Showing posts with label பீட்சா 2 - வில்லா - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label பீட்சா 2 - வில்லா - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, November 14, 2013

பீட்சா 2 - வில்லா - சினிமா விமர்சனம்

a

ஹீரோ ஒரு க்ரைம்  நாவல் எழுத்தாளர்.  அவரோட அப்பா ஒரு ஓவியர். சில பெயிண்ட்டிங்க்ஸ் எல்லாம் வரைஞ்சு ஒரு வீட்டுல வெச்சிருக்கார். அந்த  ஓவிங்கள்ல எதிர் காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை  விவரிப்பது போல் சில கலெக்‌ஷன்ஸ் இருக்கு.ஹீரோவோட அம்மா விபத்தில் இறப்பது போல் ஒரு ஓவியம். அந்த ஓவியம் வரைஞ்ச  அடுத்த வருசம் அம்மா  டெட். ஹீரோ நாவல் எழுதுனதுக்காக அவார்டு வாங்குவது போல் ஒரு ஓவியம் அதே போல்  ஹீரோ அவார்டு வாங்கறார். 


இந்த மாதிரி  சில சம்பவங்கள் ஓவியங்கள் ல இருப்பது போலவே ஹீரோ வாழ்க்கைல நடக்குது . ஹீரோவோட அப்பா பிஸ்னெஸ் ல லாஸ் ஆகி கோமா ஸ்டேஜ் ல படுத்து செத்துடறாரு.


ஹீரோவுக்கு தற்செயலா  வில்லா அப்டிங்கற வீட்டைப்பத்தி தகவல் கிடைக்குது . அது அவரோட  அப்பா  வாங்குன வீடுதான் , ஆனா ஏதோ சில காரணங்களுக்காக  அந்த வீட்டைப்பற்றின  தகவல்களை மறைச்சுட்டாரு . அந்த  வீட்டில்  இதுக்கு முன்னால வாழ்ந்தவங்கள்ல ஒரு ஆள்  ஒரு குழந்தையை நர பலி கொடுத்திருக்காரு. அதனால யாக்கூட இருக்கலம்னு  ஹீரோ  நினைக்கறாரு. 


ஹீரோவோட அப்பா வரைஞ்ச  ஓவியக்கலெக்‌ஷன் ல ஹீரோ சாவது போலவும் , ஹீரோவோட லவ்வரை ஹீரோவே கொலை செய்வது போலவும் இருக்கு . 


ஹீரோ அதைத்தடுக்க  எடுக்கும்  நடவடிக்கைகள்  வெற்றியா? தோல்வியா?  என்பது க்ளைமாக்ஸ்





விஜய் சேதுபதி   ஹீரோவா  நடிச்ச பீட்சா செம  ஹிட் ஆனதால் அதே ஃபார்முலாவில் பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டில் எடுக்கப்பட்ட தமிழ்  சினிமாவுக்கு   மாறுதலான  த்ரில்லர்  கதை  கொண்ட  படம்


ஹீரோவா அசோக் செல்வன். கச்சிதமான நடிப்பு . அவர் ஏன் படம் முழுக்க இறுக்கமான  முகத்துடன் வர்றார்னு தெரியலை. அப்பப்ப   ஜாலியா  இருப்பது மாதிரி காட்டி இருக்கலாம். 


ஹீரோயின் சஞ்சிதா  ஷெட்டி . ஹீரோவை விட அதிக ஸ்கோப் உள்ள கேரக்டர் . இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம் 


நாசர்  ஹீரோவுக்கு அப்பா கேரக்டர் . ஆனா அதிக வாய்ப்பில்லை 



பின்னணி இசை  பிரமாதம்  என  சொல்ல   முடியாவிட்டாலும் ஓக்கே லெவல் . 


இயக்குநரிடம் சில கேள்விகள் 



1.   முன்  பாதி ரொம்பவே ஸ்லோவாப்போகுது . பீட்சா  முதல் பாகம் மாதிரி இருக்கும் என எதிர்பார்த்த  ரசிகர்கள்  ஓ-ன்னு கத்த ஆரம்பிச்சுடறாங்க . க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் கை கொடுக்கும்னு அதீத தன்னம்பிக்கையில் முன் பாதியில் கோட்டை விட்டது போல் தோணுது .ஸ்லோ   அண்ட் ஸ்டடி வின் த ரேஸ் அப்டினு நினைச்சுட்டார் போல . 


2. அவார்டு  வாங்கும்   ஓவியத்துல  தெளீவா ஒரு பெரிய ஆள் வாங்கும் விருது போல் இருக்கு, ஆனா ஹீரோயின் சின்ன வயசுல ஏதாவது ஓவியம் வாங்கி இருக்கியா? என்று கேட்கும் சீன்  தேவை இல்லாதது 


3  ஹீரோயின் ஏன் ஹீரோவை அடிக்கடி நச்சரிச்சுட்டே இருக்கா? என்பதற்கு க்ளைமாக்சில் பதில் இருக்கு . ஆனா ஹீரோ ஹீரோயினை அடிக்கடி அவாய்டு பண்ணும் காட்சி  எரிச்சல் தான் வர வைக்குது . ஹீரோயின்  மேல் உள்ள காதலால் தான் அப்படி பண்றார் என்றாலும் அதை காட்சிப்படுத்தும்போது ஆழமா செய்யலை


4 அந்த  வீட்டால் தான் பிரச்சனை எனும்போது  ஏன் விலகிப்போகாமல் ஹீரோ மேலும் மேலும் புதைகுழியில் சிக்கனும் ?


5 வில்லா வீட்டின்  முந்தைய ஓனர் பொன்ராஜ் அவரது அண்ணனால் கொலை செய்யப்படப்போறார் என்பது  ஹீரோவுக்குத்தெரிந்தும் அதை ஏன் பொன்ராஜிடம் சொல்லி எச்சரிக்கலை ?  சும்மா பொதுவா சொல்றாரு . நீங்க இந்த  ஊர்ல  இருக்க வேணாம்னு . ஆனா உங்கண்ணன் உங்களைக்கொலை பண்ணப்போறார்னு ஓவியம் சொல்லுது அப்டினு உடைச்சுச்சொல்லலை , அது ஏன் ?


6  ஹீரோவோட நண்பர் எதிர்பாராத விதமா கால் ல அடிபட்டு ஆம்புலன்ஸ் மூலம்  ஹீரோ மூலம்  அவசர அவசரமா  அழைத்துச்செல்லப்படறார். எந்த ஹாஸ்பிடல் போகப்போறோம்னு  ஹீரோவுக்குக்கூடத்தெரியாது . ஆனா அங்கே வரும்  ஹீரோயின் கிட்டே யாரோ ஒரு  பப்ளிக் ஒரு பிரைவேட் ஹாஸ்பிடல் பெயரை எப்படி சொல்றார்?


7 ஹீரோவோட நண்பருக்கு 2 கால்களையும் ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டோம்னு ஒரு தகவலா டாக்டர்  ஹீரோ கிட்டே சொல்றார் . ஆபரேஷன் முன்பே  நோ அப்ஜெக்சன் லெட்டர்ல சைன் வாங்கவே இல்லை


8 பேய் பங்களா என  சொல்லப்படும் ராசி இல்லாத பங்களா மார்க்கெட் ரேட் எப்படி நாலரைக்கோடி வரும் ?


9 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் காட்சிகள் அதி புத்திசாலித்தனமாக அமைக்கப்பட்டிருக்கிறது .  ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கு மட்டும்  புரிஞ்சாப்போதுமா?


10 ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படத்தை  அசால்ட்டான முன் பாதியால்  கமர்ஷியல் ரீதியான வெற்றி பெறாத படமாக ஆக்கி விட்டீர்கள்



 மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஓவியர்கள் பொதுவா   அந்த மைன் செட்ல என்ன ஓடுதோ அதைத்தான் வரைவாங்க . பின் எதை வெளீல காட்டலாம் என்பதை அவங்களா முடிவு செய்வாங்க 



2.  உன்னால எதையும் , எப்பவும் மாத்தவே முடியாது . நடப்பது நடக்க இருப்பது நடந்தே தீரும் 



3  மனிதனோட உடல் ல இருக்கும் முடிக்கு , தங்கத்துக்கு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கு . அதனாலதான் கோயிலுக்கு உள்ளே போகும்போது ஆண் சட்டையைக்கழட்டிப்போகனும்கறாங்க . பொண்ணு தங்க நகைகள் அணிஞ்சு போகனும்கறாங்க . பாசிட்டிவ் எனர்ஜியை அப்சர்வ் பண்ற பவர் முடி , தங்கம் 2க்கும்  இருக்கு 


4 இறந்தவங்க எல்லாரும் கெட்டவர்களோ , துரோகிகளோ  இல்லை, அதே சமயம் வாழ்பவர்கள் எல்லாரும் நல்லவர்கள் அப்டினும் சொல்லிட முடியாது 





சி பி கமெண்ட் - த்ரில்லர் மூவி , சஸ்பென்ஸ் பட விரும்பிகள் பார்க்கலாம் . தேவையற்ற ரத்தம் , கோரக்காட்சிகள் எதுவும் இல்லாத படம். எதுக்கு யு /ஏ? யு வே கொடுத்திருக்கலாம் . பெண்களும் ரசிக்கும் வண்ணம் இருக்கு . ஏ சென்ண்டர்களில் மட்டும்  சுமாரா ஓடும் . பீட்சா படம் அளவு அனைத்து ரசிகர்களிடம்  போய்ச்சேராது 


பீட்சா2 -வில்லா - முதல்பாதி ஸ்லோ திரைக்கதை , அபாரமான க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்ஸ் ,கச்சிதமான இயக்கம் -



ஆனந்த விகடன் மார்க் -43 ,


ரேட்டிங்க் - 3.25/5


குமுதம் ரேட்டிங்க் - ஓக்கே


டிஸ்கி = பைத்தியம் கேரக்டரில் ஓவியர் வீர சந்தானம் , டைரக்டர் கேரக்டரில் எஸ் ஜே சூர்யா கெஸ்ட் ரோல் பண்ணி இருக்காங்க . இயக்குநர் பாராட்டு பெறும் பகுதிகள் ல எதைச்சொன்னாலும் சஸ்பென்ஸ்ட் உடைஞ்சுடும். எனவே இந்த டைம், அது மட்டும் ஆப்செண்ட்.