Showing posts with label பிறந்த நாள். Show all posts
Showing posts with label பிறந்த நாள். Show all posts

Thursday, December 12, 2013

ரஜினி ரகசியங்கள் 12


மார்லன் பிராண்டோ மறைந்தபோது, துயரம் தாங்காமல் ஒரு வாரத்துக்கு அழுத ரசிகர் அவர். இத்தனைக்கும் பிராண்டோ நடித்த ஒரு படத்தைக்கூட அவர் பார்த்தது இல்லை. பின் எப்படி இவ்வளவு நேசம் என்று கேட்டபோது, பிராண்டோவின் பேட்டி ஒன்றைப் பார்த்து அவருக்கு ரசிகரானதாகச் சொன்னார் அவர்.


‘‘உங்கள் கதாபாத்திரத்துக்கான உடைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்று நிருபர் கேட்டபோது, “அமெரிக்கச் செவ்விந்தியர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார்கள்” என்று மணிக் கணக்கில் பதில் அளித்து நிருபரை பிராண்டோ வெறுப்பேற்றிய பேட்டி அது.


ஒரு சினிமா நாயகனை மக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவை இல்லை. பிராண்டோ சொன்னதுதான்.‘‘நல்லவனோ, கெட்டவனோ… மக்களுக்குக் கொண்டாடுவதற்குக் கட்டாயம் ஒரு நாயகன் தேவை. அவனைப் பற்றிப் பேசுவதும் கொண்டாடுவதும் அவர்களுக்கு முக்கியம்.’’


ஆனால், ஒரு நாயகன் கொண்டாடப்படும் பின்னணி முக்கியமானது. அது சமூகத்தின் மனநிலையையும் சேர்த்து நாம் பார்க்க உதவுகிறது.


எம்.ஜி.ஆர். - ரஜினி


சுதந்திரத்துக்குப் பின் தேனாறும் பாலாறும் ஓடும் என்று உருவாக்கப்பட்ட மாயைகள் உடைந்து, பணக்காரர்களும் பண்ணையார்களும் கொட்டம் அடித்தபோது, திரைப்படங்களில் அவர்களைத் தட்டிக்கேட்ட நாயகர்கள் உச்சத்துக்குப் போனார்கள். திரையில் அறநெறிகளுடன் ‘வாழ்ந்து காட்டிய’ நாயகர்கள் மக்கள் தலைவர்க ளாகப் பார்க்கப்பட்டார்கள். எம்.ஜி.ஆர். அப்படித்தான் ஜெயித்தார்.


ரஜினி விஷயத்தில் நடந்ததோ தலைகீழ். இந்தியா கலாச்சாரப் பாய்ச்சலுக்குள்ளான காலகட்டம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மீறல் கனவுகளை, ஆழ்மன ஆசைகளைத் திரையில் அநாயசமாக நடத்திக்காட்டினார் ரஜினி. திரையில் அவர் சாமானியராக இருந்தார். சாமானியர்களின் முரட்டுத்தனத்தையும் அப்பாவித்தனத்தையும் பிரதிபலித்தார். சாமானியராக இருந்துகொண்டே சாமானியர்களால் கற்பனைசெய்யக்கூட முடியாத அற்புதங்களை நிகழ்த்தினார். முக்கியமாக, சொந்த விஷயத்தில் தவறுகளோடும் ஒருவன் அடுத்தவர்களுக்கு நல்லவனாகவும் நாயகனாகவும் இருக்க முடியும் என்று காட்டினார். அவருடைய ஆரம்ப கால, பாசாங்கற்ற நடவடிக்கைகள் அவருடைய பிம்பத்துக்கு மேலும் வலுசேர்த்தன.


ரஜினி கோலோச்சத் தொடங்கிய 1980-கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிசுகிசு. ரஜினிக்குப் பெண் மோகம் அதிகம் என்று பத்திரிகைகள் எழுதியபோது, ரஜினி ஒரு பேட்டியில் சொன்னார். ‘‘ஆமாம், உண்மைதான். இதைச் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நான் யாரையும் தேடிப் போகலை. வற்புறுத்தலை. கஷ்டப்படுத்தலை. யாருக்கும் நான் பிராமிஸ் பண்ணலை... யாரையும் ஏமாத்தவும் இல்லை.’’


உதை விழும்


ரஜினியின் திருமணம் இன்றைய தலைமுறையினர் பலருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடியது. ரஜினி, லதா இருவரின் குடும்பங்களையும் சேர்ந்த சிலர் மட்டும் பங்கேற்ற நிகழ்ச்சி அது. திருப்பதி கோயிலில் நடந்தது. அதிகாலையில் திருமணத்தை முடித்தவர், காலை 10 மணிக்கு எல்லாம் படப்பிடிப்புக்குப் போய்விட்டார்.


திருமணத்துக்கு முன் பத்திரிகையாளர்களை வீட்டுக்கு அழைத்திருந்தார் ரஜினி. முன்கூட்டியே, அவரும் லதாவும் மாலையோடு இருக்கும் படம் ஒன்றை அவர்களிடம் கொடுத்து, ‘‘குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் அழைச்சு இருக்கேன்னு சொல்லி, திருப்பதி கோயில்ல கல்யாணத்துக்கு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கியிருக்கேன். என்னோட கல்யாணம் நடந்து முடிஞ்சதும் நீங்க இந்த போட்டோவைப் பயன்படுத்திக்கங்க. தயவுசெஞ்சு திருப்பதிக்கு யாரும் வந்துடாதீங்க’’ என்றார். அப்போது, ‘‘வந்தா?’’ என்றார் ஒரு நிருபர். ‘‘உதைப்பேன்’’ என்று சொன்னார் ரஜினி.


அருகில் இருந்த இன்னொரு நிருபர் ‘‘இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீங்க... அதை நாங்க பப்ளிஷ் செஞ்சுட்டா, பின்னால அசிங்கமா போயிடும்’’ என்று சொன்னபோது, ரஜினி சொன்னார். ‘‘உங்களோட ஓப்பன் அப்ரோச் எனக்குப் பிடிச்சிருக்கு. ஐ யாம் வெரி ஸாரி. ஆனா, இப்போ ஸாரி சொல்லிட்டேன்னு கல்யாணத்துக்கு வந்துடாதீங்க. அங்கே கேமராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கறதைத் தவிர எனக்கு வேற வழி இல்லை.’

மலராத முட்கள்


நம்மில் பலரையும்போல, ‘முள்ளும் மலரும்’ ரஜினிதான் ரஜினிக்கும் பிடித்தமானவர். இயக்குநர் மகேந்திரன் இன்றைக்கும் அவரை இயக்கியவர்களிலேயே அவர் பெரிதும் மதிப்பவர். ஆனால், ஒருகட்டத்தில், ஒரு மாபெரும் பொழுதுபோக்குக் கலைஞனாக அவர் உருவெடுத்தபோது, தன்னுடைய படங்கள் முழுக்கப் பொழுதுபோக்குக்கானவை என்ற முடிவை அவர் எடுத்தார். தன்னுடைய படங்கள்குறித்துப் போலியான மதிப்பீடுகள் ரஜினியிடம் இல்லை.


‘‘ஆயிரக் கணக்கானவங்க வாழ்க்கை இதுல இருக்கு. என்னை நம்பிப் பணம் போடுறவங்களுக்கு, எனக்குப் பணம் கொடுக்குறவங்களுக்கு, திரும்ப நான் பணம் சம்பாதிச்சுக் கொடுக்கணும். அவங்க நடிக்கவைக்கிறாங்க… நான் நடிக்கிறேன். அவ்ளோதான். இதிலே எந்தக் குழப்பமும் இல்லை’’ என்றார்.


மாபெரும் சுதந்திரம்


ஒரு பேட்டியில் மோகன்லாலிடம் கேட்டார்கள்: ‘‘ரஜினிகாந்தைப் போல வழுக்கைத் தலையோடும் நரைத்த முடியோடும் உங்களால் வெளியே வர முடியுமா?’’


மோகன்லால் சொன்னார்: ‘‘ரஜினி எப்படி வேண்டுமானாலும் வரலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. ஏனென்றால், மக்கள் அவரை அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள். அவருடைய தனித்துவமே அதுதான்.’’


உண்மைதான். சமூக வாழ்க்கை சார்ந்து எவ்வளவோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும், திரையில் ரஜினியைப் பார்த்ததும் நாம் பரவசமாகிறோம். ஒவ்வொரு படத்திலும் ரஜினி நிகழ்த்தும் அற்புதங்கள் மேலும்மேலும் அதிகரிக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அவருக்கு எவ்வளவு வயதானாலும், திரையில் இன்னும் இன்னும் இளமையாகப் பார்க்கவும் பறந்து பறந்து அடிப்பதையும் நாம் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், ரஜினி என்றால், எதுவும் செய்யலாம் என்ற மாபெரும் சுதந்திரத்தை நாம் அவரிடம் கொடுத்திருக்கிறோம்.


ஏனென்றால், ரஜினியிடம் நாம் பார்ப்பது நமக்குள் இருக்கும் ரஜினியை!





தொடர்புக்கு: [email protected]


இசை விழாக்களும் குளிரும் மார்கழிப்பூக்களும் ஆசிர்வதிக்கும் டிசம்பரில் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் மற்றொரு விஷயம் ரஜினிகாந்தின் பிறந்தநாள். டிசம்பர் 12ம் தேதி பிறந்தநாள் காணும் ரஜினி என்கிற சிவாஜிராவ் குறித்து 12 தகவல்கள்:


#ரஜினி ஒரு நிகழ்ச்சிக்கு பட்டு வேட்டி, சட்டையில் வருகிறார் என்றால் அன்று சென்டிமெண்டாக அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அர்த்தம். சமீபத்தில் நடந்த இசையமைப்பாளர் அனிருத் சகோதரியின் திருமண நிகழ்ச்சிக்கு அவர் பட்டு வேட்டிச் சட்டையுடன் வந்து கலந்துகொண்டார். வேட்டி சட்டையைப் போலவே ரஜினி விரும்பும் மற்றொரு உடை கருப்பு சட்டை, கருப்பு பேண்ட்.


#ஊழலை எதிர்த்து அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த சமயத்தில் சென்னையிலும் அதுபோல ஒரு உண்ணாவிரதத்தை ஒருங்கிணைத்து நடத்த தீவிரமாக இருந்திருக்கிறார் ரஜினி. ஆனால் நண்பர்களின் ஆலோசனையால் அதை கைவிட்டார். இருப்பினும் அண்ணா ஹசாரேவை நேரில் சந்தித்து ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வந்தார். அதுபோல சென்னையில் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் உங்களது ஆதரவு வேண்டும் என்று அப்போது கேட்டு வந்திருக்கிறார்.



#‘16 வயதினிலே’ படப்பிடிப்பில் பலமுறை பாரதிராஜாவிடம் திட்டு வாங்கியிருக்கிறார் ரஜினி. அந்த நேரத்தில் அவருக்கு ஒரே ஆறுதல், ஒல்லிப் பையனாக வசனக் குறிப்பேட்டை கையில் வைத்துக்கொண்டு நிற்கும் பாரதிராஜாவின் உதவியாளர் பாக்யராஜ்தான். ‘எல்லாம் நல்லதுக்குத்தான்’ என்று சொல்லி, அவரை உற்சாகப்படுத்துவாராம் பாக்யராஜ்.


#செல்போன் பயன்படுத்துவதில் ரஜினி ஆர்வம் செலுத்துவதில்லை. எப்போது, யார் தொடர்புகொள்ள நினைத்தாலும், அவரது உதவியாளர், ஓட்டுநர்களான ஆறுமுகம், சுப்பையா, கணபதி இந்த மூன்று நபர்களின் வழியாகத்தான் பேச முடியும். ரஜினிக்கு தகவல் போய் சேர்ந்ததும், அவர் விரும்பினால், தன்னை அழைத்த நபரிடம் ரஜினியே போனில் பேசுவார்.


#எந்த ஊருக்கு, வெளிநாட்டுக்கு சென்று திரும்பினாலும் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு ஏதாவது ஒரு பரிசுப்பொருள் வாங்கி வருவதை இப்போதும் கடைபிடித்து வருகிறார்.


#இரவோ, பகலோ மனதில் பட்டால் காரை எடுத்துக்கொண்டு நண்பர்கள் வீட்டுக்குமுன் சென்று நின்றுவிடுகிற பழக்கம் அவருக்கு இப்போதும் உண்டு. அப்படி சந்திக்கும் நண்பர்களை அழைத்துக்கொண்டு சாலைப் பயணமாக, நீண்ட தூரம் காரில் பறப்பார். அவர்களிடம் நாட்டுநடப்புகள், புதிய படங்களின் போக்குகள், இளம் நடிகர்கள், அரசியல் ஆகியவை குறித்து ஆழமாக பரிமாற்றம் செய்துகொள்கிறார்.



#ராகவேந்திரா திருமண மண்டபத்தின் திறப்புவிழா அன்று, 1980களில் இளையராஜாவின் ‘ஹவ் டு நேம் இட்’ நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அன்று நடந்த அந்த நிகழ்ச்சியின் ஞாபகம் வரும்போதெல்லாம் ரஜினி, ராஜாவிடம் சொல்லி சிலிர்ப்பாராம்.


#ரஜினிக்கு கடிதம் கொடுக்க விரும்புகிறவர்கள், ராகவேந்திரா மண்படத்துக்கு வந்து கொடுத்துப்போகலாம். அப்படி வந்து குவியும் கடிதங்களை அக்கறையோடு படித்து வருகிறார் ரஜினி. உதவியாளர்கள் அதில் சிலதை தேவையில்லாதது என்று பிரித்து தனியே ஒதுக்க முயற்சித்தால், ‘அப்படிச் செய்யாதீர்கள்’ என்று அன்புடன் கண்டிக்கவும் செய்வாராம்.


#நீச்சல் என்றால் ரஜினிக்கு உயிர். சென்னை, கடற்கரைச்சாலை பண்ணை வீட்டு நீச்சல் குளத்தில் மணிக்கணக்கில் நீச்சல் அடிப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்.


#சமீப நாட்களாக அவருக்கு பிடித்த விஷயம் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் பழைய தமிழ்ப்படங்களை பார்ப்பது. குறிப்பாக அவர் பரபரப்பான ஷூட்டிங்கில் இருந்த காலகட்டத்தில் வெளிவந்த படங்களை எல்லாம் இப்போது ரசித்து ரசித்து பார்த்து வருகிறார்.


#படப்பிடிப்பு தளத்தில் கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் ஒன்று படிப்பார், இன்னொன்று தூங்குவார்.


#ராகவேந்திரா திருமண மண்டபத்தின் மொட்டைமாடி கீற்று கொட்டகையில் தரையில் அமர்ந்து, வாழை இலை போட்டு சாப்பிடுவதை பெரிதும் விரும்புவார்.



ரஜினிகாந்த், லதாவுடன் கிரேஸி மோகன்
ரஜினிகாந்த், லதாவுடன் கிரேஸி மோகன்
ரஜினியின் படங்களில் அவரது ஸ்டைலுக்கு நிகராக ரசிகர்களை கவரும் மற்றொரு விஷயம் பஞ்ச் டயலாக்குகள். அப்படி அவரது ரசிகர்களைக் கவர்ந்த பஞ்ச் டயலாக்குகளில் ‘அருணாச்சலம்’ படத்தில் வரும், “ஆண்டவன் சொல்றான். அருணாச்சலம் முடிக்கிறான்” என்ற பஞ்ச் டயலாக்கும் ஒன்று. இந்த பஞ்ச் டயலாக் உருவான விதத்தை ரஜினியின் நண்பரும் வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:



ரஜினியின் ‘ராகவேந்திரா’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு வந்தபோது நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு இருந்த வேலைப்பளுவால் அந்தப் படத்திற்கு வசனம் எழுத முடியவில்லை. அதற்காக மிகவும் வருத்தப்பட்டேன். 12 வருடங்களுக்கு பிறகு குறிஞ்சி மலர் பூப்பதைப்போல அவர் நடிப்பில் வெளியான ‘அருணாச்சலம்’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு அமைந்தது.



படத்தில் ஒரு பஞ்ச் டயலாக் வேண்டும் என்று ரஜினி என்னிடம் கேட்டார். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வாராவாரம் திருவல்லிக்கேணி ராகவேந்திரா கோயிலுக்கு சென்று வருபவன் நான். அப்படி ஒரு வியாழக்கிழமை அதிகாலை கோயிலுக்குப் போனபோது, ‘ராகவேந்திரா சொல்கிறார், அருணாச்சலம் முடிக்கிறார்’ என்ற வசனம் தோன்றியது. கவிதாலயா தயாரிப்பில் வெளிவந்த ராகவேந்திராவில் விட்டதை அருணாச்சலம் படத்தில் பிடித்தோம் என்ற எண்ணத்தில் உள்ளுக்குள் தோன்றியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.


 அதை அப்படியே ஆனாவுக்கு அனா போட்டு ‘ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்’ என்ற பஞ்ச் டயலாக்கை எழுதி சூப்பர் ஸ்டாரிடம் நீட்டினேன். பார்த்துவிட்டு சந்தோஷமாகப் பாராட்டினார். அவர் மிகச்சிறந்த மனிதர். பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!



thanx - the hindu

Monday, November 26, 2012

மாவீரன் பிரபாகரன் -பிறந்த நாள் சிறப்புத்தகவல்கள்

http://www.eelamview.com/wp-content/uploads/2011/11/v.prabaharan-2.jpg 

பிரபாகரன் – 25:


* தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!



* அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!


* வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி’ என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!



* பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ”போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்” என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ”எடுத்தால் எங்கே வைப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!



* பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!



* மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!



http://photos.merinews.com/upload/imageGallery/bigImage/1242711801786-prabhakaran%20family%20photos.jpg

* ”ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?” என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, ”யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.”



* ”பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!



* அக்காவின் திருமணத்தையொட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!



* எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை!



* ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!



http://3.bp.blogspot.com/_T1vzYiWcy7U/SgL_qiaEHsI/AAAAAAAAd48/5iArC6mgucM/s400/LTTE+Leader+Velupillai+Prabhakaran+Photos.jpg


* ‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி’ என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!


* போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!



* ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!



* பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!


* பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ”தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்” என்பார்!



http://www.asiantribune.com/files/images/prabaharan%20wedding_1.img_assist_custom.jpg


* தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!


* பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!



* அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!


* உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்!


* பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!



http://pact.lk/wp-content/uploads/2008/11/3311.jpg



* பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!



* தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், ”நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!”



* ”ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?” என்றுஅடக்க மாகச் சொல்வார்!



* மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!



* ‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்’ என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!


http://www.himalmag.com/userfiles/image/June%202009/raghavan_prabhakaran.jpg



-நன்றி: விகடன்

Tuesday, May 01, 2012

அஜித் -ஷாலினி பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ( 41)


தமிழ் திரையுலகின் முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் அஜீத். பஸ்ஸில் கண்டக்டராக இருந்து  நடிகரான ரஜினியை அடுத்து தனது சொந்த முயற்சியில் வெற்றியும் தோல்விகளையும் ஒரு சேர பார்த்தவர் அஜீத். இன்றும் எனது விருப்பதற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என தனது நற்பணி மன்றங்களை எல்லாம் களைத்து விட்டு இன்றும் தான் உண்டு தனக்கு பிடித்த சினிமா உண்டு என்று ஒதுங்கி வாழ்பவர் இன்று தனது 41 வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரை பற்றிய 41 துளிகள் இங்கே...

தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் மூலம் திரையுலகிற்கு (1992) அறிமுகம் ஆனார்.

தமிழில் 'அமராவதி' என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். அத்திரைப்படத்தை அடுத்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே என பல படங்களில் நடித்தார்.

தனக்கு எதிர்பார்த்த வெற்றி இல்லையே என தவித்தவர்க்கு 'ஆசை' என்ற படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தவர் வஸந்த். அந்த படத்தை தயாரித்தவர் மணி ரத்னம்.

அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும் காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகனாக வலம் வர தொடங்கினார்.

1998ம் ஆண்டு வெளிவந்த 'காதல் மன்னன்' என்ற படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

அமர்க்களம் படப்பிடிப்பில் ஏற்பட்ட காதலால் ஷாலினியை 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நட்சத்திரத் தம்பதியினருக்கு வாரிசு 'அனோஷ்கா' என்ற குட்டி தேவதை.

தனது பெயருக்கும் முன்னால் எந்த பெயரையும் போட விரும்ப மாட்டார். ஆனால் அமர்க்களம் படத்தில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டத்தை கொடுத்தவர் சரண்.  அடுத்து சரண் இயக்கிய 'அசல்' படத்தில் பட்டம் எதுவும் போட வேண்டாம் என அஜீத்தே நீக்க சொல்லிவிட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் 'தீனா'. படத்தில் " தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது.. நீ ஆடு தலை.. " என்று வசனம் வரும். அன்று முதல் ரசிகர்களுக்கும் 'தல' ஆனார் அஜீத்.
http://tamil.cinesnacks.net/photos/movies/Billa-2/ajithin-billa-2-stills-006.jpg

அவரது சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளும் விடவில்லை. நியூ, மிரட்டல், நான் கடவுள், ஏறுமுகம் என பல படங்கள் இவர் கமிட் ஆகிவிட்டு கருத்து வேறுபாடால் நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.

வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் இரண்டு/மூன்று வேடங்களில் நடித்தார். அப்படி நடித்த படங்கள் எல்லாம் ஹிட்.!   ஆனந்தப் பூங்காற்றே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், நீ வருவாய் என போன்ற படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார்.


மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். அதனாலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவார். சமீபத்தில் கலந்து கொண்ட 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற நிகழ்ச்சியில் " ஐயா.. அடிக்கடி ஏதாவது நிகழ்ச்சினு மிரட்டி வர சொல்றாங்கய்யா.. " என்று மேடையில் முதல்வர் கருணாநிதியிடமே முறையிட்டார். அஜீத் பேச்சிற்கு மேடையில் இருந்த ரஜினி எழுந்து நின்று கை தட்டினார்.

இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருக்கமானவர் அஜீத். ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத் தான் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தவர் ரஜினி.

கல்யாணத்திற்கு முன்பு புகைபிடிக்கும்  பழக்கம் கொண்டவர். கல்யாணம் ஆனவுடன் தனது மனைவிக்காக சிகரெட்டை விட்டொழித்தார்.

சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் ஃபேவரைட் எப்போதும் அஜீத் தான்.  அதிலும் சிம்பு ஒரு அஜீத் வெறியர்.
http://www.ajithfanclub.com/wp-content/uploads/2011/10/Ajith-Shalini-Anoushka-Photos-500x375.jpg

பல நாயகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகியாக இவர் தான் வேண்டும் என்று சிபாரிசு செய்வார்கள். ஆனால் அஜீத் எப்போதும் நாயகி விஷயத்தில் தலையிடுவது இல்லை.

'நேருக்கு நேர் படத்தில் அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்தனர். இருந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக அஜீத் படத்திலிருந்து விலக, சரவணன் என்ற இளைஞரை அஜீத் நடித்த வேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் வஸந்த். சரவணனுக்கு சினிமாவுக்காக சூட்டப்பட்ட பெயர் சூர்யா.

அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்த ஒரே படம் 'ராஜாவின் பார்வையிலே'. அதன் பிறகு இருவருக்கும் என தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் சேர, இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர். இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்கள் என ஆகிவிட, அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். 'மங்காத்தா' படப்பிடிப்பில் விஜய்யும் அஜீத்தும் சந்தித்து கொண்டதிலிருந்து இன்றும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

சுப நிகழ்ச்சிகளுக்கு போகிறாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வார். சமீபத்தில் பாடகி சித்ராவின் குழந்தை  நந்தனா இறந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தனது 50வது படமான மங்காத்தாவில் ஜார்ஜ் க்லூனி போன்ற கெட்டப்பில் நடித்தார். வாலி, வரலாறு என தான் கதாநாயகனாக நடித்த படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தாலும், மங்காத்தா படத்தில் நடித்தது  நெகட்டிவ் ரோலில் மட்டுமே.

சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அஜீத் ரசிகர்கள் சிலர் கூறவே " எனது பெயரை தவறாக உபயோகித்தால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன்" என்று எச்சரித்தார்.  நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இவரது பெயர் தவறாக  உபயோகப்படுத்தப்படவே தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும் கலைத்து விட்டார் அஜீத்.


அஜீத் ரசிகர் மன்ற கலைப்புக்கு கூறும் காரணம் " மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகருக்கும் அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"

தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுதான் பயன்படுத்துவார்!

வெளி இடங்களில் தண்ணீர், பழரசம் போன்றவற்றை அருந்த வேண்டியிருந்தால், இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக் கொள்வார். பெரும்பாலான வலது கைக்காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை!
http://www.our-kerala.com/newgallery/images/photos/images/anoushka-5.jpg

சினிமாவில் நடிப்பதற்கு முன் வேலை பார்த்த ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தின் நிலவரங்களை இப்போதும் அடிக்கடி அப்டேட் செய்துகொள்கிறார்!

வீடு, அலுவலகம் என எங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும், 'உங்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மன்றப் பணிகளை நேரம் இருந்தா பார்த்துக்கலாம்!' எனப் பாசமாக வலியுறுத்துவார்!

உள்ளூர் அரசியல் பற்றித்தான் கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், உலக அரசியலின் இன்றைய நிலவரம்பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க அவ்வளவு விஷயம் இருக்கும்!

சாய்பாபாவுக்குப் பிறகு அஜீத்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUJjD178qUwpGc-8YVhyphenhyphenB_IxdW9L-fwhC7zjYwzb6JR7EUsub4l2wEfOCf03ZxXD46MfY4m3iNvTEA6qKRGB8DIHEt_-eUb4HLAYc57uC99hzLdkZ8Rlh2ecoYnPVmPt3jddlA2pJ_7hE/s1600/f4.jpg
ரேஸ் போட்டிகளில் அஜீத்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார் அஜீத்!

ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் அடிப்பதை விரும்பவே மாட்டார். 'கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல!' என்பார்!

தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!

'இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?' என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்!

பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பது பிடிக்கும். ரஜினி பரிசளித்த 'ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார். வீட்டில் மினி நூலகமே உண்டு!

அஜீத்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில். அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றைய ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள் வரை வளர்ந்து நிற்கிறது!

உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால், நண்பர்கள் வீட்டில் குவிந்து, பிரியாணி சமைக்கச் சொல்லி அஜீத்தை வம்பிழுப்பார்கள்!

எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார்!

படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். ஆனால், இப்போது 'கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவை' என்கிறார்!

மனித முகங்களைப் படம் பிடிப்பதில் கேமராமேன் அஜீத்துக்கு அத்தனை ஆர்வம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!

அனோஷ்கா, தந்தையை 'அஜீத் குமார்' என்றுதான் அழைப்பாள். அப்படி ஒவ்வொரு முறை அனோஷ்கா அழைக்கும்போதும் பூரிப்பில் முகம் இன்னும் சிவக்கும் அஜீத்துக்கு!

மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது அஜீத்தின் பொழுதுபோக்கு. விதவித நாணயங்கள், தபால் தலைகளைக் காட்டிலும் அபூர்வமான கலெக்ஷன்ஸ் இது!

தான் நடித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ரிசல்ட் கேட்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார் அஜீத். 'சந்தைக்கு வந்திருச்சு. இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்கணும். நம்ம பங்கு முடிஞ்சுபோச்சு!' என்பார்!

தங்களது படம் வெளியாகும்போது படத்துக்கான பப்ளிசிட்டிக்கு பல நடிகர்கள் ஊர் ஊராக செல்லும் நிலையில்,  'மங்காத்தா' படத்திலிருந்து என் படம் குறித்து  எதுவும் பேசக்கூடாது என முடிவு செய்திருக்கிறேன்.."   என படம் குறித்து பேச  திடமாக மறுத்திருக்கிறார்.



http://www.pkp.in/images/a/Shalini%20Ajith%20(6).JPG

thanx - vikatan


டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.