Showing posts with label பத்து தல ( 2023) - தமிழ் -சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label பத்து தல ( 2023) - தமிழ் -சினிமா விமர்சனம். Show all posts

Thursday, April 27, 2023

பத்து தல ( 2023) - தமிழ் -சினிமா விமர்சனம் ( கேங்க்ஸ்டர் மசாலா ) @ அமெசான் பிரைம் , ஜீ தமிழ்

 


   2017ம்  ஆண்டு  கன்னடத்தில்  ரிலீஸ்  ஆன  மஃப்டி  என்ற  படத்தின்  அஃபிஷியல்  ரீமேக்  இது . நம்ம  தமிழ்  சினிமாவில்  இதுவரை  காணாத  கதை  எல்லாம்  இல்லை , ஆல்ரெடி  நாயகன், தளபதி  என  மணிரத்னம்  அடிச்சுத்துவைச்சுக்காயப்போட்ட  அதே  கதையில்  தற்போதைய  தமிழக  அரசியல்  நிலவரத்தைகலந்து  கட்டிக்கொடுத்த  படம்  தான் . . மார்ச் 31  2023  அன்று  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆகி  சுமாராக  ஓடிய  படம்  இப்போது  ஏப்ரல் 27  முதல்  அமேசான்  பிரைம், ஜீ  தமிழ்  ஆகியவற்றில்  காணக்கிடைக்கிறது 


சூர்யா - ஜோதிகா  நடிப்பில்  2006ல்  ரிலீஸ்  ஆன   சில்லுனு  ஒரு  காதல்  படத்தை   இயக்கிய  என்  கிருஷ்ணா  8  வ்ருடங்கள்  கழித்து நெடுஞ்சாலை  என்னும்  படத்தை 2014ல்  இயக்கி வெளியிட்டார். மீண்டும்  எட்டு  வ்ருடங்கள்  கழித்து 2022  டிசம்பரில்  இது  ரிலீஸ்  ஆவதாக  இருந்தது . சில  பிரச்சனைகளால்  தள்ளிபோனது / 40  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான  இந்தப்படம்  முதல்  வார  முடிவில்  55  கோடி  ரூபாய்  வசூலித்தது


ஸ்பாய்லர்  அலெர்ட்


தமிழகத்தின்  முதல்வர்  திடீர்  என  கடத்தப்படுகிறார். இதனால்  துணை  முதல்வருக்குக்கொண்டாட்ட,ம். ஆட்சியைப்பிடிக்கத்திட்டம்  போடுகிறார்.


நாயகன்  ஒரு  கேங்க்ஸ்டர்  +  மணல்  கொள்ளையன் + குவாரி  ஒனர்  என  த்ரீ இன் ஒன் முதல்வரின்  கடத்தலுக்கும்,  நாயகனுக்கும்  சம்பந்தம்  இருக்கலாம்  என  போலீஸ்  துறை  சந்தேகிக்கிறது , அதனால்  அண்டர்  கவர்  ஆபரேஷன்  நடத்த  ஒரு  ஆஃபீசரை  அனுப்புகிறது . அந்த  ஆஃபீசர்   நாயகனான  தாதாவின்  கோட்டைக்கு:ள்  அவரது  அடியாளாக  வேலைக்கு  சேர்ந்து  நம்பிக்கையைப்பெற்று  உண்மையைக்கண்டு  பிடிக்கிறார்


 நாயகன்  ஏன்  முதல்வரைக்கடத்தினார்? உண்மை  தெரிந்தும்  அந்த  அண்டர்  கவர்  ஆஃபீசர்  நாயகனை  ஏன்  போலீசில்  மாட்டி  விடவில்லை ? நாயகனின்  தங்கைக்கும்  நாயகனுக்கும்  என்ன  பிரச்சனை ? எல்லாவற்றுக்கும் விடை  திரைக்கதையில்  சொல்லப்பட்டிருக்கிறது 


 நாயகனாக  எஸ் டி ஆர்  என்னும்  சிலம்பரசன்..   கொடி  பறக்குது  படத்தில் ரஜினி  தாதா  கேரக்டரில்  கறுப்பு   டிரசில்  வருவது  போல , காலா  படத்தில்  ரஜினி  நடக்கும்  நடை  போல  சிம்புவின்  நடிப்பில் , கேரக்டர்  டிசைனில்  படம்  முழுக்க  ரஜினி  ரெஃப்ரன்ஸ்.  தாதா  கெட்டப்க்காக  அவருக்கு  தாடி , மீசை  எல்லாம்  கலரிங்  கொடுத்தது  ஓக்கே , ஆனால்  பார்க்கும்போது  பயம்  வரவில்லை ,  சிரிப்பு தான்  வருகிறது .


 அண்டர்  கவர்  ஆஃபீசராக  கவுதம்  கார்த்திக். இதுவரை இவர்  ஏற்று  நடித்த  கேரக்டர்களி;லேயே  ஓரளவு  கவுரவமான  ரோல்  இதுதான்,  நாயகன்  சிம்புவை  விட  இவருக்குத்தான்  அதிக  காட்சிகள் . முறைப்படி  இவர் தான்  நாயகன்  என்றும்  சொல்லலாம். ஆனால்  தாத்தா  முத்துராமனிடம்  இருந்த  முக  மலர்ச்சியோ , அப்பா  கார்த்திக்கிட ம்  இருந்த  துறுதுறுப்பு சுறுசுறுப்போ  மருந்துக்குக்கூட இவரிடம்  இல்லை , செத்தவன்  கையில்  வெத்தலை  பாக்கு  கொடுத்தது  போல  தேமே  என்று  இருக்கிறார். முதலில்  அவரது  ஹேர்  ஸ்டைலும் , தாடியுமே சகிக்கவில்லை , கஞ்சா  கேஸ்  போல  இருக்கிறார்.


வில்லனாக  துணை  முதல்வராக  இயக்குநர்  கவுதம்  வாசுதேவ்  மேனன் ,மிரட்டல்  ஆன  நடிப்பு  என  சொல்லி  விட  முடியாது , அதே  சமயம்   அலட்டல்  இல்லாத  கம்பீர  நடிப்பு 


நேர்மையான  தாசில்தார்  ஆக  ப்ரியா  பவானி  சங்கர் . இவரது  ஹேர்  ஸ்டைலும் , கண்ணிய  ஆடை  வடிவமைப்பும்  தமிழ்  சினிமாவில்  கவனிக்க  வைக்கும்  நபர் . இந்தக்கால  நடிகைகளில்  கண்ணியமாக , கவுரவமாக  உடை  அணிவதில்  இவருக்கு  முதல்  இடம்,  நடிக்க  அதிக  வாய்ப்பில்லை , ஸ்க்ரீன்  ஸ்பேஸ்  குறைவே 


 நாயகனின்  தங்கையாக  கேரளத்துக்கனவுக்கன்னி    அனு  சித்தாரா. செண்ட்டிமெண்ட் காட்சிகளில்  ஓக்கே  ரகம் 


ரெடின்  கிங்க்ஸ்லீ  காமெடிக்கு . 3  இடங்களில்  சிரிப்பு  வருகிறது , மனுஷ்ய புத்திரன்  ஒரு  ரோலில்  வருகிறார், இயல்பான  நடிப்பு, கலையரசன்   கெஸ்ட்  ரோல்.  ஓக்கே  ரகம் அனுசித்தாராவின்  மக்ளாக  வரும்  அந்த  குட்டிப்பெண்  அழகு


 இசை  ஏ  ஆர்  ரஹ்மான். 2  பாடல்கள்  செம  ஹிட் . பிஜிஎம்  சுமார்  தான்  ஒளிப்பதிவு  ஃபரூக்  பாஷா. கேங்க்ஸ்டர்  படங்களுக்கே  உரித்தான்  டரர்க்  கலர்  டோனில்  படம்  பிடித்தது  சிறப்பு 


சபாஷ்  டைரக்டர்  (என்  கிருஷ்ணா )


1  கமலின்  விக்ரம் படம்  மெகா  ஹிட்  ஆனதுக்கு  முக்கியக்காரணம்  முதல்  பாதி  முழுக்க  நாயகன்  ஆப்செண்ட், இன்னொரு  நாயகன்   போலீஸ்  என்கொயரிங்  என்ற  ஃபார்முலாதான்  என  யாரோ  சொல்லக்கேட்டு  அதே  ஃபார்முலாவில்  திரைக்கதை  அமைத்தது 


2  எழுத்தாளர்  எஸ்  ராமகிருஷ்ணனை  வசனம்  எழுத  நியமித்தது


3  ஏ ஆர்  ரஹ்மானை  இசைக்கு  நியமித்து  படத்துக்கு ஒரு கிரேடு  &, மார்க்கெட்டிங்  ஏற்படுத்தித்தந்தது 


4  குருதிப்புனல்  க்ளைமாக்சை  நினைவுபடுத்தினாலும்  இந்தக்கிளைமாக்சில்  கவுதம்  கார்த்திக்கிடம்  அந்த  போலீஸ்  ஆஃபீசர்  ஷூட்  ஷூட் மீ  என  தானாக  முன்  வந்து  வீணா  மேலே  போகும்  இடம் 


5  நாயகனின்  தங்கை  குழந்தையுடன்  நாயகனுக்குண்டான  பாண்டிங் 


6   ஒரிஜினல் கதையில்  இல்லாத  முதல்வர் - துணை  முதல்வர்  கான்செப்டை  தமிழக  அரசியலுடன்  லிங்க்  பண்ணி  காட்சிகள்  அமைத்த  புத்திசாலித்தனம்


  ரசித்த  வசனங்கள்  ( எஸ்  ராமகிருஷ்ணன்) 


1   ஜெயிச்சவனை  விட ஜெயிக்கப்போறவனுக்குத்தான்  வேகம்  அதிகமா  இருக்கும் 

2  எப்பவும்  எல்லாராலும்   எல்லா  முடிவுகளையும்  கனகச்சிதமா  எடுத்துட  முடியாது 


3   தோற்று  திரும்பி  வருபவனை  விட   வீரமா  சாகறவனைத்தான்  போலிஸ்  டிபார்ட்மெண்ட்  விரும்பும் 


4   இங்கே  நல்லது  பண்றதுக்கே  ஒரு  கெட்ட  முகம்  தேவைப்படுது


5  இங்கே  யார்  ஆளனும்? யார்  வாழனும் ? என்பதை  நாந்தான்  முடிவு  பண்ணுவேன்


6   நான்  நன்றியை  எதிர்பார்க்கறவன்  இல்லை , நன்றி  மறந்தவங்களை விட்டு  வைப்பவனும்  இல்லை 


7  நான்    படியெறி  வந்தவன்  இல்லை , எதிரிகளை  மிதிச்சு  மேலே  வந்தவன் 


8  ஏழு  கோடி  மக்கள்  வாயை  அடைப்பதை  விட   ஏழு  பேரின்  வாயை  அடக்குவது  சுலபம்,  ஐ  மீன்  மீடியா  வாயை  அடைக்கனும்


9  துப்பாக்கி    எடுத்தா  சும்மா  வெச்சுட்டு  இருக்கக்கூடாது  , எவனாவது  சாகனும் 


10  மீன்  கிட்டே  போராடிக்கொண்டு  இருந்தா  முதலை  கிட்டே  ஜெயிக்க  முடியுமா?


11   மண்ணை  ஆள்றவங்களுக்குத்தான் இது  எல்லை 

 இந்த மண்ணை  அள்ளற  எனக்கு  அது  இல்லை 


12    நான்  மன்னர்  பரம்பரைடா

‘ நான்  உன்னை அழிக்க  வந்த  பரம்பரைடா


13  அதிகாரிகள்  எல்லாரும்  அரசியல்வாதிகள்  ஆகும்  காலம்  இது  ( சகாயம்  ஐ ஏ எஸ் , அண்ணாமலை  ஐ ஏ எஸ்  உள்குத்து  ) 


14  தோல்விக்கு  வருத்தப்படாத , முதல்  வாட்டியே  ஜெய்ச்சுட்டா  அரசியல்வாதிக்கும், நமக்கும்  வித்தியாசம்  இல்லைனு  ஆகிடும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   எல்லாருக்கும்  நல்லதுதான்  பண்றேன்  என  சொல்லும்  நாயகன்  அவர்  கோட்டைக்குள்  புகுந்த  போலீஸ்  ஆஃபீசரை  ஏன்  கொல்கிறார்? அவரை  எச்சரித்து  அனுப்பி  இருக்கலாமே? 


2  முதல்வர்  கடத்தப்படும்  காட்சி  என்னமோ   தள்ளுவண்டிக்காரனை  அசால்ட்டா  தூக்கிட்டுப்போவது  போல  காட்டப்படுகிறது 


3   யார்  ஆளனும்னு  நாந்தான்  முடிவு பண்ணுவேன்  என கெத்தாக  சொல்லும்  நாயகன்  முதல்வராக  தன்  தங்கை  கணவரை  உருவாக்குவது  என்? ஒரு  கடை  நிலை அல்லது  ஷாப்பிங்  நிலை  ஆளை  முதல்வர்  ஆக்கி  இருக்கலாமே?


4  நாயகனை  போலீஸ்  பிடித்து  மாஜிஸ்ட்ரேட்  முன்  நிறுத்தாமல்  போதிய  ஆதாரம்  இல்லை  என  அவர்களாகவே  ரிலீஸ்  செய்வது காதில்  பூ 


5  டண்டணக்கா  ஹேய்   டண்டணக்கா  என்பது  டி ஆர்  போட்ட  மெட்டு ., அது  பெரும்பாலும்  டி ஆரை  பகடி  செய்யப்பயன்படுத்துகிறார்கள் . நாயகன்  வரும்போது  ஒலிக்கும்  பிஜிஎம்  ஆக  அந்த  டண்டணக்கா  வருவது  செம  காமெடி . இதை  ஏன்  ஏ ஆர்  ஆர்  யூகிக்க வில்லை? அல்லது  வேறு  யாரும்  இது  ஒர்க்  அவுட்  ஆகாது  என  சொல்லவில்லை 

?6  க்ளைமாக்சில்  க்வுதம்  கார்த்திக்  தலையில்  அடிபட்டு  இருப்பதால்  தனக்கு  பழசெல்லா,ம் நினைவில்லை  என  சுலபமாக  சமாளித்திருக்கலாம், அதை  விட்டு  விட்டு  ஆதாரம்  தர  மாட்டேன்  என  தன்  உயர்  அதிகாரியிடம்  சொல்வது  காமெடி


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - வன்முறைக்காட்சிகள்  மட்டுமே  இருக்கு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சிம்பு , ப்ரியாபவானிசங்கர் , அனுசித்தாரா  ரசிகர்கள்  பார்க்கலாம், பொது  ரசிகர்கள்  டி வி  ல  போடும்போது  பார்த்துக்கலாம், சுமார்  ரகம்  தான்  ., ரேட்டிங் 2.25 / 5 



Pathu Thala
Pathu Thala.jpg
Theatrical release poster
Directed byObeli N. Krishna
Screenplay byObeli N. Krishna
Dialogue by
  • R. S. Ramakrishnan
Story byNarthan
Based onMufti
Produced byJayantilal Gada
K. E. Gnanavel Raja
StarringSilambarasan
Gautham Karthik
Priya Bhavani Shankar
Gautham Vasudev Menon
Kalaiyarasan
Teejay Arunasalam
Anu Sithara
CinematographyFarook J. Basha
Edited byPraveen K. L.
Music byA. R. Rahman
Production
companies
Release date
  • 30 March 2023 (India)
Running time
152 minutes
CountryIndia
LanguageTamil
Box office₹65 crore[1]