தீவிரமான எம் ஜி ஆர் ரசிகராக இருந்தும் என் அப்பா அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் வரி விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே... இதைப்பற்றி விசாரித்தபோது பட விபரம் அறிந்தேன். சரி கலைஞர் கதை வசனம், கிருஷ்ணன் பஞ்சு இயக்கம் என்பதால் பார்த்து விடுவோம் என முடிவு எடுத்து யூ ட்யூப்ல பார்த்து விட்டேன்
ஸ்பாய்லர் அலெர்ட்
இலங்கையில் கதை நிகழ்கிறது . நாயகனின் அப்பா நாயகனின் அம்மாவைக்கொன்றதாக கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஆனால் குற்றவாளி அவரல்ல . நாயகனின் அம்மாவை கெடுக்க வந்த ஆளை எதிர்க்கும் அம்மா ஆயுதத்தால் தாக்க முற்பட அதை பிடுங்கி அவளைக்கொன்று விட்டு அந்த ஆள் தப்புகிறான். தப்பி போலீசிடம் போய் தவறான தகவல் சொல்கிறான். அதன்படி போலீஸ் கொலை நடந்த ஸ்பாட்டுக்கு வ்ரும்போது அப்பா மாட்டிக்கொள்கிறார்
அப்பா சிறைக்குப்போகிறார். அப்போது நாயகனுக்கு 10 வயது , கூட நாயகனின் தங்கை தங்கம். அம்மா , அப்பா இல்லாமல் அண்ணன் , த்ங்கை இருவரும் இலங்கையிலிருந்து தமிழகம் வருகிறார்கள் . இங்கே ஒரு கட்டத்தில் தங்கை இறந்து விடுகிறார்
நாயகன் இப்போது தபால் ஊழியர் . நாயகிக்கு அடிக்கடி துக்காராம் என்ற ஒருவர் காதல் கடிதம் அனுப்புகிறார். அதை தினமும் டெலிவரி செய்யும் நாயகன் ஒரு கட்டத்தில் அந்த கடிதத்தில் உள்ள காதல் கவிதையைப்படிக்கிறார்
சொந்தமா யோசிச்சு ஜோக் எழுதும் எழுத்தாளனுக்கு 100 ரூபாய் சன்மானம், ஆனால் அதே ஜோக்சை மனப்பாடம் பண்ணி தன்னுடைய சொந்த வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் போல தொகுத்து வழங்கும் ஸ்டேண்ட் அப் காமெடியன்கள் மதுரை முத்து , ஈரோடு மகேஷ் போன்றவர்களுக்கு பேரும் புகழும் கிடைத்தது போல கவிதை எழுதி மெனக்கெட்டு அனுப்பிய துக்காராமை விட்டு விட்டு அதை படித்துக்காட்டிய நாயகன் மேல் நாயகி காதல் கொள்கிறார்
நாயகன் தன் சொந்தக்கதை சோகக்கதையை ஒரு நாள் நாயகியிட சொல்லிக்கொண்டு இருக்கிறார். அப்போது தன் தங்கை தங்கம் புதைக்கப்பட்ட இடம் இதுதான் என சொல்லிக்கொண்டிருக்கும்போது வில்லன் எண்ட்ரி
வில்லன் ஒரு புதையலை தேடிக்கொண்டு இருக்கிறான் , தான் தேடி வந்த புதையல் இந்த காதல் ஜோடிக்குத்தெரியும் என நினைக்கிறான். இதற்குப்பின் நிகழும் குழப்படிகள் தான் மீதி திரைக்கதை
நாயகனாக சிவாஜி கணேசன் உணர்ச்சிப்பிழம்பாய் நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் அவர் ,முகம் நவரசம் சொட்டுகிறது . க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லுப்பாட்டில் பல கெட்டப்களுடன் வருகிறார், ரசிக்க வைக்கும் நடிப்பு
நாயகியாக பத்மினி . நாயகனுடனான கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது . ஒரு சாதரண பாட்டு , சாதா பாடல் வரிகளுக்குக்கூட பரத நாட்டிய அபிநயம் புரிகிறார். ஆண் வேடத்தில் சில காட்சிகள்
வில்லனாக டி எஸ் பாலையா . குரல் தான் இவரது பெரிய பிளஸ்,இவருக்கு மனைவியாக எம் என் ராஜம். இவரும் வில்லனுக்கு எதிராக வில்லி வேலை எல்லாம் செய்கிறார்
காமெடிக்கு சந்திர பாபு . நாயகனுக்கே படத்தில் ஒரே ஒரு டூயட் தான், ஆனால் இவருக்கு ஒரு சோலோ சாங் , ஒரு டூயட் . கலக்கல் டான்ஸ்
மூன்று மணி நேரம் படம் ஓடுகிறது . இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம், ஆனால் அந்தக்காலத்தில் மூன்று மணி நேரத்துக்குக்குறைவாக படம் பண்ணினால் சின்னப்படம் என சொல்லி விடுவார்கள்
அப்போதெல்லாம் 18 ரீல் படங்கள் தான் அதிகம் , 1980 களில் 14 ரீல் படங்கள் வந்தன
சபாஷ் டைரக்டர் (கிருஷ்ணன் பஞ்சு )
1 நாயகன் - நாயகி முதல் சந்திப்புக்காட்சியில் நாயகிக்கு வந்த காதல் கடிதத்தை தபால்காரரான நாயகன் படித்துக்காட்டும் காட்சி கலைஞரின் கைங்கரியத்தில் எதுகை மோனை தமிழ் துள்ளி விளையாடும் காட்சி
2 புதையல் ரகசியம் பற்றிய முதல் வரியே எழுவான் சூரியன் தான்,,, உதய சூரியன் பற்றி அப்போதே உள் குத்து டயலாக்
3 நாயகனின் தங்கை பெயர் தங்கம், அவள் புதைக்கப்பட்ட இடம் என நாயகன் நாயகியிடம் காட்டும்போது ஒரு க்ரூப் தங்கம் புதைக்கப்பட்ட இடம் என புரிந்து கொள்ளும் சிச்சுவேஷன் குட்
3 சந்திரபாபு பத்மினியின் ஃபோட்டோவுக்கு பாவ்லாவாக ஊட்ட அதை ஃபோட்டோவின் பின்பக்கம் இருந்து வேறு ஒரு ஆள் சாப்பிடும் காமெடி டிராக் குட்
4 நாயகி பத்மினி வில்லனிடம் தன் காதலன் என காமெடியனை மாட்டி விடுவது நல்ல ஐடியா. பெண்கள் தன்னைக்காப்பாற்றிக்கொள்ள யாரை வேண்டுமானாலும் மாட்டி வைத்து விடுவார்கள் என்ற நிதர்சனத்தை உணர்த்திய காட்சி
5 வில்லனின் ஆட்கள் சந்திரபாபுவைத்தேடி கொலை செய்ய வர , அவரை எச்சரித்த பத்மினியை அறையில் அடைக்கும் சந்திரபாபு செம் சஸ்பென்ஸ் மொமெண்ட்
6 காமெடியனை நாயகி பிடில் வாசிக்கச்சொல்ல பிஜிஎம்மில் கழுதை கனைக்கும் ஒலியை ஒலிக்க வைப்பது
7 சந்திரபாபு வின் கேரக்டர் டிசைன் அருமை . ஒருதலையாய்க்காதல் கொண்ட பெண்ணின் காதலுக்கு உதவுவது செம
செம ஹிட் சாங்க்ஸ்
1 சின்னச்சின்ன இழை பின்னிபின்னி வரும் சித்திரைக்கைத்தறி சேலையடி
( ஹீரோயின் ஓப்பனிங் சாங் நெசவாளி பெருமை பேசும் பாடல்)
2 உனக்காக எல்லாம் உனக்காக , இந்த உடலும் , உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக ( சந்திரபாபு ஓப்பனிங் சாங் )
3 தங்க மோகனத்தாமரையே ,, நீ செங்கதிர் கண்டு சிரிப்பதினாலே இளம் மங்கையர் வதனமும் வாடுது ( ஹீரோயின் வெய்ட்டிங் சோலோ சாங்க்)
4 விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே ( டூயட்)
5 ஆசைக்காதலை மறந்து போ.. .. ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே ... ( ஹீரோயின் சோக பாட்டு )
6 ஹலோ மைடியர் ராமி எங்கம்மா உனக்கு மாமி ( காமெடியன் டூயட்)
7 சீர் கொண்டு கண்டி ராஜா ( வில்லுப்பாட்டு )
8 நல்ல காலம் வருகுது
ரசித்த வசனங்கள் (கலைஞர்)
1 மனுசனுக்கு பணம், பதவி , பட்டம், மரியாதை, அந்தஸ்து , மானம் , மரியாதை இதெல்லாம் வேணும்னா எந்தக்காரியத்தை வேணா செய்யத்தயாரா இருப்பான்
2 களவு செய்வது தப்பில்லை, ஆனா கண்ணக்கோல் மட்டும் நம்ம கைல இருக்கக்கூடாது
3 கதை சொல்வதாக அழைத்து கவிதை இயற்றுவது ஏனோ?
என் கதை கேட்டால் உன் கண்கள் நீர் வீழ்ச்சியாக மாறும்
4 செருப்பா இருந்தாலும் ஜோடியைப்பிரிக்கக்கூடாது
5 மோகினிப்பிசாசாவது பெண்ணை இவ்வளவு தூரம் தூக்கிட்டு வர்றதாவது...
பெண்ணாக இருந்தால் முன்னூறு மைல் கூட தூக்கிட்டு வருவாங்க , சீதையை ராவணன் தூக்கிட்டு வர்ல?
6 இப்படித்தான் நான் உனக்கு காதல் கடிதம் எழுதுனேனா?
நீங்க எழுதி இருந்தாலும் எனக்குப்படிக்கத்தெரியாதே?
7 இங்கு சகல வித “மான சாமான்களும்” ரிப்பேர் செய்யப்படும்.. மான சாமான்கள்? அப்டின்னா?
நல்லாப்பாருங்க, அது இப்டி படிக்கனும் இங்கு சகல விதமான சாமான்களும் ரிப்பேர் செய்யப்படும்.
8 தங்கம் எங்கே இருக்கிற்து ?
தங்கம் கோலாறு தங்க வயலில் இருக்கிறது . கோலாறு கர்நாடகாவில் இருக்கிறது
9 சட்டத்தின் சன்னிதானத்தில் தந்தை - மகன் பேதத்திற்கு இடம் இல்லை
10 இவரைப்பார்த்தா சாமியாராத்தெரியலையே?
மாறுவேஷத்துல இருக்காரு ‘
11 அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை மாதிரி ஏன் தீப்பந்தம் வெச்சுட்டு இருக்கே? நீ மதுரை கண்ணகி மாதிரி இந்த இடத்தை எரிச்சுட்டா நான் நீரோ மன்னன் மாதிரி பிடில் வாசிக்கிறேன்
12 மாணிக்கத்தால் தொட்டிலும், மரகதத்தால் பாலாடையும் செய்து கொடுக்கிறேன், ஒரு குழந்தை பெற்றுக்கொடு என மலடியைக்கேட்டானாம் ஒருவன் அது போல் தான் இருக்கிறது நீங்கள் என்னிடம் புதையல் ரகசியத்தைக்கேட்பதும். தெரியாது தெரியாது
ஏன் தெரியாது ?
அதுவும் தெரியாது
13 சந்தன வில்லை சகதியில் கிடக்கலாமா?
அதற்காக சாக்கடையில் இருக்கும் சந்தனத்தை எடுத்து மார்பில் பூசிக்கொள்ளவா முடியும் ?
14 உன்னை கைலாசத்துக்கு அனுப்பப்போகிறேன்
ஓஹோ, நீதான் கைலாசத்துக்கு கைகாட்டியா?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனின் அம்மாவைக்கொலை செய்த கொலைகாரனின் ஆயுதம் அரிவாள் மனை என தெரிந்தும் நாயகனின் அப்பா அதே அரிவாள் மனையை எடுத்துக்கொண்டு வில்லனைப்ப்ழி வாங்கக்கிளம்புகிறாரே? வேறு அயுதம் கிடைக்கலையா? அதில் கொலைகாரனின் ஃபிங்கர் பிரிண்ட்ஸ் இருக்கும், தன் கை பட்டு மறையும் எனத்தெரியாதா?
2 வயல் காட்டில் உள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை முதல் தேதி வெட்ட வேண்டும் என டைரி மாதிரி பாக்கெட் நோட்டில் குறிப்பு எழுதுவதற்குப்பதிலாக வள்ளியை வெட்ட வேண்டும் என சுருக்கமாக அவர் எழுதி அது ஆதாரமாக மாறி மாட்டிக்கொள்வது நம்பும்படி இல்லை (நாயகனின் அம்மா பெயர் வள்ளி)
3 சுறா மீன் கடலின் ந்டுப்பகுதியில் அல்லது ஆழமான பகுதியில்தான் வரும் கரையில் அலை வரும் இடத்தில் வருவது எல்லாம் ஓவரோ ஒவர்
4 கதை நடந்த கால கட்டமான 1957 ஆம் ஆண்டு ஒரு கன்னிப்பெண் இரவில் வீட்டுக்கு வராமல் காலையில் வந்ததும் வீடே அமளி துமளி ஆகி இருக்க வேண்டாமா? என்னமோ சீரியலில் ஹீரோயின் நலம் விசாரிப்பது போல அம்மா நைட் எங்கேம்மா போனே? என அமைதியாக விசாரிக்கிறார்
5 துக்காராம் எனும் சந்திரபாபு 588 நாட்களாக தினசரி ஒரு கடிதம் வீதம் நாயகிக்கு காதல் கடிதம் எழுதி அனுப்புகிறார். அதை படிக்காமலேயே கிழித்து வீட்டு வாசலில் போட்டு விடுவது நாயகியின் வழக்கம், நாயகனின் அறிமுகம் வந்த பின் 584 வது கடிதம் வரும்போது கிழித்துப்போடும்போது மட்டும் அப்பா அதைக்கைப்பற்றி காதல் கடிதம் பற்றி விசாரிக்கிறாரே? அப்போ 583 நாட்களாக அவர் வீட்டுக்கே வரவில்லையா?
6 நாயகியின் காதலனுக்கு தங்கம் இருக்கும் இடம் தெரியும் என வில்லன் நினைக்கிறான். அப்போ நாயகி காதலனை சந்திக்க அதே இடத்துக்கு மீண்டும் வரும் வரை காத்திருந்தா போதாதா? அதுதான் தினசரி அல்லது அடிக்கடி சந்திக்கிறாங்களே? ஆட்களை அனுப்பி நாயகியைக்கடத்தி காதலன் யார்? என உண்மையை சொல்லச்சொல்லி கேட்டு எதுக்கு அவ்ளோ ஃபர்னிச்சரை உடைக்கனும்? அவங்களா சந்திக்கும் போது கோழி அமுக்கற மாதிரி பிடித்திருக்கலாமே?
7 ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், அனுமார் , குரங்கு என சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் இந்து மக்களின் மனம் புண்படும்படி ஆங்காங்கே வசனங்கள் அள்ளித்தெளிக்கப்பட்டு இருக்கின்றன
8 நாயகனின் கேரக்டர் ஸ்கெட்ச் படி அவர் அரசாங்க தபால் ஊழியர் , ஆனால் ஒரு கட்டத்தில் வில்லனின் அடியாட்கள் 20 பேரை தெலுங்குப்பட ஹீரோ மாதிரி பந்தாடுவதை எல்லாம் நம்ப முடியலை
9 தனது காதலி முகத்தில் பென்சிலால் மீசை வரைந்தால் நாயகனுக்கு அது அடையாளம் தெரியாதா? குறி சொல்பவர் போல நாயகி எல்லோரையும் ஏமாற்றுகிறார். ஆண் குரலில் பேசாமல் பெண் குரலில் பேசுகிறார் , ஆனால் ஆண் கெட்டப்பில்., ஆனால் யாருமே சந்தேகப்படலை . நாயகன் கூட
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் = பாடல் காட்சிகள் , சிவாஜி - பத்மினி கெமிஸ்ட்ரி , சந்திரபாபு காமெடிக்காக பார்க்கலாம் . ரேட்டிங் 2.75 / 5 . இது கமர்ஷியலாக சுமாராகத்தான் போனதாக விக்கி பீடியா கூறுகிறது
புதையல் | |
---|---|
புதையல் 1956 விளம்பரம் | |
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | கமல் பிரதர்ஸ் |
கதை | மு. கருணாநிதி |
இசை | விஸ்வநாதன்-ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி எம். கே. ராதா டி. எஸ். பாலையா சந்திரபாபு எம். என். ராஜம் |
ஒளிப்பதிவு | ஜி. விட்டல் ராஜூ |
படத்தொகுப்பு | எஸ். பஞ்சாபி |
கலையகம் | கமல் பிரதர்ஸ் லிமிடட் |
விநியோகம் | கமல் பிரதர்ஸ் லிமிடட் |
வெளியீடு | 10 மே 1957 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எண். | பாடல் | பாடியவர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "விண்ணோடும் முகிலோடும்" | சி. எஸ். ஜெயராமன், பி. சுசீலா | எம். கே. ஆத்மநாதன் | 03:18 |
2 | "தங்க மோகனத் தாமரையே" | பி. சுசீலா | 03:54 | |
3 | "உனக்காக எல்லாம் உனக்காக" | ஜே. பி. சந்திரபாபு | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 03:38 |
4 | "சின்னச் சின்ன இழை" | பி. சுசீலா | 05:05 | |
5 | "ஹலோ, மை டியர் ராமி" | ஜே. பி. சந்திரபாபு, ஏ. எல். ராகவன் | 03:34 | |
6 | "ஆசை காதலை" | பி. சுசீலா | அ. மருதகாசி | 03:07 |
7 | "சீர் கொண்டு...கண்டி ராஜா" | டி. எம். சௌந்தரராஜன், எம். கே. புனிதம், எஸ். ஜே. காந்தா | தஞ்சை இராமையாதாஸ் | 03:40 |
8 | "நல்லகாலம் வருகுது" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | சுப்பிரமணிய பாரதியார் | 03:25a |