போர் தொழில் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் சரத் குமார்க்கு அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பம் ஆகி விட்டது என்று சொல்லலாம். டபுள் ஹீரோ சப்ஜெக்ட்களில் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். போர் தொழில் அளவுக்கு பிரம்மாண்ட வெற்றி இல்லை என்றாலும் பரம்பொருள் ஒரு வெற்றிப்படமே
ஸ்பாய்லர் அலெர்ட்
சிலை கடத்தல்களில் ஈடுபடும் ஒரு ஆளிடம் நாயகன் எட்டு வருடங்களாகப்பணி புரிகிறார். ஆனால் நாயகன் பணி வேறு. திடீர் என ஓனர் ஒரு விபத்தில் இறக்க ஓனர் யார் யாரிடம் எல்லாம் சிலைகளைக்கொடுத்து வைத்திருந்தாரோ அவர்களுக்கெல்லாம், நல்ல லாபம்
நாயகனின் தங்கைக்கு ஒரு மெடிக்கல் பிராப்ளம். ஆபரேஷனுக்கு ஏகப்பட்ட பணம் தேவையாக இருக்கிறது . அதனால் நாயகன் வில்லன் ஆன போலீஸ் ஆஃபீசர் வீட்டில் திருடும்போது மாட்டிக்கொள்கிறான். வில்லன் நாயகனை வைத்து ஆதாயம் தேட நினைக்கிறான். அதன்படி சிலைகள் பற்றிய விபரங்களை கேட்டறிந்து அதன் மூலம் லாபம் சம்பாதிக்க வில்லன் நினைக்கிறான்
1000 வருடங்கள் பழமை மிக்க 100 கோடி மதிப்புள்ள ஒரு சோழர் கால சிலை கிடைக்கிறது . அதை 20 கோடி ரூபாய்க்கு விற்க நாயகன் , வில்லன் இருவரும் முனைகிறார்கள்.ஒரு கட்டத்தில் எதிர்பாராதவிதமாக சிலை உடைந்து விடுகிறது . அதே போல போலியான சிலையை நாயகியின் உதவி கொண்டு ரெடி செய்கிறார்கள்
அந்த சிலையை விற்க முடிந்ததா? க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் என்ன என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக அமிதாஸ் பிரதான் நடித்திருக்கிறார், பக்கத்து வீட்டுப்பையன் போல தோற்றம். நாயகியிடம் பம்மும்போது ரசிக்க வைக்கிறார். வில்லன் ஆபத்தான கட்டத்தில் மாட்டும்போதெல்லாம் உயிரைக்காப்பாற்றும் ஆக்சன்களில் ஈடுபடுகிறார். க்ளைமாக்ஸில் இவருடைய கேரக்டர் டிசைனில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது
வில்லன் ஆக சரத் குமார், நாயகி வில்லனைப்பற்றி நாயகனிடம் எச்சரிக்கும்போது அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு வருகிறது . படம் முழுக்க வில்லத்தனமான ஆக்டிங்கில் கலக்கி இருக்கிறார். நாயகனை விட வில்லனின் நடிப்பில் தான் கம்பீரம் அதிகம், இவரது கேரக்டர் டிசைனிலும் ஒரு க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் இருக்கிறது
நாயகி ஆக கஷ்மீரா பர்தேசி அதிக வாய்ப்பில்லை என்றாலும் வந்த வரை ரசிக்க வைக்கிறார். இவருக்கு ரொமாண்டிக் போர்சன் இன்னும் அதிகம் வைத்திருக்கலாம்
குணச்சித்திர கதாபாத்திரங்களில் பவா செல்லத்துரை , பாலாஜி சக்திவேல் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள்
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஓக்கே ரகம், பிஜிஎம் பக்கா . நாகூரான் ராமச்சந்திரா எடிட்டிங்கில் இரண்டேகால் மணி நேரம் டியூரேஷன் வருமாறு கட் பண்ணி இருக்கிறார்கள்
பாண்டி குமாரின் ஒளிப்பதிவில் நைட் ஸீக்வன்ஸ் காட்சிகள் அதிகம், பாராட்ட வைக்கும் பணி
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குநர் சி அர்விந்த்ராஜ்
சபாஷ் டைரக்டர் (சி அர்விந்த்ராஜ்)
1 தமிழ் சினிமாவின் வழக்கமான லூஸ்தனமான நாயகி ஆக இல்லாமல் நாயகியை கண்ணியமாக , புத்திசாலியாக காட்டிய விதம்
2 வில்லனின் ஓப்பனிங் சீன் மற்றும் படம் நெடுக அவரது பங்களிப்பு ‘
3 சிலை கடத்தல் பற்றிய டீட்டெய்லிங்
4 க்ளைமாக்சில் எதிர்பாராத அந்த இரண்டு ட்விஸ்ட்கள்
ரசித்த வசனங்கள்
1 திருடறதே தப்பு, அதுலயும் போலீஸ் காரன் வீட்லயே திருட நினைச்சே பாரு
2 போலீசும் , பாம்பும் ஒண்ணு , தொடக்கூடாது , தொட்டா அரைகுறையா விட்டுட்டுப்போகக்கூடாது
3 ஏமாறுவதை விட எமாற்றுவதுதான் பெரிய பாவம், அதை விடப்பெரிய பாவம் தான் எப்படி ஏமாந்தோம்னே தெரியாமல் ஏமாறுவது
4 நீங்க கொடுக்கற பணம் என் கஷ்டத்துக்கு வேணா உதவலாம், ஆனா என் மனசை சாந்தப்படுத்தாது
5 போலீஸ் காரன் கடன் வாங்கினா திருப்பித்தர மாட்டான்னு அவனவன் தெறிச்சு ஓடறான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பழங்கால சிலை உடைந்தால் கடத்தல் க்ரூப் அப்படியே விட்டுட்டுப்போவாங்களா? அது ஒண்ணும் சுக்குநூறாக உடைய வில்லையே? பாட்டம்; தானே உடைபட்டிருக்கு? ஒட்டி ரெடி பண்ணி வந்த விலைக்கு தள்ளலாம்னு ட்ரை பண்ணவே இல்லையே?
2 கடத்தல் க்ரூப்பிடம் பேரம் பேச வரும் வில்லன் முறுக்கு மீசை , போலீஸ் சம்மர் கட்டிங்குடன் வருகிறார். ஆளைப்பார்த்தாலே போலீஸ் என தெரியுது . மாறு வேடத்தில் வரலாம் என் ஏன முயற்சிக்கவில்லை ?
3 வில்லனின் மனைவி என்ன காரணத்துக்காக டைவர்ஸ் கேட்கிறார் என்பதை தெளிவாக சொல்லவே இல்லை . மெயின் கதைக்கு அது சம்பந்தம் இல்லை என்றாலும் ஒரு காட்சியில் விளக்கி இருக்கலாம்
4 வில்லனின் முன்னாள் மனைவி , நாயகி இருவரும் அக்கா , தங்கைகள் அவர்கள் இருவருக்கும் காம்பினேஷன் ஷாட்ஸ் எல்லாம் வைத்து சுவராஸ்யமான காட்சி எதுவும் சேர்க்காமல் மிஸ் செய்து விட்டார்கள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - விறுவிறுப்பான ஒரு த்ரில்லர் படம் , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுக்காகவும் , சரத் குமாரின் நடிப்புக்காகவும் பார்க்கலாம், ரேட்டிங் 3 / 5
நன்றி - அனிச்சம் மின்னிதழ் , நவம்பர் 1 , 2023
Paramporul | |
---|---|
Directed by | C. Aravind Raj |
Written by | C. Aravind Raj |
Produced by | Manoj Girish |
Starring | |
Cinematography | S. Pandikumar |
Edited by | Nagooran Ramachandran |
Music by | Yuvan Shankar Raja |
Production company | Kavi Creations |
Distributed by | Sakthi Film Factory (Tamil Nadu) |
Release date |
|
Country | India |
Language | Tamil |