Showing posts with label பாபநாசம் - சின்மா விமர்சனம் ( சி .பி ). Show all posts
Showing posts with label பாபநாசம் - சின்மா விமர்சனம் ( சி .பி ). Show all posts

Wednesday, July 08, 2015

பாபநாசம் - சினிமா விமர்சனம் ( சி .பி )

ரீமேக் படத்தில் நடிப்பதில் என்ன ரிஸ்க்ன்னா ஒரிஜினலை விட நல்லாலைன்னா கழுவிக்கழுவி ஊத்திடுவாங்க. இதையும் மீறி ஏன்  எல்லாரும்  ரீமேக்கில் ஆர்வம் காட்டறாங்கன்னா  நிச்சயிக்கப்பட்ட  வெற்றி அதில்  இருப்பதில் தான். ஒரு  புது திரைக்கதை  எழுதும்போது  இது  எந்த அளவு  வெற்றி பெறும்னு யாராலும் 100%  கணிக்க முடியாது, ஆனால் ஒரு மொழியில்  ஹிட் ஆன படம் மினிமம் கியாரண்டி நிச்சயம் என்பதால் போட்ட முதலீடு தப்பிச்சுடும்.


மலையாளத்தில் த்ரிஷ்யம்னு ரிலிஸாகி  சூப்பர்  ஹிட் ஆன  படம் தமிழில்  அதை விட 2 மடங்கு  ஹிட் ஆகி  இருக்கு. 


ஹீரோ  ஒரு மிடில் கிளாஸ்  ஆள்.அவரோட பொண்ணு  எஜுக் கேஷனல்  டூர்  போன இடத்தில்   பாத்ரூமில்  குளிக்கும்போது ஒரு வீணாப்போனவன் செல் ஃபோன்ல அதை பதிவு பண்ணிடறான்.அதைக்காட்டி  பொண்ணை  மிரட்றான். கில்மாக்கு ஓக்கே சொல்லு இல்லைன்னா நெட்டில்  ரிலீஸ்  பண்ணி  உன் மானம் , மரியாதையை  கைமா  பண்ணிடுவேன்கறான்.பொண்ணு அவனைப்போட்டுத்தள்ளிடுது.ஐ மீன் கொன்னுடுது. அந்தக்கொலையை  ஹீரோ எப்படி சாமார்த்தியமா மறைக்கறார் என்பதே  பிரமிப்பூட்டும்  க்ரைம்  த்ரில்லர் திரைக்கதை


ஹீரோவா தமிழ் நாட்டின் வற்றாத ஜீவநதி ,மகாநதி கமல்.பாடி லேங்குவேஜில்  , டயலாக்  டெலிவரியில் வழக்கம்  போல்  முத்திரை பதிக்கிறார்.ரொமான்ஸ்  காட்சிகளில் வழக்கம் போல் கமல் டச் உண்டு.


ஹீரோயினா கவுதமி. ஒரிஜினலில் மீனா  ஏற்படுத்திய  தாக்கத்தை  இவர் ஏற்படுத்தவில்லை. இருந்தாலும்  குறை சொல்ல  முடியாத  நடிப்பு ( டேய், அதான்  குறை  சொல்லீட்டியே, இன்னும் என்ன சால்ஜாப்பு? சமாளிப்பு?)

போலீஸ் கமிஷனாராக வரும்  ஆஷா வின்  நடிப்பு ஆஹா ரகம்,அவரது  மிடுக்கான தெனாவெட்டான  நடிப்பு கமல் ஹாசனுக்கு  நிகரான நடிப்பு . தமிழில் விஜயசாந்தி , ரம்யாகிருஷ்ணன் வழங்கிய  தெனாவெட்டான நடிப்பை  சமன் செய்கிறார் ( வைஜெயந்தி ஐ பிஎஸ் , படையப்பா, மன்னன்)


வில்லனாக  கலாபவன்  மணி.இவருக்கு போட்டிருக்கும்  தீனி யானைப்பசிக்கு  சோளப்பொறி கதை தான் என்றாலும்  மெச்சத்தக்க நடிப்பு


கமலின் மகள்களாக வரும்  இருவர்  நடிப்பும்  கனகச்சிதம்



ஒளீப்பதிவு  ப்க்கா. ஜெயமோகன் , சகா இருவரும் இணைந்து  வசனம்  எழுதி  இருக்காங்க  குட்


திரைக்கதை , இயச்க்கம் தான் படத்தின்  முதுகெலும்பு . ஒரிஜினலை  அப்படியே  கிட்டத்தட்ட  ஜெராக்ஸ்  எடுத்து  இருக்காங்க . 

 கொலை செய்யும்  காட்சி , க்ளைமாக்ஸ் எக்ஸ்ட்ரா  வசனம் மட்டும் மாற்றம்.

ஃபேமிலி ஆடியன்ஸ் வரவேற்புப்பெறும்  பிரமாதமான க்ரைம்  த்ரில்லர் தான்




மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1.  என்னங்க? ஷாப்பிங்க் என்னாச்சு ?  இந்த  டைம் டிரஸ்  வாங்கித் தரலைன்னா பாருங்க , டிரஸ்   இல்லாம  எதுவும் நடக்காது 



ஏன்நடக்காது ? அதுதான் சவுகர்யமும்  கூட , ஹி ஹி 




2  அப்பா , ஒரு ஆடி கார் வாங்கனும் 


 என்ன ரேட்  இருக்கும் ?


 50 லட்சம் 


 அதை என்ன தங்கத்துலயா  செஞ்சிருக்கப்போறாங்க ?




3  ஏங்க, குழந்தைங்க   இருக்கும்போது  டபுள்  மீனிங்க் ல பேசாதீங்க


 புரியாது  விடு  அவங்க வயசுல  நான் இருந்தப்ப  எனக்கு எதுவும்  புரியலை , அவங்களுக்கு மட்டும் எப்டி புரியும் ?


 ம்க்கும், இப்போமட்டும்  உங்களுக்கு எல்லாம் புரிஞ்சுடுதா? 


4 பொண்ணுங்க   கிட்டே  உள்ள   ஒரு கெட்ட பழக்கம் எங்கே  போனாலும் விதம்விதமா பாத்திரங்கள் வாங்குவாங்க . குக்கர்லயே 2 லிட்டர் குக்கர் , 3 லிட்டர் குக்கர் , 5 லிட்டர் குக்கர் ,னு வாங்கி அடுக்கிக்குவாங்க 



5 அப்பாக்கு   நீசொன்னது   புரியல

 அம்மாக்கு?


 அப்பாக்கே புரியலை , அம்மாவுக்குமட்டும்? 




6 ஃபோட்டோவில்   இருக்கும் மஞ்சள் மாருதி வேனை நீ பாத்தியா?



 பார்த்தேன் , ஆனா அதே வேனான்னு சொல்ல முடியாது 



7  எல்லாக்குடும்பங்களிலும்  மத்தவங்களுக்குத்தெரியாத  சில  பர்சனல்  விசயங்கள் இருந்தே  தீரும் 



8 நமக்குப்பிரியப்பட்டதெல்லாம் நமக்கு  வேணும்னு   ஆசைப்படறதுதப்பு 


9  தனக்கு அவசியம்  இல்லாத  ஒரு விஷயத்தை  யாரும்  நினைவு வெச்சுட்டு  இருக்க மாட்டாங்க. அந்த  விஷயம் தான் இப்போ  இந்தக்கொலையை மறைக்க உதவப்போகுது



 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1

ஏ சென்ட்டர் ஆடியன்சோட படம் பார்க்கறதுல என்ன ஒரு மைனஸ்னா அமைதியா படம் பார்ப்பாங்க.விசில் கைதட்டல் இருக்காது

2 டைட்டில்ல கமல் பேர் போடும்போது எந்தப்பாத்திரத்தில் ஊற்றினாலும் அதன் வடிவத்தைப்பெறும் தண்ணீரைக்காட்றாங்க.குறியீடு # பா

3 கவுதமி ஓப்பனிங் சீன்ல ரொம்ப சின்ன ஆனா சூடான இட்லியைக்காட்றாங்க.குறியீடு. # பா


4 வசனகர்த்தாக்கு ஹீரோயின் மீனா னு சொல்லிட்டாங்களா? ஹீரோ ஹீரோயினைப்பார்த்து சரியான நாட்டுக்கட்டைனு சொல்றாரு # பா


5 மகாநதிக்குப்பிறகு இதுதான் கமல்-ன் பேமிலி ஆடியன்சைக்கவரும் படம்். அபூர்வ சகோதரர்கள் ,இந்தியன்,அவ்வை சண்முகிக்குப்பின் இது தான் அவரது ஆல் சென்ட்டர் ஹிட்

6 கமல் படம் சூப்பர் ஹிட் ஆகும்போதெல்லாம் விகடன் மார்க் 50 / 50+ ஆகவே இருக்கும்.45டூ49 பெரும்பாலும் இல்லை.ஒரே ஜம்ப் தான்


7 நான் எந்த அளவுக்கு பயந்தாங்க்கொள்ளின்னா அந்த போலீஸ் ஆபீசர் லேடியை எங்கே கமல் லிப் கிஸ் அடிச்சிடுவாரோ?னு பயப்படும் அளவு # பாபநாசம்


8 த்ரிஷ்யம் FDFS பார்த்தபோது முன் பாதி திரைக்கதை மெதுவாக நகர்வதால் தமிழில் இது எடுபடாது என நினைத்தேன்.ஆனால் அதிரி புதிரி ஹிட் ஆகி விட்டது#பா

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்




இறந்த  வில்லனின்  செல்  ஃபோன்  சிம்மை  கழட்டி   வேறு ஒரு   ஃபோனில்  வைத்து   சைலண்ட் மோடில் போட்டு   அதை  வடக்கே செல்லும்  ஒரு  வேனில் அனுப்பி  வில்லன்  வேற  ஏரியாவில் இருக்கான் என   ட்விஸ்ட்   செய்யும் ஐடியா கலக்கல் 


2    போஸ்டர்    டிசைன்  பக்கா. ஏதோ  ஃபேமிலி சப்ஜெக்ட் விசு டைப் படம்  போல்


3 கொலை நடந்த அன்று ஹீரோ  ஃபேமிலியோடு   டூர் போய்ட்டாங்க என   போலீசை  நம்ப வைக்க   ஹீரோ   எடுக்கும் முயற்சி , போலியான ஆதாரங்கள்  எல்லாமே  அபாரம் 


4 லேடி  போலீஸ் கமிஷனர்  வரும்  ஒவ்வொரு காட்சியும்  விசில் அடிக்க வைக்கும்  நடிப்பு .


5  எல்லாவற்றுக்கும்  சிகரம்  வெச்சது  போல்  வீட்டில் புதைத்த டெட் பாடி  எப்படிகாணாமல்   போச்சு  என்பதற்கு க்ளைமாக்ஸில் வைத்த ட்விஸ்ட்  அபாரம் 




இயக்குநரிடம்  சில கேள்விகள்,திரைக்கதையில்   சில ஆலோசனைகள், சில  சுட்டிக்காட்டல்கள்



1   பொதுவா இந்த மாதிரி   மிரட்டறவங்க பொண்ணு   வீட்டுக்கு போகமாட்டாங்க. தன்னோட இடத்துக்குதான் வரச்சொல்வாங்க. அதுதான் பாதுகாப்பு. பின் எப்படி வில்லன்  பொண்ணோடவீட்டுக்கு தைரியமா  போறான்?அதுவும்  அது ஒரு  கிராமம்,மிட் நைட் டைம்



2  முதல்ல பொண்ணை  கில்மாக்கு கூப்பிடும் வில்லன் அவ  ஓக்கே   சொல்லலைன்னதும் அவங்கம்மாவை(மீனாவை )  கூப்பிடறான் . பொண்ணு   முன்னாலயே அம்மாவை   கூப்பிட்டா யாராவது சம்மதிப்பாங்களா? 


3  அந்தப்பொண்ணை  பின்னாலவெச்சுக்கிட்டு   வில்லன்  கவுதமி  கிட்டே   வரம்பு மீற நெருங்கும்போது    பொண்ணு பின்னால   இருந்து தாக்கும்னு  யூகிக்க முடியாதா?அவளை கட்டிப்போட்டுட்டுதானே    இவன் அட்டெம்ப்ட்   ரேப்ல இறங்கி  இருக்கனும் ? 

4  வீடியோ   எடுத்த   கில்மா  சீனை ஒரு காப்பி எடுத்து  வெச்சுக்கிட்டு தானே பொதுவா  வில்லன் க மிரட்டுவாங்க . சிஸ்டத்துல   ஸ்டோர் பண்ணாம   ஒரே ஒரு ஒரிஜினல் வெச்சுஅதையும்   அம்போன்னு  தொலைக்க  அவன் என்ன லூசா? என்  கிட்டே இன்னொருகாப்பி  இருக்கு . என்னைத்தாக்கி  இதை நீங்க  எடுத்துக்கிட்டாலும்  நான்   குறிப்பிட்ட   டைம்க்கு என்  இடத்துக்குப்போகலைன்னாலும்  அந்த  இன்னொரு காப்பியை என்நண்பன்   ரிலீஸ் பண்ணிடுவான் அப்டினு  மிரட்டி  இருக்கலாமே?


5.கற்புக்கு பங்கம் வராம  இருக்க   ஒரு பெண்  தன்னை ரேப் பண்ண வந்தவனை தாக்கலாம்னுசட்டத்துல சொல்லுது . எதிர்பாராதவிதமான  விபத்து கேட்டகிரில தான் இது வரும்.அதிகபட்சம்   2 வருசம் தான் தண்டனைகிடைக்கும் . ஏன் அவ்ளவ் ரிஸ்க் எடுக்கறாங்க ?


6   கிராமத்தில்  ஓடைக்குள்   மூழ்கிய வேனை   நீச்சலடிக்கும் இளைஞர்கள் கண்டு   பிடிக்கவாய்ப்பு இல்லை .அதுவும்   உடனே கண்டு பிடிப்பது    நம்பும்படி  இல்லை (  ஏன்னா   கிணறு என்றால்   மேலே இருந்து குதிக்கும்போது 10 அடி ஆழம் வரை செல்லும் வாய்ப்பு  உண்டு. ஓடை என்பதால்   உள் நீச்சல் அடிச்சாலும்  அதிக  பட்சம் 5 அடி வரை தான்  போவாங்க. 20 அடி ஆழம் வரை தரை  வரை  போக  தேவையே இல்லையே? 


7  எல்லா சம்பவங்களும்  26  நாட்களுக்குள் நடப்பதா  ஒரு இடத்தில்    வசனம் வருது.  கொலை நடப்பதற்கு   இரு நாள்  முன்பு   போலீஸ் ஸ்டேஷன்   இங்கே  புதுசா கட்டப்போறாங்க  என ஒருடயலாக் வருது .   26  நாட்களில்   எந்த   ஊரில்  ஒரு  போலீஸ் ஸ்டேஷன்   கட்டி  இருக்காங்க?மினிமம்  6 மாசமாகுமே? (க்ளைமாக்ஸ்   ட்விஸ்ட்க்கு இந்த   ஸ்டேஷன்   ஒரு முக்கிய துருப்புச்சீட்டு)


8  கவுதமி  சரியான  தேர்வு அல்ல.முகத்தில்  முத்தல்  களைப்பு  தெரியுது.கமல்  கவுதமி   காம்போ  குருதிப்புனலில் ஒர்க் அவுட் ஆச்சு. ஆனா இதில்  எடுபடலை,ஏன்னா அவங்க  நிஜமாவே  தம்பதி என்பதால் கிக் இல்ல.ரொமான்சில்


9   ஆகஸ்ட் 3ம் தேதி அஞ்சான் படம்  பார்ப்பதா  ஒரு சீன் வருது. ஆனா அஞ்சான் ரிலீஸ் ஆனதே ஆகஸ்ட் 15 தானே/


10   கமலின்  ஒட்டு மீசை  எடுபடவில்லை. சத்யா படத்தில் வருவது போல்  நேச்சுரலாக  மீசை வளர்த்திருக்கலாம்.


11 ஒரு  கமிஷனரின்  மகனே  காணாமல்  போய்  இருக்கான்.  கொலை செய்த அல்லது செய்ததாக சந்தேகப்பட்ட ஆளை  அப்டியே சாஃப்ட்டாக விசாரிப்பாங்க. பிரிச்சு  மேய  மாட்டாங்க? 
மோகன்லாலை கமல்  ஓவர் டேக்கியது


1   மோகன் லால்  கொலையை மறைக்கும்போது  ஒரு புரொஃப்ஷனல்  கில்லர்  போல்  முகம்  தெனாவெட்டா  இருக்கும். ஆனா  கமல் முகத்தில்  ஒரு  மிடில் கிளாஸ் ஆள்  போல்  பயந்த படி இருக்கும்


2  பொண்ணு  அழும்போது எந்த அப்பாவும் கண் கலங்கிடுவான். த்ரிஷ்யம்ல  மோகன்லால்  மக அழும்போது கெத்தா  இருப்பார்  மகளுக்கு  தைரிய்ம் ஊட்டுவார். ஆனா கமல் கலங்கிடுவார்



3  வில்லனின்  பெற்றோர்  முன்  தன்  குற்றத்தை  ஹீரோ  ஒப்புக்கொள்ளும்  காட்சியில்  மோகன் லாலிடம்  ஒரு தெனாவெட்டு  இருக்கும்,ஆனா கமல்  பாடி லேங்குவேஜில்  ஒரு  குற்ற  உணர்ச்சி  இருக்கும்.இதுதான் சாமான்யனுக்கும் சரித்திர நாயகனுக்கும் உள்ள வித்தியாசம். 

சி  பி  கமெண்ட் =பாபநாசம்- பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் திரைக்கதை ,இயக்கம் ,கமலின் அட்டகாசமான நடிப்பு+ ஆல்சென்ட்டர்ஹிட்.விகடன்=50 .ரேட்டிங்=3.75/ 5






ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 50



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = நன்று



 ரேட்டிங் =  3.75/5

மதுரை யில்படம்  பார்த்தேன்

மதுரை கே.கே நகர் - ஜாஸ் தியேட்டர் ,

Madurai theatre paabanaasam