Showing posts with label பத்த்ரிக்கை உலகம். Show all posts
Showing posts with label பத்த்ரிக்கை உலகம். Show all posts

Tuesday, January 11, 2011

திரும்பிப்பார்க்கிறேன் (தொடர்பதிவு)

http://farm3.static.flickr.com/2395/2323943729_a075be5afc.jpg 
2010 ஜூலை 17-ம் தேதி அன்றுதான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தேன்.
ஏ டூ இஜட் நல்ல நேரம் சதீஷ்தான் பார்த்துக்கொண்டார்.டைப்பிங்க் மட்டும்
என் வேலை.அவருக்கும், இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த சவுந்தருக்கும் நன்றி கூறி இந்தக்கட்டுரையை தொடர்கிறேன்.

நான் பிளஸ் டூ படிக்கும்போது ,ஸ்கூல் கணக்கு மாஸ்டர் எதற்கோ ,”
“ஊர்ப்பெயரை ஏம்ப்பா கெடுக்கறே..” என திட்டி விட்டார்.அப்போது
ஆவேசத்துடன் ஊர்ப்பெயரை காப்பாற்றுவேன் என சினிமா ஹீரோ
மாதிரி சபதம் எடுத்து பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன்.

முதலில் கவிதைகள்,சிறுகதைகள்தான் எழுதினேன்.சென்னிமலை சி பி
செந்தில்குமார் என்ற பெயரை அச்சில் பார்க்கும்போது மனதுக்குள்
பெருமையாக இருக்கும்.பதிவுலகுக்கும்,பத்திரிக்கை உலகுக்கும்
அடிப்படையில் உள்ள முக்கியமான வேற்றுமை என்ன?

நாம் அனுப்பும் படைப்புகள் எடிட் செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுபவை
மட்டுமே பிரசுரம் ஆகும்.10 கவிதை அனுப்புனா 1 செலக்ட் ஆகும்.
வாரா வாரம் புக் வந்ததும் படைப்பு வந்திருக்கா?ன்னு ஆவலா
புக் பார்ப்போம்..இந்த சஸ்பென்ஸ் எல்லாம் பிளாக் -கில் இல்லை.

நானே ராஜா நானே மந்திரி கான்செப்ட்தான்,நாம என்ன நினைக்கிறோமோ
அதுதான் எழுத்து,நாம என்ன எழுதறோமோ அதுதான் படைப்பு.பத்திரிக்கை
உலகில் உள்ள படைப்பாளிகளை விட பதிவுலகில் உள்ள படைப்பாளிகளின்
எண்ணிக்கை அதிகமாக இருக்க இதுதான் காரணம்.

பத்திரிக்கைகளில் வந்த ஒரு கவிதையை படித்து விட்டு எங்க ஊர்க்காரர்
நல்லா ஜோக்கா இருக்குப்பா என்றார் ஊர்க்காரர்.. கவிதையே சிரிப்பா இருந்தா
ஜோக் எழுதுனா எப்படி இருக்கும்? என்று நினைத்து ஜோக் எழுத ஆரம்பித்தேன்.

மள மளவென ஜோக் எழுத ஆரம்பித்து கடந்த 18 வருடங்களில் நான் எழுதி
பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்.
http://images.rottentomatoes.com/images/spotlights/2008/rtuk_feature_baillie_walsh_03.jpg
பதிவுலகில் என் பிளாக்கிற்கு ரெகுலராக கமெண்ட் போட்டு என்னை ஊக்குவித்தது ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா.என் மனதைக்கவர்ந்த எழுத்துக்கள் பன்னிக்குட்டிராம்சாமி,பட்டாபட்டி,சேட்டைக்காரன்,குசும்பன்.காரணம் அடிப்படையில் இவர்களும் காமெடியில் கலக்கலான படைப்புகளை தந்ததுதான்.

போட்டியும் ,பொறமையும் எல்லா படைப்பாளிகளுக்கும் வரும்.எனக்கும்
சிலரைக்கண்டு பொறாமை வரும்.பொறாமையின் விகிதம் அதிகம் ஆகும்போதெல்லாம் நான் ஹாஸ்பிடல்,சுடுகாடு,அநாதை இல்லங்கள் சென்று வாழ்க்கையின் நிலை இல்லாமை தத்துவத்தை எனக்கு நானே உணர்த்திக்கொண்டு என்னை நானே புதுப்பித்துக்கொள்வேன்.

பதிவுலகில் பழக்கம் ஆனவர்களை எல்லாம் நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது காலம் அனைவரையும் சந்திக்க வைக்கும் என எதிர்பார்க்கிறேன். சவுந்தர் தமிழ்மணம் டாப் 20 இல் 10 வது இடம் பெற்றதும்.அதற்கு நன்றி சொல்லி ஒரு பதிவு போடலையா?என சவுந்தரிடம் கேட்டேன்.இதுக்கெல்லாமா பதிவு போடுவாங்க? என அவர் என்னையே திருப்பிக்கேட்டு சிரித்தார். நான் முதல் வாரம் தமிழ்மணம்
தர வரிசையில் 13வது இடம் பிடித்த போது செய்த அலப்பரைகளை நினைத்துப்பார்த்தேன். இதுல ரமேஷ் வேற  உசுப்பேத்தி தூண்டி விட்டாரு.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களிடமும் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும் என்ற அறிஞர்கள் சொன்னது போல் நானும் பதிவுலகில் ஒவ்வொருவரிடமும் இருந்து ஏதாவது கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.

கலியுகம் தினேஷின் நண்பர் எழுதிய மைனா படத்தின் பாட்டு ஒன்றின் ரீமிக்ஸ் என் மனதைக்கவ்ர அதை இசை அமைப்பாளரும், தேநீர் விடுதி படத்தின் இயக்குநரும் ஆன எஸ் எஸ் குமரன் அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்.திரை உலகில், பத்திரிக்கை உலகில் உள்ள என் பழக்கம், நட்பு இவற்றை பயன்படுத்தி பதிவுலகில் உள்ள திறமைசாலிகளை ,நல்ல படைப்பாளிகளை ஊக்குவிக்கும் எண்ணம் உள்ளது. 

வழக்கம் போல் பதிவு நீளம் ஆகி விட்டதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்
தேவைப்பட்டால் இதன் அடுத்த பாகத்தை மீண்டும் எழுதுவேன்.இந்த தொடர்
பதிவுக்கு நான் அழைப்பது என் ஆதர்ச எழுத்தாளர்களான
பன்னிக்குட்டி ராம்சாமி,பட்டாபட்டி,சேட்டைக்காரன், ஆகியோரை.
குசும்பன் எனக்கு பழக்கம் இல்லை.எனவே அவரைத்தவிர மற்ற 3 பேரையும்
அழைக்கிறேன்.