முன் ஜாமீன் அறிக்கை - அமரர் கல்கி எழுதிய பார்த்திபன் கனவு நாவல் நான் இன்னும் படிக்கவில்லை. படமாக என்ன அவுட் புட் வந்திருக்கோ அதுக்கான விமர்சனம் தான் இது. இதுல ஏதாவது கலாய்ப்புகளோ , கிண்டல்களோ இருந்தால் அது பட இயக்குநருக்கானது. எனவே கல்கி ரசிகர்கள் பொறுமை காக்கவும்
1951ல் ரிலிஸ் ஆன மர்மயோகி, 1960ல் ரிலீஸ் ஆன பார்த்திபன் கனவு இரண்டு படங்களுக்குமான க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஒன்றுதான் என்பதால் யாரும் மர்மயோகியைப்பார்த்துத்தான் பார்த்திபன் கனவு காபினு நினைக்க வேண்டாம். பார்த்திபன் கனவு நாவல் ரிலீஸ் ஆன வருடம் 1942. அதனால இந்த நாவலில் இருந்துதான் மர்மயோகி க்ளைமாக்ஸ் உருவி இருக்கனும்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு காலத்தில் சோழப்பேரரசு பிரம்மாண்டமானதா இருந்தது. ஆனா அதன் படை பலம் குறுகி பல்லவ அரசுக்கு கப்பம் கட்டும் நாடாக சிறுத்து விட்டது
பல்லவ மன்னன் மாமல்,லருக்கு கப்பம் கட்ட மறுத்து போருக்கு தயார் ஆகிறான் பார்த்திபன் எனும் சோழ மன்னன். போருக்குப்போகும் முன் பாலகனான தன் மகனை அழைத்து என் க்னவு யாருக்கும் அடிபணியாம சுதந்திரமா இருப்பதே. என் கனவை நீ நிறைவேற்றனும் அப்டினு உறுதி வாங்கிட்டு போருக்குக்கிளம்ப்றார்.
போருக்குப்போகும் முன் ஒரு சிவனடியார் வந்து மன்னா, உங்க மகனை என் கிட்டே கொடுங்க , நான் அவனை வீரனாக்குகிறேன் என வாங்கிட்டுப்போய்ட்றார். அவரு யாரு ? எவரு?னு தெரியாம ம்ன்னர் எப்படிக்கொடுத்தார்னு தெரில
சந்திர முகி படத்தோட சச்சின் போட்டி இட்டப்போ என்ன ஆச்சு ? தளபதி படத்தோட குணா போட்டி இட்டப்போ என்ன ஆச்சு ? அந்த மாதிரி தான் பல மடங்கு படை பலம் மிக்க பல்ல வ ,மன்னன் படை முன் சோழ மன்னன் பார்த்திபன் போரில் தோற்று வீர மரணம் அடைகிறான்
பார்த்திபன் மகன் விக்ரமன் வளர்ந்து பெரியவன் ஆகிறான். அவன் தான் ஹீரோ. ஹீரோ ஓப்பனிங் சீன்லயே வீர வசனம் எல்லாம் பேசறார். எனக்கென்ன? எனக்கென்ன? இமய மலையில் உன் கொடி பறந்தால் எனக்கென்ன? என சும்மா இருந்திருக்கலாம். சோழ நாட்டுக்கொடியை ஏத்தறேன்னு வம்புக்குப்போய் மாட்டிக்கறார். பல்லவ மன்னனிடம் கைதியா அழைத்து செல்லப்படுகிறார்
போற வழில ஆன் த வே பல்லவ இளவரசியைப்பார்க்கறார். பாப்பாவும் பார்க்குது. கண்டதும் இருவ்ருக்கும் காதல் . அப்பவே பல்லவ மகாராஜாட்ட யாராவது ஒருவர் காதலைப்ப்ற்றிச்சொல்லி இருந்தால் கதை அங்கேயே முடிஞ்சிருக்கும். மூன்றரை மணி நேரம் ஓடி இருக்காது . ஆனா சொல்லலை \
பல்லவ மன்னர் விசாரணை முடிந்ததும் விக்ரம சொழனை நாடு கடத்துகிறார். விக்ரம சோழன் செண்பகத்தீவுக்கு மன்னர் ஆகிறார். தன் குல சொத்தான வாளை எடுக்க மீண்டும் நாட்டுக்கு வரு,ம்போது காபாலிக ர் கூட்ட்த்தில் மாட்டிக்கறார். அவரை பல்லவ ஒற்றர் படை தலைவன் காப்பாற்றுகிறான். பின் காயம் பட்ட விக்ரம சோழனை பல்லவ இளவரசி காப்பாற்றுகிறார்
படம் போட்டு ரெண்டே முக்கால் மணி நேரம் கழிச்சுதான் ஹீரோ ஹீரோயின் இருவரும் பேசிக்கறாங்க . .இவங்க ரெண்டு பேரும் காதலர்கள் என்பதை உணர்ந்த பல்லவ மன்னன் எ ந்ன ஆக்சன் எடுத்தார்? அந்த சிவனடியார் யார்? என்ற க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை யூ ட்யூப்ல கண்டு மகிழ்க
ஹீரோவா , விக்ரம சோழனா காதல் மன்னன் ஜெமினி கணேசன். நல்லாதான் ட்ரை பண்ணி இருக்காரு , ஆனா ஒரு மன்னனா எம்ஜியாரையோ , சி வாஜியையோ நாம ஏத்துக்கிட்ட அளவு ( நாடோடி மன்னன் , உத்தம புத்திரன் ) இப்வரை ஏத்துக்க முடியலை ., வீர வசனம் பேசும்போது சிரிபுதான் வருது .
ஹீரோவோட அப்பாவா பார்த்திபன் சோழனாக வரும் அசோகன் முதல் 20 நிமிடங்களில் என்ன விதமான நடிப்பைக்கொடுத்தாரோ அந்த வீரத்தில் 50% கூட ஜெமினியால் கொடுக்க முடியலை . அந்த ஓவியங்களை எல்லாம் காட்ட் அசோகன் பேசும் டயலாக்ஸ் கனல் தெறிக்குது
ஹீரோயினா குந்தவியா வைஜயந்தி மாலா. நல்ல அழகு . நல்ல நடிப்பு ., இருவருக்குமான கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு
மாமல்லராக ரங்காராவ் நடிப்பு அட்டகாசம் கபால பைரவராக பி எஸ் வீரப்பா நடிப்பு கம்பீரம்
இசை அருமை . எட்டு பாடல்களில் 2 பாட்டு செம ஹிட் பாட்டு
பாடல்கள்
1 கண்ணாலே நான் கண்ட கனவு
2 இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய்? நீ எங்கே போகிறாய்?
ரசித்த வசனங்கள்
1 பெண் புத்தி பின் புத்தி என்பது சரிதான், இதனால்தான் ராஜ்ஜியம் ஆளும் உரிமையை நம் முன்னோர்கள் பெண்களுக்குத்தரவில்லை
தவறு, பெண்கள் ராஜ்ஜியம் ஆண்டிருந்தால் உலகில் போர் என்பதே நிகழ்ந்திருக்காது
2 மனிதனைத்தவிர வேறு எந்த ஜீவராசிக்கும் சட்டம் தேவை இல்லை , ஆனா காதல் அப்படி இல்லை எல்லோருக்கும் தேவையானது
3 வீரத்தால் வாழ வேண்டும் சாகக்கூடாது
அடிமையாக ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதை விட வீரனாக ஒரு நாள் வாழ்வது போது,ம்
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
1 க்ளைமாக்ஸ்ல ஹீரோ மாமனார்ட்ட கேட்கறாரு ? எது வீரம் ? 10,000 பேர் கொண்ட படைகளை 20,000 பேர் கொண்ட படை வீழ்த்தியதா வீரம் ? அப்டீங்கறாரு
அதையே நான் திருப்பிக்கேட்கறேன். எது விவேகம் ? 20,000 பேர் கொண்ட படைனு தெரிஞ்சும் தோல்வி உறுதினு தெரிஞ்சும் எதுக்கு இந்த வெட்டி வீராப்பு ? அத்தனை பேரின் உயிர்களும் போச்சே?
2 ஆங்கிலேய்ர்களை எதிர்த்து வீர பாண்டிய கட்டபொம்மன் வரி கொடுக்க மறுத்ததை ஏத்துக்க முடியுது. ஒரு சக இந்தியனான பல்லவ மன்னனை தன்னை விட பலம் கொண்டவன்னு தெரிஞ்சும் எதிர்த்தது வீரம்னு மெச்ச முடியலை
3 சோழ மன்னன் பல்லவ மன்னனை முன்னே பின்னே பார்த்தே இருக்க மாட்டானா? மாறு வேசத்தில் வ்ந்தா தெரியாதா?
4 மொத்தம் மூணே முக்கால் மணி நேரம் ஓடுது . இதை ரெண்டரை மணி நேரமா தாராளமா சுருக்கலாம் . போட்டு இழுத்து வெச்சுட்டாங்க
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - பிரமாதமான கதை எல்லாம் இல்லை , சுமாரான கதைதான் , படமும் சூப்பர் ஹிட் எல்லாம் ஆகலை , மீடியமாதான் ஓடுச்சு . பார்க்கனும்னா பாருங்க ரேட்டிங் 2.25 / 5
பொன்னியின் செல்வன்ல் வர்ற குந்தவை வேற இதுல வர்ற குந்தவி வேற
Parthiban Kanavu | |
---|---|
Directed by | D. Yoganand |
Screenplay by | D. Yoganand |
Based on | Parthiban Kanavu by Kalki |
Produced by | V. Govindarajan |
Starring | Vyjayanthimala Gemini Ganesan S. V. Ranga Rao |
Cinematography | K. S. Selvaraj |
Edited by | V. B. Natarajan "Pazhani" R. Rajan |
Music by | Vedha |
Production company | Jubilee Films |
Release date |
|
Running time | 219 minutes |
Country | India |
Language | Tamil |