பாமா ருக்மணி - சினிமா
விமர்சனம் ( டூயல் சிம் ரொமாண்டிக்
காமெடி )
ஹீரோவுக்கு ஒரு முறைப்பொண்ணு
இருக்கு , அதைக்கட்டிக்கனும்னு அம்மா ஆசை.
ஆனா ஹீரோ வேற ஒரு பொண்ணை லவ்வறாரு . பொதுவா இந்த மாதிரி 2 ஹீரோயின்
சப்ஜெக்ட்ல திரைக்கதை எப்படிப்போகும்னா கடைசி வரை இரு
நாயகிகளுக்கும் தன் ஆள் நம்மை
விட்டுட்டு இன்னொரு ஆள் கூட இருக்கார்னு தெரியாது, க்ளைமாக்ஸ் ல தான்
தெரியும், ஆனா இதில் ஓப்பனிங்லயே தெரிஞ்சிடுது. எப்படி ஹீரோ 2 பேரையும் சமாளிச்சார்? என்பதே மிச்ச மீதி
திரைக்கதை
இந்தப்படத்துக்கு
கதை , திரைக்கதை , வசனம் மட்டும் கே பாக்யராஜ் , டைரக்சன் அவரில்லை . ஆனாலும் அவர் டச் இருக்கு .ஹீரோவா நடிக்க கமல் மாதிரி
சிகப்பும், ரஜினி மாதிரி ஸ்டைலும் இருக்கனும்கற
ஃபார்முலா வை உடைச்சு சாமான்ய
முகம் , அப்பாவித்தன ஆள் ஹீரோ ஆகலாம்னு
நிரூபிச்ச கே பாக்யராஜ் நடிப்புக்கு
ஒரு ஷொட்டு
காதலியா பிரவீணா.
இப்போதான் முதன் முதலா இவரைப்பார்க்கிறென். மங்களகரமான முகம், கச்சிதமான நடிப்பு .
சிரிப்பு இவர் + பாய்ண்ட்
முறைப்பெண்னாக ,
மனைவியாக ராதிகா . காதல் வசப்படுவதும், சக்களித்திச்சண்டையிலும் ஜொலிக்கிறார்
ஹீரோவின் நண்பனாக , முக்கியமான கேரக்டரில் படம் முழுக்க நாகேஷ் வந்து போகிறார். கலக்கலான நடிப்பு . காமெடியிலும் சரி , சோக நடிப்பிலும் சரி மனதைத்தொடுகிறார். கே பா வின் ஆஸ்தான நடிகரான கல்லாப்பெட்ச்டி சிங்காரமும் உண்டு
பாட்ல்கள் , இசை பரவால்ல ரகம். எம் எஸ் வி இசையில் 4 பாடல்களில் 1 தான் ஹிட்
திரைக்கதையில்
வ்ழக்கம் போல் பெண்களைக்கவரும்
அம்சங்கள் இருந்தாலும் சில காட்சிகள் நம்ப முடியாததாக இருப்பது கண்கூடு
சபாஷ் டைரக்டர்
1
ஹீரோவுக்கு திருமணம் ந்டக்கும்
கோவிலிலேயே தரிசனத்துக்காக காதலியும் , அவர் அம்மாவும்
வரும்போது நாகேஷ் சமாளித்து
அனுப்பும் சீன் நல்ல காமெடி . இந்த சிச்சுவேஷனை பல வருடங்களுக்குப்பின் வீரா படத்தில் ரஜினி – மீனா- ரோஜா காம்போவில்
பார்க்க முடிந்தது
2
சக்களத்தி சண்டை வராமல்
இருக்க இருவருக்குள்ளும் பொசசிவ்னெசை
தூண்டி விடுவது , இருவர் வீட்டுக்கும் மாறி மாறி
போவது
3 கதவைத்தொறடி பாமா
என் கால் வலிக்கலாமா? செம ஹிட் பாட்டு. சிச்சுவேஷன் கரெக்டா
செட் ஆன பாட்டு
4 ஒரு சீரியசான காட்சியை காமெடியாகக்காட்டுவதில் கே பாக்யராஜ் விற்பன்னர் , இதற்கு உதா டார்லிங் டார்;லிங் க்ளைமாக்ஸ்,
ஒரு கை ஓசை ஹீரோ ஓப்பனிங்
சீன். அதே போல் இதில் க்ளைமாக்ஸ் காட்சி
லாஜிக் இல்லாமல் இருந்தாலும் பிரமாதமான
காட்சி . அந்தக்காலத்தில் மிகுந்த வரவேற்பாம்
நச் வசனங்கள்
1
பேங்க் அக்கவுண்ட்ல ஓ டி அதனால
தான் சிகரெட் பாக்கெட்ல பீடி
2
பேசாம என் கூட வீட்டுக்கு வாங்க
ஏன்,? பேசிக்கிட்டே
வரக்கூடாதா?
3
பெத்தவங்களால நீ வளர்ந்திருதா
உன் இஷ்டப்படி நடக்கலாம்,
மத்தவ்ங்களால வளர்ந்ததால
அது முடியாது
4
இதை எல்லாம் நான் ஏன் சொல்றேன்னா...
ஏன்?
நீ என் கிட்டே இதைத்தான் சொன்னே..
5
எல்லா லவவர்சுக்கும்
தங்கள் காதல் தான் உசத்தினு ஒரு நினைப்பு வரும்
6
என் கிட்டே பேசற பொண்ணுங்க எல்லாம் 6 வயசுக்குக்கீழே அல்லது 60 வயசுக்கு மேலே....
7
மத்தாவங்களுக்காக பெத்தவங்களை விட்டுக்கொடுக்கவே கூடாது
8
அடிக்கடி கோவிச்சுக்கிட்டாதா
நெருக்க,ம் அதிகம் உண்டாகும்
9
நீயே ஒரு டைப் . உனக்கு 2 ஒயிஃப் , போர்
ஃபேமிலி
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1
திருமணம் ஆன 2 வது நாளே காதலியைத்திருமணம் செய்வதும்
முதல் இரவில் பாதி ராத்திரியில் கிளம்புவதும்
ஓவர்
2
ராதிகாவின் அம்மா காந்திமதி
ஒரு சீனில் கூட பேசாம என் விருப்பப்படி என் தம்பியைக்கட்டி இருந்தா இப்படி
இரு தார வாழ்க்கை வாழ வேண்டி
இருந்திருக்காதுனு சொல்லவே இல்லை .
அப்டி ஒரு வசனம் எதிர்பார்த்தேன்
3 யாருக்கும் தெரியாமல்
ரக்சிய திருமணம் செய்யும் ஹீரோ அன்றே
சினிமா தியேட்டருக்கு வருவதும் , மாமா விடம் மாட்டிக்கொள்வதும் டிராமா . யாராவது அப்டி போய்
மாட்டுவாங்களா? மேரேஜ் ஆகும் வரை வேணா சினிமா,
பார்க், பீச்னு சுத்துவாங்க , ஆன பின் பெட்
ரூம் போகத்தானே ஆசைப்படுவாங்க, அதுவும் முதல் நாளே
4 ஏற்கனவே 2 சம்சாரம், இதுல 3 வதா ஒரு பொண்ணு கூட டான்ஸ் ஆடறதா செட் பண்ணி இரு மனைவிகளையும் பார்க்க வைத்து பொசசிவ்னெசை தூண்டுவது நம்பவே முடியாத காட்சி
சி.பி ஃபைனல் கமெண்ட் - ஜாலியா
டைம் பாஸ் காமெடி பார்க்க
ஆசைப்படறவங்க பார்க்கலாம், ரேட்டிங் 2.75 / 5