Showing posts with label பனிவிழும் மலர்வனம். Show all posts
Showing posts with label பனிவிழும் மலர்வனம். Show all posts

Tuesday, March 04, 2014

பனி விழும் மலர் வனம் - சினிமா விமர்சனம்

டைட்டில் ல ஃபேஸ் புக் லோகோ ஓடும்போதே இது ஏதோ இண்டர்நெட் லவ் ஸ்டோரினு நினைச்சது சரியாப்போச்சு . ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் ஃபேஸ் புக் ல ஃபிரண்ட்ஸ் . நேர்ல பார்க்கலாமா?னு ஹீரோ பிட்டுப்போடறாரு .( பிட்டு  போடுதல் = நூல் விடுதல்  ) ஹீரோயின் சரிங்குது .( இப்பவெல்லாம் பொண்ணுங்க தனக்குப்பிடிச்சவங்க எது சொன்னாலும் சரிங்க;-) சொல்வாங்க  )

ஒத்த ரசனை உள்ள இருவரும் பார்த்ததுமே காதல் கிணத்துல விழுந்துடறாங்க .வீட்ல பயங்கர எதிர்ப்பு . வழக்கம் போல 2 பேரும் ஓடிடலாம்னு பிளான் பண்றாங்க . என்னமோ ஸ்கூல் எக்ஸ்கர்சனுக்குப்போற மாதிரி துக்ளியூண்டு பேக் ல தலா  2 செட் டிரஸ் மட்டும் எடுத்துட்டு கிளம்பிடறாங்க . 


ஒழுக்கமா குடித்தனம் பண்ணனும்னு நினைக்கறவன் நகரத்துக்குப்போவான். அப்போதான் படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்கும் . வாழ்க்கைல செட்டில் ஆகலாம், ஆனா  ஹீரோ ஏதோ காட்டுப்பக்கம் போறாரு . அங்கே  ஒரு மலைவாசிப்பொண்ணு ஃபேர் அண்ட் லவ்லி , ரோஸ் பவுடர் எல்லாம் போட்டுட்டு ஒரு குழந்தையோட  இருக்கு. 


இந்தியாவிலேயே இப்படி ஒரு கலர் ஃபுல் மலைவாசிப்பொண்ணை ஒரு பயலும் பார்த்திருக்க மாட்டான். அந்தப்பொண்ணோட  புருசன் ஜெயில்ல இருக்கான் ( அப்போதான் திரைக்கதைக்கு சவுகர்யம் ) 





. ஒரு  டைம்   காட்ல போகும்போது 4 பேரையும்  புலி துரத்துது . ஒரு மரத்து மேல ஏறிக்கறாங்க . ( எட்டாங்கிளாஸ் படிக்கும்போது  இந்தக்கதை வந்திருக்கு )  அவங்க எப்படித்தப்பிக்கறாங்க என்பதே கதை 

அதாகப்பட்டது  இயக்குநர்   லைஃப் ஆஃப் பை படம் பார்த்து அதுல இன்ஸ்பயர் ஆகி  லோ பட்ஜெட்ல புலிக்கதை சொல்ல நினைச்சிருக்கார் . படத்தில் வரும் கடைசி 30 நிமிட புலிக்காட்சிகள்  மிரட்டலானவை. ஆனா மொத்தப்படம் 139 நிமிடம். கிட்டத்தட்ட ரெண்டேகால் மணிநேரத்துக்கும் மேல . தமிழன் எப்படிப்பொறுமையாப்பார்ப்பான் ? 


ஹீரோ புதுமுகம் அபிலாஷ் . பேர்ல யே லாஸ்  இருக்கு. ஆனாலும் புதுமுகம் என்ற அளவில்  ஓக்கே . காதலியோட இருக்கும்போது அவர் முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரியுது . படத்தின் முக்கியமான காட்சியான கடைசி 30 நிமிட  மரத்தின் மேல் கேம்ப் காட்சிகளில் இன்னும் பயிற்சி தேவை . 


ஹீரோயின்  புதுமுகம் சானியா தாரா . அநேகமா சானியா மிர்சா + நயன் தாரா = சானியா தாரா என்ற கான்செப்ட்ல பேர் வெச்சிருப்பாங்க  போல . ஹீரோயின்  தெளிவாவே  ஒரு மொக்கை ஃபிகர் தான் . 35 மார்க் போடலாம் .ஃபேர் & லவ்லி  போட்டும் மாநிறமா இருக்கும் கிராமத்துமுகச்சாயல் கொண்ட சிட்டி ஃபிகர் . ஏதோ தாராள மயமாக்கல் கொள்கை இருப்பதால் பார்க்க முடியுது . 


மலைவாசிப்பொண்ணா வர்ஷா அஸ்வதி ஹீரோயினை விட அழகா கும்முன்னு இருக்கு. மலையாளப்படத்துல நல்லா வருவாங்க .வாழ்த்துகள். 


புலி , புலிக்குட்டி  சம்பந்தப்பட்ட காட்சிகள் மிரட்டல் .  புலி  உறுமுவது , அதன் வேகம் எல்லாம்  நுட்பமான  படப்பிடிப்பு , கம்ப்யூட்டர் கிராஃபிக்சும் குட் 


 சபாஷ் இயக்குநர் 


1.  ஹீரோ ஹீரோயின்  இருவரும் ஒரு டிபார்மென்ட் ஸ்டோரில்  மீட் பண்றாங்க . ஹீரோயின்  கூட அவங்கம்மா ( அது கூட நல்லாத்”தன்யா ”இருக்கு  சாரி நல்லாத்தான்யா  இருக்கு )   இருப்பதால்  நேரிடையா பேசமுடியாத சூழலில்  அங்கே இருக்கும்  பொருள்களைக்கொண்டே சைகை மூலமாகப்பேசுவது  அட்டகாசமான உத்தி . இந்தக்காட்சிக்கு அசிஸ்டெண்ட் டைரக்டர்களின் உழைப்பு அபாரம் க்ரியேட்டிவிட்டிக்கு க்ரியேட்டிவிட்டி . செவன் ஓ க்ளாக் , குட் டே  இப்படி கம்பெனி பிராடக்ஸ் கிட்டே இருந்து காசு க்கு காசு 


2 போஸ்டர்  டிசைன் கலக்கல் . என்னமோ  உலகப்பட ரேஞ்சுக்கு மிரட்டிடுச்சு . 


3 க்ளைமாக்ஸ் கடைசி 30 நிமிடக்காட்சிகள் தான் படத்துக்கு  உயிர் . சி ஜி ஒர்க் அபாரம் . ஒளிப்பதிவு . சவுண்ட் எஞ்சினியர் ஒர்க் எல்லாம் அழகு 


இயக்குநரிடம் சில கேள்விகள்  


1.  ஹீரோயின்  ஊரை விட்டு வரும்போது 2 செட் டிரஸ் மட்டும் எடுத்துட்டு வருது . வந்திருப்பது ஒரு மலைவாசிகள் காடு. அங்கே கடை எதுவும் இல்லை . ஆனா படம் பூரா அது 19 சுடி , 4 மிடி . , ஒரு ஜின்ஸ் டி சர்ட் செட் போட்டுட்டு வருது . இத்தனை டிரஸ் ஏது ? 

2  ஹீரோயின் , ஹீரோ 2 பேரும் ஊரை விட்டு  ஓடி வந்து 42 நாள் ஆகியும் ஏன்  மேட்டர் எதும் நடக்கலை ? ரொம்ப கண்ணியமானவங்களா? 


3 வில்லன் க்ரூப் 3 பேரும்  கடோத்கஜன் கசின்ஸ் மாதிரி இருக்கானுங்க . ஹீரோயினை ரேப் பண்ண வரும்போது  அந்த மலைவாசிப்பொண்ணு மல்ஹோத்ரா வேப்பங்குச்சில  சேலையை சுத்தின மாதிரி பாவமா இருக்குது . அது அரிவாளால மிரட்னதும் அவங்க எப்படி பயந்து ஓடுவாங்க ? 

4 ஒரு சீன் ல வில்லன் க “ காட்லயே இருந்ததால காய்ஞ்சு போய்ட்டோம். அந்தப்பொண்ணை ( ஹீரோயினை ) டேஸ்ட் பார்த்துடலாம்கறான் . யாருமே பாதுகாப்புக்கு இல்லாம 4 வருசமா  சேட்டு கடை சோன்பப்டி மாதிரி அந்த இன்னொரு ஹீரோயின் அனாமத்தா இருக்கு . அதை ஏன் ட்ரை பண்ணலை ? ஆக்சுவலா அதுதான் செமயா  இருக்கு . 


5 மரத்து மேல   ஹீரோ அடி பட்டு ரத்தத்தை  கீழே சிந்திடறாரு . புலி அதை ருசிக்குது . புலி அந்த ரத்த வாசத்தை வெச்சு அவரைத்தானே துரத்தனும் ? ஏன் அவரை  ஓட விட்டுட்டு அந்த மலைவாசஸ்தல ஃபிகரைத்துரத்துது ? 


6  புலி ஒரு காட்டுவாசியை அடிச்சுக்கொன்னு சாப்ட்டுட்டு இருக்கு .அப்போ ஏன் இவங்க யாரும் எஸ் ஆகலை ? 


7   காட்டிலாகா அதிகாரிகள் அங்கே வர்றாங்க . ஆனா  ஷூட்டிங்க் ஆர்டர் வாங்கிட்டு வர்லைன்னு கலைஞர் மாதிரி பொறுப்பில்லாம பேசறாங்க . ஏன்? வரும்போதே வாங்கிட்டு வரலாமே? அல்லது  ஃபோன் பண்ணி  கேட்கலாமே? 


மனம் கவர்ந்த வசனங்கள் 


1. உங்க டேஸ்ட்டும் என் டேஸ்ட்டும் ஒரே மாதிரி இருக்கே? 



நான் இன்னும் உங்களை டேஸ்ட் பண்ணியே பாக்கலையே?,


2 இந்தா சாக்லெட். 


ஏன்? நல்ல காரியம் பண்ணும்போது ஸ்வீட் சாப்ட்டே ஆகனுமா? 


வாட்? 

இப்போ உன்னை கிஸ் அடிக்கப்போறேன். எதுக்கு சாக்லெட்னு சொன்னேன்


3 டென்னிஸ் கேர்ள்ஸ் ஏன் எப்பவும் கிளாமரா டிரஸ் பண்றாங்க ?



அதான் பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் ஆச்சே? அதான் ஓப்பனா


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 40


குமுதம் ரேங்க்கிங்க் = ஓக்கே


ரேட்டிங்க் = 2.5 / 5


சி பி கமெண்ட் - கடைசி 30 நிமிட பரபரப்பு போதும்னு நினைச்சா இதை தியேட்டர்ல போய் பார்க்கலாம். மத்தவங்க டி வி யில் போடும் வரைக்காத்திருக்கலாம். சி செண்ட்டர்ல ஓடாது . ஏ பி செண்ட்டர்களில் சுமராப்போகும் . போட்ட முதலீட்டை ஈசியா எடுத்துடுவாங்க

ஈரோடு அண்ணா தியேட்டர்ல 13 ஆடியன்ஸ் மத்தியில் பயந்துக்கிட்டே பார்த்தேன்

 diski 1 - 

வல்லினம் - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2014/02/blog-post_7592.html







diski 2 - 

தெகிடி - சினிமா விமர்சனம்