Showing posts with label புதுமைப்பித்தன் (1957) (தமிழ்) - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label புதுமைப்பித்தன் (1957) (தமிழ்) - சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, October 04, 2022

புதுமைப்பித்தன் (1957) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா)


ஸ்பாய்லர்  அலெர்ட்

 

நாயகன்  ஒரு  நாட்டின்  இளவரசன் .கடற்  பிரயாணம்  முடிந்து  நாட்டுக்குத்திரும்பும்போது மன்னரைக்காணோம்.மன்னரோட  தம்பி   அதாவது  நாயகனின்  சித்தப்பா தான்  சதி  செய்து  மன்னரைக்கடத்தி  மறைவிடத்தில்  வைத்து  ஆட்சியைக்கைப்பற்ற  நினைக்கிறார். பைத்தியம்  பிடிக்கும்  ;பித்த  மருந்து  தந்து  இளவரசரைப்பைத்தியம்  ஆக்கவும்  திட்டம்  போடறார். அந்தத்திட்டத்துக்கு  அரண்மனை  வைத்தியர்  உடந்தை . 


இந்தத்தகவல்கள்  எல்லாம்  அரண்மனை  வைத்தியர்  மகள்  மூலம்  நாயகனான  இளவரசனுக்குத்தெரிய   வருது . இந்த உண்மைகளை   எல்லாம்  சொன்னாலும் தன்  தந்தைக்கும்  இந்த  சதிக்கும்  தொடர்பில்லை  என  லாவகமாக தன்  தந்தையைக்காப்பாற்ற  நினைக்கிறார் வைத்தியர்  மகள் 


 நாட்டின்  இளவரசரான  நாயகனுக்கும், அரண்மனை  வைத்தியர்  மகளுக்கும்  காதல் 


அந்த  மருந்தை  சாப்பிடாமலேயே  பைத்தியம்  போல்  நடித்து  இளவரசன்  வில்லனை  ஏமாற்றுகிறார்.  இரவு  நேரத்தில்  அரண்மனையை  விட்டு  வெளியேறி  மாறு  வேடத்தில் ( அதாவது  ஒரு  கைக்குட்டையை  மாஸ்க்  போல  முகத்துல  அணிந்தால்  யாருக்கும்  அவரை  அடையாளம்  தெரியாது , முகமூடி  மனிதன்னு  சொல்லிடுவாங்க . இதை  நீங்க  நம்பனும்)


இளவரசர் அரண்மனையை  விட்டு  வெளில  போய்  என்னத்தை  சாதிச்சார்னு  எனக்குத்தெரியல. அவர்  பாட்டுக்கு  அரண்மனை  உள்ளேயே  அப்பாவைத்தேடி  இருக்கலாம். கண்டு  பிடிச்சிருக்கலாம், ஆனா  படம்  19  ரீல் ., எப்படி  திரைக்கதையை  இழுப்பது   அதனால  காதைச்சுத்தி  மூக்கைத்தொட்டிருக்காங்க 


 கதை  திரைக்கதை  வசனம்  டாக்டர்  கலைஞர். இவரது  வசனங்கள்  பிரமாதம்  என்பதை  மறுப்பதற்கில்லை , ஆனால் ஒருவரைப்பற்றிய  வர்ணனைகள்  முழம்  நீளத்துக்கு இழுத்து  சொல்லப்படுது . அதே  சமயம்  ஷார்ட்  அண்ட்  ஸ்வீட்டாகவும்  சில  இடங்களில்  எழுதி  இருக்கார் 


 ஹீரோவா  இளவரசர்  ஜீவகனாக புரட்சி  நடிகர்  எம் ஜி ஆர் . படத்துல  இவருக்கு  3  ஜோடிகள் . எம்  ஜி ஆர்  ஃபார்முலா  என்னான்னா  இவரு  ஒரே  ஒரு  பெண்ணைத்தான்  காதலிப்பார். ஆனா  இவரை  ரெண்டு  மூணு  பேரு  காதலிப்பாங்க . அவங்களோட  கனவில்  டூயட்  எல்லாம்  பாடிட்டு    கட்டிப்பிடிச்சு   ஜாலியா  சுத்திட்டு  கனவு  முடிஞ்சதும்  தங்கச்சி  அப்டினு  பல்டி  அடிப்பார் . காரணம்  அவர்  கட்டிக்காத்து  வந்த  இமேஜ் 


வாள்  சண்டை  போடும்போதும்  சரி , சிக்கலான  சூழ்நிலைகளிலும்  சரி  எம் ஜி ஆர்  எப்போதும்  சிரிச்ச  முகத்துடனே தான்  இருப்பார் . இந்த  ஃபார்முலா  அவருக்கு  நல்லா  ஒர்க்  அவுட்  ஆகி  ரசிகர்களை  தன்  வசம்  இழுத்தது 


வேல்விழியாக  நாயகியாக  பி எஸ்  சரோஜா . இவரை  இப்போதான்  முத  டைம்  பார்க்கறேன்


 காந்தக்கண்ணழகி  , வில் போன்ற  புருவ  அழகி டி ஆர்  ராஜகுமாரி  இன்னொரு   ஜோடி   இன்ப வல்லியாக  நல்ல  நடிப்பு  நளினமான  நடனம் 


அயல்  நாட்டு  நடன  பாணியை  தமிழ்  நாட்டுக்குக்கொண்டு  வந்த  முதல்  தமிழ்க்கலைஞன் சந்திரபாபு  நாயகனுக்கு  நண்பனாக  வர்றார். படத்தோட  ஓப்பனிங்  சாங்  ஹீரோவுக்குக்கூட  இல்லை .  சந்திர பாபுக்குத்தான்  .  அருமையான  நடனம் (  இவரோட  டான்ஸ்  மூவ்மெண்ட்சைத்தான்  பிரபு தேவா  ஃபாலோ  பண்றார்)


 வில்லனாக  டி எஸ்  பாலய்யா. கொடூரமான  வில்லனாக  காட்டாமல்  லைட்டா  காமெடி  கலந்து  கொண்டு  போய் இருக்காங்க




செம  ஹிட்  அடித்த  பாடல்கள் 


1  உள்ளம்   ரெண்டும்  ஒன்று  நம்  உருவம் தானே  இரண்டு ?

2  ஆராய்ச்சிக்கடலிலே.....  தில்லானா  பாட்டுப்பாடி  ( சந்திர  பாபு  ஓப்பனிங்  சாங் )


https://www.youtube.com/watch?v=aZiAwLdCY-k


3  அழகி  பார்  அவள்  நடையைப்பார்


4  மன  மோஹனா 


5  நாதர் முடி  மேலிருக்கும்  நல்ல  பாம்பே ... ஆடு  பாம்பே  நீ  ஆடு  பாம்பே 


6  குத்தும்  கொந்தளிக்கும் கும்பலைக்கண்டா  டபாய்க்கும் ( இந்தப்பாட்டுக்கு  டான்ஸ்  கொரியோகிராஃபி  கலக்கலா  இருக்கும்  , டோண்ட்  மிஸ்  இட் )

https://www.youtube.com/watch?v=Fk3RjsZMtCg


7  தேன்  மதுவை  வண்டினம்  தேடி  வரும்  இன்பமாய் (  பாம்பு  - மயில்  கெட்டப்பில்  ஆடை  அலங்காரம்  நடன  நாட்டியம்  பிரமாதமா  இருக்கும் 


https://www.youtube.com/watch?v=CLQ5alksY-w


8  அய்யா  யாருக்கு  வேணும்  இந்த  முல்லை  மொட்டு   


 ரசித்த  வசனங்கள்


1  இம்  என்றால்  சிறைவாசம், ஏன்  என்றால்  வனவாசம்


2  ஆண்டாண்டு  காலம்  அழுது  புலம்பினாலும் மாண்டோர்  திரும்பி  வருவதில்லை 


3  பட்டாபிஷேகம்  நடக்கும்  முன்பே  வாக்குறுதி  காற்றில்  பறக்கிறது 


 வாக்குறுதியைக்காற்றில்  பறக்க விடுவதுதான்  என்  அரசாங்கத்தின்  முக்கிய  லட்சியம் 


4  வாக்குறுதிக்கு  மதிப்பே  இல்லை 


5  முதலைகள்  கடலில்  ஆற்றில்  மட்டுமல்ல , நாட்டிலும்  இருக்கின்றன. பல  பண  முதலைகள்  நாட்டையே  கபளீக்ரம்  செய்து  விடும் ஆற்றல்  பெற்றவை





லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  வில்லன்  அரண்மனை  வைத்தியரிடம்  உனக்கு  மந்திரி  பதவி  தர்றேன்னு ஆசை  காட்டி   சதிச்செயலுக்கு  உடந்தையாக  இருக்க  வைக்கிறார். இளவரசருக்கே  பித்த  மருந்து  தரும்  தைரியம்  மிக்கவர்  வில்லனுக்கு  விஷம்  வைக்க  எவ்ளோ  நேரம்  ஆகும் ?


2  தன்  அப்பா  எங்கே  எனக்கேட்டு  இளவரசர்  அரண்மனை  வைத்தியரிடம்  விசாரிக்கிறார். ஆனா  அவர்  சொல்லலை .  மாமா  உங்க  பொண்ணும்  நானும்  லவ்வர்ஸ். மேரேஜ்  ஆகிட்டா  நான்  மன்னன், உங்க  பொண்ணு  மகாராணி  . இப்போ  சொல்லுங்கனு  கேட்டிருந்தா  சொல்லி  இருப்பார்


3  அதே  போல  அரண்மனை  வைத்தியரிடம்  சதிச்செயலில்  ஈடுபட  வேணாம்னு  கெஞ்சிட்டு  இருந்த  டைம்ல  மகள்  அப்பாவிடம்  அப்பா   எதுக்காக  சிரமப்படறீங்க. இளவரசரை  நான்  மேரேஜ்  பண்ணிக்கப்போறேன்னு  சொல்லி  இருந்தா  அவ்ளோ  சுத்தல்  இல்லாம  ஈசியா  காரியத்தை  முடிச்சிருக்கலாமே?


4  இளவரசர்  மன்னரைத்தேட  அவ்ளோ  வேலை  செஞ்சதுக்கு  தன்  சித்தப்பாவை  அடி  வெளுத்திருந்தா  அப்பவே  உண்மை  வெளி  வந்திருக்குமே? அரண்மனை  வைத்தியரை  அடி  போட்டிருந்தா  அவர்  எல்லா  உண்மையையும்  கக்கி  இக்ருப்பாரே?


5  இளவரசர்   அரண்மனைலயே  இருக்கறதில்லை .  அப்போ  முக  முகமூடி  இளைஞன்  யார்னு  கண்டு  பிடிக்க  முடியாதா? இதுக்கு  தண்டமா  5000  பொற் காசுகள்  பரிசுனு  அறிவிப்பு  வேற 


6   நாயகியைப்பார்க்க  வரும்  இளவரசரிடம்  டி ஆர்  ராஜகுமாரி  முதுகில்  சாய்ஞ்சுக்கிட்டு  காதல்  வசனம்  பேசும்போது    எம் ஜி  ஆர்  இது  எல்லாம்  எனக்குப்பிடிக்காதுங்கறார். ஆனா  அவரை  விட்டு  விலகவே  இல்லை  அது  பாட்டுக்கு  சாஞ்சுக்கிட்டு  இருக்கட்டும், மெத் மெத்னு தானே  இருக்குனு  விட்டுட்டார்  போல 


7  அதிகாரம்  சித்தப்பா  கைல  இருக்கு , வீரர்கள்  எல்லாம்  அவர்  பக்கம், ஆனா  அந்த  சாசனத்தில்  மன்னர்  சிக்னேச்சர்  வேணும், இல்லைன்னா  மக்கள்  கேள்வி  கேப்பாங்க, என்னால  பதில்  சொல்ல  முடியாதுனு  வில்லன்  பம்முவது  நல்ல  தமாஷ் 

  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதில்  பூச்சுற்றும்  கதை  தான்  என்றாலும் சந்திரபாபு  டான்ஸ் , கலைஞர்  வசனம் ,  சூப்பர்  ஹிட்  பாடல்களுக்காக  படம்  பார்க்கலாம், ரேட்டிங்  2.5 / 5 





புதுமைப்பித்தன்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புகே.முனிரத்னம்
சிவகாமி பிக்சர்ஸ்
கதைகதை மு. கருணாநிதி
இசைஜி. ராமனாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
பாலைய்யா
சந்திரபாபு
சகாதேவன்
பாண்டியன்
பி. எஸ். சரோஜா
டி. ஆர். ராஜகுமாரி
ஈ. வி. சரோஜா
அங்கமுத்து
வெளியீடுஆகத்து 21957
நீளம்17833 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்