Showing posts with label பத்திரிக்கை. Show all posts
Showing posts with label பத்திரிக்கை. Show all posts
Thursday, November 22, 2012
Wednesday, March 07, 2012
துக்ளக் சோ அவர்கள் மனைவி திருமதி சௌந்தரா. பேட்டி
நான் துக்ளக் பத்திரிகையின் ரசிகை!'' என்கிறார் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் திரு. சோவின் மனைவி திருமதி சௌந்தரா.
சி.பி - அடடா.. நான் பெண் வாசகிகளை மதிப்பதும் இல்லை, அவர்களை கண்டு கொள்வதும் இல்லைன்னு சோ சொன்னாரே.. அது உங்களைவெச்சுத்தானா?
''அவர் அஷ்டாவதானிபோல் பல தொழில்களில் ஈடுபட்டு இருந்தாலும், எனக்கு என்னமோ பத்திரிகை ஆசிரியரா அவர் ஈடுபட்டு இருப்பதுதான் நிறைவைத் தருகிறது. அதிலும் அவர் ஆளும் கட்சியை நாசூக்காகக் குத்திக்காட்டி எழுதும் பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!''
சி.பி - என்னங்க இப்படி சொல்லீட்டீங்க? எனக்கென்னவோ அவர் நாடக் ஆசிரியரா, காமெடி வசனம் எழுதறவரா இருக்கறதுல தான் அதிக திறமை வெளிப்படுத்துன்னு தோணுது.. பத்திரிக்கைல என்ன பண்றார்? கலைஞரை, காங்கிரசை திட்டி ஜெவை, பி ஜே பியை ஆதரிக்கறார்.. அது ஈசி வேலை ஆச்சே.?
''துக்ளக் பத்திரிகை வந்தவுடன், முதலில் எதைப் படிக்க ஆவலாக இருப்பீர்கள்?''
''அட்டைப் பட கார்ட்டூனை ரசித்துவிட்டு, நான் பரபரப்புடன் பக்கங்களைத் தள்ளிப் பார்ப்பது கேள்வி-பதில் பகுதியைத்தான். நான் மிகவும் ரசித்துப் படிக்கும் பகுதி அது.''
சி.பி - அதானே? சமையல் குறிப்புத்தான் வர்றதில்லையே? அடுத்தவங்க என்ன பேசிக்கறாங்க அப்படின்னு ஒட்டுக்கேட்கறதுலதான் பெண்களுக்கு எவ்வ்வள்வு ஆர்வம்? துக்ளக் சத்யாவின் கார்ட்டூன் கிண்டல்கள் தான் பெரும்பாலான வாசகர்களின் முதல் சாய்ஸ்
'' 'என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்’ நாடகத்தைப் பார்த்தீர்களா?'' என்று கேள்வி கேட்ட உடனேயே, ''ஓ! நான்கூட சுதந்திய தாகம் டாமா பாத்தேன்...'' என்று மழலை மொழியைச் சிந்தியபடி நடந்து வருகிறாள் சோவின் மகள் சிந்துஜா.
''டிராமாவிலே அப்பா எப்படி வர்றார்?''
''உம்... உம்... கையில பூ கட்டிண்டிருக்கா. மேக்-அப் போட்டுப்பா... டாமாவிலே உள்ளே போவா... வெளியே வருவா...'' என்று அவள் சொல்லச் சொல்ல, திருமதி சோ தன் மகளைப் பெருமையுடன் அணைத்துக்கொள்கிறார்.
''இவள் அப்பா மாதிரியே... இன்டெலிஜென்ட்... சுறுசுறுப்பு எல்லாமே. சிந்துஜா, அப்பா மாதிரி 'துக்ளக்’ நடை நடந்து காட்டு'' என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னரே, ''அப்பா இப்படித்தான் நடப்பா...'' என்று குதித்து நடந்து காண்பிக்கிறாள்.
''ஆபட்ஸ்பரியில் நடந்த துக்ளக் கருத்தரங்குக்கு வந்திருந்தீர்களா?''
''ஓ... வந்தேனே. ஆனா, கடைசியிலதான் என்னால வர முடிஞ்சது. கருத்தரங்குக்கு வந்திருந்தவங்களைப் பார்த்துப் பிரமிச்சுட்டேன். இந்தச் சின்ன வயசுல அவருக்கு இவ்வளவு பெரிய அளவில் மக்களின் அன்பு இருக்கிறதைப் பார்த்துதான் பூரிச்சுப்போயிட்டேன். பெருமையும்படறேன். ஆனால் அதே சமயத்திலே, ''இனிமே இவர் இன்னும் இது மாதிரி கருத்தரங்குகள் நடத்தணும்... நிறையக் கூட்டம் வரணும்... யார் கண் திருஷ்டியும் படாம இருக்கணும்’னு உடனே ஆண்டவனை வேண்டிக்கிட்டேன். இன்னமும் வேண்டறேன்.
துக்ளக் இன்னும் நல்லா... தமாஷா இருக்கணும். லேடீஸைப் பொறுத்தவரை இது எல்லாருக்கும் பிடிச்சிருக்கு... இங்கிலீஷ்ல வெளி வந்தாக்கூட நல்லதுதான். மொத்தத்துல இது ஒரு அகில உலகப் பத்திரிகை ஆகணும்னு எனக்கு ரொம்ப ஆசை.''
சி.பி - அதுக்கு சோ ஆல் ஓவர் வோர்ல்டு பெருந்தலைகளை திட்டனும். அவருக்கு கலைஞரை திட்டவே டைம் பத்த மாட்டேங்குது.
''துக்ளக் பறிமுதலைப் பற்றி...''
''என்னவோ பண்ணப்போறாங்கனு இரண்டு நாளைக்கு முன்னாடியே வதந்திகள் நிறைய வந்தன. பறிமுதல் செய்த அன்னிக்கு இவர் விடியற்காலையிலேயே எழுந்து போயிட்டார். இவர் தீர்மானிச்சு செய்ற எந்தக் காரியமும் நல்ல படியா முடியும்கிற நம்பிக்கை எங்க எல்லாருக்கும் உண்டு. அதனால நாங்க கொஞ்சம்கூடப் பயப் படலை!'' என்று கணவர் மேல் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் திருமதி சோ.
''நிறைய டெலிபோன் கால்கள் வந்துஇருக்குமே?''
''லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட பத்திரிகை ஆசிரியராயிற்றே... வராமலா இருக்கும்? ஒரு நிமிஷத்துக்கு ஒரு போன் கால் வந்துட்டே இருக்குது. அதிலும் குறிப்பா நிறைய லேடீஸ்தான் போன் பண்றாங்க. அவங்க என்னைக் கூப்பிட்டுச் சொல்றதெல்லாம், 'இதுக்கு சரியான 'ஆக்ஷன்’ எடுக்கணும்’, 'இது ரொம்ப அநியாயம்...’ எல்லாரும் தவறாம சொல்ற ஒரு வார்த்தை: 'உங்க கணவரை ஜாக்கிரதையாப் பார்த்துக்குங்க!’ அவர்களுடைய அன்பை நினைத்துக் கண் கலங்கினேன்...'' என்று தழுதழுத்த குரலில் கூறுகிறார் திருமதி சோ.
''மொத்தத்திலே துக்ளக்கைப் பறிமுதல் செய்ததால, அவருடைய பத்திரிகைக்கு நிறைய பப்ளிசிட்டி கிடைச்சிருக்கு. தமிழ்நாடு மட்டும்அல்ல, வட நாட்டிலே உள்ள எல்லாப் பத்திரிகையிலேயும் இதைப் பற்றி வந்திருக்கு. இப்போ அவர் அகில இந்தியாவுக்கும் தெரியற 'பிக் பெர்சனாலிட்டி’ ஆயிட்டாரு. இந்தச் சமயத்துல இன்னும் இரண்டு மூன்று புதிய பகுதிகளைச் சேர்த்து, துக்ளக் பக்கங்களை அதிகமாக்கிக் கொண்டுவரலாம்!'' என்று சொல்லிக்கொண்டே எழுந்திருக்கிறார்.
அவரிடம் விடைபெற்று வருகிறோம். வழியில் ஒரு விதமான கலக்கத்துடன் சோவின் தாய் திருமதி ராஜம்மாவைச் சந்திக்கிறோம்.
''எல்லோரும் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டைக் கட்டியிருக்கான். ஆனால், அவனே காலையில போனா ராத்திரி நேரம் கழிச்சுதான் வரான். அவன் வந்து சேர்ற வரை மனசு 'திக்திக்’குனு அடிச்சுக்கறது. அவனோட டிராமா, சினிமாவெல்லாம்கூட நான் பார்த்தது இல்லை. ஊரிலே அவனைப் பத்தி எல்லாரும் பெருமையா பேசிக்கறானு சொல்றா. ஜெயமிருக்கும் வரை பயமில்லை - அவன் நன்னாயிருக்கணும்!'' என்கிறார் ஒரு துணிவு மிக்க பத்திரிகையாசிரியரை நமக்குத் தந்த திருமதி ராஜம்மா.
சி.பி - விகடன் பொக்கிஷம் பகுதில பல வருடங்களுக்கு முன்பு வந்த பேட்டி இது
Wednesday, January 11, 2012
எனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார்வை
எங்கப்பா பேரு பழனிச்சாமி.. சொந்த ஊரு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் புங்கம்பாடி, புத்தூர்க்கு இடைப்பட்ட சாலப்பாளையம் என்னும் கிராமம்.. குலத்தொழில் நெசவு..சொந்தமா 8 கைத்தறி போட்டு தொழில் நடத்துனார்.. அவர் கூடப்பிறந்த அண்ணன் 1,தம்பி 1 ,நெசவு நெய்தது துண்டு மற்றும் பெட்ஷீட்.. 4 மிதி தறிகள்..
அப்பா தீவிர எம் ஜி ஆர் ரசிகர்.. அந்த காலத்துலயே கட் அடிச்சுட்டு சினிமா பார்ப்பாராம்.. சைக்கிள்லயே 14 கிமீ மேட்டுக்கடை வந்து படம் பார்ப்பாராம்.. அந்தக்காலத்துல சினிமா பாட்டு புக், வசன புக் எல்லாம் விக்கும்.. அதை வாங்கி பைண்டிங்க் பண்ணி வெச்சுடுவார்.. அந்த கலெக்ஷன்ஸ் எல்லாம் இன்னும் இருக்கு..
எங்கப்பா கிட்டே கெட்ட பழக்கம் எதுவும் இல்ல.. அப்பாவோட தம்பி செம சரக்கு பார்ட்டி.. பெரியப்பா 24 மணி நேரமும் சுருட்டு குடிச்சுட்டே இருப்பாரு.. எங்க தாத்தாவும் சுருட்டு பார்ட்டி தான்.. ஆனா எங்கப்பா எந்த கெட்ட பழக்கமும் இல்லாம வளர்ந்தது ஆச்சரியம்.. ஏன்னா ஒரு மனிதனின் நல்ல கெட்ட பழக்கங்கள் அவன் சூழ்நிலையை சார்ந்தே அமையுது.. எங்கப்பா ஊர்லயே எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஆண் எங்கப்பாதான்னு ஊர் மக்கள் எல்லாம் ரொம்ப புகழ்வாங்க.. எனக்கு செம குஷியா இருக்கும்..
எம் ஜி ஆரின் ரசிகர் என்பதால் எங்கப்பா அந்த மாதிரி கெட்ட பழக்கம் எதுவும் இல்லாம வளரனும்னு நினைச்சிருப்பார்னு யூகிக்கறேன்.. புங்கம்பாடில ஒரு வாய்க்கால் இருக்கும்.. அதனோட அகலம் பள்ளிபாளையம் ஆறு மாதிரி அகண்டு இருக்கும்.. எங்கப்பா நீச்சல்ல கில்லாடி.. ஓடி வந்து குதிச்சா அக்கறைல போய் தான் எந்திரிப்பார்.. உள் நீச்சல், கடப்பாறை நீச்சல் எல்லாம் கலக்குவார்..
எனக்கு நீச்சல் சென்னிமலைல பழக்கி விட்டார்.. சென்னிமலை வாய்க்கால் ரொம்ப அகலம் கம்மி.. முதல்ல சுரப்பரடை ( சுரைக்காயை காய வைத்து செய்தது) மூலம் , பிறகு வயிற்றில் கயிறு கட்டி, பின் சும்மா ... ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டேன்..
எங்கே போனாலும் சைக்கிளில் தான் போவார்.. எங்கப்பா கிட்டே இருந்து கற்றுக்கொண்ட இன்னொரு நல்ல பழக்கம் சிக்கனம்.. தேவை இல்லாம செலவு பண்ணமாட்டார்.. தேவை இருந்தா கொஞ்சமா செலவு செய்வார்..
எங்கப்பா வை நான் பெருமையா நினைவு கூறும் இன்னொரு சம்பவம்.. தாத்தா உடல் நிலை சரி இல்லாம இருந்தப்ப சொத்து பிரிச்சாங்க.. அப்போ அப்பாவோட அண்ணனுக்கும், தம்பிக்கும் ஒரு சண்டை.. தம்பிகாரர் அதாவது என் சித்தப்பா தனக்குத்தான் அதிக இடம் ஒதுக்கனும், நான் தான் கடைக்குட்டி என அடம் பிடிக்க, பெரியப்பாவோ நான் தான் மூத்தவன் எனக்கு தான் அதிக இடம் வேணும் என வாதிட கை கலப்பு ரேஞ்சுக்கு போச்சு..
எங்கப்பா கூலா சொல்லிட்டாரு.. ஏம்ப்பா அடிச்சுக்கறீங்க? என் பங்கை ரெண்டா பிரிச்சு ஆளுக்குப்பாதியா வெச்சுக்கங்க.. அவங்க ஸ்டன் ஆகிட்டாங்க. ஆனாலும் ஏத்துக்கிட்டாங்க ( மனிதர்கள் என்றும் சுயநலம் தான்) எங்கப்பா என் கிட்டே சொன்னாரு.. நாம சம்பாதிக்கற சொத்தே நமக்கு போதும்.. நம்ம அம்மா அப்பா சம்பாதிக்கற சொத்து நமக்கெதுக்குன்னு..அடுத்தவங்க சொத்துக்கோ .பொருளுக்கோ ஆசைப்படக்கூடாதுன்னு நான் அவர் கிட்டே இருந்து கத்துக்கிட்டேன்.
எங்கப்பா அதிர்ந்து பேசி நான் பார்த்ததில்லை.. ரொம்ப சாஃப்ட் கேரக்டர்.. சென்னிமலை சென் கோப் டெக்ஸ் சொசயிட்டில மெம்பர் நெம்பர் 397.. ஜக்காடு பெட்சீட் நெசவு.. நின்னுக்கிட்டே தான் 10 மணி நேரமும் நெய்யனும்.. ஒரே ஒரு மிதி.. மாத்தி மாத்தி மிதிச்சுட்டே இருப்பாரு. சாலப்பாளத்தார்னா சென்னிமலைல எல்லாருக்கும் தெரியும்.. எங்கபாவோட பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் 2 பேரு . செந்தாம்பாளத்தார், குலத்தான் .நான் காலேஜ் முடிச்சு சொந்தமா கார்மெண்ட்ஸ் வைக்க முயற்சி செஞ்சப்ப எங்கம்மாவோட எதிர்ப்பையும் மீறி வீட்டு பத்திரத்தை வெச்சு லோன் வாங்கி கொடுத்தார்.. எங்கப்பாவுக்கு சுகர் இருந்தது.. ஹார்ட் அட்டாக்ல 5 வருடம் முன்பு ஜூலை 7 இறந்தார். எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு..
கண்டிப்பை அவர் என் கிட்டே காட்னதே இல்லை.. அன்பு, பாசம், அரவணைப்பு மட்டுமே காட்டி இருந்தார்.. அவர் நல்ல குணங்களை பின்பற்றி அவர் பேரை காப்பாத்தனும் என்பதாவே என் கொள்கையா இருந்தது..
அடுத்து எங்கம்மா.. அவங்க ஈரோடு.. எங்கம்மா ஆன்மீகத்தில் அலாதி ஈடு பாடு.. நான் 5ங்கிளாஸ் படிச்சப்பவே என்னை தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை எல்லாம் கோயில்ல படிக்க வெச்சு மார்கழி மாச பஜனைல கலந்துக்க வெச்சாரு.. ஈஸ்வரன் கோயில் சுத்தி 4 ரோடுலயும் மார்கழியின் அதிகாலையில் நடந்த அனுபவம் இன்னும் நினைவு இருக்கு..
எங்கம்மா டெயிலர். லேடீஸ் டிரஸ் எல்லாம் பிரமதமா தைப்பார்.. ஜாக்கெட்க்கு ஹெம்மிங்க் பண்றது கொக்கி வைக்கறது எல்லாம் நான் செய்வேன்.. சின்ன வயசுல சிங்கள்க்கு முடி போடுவேன்..
எங்கம்மா பக்கா சைவம்.. அதே மாதிரி என்னையும், எங்கக்காவையும் வளர்த்தாங்க.. நோ டீ நோ காபி... நோ முட்டை,நோ மட்டன் சிக்கன்.. எங்கப்பா இறந்த பிறகு எனக்கு ஆன்மீகத்துல நம்பிக்கை குறைஞ்சிருச்சு.. காரணம் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவரே 70 வயதில் திடீர்னு இறந்துட்டாரு.. ஆனால் ஊரை அடிச்சு உலையில் போடும் பல தீயவர்கள் 100 வயசு வரை உயிர் வாழறாங்க.. அதான்..
இப்போ அம்மா சென்னிமலைல நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருக்காங்க.. இந்தியா பூரா அனைத்து ஆன்மீக தலங்களும் சுத்தி பார்த்துட்டாங்க.. இலங்கை, சீனா எல்லாம் போய் இருக்காங்க..
இந்த நாளில் எங்கம்மா, அப்பாவுக்கு என் வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன்..
ஓக்கே ஃபிளாஸ்பேக் போதும்.. இப்போ பிளாக் பற்றி பேசலாம்.. 2010 ஜூலை 17 தான் நான் பிளாக் உலகத்துக்கு வந்தேன். என்னை அறிமுகப்படுத்தியவர் நல்ல நேரம் சதீஷ்.. எனக்கு 12 வருஷ பழக்கம்.. அவர் சித்தோடு, நான் ஈரோடு.. 2 பேரும்பாக்யாவுல ஜோக்ஸ் எழுதுவோம். அப்போ பழக்கம்.. அவர் தான் எனக்கு எல்லா உதவியும் செஞ்சு கொடுத்தாரு...
எங்க வீட்ல நெட் கனெக்ஷன் கிடையாது.. நேரம் இருக்கும்போது டைப் பண்ணி டிராஃப்ட்ல போட்டு வெச்சுடுவேன்,..என் நண்பர்கள் 12 பேர்கிட்டே பிளாக் பாஸ்வோர்டு இருக்கு.. அவங்க யாராவது போஸ்ட் போடுவாங்க..
அலெக்ஸா ரேங்கிங்க் தான் தமிழ் வலைப்பூக்களின் டிராஃபிக் ரேங்க்கை நிர்ணயிக்குது.. அதுல நெம்பர் குறைய குறைய நாம் முன்னேறிட்டு இருக்கோம்னு அர்த்தம்.. நான் வந்த புதுசுல என்னோட அலெக்க்ஸா ரேங்க் 13 லட்சம்.. இப்போ என்னுது- 66,000. கேபிள் சங்கர் - 65,860, ஜாக்கி சேகர்-86,180, சவுக்கு-48,711
நான் பதிவுலகத்துல வந்த புதுசுல முதல் 5 மாசம் எந்த சர்ச்சைகளும் இல்லாம போச்சு.. அதுக்குப்பிறகு விகடன் பத்திரிக்கைல வந்த சில பதிவுகள் என் பிளாக்ல போட்டதால காப்பி பேஸ்ட் பதிவர்னு எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க.. சரக்கு இல்லாம போடறான்னு சொன்னாங்க.. ஆனா உண்ஐ அதுவல்ல.. நான் கடந்த 18 வருடங்களில் எழுதிய 1லட்சத்து 2890 ஜோக்ஸ், கவிதைகள் 80, கட்டுரைகள் 70 , சிறுகதைகள் 34, ஒரு பக்க சிறுகதைகள் 45 , போன்றவை எல்லாம் டைப் பண்ணி டிராஃப்ட்ல போட்டு வெச்சிருக்கேன்..
அதனால கை வசம் சரக்கு இல்லாம இல்லை.. அவள் விகடன், நானயம் விகடன், பசுமை விகடன் போன்ற புக்ஸ் எல்லாரும் வாங்கறது இல்லை.. அவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னு அப்டி போட்டேன்.. இப்போ வந்த எதிர்ப்பால் அதையும் தவிர்த்துட்டேன்,..கீழே உள்ள படத்தை அனுப்பியவர் கார்த்தி கவி, நன்றி அவருக்கு
சினிமா விமர்சனத்துல வசனங்கள் போடறதை பற்றி ஒரு பேச்சு.. செல் ஃபோன் எடுத்துட்டு போய் அதுல ரெக்கார்டு பண்ணிக்கறார்னு.... என்னோட செல் ஃபோன் நோக்கியா பேசிக் மாடல் 1100.. அதுல அந்த வசதி எல்லாம் கிடையாது.. எதுக்காக வசனம் எழுதறேன்னா ஒரு அடையாளத்தை காட்டவும் , தனித்து நிற்கவும்.. பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர், உண்மைத்தமிழன் மூவரும் சினிமா விமர்சனத்தில் விற்பன்னர்கள்... அவர்கள் ரேஞ்சுக்கு எழுத முடியலைன்னாலும்.. 4 வது இடத்தையாவது பிடிக்கனும் என்பதற்காக வசனம் எழுதும் பாணியை மேற்கொண்டேன்..
எனது தளங்களில் போடப்படும் சினிமா நடிகைகளின் ஸ்டில்கள் , கூகுளில் போடப்பட்ட கல்லூரி மாணவிகள் ஃபோட்டோக்கள் போடுவதை நண்பர்கள் சிலர் சுட்டிக்காட்டினார்கள்.. அவற்றையும் தவிர்த்து வருகிறேன்..
பதிவுலகில் எனக்கு எதிரிகள் யாரும் இல்லை.. நண்பர்களை சம்பாதிக்கத்தானே வந்தோம் இந்த உலகுக்கு?
ஆனா ஒண்ணு.. நண்பர்கள்க்கு நன்றி சொல்ல ஆரம்பிச்சா அதுக்கு தனி பதிவே போடனும்.. முடிஞ்ச வரை நினைவில் நிற்பவர்களுக்கு பெயர் சொல்லி நன்றி சொல்லிக்கறேன்
லே அவுட், டெம்ப்ளேட் விஷயங்களில் அடிக்கடி உதவி புரிந்து வரும் சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி, நிரூபன், கடம்பவனக்குயில்,ராஜி நால்வருக்கும் முதல் நன்றிகள்
பிளாக் ஆரம்பித்த புதிதில் கமெண்ட்ஸ் போட்டு ஊக்குவித்த சிரிப்பு போலீஸ் ரமேஷ்,ராம்ஜி யாஹூ,திருப்பூர் புரட்சித்தலைவன்க்கு என் நன்றிகள்
ஆரம்ப கட்டத்தில் தன் கமெண்ட்ஸ் மூலம் என்னை ஊக்குவித்த பன்னிக்குட்டி ராம்சாமி & டெர்ர் குரூப் நண்பர்கள்க்கு நன்றி
பதிவுலகின் உயிர் நண்பர்களும், அவ்வப்போது உயிரை எடுக்கும் நண்பர்களுமான விக்கி உலகம் தக்காளி, நாஞ்சில் மனோ எனும் லேப்டாப் மனோ இருவருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்
இராஜராஜேஸ்வரி- மணிராஜ்
நான் பதிவுலகத்துல வந்த புதுசுல முதல் 5 மாசம் எந்த சர்ச்சைகளும் இல்லாம போச்சு.. அதுக்குப்பிறகு விகடன் பத்திரிக்கைல வந்த சில பதிவுகள் என் பிளாக்ல போட்டதால காப்பி பேஸ்ட் பதிவர்னு எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க.. சரக்கு இல்லாம போடறான்னு சொன்னாங்க.. ஆனா உண்ஐ அதுவல்ல.. நான் கடந்த 18 வருடங்களில் எழுதிய 1லட்சத்து 2890 ஜோக்ஸ், கவிதைகள் 80, கட்டுரைகள் 70 , சிறுகதைகள் 34, ஒரு பக்க சிறுகதைகள் 45 , போன்றவை எல்லாம் டைப் பண்ணி டிராஃப்ட்ல போட்டு வெச்சிருக்கேன்..
அதனால கை வசம் சரக்கு இல்லாம இல்லை.. அவள் விகடன், நானயம் விகடன், பசுமை விகடன் போன்ற புக்ஸ் எல்லாரும் வாங்கறது இல்லை.. அவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னு அப்டி போட்டேன்.. இப்போ வந்த எதிர்ப்பால் அதையும் தவிர்த்துட்டேன்,..கீழே உள்ள படத்தை அனுப்பியவர் கார்த்தி கவி, நன்றி அவருக்கு
சினிமா விமர்சனத்துல வசனங்கள் போடறதை பற்றி ஒரு பேச்சு.. செல் ஃபோன் எடுத்துட்டு போய் அதுல ரெக்கார்டு பண்ணிக்கறார்னு.... என்னோட செல் ஃபோன் நோக்கியா பேசிக் மாடல் 1100.. அதுல அந்த வசதி எல்லாம் கிடையாது.. எதுக்காக வசனம் எழுதறேன்னா ஒரு அடையாளத்தை காட்டவும் , தனித்து நிற்கவும்.. பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர், உண்மைத்தமிழன் மூவரும் சினிமா விமர்சனத்தில் விற்பன்னர்கள்... அவர்கள் ரேஞ்சுக்கு எழுத முடியலைன்னாலும்.. 4 வது இடத்தையாவது பிடிக்கனும் என்பதற்காக வசனம் எழுதும் பாணியை மேற்கொண்டேன்..
எனது தளங்களில் போடப்படும் சினிமா நடிகைகளின் ஸ்டில்கள் , கூகுளில் போடப்பட்ட கல்லூரி மாணவிகள் ஃபோட்டோக்கள் போடுவதை நண்பர்கள் சிலர் சுட்டிக்காட்டினார்கள்.. அவற்றையும் தவிர்த்து வருகிறேன்..
பதிவுலகில் எனக்கு எதிரிகள் யாரும் இல்லை.. நண்பர்களை சம்பாதிக்கத்தானே வந்தோம் இந்த உலகுக்கு?
ஆனா ஒண்ணு.. நண்பர்கள்க்கு நன்றி சொல்ல ஆரம்பிச்சா அதுக்கு தனி பதிவே போடனும்.. முடிஞ்ச வரை நினைவில் நிற்பவர்களுக்கு பெயர் சொல்லி நன்றி சொல்லிக்கறேன்
லே அவுட், டெம்ப்ளேட் விஷயங்களில் அடிக்கடி உதவி புரிந்து வரும் சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி, நிரூபன், கடம்பவனக்குயில்,ராஜி நால்வருக்கும் முதல் நன்றிகள்
பிளாக் ஆரம்பித்த புதிதில் கமெண்ட்ஸ் போட்டு ஊக்குவித்த சிரிப்பு போலீஸ் ரமேஷ்,ராம்ஜி யாஹூ,திருப்பூர் புரட்சித்தலைவன்க்கு என் நன்றிகள்
ஆரம்ப கட்டத்தில் தன் கமெண்ட்ஸ் மூலம் என்னை ஊக்குவித்த பன்னிக்குட்டி ராம்சாமி & டெர்ர் குரூப் நண்பர்கள்க்கு நன்றி
பதிவுலகின் உயிர் நண்பர்களும், அவ்வப்போது உயிரை எடுக்கும் நண்பர்களுமான விக்கி உலகம் தக்காளி, நாஞ்சில் மனோ எனும் லேப்டாப் மனோ இருவருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்
இராஜராஜேஸ்வரி- மணிராஜ்
ராம்வி-மதுரகவி
சித்ரா-கொஞ்சம் வெட்டிப்பேச்சு,
கடம்பவனக் குயில்- கடம்பவன பூங்கா
அம்பாளடியாள்- அம்பாளடியாள்
சாதாரணமானவள்- சாதாரணமானவள்
கீதா- கீதமஞ்சரி
மாலதி-மாலதியின் சிந்தனைகள்
ஹேமா- வானம் வெளித்த பின்னும்
ரூஃபினா – செல்ல நாய்குட்டி
ஜோஸ்பின் -ஜோஸ்பின் கதைக்கிறேன்,
கல்பனா-
ஏஞ்சலின்-காகித பூக்கள்
லக்ஷ்மி-குறை ஒன்றும் இல்லை
சசிகா -மேனகா-
இந்திரா - மொக்கை இந்திரா
thenammaiதேனம்மை லெக்ஷ்மணன்
இந்திரா - மொக்கை இந்திரா
thenammaiதேனம்மை லெக்ஷ்மணன்
ஆஃபீசர்- உணவு உலகம்
சதீஷ்குமார்- நல்லநேரம்
பன்னிக்குட்டி ராம்சாமி- ஸ்டார்ட் ம்யூசிக்
ரமேஷ் சுப்புராஜ்- சிரிப்பு போலீஸ்
மாத்தி யோசி -ஜீவன்ராஜேந்திரன் - நண்டு நொரண்டு
மனோ- நாஞ்சில் மனோ
.விக்கி- விக்கியின் அகடவிகடங்கள்
பிரகாஷ்-தமிழ்வாசி பிரகாஷ்
ராஜா-ராஜபாட்டை
கருண்- வேடந்தாங்கல்
சௌந்தரபாண்டியன் – ”கவிதைவீதி”சௌந்தர்
.K.S.S.ராஜ்- நண்பர்கள்/நண்பர்கள்
துஷ்யந்தன்-
மனசாட்சி –மனசாட்சி பஜ்ஜி கடை
மதுமதி- தூரிகையின் தூறல்
ரமணி- தீதும் நன்றும் பிறர் தர வாரா
ஆரூர் மூனா செந்தில்
சேட்டைக்காரன்
சேலம் தேவா, கோகுலத்தில் சூரியன் வெங்கட், நாகராஜ சோழன் எம் ஏ, நாய் நக்ஸ் நக்கீரன்
ஆரூர் மூனா செந்தில்
சேட்டைக்காரன்
சேலம் தேவா, கோகுலத்தில் சூரியன் வெங்கட், நாகராஜ சோழன் எம் ஏ, நாய் நக்ஸ் நக்கீரன்
கணேஷ்- மின்னல்வரிகள்
சுரேஷ்குமார்-வீடு
சீனா அய்யா- வலைச்சரம்
ரத்தனவேல்- ரத்தனவேல் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து,
கோவை நேரம்- கோவை நேரம்
நிரூபன் – நாற்று
ரெவரி- மெல்ல தமிழ் இனி வாழும்
செல்வா- செல்வா கதைகள்
சென்னை பித்தன்
ரஹீம் கலாஸி
ரஹீம் கலாஸி
சங்கவி- சங்கவி
செங்கோவி- செங்கோவி
சூர்யஜீவா- ஆணிவேர்
ஐ.ரா.ரமேஷ்பாபு- உரைகல்
கும்மாச்சி- கும்மாச்சி
சசிகுமார்- வந்தேமாதரம்
சரியில்ல-
பெ.சொ.வி-
M.R.
கோவிந்தராகன். மதுரை
மதுரன்
ஹாலிவுட் ரசிகன்
கோகுல்- கோகுல் மனதில்
தனிமரம்
பிலாசபி பிராபகரன் - பிரபா ஒயின் ஷாப்
ரமேஷ் வெங்கடபதி
கேரளக்காரன் ஆனாலு அதிரி புதிரி
வைகை
சேலம் ரியாஸ், மொஹம்மத்
யானைக்குட்டி
அனைவருக்கும் என் நன்றிகள்..
வாழ்த்து சொல்பவர்கள் தங்கள் ஆலோசனையையும் சொல்லவும்.. பிளஸ் என்ன? மைனஸ் என்ன? என்பதையும் கூறவும்.. அப்போதுதான் என்னை செதுக்கிக்கொள்ள, திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்..
ட்விட்டர் ஃபிரண்ட்ஸ்@iyyanars , கரூர் ஜெகன் @ thoatta ஆல்தோட்டபூபதி, @sheik007 ஈரோடு தங்கதுரை @jesuthangadurai : )), @erode_kathir , senthilchn Senthil Nathan , jeevanlancer jeevan , iParisal Parisalkaaran ,ராஜன் , @geethuTwits @mayilsenthil,@k7classic C.Kesavan,@ sweetsudha1 Sudha,@kullabuji,,naiyandi நையாண்டி,@ SeSenthilkumar,@i_am_mano, மதுரை ரியாஸ், கரையான்,DKCBE, bharathiee பாரத்...பாரதி...,@kolaaru,@jill_online,@karna_sakthi, அறிவுக்கரசு,வேதாளம், ஐ ஆம் கார்க்கி , pulavar_tharumi புலவர் தருமி, RagavanG GiRa, vivaji vivaji,@senthazalravi
சிங்கப்பூர் சாந்தி, பல்ஸ்மாலா, கோவை அரட்டைகேர்ள், கோவை சவுமி, மதுரை உமாகிரிஷ்,சென்னை மோஹனா,சோனியா, மங்கை,கோவை கிரேட் விஜி, @ RealBeenu sbnu , poonguzhali_ பூங்குழலி :) ,@geethuTwits :) , JanuShath JanuShath அனைவருக்கும் என் நன்றிகள்
M.R.
கோவிந்தராகன். மதுரை
மதுரன்
ஹாலிவுட் ரசிகன்
கோகுல்- கோகுல் மனதில்
தனிமரம்
பிலாசபி பிராபகரன் - பிரபா ஒயின் ஷாப்
ரமேஷ் வெங்கடபதி
கேரளக்காரன் ஆனாலு அதிரி புதிரி
வைகை
சேலம் ரியாஸ், மொஹம்மத்
யானைக்குட்டி
அனைவருக்கும் என் நன்றிகள்..
வாழ்த்து சொல்பவர்கள் தங்கள் ஆலோசனையையும் சொல்லவும்.. பிளஸ் என்ன? மைனஸ் என்ன? என்பதையும் கூறவும்.. அப்போதுதான் என்னை செதுக்கிக்கொள்ள, திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்..
ட்விட்டர் ஃபிரண்ட்ஸ்
சிங்கப்பூர் சாந்தி, பல்ஸ்மாலா, கோவை அரட்டைகேர்ள், கோவை சவுமி, மதுரை உமாகிரிஷ்,சென்னை மோஹனா,சோனியா, மங்கை,கோவை கிரேட் விஜி, @ RealBeenu sbnu , poonguzhali_ பூங்குழலி :) ,
விடுபட்டவர்கள் பெயர்கள் அவ்வப்போது சேர்த்துடறேன்..டைம்லைனுக்கு வர வர அவங்க பேரை காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிடறேன் ( காபி பேஸ்ட் பதிவர்)
ஃபாலோயர்ஸ் 1000 கொண்டு வர முடியலை.. 8 குறையுது.. ஹிட்ஸ் 20 லட்சம் கொண்டு வர நினைச்சேன் .. அதும் 100000 குறைஞ்சுடுச்சு, இண்ட்லில் 210 ஃபாலோயர்ஸ்..
Wednesday, January 12, 2011
பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி? பாகம் - 3
பத்திரிக்கை உலகின் ரஜினி என பெயர் பெற்றதும்,இந்தியாவிலேயே அதிகம்
விற்கும் தமிழ் வார இதழ் என முத்திரை குத்தப்பட்ட்டதும் குமுதம் வார இதழ்.
மேல்தட்டு மக்கள் எப்படி ஆனந்த விகடனை விரும்பி படிக்கிறார்களோ ,அதேபோல் கீழ்தட்டு மக்கள், மற்றும் கிராமப்புற மக்கள் குமுதத்தை அதிகம் விரும்பி படிக்கிறார்கள்.
1. வாசகர் கடிதம் - இந்தியா டு டே இதழுக்கு அடுத்த படியாக வாசகர் கடிதத்துக்கும் பரிசு கொடுப்பது குமுதம்தான். அஞ்சல் அட்டை என்ற பெயரில் வரும்.புதன் கிழமை வெளியாகும் புக் பற்றி உங்கள் விமர்சனங்களை சனிக்கிழமைக்குள் அனுப்பினால் அடுத்த புதன் கிழமை புக்கில் அது வந்துவிடும்.(வேறு எந்த புக்கும் இவ்வளவு ஃபாஸ்ட்டாக
வாசகர் கடிதத்தை பரிசீலிப்பது இல்லை.)எழுத்துத்துறைக்குப்புதியவர்கள் அஞ்சல் அட்டை பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம்.
அதேபோல் ஜால்ரா அடித்துத்தான் எழுத வேண்டும் என்பதில்லை.க்ளிக் கலாட்டா என்ற பகுதியில் வரும் ஃபோட்டோ கமெண்ட்ஸ்களை நக்கல் அடித்துப்போடும் லெட்டர்ஸ்க்கு முன்னுரிமை தருவார்கள்.அரசு கேள்வி பதில்களில் சொல்லப்பட்ட பதில்களை சிலாகித்தோ திட்டியோ எழுதும் கடிதங்கள் போடப்படும். குறிப்பாக லேனா தமிழ்வாணன் எழுதும் கட்டுரைகள்
பற்றியோ,ஆசிரியர் தலையங்கம் பற்றியோ எழுதினால் போட்டுடுவாங்க.
இதற்குப்பரிசு ரூ 50. படைப்பு வந்தால் காம்ப்ளிமெண்ட்ரி காப்பி அனுப்பிடுவாங்க. ( இதில் எல்லா வார இதழ்களும் ஒரு டெக்னிக்கை கடைப்பிடிப்பர்கள்.இதழ் கடைக்கு வந்து 7 நாட்கள் கழித்தே காம்ப்ளிமெண்ட்ரி காப்பி அனுப்பி வைக்கப்படும். ஆர்வக்கோளாறில் நாம் கடையில் வாங்கட்டும் என.)
பிளாக்கில் எப்படி பின்னூட்டமோ அது போல் வாசகர் கடிதம்,நான் ஆரம்பத்தில் வாசகர் கடிதம் எழுதுவது கேவலம் என நினைத்தேன்.பின் என் எண்ணம் மாறியது. அதிலும் நம் தனி முத்திரையை பதிக்கலாம் என எண்ணம் ஏற்பட்டது.நண்பர்களுடன் சவால் விட்டு ஒரே இதழில் 4 கடிதங்கள் வர வைத்துள்ளேன்.
2. கவிதை - வாரா வாரம் 2 பக்கங்கள் கவிதைக்காக ஒதுக்குவார்கள்.பெரும்பாலும் குட்டிக்கவிதைகள் அனுப்புவது நலம். 4 வரிகள் - 6 வரிகளுக்குள் இருந்தால் நலம். செலக்ஷன் செக்ஷனில் உள்ளவர்கள் குழந்தைகள் நல விரும்பி போல. பெரும்பாலும் மழலைகள் பற்றிய கவிதைகளே அதிகம் வருகிறது.
திருமயம் பாண்டியன், தஞ்சை அனார்கலி இருவரும் இதில் முத்திரை பதித்தவர்கள். கவிதைக்கான லே அவுட்டும், டிராயிங்கும் பக்காவாக இருக்கும். நமது கவிதை சாதாரணமாக இருந்தால் கூட அவர்கள் பிரசண்ட்டேஷன் அசத்தலாக இருக்கும். எனது கவிதைகள் 28 இதில் வந்துள்ளது.சன்மானம் ரூ 50. குமுதத்தின் சேல்ஸ்,லாபம் இதனுடன் ஒப்பிட்டால் அவர்கள் தரும் சன்மானம் ரொம்பக்கம்மி.
எஸ் ஏ பி ஒரு முறை லேனாவிடம் டிஸ்கஸ் செய்தபோது சொன்ன வார்த்தை -
குமுதம் புக்கிற்கு வரும் விளம்பர வருமானத்தை கணக்கு போட்டால் ரூ 10 க்கு
விற்கப்படும் புக்கை எல்லாருக்கும் இலவசமாக கொடுத்தாலே ஒரு புக்குக்கு ரூ 1.70 லாபமாம். அப்போ கணக்கு போட்டுக்குங்க. கிட்டத்தட்ட 8 லட்சம் புக் சேல்ஸ் ஆகுது.
3.ஒரு பக்கக்கதை. - குமுதத்தில் ஒரு பக்கக்கதை. ரொம்ப ஃபேமஸ்.சும்மா 20 லைன் இருந்தா போதும்.கடைசில ஒரு நீதி இருக்கனும்.தேவை இல்லாத வர்ணனை தவிர்த்து டைரக்டா மேட்டருக்கு வந்துடனும்.புதுமுக எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதற்குப்பரிசு ரூ 100. ப . உமா மகேஷ்வரி ஷேக் சிதார் மந்திர், சேலம் செல்வராஜா, சாயம் வே ராஜாராமன், எஸ். ராமன் ,ஐரேனிபுரம் பால்ராசய்யா போன்றர்கள் இதில் கில்லாடிகள்.எனது கதைகள் 30 வந்துள்ளன.
4. சிறுகதை - இப்போது ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் சிறுகதை இலக்கியம் அழிந்து வருவது வேதனைக்குரிய விஷயம். ரூ 400 பரிசு தர்றாங்க.பெரும்பாலும் இப்போ பிரபல நாவல் ஆசிரியர்கள் படைப்புதான் வருது. வாசகர் சிறுகதை அதிகம் வர்றது இல்லை.ரொம்ப அரிதா சில சமயம் வாசகர்களுது போடுவாங்க.அனுப்பி 2 மாதத்தில் தேர்வானா போட்ட்டுடுவாங்க. என்னுடையது 2 கதைகள் வந்துள்ளன்.ரா கி ரங்கராஜன்,கீதா பென்னட் இவங்க கதைகள்
அதிகம் வந்திருக்கு,
5. ஜோக் - கடைசியா நம்ம மேட்டர்.வாரா வாரம் சராசரியா 27 ஜோக் போடறாங்க. இதுக்கும் சன்மானம் ரூ 50 தான்.பெரும்பாலும் அரசியல், டாக்டர் ஜோக் போடறாங்க. என்னுடையது கிட்டத்தட்ட 700 ஜோக்ஸ் வந்திருக்கும். குமுதத்துல ஜோக் எழுதியே வீடு கட்டுனாருன்னு வி சாரதி டேச்சு பற்றி ஒரு ஜோக் உண்டு.
குமுதத்தில் பணியாற்றும் ஜெயாப்பிரியன்,குட்டி மு வெங்கடேஷன் இருவருக்கும் 2 பக்கங்கள் ரெகுலரா ஒதுக்கிடறாங்க. அது போக வாசகர்களுக்கு 16 ஜோக்ஸ் போடறாங்க.20 நாட்களில் போட்டுடுவாங்க. நல்ல ஸ்பீடுதான்.எஸ் எஸ் பூங்கதிர், ப உமா மகேஷ்வரி, தஞ்சை தாமு,எஸ் மோகன்,பா ஜெயக்குமார்,ஜோ ஜெயக்குமார் ஜோக் உலகில் கலக்குபவர்கள்.
குமுதம் எனக்கு எப்பவும் செல்லப்பிள்ளைதான். காவேரி நீர்ப்பிரச்ச்னையை
தீர்ப்பது எப்படி? என்ற கட்டுரைப்போட்டியில் நான் ரூ ஒரு லட்சம் பரிசு
வென்றது 2002 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி. (டாக்ஸ் போக
கைக்கு ரூ 68,000 தான் வந்தது என்றாலும் என்னைப்பொறுத்தவரை
தொகை அதிகம்)
1998 -ல் தீபாவளி மலரில் போட தமிழ்நாட்டின் டாப் 10 ஜோக்
ரைட்டர்ஸை அழைத்தார்கள்,அதில் நானும் ஒருவன்.ஹாய் மதன் எங்களுக்கெல்லாம் ரூ 2000 மதிப்புள்ள வாட்ச் பரிசாக குடுத்து எப்படி ஜோக்ஸ் எழுதலாம் என டிப்ஸ் குடுத்தார்.
பொதுவாக பத்திரிக்கைகளில் நம் படைப்பு வந்தால் அந்த புக் நம் கண்களுக்கு
அழகாக தோன்றும். வர்லைன்னா என்ன புக் போடறாங்க என சலிப்பினை ஏற்படும். அது மனிதனின் மன ரீதியான தடுமாற்றமே. சிலர் குமுதம் புக்கை
சேல்ஸூக்காக தரம் இழந்ததாக சொல்வார்கள். ஆனால் எல்லா பத்திரிக்கைகளுக்கும் ரோல் மாடலாக குமுதம் விளங்குகிறது.
வெற்றியாளர்களை ஏதாவது குறை சொல்வது நம்உலக வழக்கம்.
ஆனால் வெற்றியாளனாக மிளிர அவர்கள் பட்ட கஷ்டங்கள் அவர்களுக்கு
மட்டுமே தெரியும்.
படைப்புகளை தபாலில் அனுப்ப முகவரி
குமுதம்
த பெ எண் - 2592
சென்னை 600031
கூரியரில் அனுப்ப
குமுதம்
151,புரசைவாக்கம் நெடுஞ்சாலை
சென்னை 600010
டிஸ்கி - டைட்டிலைப்பார்த்து வெறும் சுய புராணமாத்தான் இருக்கும் என எண்ணி எனது பழைய பாகங்களை மிஸ் பண்ணியவர்களுக்காக