Showing posts with label பாரதப்பிரதமர் மோடியின் வெற்றி உரை. Show all posts
Showing posts with label பாரதப்பிரதமர் மோடியின் வெற்றி உரை. Show all posts

Friday, May 16, 2014

பாரதப்பிரதமர் மோடியின் வெற்றி உரை

இந்திய தேசத்தில் நல்லாட்சி புரிவேன் என்றும், நாட்டை மறுகட்டமைப்பு செய்வேன் என்றும் மோடி தனது வெற்றி உரையில் கூறினார். 



பாஜகவின் வெற்றிக்குப் பின்னர் குஜராத் மாநிலம் வதோதராவில் முதல் உரை ஆற்றிய நரேந்திர மோடி, தேர்தலில் தனிப் பெரும்பான்மை வழங்கிய இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 

 நரேந்திர மோடி | படம்: ஏ.பி
இந்தப் பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: 


"பாஜக முன்னிலை நிலவரங்கள் வெளியான உடனேயே பல்வேறு ஊடகவியலாளார்கள் என்னிடம் தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டனர். 


ஆனால், வதோதராவில்தான் முதலில் பேச வேண்டும் என விரும்பினேன். அதனாலேயே இங்கே உங்கள் முன் பேசுகிறேன். 


வதோதராவில் நான் 50 நிமிடம் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்தேன். ஆனால், எனக்கு ஆதரவாக பெரும் அளவில் வாக்களித்து, 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளீர்கள். 


வதோதரா சகோதர, சகோதரிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயக நடைமுறைகளை கருத்தில் கொண்டு மக்கள் இந்த தீர்ப்பை அளித்துள்ளனர் என்பதை உணர்கிறேன். புதிய சாதனையை படைக்க உதவிய வதோதரா மக்களுக்கு தலை வணங்குகிறேன். 


தேர்தலில் அதிக அளவில் மக்கள் வாக்கு அளித்துள்ளதற்கு தேர்தல் ஆணையத்தை பாராட்டியாக வேண்டும். 


காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சிக்கு முதல் முறையாக இந்திய மக்கள் மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளனர். வலுவான கொள்கைகள் கொண்ட தேசியவாத கட்சிக்கு மக்கள் தனிப் பெரும்பான்மை அளித்துள்ளனர். இதற்காக இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். 


இத்தருணம் தேசத்துக்காக வாழ்ந்து சாதிக்க வேண்டிய தருணம், தேசத்துக்காக உயிர் நீக்கும் தருணம் அல்ல. எனவே, இந்திய தேசத்தில் நல்லாட்சி புரிவேன். 


மத்தியில் அமையவுள்ள அரசு, இந்திய மக்கள் அனைவருக்கும் சொந்தமான அரசு. ஒரு தனிப்பட்ட கட்சிக்கோ, ஒரு குறிப்பிட்ட மதத்துக்கோ சொந்தமானது அல்ல. 


இந்த அரசு மக்களால், மக்களுக்காக, மக்களே உருவாக்கிய அரசு. இந்த அரசின் முக்கியத்துவம் நாட்டின் வளர்ச்சியிலேயே இருக்கிறது. நல்ல காலம் கனிந்துவிட்டது. எனது வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியையும் என் தேசப் பணிக்காக அர்ப்பணிக்கிறேன்" என்றார் மோடி. 
 தாயாரிடம் வாழ்த்து பெறும் மோடி | படம்: ஏ.பி

22,374 வாக்குகளில் சரித்திர சாதனையைத் தவறவிட்ட மோடி


வதோதரா தொகுதியில் அபார வெற்றி பெற்ற பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 22,374 வாக்குகளில் தேர்தல் சாதனையைத் தவறவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் சரித்திரத்தில், ராம்விலாஸ் பாஸ்வான், சிபிஎம் கட்சியின் அனில் பாசுவுக்கு அடுத்தபடியாக மோடி அதிகபட்ச வாக்குகள வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராகத் திகழ்கிறார்.

5 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வென்ற 3வது வேட்பாளர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சிபிஎம். வேட்பாளர் அனில் பாசு மேற்குவங்கத்தின் ஆரம்பாக் தொகுதியில் 2004ஆம் ஆண்டு தேர்தலில் 5,92,502 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இந்திய சாதனையாக இருந்து வருகிறது.

இந்தத் தேர்தலில் நரேந்திர மொடி வதோதராவில் 8,45,464 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 2,75,336 வாக்குகளையே பெற்றுள்ளார். மோடி 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். ஆனால் அனில் பாசுவின் வெற்றிக்கும் மோடியின் வெற்றிக்கும் இடையிலான வித்தியாசம் சுமார் 22,374 வாக்குகள்.

ஆகவே 1989ஆம் ஆண்டு தேர்தலில் பாஸ்வான், 2004ஆம் ஆண்டு தேர்தலில் அவரை முறியடித்த சிபிஎம்-இன் அனில் பாசு, தற்போது மோடி அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளராக திகழகிறார். 

 குஜராத்தில் நரேந்திர மோடி | படம்: விவேக் பேந்த்ரா

மோடிதான் பிரதமர், ஆனாலும்...- ஜோதிடர்கள் கூறுவது என்ன?

இந்தியாவின் புதிய அரசை நிச்சயம் நரேந்திர மோடியே வழிநடத்தப்போகிறார். ஆனாலும் அவர் எவ்வளவு பலமான ஆட்சியை நடத்தினாலும் பிரச்சனைகளைச் சந்திப்பார்' என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

பாஜக தலைமை தேசிய ஜனநாயகக் கூட்டணி 250 முதல் 300 இடங்களைக் கைப்பற்றும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

ஹரித்வாரில் உள்ள ஜோதிட ரத்னா கௌசிக் என்பவர் செய்தி ஏஜென்சி ஒன்றிற்கு கூறுகையில், "அடுத்த பிரதமர் மோடிதான் என்றாலும் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் பல. இதனால் அக்டோபர் மாதம் அவர் பெரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். ஆனால், புதிய தேர்தல் வந்தாலும் மோடியே பலமான தலைவராக மீண்டும் வருவார்" என்றார்.

மும்பையைச் சேர்ந்த மற்றொரு ஜோதிடரான மிலன் தாக்கூர் என்பவர் கூறும்போது, "மோடியின் கிரக நிலைகளைப் பார்க்கும்போது அவர்தான் பிரதமர் நாற்காலியைப் பிடிப்பார் என்று தெரிகிறது. ஆனாலும் கூட்டணிக் கட்சிகளின் மூலம் அவருக்கு நெருக்கடிகள் ஏற்படும்" என்று கூறினார்.

கொல்கத்தாவில் உள்ள ஜோதிடர் ராகேஷ் ராஜ் குப்தா மேலே கூறியவர்களுக்கு மாறாக, "5 ஆண்டுகள் மோடியின் அரசு எந்த விதச் சிக்கல்களும் இன்றி நடைபெறும்" என்று கூறியுள்ளார்.


மேலும், "மோடியின் ஆட்சிக் காலத்தில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயரும். ஜூலை 2015 முதல் நவம்பர் 2015 வரையிலும், பிறகு 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் மோடி அரசு சில நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். அத்துடன், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் 3வது அணி மோடி அரசுக்கு பெரும் அச்சுறுத்தல்களைக் கொடுக்கும்.

2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தன் கட்சியிலிருந்தும், எதிர்கட்சியிலிருந்தும் மோடி கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும்" என்றார் குப்தா.

சென்னையைச் சேர்ந்த எச்.வெங்கட்ராமன் என்ற ஜோதிடர் மோடிதான் பிரதமர் என்று கூறுகிறார். ஆனாலும் கிரக நிலையில் குருவின் ஸ்தானம் மாறுவதால் டிசம்பர் மாதம் மோடி அரசுக்கு ஆட்டம் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். 



ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து 1980 ஆம் ஆண்டு பாஜக உதயமானது. 1984 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தனிப் பெரும்பான்மை என்ற வளர்ச்சி கண்டுள்ளது.
1977 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, எதிர்கட்சி ஒன்று தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. சுதந்திர இந்தியாவின் தேர்தல் வரலாற்றில் எதிர்கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது, இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கப்போகிறது. 1989-ற்குப் பிறகே மத்தியில் கூட்டணி ஆட்சியே நடைபெற்று வந்தது.

1996 ஆம் ஆண்டு பாஜக தலைமையில் முதன் முதலில் ஆட்சி அமைந்தது. ஆனால் அது 13 நாட்களில் கவிழ்ந்தது. பிறகு 1998 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் ஆட்சியைப் பிடித்தது; இதுவும் 13 மாதங்களே நீடித்தது. 13 என்ற எண் பாஜகவிற்கு பெரும் அலர்ஜியாகத் தொடங்கியது.

பிறகு 1999 ஆம் ஆண்டு கார்கில் போரை முன் வைத்து மீண்டும் பாஜக தலைமை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரியணை ஏறியது. இந்தத் தேர்தலில் பாஜக 182 இடங்களைக் கைப்பற்றியது.

1984 ஆம் ஆண்டு பெருத்த எதிர்பார்ப்பிற்கு எதிராக 543 தொகுதிகளில் படுமோசமாக 2 இடங்களையே கைப்பற்றியது காரணம் பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட அனுதாப அலை.

இந்த அனுதாப அலையில் வாஜ்பாயி உள்ளிட்ட தலைவர்களும் பெரும் தோல்விகளைச் சந்திக்க நேரிட்டது. வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் ஒன்று ஆந்திரா மற்றொன்று குஜராத்.

மாறாக காங்கிரஸ் கட்சி 1999 ஆம் ஆண்டு மிகக்குறைவான 114 இடங்களைக் கைப்பற்றியது. 2014ஆம் ஆண்டு இரட்டை இலக்கத்தில் தேங்கிப் போயுள்ளது.

இந்த இரண்டு பெரும் தோல்விகளுமே காங்கிரஸ் கட்சிக்கு சோனியா தலைமையின் கீழ் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இடதுசாரிகளுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் மிகவும் குறைவான எண்ணிக்கையையே கொடுத்துள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்ததன் விளைவாகவும், மோடியின் எழுச்சியின் காரணமாகவும் பாஜக மகத்தான வெற்றியை இப்போது நிலைநாட்டி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


நன்றி- த ஹிந்து


தமிழகம் - முடிவுகள் (தொகுதி வாரியாக)

தொகுதி வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள் நிலவரம்
திருவள்ளூர் (தனி) வேணுகோபால் P.DR.
அ.இ.அ.தி.மு.க
491995 முன்னிலை
ரவிகுமார் D.
விடுதலை சிறுத்தைகள்
241810 பின்னடைவு
வட சென்னை வெங்கடேஷ் பாபு T.G.
அ.இ.அ.தி.மு.க
52354 முன்னிலை
கிரிராஜன் R.
தி.மு.க
37778 பின்னடைவு
தென் சென்னை Dr. J. ஜெயவர்தன்
அ.இ.அ.தி.மு.க
117854 முன்னிலை
T.K.S. இளங்கோவன்
தி.மு.க
76402 பின்னடைவு
மத்திய சென்னை விஜய குமார் S.R.
அ.இ.அ.தி.மு.க
322039 முன்னிலை
தயாநிதி மாறன்
தி.மு.க
272835 பின்னடைவு
ஸ்ரீபெரும்புதூர் ராமச்சந்திரன் K.N.
அ.இ.அ.தி.மு.க
415253 முன்னிலை
ஜெகத்ரட்சகன் S.
தி.மு.க
329133 பின்னடைவு
காஞ்சிபுரம் (தனி) மரகதம் G.
அ.இ.அ.தி.மு.க
499395 வெற்றி
செல்வம் G.
தி.மு.க
352529 தோல்வி
அரக்கோணம் ஹரி G.
அ.இ.அ.தி.மு.க
493534 வெற்றி
இளங்கோ N.R.
தி.மு.க
252768 தோல்வி
வேலூர் செங்குட்டுவன் B.
அ.இ.அ.தி.மு.க
383719 வெற்றி
ஷண்முகம் A.C.
பா.ஜ.க
324326 தோல்வி
கிருஷ்ணகிரி அஷோக் குமார் K.
அ.இ.அ.தி.மு.க
248231 முன்னிலை
சின்ன பிள்ளப்பா P.
தி.மு.க
136578 பின்னடைவு
தர்மபுரி அன்புமணி ராமதாஸ்
பாட்டாளி மக்கள்
277383 முன்னிலை
மோகன் P.S.
அ.இ.அ.தி.மு.க
232750 பின்னடைவு
திருவண்ணாமலை வனரோஜா R.
அ.இ.அ.தி.மு.க
421492 முன்னிலை
அண்ணாதுரை C.N.
தி.மு.க
280145 பின்னடைவு
ஆரணி ஏழுமலை V.
அ.இ.அ.தி.மு.க
292133 முன்னிலை
சிவானந்தம் R.
தி.மு.க
145850 பின்னடைவு
விழுப்புரம் (தனி) ராஜேந்திரன் S.
அ.இ.அ.தி.மு.க
275476 முன்னிலை
முத்தையன் K.Dr.
தி.மு.க
172923 பின்னடைவு
கள்ளக்குறிச்சி காமராஜ் DR.K.
அ.இ.அ.தி.மு.க
533383 வெற்றி
மணிமாறன் R.
தி.மு.க
309876 தோல்வி
கடலூர் அருண்மொழிவேந்தன் A.
அ.இ.அ.தி.மு.க
385102 முன்னிலை
நந்தகோபாலகிருஷ்ணன் K.
தி.மு.க
223237 பின்னடைவு
சிதம்பரம் (தனி) சந்திரகாசி M.
அ.இ.அ.தி.மு.க
429536 வெற்றி
தொல். திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள்
301041 தோல்வி