அந்த ஊருக்கே அவர் தான் எல்லாம். நாட்டில் எந்த விஞ்ஞானக்கண்டு பிடிப்பு வந்தாலும் அவர் வீட்டில் தான் முதல்ல வரும். ஊர் மக்கள் ரேடியோ, டி வி , ஃபோன் எல்லாம் அவர் வீட்டில் தான் முதன் முதலா பார்க்கறாங்க . அப்பேர்ப்பட்ட பண்ணையார் வீட்டில் அவர் சொந்தக்காரர் மூலம் அப்போதைக்கு பத்மினி ( கார்) யைப்பார்த்துக்குங்கன்னு விட்டுட்டுப்போறார்.
பண்ணையார்க்கு ஒரே குஷி.பெருமிதம். ஆனா அவருக்கு கார் ஓட்டத்தெரியாது . இதுக்காகவே அவர் ஒரு டிரைவரை வெச்சுக்கறார். ஊர் மக்கள்க்கு ஒரு நல்லது கெட்டதுன்னா அந்த கார்ல தான் போறாங்க , வர்றாங்க .
பொதுவா கார் ஓனரை விட கார் டிரைவருங்களுக்குத்தான் கார் அதிகம் யூஸ் ஆகும். அந்த தியரி படி டிரைவரும் தன் காதலியைக்கவர அந்த காரை யூஸ் பண்ணிக்கறாரு.
பண்ணையாரோட மனைவிக்கு கார்ல போக உள்ளூர ஆசை. ஆனா வெளில காட்டிக்கலை. கார் டிரைவர் ஓட்டுனா எல்லாம் உக்கார மாட்டேன், நீங்களே ஓட்டிப்பழகுங்கன்னு சொல்றாங்க.
அவரும் பழகறாரு.இப்படி சந்தோசமாப்போய்ட்டிருந்த வாழ்க்கைல விதி பண்ணையார் மகள் வடிவத்துல வந்து சிரிக்குது. தாய் வீட்டில் எது கிடைச்சாலும் சுருட்டிட்டுப்போகும் நல்ல குடும்பத்துப்பொண்ணான பண்ணையார் மகள் நைசா பத்மினி காரையும் லவட்டிக்குது.
அதனால சோகத்தில் மூழ்கும் பண்ணையார் என்ன ஆனார் ? மனைவி ஆசை நிறைவேறுச்சா ? என்பது மீதிக்கதை .
ஆர்ப்பாட்டமே இல்லாத , மிகத்தெளிவான ஒரு நதியின் ஓட்டம் போல மிக அழகான திரைக்கதை . 8 நிமிடக்குறும்படத்தை 128 நிமிட முழுப்படமாக எடுக்க இயக்குநர் எவ்வளவு மெனக்கெட்டிருப்பார் என்பது தெளிவாகத்தெரிகிறது . பிரமாதப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் , வாழ்த்துகள்.
ஜெயப்பிரகாஷ் தான் பண்ணையார் ரோல் . அருமையான நடிப்பு . ஓவர் ஆக்டிங்க் சிறிதும் இல்லாமல் மிக இயல்பான நடிப்பு . காரைப்பார்த்து பெருமிதப்படும்போது , காரைத்துடைக்கும்போது கூட கவனமாக , மெதுவாகச்செய்வது , கார் ஓட்ட துடிப்பது , மகளிடம் மென்மையாகப்பேசுவது என சுத்தி சுத்தி சிக்சர்களாக விளாசுகிறார்.
அவருக்கு ஜோடியாக துளசி . குயிலியின் கண்கள் ,சரண்யா பொன் வண்ணன் பாணியில் அமைந்த அழகிய நடிப்பு . இவரும் அவருக்கு இணையாக பட்டையைக்கிளப்பி இருக்கார் . கிழவா என அவர் முன்னால நையாண்டி செய்தாலும் உள்ளூர அவர் மீது இருக்கும் காதல் வெளிக்காட்டும் மர்மப்புன்னகை கொள்ளை அழகு . வயோதிகக்காதலின் அழகிய கவிதையை படிப்பது போல் இருக்கு
விஜய் சேதுபதி தான் டிரைவர் . பல வெற்றிப்படங்கள் கொடுத்த ஹீரோ எப்படி தலைக்கனம் இல்லாமல் சாதா கேரக்டரில் கூட சைன் பண்ண முடியும் என்பதற்கு முன்னோடியாகத்திகழ்கிறார். இவருக்கு படத்தில் முக்கியத்துவம் கம்மி என்றாலும் திரைக்கதையின் நலன் கருதி இவர் அடக்கி வாசித்திருப்பது , இதில் நடிக்க ஒத்துக்கொண்டது பாராட்டத்தக்கது . கார் ஓட்ட பண்ணையார் கற்றுக்கொண்டால் தன்னைக்கழட்டி விட்டுடுவாரோ என்ற பதட்டம் அவர் முகத்தில் லேசாகத்தோன்றி மறைவது நுணுக்கமான நடிப்பு
அவர் கூடவே வரும் பீடை எனும் கேரக்டர் கவுண்டமணிக்கு செந்தில் மாதிரி . அவர் வாயில் யார் விழுந்தாலும் அவர் ஊ ஊ ஊ தான் , செம காமெடியான காட்சிகள் படம் முழுக்க .
நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் . பனங்கிழங்கை வேக வைத்து ப்பிளந்தது போன்ற மாநிறம் முகம், கிராமத்துக்கேரக்டருக்கு அழகாகப்பொருந்துகிறார் . விழிகளாலேயே அவர் பேசி விடுவதால் வசன உச்சரிப்புகளில் செய்யும் சில தவறுகள் கவனிக்கப்படாமலேயே போகிறது . அவர் சிரிக்கும்போது தெரியும் கீழ் வரிசைப்பல் சந்து கூட அழகுதான்
பண்ணையாரின் மகளாக வருபவர் நீலிமா ராணி , பஸ் டிரைவர் , கண்டக்டர் உட்பட பல துணைப்பாத்திரங்கள் நிறைவாகச்செய்து இருக்காங்க. கெஸ்ட் ரோல் ல புன்னகை இளவரசி சினேகா , அட்ட கத்தி தினேஷ் குட் .
சபாஷ் இயக்குநர்
1 பண்ணையார் வீட்டில் அழுது கொண்டு இருக்கும் அக்கம் பக்கம் லேடீஸ் அவரைக்கண்டதும் அழுகையை நிறுத்த அவர் ம் ம் தொடரலாம் என்பது போல் சைகை காட்ட அவர்கள் ஸ்விட்ச் போட்டது போல் அழுவது செம காமெடி ./ அதே காட்சியில் அந்த இழவு வீட்டில் பண்ணையார் தூங்க , அங்கே வரும் பீடை அவர் இறந்து விட்டதாக அழும் காட்சி மாஸ்
2 டெட் பாடியைக்கொண்டு போக வரும் பத்மினி கார் கூட வரும் கூட்டத்துக்கு இடம் இல்லாமல் கார் மேல் சேர் போட்டு சிட்டிங்க் எம் எல் ஏ மாதிரி சிட்டிங்க் டெட் பாடியாக வருவது நல்ல கற்பனை
3 பண்ணையார் , ஹீரோ இருவரும் காரில் டிரைவிங்க் கற்பது எந்த அளவு முடியுமோ அந்த அளவு காமெடி கையாண்டிருக்காங்க
4 பீடை கேரக்டர் ரொம்ப முக்கியமான , கவனிக்கத்தக்க கேரக்டர்., அதுக்கான காட்சி அமைப்புகள் அபாரம் , ஏன்னா இந்த திரைக்கதையில் ஆல்ரெடி ஸ்கோர் பண்ண பலர் இருக்கும்போது இந்த கேரக்டருக்காக மெனக்கெட்டு காட்சிகள் அமைத்தது பெரிய விஷயம்
5 பாடல் காட்சிகள் , ஒளிப்பதிவு . இசை , பின்னணி இசை எல்லாமே சராசரிக்கும் மேல் . குறிப்பா எங்க ஊரு வண்டி இது பாட்டு , பேசுகிறேன் பேசுகிறேன் காதல் மொழி , பேசாமல் பேசுவது உன் கண் விழி பாட்டு , உனக்காகப்பொறந்தேனே பாட்டு என 3 செம ஹிட் பாட்டு
6 சினேகா வீடு தேடி வரும்போது அவர் கிட்டே அவரோட அப்பா கார் கொடுத்த விஷயத்தை சொல்லலாமா? வேணாமா? என தடுமாறுவது , சினேகா அந்த விஷயம் தெரிஞ்சும் அசால்ட்டாக விட்டதும் , குற்ற உணர்வில் மருகுவது எல்லாமே பிரமாதம்
சில மைனஸ்
1 கதை நடக்கும் கால கட்டம் 1980 + என்பதால் அதுக்கு ஏற்றாற் போல ஆடை வடிவமைப்பு எல்லாம் கவனமா பண்ணி இருக்காங்க . ஆனா நாயகியின் ஜாக்கெட் டிசைன் ஏதோ 1970 ல நடக்கும் கதைல வரும் வரும் வடிவுக்கரசி ஜாக்கெட் மாதிரி ரொம்ப ஓல்டு ஃபேசனா இருக்கு , லூஸ் ஃபிட்டிங்க் வேற . அது தனியா துருத்திட்டு இருக்கு .
2 ஒரு முறை கூட நகரத்துக்கு சென்று காரை சர்வீசுக்கே விடாம பண்ணையார் இருக்கலாம், டிரைவர் கூடவா அப்டி இருப்பார் ?
3 ஊர்ப்பண்ணையார் இடம் கார் மெக்கானிக் என்னமோ கேப்டன் ரேஞ்சுக்கு உதார் விடுவதும் , பண்ணையார் காங்கிரஸ் போல் கெஞ்சுவதும் ஓவர் . 1980 கால கட்டத்தில் பண்ணையார்க்கு முடி திருத்துபவர் முதல் சேவகம் செய்பவர் வரை எல்லோரும் எப்படி பம்முவார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்
4 முன் பாதியில் சர சர என சாரப்பாம்பு போல் நகரும் திரைக்கதை பின் பாதியில் மண்ணுள்ளிப்பாம்பு போல் நெளிகிறது , எடிட்டிங்கில் கவனம் தேவை .
5 பேருந்தில் சிற்றுந்து என எழுதி இருக்கு . ஆனா அது பெரிய சர்வீஸ் பஸ் மாதிரி இருக்கு . அந்தக்காலத்தில் ஏது மினி பஸ் ? அதுவும் இல்லாம கிராமம்னா அங்கே அரசாங்க பஸ் ஓடாம தனியார் பஸ் ஓடுவது ஆச்சரியம்
6 பார்வையாளர்கள் பெரும்பாலும் விஜய் சேதுபதி -ஐஸ் ஜோடி ரொமான்ஸை எதிர்பார்த்திருக்க அதிக காட்சிகள் பண்ணையார் & கோ விற்கு வைத்தது திரைக்கதைக்கு சரியாக இருந்தாலும் ஆடியன்சுக்கு ஏமாற்றமே
7 கார் ரிப்பேர் ஆனதும் மகள் காரைத்திருப்பிக்கொண்டு வருவது நம்பும்படி இல்லை.
மனதில் நின்ற வசனங்கள்
1. ஒத்தை வார்த்தை ல சொல்லு.பிடிச்சிருக்கா? இல்லையா?
2 காருக்கு க்ளீனர் வெச்ச முத ஆளு நீங்க தான்
3 புதுத்துணி எங்கே?
பொட்டில.
போடலை?
போட்டா அழுக்காகிடுமே?
4 வண்டியைப்புள்ளை மாதிரி வெச்சுப்பார்த்துக்கிட்டோம் \\
உங்களை யாரு அப்டி ஊரான் வீட்டு வண்டியைப்பார்த்துக்கச்சொன்னது ?
5 அய்யா , கீர் கணோம்
அவசரம் , முதல்ல வண்டியை எடு , அதை பின்னால சாவகாசமா தேடிக்கலாம் \\
அய்யோ , கீர் இருந்தா தான் வண்டியைஎடுக்க முடியும்
6 அய்யா 2 நாள் போது ம்
அதுக்குள்ளே கார் ஓட்ட கத்துக்கலாமா?
ம்ஹூம் , இப்டி ஓங்கி கதவை அடைச்சா கார் கதவு 2 நாள் கூட தாங்காது
கையோட வந்துடும்
7 நீ மட்டும் 5 ரூபா குடுத்துட்டா உன்னை முன் சீட்டில் என்ன ? டிரைவர் சீட்டிலேயே ஏத்திக்கொண்டு போறேன்
8 பட்டப்பேரு தான் பீடை , ஆத்தா வெச்ச பேரு பெருச்சாளி
9 உன்னை எல்லாம் 2000 வருசத்துக்கு யாரும் எதும் பண்ணிட முடியாது . நல்லா இரு .. போய்யாங்
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்
1. பத்மினி யின் இன்ட்ரோ சீன் பிஜிஎம் இளைய ராஜா வுக்கு இணையான தரம்
2 ரம்மி ல விட்டதை பண்ணை ல பிடிச்சிடுவாரா? # ஓப்பனிங் சீன் காமெடி அலப்பறை .விஜய் சேதுபதி ராக்ஸ்
3 கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் சென்ட்டிமென்ட் - ஹீரோயின் இன்ட்ரோ @ இழவு வீடு # விழா ,மதயானைக்கூட்டம் ,பண்ணையாரும் பத்மினியும்
4 படம் கொஞ்சம் ஸ்லோவாப்போகுது.ஏப்பா ஆபரேட்டர் .அடிச்சு வேகமா ஓட்டப்பா
5 சமதளத்தில் ஓடும் நதி போல மிக நிதானமான ஆனால் அழகிய திரைக்கதை # பண்ணையாரும் பத்மினியும் இடை வேளை
6 விமர்சகனா இருப்பதில் என்ன பிரச்சனைன்னா இடை வேளை விட்டா கேன்ட்டீன் போக டைம் இருக்காது.வசனத்தையாவது டைப்புவோம்
7 உனக்காகப்பிறந்தேனே மெலோடி சாங் கலக்கல் னா அதற்கான ஜெயப்ரகாஷ் ஜோடியின் நடிப்பு பதநீர் ( தெளுவு) இதம்
சி.பி கமெண்ட் - பண்ணையாரும் பத்மினியும் - கிளாசிக்கல் மூவி - கமர்ஷியல் ஹிட் கடினம். லாஜிக்கல் மிஸ்டேக் அதிகம் .பெண்களுக்கு பிடிக்கும். ஏ செண்ட்டரில் ஓடும் .
ஆனந்த விகடன்எதிர்பார்ப்பு மார்க் =42
குமுதம் ரேங்கிங்க் =- ஓக்கே
,ரேட்டிங் = 3 / 5