருவாகிறது.
ஏங்கெல்ஸ் இங்கே, ‘ஆடுகள் மனிதனை துரத்தி விட்டன’ என்று முடித்திருப்பார். சரியான பொருளாதார அறிஞர்களால் நாடு வழிநடத்தப்படுகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. நாட்டில் இன்றைக்கு பூதாகரமாக வளர்ந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியால் நாம் வாழ முடியாத நிலை ஏற்படும் என்கிற அச்சம் உண்டாகிறது. எல்லாவற்றிலும் அந்நிய மூலதனம் வருவது தவறு. இது எதிர்கால சந்ததியை வேறொரு இடத்துக்குத் தள்ளிவிடும்.
தற்போதைய சினிமா லாபத்தை மட்டுமே இலக்காக கொண்டிருப்பதாக கூறப்படுகிறதே?
சினிமாவின் மூலம் சமூக மாற் றத்துக்கு வித்திட முடியும் என்கிற போக்கு மாறி லாபம் மற்றும் வரு மானத்தை நோக்கிய பயணமாக இது மாறிவிட்டது. இது சரியாகப் படவில்லை. இது தொடர்ந்தால் தெருக்களை திரையரங்குகளாக மாற்றுவதுதான் சரியாக இருக்கும் என்று படுகிறது. படத்தை வெளியிட திரையரங்குகளே கிடைக்கவில்லை என்றால் சாலையோரத்தில் வேட்டி கட்டி படம் காட்ட வேண்டியதுதான்.
மலையாள இயக்குநர் ஜான் ஆப்ரஹாம், ‘அம்ம அறியான்’ என்ற ஒரு படத்தை எடுத்தார். கிராமம் தோறும் நிதி வசூல் செய்து, படத்தை எடுத்து, அதே மக்களிடம் போட்டுக் காட்டினார். அதற்கென ஒரு அமைப்பை உருவாக்கி கேரளா முழுக்க படத்தை திரையிட்டார். திரையில் தோன்றும் அவர்கள்தான் நேரிலும் வந்து தெருவில் திரைப்படத்தை போட்டுக் காட்டிவிட்டு செல்வார்கள். ஜான் ஆப்ரஹாம் கஷ்டப்பட்டு செய்ததை இன்றைய டிஜிட்டல் வளர்ச்சியால் எளிதாக செய்ய முடியும்.
மெகா சினிமாவில் புதிய அனுபவங்களோடு மக்களை பார்க்க வைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அது சாத்தியமே இல்லை என்றால் ஜான் ஆப்ரஹாம் செய்தது மாதிரி கிளம்ப வேண்டியதுதான்.
‘ஃபர்ஸ்ட் காப்பி’ அடிப்படையில் படத் தைத் தொடங்கிவிட்டு அதை முடிக்க அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட காரணம் என்ன?
தாமதம் எல்லாம் இல்லை. குறித்த காலத்தில் படத்தை முடித்திருப்பதாகவே கருதுகிறேன். மூன்று ஹீரோக்கள், மும்பையில் உள்ள நாயகி என்று எல்லோரையும் ஒன்றிணைத்து. பணி யாற்ற வேண்டும். குலுமணாலி, ஜெய் சால்மர், பெங்களூரு, சென்னையில் சிறைச்சாலை செட் என்று லொக்கேஷன் களை அமைக்கவே நிறைய காலம் ஆனது.
நான் இமாச்சல பிரதேசத்தில் ஷுட்டிங்கில் இருக்கும்போது சென்னை யில் சிறைச்சாலை செட்டை போட முடி யாது. ஒவ்வொரு நாளும் கூடவே இருந்து அறைகள் தொடங்கி அறை யின் வண்ணம் வரைக்கும் சரியாக கவனிக்க வேண்டும். இந்த சிறைச் சாலை செட்டுக்கே 2 மாதங்கள் எடுத்துக்கொண்டோம். அதில் படப் பிடிப்பு 2 மாதங்கள். ஆகமொத்தம் 4 மாதங்கள் ஆனது.
அப்படி பார்க்கும்போது சரியான நேரம்தான் எடுத்துக்கொண்டோம். எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக கதைக்களத்தை அமைத்திருந்தேன்.
விவசாயத்தை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கவிருப்பதாக கூறினீர் களே?
விவசாயத்துக்கு உகந்த நிலப்பரப்பு நம்முடையது. அதை சரியாக பயன் படுத்தவில்லை. விளை நிலங்களின் உற்பத்தி இந்த ஆண்டு மட்டும் 6 சதவீதம் குறைந்திருப்பதாக கணக் கெடுப்பு கூறுகிறது. பாரம்பரிய விதை களை நாம் காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழலை இந்த கார்ப்பரேட் கம்பெனிகள் உருவாக்கி வைத்திருக் கிறது.
ஒவ்வொரு பகுதி மண்ணின் வெப் பத்துக்கும், குளிர்ச்சிக்கும் விதைகளின் பரிணாம மாற்றம் உண்டு. இதெல்லாம் இப்போது நமக்கு மட்டுமே என்று இல்லை. யாரிடமோ பணம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. இதெல்லாம் மர்மமான பிரச்சினைகள்தான்.
இப்படி விவசாயப் பின்னணியில் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பிரம்மாண்ட படம் எடுக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. அது அடுத்த படமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பார்க்கலாம்.
எஸ்.பி.ஜனநாதன்


நன்றி- த  இந்து

Monday, February 16, 2015

புறம்போக்கு

புறம்போக்கு படத்தில் நடிகர் ஆர்யா
புறம்போக்கு படத்தில் நடிகர் ஆர்யா

எல்லா தினமும் காதலர் தினம்தான்: ஆர்யா பேட்டி

தமிழ் சினிமாவில் இப்போதைய ‘காதல் இளவரசன்’ யார் என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட ஆர்யாவின் பெயரைத்தான் சொல்லும். ஆர்யாவை காதலர் தின ஸ்பெஷல் பேட்டிக்காக சந்தித்தோம்.
“பாஸ்... நான் அந்த மாதிரி ஆளில்லை. ஏன் என்னை திரும்பவும் வம்பில் மாட்டி விடு றீங்க” என்று முதலில் நழுவினாலும், பிறகு சகஜமாக கேள்விகளை எதிர்கொண்டார் ஆர்யா.
‘புறம்போக்கு’ படத்தில் மறுபடியும் ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கிறீர்களே?
‘புறம்போக்கு’ வழக்கமான ஆக்‌ஷன் படம் கிடையாது. இது இயக்குநர் ஜனநாதனின் படம். அவருடைய படங்கள் வழக்கமான பாணியில் இல்லாமல் ஏதாவது ஒரு சமூகப் பிரச்சினையை எடுத்துச் சொல்லும். அதே நேரத்தில் அதில் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருக்கும். இந்தப் படமும் அப்படித்தான். ‘புறம்போக்கு’ என்னை ஒரு நல்ல இடத்துக்குக் கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்.
தொடர்ச்சியாக இரண்டு நாயகர்களைக் கொண்ட படங்களில் நடிக்கிறீர்களே?
இரண்டு, மூன்று நாயகர்கள் நடிக்கும் படம் என்றால் அதில் கதையும், திரைக்கதையும் கொஞ்சம் மாறுபட்டு இருக்கும் என்பது என் நம்பிக்கை. அதற்காக நான் தனி ஹீரோ படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. வித்தியாசமான கதைகளை தேடுகிறேன் என்றுதான் சொல்கிறேன். நிறைய நடிகர்கள் நடித்தால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். ‘புறம்போக்கு’ படத்தில் நான், ஷாம், விஜய் சேதுபதி என்று எங்கள் மூவருக்குமே முக்கியமான பாத்திரம்தான். இந்தப் படத்தின் நிஜ ஹீரோ ஜனநாதன் சார்தான். நாங்கள் மூவருமே அல்ல.
ஆக்‌ஷன் படங்களில் நடிக்க ஆரம்பித்தாலும், ப்ளேபாய் இமேஜ் உங்களை துரத்திக் கொண்டிருக்கிறதே?
நான் எந்த இமேஜுக்குள்ளும் மாட்டிக் கொள்ள கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் திரையுலகினரும் சரி, மக்களும் சரி என்னை அப்படி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘ராஜா ராணி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ போன்ற படங்களின் தாக்கம்தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
உங்களுடன் நடிக்கும் நாயகிகளுக்கு நெருக்கமான நண்பராக வலம் வருகிறீர்கள். அதன் ரகசியம் என்ன?
ஒரு ரகசியமும் கிடையாது. நீங்கள் ஒரு படப்பிடிப்புக்கு போனால் உங்களுடன் நடிக்கும் நாயகியுடன் பேச மாட்டீர்களா? 3 முதல் 4 மாதம் வரை தொடர்ச்சி யாக படப்பிடிப்பு இருக்கும்போது அவர்களுடன் தொடர்ந்து பேசு வோம். அது நட்பாக மாறுகிறது. நான் எப்போதும் நட்புக்கு மரி யாதை கொடுப்பவன்.
படங்களின் வெற்றி தோல்வி மட்டுமின்றி, உங்களைப் பற்றி வரும் செய்திகளையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்களே.. எப்படி?
படங்களின் வெற்றி, தோல்வி என்பது என் கையில் இல்லை. அது மக்கள் கையில் இருக்கிறது. ஒரு படம் எதனால் வெற்றியடைந்தது, எதனால் தோல்வியடைந்தது என்று அலசி ஆராயும் நேரத்தில் நான் என்னுடைய உழைப்பை அடுத்த படத்துக்கு செலவிடுவேன். ஒரு படம் தோல்வியடைந்தால் ஏதோ ஒரு இடத்தில் மிஸ் ஆகிவிட்டது என்று நினைப்பேன். அதுபோல் ஒரு படம் வெற்றியடைந்து விட்டாலும் அதை என் தலையில் ஏற்றிக்கொள்வதில்லை. ஏனென்றால் அது என்னுடைய வெற்றியல்ல; ஒட்டுமொத்த படக்குழுவினரின் வெற்றி.
அதேபோல என்னைப் பற்றி வரும் செய்திகளுக்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்தால் படங்களில் நடிக்க எனக்கு நேரம் இருக்காது. அதனால் நான் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
‘அமர காவியம்’ படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?
என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல படத்தை தயாரித்த திருப்தி கிடைத்தது. வசூல் ரீதியில் படம் சரியாக போகாவிட்டாலும் நல்ல படம் என்று விமர்சகர்களின் பாராட்டு கிடைத்தது. அதுவே எனக்கு சந்தோஷம்.
காதல் பற்றி உங்கள் கருத்து என்ன?
காதல் அனைவருடைய வாழ்க்கையிலும் ஒரு அற்புதமான விஷயம். பெற்றோர், நண்பர்கள், மனைவி இவை அனைத்தையும் தாண்டி ஒவ்வொருவருக்கும் அவருடைய முதல் காதல் மனதுக்குள் இருக்கும். அப்படி இல்லை என்று ஒருவர் சொன்னால் அவர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம். என்னை பொறுத்தவரை பிப்ரவரி 14 மட்டும் காதலர் தினம் அல்ல. காதலர்களுக்கு தினமும் காதலர் தினம்தான்.
நீங்கள் காதலித்திருக்கிறீர்களா? காதலுக்காக கிறுக் குத்தனமாக எதையாவது செய்திருக்கிறீர்களா?
மாட்டிவிடுறீங்களா?.. நான் காதலிக்கவே இல்லை என்று சொல்லவில்லையே. காதலித் திருக்கிறேன். காதலுக்காக செய்த ஒவ்வொரு விஷயமும் கிறுக்குத்தனமான விஷயம்தான். காதலியின் பிறந்த நாளன்று ஒவ்வொரு காதல னும் நண்பர்களிடம், ‘காதலிக்கு என்ன வாங்கி கொடுக்கலாம்’ என்று யோசனை கேட்பார்கள். வாழ்த்து அட்டை, பூ, கீ-செயின், உடைகள் இப்படி எல்லாமே பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். இப்படி காதலுக்காக செய்த எல்லாமே பிற்காலத்தில் கிறுக்குத்தனமாகத் தோன்றும்.
எப்போது திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறீர் கள்? உங்களுடையது காதல் திருமணமாக இருக்குமா?
கண்டிப்பாக காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். அது எப்போது என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த விஷயத்தில் எனக் கும் விஷாலுக்கும் போட்டி நடந்து கொண்டிருக் கிறது. முந்துவது விஷாலா அல்லது நானா என்பது எங்கள் இருவரது கையிலும் இல்லை.
உங்களது பெண் தோழிகளில் உங்களுக்கு நெருக்கமானவர் யார்?
உண்மையைச் சொன்னால் திரையுலகில் எனக்கு நெருக்கமான தோழிகள் இல்லை. என்னு டைய பள்ளி மற்றும் கல்லூரித் தோழிகள்தான் இப்போதும் எனக்கு நெருக்கம். நான் ஒன்றும் இல்லாதவனாக இருந்த காலம் முதல் இன்று வரை அந்த நட்பில் விரிசலே ஏற்பட்டதில்லை. என்னுடைய வாழ்க்கையில் நான் சம்பாதித்து வைத்திருக்கும் மிகப்பெரிய சொத்தாக இதைப் பார்க்கிறேன்.


thanx - the hindu

Thursday, April 24, 2014

ரேஸ் குர்ரம்' vs புறம்போக்கு'

தெலுங்கில் வெளியாகியுள்ள 'ரேஸ் குர்ரம்' படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார் ஷாம். அதுமட்டுமன்றி, தமிழில் ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணைந்து ஜனநாதன் இயக்கத்தில் 'புறம்போக்கு' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஷாமுடன் பேசிய போது.. 



தெலுங்கில் வெற்றி அனுபவம் எப்படி உணர முடிகிறது?


 
" தெலுங்கில் என்னை 'கிக்' படத்தில் அறிமுகம் படுத்தியவர் சுரேந்தர் ரெட்டி. வெற்றிப் பட டைரக்டர். அந்த'கிக்' படம் சூப்பர் ஹிட். டைரக்டர் சுரேந்தர் என் மீது அன்பு கொண்டவர். அவரது அடுத்த படமான 'ஊசுற வல்லி' படத்தில் எனக்கு ஒரு சிறு ரோல் கொடுத்திருந்தார். அது என் மேல் வைத்துள்ள அன்புக்காகக் கொடுத்த வாய்ப்பு. அடுத்து அவர் கொடுத்த அர்த்தமுள்ள வாய்ப்புதான் 'ரேஸ் குர்ரம்'. அப்படி என்றால் ’வேகமாக ஓடும் குதிரை’ என்று அர்த்தம். இன்று பாக்ஸ் ஆபிஸில் வேகம்' எடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது."
பொதுவாக தெலுங்கு திரையுலக அனுபவம் எப்படி உள்ளது?
''தெலுங்கில் எனக்கு இது 3 வது படம். இரண்டாவது ஹிட்படம். அங்கு தமிழ் நடிகர்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது. அதற்கான அடித்தளம் கமல்சார், விக்ரம்சார் ஆகியோரால் போடப்பட்டு இருக்கிறது. அவர்கள் போட்டுக் கொடுத்துள்ள பாதையில் என்னைப் போன்றவர்கள் சுலபமாக நடக்க முடிகிறது. இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் பாணி அங்கும் தொடங்கியுள்ளது. இது ஆரோக்யமான அறிகுறி. ரவி தேஜாவும் சரி அல்லு அர்ஜுனும் சரி இணைந்து நடித்த போது ஈகோ பார்க்காமல் பேசிப் பழகி அன்பு காட்டினார்கள்.
தமிழில் கூட ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளீர்களே?
''ஆம். 'புறம்போக்கு' படத்தில் அவர்களுடன் இணைந்து நடிக்கிறேன். எனக்கு புதிய பாதையை போட்டுக் கொடுத்த படம் 'இயற்கை'. அதை இயக்கிய எஸ். பி. ஜனநாதன் என்கிற திறமைசாலியின் படம்தான் 'புறம்போக்கு'. இதில் நாங்கள் மூன்று பேரும் இணைந்திருக்கிறோம். ''
"புறம்போக்கில் உங்கள் பாத்திரம் எப்படி?"
''புறம்போக்கில் என் பாத்திரத்தின் பெயர் மெக்காலே. பெயர் வரும்போதே 'மெக்காலே; சட்டத்தின் ஆட்சி 'என்று வரும். அந்த அளவுக்கு சட்டத்தை மதிக்கும் போலீஸ் அதிகாரி.சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று நம்புகிறவர். அதன்படி நடக்கிறவர். ஒரு வெளிநாட்டுப் பெண் தான் எனக்கு ஜோடி.
போலீஸ் கனவில் மெக்காலே லண்டன் போய் படித்து வந்தவர். எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டும் என்று விரும்புகிற பிடிவாதம் உள்ளவர். எத்தனையோ போலீஸ் அதிகாரிகளைப் பார்த்திருப்போம்.இதுவழக்கம் போலில்லை. இதை புதிய பரிமாணத்தில் ஜனநாதன் உருவாக்கியிருக்கிறார். ஸ்டைலிஷாக இருக்கும்.
நான் சட்டத்தை மதிக்கிற பாத்திரம் என்றால் ஆர்யா சட்டத்தை மிதிக்கிறவர். விஜய் சேதுபதி இன்னொரு பக்கம். எங்கள் இரண்டு பேருடனும் அவர்தொடர்பில் இருப்பவர் .படத்தில் எங்கள் 3பேரின் பாத்திரங்களும் 3 மாதிரியாக இருக்கும். ஒன்றுக்கொன்று பொருந்தாத தனியான குணம் கொண்டவை. இதில் என்ன வேடிக்கை என்றால் மூன்று பாத்திரங்களுமே தனித்தனி ஐடியாலஜி கொண்டவை. தான் நினைப்பதே சரி,செய்வதே சரி என்று இருப்பவர்கள் ''
உங்களில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும்?
''மூவருக்கும் பேலன்ஸ் செய்துதான் காட்சிகள் வைத்திருக்கிறார்.''
ஆர்யா, விஜய்சேதுபதியுடன் நடித்த அனுபவம் பற்றி..?
'உள்ளம் கேட்குமே' படம் முதல் ஆர்யா எனக்கு பழக்கம். ஆர்யா என் தம்பி மாதிரி, அவன் வீட்டில் இல்லை என்றாலும் அவன் அம்மாவிடம் உரிமையுடன் சாப்பிடும் அளவுக்கு குடும்ப நண்பன்.
ஆர்யாவின் வளர்ச்சி எனக்குப் பெருமையாக இருக்கிறது. பாலா படத்துக்கு காட்டிய 3 வருட உழைப்பு சாதாரணமல்ல. 'மதராசபட்டினம்' 'பாஸ் என்கிற பாஸ்கரன்' 'ராஜாராணி' என அவனது வளர்ச்சிகள்,வெற்றிகள் சந்தோஷமாக இருக்கிறது.
விஜய் சேதுபதியின் வளர்ச்சியும் பிரகாசமாக இருக்கிறது. அவரும் பலவருடம் போராடி இருக்கிறார். தனக்கென ஒரு இடத்தை 'பீட்சா' 'சூதுகவ்வும்' படங்கள் மூலம் பிடித்துள்ளார். எப்போதும் அவர் ஜாலி சந்தோஷ மூடில் இருப்பவர். இப்போது இனிய நண்பராகி விட்டார். எங்களுக்குள் எவ்வித ஈகோவும் கிடையாது. ஆரோக்கியமான நட்பு மட்டுமே இருக்கிறது. எங்களுக்குள் எவ்வித போட்டி பொறாமை.. எதுவுமே இல்லை. இயல்பாக சௌகரியமாகப் போய்க் கொண்டு இருக்கிறது
.'புறம்போக்கு’ படத்தில் ஆர்யாவும் நானும் நடித்த காட்சிகள் பெங்களூரில் படமானது. ஏப்ரல் 16 முதல் விஜய் சேதுபதியுடன் சென்னையில் நடிக்கப் போகிறேன். ஜூன் மாதம் முதல் நாங்கள் மூன்று பேரும் 44 நாட்கள் இணைந்து நடிக்க இருக்கிறோம். புறம்போக்கு ஒரு பொலிடிக்கல் த்ரில்லராக இருக்கும்.''
'6 மெழுகுவர்த்திகள்' படத்தில் நடித்ததில் உழைப்புக்கேற்ற பலன் கிடைத்ததா?
''சில சூழ்நிலைகளால் தப்பான மாதிரி சில படங்கள் அமைந்தன. '6' படத்துக்கு முன் என்னைப்பற்றி மாறுபட்ட அபிப்ராயங்கள் இருந்தன. ஆனால் இப் படத்துக்குப் பிறகு ஷாம் அர்ப்பணிப்புள்ள நடிகர் என்கிற பெயர் வந்திருக்கிறது.
பலவிதங்களில் திறமைகாட்ட முடிகிற நடிகர் என்கிற பெயரை'6' படம் எனக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. முன்பெல்லாம் கண்ணில் படும் 10 பேரில் 2 பேர் என்னைக் கண்டு கொள்வார்கள். இப்போது 8 பேர் பேசுகிறார்கள். ஊக்கம் தருகிறார்கள். மரியாதை தருகிறார்கள் எனக்கு புது உற்சாகம் தருகிறார்கள். கௌரவம் கூடி இருப்பதாக உணர முடிகிறது. ஷாம் விளையாட்டுத்தனமான நடிகரல்ல. அவருக்கும் முயற்சி செய்கிற ஆர்வம் இருக்கிறது வாய்ப்பு கொடுத்தால் வெளிப்படுத்தும் திறமை இருக்கிறது என்று '6' படம் பேச வைத்திருக்கிறது. அதற்கான வணிகரீதியிலான பலனை இனிதான் அடைய வேண்டும்.''
சொந்தமாக '6' படம் தயாரித்ததில் சிரமங்களை உணர்ந்தீர்களா?
''படம் பெரிதாக வசூல் இல்லை என்றாலும் திட்டமிட்டு எடுத்ததால் அனாவசிய செலவுகள் இல்லை. எனவே கையைக் கடிக்கவில்லை என்கிற அளவுக்கு வசூல் செய்தது. இழப்புகள் இல்லை.''
சரியான வாய்ப்புகள் அமையாத போது நடிகர்கள் சொந்தமாக படமெடுக்கத் தொடங்குவது பற்றி...?
''அப்படி ஒரு சூழல் வரும் போது நிச்சயம் செய்துதான் ஆகவேண்டும். சரியான படங்கள் கதைகள் அமையாத போது நம்மை நாமே நிரூபித்துதான் ஆகவேண்டும்.''
மீண்டும் சொந்தப் படம் எடுப்பீர்களா?
''தேவைப்பட்டால் எடுக்கத்தான் செய்வேன். சரியான திரைக்கதை, படப்பிடிப்பு செலவுத் திட்டத்துடன் வந்தால் செய்வேன். ராம் கோபால் வர்மாவிடம் இருந்த சுரேஷ் நல்ல கதை ஒன்று சொல்லியிருக்கிறார். அதை தயாரிக்கும் எண்ணம் உள்ளது.''
இயற்கை 2, கிக். 2. எடுக்கப் படவுள்ளதாமே?
''எஸ். பி. ஜனநாதன் சமீபத்தில் நார்வே போய் வந்திருக்கிறார். அங்குள்ள துறைமுகம் அத்தனை அழகாக இருந்ததாகக் கூறினார். நிச்சயம்'இயற்கை 2ம் பாகம்'.. மட்டுமல்ல 'கிக். 2' ம் பாகமும் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.''
நீங்கள் எப்படிப்பட்ட நடிகராக இருக்க விருப்பம்?
''இது ஸ்கிரிட் வெற்றி பெறும் காலம். ஸ்கிரிட்தான் கதாநாயகன் என்று கடந்த 2 ஆண்டுகளாக அழுத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நான் என்றும் ஒரு டைரக்டரின் நடிகராகவே இருக்க விரும்புகிறேன். 


thanx - the hindu 

Wednesday, January 08, 2014

புறம்போக்கு - இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பேட்டி,

இயக்குநர் எஸ். பி. ஜனநாதன் 

நான் ஆட்டம் பாட்டம் என்று மகிழ்விக்கும் ஆள் இல்லை- இயக்குநர் ஜனநாதன்

 

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் நவீன தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரலாற்று பெட்டகம். அவர் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தாலே போதும், பல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. சினிமா கலைஞர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த சிந்தனைவாதியான இவர் இப்போது ஆர்யா, விஜய்சேதுபதி, ஷ்யாம், கார்த்திகா கூட்டணியின் நடிப்பில் ‘புறம்போக்கு’ படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். படப்பிடிப்புக்காக குலுமணாலி கிளம்பிக்கொண்டிருந்தவரிடம் பேசினோம்.



#அது என்ன உங்கள் படத்துக்கு ‘புறம்போக்கு’ என்று பெயர் வைத்துள்ளீர்கள்?

 
குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றியதாக டார்வின் சொல்கிறார். இதையே ஏங்கல்ஸ் ஒரு இடத்தில், மனிதக் குரங்கிலிருந்து மனிதன் பிறந்துகொண்டிருக்கிறான் என்று எழுதுகிறார். இன்னும் அந்த பரிணாமம் முடிவுக்கு வரவில்லை என்பதைத்தானே அந்த இடத்தில் குறிப்பிடுவதாக அர்த்தம். சுதந்திரத்தின் போது ஏற்பட்ட தேசப்பிரிவினையில் 20 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். ஏன் அண்மையில் இலங்கையில் லட்சத்துக்கும் மேலானவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இதையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லையே. அப்படியென்றால் நமக்குள் குரங்கின் குணம் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்தானே. அதைத்தான் இந்தப் படத்தில் கொண்டுவந்திருக்கிறேன். 



அதேபோல மனித நாகரீகம் தன்னுடைய வளர்ச்சிப் பாதையில் வளர்ந்து வருவதற்கு நிறைய சிறைச்சாலைகள் வழியாக கடந்து வரவேண்டி யிருப்பதை நம் வரலாறு சொல்கிறது. யார் ஒருவன் இந்த சமூகத்திற்காக போராடுகிறானோ, அவன் அடக்கு முறைக்கு உள்ளாகியிருக்கிறான், கைது செய்யப்பட்டிருக்கிறான், கொலை செய்யப்பட்டிருக்கிறான். பின்னர் அவன் தியாகி ஆக்கப்பட்டிருக்கிறான். ஸ்பார்டகஸ், சாக்ரடீஸ் போன்ற நிறைய பேரை இந்த வரிசையில் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படியான தியாகத்தை முன்வைத்துதான் சிறைச் 

சாலை வழியே நாகரீகம் வளர்ந்தி ருக்கிறது என்பதற்கு வரலாறு இருக்கிறது. அதை இக்காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்திருக்கிறேன். இந்தச் சூழலைக் கையில் எடுத்துக்கொண்டு சில இளைஞர்கள் போராட முன் வருகிறார்கள். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களைத்தான் இந்த படைப்பில் படைத்திருக்கிறேன்

.
#இந்தச் சமூகத்திற்காக வித்தியாசமான ஏதாவது விஷயங்களை அழுத்தமாக கொடுக்கும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனை தொடர்ந்து எதிர்பார்க்கலாமா?

 
நான் பிறப்பால் தமிழன் என்கிற அடையாளத்தைப் பெற்றவன். ஒரு ஓவியனாகவோ, ஒரு கவிஞனாகவோ இருந்திருந்தால் அந்த வழியே என்னோட ஆர்ட் ஃபார்ம் பிரதிபலித்திருக்கும். நான் சினிமாக்காரனாக இருக்கிறேன். என்னுடைய அடையாளத்தை இந்த வழியில் சொல்லித்தானே ஆக வேண்டும். நீங்க பணம் கொடுக்கிறீர்கள் என்பதற்காக வெறும் ஆட்டம், பாட்டம் என்று மகிழ்விக்கும் ஆள் நான் இல்லை. 


அதற்கு பதில் வேறு வேலையை செய்வேன். இந்த சமூகத்திலிருந்து நான் ஒன்றை கற்றேன். அதை மீண்டும் என் பாதிப்பாக முன் வைக்கிறேன். இதில் விமர்சனம் இருந்தால் தாராளமாக முன் வைக்கலாம். நல்ல விஷயம் என்றால் ஆதரிக்கலாமே. என்னை இங்கே ஆதரிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். ஒரு வெற்றியாளனாகவே இருக்கிறேன். அப்படியென்றால் இப்படியான படங்கள் கொடுக்க வேண்டும். அதற்கான தேவையும் இங்கே இருக்கிறது. 



#நீங்கள் தொடர்ந்து அதிகப்படியான படங்களை இயக்காததற்கு இயக்குநர் சங்கத்தின் பொருளாளர் பொறுப்புதான் காரணமா?

 
பல்வேறு வேலைகள். அதில் ஒன்று, கடந்த 2 ஆண்டுகளாக வகித்த பதவி. இதில் முழு திருப்தியா எல்லோரும் சேர்ந்து இயக்குநர் சங்கக் கட்டிட வேலைகளை முடித்திருக்கிறோம். ஒரு படத்தை எடுப்பதைப் போலத்தான் அந்த வேலையையும் நான் நினைத்தேன். இடையிடையே சின்னச் சின்ன சங்கப்பிரச்சினைகளையும் கவனிக்க வேண்டியிருந்தது. இப்போது அந்தப் பதவிக் காலம் முடிந்தது. அடுத்த கணமே படவேலையை கையில் எடுத்துக்கொண்டேன். 



#இந்தப் படத்தின் நாயகர்கள், நாயகிகள் பற்றி?

 
அடிப்படையாக இரண்டு நாயகர்கள் படம் இது. மீண்டும் சிறந்த இயக்குநர் என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள இங்கே வேலை இல்லை. இங்கே எல்லாவகையிலும் அதிகமான வீச்சு அவசியமாக இருக்கிறது இவர்கள் இருவரும் மக்கள் விரும்பும் நாயகர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய ஹீரோ படம் என்றால் உடனே தியேட்டருக்கு போகிறார்கள். இதில் யாரையும் எதுவும் சொல்ல ஒன்றும் இல்லை. சின்ன படம், நன்றாக இருக்கிறதா என்பதை பார்த்து போவதற்குள் தியேட்டரை விட்டு வெளியேறிவிடுகிறது. 



என்னு டைய படத்தை பெரும்பான்மையான மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க ஆர்யாவும் விஜய் சேதுபதியும் தேவைப் படுகிறார்கள். அவர்களை வைத்து ஒரு ஜனநாதனின் படத்தைத்தான் நான் இயக்கப்போகிறேன். நாயகி கார்த்திகாவின் தேர்வும் அப்படித்தான். எனக்கு தமிழ் நன்றாக பேசும் நாயகியாக இருக்க வேண்டும். அவரால்தான் என் கதையை முழுக்க உணர்ந்து பிரதிபலிக்க முடியும் என்று தோணும். கதைக்குத்தேவையான தென்னிந்திய லுக், கலர், உயரம், உடல்மொழி எல்லாமும் அந்தப் பெண்ணிடம் இருந்தது. நம்ம ஆனந்த் இயக்கிய ’கோ’ வெற்றிப்படத்தின் நாயகி. இதெல்லாம் போதாதா. அப்படியும் ஒவ்வொரு முறையும் ஒரு இளைஞனை அறிமுகப்படுத்திக்கொண்டும் இருக்கிறேன். இந்த முறை ஒரு இசையமைப்பாளன். 


#இவ்வளவு வேலைகளுக்கு இடையே தயாரிப்பாளர் பொறுப்பு உங்களுக்கு அவசியம்தானா?


 
எல்லாத்துக்கும் ஒரு சுதந்திரம் இருந்தால் சிறப்பாக அமையும் இல்லையா. என்னுடைய கிரியேட்டி விட்டி சுதந்திரத்திற்காக இந்த தயாரிப்பாளர் அணிகலனை எடுத்து அணிந்திருக்கிறேன். முதல் காப்பி மட்டும் நான் ஷூட் செய்கிறேன். அதுவும் நான் நினைக்க விரும்பிய விதத்தில் படைப்பு அமைய வேண்டும் என்பதற்காக. அவ்வளவுதான். மற்றபடி எந்த குற்றச்சாட்டுகளுக்கும் இங்கே இடம் தேவையில்லை. இயக்குநர் மணிரத்னம் இன்றைக்கும் இந்த பணியை சிறப்பாக செய்துகொண்டு வருகிறாரே. அவரும் இந்திய அளவில் பேசப்படுகிறாரே. ஆகவே, படைப்பு சுந்தந்திரத்திற்காக தாரளமாக ஒரு இயக்குநர் அந்த வேலையை தொடரலாம். 


#ஷூட்டிங் எப்போது?


 
தை 1 ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறோம். இவ்வளவு நாட்களாக குலுமணாலியில் பனிப்பொழிவுக்காக காத்திருந்தோம். சுற்றுலா பயணிகளின் கூட்டத்திற்காக கொஞ்சம் நேரம் எடுத்துக்கிட்டோம். சென்னையை களமாகக்கொண்டு ஏறக்குறைய இந்தியா முழுக்க ஷூட் செய்யவிருக்கிறோம். குலுமணாலியில் ஷூட்டிங் முடித்து பொக்ரான் வழியே ஜெய்ப்பூர், பின் அங்கே இருந்து ஜெய்ஷால்மர் பாலைவனம் வரைக்கும் பயணம் தொடர்கிறது. 


thanx - tamil hindu