புதிய வார்ப்புகள் ( 1979)– சினிமா விமர்சனம்
ஆனந்த
விகடன்ல 59 மார்க்ஸ்
வாங்கி 2 பக்கம் பாராட்டு மழையா பொழிஞ்சு
விமர்சனம் பண்ணி இருந்ததை
சமீபத்தில் தான் பார்க்க நேர்ந்தது, மிஸ் பண்ணின
பட லிஸ்ட்ல இதுவும் ஒண்ணு,
என் விருப்பமான பட்டியலில் க்ரைம்
த்ரில்லருக்குத்தான் முதல் இடம்
என்றாலும் அப்பப்ப ஒரு சேஞ்ச்க்கு கிளாசிக்
மூவிஸ் , காமெடி மெலோ டிராமா, லவ்
சப்ஜெக்ட்ஸ் பார்ப்பதுண்டு
சிகப்பு
ரோஜாக்கள் படத்துல
வசனகர்த்தாவா கே பாக்யராஜ் பணிஆற்றி இருந்தாலும் படம்
முடியற டைம்ல பாரதிராஜாவுடன் ஏற்பட்ட
சின்ன கருத்து வேறுபாட்டால்
கே பாக்யராஜ் பிரிந்து சென்று
விட்டார் ( இவங்க 2 பேரும் அடிக்கடி
இப்படி பிரிவதும் , சேர்வதும் நடக்கும்னு
சாய் வித் சித்ரா நிகழ்ச்சில
பார்த்தேன். )ஏதோ ஒரு
கோபத்துல பாரதிராஜா பட டைட்டில்ல கே பாக்யராஜ்க்கு க்ரெடிட் தர்லை . படம் பார்த்து டைட்டிலில் தன் பெயர்
இல்லாததைக்கண்டு அதிர்ந்த பாக்யராஜ் பாரதிராஜாவிடம் முறையிட
சரி விடுய்யா ஏதோ விட்டுப்போச்சு , அதுக்குப்பரிகாரமா அடுத்த
படத்துல உன்னை ஹீரோ ஆக்கிடறேன் என்றாராம்.
ஆஃப் த ரெக்கார்டா சிலர்
சொன்ன தகவல் , தன்னிடம் உதவியாளராகப்பணி
ஆற்றிய கே பாக்யராஜ் நல்ல
திறமைசாலி என்பதால் அவர்
தன்னை விட்டுப்பிரிவது தனக்கு
இழப்பு என்பதை உணர்ந்த பாரதிராஜா அவர் தனி டைரக்சன்
என இறங்காமல் தடுக்க
அவரை டைவர்ட் பண்ண
அவரை ஹீரோ ஆக்கினதாக பேச்சு , ஆனா
அங்கே தான் ஒரு திறமை
சாலியின் உத்வேகம் வெளிப்பட்டது , தனக்கு ஏற்ற
பாத்திரத்தை வடிவமைத்து கதை வசனம்
டைரக்சன் என தனி முத்திரை
பதித்தது ரெஸ்ட் அஃப் த ஹிஸ்டரி
புதிய
வார்ப்புகள் கதை ஆர் செல்வராஜ்
என டைட்டிலில் வருது , ஆனா இந்தகதையை
பாரதிராஜா பாக்யராஜிடம் சொல்ல
க்ளைமாக்ஸ் மட்டும் சரியா
செட் ஆகலை என்றாராம், அதற்கு
பாக்யராஜிடம் ஐடியா கேட்க
மொத்த திரைக்கதையில் பின் பாதி
50% மாறி அழகான
க்ளைமாக்சுடன் எழுதித்தந்தாராம்
ஸ்க்ரிப்டை , ஆனா டைட்டிலில் வசனம் – கே பா
என்று மட்டும் தான் வருது ,
திரைக்கதை உதவி வரவில்லை
தான்
நடிச்ச முதல் படத்திலேயே
ஸ்கூல் வாத்தியார் கேரக்டர்ல
வந்தவர் பின்னாளில் முந்தானை முடிச்சு , சுந்தர காண்டம் ( முதலில் வைத்த
டைட்டில் சார் ஐ லவ் யூ) ஆகிய படங்களிலும் செண்ட்டிமெண்ட்டாக
வாத்தியாராகவே வந்தார்
இந்தப்படத்தில் ஒரு
கேரக்டரில் டெல்லி கணேஷ் சை நடிக்க வைக்கலாம் என பாரதிராஜா
நினைக்க கே பாக்யராஜ் கவுண்டமணியை சிபாரிச்சு செய்திருக்கிறார்.
வேண்டா வெறுப்பாத்தான் அதுக்கு
ஓக்கே சொல்லி இருக்கார் .
வில்லனின் கையாள் வேஷம், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்க்கு
முக்கிய ரோல் , கவுண்டமணி
பிரமாதமா பண்ணி இருந்தார் . அமாவாசை .. அய்யா உள்ளதைசொல்றீங்க .. செம ஹிட்
டயலாக் ( அமைதிபப்டைக்கு முன்பே
இதில் அமாவாசை ஹிட். இந்தப்படத்துக்கு டைட்டில்
செட் பண்ணும்போது கே பாக்யராஜ்
கவுண்ட்டர் மணி என்பதற்குப்பதிலாக கவுண்டமணி
என்று எழுதி விட்டார் , அதே நிலைத்து
விட்டது ஆக்சுவலா மணி தான் அவர்
பேரு, அப்பப்பா டைமிங்கா ஷூட்டிங் ஸ்பாட்ல கவுண்ட்டர் குடுத்து
காமெடி பண்ணுவாராம் , அதனால்
கவுண்ட்டர் மணி
ஒரு
சீன்ல ஹீரோ ஊரை
விட்டு நாயகியை விட்டு பிரிந்து பஸ்சில்
செல்வார்.அவரைப்பார்க்க ஓடி வரும்
நாயகியைப்பார்த்து சோகத்துடன் தன் தோளில் கிடந்த துண்டை தூதாக
அனுப்புவார். பல வருடங்களுக்குப்பின் கரகாட்டக்காரன் படத்தில்
இதே சீன் இந்த மான் உந்தன்
சொந்தமான் பாட்டுக்கு லீட் கொடுக்கும்
காட்சியாக அமைந்தது
ரதி
இதில் அறிமுகம் . அவரது அழகு
படத்தின் முக்கிய பலம் . பாரதிராஜாவின் ஆர் செண்ட்டிமெண்ட் நாயகி பட்டியலில் இவரும். ஆரம்பக்கட்ட ரொமான்ஸ் காட்சிகளில்
இவரது நடிப்பு அருமை , க்ளைமாக்ஸ் ஆவேசக்காட்சியில் கொஞ்சம்
நாடகத்தனம்
ஜனகராஜ்
இதில் ஒரு சின்ன ரோல்ல வர்றார்
.இசை ஞானியின் இசையில் 2
பாட்டு செம ஹிட்டு , தந்தன தந்தன தாளம் வரும்
பாட்டில் ரதியின் இளமை
கண்ணுக்குக்குளிர்ச்சி . டான்ஸ்
வராத புதுமுக ஹீரோவுக்காக
புத்திசாலித்தனமான ஸ்டெப்ஸ். வான் மேகங்களே
பாடல் ஒளிப்பதிவு அழகு
நச் டயலாக்ஸ்
1
நீங்க யாரு?
வாத்தியாரு
ஊர்ல
யாரையும் ஆடு மாடு மேய்க்க இனி
விடமாட்டீங்க?
2
அய்யா , இந்த ஊர்ல எந்தப்பொண்ணு வாந்தி எடுத்தாலும் எனக்கு உங்க ஞாபகம் தாங்க வருது
3
பட்டிக்காட்டுல பறக்க ற
காக்கா கூட புதுசா இருந்தா
தெரிஞ்சிடும்
4
அக்கா கிட்டே
சொல்லுடா . உன் இதயம்
கொடுத்தா குங்குமம் தருவேன்னு
5
யாரோ குடத்தை
ஆத்தங்கரைல வெச்சுட்டு தண்ணியை
மட்டும் எடுத்துட்டுப்போய்ட்டாங்க
போலயே
6
பூவை பறிச்சாதான்
வாடும்னு இல்லை , செடில விட்டு வெச்சாலும் வாடிடும்
7
ஒரு தபா வெந்த நெல்
வெந்ததுதான் , மீண்டும் விதை
நெல்லா ஆக முடியாது , அது மாதிரி தான் பொண்ணோட மனசும், ஒருத்தனை மனசார
நினைச்ட்டான்னா பிறகு அவ செத்த பொணம் மாதிரி தான் கட்டாயக்கல்யாண மாப்ளை கிட்டே கிடப்பா
லாஜிக்
மிஸ்டேக்ஸ்
1
கிராமங்களில் வயசுப்பெண்ணை வீட்ல
தனியா விட்டுட்டு பெற்றோர்
வெளியூர் போக மாட்டாங்க . பக் வீட்டில்
நைட் படுத்துக்க சொல்வாங்க. அல்லது துணைக்கு
ஒரு லேடியை நைட் படுக்க
ஏற்பாடு பண்ணிட்டுப்போவாங்க ,
கதைப்படி அந்த பூக்காரப்பெண் நாயகியின்
பக் வீடு , ஏன் அதை ஃபாலோ
பண்ணலை நாயகியின் அப்பா?
2
வில்லன் தன் மேல்
கை வெச்சான் , ஒரு பளார் கொடுத்தேன்,
ஏற்கனவே பிரச்சனை இருக்கு என்ற தகவலை
நாயகி ஏன் அப்பாவிடம் சொல்ல்லை?
3 ஒரு சீனில்
நாயகி வீட்டுக்கதவை தாழ்
போடாமல் உடை மாற்றுகிறார். வில்லன் எட்டிப்பார்த்து பின்
கிளம்பறான், கிராமத்தில் அப்டி
அசால்ட்டா இருக்க மாட்டாங்க இதுல இன்னொரு
காமெடி இருக்கு , வில்லன் வெட்டியாதான்
ஊர் சுத்திட்டு இருக்கான், நாயகி ஆத்துல
குளத்துல அடிக்கடி குளிக்கறா . அதை தத்தி
வில்லன் கவனிக்கவே இல்லை
4
நாயகனை வீண் பழி சுமத்தும்
வில்லன் அப்டியே சும்மா விட்டுடறான். தண்டனை கிடையாதா?
5
வில்லன் ஒரு பெண் பித்தன்
என்பது தெரிந்தும் அவனது அல்லக்கை தன் மாமா மகள் பற்றி அவனிடம்
புலம்புவதும் மேரேஜ் பண்ண
ஆசைபப்டுவதையும் சொல்வது எப்படி?
சி.பி ஃபைனல் கமெண்ட் -
சிறந்த பொழுது போக்கு சித்திரம்
,அந்தக்கால படம் ஆச்சே? இப்ப பார்க்க செட் ஆகுமா?னு யோசிக்க
வேண்டாம், யூ ட்யூப் லிங்கில் கிடைக்குது . ரேட்டிங் 3 / 5