Showing posts with label பிஸ்கோத் – சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label பிஸ்கோத் – சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, November 17, 2020

பிஸ்கோத் – சினிமா விமர்சனம்

பிஸ்கோத் – சினிமா விமர்சனம்

 

தமிழ்  சினிமா  உலகில்  காமெடியனாக  இருந்து  ஹீரோ ஆன  சோ  முகமது பின் துக்ளக் ல  ஹீரோவாக  செம  ஹிட் படம்  கொடுத்தார். அது அவரே  கதை வசனம்  எழுதிய  நாடகம், நாகேஷ்   கே பாலச்சந்தர்  டைரக்சன்ல   நீர்க்குமிழி , சர்வர்  சுந்தரம்  என   ஜெயித்தார்.   சுருளிராஜன்  மாந்தோப்புக்கிளியே மெகா  ஹிட் கொடுத்தார். சந்திரபாபு  மாடி  வீட்டு ஏழை  என  சொந்தப்படம்  எடுத்து  கையைச்சுட்டுக்கிட்டார். (  நாடோடி  மன்னன்  ல காமெடி  டிராக்ல  நடிக்க  கால்ஷீட்  தராம  எம் ஜி ஆரை  இழுக்கடிச்சதுக்கு  டிட்  ஃபார் டாட்டா  இந்தப்படத்துல  கால்ஷீட் தராம எம் ஜி ஆர்  அலைய வெச்சார்)

 

 ஒரு நீண்ட  இடைவெளிக்குப்பின்  கவுண்டமணி   பணம்  பத்தும்  செய்யும்    ஜெயிச்சார்  ஹீரோவா . ஆனா  பிறந்தேன்  வளர்ந்தேன் அட்டர் ஃபிளாப். விவேக்  ஹீரோவா  நடிச்ச  வெள்ளைப்பூக்கள்  மீடியம்  ஹிட் த்ரில்லர். வடிவேலு  23ம்  புலிகேசியில்  ஜெயிச்சார். இந்திர    லோகத்தில்    நா  அழகப்பன்  ல தோற்றார். தொடர்ந்து  எலி  கூட காப்பாத்தலை .


செந்தில்  கிழக்கு  ஆப்பிரிக்காவில்  ஷீலா  வில் மீடியமா  ஜெயிச்சார். யோகிபாபுக்கு பெருசா  கூர்க்கா கை கொடுக்கல



சந்தானம் கே  பாக்யராஜ்  இயக்கிய  இன்று போய் நாளை  வா  வை அட்லீ  ஒர்க் பண்ணி  பிறகு  பிரச்சனை  ஆகி  செட்டில்மெண்ட்  பண்ணி  ஜெயிச்சார்.அதுக்குப்பின் இனிமே இப்படித்தான்  ஓடலை . தில்லுக்கு  துட்டு  மீடியம் ஹிட் 


இப்போ  பிஸ்கோத்  விமர்சனத்துக்கு  வருவோம். இந்தக்கதைக்கு  ஆக்சுவலா  பாட்டி சுட்ட  பக்குவமான  வடைகள்னு டைட்டில்  வெச்சிருக்கலாம், ஏவி எம்மின்  பாட்டி  சொல்லை  தட்டாதே  மாதிரி  ஹிட்  ஆக்கி இருக்கலாம்


பொதுவா  சந்தானம்  கிட்டே  என்ன பிரச்சனைன்னா  இவர்   கிட்டே  ஜனங்க  எதிர்பார்ப்பது  ஒன் லைனர்  பஞ்ச் , காமெடி  கவுண்ட் டவுன். ஒரு கல் ஒரு கண்ணாடில  கிட்டத்தட்ட 107    காமெடி  டயலாக்ஸ்  பேசி  ஹீரோ  மாதிரி நல்லா  பண்ணி  இருந்தார். ஆனா  நிஜமா இவர்  ஹீரோவா  நடிக்கும்போது  ஆக்சன்  ஹீரோவா , நாயகி  கூட  டூயட்  பாடும்  மாமூல்  மசாலா  ஹீரோவா  தன்னை  பிரமோட்  பண்ணிக்க  நினைக்கறார். அது  சரியா  ஒர்க் அவுட்  ஆக மாட்டேங்குது 


படத்தோட கதை  என்ன?னு பார்க்கும் முன் இது எங்கே இருந்து  உருவி இருக்காங்கனு பார்ப்போம். 2008ல்  ஹாலிவுட்டில் ரிலீஸ்  ஆன  பெட்  டைம்  ஸ்டோரீஸ்  ல இருந்து  ஒரு 80%  உருவி இருக்காங்க 



ஹீரோவோட  அப்பா  பிஸ்கெட்  கம்பெனி  ஓனர். அவரோட  பார்ட்னர்  அந்தக்கம்பெனியை  நைசா  ஆட்டையைப்போட்டுடறார். அந்தக்கம்பெனிலயே சூப்பர்  வைசரா  வேலை பார்க்கும்  ஹீரோ  அந்த கமெப்னிக்கு   ஜி எம்  ஆனாரா? இல்லையா? என்பதுதான்  கதை . 


அடிக்கடி  அநாதை  ஆசிரமம்  போகும் வழக்கம்  உள்ள  ஹீரோ  அங்கே  ஒரு பாட்டி சொல்லும் கதைகள்  நிஜ  வாழ்வில்  நடப்பதைக்கண்டு பிடிக்கறார்


ச்ந்தானம்  ஹீரோவா  தட்டுத்தடுமாறி  பண்ணி இருக்கார் .  ஆடுகள்ம  நரேன்  அப்பா  ரோல்.  கொஞ்ச நேரம் தான். ஆனந்தராஜ் தான் பார்ட்னர். அவர்  பெரிய அளவில்  வில்லத்தனம்  ஏதும் பண்ணலை 


 2  ஹீரோயின்கள் தாரா  அலிசா .ஸ்வாதி  முப்பலா . ரெண்டுமே சுமார்  ரகம் தான். வாய்ப்பும் அதிகம் இல்லை  பாட்டியாக  வரும் சவுகார்  ஜானகி  தெளிவான குரலில் கதை சொல்றார்

ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங்  எல்லாம் சொல்லிக்கொள்ளும் அளவு சிலாகிக்கும் அளவு இல்லை 

 நச்   டயலாக்ஸ் 

1        நாம  எதைக்கொடுக்கறோம்கறது  முக்கியம்  இல்லை , கொடுக்கனும்கற  மனசுதான்  முக்கியம்

2        கொசு ( பேபி) = என்னை  வரவேற்கவா  இவங்க  கை தட்றாங்க?

கொசு(அப்பா) = உன்னை  சாகடிக்க  ட்ரை  பண்ணி  இருக்காங்க . இந்த  உலகத்துல யாரையும்  நம்பக்கூடாது

 

3        பல்  வலி  பொறுக்க முடியல

 பல் வலிக்கும்போது  ஏன்  பொறுக்கப்போறே? ஓரமா உக்காந்து ரெஸ்ட் எடுக்கலாமில்ல?  ( 1982  சாவி வார இதழ்  உ ராஜாஜி ஜோக்)

 

4        இது  ஜட்டியா  ? ஜல்லடைக்கரண்டியா? இத்தனை  ஓட்டை  இருக்கு ?

 

5        பாட்டி , என்ன  பண்ணிட்டு  இருக்கீங்க?

 

 பேரனுக்கு  கதை  சொல்,லிட்டு இருக்கேன்

 

 பேரனா? இங்கே  யாருமே  இல்லையே?

 

 அவந்தான்  இறந்துட்டானே?

 

6        இந்தக்கதைல  ராஜா  இல்லையா?

 அவன்  உண்மைல  ராஜா  ஆக வேண்டியவன் தான், ஆனா “தளபதி”யா  இருக்கான்   (  குறியீடு – ஸ்டாலினுக்கா? இளைய தளபதிக்கா?)

 

7        கட்டப்பா

 ச்சீ , இதெல்லாம் ஒரு கெட்டப்பா?

 

8        எப்பவும்  சாயங்காலம்  விளக்கு வைக்கற  டைம்ல  இவர்  பொண்ணு  வீட்டுக்கு வந்துடுவா, ஆனா  இன்னும் வர்லை

 இதுக்கா  மெனக்கெட்டு  என்னைக்கூப்பிட்டீங்க, ? உங்க  பொண்ணு  வந்த  பின்   விளக்கு  வெச்சா போச்சு

 

9        க்டத்துன  பொண்ணை  10  நிமிசத்துல  கூட்டிட்டு  வர்றோம்

 அப்போ  மீனம்பாக்கம்லதானே  இருக்கீங்க?

 

பாஸ், கரெக்டா  நம்ம  லொக்கேஷனை  கண்டு பிடிச்ட்டான்

 

 

10    கோழில  இருந்து  முட்டை  வந்ததா? முட்டைல  இருந்து  கோழி  வந்ததா?

 நாமக்கல் பண்ணைல  இருந்து  வந்தது  ( 2001  தினமணி  சிறுவர்  மணி  வெ  சீதாராமன்    ஜோக் )

 

11    அடிக்கற  காத்துல  காகிதமும்  பறக்கும், பறவையும்  பரக்கும், காத்து  நின்னாதான்  எது  பறவை? எது  காகிதம்?னு தெரிய  வரும்  ( அரதப்பழசு)

12    அது  சாதா  புக்  இல்லை

 பின்னே? பைண்டிங் பண்ண  புக்கா?

 

13    கன்னத்தில் முத்தம்  கொடுத்தா  வெறும் ஃபிரண்ட் தான், உதட்டுல  கொடுத்தாதான்  பாய் ஃபிரண்டாம்

 அப்டியா? 2ம் பக்கத்து  பக்கத்துல  தானே  இருக்கு ? அட்ஜஸ் பண்ணி  கொடுத்திடுங்களேன்

 

14    ஆதரவே  இல்லாதவங்களுக்காகத்தான்  அனாதை  இல்லைம், அதையும் நாம இடிச்சுட்டா  அவங்க  என்ன  செய்வாங்க?

 நானே  உன் மேல  இரக்கப்பட்டுதான்  போஸ்ட்  குடுத்திருக்கேன், நீ அவங்க  மேல  இரக்கப்படறியா?

 

லாஜிக்  மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில  நெருடல்கள்

 

1  ஐஸ்க்ரீம்  வியாபாரம்  செய்யலாமா?  என  ஒரு பேச்சு  வரும்போது  அது  தொண்டைக்கு கெடுதல்னு டயலாக்  வருது , ஆனா  பிஸ்கெட்  கூட  மைதால , அஸ்கா  சர்க்கரைல  செய்யறதால  அதுவும்தானே  கெடுதல்/ அதை  மட்டும்  செய்யலாமா?


2  பாகுபலி , 300  பருத்தி  வீரர்கள்  படங்களை  ஸ்பூஃப்  பண்ணுனது  சரியா  ஒர்க் அவுட்  ஆகலை.


3   ஒரு கம்பெனில  வேலை செய்யற  ஹீரோ , வில்லன்  இருவரும்    யார்  அதிக  டேலண்ட்? அது ஏன்  ஓனருக்கு  புரியல  என்பதற்கான  காட்சி அமைப்புகள்  சரியா  சிங்க்  ஆகலை 


4  நான்  கடவுள்  மொட்டை  ராஜேந்திரன், கிரேன் மனோகர்  இருவரையும்  சந்தானம் ஏதோ எடுபுடி  மாதிரி  தான் ட்ரீட்  பண்றார் , கவுண்டமணி  கூட என்ன தான் செந்திலை  அடிச்சாலும் , உதைச்சாலும் செந்திலை பர்ஃபார்மென்ஸ் பண்ண விடுவார் . சந்தானம்  மனதளவில்  கமல்  மாதிரி  தான் மட்டும் தான் திரையில்  ஜொலிக்கனும்னு நினைக்கறார்


5  ஹீரோ -  ஹீரோயின்  இருவருக்குமான  கெமிஸ்ட்ரி  ஒர்க் அவுட்  ஆகலை 


6    பாட்டியை  நைசா  ஊருல  விட்டுட்டு வர்ற  காட்சி  2019ல் தினமல்ர்    டி வி ஆர் நினைவு சிறுகதைப்போட்டியில்  கலந்து  கொண்ட  இளவல்  ஹரிகரன்  தன் மனைவி  பெயரில்  எழுதிய  சிறுகதையை  தழுவி  அமைக்கப்பட்டிருக்கிறது 


சி.பி ஃபைனல்  கமெண்ட் =  தியேட்டருக்குப்போய் 100  ரூபா  கொடுத்துப்பார்க்கும் அளவு  ஒர்த் இல்லாத  சுமார் ரகப்படம், டிவி  ல காமெடி  க்ளிப்பிங்க்ஸ்ல  பார்த்தா  போதும் . எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன்  மார்க் 39 .  குமுதம்  ரேங்கிங்க்  - சுமார்  .. அட்ரா சக்க ரேட்டிங்  1.75 / 5