Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

Monday, April 27, 2015

இளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1

மனது, காலம், நினைவு, நிலப்பரப்பு, உணர்வு என்று பல அடுக்குகளில் படிந்துகிடக்கின்றன இசையின் கூறுகள். குறிப்பிட்ட ஓர் இசையை மீண்டும் கேட்கும்போது, நீரின் மேல் மிதக்கும் மெல்லிய பூக்களாக மனதுக்குள் அவை மலர்வதை உணரமுடியும். நம் வாழ்வின் தருணங்களைத் தேக்கிவைத்திருக்கும் ஒரு பாடல், எங்கும் சுமந்துசெல்லக்கூடிய நிழல்படத் தொகுப்பாக நம்மைத் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
  1. மழை ஓய்ந்த மதியப் பொழுதில் கேட்ட ‘அடி பெண்ணே’ பாடலை, சுட்டெரிக்கும் வெயிலின் தார்ச்சாலையில் நின்று கேட்டாலும் மனம் குளிர்ந்து சிலிர்ப்பதை உணரலாம். இரவின் தனிமையில் மொட்டை மாடியில் அமர்ந்து கேட்ட ‘பொன் மானைத் தேடி’ பாடல், எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்வைத் தொலைத்த காதலர்களை நினைவுபடுத்தலாம்.
  2. வானொலி, தொலைக்காட்சி, ஒலிபெருக்கிகள் போன்ற சாதனங்கள் மூலம் நம் வாழ்வின் வெவ்வேறு தருணங்களுக்குப் பின்னணி இசை போல ஒலித்து, நம் மனதுடன் தங்கிவிட்டவை திரையிசைப் பாடல்கள். அந்தப் பாடல்களுடனான நமது உறவைப் பற்றிப் பேசும் தொடர் இது.
  3. இளையராஜாவின் தொடக்ககாலப் பாடல்கள் வெவ்வேறு நிலப்பரப்புகளின் கூறுகளைத் தம்முள் புதைத்து வைத்திருப்பவை. சாலையின் இரு புறமும் விரியும் வெவ்வேறு நிலப்பரப்புகள் அவரது பாடல்களின் நிரவல் இசைக்கோவையாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை, நீண்ட பயணங்களின்போது ஆத்மார்த்தமாக உணர முடியும். வீடுகளின் நிழல்கள் விழுந்து கிடக்கும் மாலை நேரத் தெருக்கள், சாலையின் பரபரப்புக்கிடையில் ஒதுங்கிக் கிடக்கும் பூங்காக்களைக்கூடத் தனது இசைக் குறிப்புகளால் காட்சிப்படுத்தியவர் இளையராஜா.
  4. அவரது மிகச் சிறந்த ஆல்பங்களில் ஒன்றாக, சுமன், சுமலதா, பானுச்சந்தர் நடித்த ‘எனக்காகக் காத்திரு’ (1981) திரைப்படப் பாடல்களின் தொகுப்பைச் சொல்லலாம்.
  5. பனிமலைகள் நிறைந்த அருணாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவுக்குப் பேர்போன நிவாஸ். சுமனும் பானுச்சந்தரும் நெருங்கிய நண்பர்கள். மர்மமான கதாபாத்திரமாக வரும் சுமன், காதலிப்பதாகக் கூறிப் பல பெண்களை ஏமாற்றுவார். அவரால் வீழ்த்தப்படும் பட்டியலில் பானுச்சந்தரின் தங்கையும் இருப்பாள். ஆத்திரமடையும் பானுச்சந்தர், சுமனைக் கொல்வதற்குத் தேடியலைவார். இலக்கற்ற திரைக்கதையுடன் அலைபாயும் இந்தப் படம், ஒளிப்பதிவு, திபெத்திய இசைக் கருவிகள் ஒலிக்கும் பாடல்கள், மர்மத்தைப் பிரதியெடுக்கும் பின்னணி இசை மூலம் தொலைதூரப் பனிப் பிரதேசத்தின் கனவைக் காண்பதுபோன்ற வித்தியாசமான உணர்வைத் தரும்.
  6. படத்தில் நான்கே பாடல்கள். காதலில் உருகும் பெண்களின் படம் என்பதால், டூயட் பாடல்களின் பல்லவியைப் பெண்கள்தான் தொடங்குகிறார்கள். ‘ஓ நெஞ்சமே’ பாடல் தொடங்குவதற்கு முன்னதாக, ஜானகியின் ஆலாபனையும், வயலின்களின் சேர்ந்திசையும் ஒரு மயக்க நிலைக்கு நம்மை இட்டுச்செல்லும். பாலத்தின் மீது கடைகள் படர்ந்திருக்கும் அந்தப் பாதையில் காதலனைத் தேடி ஓடுவாள் நாயகி. நினைவில் மங்கலாக உறைந்திருக்கும் படிமம் மாதிரியான காட்சியமைப்பு.
  7. ‘பனிமழை விழும், பருவக் குளிர் எழும்’ எனும் அடுத்த பாடல் புத்தக் கோயில்களின் பெரிய மணியின் ஓசையுடன் தொடங்கும். தந்தி மற்றும் குழலிசைக் கருவிகள் காற்றின் மவுனத்தைக் கலைத்தபடி ஒன்றுடன் ஒன்று உரையாடத் தொடங்கும். உறைபனிக் காற்றைக் கிழித்துக்கொண்டு ஷைலஜாவின் குரல் ஒலிக்கும். எந்த மட்டத்திலும் குரல் உடையாமல் உச்ச ஸ்தாயியை எட்டும் குரல் அவருடையது.
  8. ‘…கனவுகளின் ஊர்கோலமே…’ என்று ஒவ்வொரு முறை பல்லவி முடியும்போதும் சில்லிடும் காற்று நம்மை வருடும். மெல்லிய அதிர்வுடன் ஒலிக்கும் தாளக்கட்டைத் தழுவியபடி புல்லாங்குழல் கசிந்துகொண்டே இருக்கும். அமைதியில் உறைந்த, பாந்தமான குரலில் பாடியிருப்பார் தீபன் சக்கரவர்த்தி. தான் பாடிய பாடல்களில் மிகவும் வித்தியாசமானவை இந்தப் படத்தின் பாடல்கள்தான் என்று ஒருமுறை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
  9. உமா ரமணன் பாடும் ‘தாகம் எடுக்கிற நேரம்’, இளையராஜா பாடும் ‘ஊட்டி மலை காட்டிலே’ என்று எல்லாப் பாடல்களும் குளிர்மலையின் பின்னணியில் படமாக்கப்பட்டவை. சுமலதா, நிஷா, மாலினி என்று அழகுப் பெண்கள் நிறைந்த இந்தப் படத்தின் பாடல்களை, உயிர்ப்பான காதலுடன் இசைத்திருப்பார் இளையராஜா. பரவலான ரசிகர்கள் அறிந்திராத பாடல்கள் என்றாலும், இவற்றைக் கேட்கும்போது தனிமையின் ஏகாந்தமும், மெல்லிய பனியின் ஸ்பரிசமும் நம்மை தழுவும்.
  10. தொடர்புக்கு: [email protected]


  1. KUBER.K  
    raja always great in is style.your remember style so nice i expect like more from you. thankyou.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Nazeer  
      ரியல் இசை ராஜா
      Points
      210
      2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Kesavan  
        ராஜா ஒரு பிறவி மேதை.ராஜா என்றுமே ராஜா தான்
        2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • அய்யா அவருடைய இசை கேட்டபின் எந்த இசையும் இசையா எல்லாம் இம்சை எந்த காலத்திலும் எதற்கும் அவரின் இசைசரித்ரம் படைக்கும்
          2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Srini  
            பாடல்களை நீங்கள் தொகுத்த விதம் மிக அருமை. Raja sir raja sir thaan
            3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • இளையராஜா பாடல்கள் கேட்கும்போது தனிமையின் ஏகாந்தமும், மெல்லிய பனியின் ஸ்பரிசமும் நம்மை தழுவும்.
              3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • ராஜா always great
                3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                • God bless you sir🎵🎶🎼
                  3 days ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                  RAVINDRANPILLAI  Up Voted
                  • "பனி மழை விழும், பருவக் குளிர் எழும்"- எனக்கு மிகப் பிடித்த இளையராஜா பாடல்களில் வரும், டாப் டென், கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறாவது இடத்தில்! சினிமா விரும்பி
                    3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                    • Music 🎶 Bramma...Raja sir 🎶 🎻 🎸
                      3 days ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                      RAVINDRANPILLAI  Up Voted
                      • ராஜாவின் காலத்திலே நானும் வாழ்கிறேன் என்பது பெருமைக்குரிய விஷயம்.
                        Points
                        1050
                        3 days ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                        RAVINDRANPILLAI  Up Voted
                        • ராஜா...... ராஜா தான்thanx 

                        • thanx = the hindu

                        Sunday, March 01, 2015

                        ஒய் திஸ் கொலை வெறி நாயகனின் நிலா அது வானத்து மேல வின் காப்பியா?-ஆண்ட்ரியாவின் ஃபேமிலி (லிப் லாக் ) ஃபிரண்ட் பேட்டி

                        அனிருத் படம்: எல்.சீனிவாசன்
                        அனிருத் படம்: எல்.சீனிவாசன்
                        குருவி தலையில் பனங்காயை வைத்தது போல மிகச் சிறிய வயதிலேயே மிகப்பெரிய இசையமைப்பாளர் என்ற புகழைச் சுமந்து நிற்கிறார் அனிருத்.
                        ‘3’ படத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்து ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ள அவரைச் சந்தித்தோம். பியானோவில் விரல்களை ஓடவிட்டவாறு நம் கேள்விகளுக்கு பதிலளித்தார் அனிருத்.
                        இவ்வளவு சீக்கிரம்... இத்தனை உயரம்... எதிர்பார்த்தீர்களா?
                        இல்லை. இது நான் எதிர்பார்க்காத ஒன்று. நான் 6-ம் வகுப்பு படிக்கும்போதே பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன். பள்ளி யில் பஜன்ஸ் குழு, கல்லூரியில் ராக் குழு என்று நிறைய இசைக்குழுக்களில் இருந்த தால் இசையில் அதிக ஆர்வம் இருந்தது.
                        ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆசை அப்போதிலிருந்தே எனக்கு இருந்தது. ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் இசைய மைப்பாளர் ஆவேன் என்று நினைக்க வில்லை. இன்னும் நிறைய கற்றுக்கொண்ட பிறகுதான் இசையமைப்பாளராக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு அந்தஸ்து கிடைத்ததற்கு என்னுடைய நல்ல நேரம்தான் காரணம் என்று சொல்லவேண்டும்.
                        சிறு வயதிலேயே இசையமைப்பாளர் ஆனதால் இளமைக் கால கலாட்டாக்களை தவறவிட்ட வருத்தம் இருக்கிறதா?
                        கண்டிப்பாக இருக்கிறது. நான் கல்லூரி யில் படிக்கும் போது என்னுடைய வருகைப் பதிவேடு மிகவும் மோசமாக இருக்கும். நான் அடிக்கடி கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போவதால் வகுப்புக்கு அதிகம் போகமாட்டேன். ஆனால், கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்வானேன்.
                        படிப்பு, கலை நிகழ்ச்சிகள் என்று ஓடிக் கொண்டே இருந்ததால் என்னால் கல்லூரி கலாட்டாக் களை அனுபவிக்க முடியவில்லை. கல்லூரியில் எனக்கு நிறைய நண்பர்களும் இல்லை. இப்போதும் எனக்கு நண்பர்கள் என்றால் என்னுடைய பள்ளி நண்பர்களும் என்னுடன் பணிபுரிபவர்களும்தான்.
                        தனுஷ், சிம்பு இருவருக்கும் நீங்கள் நண்பராக இருக்கிறீர்கள். இருவருக்கும் இடையிலான நட்பு எப்படி இருக்கிறது?
                        இரண்டு பேருக்குமே அவ்வளவாக ஆகாது என்று நான் இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பு கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் இருவரிடமும் பழகியதை வைத்து பார்க்கும்போது அவர்களிடையே எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. இருவருமே நெருங்கிய நண்பர்கள்தான்.
                        பள்ளி நாட்களில் நான் கலை நிகழ்ச்சியில் இசைப் பிரிவில் இருக்கும்போது சிம்பு வேறு பள்ளியின் நடனப்பிரிவில் இருப்பார். அதனால் அவரை எனக்கு அப்போதில் இருந்தே தெரியும். அவர் எனக்கு மிகவும் சீனியர்.
                        ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நீங்கள் நாயக னாக நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வலம் வந்ததே?
                        அந்தச் செய்தி எப்படி வந்தது என்று தெரிய வில்லை. ‘3’ படத்துக்கு கிடைத்த வரவேற் பைத் தொடர்ந்து நிறையப் பேர் எனக்கு கதை சொல்ல வந்தார்கள். கதையைச் சொல்லி முடித்தவுடன் ‘நீங்கள்தான் படத்தில் நாயகன்’ என்று சொல்வார்கள். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியாது.
                        நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. கடந்த 3 வருடங்களில் என்னுடைய 7 ஆல்பங்கள் வெளிவந்திருக்கிறது. எனக்கு கிடைத்திருக் கும் இந்த இடத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இப்போது இருக் கிறது. இசைக்காக வீடியோ தயார் பண்ணும் போதே, அதில் எப்படி ஆடுகிறோம், நடித்திருக்கிறோம், அழகாக இருக்கிறோமா என்றுதான் எண்ணம் போகிறது. என்னால் ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது. அதனால் எனக்கு நடிப்பில் விருப்பமில்லை.
                        அப்படியென்றால் நாயகனாக நடிக்கவே மாட்டீர்களா?
                        இசைக்கான வீடியோ ஆல்பங்களில் மட்டும் நடிப்பேன். இரண்டு மூன்று நாட்கள் இசை ஆல்பத்தில் நடிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது நாயகனாக நடிக்க வாய்ப்பே இல்லை.
                        உங்களுடைய இசைக்கு கிடைத்த மறக்க முடியாத பாராட்டு என்ன?
                        மறக்க முடியாத பாராட்டு என்றால் ‘எதிர் நீச்சல்’ படத்துக்கு கிடைத்ததுதான். நான் இசையமைத்த படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவது வழக்கம். அந்த வகையில் ‘எதிர் நீச்சல்’ படத்தை முதல் ஷோ பார்த்தேன். அதில் பெயர் போடும்போது, என் பெயர் இசையமைப்பாளர் அனிருத் என்று வந்தது.
                        அப்போது ரசிகர்கள் எழுப்பிய கைதட்டல் மற்றும் விசிலைக் கேட்டபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். என்னுடைய இரண்டாவது படத்துக்கே இப்படி ஒரு வரவேற்பா என்று ஒரு பிரமிப்பு இருந்தது.
                        திரையுலகில் எனக்கு எல்லாமே ரஜினிகாந்த்தான். என் இசை வெளியாவதற்கு முன்பே அதன் சிடியை ரஜினிகாந்துக்கு அனுப்பிவிடுவேன். என்னுடைய இசை வெளியாவதற்கு முந்தைய நாளே அவரு டைய விமர்சனம் கிடைக்கும்.
                        அது தான் திரையுலகத்தில் எனக்கு கிடைக்கும் சிறந்த பாராட்டு. ஒரே ஒரு ஆல்பத்தை மட்டும் அனுப்ப மறந்து விட்டேன். அப்போதுகூட அவராகவே போன் செய்து ஆல்பத்தைக் கேட்டு வாங்கினார். எப்போதுமே அவரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் அளவுக்கு நன்றாக இசையமைக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
                        மறுபடியும் ‘கொலவெறி’ பாடல் மாதிரி ஒரு பாடலை உங்களால் கொடுக்க முடியவில்லையே?
                        அந்த மாதிரி பாடல்கள் 20, 30 வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும். எனக்கு முதல் படத்திலேயே அப்படி ஒரு பாடல் அமைந்தது. அதுபோன்ற ஒரு பாடல் மீண்டும் எப்போது அமையும் என்று யாருக்குமே தெரியாது. அப்போது கிடைத்த பெயரை தக்கவைத்துக் கொள்ளத்தான் உழைக்கிறேன், போராடுகிறேன்.
                        இளம் வயதில் பெரிய இசையமைப்பாளர் என்ற புகழ் கிடைத்தாலும் மறுபுறம் காதல் சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறீர்கள். அப்படி காதல் சர்ச்சையில் சிக்கும்போது இருந்த மனநிலை என்ன?
                        முதல் முறையாக என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அடி என்று அதைச் சொல்லலாம். ஏனென்றால் அது வரைக்கும் எல்லாருமே என்னுடைய இசையைக் கொண்டாடினார்கள். முதல் தடவையாக என்னைப் பற்றி ஒரு எதிர்மறையான செய்தி வந்தது.
                        இரண்டு நாட்கள் மனநிம்மதி இல்லாமலேயே இருந்தேன். இரண்டு வாரங்களுக்கு வெளியே தலைகாட்டா மலேயே இருந்தேன். என் பொழுதை தனிமையில் இசையோடு கழித்துக் கொண்டிருந்தேன்.
                        அப்போது பண்ணிய பாடல்கள் தான் ‘வணக்கம் சென்னை’ படத்தின் பாடல்கள். இப்போது எதிர்மறைச் செய்தி களை தாங்கிக்கொள்ள மனம் பக்குவப் பட்டுள்ளது. அதுபோன்ற செய்திகளைப் படிக்கும்போது நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறேன்.
                        இவ்வளவு ஒல்லியாக இருப்பதற்கு அப்படி என்னதான் சாப்பிடுகிறீர்கள்?
                        நீங்கள் ஒருநாள் என்னுடன் இருந்து, நான் சாப்பிடுவதைப் பாருங்கள். சாப்பாட்டை சும்மா வெளுத்துக் கட்டுவேன். ஒரு வேளை, சைவ சாப்பாட்டைச் சாப்பிடுவதால் எடை கூடாமல் இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை.




                        நன்றி - த இந்து

                        • Seetharaman  
                          காப்பி அடிச்சு மியூசிக்ல பெரிய ஆளு ஆயிடிங்க , அது போல விக்ரம் , கமல் மாதிரி பெரியே ஆளுங்கள காப்பி அடிச்சு இன்னும் பெரியே ஆள் ஆயிடுங்க அனிருத்... நமக்கு தான் புதுசா யோசிக்க தெரியாதே
                          about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                             
                          • Gnanasekaran  
                            "ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்." -திருவள்ளுவ நாயனார். கமெண்ட்: அனிருத் அய்யா அவர்களே, முதலில் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். பிறகு நடிப்பை பற்றி யோசிக்கலாம். அது மட்டுமின்றி இப்போவே சிவகார்த்திகேயனுக்கும், தனுஷுக்கும் அப்படி இப்படின்னு பேச்சு அடி படுத்து. நீங்களும் நடிக்க வந்துடீங்கன்ன நிலைமை இன்னும் சூப்பர். முதலில் நீங்கள் சொந்தமாக மியூசிக் போட கற்றுக்கொள்ளுங்கள். இப்படி காமெடி எல்லாம் பண்ணாதீங்க. "சைவ சாப்பாட்டைச் சாப்பிடுவதால்..." இது தவறு. இதற்கு பின்னால் ஒரு அரசியல் தென்படுகிறது. வீணான குழப்பத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டாம். " (கொலைவெறி) அந்த மாதிரி பாடல்கள் 20, 30 வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும்." கமெண்ட்: கொலைவெறி பாடல் இசைத்தாய் இசைஅமைத்த "நாயகன்" படத்தில் இடம்பெற்ற, "நிலா அது வானத்து மேல" பாடலின் காபிதான். "ஓடுற நரியில ஒரு கிழ நரி தான்" = "why திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி" காபி அடிங்க, ஆனா தெரியாத மாதிரி காபி அடிங்க... நன்றி. தமிழ் வாழ்க.