Showing posts with label பாகுபலி 2 - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label பாகுபலி 2 - சினிமா விமர்சனம். Show all posts

Sunday, April 30, 2017

பாகுபலி 2 - சினிமா விமர்சனம்

Image result for bahubali 2 images

முதல் நாளிலேயே 120 கோடிக்கும் மேலாக வசூல் சாதனை புரிந்த பாகுபலி 2 இந்திய சினிமாவின் மாற்ற முடியாத சரித்திர சாதனைப்படமாக அமைந்து விட்டது, ஆல் செண்ட்டர் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன இந்தப்படம் எல்லோரும் சொல்வது போல் ஆஹா ஓஹோ படமா? இதில் குறைகளே இல்லையா? என்பதைப்பற்றிப்பார்ப்போம்

வளர்ப்பு மகன் , சொந்த மகன்  இருவருக்கும் நிகழும் அரியாசனைப்போட்டியில் வளர்ப்பு மகன் ஜெயிக்கிறான்.அடுத்ததா வளர்ப்பு மகன் காதலிக்கும் அதே பெண்ணை சொந்த மகனும் விரும்புகிறான்,  ஒன் பை டூ ஷேர் பண்ண அது டீ இல்லை, அதனால ஏற்படும் சூழ்ச்சிகள் , கொலைகள் ம், போர்கள் தான் படத்தின் கதை 

ஹீரோவா அப்பா கேரக்டர் , மகன் கேரக்டர்னு பிரபாஸ் பட்டாசைக்கிளப்பி இருக்கார். ஓப்பனிங் சீனில் முதல் பாகத்தில் சிவ லிங்கத்தை தூக்கி வரும் காட்சியில் வந்தவர் இரண்டாம் பாகத்தில் தேர்  வடத்தை ஒத்தை ஆளாக இழுத்து வரும் சீனில் கிளப்பி இருக்கிறார். அனுஷ்காவுடனான காதல் காட்சியில் நெருக்கம் குறைவு என்றாலும் ஃபேமிலி ஆடியன்ஸ் ரசிக்கும்படியான காட்சி அமைப்புகள் , கண்ணியமான நடிப்பு இத்யாதிகள் அமர்க்களம்

நாயகியாக அஸ்கா அனுஷ்கா . சாட்சாத் இளவரசி தோரணை.ராஜா மாதா ரம்யா முன்பே கம்பீரமாக எதிர்த்துப்பேசுவது , தன்னை விலை பேச வந்தவரிடம் வீர வசனம் பேசுவது , போர்க்காட்சிகளில் லாவகம் என அசத்தல் நடிப்பு ( ஆனாலும் முதல் பாகத்தில் தமனா விடம் இருந்த கிளாமர் , வீரம் , ஸ்டண்ட் காட்சிகளில் அதிரடி அனுஷ்காவிடம் குறைவு)

கட்டப்பாவாக சத்யராஜ் அருமையான நடிப்பு , ராஜ விசுவாசத்தைக்காட்டும் காட்சிகள் பிரமாதம் , 

வில்லன்களாக நாசர் , ராணா கனகச்சிதம்,. ராணா வின் ஜிம் பாடியைப்பார்க்கும்போது த்ரிஷா ஏன் விலகி வந்தார் என ஆச்சரியம் 


ராஜ மாதாவாக வரும் ரம்யா கிருஷ்ணன் படையப்பா நீலாம்பரி நடிப்பை மிஞ்சி விட்டார் என பலரும் பாராட்டி இருக்கிறார்கள் , ஆனால் பாத்திரப்படைப்பில்  சில கு்ளறுபடிகள் காரணமாக அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை 

ஒளிப்பதிவு  பிரமாதம் , லொக்கேசன் செலக்சன் , சி ஜி ஒர்க்ஸ் எல்லாம் அற்புதம் . இசை மரகத மணி ( அழகன் புகழ்) பிஜிஎம் மில் இன்னும் கவனம் செலுத்தி  இருக்கலாம்

Image result for bahubali 2 images


இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்:


1   ஹீரோ  ஓப்பனிங் சீன். பிரமாதம்,  ஒரு மாஸ் ஹீரோவுக்கு படத்தில்  ஓப்பனிங் சீன் ரொம்ப முக்கியம் , ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அளவு கெத்தாக இருக்கனும், ரஜினிக்கு ஒரு தளபதி , கமலுக்கு ஒரு வெற்றி விழா , விஜய்காந்த்க்கு ஒரு கேப்டன் பிரபாகரன் , விஜய்க்கு  ஒரு கில்லி ,அஜித்க்கு  ஒரு ஆரம்பம் இவற்றை உதாரணமாக சொல்லலாம், பிரபாஸுக்கு லைஃப் டைம் ஓப்பனிங் சீன்

2 அனுஷ்கா வின் பன்றி வேட்டை சீன் காட்சிப்படுத்திய விதம் அருமை .அதே போல்  ஹீரோ அனுஷ்காவை தன் ஊருக்கு அழைத்துச்செல்லும்போது வiழியில் தென்படும் இயற்கைக்காட்சிகளைக்கண்டு நாயகி அனுஷ்கா பிரமிக்கும் காட்சி அருமை. ஷங்கருக்கு  சரியான சவால் தான் இந்த ராஜ்மவுலி

3  பிரபாஸ் , அனுஷ்கா இணைந்து வழங்கும் அந்த வில் அம்பு காட்சி , ரணகளத்துலயும் ஒருன் கிளுகிளுப்பு வகையறா

4  ரம்யா கிருஷ்ணனின்   ராஜ மாதா கேரக்டர் , சத்யராஜின் கட்டப்பா கேரக்டர்களுக்கு தந்த முக்கியத்துவம்

5 போர்க்காட்சிகள் ,  ராட்சச சிலை வீழ்த்தப்படும் காட்சி என படம் நெடுக உழைத்த டெக்னீஷியன் டீம்

Image result for bahubali 2 anushka images


இயக்குநருக்கு சில கேள்வி கள் , லாஜிக் மிஸ்டேக்ஸ்


1  ராஜ விசுவாசியான கட்டப்பா ராஜமாதாவின் கட்டளைப்படி அரசன் பாகுபலியை கொலை செய்வதற்கு ஒத்துக்கொள்வது லாஜிக்கே இல்லை .ராஜாவையே ஒருவன் கொன்று விட்டால் அது எப்படி ராஜ விசுவாசம் ஆகும்?


2 ராஜா மாதா எதிரிகளின் சதி வலையில் வீழ்ந்து பாகுபலியை கொலைசெய்யச்சொல்லும் காட்சி ஜீவனுள்ளதாக இல்லை.

3  அனுஷ்கா வை பெண் கேட்க ராஜமாதா ரம்யா விலை உயர்ந்த சீதனப்பொருட்களை அனுப்பி தூது விடுவது  ஏற்றுக்கொள்ளும்படி இல்லை , ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்பாங்க , ஆனா ரம்யாவுக்கு இது தப்பு என தெரியலையே ஏன்?கிட்டத்தட்ட விலை பேசுவது போல் இருக்கே. ராணியே நேரில் போய் பெண் பார்த்து வந்திருந்தால் கவுரவம்

4 வில்லன்களை மாற்றுத்திறனாளிகளாக காட்டுவதை கதாசிரியர்கள் தவிர்க்க வேண்டும்

5  எதிரியைக்கொல்லத்தான் வாள் தேவை . கூடவே இருக்கும் அரசனைக்கொல்ல சும்மா உணவில் விஷம் வைத்தாலே போதுமே? எதுக்கு இந்த ஆர்ப்பாட்டமான கொலை?

6  பாகுபலி கொலை செய்யப்பட்ட உடனே மக்கள் புரட்சி உடனே எப்படி வெடிக்குது? எப்படி அந்த செய்தி அதற்குள் பரவியது ?


Related image

7  ஹீரோ ஹீரோயினுக்கு ஒரே வில்லில் 4 அம்பு வைத்து எப்படி விடுவது என சொல்லித்தர்றார், அதே காட்சியில் ”ஒரு வில்லில் 2 அம்பு என்பது சாத்தியமானது அல்ல” என ஒரு வசனமும் வருது

8 ஒரே வில்லில் பூட்டப்பட்டு எய்யப்படும் நான்கு அம்புகள் நாலா திசையிலும் பரவி எதிரிகளை குத்துவது எப்படி ?

9 பதவி ஆசையே இல்லாத பாகுபலியிடம் ராஜ மாதா “உனக்கு அரியாசனம் வேண்டுமா? இளவரசி வேண்டுமா? என கேட்பது என்ன விதமான லாஜிக்?

10 ஒரு மன்னர் அந்தஸ்தில் உள்ளவர் அடிமையிடம் ஒரு கொலை ந்செய்ய ஆணை இட்டு விட்டு அதை அவன் சரியா செய்யறானா? இல்லையா? என உளவு பார்க்க அவரே வருவது காமெடி, அதுக்கு அந்த வேலையை அவரே செஞ்சுடலாமே?

11 விநாயகர் வடிவமாக இந்துக்கள் கருதும் யானையின் நெற்றியில் கால் வைத்து ஹீரோ ஏறும் காட்சி வருது , தவிர்த்திருக்கலாம். போஸ்டர்களும் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒட்டப்பட்டிருக்கு . கிட்டத்தட்ட மிதிப்பது போல் தான் , அபசகுனம்


Image result for bahubali 2 anushka images


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

இளவரசி பாத்திமா பாபு தேவியை அரச குடும்பத்தைச்சேர்ந்த அண்ணன்., தம்பி 2,பேரும் விரும்பறாங்க.இதுதான் பாகுபலி2 கதை.



யோவ்.


2 பெரும்பாலான மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று விட்டால் சின்ன சின்ன குறைகள் , பிழைகள் மன்னிக்கப்படும் # உதா - எம் ஜி ஆர் , ஜெ , பாகுபலி 1,2


நச் டயலாக்ஸ்

1 மக்களின் சுக துக்கங்களை மன்னனும், கடவுளும் கண்டுணர வேண்டும், கண் கூட கண்டால் தான் அவர்கள் குறை தீர்க்க முடியும்

ஒரு வில்லில் 2 அம்பு என்பது சாத்தியமானது அல்ல

ஒரு கோழை வீரன் ஆக காலம் அவனுக்கு ஒரு முறையாவது வாய்ப்பளிக்கும்

சூரியன் என்றும் மேற்கில் உதிப்பதில்லை



ஆனால் கிழக்கில் சூரியனை புதைக்கலாம்


ஒரு தீயவனின் சத்தத்தை விட ஒரு நல்லவனின் மவுனம் நாட்டுக்கு தீமை 2


Image result for bahubali 2 anushka images

சி.பி கமெண்ட் -பாகுபலி 2 - கட்டப்பாவும், ராஜமாதாவும் கொலையாளிகள் ஆவதில் நம்பகத்தன்மை இல்லை,முதல் பாகத்தை விட மெகா ஹிட்-விகடன் -45, ரேட்டிங் - 3.5 / 5


Image result for bahubali tamanna images