Showing posts with label பவர் ஸ்டார். Show all posts
Showing posts with label பவர் ஸ்டார். Show all posts

Monday, September 09, 2013

ஆர்யா சூர்யா - சினிமா விமர்சனம்

 

சினிமா ல சேர்ந்து  கானா பாட்டு எழுதனும்னு  ஒரு  கேனம் , சினிமா ல நடிக்கனும்னு ஒரு  லூசு 2 பேரும்  சொந்த  ஊர்ல  இருந்து   கிளம்பி சென்னை வர்றாங்க.எதேச்சையா  2 பேரும்  சந்திச்சுக்கறாங்க .வைரக்கடத்தல்  கும்பல் ஒண்ணு கிட்டே  மாட்டிக்கறாங்க . கடத்தல்  கும்பல் தலைவன்   உலகமகா கேனயன் போல. பல  கோடி மதிப்புள்ள  வைரங்களை முன் பின் அறிமுகம் இல்லா  இந்த  2 பேர்  மூலம் கடத்த பார்க்கறான். இவங்க போலீஸ்ல அவங்களை பிடிச்சுக்கொடுத்துடறாங்க . இடைவேளை 

இன்னொரு டிராக்.புருஷன்  மேல  சந்தேகப்படும் ஒரு லேடி. எப்போ பாரு அவங்க கனவில்  தன்  புருஷன்  யாரோ ஒரு லேடி  கூட  கபடி கபடி விளையாடற மாதிரி  கனவுகண்டு அலர்றவங்க.கனவில்  கண்ட   ஒரு லேடி அவங்க  பங்களாவுக்கு  வேலை கேட்டு வருது.அந்த   லேடியை பங்களா  ஓனர்  பொண்ணுன்னு  நினைச்சு அந்த  2 லூஸ்கள்ல  ஒரு ஹீரோ லவ்வறாரு.


இன்னொரு டிராக் ல  புருஷனை  கொஞ்சம்  கூட மதிக்காத  ஒருலேடி . அவங்களுக்கு ஒரு பொண்ணு . அந்த பொண்ணை  இன்னொரு ஹீரோ லவ்வறாரு .



இந்த  2  ஹீரோவையும்  பழி வாங்க அவங்க 2 பேரும்  லவ் பண்ணும் பொண்ணுங்களை கடத்த அந்த வைரக்கடத்தல்  தலைவன் கேனத்தனமா  திட்டம் போட்டு  பொண்ணுங்களுக்குப்பதிலா பொண்ணோட  அம்மாவை  கடத்திட்டு வந்துடறாங்க. 2 ஹீரோக்களும் போ\ய் அவங்களை  மீட்பது  தான் க்ளைமாக்ஸ்


சி  செண்ட்டர்  ரசிகர்களை குறிவெச்சு ராமநாராயணன் படம் எடுப்பது நமக்கெல்லாம்  தெரிந்ததே.  அதுக்காக   கொஞ்சம்  கூட லாஜிக்கே இல்லாம   இப்படி   சொதப்பக்கூடாது . ஆனாலும்  மக்கள்  சிரிக்கறாங்க . டைம் பாஸ் ஆகுது. மொத்தப்படமே   2 மணி நேரம்  தான்  . 


 பவர் ஸ்டார் தான்  ஹீரோ . இவரிடம்  கை வசம்  உள்ளது ரெண்டே  2 முக பாவனைகள்  தான் போல ,. அதைவெச்சே   முழு படத்தையும் சமாளிக்கறாரு . கண்ணா   லட்டு தின்ன ஆசையா படத்தில்  வரும் டயலாக்கையே  ரிப்பீட்டா பேசி லட்டு ல  இருந்து சுட்டுட்டோமில்ல ? அப்டினு  சமாளிக்கறாரு. புதுசா   காமெடி  ட்ரை பண்ணா தேவலை . இவருக்கு  ஒரு ஓப்பனிங்க் சாங்க் , ஒரு டூயட் உண்டு . வாழ்வுதான் . பாடல் காட்சிகளில், இவர்  மற்ற ஹீரோக்களை  கலாய்த்தே ஸ்டெப் போடுவதால் சிரிக்க முடிகிறது . 


 விஷ்ணுப்ரியன்  இன்னொரு ஹீரோ. இவர் ஏன் படம்  பூரா  தாடியோடதிரியறார்னுதெரியலை . சோக கேரக்டர், தீவிரவாதி  , வாழ்வில் விரக்தி அடைந்தகேரக்டர் என்றால்   தாடி ஓக்கே . காமெடி  மொக்கை படத்துக்கு  எதுக்கு  தாடி கெட்டப்? வந்த வரை  ஓக்கே


கங்கை  அமரன் , சித்ராலட்சுமணன்  2 பேரும்  2  ஹீரோயின்களுக்கு தனித்தனி  அப்பாவா நடிச்சிருக்காங்க. 2 பேர்ல சித்ரா  லட்சுமனன் தேவலை . கங்கை அமரனுக்கு ஜொள்விடும் கேரக்டர் . இதுதான் சாக்குன்னு  ஓவரா வழிஞ்சிருக்கார் 


நளினி , கோவை சரளா  2  பேரும்  ஹீரோயின்களுக்கு அம்மாக்கள் . நளினி செஞ்ச காமெடி அளவுக்குக்கூட கோவை சரளா  காமெடி பண்னலை .அவரோட பாடி லேங்குவேஜ்ல   தான் ஒரு டி வி ஆர்ட்டிஸ்ட் அப்டிங்கற தெனாவெட்டு  தெரியுது. காமெடி ஆர்ட்டிஸ்ட்னு ஆல்ரெடி பேர் எடுத்ததால அட்டும் அப்ளாஸ்  கிடைச்சுடாது . கொஞ்சமாச்சும் காமெடி பண்ணாத்தான்  சிரிப்பு  வரும் . 


 டி ராஜேந்தர்   கலக்கலா ஒரு குத்தாட்டம் போடறார். அவர் வரும் ஒரே ஒரு காட்சியில் ஆரம்பகால  விஜய் படங்களில் போடுவாங்களே “ இந்தப்பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய் “னு அப்டி டைட்டில் போடறாங்க,. செம காமெடி  ஆனா  சும்மா சொல்லக்கூடாது , டி ஆர்  இந்த வயசுலயும்  கொஞ்சம்  கூட கூச்சப்படாம  கவர்ச்சி நடிகை ரெஞ்சுக்கு இறங்கி வந்துசெம ஆட்டம்  போட்டிருக்கார் . எனக்கு என்ன கவலைன்னா  இந்தப்பாட்டு , டான்ஸ்  ஹிட் ஆகி   டி ஆர்  அனுராதா , டிஸ்கோ சாந்தி மாதிரி   ஒருபாட்டுக்கு ஆடிப்போகும் குத்தாட்ட நடிகராகிடக்கூடாதேன்னுதான்  

 வெண்ணிற ஆடை  மூர்த்தி யின்  வழக்கமான சேஷ்டைகளும்  , டபுள்  மீனிங்க் வசனங்களும் உண்டு 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  


1. செப்டம்பர்  13  ரிலீஸ் என  அறிவிக்கப்பட்டு  தியேட்டர்ஸ் எல்லாம் புக் ஆன பின்பும் , மதகஜராஜா  ரிலீஸ் ஆகாததால் அந்தப்படம் புக் பண்ணிய தியேட்டர்களை நைஸாக புக் பண்ணி அவசர அவசரமாக செப்டம்பர் 10 அன்னைக்கே ரிலீஸ் செய்தது.



2.  பவர் ஸ்டார் மார்க்கெட் வேல்யூ  புரிந்து  படம் முழுக்க அவரை சுற்றியே    கதை நகரும்படி பார்த்துக்கொண்டது ( அப்போ கதை   இருக்கா? என யாரும் ஜெர்க் ஆகவேண்டாம் )



3. டி ராஜெந்தரை   ஒரு பாட்டுக்கு ஆட வைத்து , பாட வைத்து    அவரை போஸ்டரில் போட்டு விளம்பரப்படுத்தியது


4. மொக்கைக்கதை , லாஜிக் இல்லாத  திரைக்கதை என்றாலும்   சி சென்ட்டர் ஆடியன்சை சிரிக்க வைக்க  முயற்சி செய்தது



 

இயக்குநரிடம்  சில  கேள்விகள்


1.  எஸ்  வி  சேகரின் 1000 உதை வாங்கியாபூர்வ சிகாமணி , கிரேசி மோகனின்  கிரேசி தீவ்ஸின் பாலவாக்கம்  ஆகிய நாடகங்களீல்  இருந்து   13 டயலாக்குகளை ( மொக்கை ஜோக்ஸ் ) அப்பட்டமா சுட்டு இருக்கீங்களே? அவங்க கேட்க மாட்டாங்களா?   இது போக  எஸ் வி சேகர் நடிச்ச கதாநாயகன் பட வசனங்களும் சுடப்பட்டிருக்கு . 


2.   பவர் ஸ்டார் பாத்ரூம்ல  குளிச்சுட்டு  இருக்கார் .அப்போ  கிராஃபிக்ஸ் பாம்பு  பங்களாவுக்குள்ளே வருது. இவர்தான் பாத்ரூம் கதவை தாழ் போட்டு குளிக்கறாரே? எப்படி உள்ளே வருது? அதே போல்  ஹீரோயின்  அப்போ கரெக்டா பாத்ரூம்க்குள்ளே வருவதும்   அலறுவதும்  ரஜினியின் பாண்டியன்  காலத்து  காமெடி . பல படங்கள் ல இந்த காட்சியை பார்த்தாச்சு . முடியல 


3. லேடீஸை கடத்தறவங்க  சாக்கு மூட்டைல  வெச்சு கடத்திட்டு வருவது எல்லாம்   அந்தக்கால காமெடி . கொஞ்சமாச்சும்  புதுசா சிந்திக்கமாட்டீங்களா?



4. டி ஆர்  சம்பந்தமில்லாம   அவர் பாட்டுக்கு வர்றாரு ஆடிட்டு போறாரு .  அந்த சீனை   கதையோட  லிங்க் பண்ண வேணாமா?   



5.   ஆம்பளைங்க 2 பேரு  வீடு பார்க்க வருவதும்  , அவங்களை பெண் பார்க்க வந்த மாப்ளைங்கன்னு நினைச்சு இவங்கபேசுவதும்  , அந்த உரையாடல்  டபுள்  மீனிங்க்லவருவதும்  இன்னுமெத்தனை படங்கள் ல பார்க்க வேண்டிவரும்?  டயலாக்கை  கூட   புதுசா  யோசிக்க மாட்டீங்களா? காட்சிகளைத்தான் சுட்டுடறீங்க, வசனமுமா?



   மனம் கவர்ந்த வசனங்கள்   (  டிராமாவில்  சுட்ட வசனங்கள் போக மீதி )


1. என்னது? உங்க  3 பேர் பேரும் ராகினி, ரோகினி , வாகினி யா?  எல்லாம் தியேட்டர் பேரா  இருக்கு ? 



கில்மா லேடீஸ் - டிக்கெட் எடுத்தா படம் பார்க்கலாம் 


வீட்ல  ஒரு பழைய படம்  இருக்கு அதை எல்லாம் நான் பார்க்கறதே  இல்லை , ஒன்லி  புதுப்படம் தான் , ஹிஹி 



 2.  என்னது? போஸ்டர்ல மலையாள பிட் படம் ஒட்டிட்டு  உள்ளே பாதாள பைரவி  ஓட்டிட்டு இருக்கற மாதிரி சம்பந்தம் இல்லாம பேசிட்டுஇருக்கீங்க ? 



3. ஒத்தைப்பொண்ணுன்னு தானே நம்ம பொண்ணுமேல நீ உசுரா   இருகே? நானும்  உனக்கு  ஒத்தப்புருஷன்  தானே ?  என் மேல மட்டும் ஏன்  காண்டா   இருக்கே?


4.  உங்க பேருசொக்க நாதன் , அதை  சுருக்கி சொக்கு சொக்கு-ன்னு கூப்பிடறேன் , தப்பா? எனக்கு சுருக்குனாத்தான் பிடிக்கும் 

 உன் பேரு  சந்திரா , அதுக்காக நான் உன்னை சந்து சந்துன்னுகூப்பிடமுடியுமா?



5.  வேலைக்காரி  குளிக்கும்போது எதுக்கு எட்டிப்பார்த்தீங்க? 


 அவ சுத்த பத்தமா குளிக்கறாளா?ன்னு செக் பண்ணேன்


  ( பாக்யா  வார இதழில்  1999 பொங்கல் மலரில் வந்த அரதப்பழசான  ஜோக்  இது -எழுதியது சி பி செந்தில்குமார் சென்னிமலை )


6.   அங்கே 2 பேர்  இருக்காங்க , யாரு மாப்ளை?


அட சூப்பர மாப்ளை, சூப்பர் மாப்ளை



7. நல்ல வேளை நம்ம பொண்ணுக்கு சமைக்கத்தெரியாது 


 உங்க குடும்பத்துக்கேஅது தெரியாதே, சமைஞ்சீங்க, அதோடசரி 



8.  நான் சொன்னதுஎதையும்   மறக்கலையே?

 நீ  என்ன  திருக்குறள் பாடமா நடத்துனே? மறக்க?


9. பொம்பளைங்க புருஷனைத்தவிர  எல்லாத்தையும்  பேரம் பேசித்தான் வாங்குவாங்க,  ஆம்பளைங்க  ஹார்லிக்ஸ் விளம்பரம் மாதிரி அப்படியே வாங்குவாங்க


10 . எல்லாருக்கும்  வயசாச்சுன்னா  முட்டி பிராப்ளம் , என் புருஷனுக்கு குட்டி பிராப்ளம் . குட்டிங்க பின்னாலயே சுத்துவாரு 



11.  என்  புருஷன்  போற  ரூட்டை  நீ கண்காணிக்கனும் . அவர் எங்கே போறாரு ? என்ன செய்ய்றார்? என்னசெய்யமுடியலை ? இதை  எல்லாம் நீ வேவு பார்க்கனும் 


 கிட்டத்தட்ட   விளக்கு பிடிக்கும் வேலை ?


 அதென்ன கிட்டத்தட்ட? அதே தான் 



12  ரொம்ப ஸ்மூத்தா   ட்ரைவ் பண்றீங்களே? 

 நான் ஆள்  தான் ரப் டைப் ஆனா  செம சாஃப்ட் 



13,.  என்ன தான் கோழிக்கு வெரைட்டியா  தீனி போட்டாலும்  அது  முட்டை தான் போடும் 



14.  பாம்  வெச்சதெல்லாம்  அந்தக்காலம்

 அதுக்காக ஏவுகணையா விட  முடியும் ? 




15.  ஆட்டோ சார்ஜ் எவ்ளவு?

 டூ ஃபிஃப்டி சார் 


 யூ மீன்  100?

 அய்யோ 250 


16. பொண்ணை தூக்கிட்டுவரச்சொன்னா   அம்மாவைத்தூக்கிட்டு வந்திருக்கீங்க? 


சாரி பாஸ் , இருட்டுல   2 பேருக்கும்  வித்தியாசம்  தெரியல 




ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  36



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  சுமார்

ரேட்டிங் =   2.5 / 5


சி பி கமெண்ட் -   சி சென்ட்டரில்   ஓடிடும் . போட்ட முதலீட்டை 2 மடங்கு லாபத்தோடஎடுத்துடுவாங்க.  ஆனா நாம இதை டிவி ல பார்க்கற  அளவுகூட ஒர்த் இல்லை




Tuesday, September 03, 2013

சும்மா நச்சுன்னு இருக்கு - சினிமா விமர்சனம்

பெரிய தொழில் அதிபரோட  பொண்ணு ஒரு பொறம்போக்கை லவ்வுது. அப்பாவின் சொத்துக்கள் வேண்டாம்னு உதறிட்டு அவன்  வீட்டுக்கு வருது. அந்த தத்தி “எனக்கு உன் மேல ரியல் லவ் எல்லாம் இல்லை , சொத்துக்குத்தான் ஆசைப்பட்டேன்னு உளறிடறான்.அவ  உடனே ஜெர்க் ஆகி நிக்கறா. அவன்   கூட  இருக்கும் ரவுடிங்க வேஸ்ட்டா போகக்கூடாது ,டேஸ்ட் பார்த்துடலாம்னு சொல்றாங்க . அவ ஓடறா , அவங்க  துரத்தறாங்க . இப்போ  ஹீரோ எண்ட்ரி 


ஃபைட்ல  அந்தப்பொண்ணு தலைல அடி பட்டு கோமா ஸ்டேஜ்க்கு போய்டறா.  ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றாங்க .நர்ஸ்  ஹீரோவை அந்த பொண்ணோட  புருஷனா நினைச்சு ஃபார்ம்ல சைன் வாங்கறா.பொண்ணோட அப்பா  வர்றாரு . அவர் கிட்டேயும் அந்த பொய்யை ஹீரோ மெயிண்ட்டெயின் பண்றாரு .

அந்தப்பொண்ணுக்கு ஒரு தங்கச்சி .அதை  ஹீரோ லவ் பண்றாரு . அக்கா   புருஷன்கற நினைப்பு  எதுவும் இல்லாம அந்த கேனமும் ல்வ்வுக்கு ஓக்கே சொல்லுது 


ஊரார்க்கு அக்காவை  லவ்வற ஹீரோ  தனி டிராக்ல தங்கச்சியை லவ்விட்டு  இருக்கும்போது அக்காவுக்கு நினைவு  திரும்புது . என்ன ஆகுது? என்பது தான் மிச்ச மீதி மொக்கை கதை 

விஜயை கலாய்க்கும் காட்சி


நல்ல காமெடி ஸ்கோப் உள்ள கதையை அநியாயமா மொக்கை படம் ஆக்குவது எப்படி?ன்னு ஏ வெங்கடேஷ் கிட்டே எல்லாரும் கத்துக்கனும் .


ஹீரோ சட்டம்  ஒரு இருட்டறை ரீமேக்ல ஹீரோவா வந்த தமன் . மொக்கையான திரைக்கதை என்றாலும் இவரால்  முடிஞ்ச அளவுக்கு சமாளிச்சி நடிக்கறார். 2   ஹீரோயின்   இருந்தும்  இவருக்கு  ஒண்ணுல  கூட கெமிஸ்ட்ரியோ , பிசிக்ஸோ ஒர்க் அவுட் ஆகலை 



 நிஜ  ஹீரோ பவர் ஸ்டார் தான் . காமெடி  வில்லனா  வர்றார், இவர் விஜயை கலாய்த்து நடனம் ஆடுவது , ரஜினியை நக்கல் அடித்து பஞ்ச் டயலாக் பேசுவது எல்லாம் ஆரவாரம் . தியேட்டர் அல்லோலகல்லோலப்படுகிறது .ஆனால் பவர் ஸ்டார்  கொஞ்சம் நடிக்கவும் கத்துக்கனும் , சீக்கிரம் போர் அடிச்சுடும் 


ஹீரோயின்ஸ்   2 பேரு , அர்ச்சனா , விபா அப்டின்னு . 2ம்  தேறாது . 50 மார்க்  போடலாம். லோ பட்ஜெட் படம் இல்லையா? அதான்  சுமாரா இருந்தா போதும்னு  நினைச்சிருப்பாங்க போல 


ஈரோடு மகேஷ்  படத்துக்கு வசனம் . சந்தானம் மாதிரி  படம் பூரா   வர்றார் ஆனா  ஒரு சீனில்  கூட அவரால் ஆடியன்ஸ் கிட்டே கை தட்டல் வாங்க  முடியல . ரெண்டரை மணி  நேரம் ஓடும் படத்துல  தனக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பை  ஈரோடு  மகேஷ்  தவற விஒட்டுட்டார் . ஒரு வசனகர்த்தாவா வும் சரி , ஒரு காமெடியனாவும் சரி  வேஸ்ட்  பண்ணிட்டார்


இயக்குநர்  ஏ வெங்கடேஷ்  ஹீரோயின்க்கு அப்பாவா வரும் கேரக்டர்  ரோல் . ஓக்கே ரகம் . தம்பி   ராமைய்யா  , அழகர் சாமியின்  குதிரை நாயகன் அப்புக்குட்டி  , வெண்ணிற ஆடை மூர்த்தி என வீணடிக்கப்பட்ட கலைஞர்கள் பட்டியல்  நீளம் . 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  


1.,  ஸ்டார்  வேல்யூவுக்காக   பவர் ஸ்டாரை  புக் பண்ணியது   , கதைக்கு சம்பந்தமே இல்லைன்னாலும்  பவருக்கு பவர் ஃபுல் போர்ஷன் ஒதுக்கினது


2.  லோ பட்ஜெட் படம்னாலும்  , 3 ஹீரோயின்கள்  இருந்தும்  லோ லெவல்க்கு இறங்காம   3 பெரையும் கண்ணியமா  காட்டியது


3. பாடல்கள்  சொதப்பலா  இல்லாம சி செண்ட்டர் ஆடியன்சை கவரும் வகையில் படம் ஆக்கியது , பவர் ஸ்டாருக்கு  2 பாட்டு தந்தது


4. நினைத்ததை முடிப்பவன் நான் தான்  துணிச்சலை  வளர்த்தவன் நான் தான் பாட்டுக்கு பவரின் ஆட்டம் , விஜய்யை கலாய்த்து நடன ஸ்டெப்ஸ்  விஜய்  ரசிகர்களையே கவர்வது





இயக்குநரிடம்  சில  கேள்விகள்:


1.  நர்ஸ்   எந்த வித ஆதாரமும் இல்லாம எடுத்த எடுப்புல ஹீரோவை  அந்த பொண்ணோட  புருசன்னு எப்படி  நினைக்குது? பேஷண்ட்டுக்கு  நீங்க என்ன முறை வேணும்? அப்டினுதானே  வழக்கமா கேட்பாங்க ?


2. ஹீரோ , தம்பி ராமையா , ஈரோடு மகேஷ் 3 பேரும்   பேண்ட் , டி சர்ட் போட்டு  இன் பண்ணி தான் எப்பவும் நைட் டைம்ல தூங்கறாங்க , அது ஏன் ?  ஒரு சீனில்  நடு  இரவில்  எதோ சத்தம் கேட்டு 3 பேரும் எழுந்து ஓடி வர்றாங்க . அவ்ளோவ்  ஃபிரெஷா இண்ட்டர்வ்யூக்குப்போறவங்க மாதிரி  இருக்காங்க


3. ஹீரோயினுக்கு என்ன விதமான கோமான்னு டாக்டர் கூட கடைசி வரை சொல்லவே இல்லை . ஏதோ பெக்கூலியர் டைப் ஆஃப் கோமான்னு ஒரு டாக்டரே பொத்தாம்பொதுவா சொல்வாரா?




4. ஹீரோவுக்கு   25 லட்சம்   ரூபா தேவைப்படுது . அதை பல காட்சிகளில் மகேஷ் சொல்றார். ஆனா  மாமனார் வெங்கடேஷ் எவ்வளவு பணம் வேணும்னு  கேட்கும்போது 3 லட்சம் போதும்னு ஹீரோ சொல்றாரே, எப்படி?



5, ஹீரோ  தான்  ஒரு அநாதைன்னு தேவை இல்லாம ஏன் பொய் சொல்லி மாட்டிக்கனும் ? அம்மா  இருக்காங்க , ஆனா அவங்களூக்கு எங்க லவ் மேட்டர்  தெரியாதுன்னு  சொல்லி ஈசியா சமாளிச்சிருக்கலாமே?


6. கட்டிலுக்கு அடியே ஒரு டெட் பாடி  இருக்கு , அப்போ அங்கே வரும்  ஹீரோயின் ஏதோ துணியை  கீழே போட்டுடறா. அதை எடுக்க   சும்மா  குனிஞ்சா போதாதா?” முட்டி போட்டு உக்காரனுமா? தரையை சாணியால மெழுகுறவங்க தான் அப்படி உக்காருவாங்க


7. ஒரு சீன்ல  ரோட்டோரமா   ஹீரோயின்  கார் அருகில் நிக்கறா. கார் பிரேக் டவுன் ஆகிடுச்சுன்னு ஹீரோ கிட்டே சொல்றா. பிரேக்கே இல்லைன்ன எப்படி காரை  ஓரமா நிறுத்த முடியும் ? மரத்துல இடிச்சுத்தானே  நிறுத்த முடியும் ? அதுக்குப்பேசாம கார் பஞ்சர்னு சொல்லி இருக்கலாம்


8, ஹீரோ - ஹீரோயின் லவ் மலர்ந்த   டுபாக்கூர் கதைக்கு ஒரு புது சிச்சிவேஷன்  கூடவா  யோசிக்க முடியல? பாட்ஷா  ரஜினி - நக்மா கதையை அப்டியேவா சுடுவாங்க? கற்பனை வறட்சி?



9. ஹீரோ    தன் மச்சினி கிட்டே எந்த உணமையும் சொல்ல்லை. இதெல்லாம்  டிராமான்னு சொல்லலை , மேரேஜ்  பண்ணிக்கவே இல்லைன்னும் சொல்லலை, ஆனாலும்  ஹீரோவோட லவ்வை ஏத்துக்கறாரே எப்படி?





மனம் கவர்ந்த வசனங்கள்


1. LIFE ல FRAUD பண்ணுனா எதிர்காலம் BROAD டா இருக்கும்



2.  பவர் -நான்  எப்போ வருவேன் , எப்படி வருவேன்னு எனக்கே   தெரியாது.


3.  இந்த கதைல என்னவோ  இடிக்குதே ?

  உன்   தொப்பை தான் இடிக்குது



4. பவர் - நான் தாண்டா உனக்கு வில்லன்

 உன் பேர் என்ன?


 வில்லன் பேர் எல்லாம் சொல்ல மாட்டாண்டா



5.  அக்னி நட்சத்திரம்  கதை உங்க கதையை உல்டா பண்ணி  இருக்கு, நீங்க ஏன் மணிரத்னம் மேல கேஸ் போடக்கூடாது ?

 பவர் - நான் ஏன் அவர் வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போடனும்?



6.  யூ ஆர் லுக்கிங்க் ஸோ ஸ்மார்ட்னு அவ சொன்னாளே?

 அவ ஆஸ்திரேலியாக்காரி , கங்காருன்னா ரொம்ப பிடிக்கும் , நீ பார்க்க கங்காரு மாதிரியே இருக்கியா அதான்


7.  இங்கே பாரு , நீ என்னை  ரிஜக்ட் பண்ணிட்டே , அதுக்குப்பின் என்னை
 திட்டும்  உரிமை உனக்கு கிடையாது


8. ஐ லவ்  யூ


 ஒரு நிமிஷம்  இரு .. தம்பி  இங்கே வா , நான் யாரு?

 அக்கா


 இவர் யாரு?

 பெரியப்பா

 பார்த்தியா , ஒரு பெரியப்பா  எப்படி அக்காவை லவ் பண்ண  முடியும் ?


9.   செஸ்  போர்டு முன்

 பாஸ்   , மூவ் பண்ணுங்க

 ஐயோ செஸ் போர்டை மூவ் பண்ணச்சொல்லலை . சிப்பாய் , ராணி ஏதாவது  மூவ் பண்ணுங்க


10.  வெ ஆ மூர்த்தி = இதென்ன  மசாஜ் கிளப்னு போர்டு போட்டிருக்கு , பிசையற இடம் ஆச்செ>?  இங்கே எதுக்கு வரச்சொன்னானுவ?



11. என்னை விட்டு எப்பவும்  ஒரு அடி தள்ளியே நில்லுன்னு எப்பவும்  சொல்வேன் , இப்போ சொல்றேன், என்னை விட்டு ஒரு நிமிஷம்  கூட தள்ளி நிக்கக்கூடாது , ஐ லவ் யூ




ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-35



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =   2.25   / 5


சி பி கமெண்ட் -சும்மா நச்சுன்னு இருக்கு - படு மொக்கையா இருக்கு - விகடன் மார்க் -35 ரேட்டிங் 2.25 /5 பவர் ஸ்டார் ஓக்கே.ஈரோடு மகேஷ் வசனம் சொதப்பல், திரைக்கதை   மிக பலவீனம் , பவர் ஸ்டார் ரசிகர்கள் மட்டும் டி வி ல பார்க்கலாம்


Tuesday, March 12, 2013

தமிழ் சினிமாவோட தவிர்க்க முடியாத சக்தி பவர் ஸ்டார் பேட்டி @ ஆனந்த விகடன்

"அந்த ஊறுகாயே நான்தான்!''

க. ராஜீவ் காந்தி, படம்: ஜெ.தான்யராஜு
பவரைச் சந்தித்து இரண்டு மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் எத்தனை மாற்றங்கள்? இப்போது எல்லாம் கோடம்பாக்கத் தில் படத்துக்குப் பூஜை போடும்போதே பவர் ஸ்டாருக்கு போன் போடுகிறார்கள். (ரஜினியைக்கூட சூப்பர் ஸ்டார் என்று பட்டத்தோடு  எழுதுவது இல்லை. ஆனால், சீனிவாசனை பவர் ஸ்டார் போடாமல் எழுத முடியவில்லை. என்ன கொடுமை பவர்?)



 அந்த வகையில் பவரைத் தன் 'அழகன் அழகி’ பட புரமோஷனுக்காக ஆடவைத்திருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி. ஷூட்டிங் ஸ்பாட்டில் படுவேகமாக வந்த பவர் (பிஸியா இருக்காராமாம்) முதல் வேலையாக அருகில் இருக்கும் ஃபேன் வேகத்தைக் குறைக்கச் சொல்கிறார் (விக் பறந்துரும்ல?) டான்ஸ் மாஸ்டர் காதல் கந்தாஸ் டான்ஸ் மூவ்மென்ட்ஸை விளக்குகிறார். ''



ஓ... மை கேர்ள் நெவர் மிஸ் யூ... ஓ... ஓ...'' இதுதான் பாடல் வரி. கையில் ரோஜாப்பூ வைத்துக்கொண்டு ஏக்கத்தோடு கையை மேலே தூக்கிப் பாட வேண்டும். ரிகர்சலின்போது சரியாகச் செய்து குட் வாங்கும் பவர், கேமரா ஸ்டார்ட் ஆனதும் சொதப்புகிறார்.



அவர் கைகளை மேலே தூக்க, ஆவிக்குரிய செய்திகள் போன்ற கூட்டங்களில் ஆசீர்வாதம் வழங்குவதுபோல் ஆகிவிடுகிறது மூவ்மென்ட். கட்... திரும்ப பவருக்கு சொல்லித் தருகிறார்கள். அடுத்த ஷாட்டில் ஓ.கே. ஆகிறது. சும்மாவா... ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ஐந்து லட்சமாச்சே? மூவ்மென்ட் ஆடி முடித்து (!) டயர்டாகி வந்த பவரிடம் பேசினோம். 



 ''தமிழ் சினிமாவோட தவிர்க்க முடியாத சக்தி ஆகிட்டீங்களே?''



(வாயெல்லாம் பல் தெரிகிறது) ''அப்படிலாம் இல்லை சார். இப்ப ஆரம்பக் கட்டத்துலதான் இருக்கேன். இன்னும் நிறைய வளரணும். இப்ப உள்ள டிரெண்டுக்கு ஏத்த மாதிரி நானும் சந்தானமும் நல்லா காமெடி பண்றோம். அதனால வண்டி ஓடிக்கிட்டு இருக்கு!''



''ஒரு கோடி சம்பளம் கேட்கிறீங்களாமே?''



''நான் கேட்கிறேன். ஆனா, யாரும் கொடுக்க மாட்டேங்குறாங்களே? வாய்ப்பு இருக்கும்போதே பயன்படுத்திக்கணும் சார். இப்போ நார்மலான சம்பளம்தான் வாங்குறேன்!''



'' 'லத்திகா’ படம் ரிலீஸ் ஆனப்ப 'எனக்கு அஞ்சு லட்சம் ரசிகர்கள் இருக்காங்க’னு சொன்னீங்க. இப்போ கூடியிருக்குமே?''



''ரசிகர்கள் எண்ணிக்கையில ஒரு கோடியை எப்பவோ தொட்டுட்டேன் சார். மன்றங்கள் மூலமா கணக்கெடுக்கச் சொல்லியிருக்கேன். சீக்கிரமாவே அறிவிக்கிறேன். எல்லாத்துக்கும் காரணம், என்னோட ரசிகர் மன்ற நிர்வாகிகள்தான். நான் சிரிச்சா அவங்க சிரிக்கறாங்க... நான் அழுதா அவங்க அழுறாங்க. அவங்கதான் எனக்கு எல்லாமே!''



''ஒரு கோடி ரசிகர்களை வெச்சுக்கிட்டு ஒரு பாட்டுக்கெல்லாம் ஆடலாமா?''



''சாப்பாட்டுல பல வகை இருந்தாலும் ஊறுகாய் இருந்தாத்தானே ருசி. அந்த ஊறுகாய் நான்தான். தமிழ் சினிமால சந்திரபாபுவுக்குப் பிறகு ஒரு பாட்டுக்கு ஆடற ஆண் நான் மட்டும்தான். இது பெருமைதானே? யார் கூப்பிட்டாலும், நான் ஆட ரெடி!''



''இப்ப 'லத்திகா’ படத்தை ரீ ரிலீஸ் பண்ணா நல்லா ஓடுமே?''


(சீரியஸாக யோசிக்கிறார்) ''நல்ல ஐடியாவா இருக்கே? என் ரசிகர் மன்ற நிர்வாகிகள்கிட்ட பேசுறேன். அவங்க ஓ.கே. சொன்னா, தமிழ்நாட்டுல ஒரு திருவிழா நடத்திரலாம்!''



''சரி... நீங்க சி.எம். ஆனா முதல் உத்தரவு என்ன போடுவீங்க?''



(பதறுகிறார் ஐயைய்யோ... இப்பதான் ஒரு ரவுண்டு ஜெயிலுக்குப் போய்ட்டு வந்திருக்கேன். இன்னொரு ரவுண்டு உள்ளே போகணும்னு ஆசைப்படறீங்களா? வேணாம் சார்... என்னை விட்ருங்க ப்ளீஸ்!''



நன்றி - விகடன்

Tuesday, January 15, 2013

பவர் ஸ்டார் VS சந்தானம் லடாய்? - நடந்தது என்ன?

klta-movie-stills-032.jpg (700×468)பவர் ஸ்டாருக்கு கிடைக்கும் கிளாப்சால் சந்தானம் கடுப்பாவதாக தகவல் , இனி அவருடன் நடிக்க மாட்டாராம் # பொறாமை.எதிர்காலத்துல காமெடில அவர் கலக்கிட்டா இவருக்கு டேஞ்சர் தானே?பவர் ஸ்டார் தன் பொறுமை , சகிப்புத்தன்மையால் நீயா? நானா ? கோபினாத் , சந்தானம் இருவர் தொடுத்த பூமாரங்கை திருப்பி விட்டு பூமாலையாக்கிட்டார்.சந்தானம் விஜய் டி வி யில் பல வருடம் கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கார். காமெடி ஸ்கிரிப்ட் சொந்தமா எழுதுவார்.அதனால எந்த நாலெட்ஜும் இல்லாம பவர் ஸ்டார் திடீர்னு அமோக வரவேற்பு பெற தானும் ஒரு காரணம் ஆகிட்டமேன்னு நினைச்சிருக்கலாம்



Thursday, January 03, 2013

ஷங்கரின் ஐ பட காமெடி டிராக்கில் நான் - பவர் ஸ்டார் பட்டாசு பேட்டி

http://tamil.oneindia.in/img/2012/06/01-powerstar-srini-300.jpg 
"கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நான் அண்ணேன்டா!"

க.ராஜீவ்காந்தி
படங்கள் : ஜெ.தான்யராஜு
ப்பாடா... உலகம் அழியலையே!’ எனப் பெருமூச்சு விடுபவர்களுக்கு... ''அப்படி எல்லாம் உங்களை ரிலாக்ஸ் ஆக விட மாட்டேன்ல!'' என்று துள்ளித் தொடை தட்டி வருகிறார் உங்கள் 'பவர் ஸ்டார்’ கம் அக்குபஞ்சர் டாக்டர் சீனிவாசன். ஜெயலலிதா, ரஜினி, கமல், ஷங்கர், சிம்பு, சந்தானம் என்று நான் கேட்ட கேள்விகளும் சரி, அதற்கு பவர் ஸ்டார் அளித்த பதில்களும் சரி... செம சீரியஸ்தான். ஆனால், அதைப் பேட்டியாகப் படிக்கும்போது, 'இது ஜாலி பேட்டிதானே’ என்று எழும் எண்ணத்தைத் தவிர்க்க முடிகிறதா... பாருங்கள்


http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/04/Anandha-Thollai-21-10-2010-0000.jpg



காலர் டியூனா 'அம்மா என்றழைக்காத’ பாட்டு வெச்சிருக்கீங்களே... வழக்குகள்ல இருந்து தப்பிக்கத்தானே?'' 


'எனக்கு அம்மான்னா ரொம்பப் பிடிக்கும். என் சொந்த அம்மா மட்டும் இல்ல... 'அம்மா’வும்தான். அவங்களுக்காகத்தான் இந்தப் பாட்டு வெச்சிருக்கேன். இன்னொண்ணு... தாயில்லாமல் நானில்லை!''



''ஆக்ச்சுவலா உங்க வயசு என்ன?''



''என் அருமைத் தம்பி சிம்புவைவிட 10 வயசு... கம்மி!''


''சார், சிம்பு கோச்சுக்கப் போறாரு?''



''அட... நீங்க வேற! என்னைப் பார்த்தாலே அவர் சிரிச்சுடுறாரு! 'எத்தனையோ பேரைச் சிரிக்கவெச்சிருக்கேன். என்னையே சிரிக்கவெச்சது நீங்கதான்’னு என்கிட்டயே சொல்லிஇருக்காப்ல. நம்ம மேல அவருக்கு ரொம்ப மரியாதை!''



''ஸோலோ ஹீரோவா பட்டையக் கிளப்பிட்டு இருந்தீங்க. இப்ப ஏன் மூணு ஹீரோ சப்ஜெக்ட்ல நடிச்சு உங்க பேரைக் கெடுத்துக்குறீங்க?''



''என்ன தம்பி இப்படிக் கேட்டுட்டீங்க... சந்தானம் தம்பிகூட நடிக்கிறதெல்லாம் எவ்ளோ பெரிய வாய்ப்பு. இருந்தாலும், உங்களை மாதிரி தீவிரமான ரசிகர்களுக்காக(!) சோலோவாகவும் நடிப்பேன். அப்பப்போ காம்பினேஷன்லயும் நடிப்பேன்!''



''சந்தானம் ஷூட்டிங் ஸ்பாட்ல உங்களைக் கண்டபடி கலாய்ச்சுட்டே இருந்தாராமே?''



''சந்தானம்கூட எனக்கு கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லா வந்திருக்கு. எனக்கு ஒரு தம்பி இல்லையேங்கிற ஏக்கத்தைப் பூர்த்தி செஞ்சுட்டாரு சந்தானம் தம்பி. அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா, அந்தத் தம்பியே எனக்குத் தம்பியாப் பொறக்கணும்!''



''நடிக்கிறதுக்கு ஹோம்வொர்க் பண்ணுவாங்களே... நீங்க எந்தப் படத்தைப் பார்த்து உற்சாகப்படுத்திக்குவீங்க?''


'' 'பாட்ஷா’தான். அந்தப் படத்தை 30 தடவை பார்த்துட்டுதான் நடிக்கணும்கிற வெறி எனக்குள்ள வந்துச்சு!''


''உங்க ரசிகர்கள் பற்றி..?''


''என்னை நம்பி இருக்கிற கோடிக்கணக்கான ரசிகர்கள்பத்தி நினைச்சாலே, எனக்குக் கண்ணீர் வந்துடும். 'உயிரை விடு’னு சொன்னா, விடுற அளவுக்கு எனக்கு ரசிகர்கள் இருக்காங்க. இவங்கள்லாம் எனக்கு எப்படிக் கிடைச்சாங்கன்னு இப்ப வரை தெரியலை. எல்லாமே பாபா வோட அருள்!''



'' 'ஐ’ படத்துல ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கிற விக்ரமுக்கு நீங்கதான் கோச்சாமே... உண்மையா?''



''ஷ்...ஷ்ஷ்... அப்படிலாம் இல்லை. இந்தப் படத்துலயும் சந்தானம்தான் எனக்கு பார்ட்னர். படம் ஃபுல்லா வருவோம். காமெடி பண்ணுவோம். கதையை வெளியே சொல்லக் கூடாதுனு ஷங்கர் சார் கண்டிச்சுச் சொல்லியிருக்காரு. அதனால கதை வேண்டாம்!''



''உங்க பாடிகார்டு எத்தனை பேர்? அவங்களுக்கு எவ்ளோ சம்பளம் தர்றீங்க?''


''எல்லாருமே பிரியப்பட்டு, 'அண்ணன்’கிற அன்புக்குக் கட்டுப்பட்டு இருக்காங்க. யாரும் பணத்துக்கு ஆசைப்பட்டு இல்லை.''



''2013-ல தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பரிசு கொடுக்கப்போறீங்க?''  



''நான் நடிச்ச நிறையப் படங்கள் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு. ஆனா, சந்தானம் தம்பி கேட்டுக் கிட்டதால நிறுத்திவெச்சிருக்கேன். சீக்கிரமே 'மன்னவன்’, 'தேசிய நெடுஞ்சாலை’, 'சீனு எம்.ஏ.பி.எல்’னு வரிசையா படங்கள் வெளிவரும்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbmzmXqjqHN4NBDi1IsW3HRA_7Elk4G50tADDzP0QtnlpEkTPm3BdHti9HTYv0T4GzrS3YynWj5YJ8ZyA5XHPaAcB16eWiiW1SEHYDBVKGK5qUtf44wT01lva1QNc3yc8h0W1peU9d9Q4/s1600/Meenakshi-srinivasan-Hot-In-Lathika-Movie-Stills.jpg


''விக் இல்லாமலேயே அழகாத்தானே இருக்கீங்க... அப்புறம் எதுக்கு டோப்பா எல்லாம்?''



''ஹலோ தம்பி... இது நேச்சுரல் முடி. நம்புங்க! நான் சில படங்களுக்காக, அந்த கேரக்டர் கேட்டுக் கிட்டதால மொட்டை அடிச்சதைப் பார்த்து எனக்கு சொட்டைத் தலைனு நினைச்சுட்டாங்க. ஆனா, இதுதான் ரியல்!''



''நீங்க ரஜினியை ஃபாலோ பண்றீங்கன்னு பார்த்தா, திடீர்னு 'விஸ்வரூபம்’ கமல் மாதிரி ஸ்டெப்ஸ் போடுறீங்களே?''


''உலக நாயகனோட யாரும் போட்டி போட முடியாது. அவர் வேற பாணி. இது பவர் பாணி!''



''நீங்க நடிக்கிற படத்துக்குனு பஞ்ச் டயலாக் யோசிச்சு வெச்சிருப்பீங்களே... அதைக் கொஞ்சம் சொல்லுங்க?''


''ம்ம்ம்... சூப்பர் ஸ்டாருக்குப் போட்டின்னா... அது பவர் ஸ்டார்தான்!''



''ஓ... அப்போ ரஜினி மட்டும்தான் உங்களுக்குப் போட்டியா இங்கே?''


''ஆங்... ஆமாதானே... இல்லையா? அவர்கூட போட்டி இருக்கு. ஆனா, பொறாமை கிடையாது. இதை அவரோட தீவிர ரசிகனா சொல்றேன்!''


''நீங்க நல்லவரா... கெட்டவரா?''


''அது எனக்கே தெரியலையே!'' 


நன்றி - விகடன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqqGnrsG6K2LpReTmUDWKNu7Y5pgD24S81uNtZ6FlsnNP0HC34K4mgVsd0U4ASM3NAY1_XMbYU7d2TpRdIfqDOAyQkqUgaxJbO_nJH4eTsdNmyX1EHlwZEUr5X1DiBBWctpC2R1vCwBZM/s1600/power.jpg

Tuesday, May 29, 2012

விஜய் டி வி - கோபிநாத் VS பவர் ஸ்டார் - எப்பொழுதும் உன் அலப்பறைகள்



விஜய் டி வி தமிழ் சேனல்களில்  பெரிய புரட்சியை விளைவித்ததை யாரும் மறுக்க முடியாது.. எல்லா வீடுகளிலும் சன் டி வி யின் ஆதிக்கம் நிறைந்த போது தனது கிரியேட்டிவிட்டியை கூர் தீட்டி பல வித்தியாசமான படைப்புகளை முன் வைத்தது. இன்று முன்னணி சேனல்கள்  விஜய் டி வி பார்த்து காப்பி அடிக்கின்றன என்றால் மிகை ஆகாது..


விஜய் டி வியில் முதன் முதலாய் வந்த கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் உல்டா தான் சன் டி வி யின் அசத்தப்போவது யாரு?அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ராஜ் மோகன் அவர்களுக்கு அதிக சம்பள ஆசை காட்டி சன் டி வி அந்த குரூப்பை இழுத்துக்கொண்டது.. கலைஞர் டி வியில் எல்லாமே சிரிப்புத்தான்.. என பட்டியல் நீளும்..


நடன நிகழ்ச்சி, பாட்டுப்போட்டி, டாக் ஷோ என சொல்லிக்கிட்டே போலாம்.. அப்படிப்பட்ட விஜய் டி வியில் ஹிட் அடித்து டி ஆர் பி ரேட்டிங்க்கில் எகிறிய புரோகிராம் தான் நீயா? நானா? இந்த நிகழ்ச்சில ஒரு தலைப்பு கொடுத்துடுவாங்க.. 2 குரூப் பிரிஞ்சு எதிர் எதிரே அமர்ந்து அவங்கவங்க கருத்தை சொல்வாங்க.. இது கிட்டத்தட்ட  குழு பட்டிமன்றம் போல்..

நாட்டில் நிகழும் கரண்ட் டாபிக்கை வைத்து அலசுவதால் வாரா வாரம் ஞாயிறு இரவு அன்று பல வி ஐ பிகள் உட்பட மேல் தட்டு மக்கள் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் ஆகிட்டாங்க.. ஆனா சி செண்ட்டர் ரசிகர்கள் ரசிக்க முடியாதபடி ஆங்கிலக்கலப்புகள், ஒரு அதி மேதாவித்தனம் அந்த நிகழ்ச்சில இரண்டற கலந்திருக்கும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDrzj-0OzN8CE-D5vum_sHzI9fdl9A4dM7r5k_F5CcWL9vu2lksn0O2HxtOUeuvKUq4vLMx2-wTbyyR3BETR21GmfIFHpTihLUZ_O1ljMtGcpZZm-iCYYS_WT-pnsc0EKSiFd4AgXdNMe-/s400/7-neeya-naana-gopinath-pics-images-photos-stills.jpg

கோபிநாத்- இவரை எனக்கு ஆரம்பத்தில் மிகவும் பிடிக்கும். இவர் பர்சனாலிட்டி, டிரஸ்சிங்க் சென்ஸ்,பேசுபவர்களை மடக்கும் விதம் எல்லாம் அபாரம்.எல்லா திறமைசாலிகளுக்கும் ஒரு மைனஸ் இருக்கும்.. கோபிநாத்திடம் உள்ள மைனஸ் அவரது தெனாவெட்டு, யாரையும் குறிப்பாக அவரை விட எளியோரை, படிப்பறிவு இல்லாதவரை  ரொம்ப எகத்தாளமாக பார்க்கும் மனோ பாவம் கொண்டவர்..

27.5.2012 ஞாயிறு அன்று பவர்ஸ்டாரிடம் அவர் நடந்து கொண்ட விதம் மிக மட்டமானது. ஊருக்கு இளைச்சவர்னா என்ன வேணாலும் பேசலாமா? இந்த இடத்தில் கலாய்த்தல், எள்ளி நகையாடல் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் சொல்ல வேண்டும்..

 கவுண்டமணி, சந்தானம் வகையறாக்கள் படங்களில் செய்வது கலாய்த்தல்.. அது அனைவராலும் ரசிக்கப்படுகிறது .. சில சமயங்களில் எல்லை மீறினாலும்  நாம் அதிகம் பொருட்படுத்தாத அல்லது பொருட்படுத்த தேவை இல்லாத அளவில் தான் அவர்கள் காமெடி உள்ளது..


எள்ளி நகையாடல் என்பது ஜெ கேப்டனை பார்த்து “ தினமும் குடிக்காமல்  அவரால் தூங்க முடியாது” என்று சொன்னதும் “ இவர் தான் அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா?” என்று இவர் கேட்டதும்.. இதுக்குப்பிறகும் சுயநலத்துக்காக எலியும் , பூனையுமாய் இருந்தவர்கள் கூட்டணி அமைத்து பின் மீண்டும் எதிரிகள் ஆனது கேவலமான தமிழக அரசியல் வரலாறு

 வீட்டுக்கு வரசொல்லி பழி வாங்கிட்டாங்க என்று கிராமங்களில் ஒரு சொல்வடை உண்டு.. அந்த மாதிரி விஜய் டி வி சிறப்பு விருந்தினராய் பவர் ஸ்டாரை வரச்சொல்லி அப்படி அவமானப்படுத்தியது மாபெரும் தவறு..லட்சக்கணக்கான மக்கள் பார்க்கிற ஒரு நிகழ்ச்சியில் அப்படித்தான் ஒரு நடிகரை அவமானப்படுத்துவதா?

ஒரு ரஜினியோ விஜய்காந்த்தோ அங்கே வந்திருந்தால் அப்படி செய்யும் துணிவு கோபினாத்துக்கோ, விஜய் டி வி நிர்வாகத்துக்கோ உண்டா?

கொளுத்தும் கோடை வெய்யிலில் இப்படி கோட் சூட் மாட்டிக்கிட்டு ஏன் அவஸ்தைப்படறீங்க? காசுக்காகத்தானே? என்று லைவ் கமென்ட் கொடுத்தா அவருக்கு எப்படி இருக்கும்?மிஸ்டர் கோபிநாத்.. நீங்க வீட்ல பெட்ரூம்ல கூட கோட் சூட் போட்டுக்கிட்டுத்தான் தூங்குவீங்களா? நீங்க கோட்டடையானா? என்று சபையில் நக்கல் அடித்தால் அவர் முகம் எப்படி சுருங்கும்?


இவர் பற்றி ஒரு சம்பவம் இந்த டைமில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.. ஈரோடு மாவட்டம் பெருந்துறை என்ற ஊரில் நடந்த ஒரு கல்லூரி ஆண்டு விழாவுக்கு அண்ணன் கோபிநாத்தை சிறப்பு விருந்தினராக 2 ஆண்டுகளுக்கு முன் அழைத்திருந்தார்கள்.. அண்ணன் போட்ட கண்டிஷன்ஸ்

1. ஒரு மணி நேரம் மட்டுமே இருப்பேன், அதற்கான கட்டணம் ரூ 2 லட்சம் முழுத்தொகையும் இப்போதே கொடுத்துடனும்

2. சென்னையில் இருந்து பெருந்துறைக்கு காரிலேயே வந்து அழைத்துச்சென்று காரிலேயே விட்டு விட வேண்டும்..

3. காரில் ஏ சி இருக்க வேண்டும்.. ( ஏன்னா அண்ணன் கோட் சூட்டில் தானே இருப்பார்? அதனால்) பயண நேரத்தில் சரக்கு, சிகரெட், சாப்பாடு அனைத்து செலவுகளும் ஏற்க வேண்டும்

 அவர் போட்ட அனைத்து கண்டிஷன்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை காரை நிறுத்தி  தம் அடிச்சு, சரக்கு அடிச்சு அண்ணன் ஃபுல் மப்பில் தான் வந்தார்..

 இது அவரது தனி உரிமை.. அவருக்கு மார்க்கெட் இருக்கு, கூப்பிடறாங்க.. அவர் டிமாண்ட் பண்றாரு.. நான் கேட்பது அந்த விழாவில் அனைத்து மாணவ மாணவிகள் முன்னிலையில் அண்ணன் இந்த மாதிரி அடாவடி பண்ணுனாரு, இப்போக்கூட ஃபுல் மப்புல தான் இருக்காரு என்று மேடையில் அவமானப்படுத்தி இருந்தால் எப்படி இருந்திருக்கும் அவருக்கு?

 உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவங்களுக்கு ஒரு நியாயமா?

http://tamil.oneindia.in/img/2012/05/14-neeya-naana-gopinath--300.jpg


அலப்பறை மன்னன் அண்ணன்  கோபிநாத்துக்கு சில ஆலோசனைகள்


1. உலகத்துலயே தான் தான் புத்திசாலிங்கற நினைப்பை முதல்ல விட்டுடுங்க..

2. விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.. அதாவது கூட்டிட்டு வந்து கும்மி அடிக்கக்கூடாது..

3. மற்றவங்களை பேச விடுங்க.. பெரிய அதி மேதாவி மாதிரி குறுக்கே பேசாதீங்க..

4. படிக்காதவங்க எல்லாம் முட்டாள், படிச்சவந்தான் அறிவாளிங்கற நினைப்பை மாத்திக்குங்க..

5. கிராமங்களில் இருந்து வரும்  நேயர்களை வழி காட்டுங்க.. ஷூட்டிங்க் டைமில் அவங்க தடுமாற்றம் பார்த்து நக்கல் அடிக்காதீங்க.

6. முடிஞ்சா வருஷம் ஒரு டைமாவது வேட்டி சட்டைல வாங்க


 பிரபல ட்வீட்டர் வேணு, perundurai சொன்னது கீழே உள்ள கருத்து (GD_Venu@GD_Venu)

பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் என்ற தனி நபர் 'இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர், எதற்கு இந்த விளம்பரம்? ' என்ற பாணியில் பேசும்,தைரியம் தமிழ்நாட்டில் மக்கள் அங்கிகாரம் இல்லாமல் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகள் , ஜாதிகட்சி, தலைவர்களை அழைத்து கேட்கும் தைரியம் கோபிநாத்திற்கு இருக்கிறதா?

டாக்டராக இருந்த நீங்கள் ஏன் சினிமா துறைக்கு வரணும் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது ? என்று கேட்டவர் , கண்டக்டர் , ரைஸ் மில் அதிபராக இருந்த ரஜினி,விஜயகாந்தை பார்த்து 
ஏன் சினிமாவுக்கு வந்தீர்கள் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது என கேட்க முடியுமா ?கேட்டால் உங்கள் நிலைமை என் ?..

பிரபாகரன் இறந்த பின்னும் , அவர் இறந்ததை சொல்லாமல் ஏமாத்தும் தலைவர்களை , அழைத்து 'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை"என கேட்க முடியுமா ?

ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளி வந்து விட்டு , ஜாமீனில் வெளி வந்ததால் 
2ஜி வழக்கு நீர்த்து போகும் ன்னு சொன்ன முதல்வரை அழைத்து ஏன் என்று கேட்க'போலி வாழ்க்கை என கேட்க முடியும்மா?



250 கோடிக்கு விளம்பரம் கொடுத்து , தான் செய்த நல திட்ட உதவிகளை விளம்பர படுத்தும் தமிழக அரசை இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர்'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை " என கேட்க முடியுமா?.. ..

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/04/Neeya-Naana-.jpg
வி சதீஷ் குமார் அவர்கள் கருத்து
ஒரு பொது நிகழ்வில் ஒரு நடிகரை (மருத்துவர் சீனிவாசன்)அல்லது ஒரு மனிதரை எப்படி நடத்த வேண்டுமென்ற குறைந்தபட்ச நாகரீகம் கூடத் தெரியாத கோபிநாத் ஒரு வக்கிரம் கொண்ட மனித கழிவு.சக நடிகரை ஒரு தொலைகாட்சி அவமான படுத்தி உள்ளது... ’’நடிகர் சங்கம்’’ என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?நடிகர் சங்க தலைவர்,செயளாலர் இதற்கு பதில் சொல்லுவார்கலா?



மிகைப்படுத்தி பேசுவதை தவிர எந்த குறையும் இல்லாத மனிதர் பவர் ஸ்டார்...
எதையும் எதிர்கொள்ளும் மனநிலையும்,
தோற்றாலும் போராடும் தன்னம்பிக்கையும்,
கேலி செய்தாலும் பொறுமை மாறாது பதில் சொல்லும் கோணத்திலும் ஒப்பிடும் போது...
ஒரு டி ஆர் பி ரேட்டிங் கூட்டி காண்பிக்க உபயோகப்படுத்தி , ஒரு மனிதனை வெளிச்சத்தில் இகழ்ச்சி செய்யும் கோபிநாத்& டீமை விட
பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த விதத்திலும்
குறைந்துவிடவில்லை...

சொந்த காசில் சினிமா எடுத்ததை தவிர தப்பான தொழில் செய்யவில்லை...
படங்கள் காணாமல் போனாலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் என்று எந்த புகாரும் இல்லை...
விஜய் டிவியின் டி ஆர் பி வெறியை விட
சீனிவாசனின் சினிமா வெறி தவறாக தோன்றவில்லை...

"நான் அவர் படமும் பார்த்தது இல்லை.."
ஏற்றுக்கொள்ள முடியாத நடிகனாக இருக்கலாம்...
தனிமனிதனாக பவர் ஸ்டார் சீனிவாசன் நல்ல மனிதர் என்பது சத்தியமாக உண்மை என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்...

மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்...
தனக்காக பிறரை இகழ்ச்சி செய்யும் விஜய் டி வி போல் அல்லாது..
உங்கள் கருத்தும் வரவேற்கப்படுகிறது

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcfBxTIGbgH0xOgVQPZFvMrtOsfypS7cjBqLLoE3g0gfq_vONBq_a3ZEexTb-1KvCuOLXGXusQLM-PJZ1q-p8Xaj3yMY4y328Z1xkIQj81hFIfK4O6k9wk5IUGNtJS0Ru-nAUOwryGAa3O/s1600/gopinath+neeya+naana.jpg

Sankarkumar  -சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அன்றையத் தலைப்புக்குப்
பொருத்தமான ஒரு நபரையே விஜய் டிவி அழைத்திருந்தது. கோபிநாத் கேட்ட
கேள்விகளும் பவர் ஸ்டாரின் அவர் தற்போது அணிந்திருக்கும் போலிமுகத்தின்
பின்னால் இருக்கும் உண்மையான முகம் என்ன என்பதை அறியவே தொடுக்கப்பட்டன.
ஒருவேளை, அவர் உள்ளே வருவதற்கு முன், அவரது 11 நபர் குழு போட்ட
கெடுபிடிகள் நிகழ்ச்சியாளரை எரிச்சல் அடையச் செய்திருக்கலாம். ஆனாலும்
கேள்விகள் கண்ணியமாகவே அமைந்திருந்தன. அதற்கு பவர் ஸ்டார் அளித்த
பொறுமையான பதில்கள் அவரது இமேஜை உயர்த்தியே காட்டியது.

ஒபாமாவைக் கூட அழைத்து கேள்வி கேட்கக்கூடிய சுதந்திர நாட்டில் இருப்பதாலோ
என்னவோ, இந்த நிகழ்ச்சியில் எந்தத் தவறும் எனக்குத் தெரியவில்லை. பவர்
ஸ்டார் அவமதிக்கப்பட்டதாகவும் நான் கருதவில்லை. அவரேகூட அப்படிச்
சொல்லவில்லை. 'ஒருவேளை நீங்கள் எனக்கு எதிரியாக இருக்கலாம்' என மட்டுமே
அவர் சொன்னார்!


ஆயினும், சதிஷ் சார்பில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இதே கோபிநாத்
எம்ஜியாரை அழைத்து, 'நீங்க ஏன் தொப்பி கண்ணாடி அணிஞ்சிருக்கீங்க? கொஞ்சம்
கழட்டி உண்மையான முகத்தைக் காட்டுங்க' எனக் கேட்டிருக்க முடியது;
கேட்டுவிட்டு, உயிர் பிழைத்திருக்கவும் முடியாது!:)) பவர் ஸ்டார்
என்பதால் கேட்டுவிட்டார். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிவிட்டு, கைகளை
அசைத்து விடை பெற்று சென்றும் விட்டார்!