Showing posts with label பீட்சா. Show all posts
Showing posts with label பீட்சா. Show all posts

Thursday, November 01, 2012

பீட்சா - PIZZA - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கலக்கல் பேட்டி @ கல்கி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidNW17YYj8xOMoxuXRtJHo-XKPRRq6aMygk__rZdinJUnNfCaiS_jMDHR_B9mYH2A8JdOAelRQy6ln7VpZNT2UfDqy3W8hrhGh7UYjPFHhHIUOG5gbtGV-kOY7UmbkurwwADouiCAdXGc/s400/PIZZA.jpgசினிமா

இயக்குனரிடம் வேலை பார்க்க வேண்டியதில்லை!

ராகவ்குமார்

தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் பிடித்த ஃபேஷன் உணவானபிட்சாவின் பெயரைக் கேட்டால் நிறைய பேருக்குப் பயம் வருகிறது. காரணம்பிட்சாபடத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். முதல் படமானபிட்சாவில் அமானுஷ்யம், பேய் பங்களா என பல திகில் சமாச்சாரங்களைக் காட்டி பயமுறுத்தி இருக்கிறார். சினிமாவில் இயக்குனராக வேண்டுமானால் பல ஆண்டுகள் அசிஸ்டென்டாக இருக்க வேண்டும் என்ற விதியை மாற்றி, எந்த ஒரு இயக்குனரிடத்திலும் உதவியாளராக இல்லாமல், ஜெயித்திருக்கிறார். அமுல் பேபி கன்னங்களுடன், கல்லூரி மாணவனைப் போலிருந்தும் இயக்குனர் நம்முடன் உரையாடியதிலிருந்து...
நான் மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் காலேஜில் படிச்சேன். மதுரைக் காரங்களுக்கு கோயில்களுக்கு அடுத்தபடியா இருக்கிற ஒரே பொழுதுபோக்கு சினிமா பார்க்கறதுதான். மதுரையில் நான் பார்த்த நிறைய சினிமாக்கள்தான் இன்ஜினியரிங் படிச்ச என்னை சினிமாவுக்குக் கொண்டு வந்தது.
நான் பெங்களூரில் வேலை பார்த்தபோது சஞ்சய் நம்பியார் என்பவரிடமிருந்து கத்துக்கிட்ட குறும்படப் பயிற்சிகள், சினிமாவில் ஒரு விஷுவலை எப்படி கையாளுணும்னு கத்துக் கொடுத்தது. பேயைப் பத்தி படம் எடுத்தாக்கூட பேய், பிசாசு மேல எனக்கு நம்பிக்கை கிடையாது.
என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண்மணிஜெகன்மோகினிபடம் பார்த்தாங்க. படத்தில் பேய்கள், வெறும் கையோடு கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு பலகாரம் செய்ற காட்சி வரும். படம் பார்த்த சமயம் தீபாவளிக்கு முந்தைய சில நாட்கள். படம் முடிந்து அந்தப் பெண்மணி நேர வீட்டுக்கு வந்தாங்க.
வீட்டில் தீபாவளிக்கு நிறைய பாட்டிகள், பட்சணங்கள் செய்றதைப் பார்த்திருக்காங்க. பாட்டிகள் உட்கார்ந்து பலகாரம் செய்றதைப் பார்த்த பெண்மணிக்கு, ‘ஜெகன்மோகனிபடத்தில் பேய்கள் பலகாரம் செய்றது ஞாபகத்தில் வந்து பயந்து போயிட்டாங்க. இந்தப் பயத்தால் பல வருடங்கள் திக் பிரமைப் பிடிச்சதுபோல் இருந்தாங்க.

இந்தப் பெண்மணிக்கு ஏற்பட்ட பிரச்னையை உளவியல் மருத்துவத்தால் குணப்படுத்தாமல் பேய் விரட்டறது, மந்திரிக்கறதுன்னு, படாதபாடு படுத்திட்டாங்க.
காதால் கேட்கற, கண்ணால் பார்க்கற விஷயங்களுக்கு, நாமளா சில கற்பனைகளைச் சேர்த்து பேய், பிசாசுன்னு வடிவம் தருகிறோம். நம்பிக்கை வேறு, மூட நம்பிக்கை வேறு" என்று கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் தந்து கொண்டிருக்கும்போது, ‘பிட்சாஹீரோ விஜய்சேதுபதி என்ட்ரி ஆகி பேச ஆரம்பித்துவிட்டார்.
படத்தில் நீங்க பார்த்த பேய் பங்களாவில் சூட்டிங் நடந்த சமயம் நான் மட்டும் மேல்மாடியில் தனியா இருந்தேன். அந்தப் பங்களாவில் தனியா இருக்க ஒருவித பயம் இருந்தது. உடனே டைரக்டர்கிட்ட ஃபோன் செய்து, சார், தனியா இருக்கப் பயமாய் இருக்கு. யாராவது அசிஸ்டென்ட் இருந்தா அனுப்புங்க"ன்னு சொன்னேன். ஷூட்டிங் நடக்கிற நாட்களில், வீட்டிலும், வெளியிலும் இனம் புரியாத ஒருவித பயம் இருந்துகிட்டே இருந்தது."
யார்கிட்டையும் அசிஸ்டென்ட் டைரக்டராக இல்லாமல் டைரக்டராகிட்டீங்களே? இதுதான் இன்றைய சினிமா டிரெண்டா? என்று இயக்குனரிடம் மீண்டும் ஒரு கேள்வியைப் போட்டோம்.
சினிமாவில் டைரக்டராக பல வருடங்கள் உதவியாளராய் இருக்கணும்னு ஒரு வழிமுறை இப்பவரைக்கும் இருக்கு. ஆனா அது அவசியமில்லை. சாதாரண விலையில் கிடைக்கும் டிஜிட்டல் கேமிராக்கள், சில ஆயிரங்கள் செலவு செய்து குறும்படங்கள் செய்து தர வழிவகை செய்திருக்கு. இந்தக் குறும்படங்களை இணையத்திலும், தொலைக்காட்சியிலும் பார்க்கக் கிடைக்கும்போது, தயாரிப்பாளர்களை எளிதாக அணுக முடிகிறது. ஷங்கர், கௌதம்மேனன் போன்ற பெரிய இயக்குனர்கள் குறும்படங்களைப் பார்த்துதான் உதவியாளரைச் சேர்த்துக்கிறாங்க. இதை டிரெண்ட்ன்னு சொல்றதைவிட, இயக்குனராக இன்னொரு வழின்னு சொல்லலாம்."
அழகா இருக்கீங்களே... நடிக்கப் போயிடுவீங்களா?
எனக்கு டைரக்ஷன் மட்டும்தான் செய்ய தெரியும்."



நன்றி - கல்கி 
 இடம் இருந்து வலமாக இருப்பவர்தான் இயக்குநர் ( கறுப்பு சட்டைக்காரர், ஹிட்டடிப்பதில் கெட்டிக்காரர் ;-))

http://www.newsonweb.com/newsimages/September2012/60db90ec-c45d-4e7a-b7a3-c989446928a81.jpg


Friday, October 19, 2012

பீட்சா - சினிமா விமர்சனம்

ஹீரோ ஒரு பீட்சா ஷாப்ல டெலிவரி மேன்.அவனுக்கு ஒரு லிவ்விங்க் டுகெதர் லைஃப் பார்ட்னர்.மேரேஜ் பண்ணிக்க சொல்லி வற்புறுத்துறா. ஆனா லைஃப்ல செட்டில் ஆன பின்னாடி பண்ணிக்கலாம்னு சொல்லி மேட்டர் எல்லாம் முடிச்சு கரு தங்கிடுது.ரொம்ப வற்புறுத்துன பின் மேரேஜ்க்கு ஓக்கே சொல்றான்.

 பீட்சா கடை ஓனர் வீட்டுக்கு ஒரு டைம் இவன் போனப்போ அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதும் , அது பேய் பிடிச்ச மாதிரி  இருப்பதும் ( மே பி மன நலம் குன்றி ) தெரிய வருது.இந்த மேட்டரை யார் கிட்டேயும் சொல்லிடாதேன்னு ஓனர் சொல்றார்.

 அடுத்த நாளே அவன் வாழ்க்கைல ஒரு திருப்பம். பீட்சா டெலிவரி பண்ண வந்த இடத்துல ஒரு வீட்ல மாட்டிக்கறான்.வீட்ல இருந்த ஒரே ஒரு லேடி கொலை செய்யப்பட்டு இருக்கா. உடனே ஹீரோ வெளில வர பார்க்கறான். முடில . லாக்டு. கொலை செய்யப்பட்ட லேடியோட கணவர் வீட்டுக்கு  வெளில வாசல்ல நின்னு கால் பண்றான். ஹீரோ எடுத்து பேசறார்.கணவர் ஹீரோவை நம்பலை.ஹீரோ தான் அவளை கொலை பண்ணி இருக்கனும்கறார்.


 அடுத்த திருப்பம். அந்த ஆளும் செத்து கிடக்கறான்.. அந்த வழியா ரோந்து போன  போலீஸ் 2 பேரு வர்றாங்க. இந்த வீட்ல ஒரு வாரமா போலீஸ் சீல் வெச்சிருக்கு. 4 கொலை நடந்த இடம் ஆச்சேங்கறாங்க..  ஹீரோ மேல சந்தேகப்பட்டு விசாரிக்கறாங்க . அவங்க கிட்டே இருந்து தப்பி வந்துடறான் ஹீரோ. அந்த 2 போலீஸும் அந்த பங்களாவுலயே மாட்டிக்கறாங்க.. 


http://tamil.cinesnacks.net/photos/actress/Ramya-Nambeesan/ramya-nambeesan-hot-093.jpg


அடுத்த திருப்பம்.ஹீரோயினை காணோம்.ஹீரோ தான் கொலை பண்ணிட்டாரா? அல்லது குடைக்குள் மழை ஆர் பார்த்திபன் மாதிரி அப்படி ஒரு கேரக்டரே இல்லையோ என சந்தேகப்பட வைக்குது ஹீரோவின்  நடவடிக்கைகள்.ஏன்னா ஹீரோவைத்தவிர வேற யாரும் ஹீரோயினை பார்த்ததில்லை . ஹீரோவோட ஃபிரண்ட்சோ, ஓனரோ பார்த்ததில்லை.

 என்ன தான் நடந்துச்சு என்பதை அட்டகாசமான திரைக்கதை உத்தி மூலம் சொல்லி இருக்காரு இயக்குநர்.இந்தப்படத்துல  யூகிக்க முடியாத பட்டாசான ட்விஸ்ட்ஸ் 2 இருக்கு. அதை சொன்னா சுவராஸ்யம் போயிடும்.

ஹீரோவா நடிச்சவர்  விஜய்சேதுபதி ஆல்ரெடி தென் மேற்குப்பருவக்காற்று படத்துல நடிச்ச ஹீரோதான். பயம், திகில் , கோபம், இயலாமை என நவ ரசங்களையும் காட்ட வாய்ப்பு. நல்ல நடிப்பு. சபாஷ்.. 


ஹீரோயின் ரம்யா நம்பீசன்.இவரைப்பற்றி வர்ணிக்க டைம் இல்லை.ஏன்னா இது ரொமான்ஸ் படம் இல்லை.. க்ரைம் த்ரில்லர் படம்.இவரை வர்ணிச்சுட்டு இருந்தா இயக்குநரை பாராட்ட டைம் இல்லாம போயிடும்.. ஆனாலும் இவரது டைட் டிரஸ் பார்க்கற ஆடியன்சை லூஸ் ஆக்கும் அளவு கிண்ணுனு இருக்கு.. 

மாலைப்பொழுதின் மயக்கத்திலே படத்துல வந்த காபி ஷாப் பேரர் இதுலயும் வர்றார். இவர் ஆல்ரெடி பல குறும்படங்கள்ல நடிச்சவர். இவர் நடிப்பும் நல்லாருக்கு. குறிப்பா பீட்சா கடை ஓனர்  பொண்ணு ஹீரோவை பேய் மாதிரி ஒரு லுக் விடும்போது பேய் நம்பிக்கையே  இல்லாதவர்கள் கூட முதுகுத்தண்டு சிலிர்க்கும் அளவுக்கு அவர் பார்வை.. அபாரம் 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigvKXGtlp-g5kpcieAeSff2KE4OnrUtr903r2VNkUeN5Qy8oP7B7nasT4aHehEG1Rf_l7W-XwAR1Y2iZX8ZwyMAIvaaKy6-jLLuW72Rz1QgvoKbGVfS58RIPwVZGInni4TrFU_tykD3M0/s1600/ramya_nambeesan_stills05.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. சினி ஃபீல்டில் அதிக அனுபவம் உள்ள பெரிய பெரிய ஜாம்பவான்களே தட்டுத்தடுமாறி கரை சேரும் கோடம்பாக்கத்தில் அசால்ட்டாக டைவ் அடிச்சு கரை தொட்டு இருக்கார். முதல்ல அவருக்கு ஒரு பூச்செண்டு. அபாரமான திரைக்கதை. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் சபாஷ் ரகம்.கார்த்திக் சுப்புராஜ்க்கு தயாரிப்பாளர் ஒரு கார் வாங்கித்தருவது உறுதி 





2. படத்தில் ஒரு 37 நிமிடங்கள் வெறும் டார்ச் லைட் வெளிச்சம் மட்டுமே உபயோகித்து ஹீரோ இருட்டு வீட்டில் உலவும், பரிதவிக்கும் இடங்கள் பட்டாசு பட்டாசு. சபாஷ் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத். அது போக ஹீரோயினை அழகாகக்காட்டுவது, பேய்ப்படங்களுக்கான டெம்போவை ஏற்றுவது ,எல்லா விதத்திலும் சபாஷ் 



3. ஒரு திகில் படத்துக்கு பின்னணி இசை எந்த அளவு முக்கியம் என்பதை ஆல்ரெடி இளையராஜா நூறாவது நாள் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.அதை வழி மொழிந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பின்னணி இசை மிரட்டுது.


4. எடிட்டிங்க் பக்கா.படம் ரெண்டே கால் மணி நேரம் ஓடுவதில் முதல் 17 நிமிடங்கள் மட்டும் தான் 40 கி மீ வேகம். பின் எல்லாம் 90 கி மீ வேகம்.. எடிட்டிங்க் முக்கிய பங்கு 




http://www.southdreamz.com/wp-content/uploads/2010/11/ramya_nambeesan_hot_stills_photos_04.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஒவ்வொருவருக்கும் ஒரு வீக்னெஸ் உண்டு.சிலருக்கு பணம்.சிலருக்கு பொண்ணுங்க.அந்த வீக்னெசை நாம யூஸ் பண்ணிக்கனும்



2. டைமுக்கு கிடைக்காத எதுவுமே வேஸ்ட் தான்


3. எவ்ளவோ ஜாக்கிரதையா இருந்தும் எங்கேயோ தப்பு நடந்துடுச்சு.அதுக்காக கலைக்கவெல்லாம் முடியாது.



 ஓஹோ,அப்போ காண்டம் கம்பெனி மேல கேஸ் போட்றலாமா? 


4. அமானுஷ்யமான விஷயங்களை நேர்ல பார்ப்பதை விட அடுத்தவங்க வாயால கதையா கேட்கும்போதுதான் த்ரில் அதிகம் 


5. ஒவ்வொருவர் அவநம்பிக்கையும் நம்பிக்கையா மாறும் MOMENT அவங்க வாழ்க்கைல வரும் 


6. டைவர்ஸ் கேட்டு கோர்ட் படி ஏறுபவர்கள்ல முக்காவாசிப்பேர் பணக்காரங்கதான்

7. நான் எதுலயாச்சும் கேர்லெஸ்ஸா இருந்ததை நீ பார்த்திருக்கியா..?

நான் பிரெக்னெட்டா இருக்கேன்..

http://atozforfun.com/wp-content/uploads/2012/09/pizz-movie.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. ஹீரோயின் ஹீரோ 2 பேரும் லிவ்விங்க் டுகெதரா  ஒரே வீட்ல 4 வருஷங்களா இருக்காங்க. மேட்டர் முடிஞ்சுடுது, குழந்தை கரு உருவானதும்  ஹீரோயின் ஹீரோவை மேரேஜ்க்கு கம்ப்பெல் பண்றா. அப்போ ஹீரோ நாம 2 பேர் சம்பாதிக்கறது நமக்கே சரியா இருக்கு. இதுல கல்யாணம் குழந்தை எல்லாம் எதுக்கு? அப்டிங்கறார். அப்போ உடனே ஹீரோயின் என்ன கேட்கனும்? ஏய்யா. மேட்டருக்கு மட்டும் நான் வேணுமா? இனி பெட் ரூம் பக்கம் வந்துடாதேன்னு அடி மடில கை வைக்க வேணாம்? அதை விட்டுட்டு இனிமே உன் பேண்ட் சர்ட்டை துவைக்க மாட்டேன்னு மிரட்டுது. இதுதான் ஒரு பொண்ணோட மிரட்டல் பாணியா?



2. அதுக்குப்பின் ஹீரோ ஒத்துக்கறார். ஆனா ஊரறிய வேணாம் . இப்போதைக்கு இந்த வீட்ல நம்ம 2 பேருக்கு மட்டும் தெரியற மாதிரி பண்ணிக்குவோம்னு ஒரே ஒரு மோதிரத்தை  மோதிர விரல்ல மாட்டி விடறான். உடனே அந்த பேக்கு ஹீரோயின் கெக்கேக்கே பிக்கேக்கேக்கேன்னு சிரிக்குது. பதிவுத்திருமணம் பண்ண என்ன செலவு ஆகிடும்? அட்லீஸ்ட் சாட்சிகள் 2 பேராவது இருக்க வேணாமா? இப்படி வீட்டுக்குள்ளேயே மேரேஜ் பண்ணிக்கவா அத்தனை ஆர்ப்பாட்டங்கள் ?



3. பீட்சா கடை ஓனர் ஒரு கவரை குடுத்து தன் வீட்ல அதை குடுத்துட்டு வான்னு சொல்றார். ஹீரோ அங்கே போனதும் பேய் பிடிச்ச குழந்தையை பார்த்துடறார். உடனே ஓனர் தன் வேலையாள்னு பார்க்காம அவன் கிட்டே பம்மறார். இந்த மேட்டரை யார் கிட்டேயும் சொல்லிடாதேன்னு. நான் ஓனரா இருந்திருந்தா வேலையாளை வீட்டுக்கே அனுப்பி இருக்க மாட்டேன். அல்லது மனைவிக்கு ஃபோன் பண்ணி இப்போ  நம்ம வேலையாள் வர்றான். நீ கேட்டுக்கு வெளில நின்னு கவரை வாங்கிக்க. உள்ளே வந்தா  நம்ம பொண்ணு மேட்டர் அவனுக்கு தெரிஞ்சுடும்னு சொல்லி எச்சரிச்சிருப்பேன்.


4. ஹீரோவோட ஃபோன்ல செல் அவுட் கோயிங்க் போகலை, அதனால கால் பண்ண முடியலைன்னு ஓனர் கிட்டே சொல்றார். அந்த லேடியோட ஃபோன் இருக்கு. செல் ஃபோன் இருக்கு. அதுல இருந்து ஏன் கூப்பிடலை?ன்னு ஓனர் கேட்கவே இல்லையே? 


5. பீட்சா கடை ஓனர்  பேய் ஓட்டுபவர் அல்லது மந்திரவாதியை நம்பறார், ஆலோசனை கேட்கறார் , ஓக்கே  ஆனா மன நல நிபுணரை ஏன்  கலந்து ஆலோசிக்கலை. ? ஏன்னா ஒரு பெண் குழந்தையோட அப்பா தன் குழந்தை குணம் ஆகனும்னா  சாத்தியமான எல்லா  வழிகளையும் முயற்சி பண்ணி பார்ப்பார், உதாரணமா கடவுள் நம்பிக்கை பேய் நம்பிக்கை இல்லதவங்க கூட தன் பெண் குழந்தைக்கு ஒரு ஆபத்துன்னா தாயத்தா? சரி கட்டித்தான் பார்ப்பமேன்னு நினைப்பான். அதே போல மன நல சிகிச்சை பற்றியும் சிந்திச்சிருக்கனும்..


6. இந்தக்காலத்துல  ஆளாளுக்கு டபுள் சிம் ( டூயல் சிம் ) ஃபோன் வெச்சிருக்காங்க. அல்லது 2 செல் ஃபோன் வெச்சிருக்காங்க.. அப்படி இருக்கும்போது 2 கோடி ரூபா அபேஸ் பண்ணும் மேட்டரில் ஒருவர் தன் செல் ஃபோனை கழட்டி சிம்மை மாற்றி பேசிட்டு மீண்டும் பழைய சிம்மை பொருத்துவதும் அந்த இடைப்பட்ட கால அளவில் யாராவது கூப்பிட்டா தன்  சதி தெரியும் என பயப்படுவதும்  ஏத்துக்கவே முடியலை.. அட்லீஸ்ட் ஒரு பேசிக் மாடல் ஃபோன் கூடவா எக்ஸ்ட்ரா வெச்சுக்க மாட்டான்? 


7. பீட்சா கடைல 3 பேர் வேலை செய்யறாங்க. ஒண்ணா சரக்கு அடிக்கறாங்க.ஆனா ஹீரோ மனைவியை யாருமே பார்த்ததில்லை என்பதும், பீட்சா கடை ஓனரும் பார்த்ததில்லை என்பதும் நம்ப முடியலை. இப்போவெல்லாம் கடை ஓனர்ங்க ஃபுல் டீட்டெயில்ஸ் தெரியாம வேலையே தர மாட்டாங்க.. 3 வருசமா ஒர்க் பண்ற  ஆளை பற்றிய விபரம் தெரிஞ்சுக்காமயா இருப்பார்? 


8. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம் தான். ஆனா அது ஹாலிவுட் திகில் படங்களுக்கு சரி..  இந்த க்ரைம் படத்துக்கு அந்த ஆவி ட்விஸ்ட் தேவை இல்லை,. இதை ஒரு பகுத்தறிவுப்படமாவே முடிச்சிருக்கலாம்


9. அந்த பங்களாவுல கரண்ட் போனதும் மெழுகுவர்த்தி பத்த வைக்கறாங்க. இந்தக்காலத்துல ஏழைங்க கூட  எமர்ஜென்சி  லைட் வெச்சிருக்காங்க. மிடில் கிளாஸ் ஃபேமிலி கூட யூ பி எஸ் யூசிங்க் .. ஹீரோ அந்த கதையை சொல்லும்போது யாரும் இது பற்றி பேசலையே? 


http://www.mysixer.com/wp-content/uploads/2012/07/Pizza-Teaser.jpg




எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று 



சி.பி கமெண்ட் - வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் -அபாரமான திரைக்கதை உத்தி,க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம் ,சபாஷ் படம், புதுமையான கதையை விரும்பும் அனைத்துத்தரப்பும் பார்க்கலாம் ஹீரோ பின்னால் ஓடாமல் திரைக்கதை அமைக்கத்தெரிந்தால் ஒரு சாதா படமும் சூப்பர் ஹிட் ஆகும்  என்பதற்கு இது ஒரு உதாரணம்



டிஸ்கி - மனம் கவர்ந்த வசனங்களில் சஸ்பென்ஸை உடைக்கும் சில வசனங்களை போடலை. படம் பார்த்துட்டு பின்  மீண்டும் இந்த வசனங்களில் ஒரு பார்வை ஓட்டுனா இயக்குநர்  எப்படி இந்த வசனத்துலேயே ட்விஸ்ட் இருக்குன்னு சொல்லாம சொல்றார் என்பது புரியும்..  ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன்

 இப்படத்தின் இயக்குநர் பேட்டி படிக்க 

http://www.adrasaka.com/2012/10/blog-post_2147.html


டிஸ்கி - ராசிபுரம் நண்பர் ஒருவர் ( ட்விட்டர் ) ஃபோன் பண்ணி சொன்ன லாஜிக் மிஸ்டேக் - ஹீரோ  பீட்சாவை எந்த கடைக்கு டெலிவரி பண்ணனும் என்று கொடுக்கப்பட்ட அட்ரஸ்க்கு போகாமல் ஏன் அந்த பேய் வீட்டுக்கு ராங்க் எண்ட்ரி கொடுத்தார்? என பீட்சா கடை ஓனர் கேட்கவே இல்லையே? அது ஏன்?  ( நிஜமாலுமே இது சூப்பரான கேள்வி, எனக்கு தோணலை.. சி பி.. நீ இன்னும் வளரனும்)



Thursday, October 18, 2012

பீட்சா

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-prn1/s480x480/58315_272670426169601_527921359_n.jpg

"வாங்க பீட்சா சாப்பிடலாம்!"

ஆர்.சரண்
பீட்சா’. தலைப்பிலேயே வித்தியாசம். 'சாஃப்ட்வேர் வேலையா? சினிமாக் கனவா?’ என்று வந்தபோது, அமெரிக்க வாழ்க்கை - கை நிறையச் சம்பளத்தை உதறிவிட்டு கோடம்பாக்கம் புகுந்தவர் அறிமுக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். கலைஞர் தொலைக்காட்சியின் 'நாளைய இயக்குநர்’ குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவரைச் சந்தித்தேன்.



 ''அதென்ன பாஸ், 'பீட்சா’னு ஒரு தலைப்பு?''



''சென்னையை மையமா வெச்சு ஒரு ரொமான்டிக் த்ரில்லர் செய்ய நினைச்சேன். என்னோட ஹீரோ பீட்சா டெலிவரி பாய். அவனுக்கு ஒரு அழகான காதல். எல்லாம் நல்லபடியாப் போயிட்டு இருந்த அவன் வாழ்க்கையில் ஓர் இரவு... ஒரு சம்பவம் நடக்குது. அது அவனோட மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போடுது. ரெண்டு மணி நேரம் நகம் கடிக்க வைக்கிற த்ரில்லர் படம்.


 'தென்மேற்குப் பருவக்காற்று’, 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படங்களோட ஹீரோ விஜய் சேதுபதிதான் என் படத்துக்கும் ஹீரோ. சினிமாவில் ஹீரோ ஆனதுக்கு முன்னாடியே என் குறும்படங்களில் ஹீரோவா நடிச்சவர். ஹீரோயின் ரம்யாநம்பீசன். 'அட்டக்கத்தி’ இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்... அழகழகாப் பாடல்கள் பண்ணிக் கொடுத்து இருக்கார்.''





''எப்படி யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காமல் ஒரு படத்தை இயக்க முடியுது?''



''சினிமாவுக்கான ஃபார்முலா இப்போ மாறிடுச்சு. நல்ல சினிமா ரசனை இருந்தாலே போதும். கொஞ்சம் தொழில்நுட்ப அறிவும் நல்ல ரசனை உள்ள டீமும் அமைந்தால் யாரும் நல்ல படம் எடுக்க முடியும். ஷங்கர் சார் சொல்வார்... 'சினிமா ஒரு மேத்தமெடிக்ஸ்’னு. அந்தச் சூத்திரம் தெரிஞ்சா போதும். எதையும், யாரையும் பார்த்து காப்பி அடிக்காம, நம்ம வாழ்க்கையின் இனிப்பான, கசப்பான அனுபவங்களைக் கோத் தாலே அழகான திரைக்கதை கிடைக் கும்.


 என்னோட குறும்படங்கள்ல நான் கத்துக்கிட்ட விஷயங்களை சினிமாவுல பண்ணி இருக்கேன். 14 குறும்படங்கள் எடுத்து இருக்கேன். 'யூ டியூப்’ல் நான் அப்லோட் பண்ணின முதல் குறும்படத்துக்கு 'இதெல்லாம் படமாடா?’னு கமென்ட் வந்தது. ஆனால், கடைசியாக எடுத்த குறும்படம் லட்சக்கணக்கில் ஹிட்ஸ் அள்ளுது.''



'' 'நாளைய இயக்குநர்’ முதல் இன்றைய இயக்குநர் வரை - கதை சொல்லுங்களேன்?''




''நான் மதுரைப் பையன். பள்ளியில் படிக்கும் போதே நாடகம், கலை விழான்னு திரிஞ்சிட்டு இருப்பேன். குறும்படப் பட்டறைகளில் முதல் ஆளாக ஆஜர் ஆகிடுவேன். அப்புறம் 'மெக்கட் ரானிக்ஸ்’ படிச்சிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டேன். ஆனாலும், மனசு மட்டும் டிராமா, குறும்படம்னு குறுகுறுத்துட்டே இருந்துச்சு. அமெரிக்காவில் 'லாஸ்ட் ட்ரெய்ன்’ என்ற குறும்படம் எடுத்தேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. தொடர்ந்து நிறையக் குறும்படங்களை எடுத்து 'யூ டியூப்’ல அப்லோட் செஞ்சேன். அது எனக்கு நல்ல களமா அமைஞ்சது.



அப்படி அமெரிக்காவில் நான் எடுத்த ஒரு குறும்படத் தைத்தான் 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். தேர்வாகி அழைப்பு வந்தப்ப, வேலை விஷயமா நான்  ஃபிரான்சில் இருந்தேன். வாழ்க்கையின் முக்கியமான கட்டம் அது. 'சினிமாவா, வேலையா?’னு யோசிக்கவே இல்லை. மூட்டை முடிச்சுகளைக் கட்டிட்டு சென்னைக்கு வந்துட்டேன்.



 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் என்னோட 'துரு’, 'நீர்’ படங்கள் பயங்கர அப்ளாஸ் அள்ளியது. 'நீர்’ இரண்டாம் இடத்தைத் தட்டியது. ராமேஸ்வரம் மீனவர் பிரச்னையை மையமா வெச்சு எடுத்த அந்தக் குறும்படத்தைப் பார்த்துட்டு, பல தயாரிப்பாளர்கள் கதை கேட்டாங்க. அந்த உற்சாகத்தில்தான் 'அட்டகத்தி’ படத்தைத் தயாரிச்ச திருக்குமரனிடம் ஸ்க்ரிப்ட்டைக் கொடுத்தேன். உடனே ஓ.கே. சொல்லி ஷூட்டிங் கிளம்பியாச்சு. வாங்க பீட்சா சாப்பிடலாம்!''


 நன்றி - விகடன் 


http://www.virakesari.lk/image_article/Pizza.jpg



அழகும், அம்சமும் நிறைந்த நடிகை. இதுவரை நடித்ததும் நல்லப் படங்கள் தான் என்றாலும், நடிகை ரம்யா நம்பீசனுக்கு கோடம்பாக்கம் கொடுத்திருக்கும் அடையாளம் ராசியில்லா நடிகை என்பதுதான். இந்த அடையாளத்தை வைத்துகொண்டு கோடம்பாக்கத்தில் எப்படியாவது முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ரம்யாவின் பசிக்கு கிடைத்திருக்கிறது 'பீட்சா'.

"மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தும், தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நான் இன்னும் பிடிக்க வில்லை. 'பீட்சா' படம் வெளியானப் பிறகு கோடம்பாக்கத்தில் எனக்கும் ஒரு அந்தஸ்து கிடைக்கும்." என்று ரம்யா நம்பீசன் கூறினார். அவர் கூறியது உண்மைதான் என்று உணர்த்தியது இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டில் திரையிடப்பட்ட பாடல்களும், டிரைலரும். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பாடல் காட்சியில் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியுடன் மிக நெருக்கமாக நடித்திருக்கிறார் ரம்யா நம்பீசன்.

இந்த நெருக்கமான நடிப்பு தான் தன்னை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாரோ என்னவோ!. ஏன் இப்படி நடித்தீர்கள்? என்று கேட்டால், "கதைக்கு தேவைப்பட்டது அதனால் தான் இப்படி நெருக்கமாக நடித்தோம். படத்தைப் பார்த்தால் உங்களுக்கே அது புரியும்." என்கிறார் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி.

இது ஒரு திரில்லரான காதல் கதையாம்.பீட்சா டெலிவரி பண்ணுவதற்காக ஹீரோ ஒரு வீட்டிற்கு செல்கிறார். அங்கு நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தின் கதை. இப்படத்தை இயக்கியிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ் என்ற புதுமுகம். இவர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாதவர். குறும்படங்கள் இயக்கி தனது திறமையை நிரூபித்து இந்த படத்தின் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

அது என்ன 'பீட்சா' எங்கே போனது தமிழ்? என்று இயக்குநரிடம் கேட்டால், "பீட்சா என்பது இத்தாலி நாட்டு பிரபலமான ஒரு உணவு. அங்கே அந்த உணவை அழைப்பது போலதான் இங்கேயும் அழைக்கிறார்கள். நமது தோசையை ஆங்கிலத்திலும் தோசா என்று தான் சொல்லுவர்கள். அதுபோல தான் இதுவும் பீட்சா என்பது ஒரு உணவின் பெயர் தான். அதனால் இதை தமிழக அரசு ஏற்றுகொள்ளும் என்று நம்புகிறோம். இந்த தலைப்பும் எங்கள் கதைக்கு பொருத்தமாக இருந்ததால் வைத்துவிட்டோம். என்று விளக்கம் அளித்தார்.

நன்றி - சென்னை ஆன் லைன்


diSki -பீட்சா - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க
http://www.adrasaka.com/2012/10/blog-post_1749.html