வீரப்பன் காட்டில் பதுக்கியதாகச்சொல்லப்
படும் கோடிக்கணக்கான பணம் என்ன ஆச்சு? அதை வெச்சு
கற்பனையா ஒரு திரைக்கதை அமைச்சு
இயக்குநர் பத்மா மகன் இயக்கிய படம் தான் கூத்து . வெறும்
10,000 ரூபாய் முதலிட்டில் ஆரம்பிக்கபட்ட இப்படம்
இப்போது டைட்டில் நேற்று இன்று என மாறப்பட்டு ரிலீஸ் ஆகி
இருக்கு. இவர் ஆல்ரெடி அம்முவாகிய நான் எனும் ஆர் பார்த்திபன்
படத்தை இயக்கியவர்.
5 பேர் கொண்ட குழு விரப்பன் இருக்கும் காட்டுக்குள் போகுது.
அவங்களுக்கு கொடுக்கபட்ட பிராஜக்ட் வீரப்பனை பிடிக்கச்சென்ற
போலீஸ் ஆஃபிசர் கட்சி மாறி வீரப்பன் கூடவே சேர்ந்துட்டார் என
டிபார்ட்மெண்ட்டால் நம்பப்படும் ஆளை பிடிப்பதே.
அவங்களுக்கு எதேச்சையா வீரப்பன் பதுக்கி வெச்ச பணம்
கிடைக்குது. ஹீரோ மட்டும் அந்தப்பணம் அரசுக்கு சேரனும்கறார்/
மத்தவங்க அதை ஆட்டையைப்போட்ரலாம்கறாங்க .அவங்களுக்குள்
நடக்கும் போராட்டம் ஒரு டிராக் .
இது நேற்று என டைட்டில் தரப்பட்டு ஃபிளாஸ் பேக் காட்சியா
வருது.
போலிஸ் ஆஃபீசரா கெஸ்ட் ரோலில் சினேகாவின்
நிகழ்காலக்கணவர் பிரசன்னா. கச்சிதமான நடிப்பு . ஆனால்
சண்டைக்காட்சிகளீல் அவரிடம் போலீஸ் ஆஃபீசர் போல் மிடுக்கு
பாடி லேங்குவேஜ் இல்லாதது பெரிய மைனஸ்
தேடுதல் குழுவில் பணம் மீது ஆசைபடாத வராக ஹீரோ
ரிச்சர்ட். ஷாலினி அஜித் குமாரின் தம்பி. போலீஸ் ஆஃபீசராக
வரும் இவர் மட்டும் ஃபங்க் கட்டிங்க் , டி ஆர் தாடி என வலம் வருவது
எப்படியோ?
தேடுதல் குழுவை மயக்கும் அந்த மாதிரி பொண்ணாக அருந்ததி
கவர்ச்சித்திருவிழா நடத்தி இருக்கிறார் . ஒரே ஒரு முண்டா
பனியன் மட்டும் அணீந்து பாலு மகேந்திரா நாயகி போல் படம்
முழுக்க வருவது கிளு கிளுப்பு . க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ்
காட்சி எதிர்பார்த்தது தான் .
பொம்பளைப்[பொறுக்கியாக பாத்திரத்துடன் ஒன்றி நடித்து உள்ளார்
களவாணி விமல். கில்மா லாட்ஜ் ரிசப்ஷனிஸ்ட்டை கரெ\க்ட்
பண்ணுவது , சவாரி வரும் ஃபிகரையே உஷார் பண்ணுவது என
எல்லா சிம்பு வேலையும் செய்யறார் . இவரது உச்சரிப்பு மட்டும்
பாடாய் படுத்துகிறது .
ரிச்சர்டின் சகோதரியாக விமலுக்கு ஜோடியாக வருபவர் நந்தகி
சுமாரா இருக்கார் . தேறிடும்,
காட்டின் லொக்கேஷன் செலக்ஷன் , ஒளிப்பதிவு எல்லாம் பக்கா.
திரைக்கதை உத்தி கூட நல்லா இருக்கு
ராஜேஷ் குமார் நாவலில் வருவது போல் இப்படி ஒரு ரில்
அப்படி ஒரு ரில் என கதை சொல்வது பக்கா
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 எல்லோருகும் அறிந்த வீரப்பன் கதை , யாரும் அறியாத அந்த
பண மேட்டர் என கற்பனை கலந்து திரைக்கதை அமைத்த விதம்
2 இண்ட்டீசண்ட்டான மேக்கிங்க் உள்ள படமா இருந்தாலும்
டீசண்ட்டா பாடல் எழுதிய யுக பாரதி
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. நடுகாட்டில் பயணிக்கும் நாயகி கால் டாக்சி டிரைவர் ஃபோன்
நெம்பரை வாங்கி வெச்சுக்க மட்டாரா?
2 . ஒரு போலீஸ் ஆஃபீசரின் தங்கை பர்சில் ஏ எடி எம் கார்டோ ,
செல் ஃபோனொ இல்லாமல் வருவாரா?
3 லாட்ஜில் ரூமில் நாயகி தங்கி இருக்கையில் பாத்ரூமில்
குளிச்சிட்டு இருக்கார் . நாயகன் விமல் வந்ததும் டர்க்கி டவலுடன்
டக்னு என்னமோ தேவதூதர் மாதிரி தரிசனம் தர்றாரே? எப்படி ?
யோக்கியமான ஃபேமிலி கேர்ள் அப்படியா வரும் ? வெய்ட். நான்
குளிச்சுட்டு இருகேன்னு தானே சொல்லும்
4 லாட்ஜ் ரிசப்ஷனிஸ்ட் வாக் மேன் கேட்டுட்டு இருக்கார்.
அப்போ விமல் வந்து வாக்மேனை ஆட்டையைப்போடறார்.
பின் ரூமுக்குப்போய்டறார்., அது அந்த ரிசப்ஷனிஸ்ட்க்குத்
தெரியாமல் போவது எப்படி ?
5 பொம்பளைப்பொறுக்கியா ஐட்டம் கூட எல்லாம் சகவாசம்
வெச்சிருக்கும் நாயகனைப்;பார்க்கும்போது நமக்கே வாமிட் வர்ற
மாதிரி இருக்கு. குடும்பப்பெண்ணான நாயகிக்கு எப்படி காதல்
வரும்?
6 போலீஸ் ஆஃபிசர்கள் 4 பேரும் அந்த கில்மா லேடியுடன்
கூத்தடிக்கும் காட்சிகள் முகம் சுளிக்க வைப்பவை
7 ஆற்றில் குளிக்கும் பொண்ணுக்கு துப்பட்டா வேணா நழுவி
தண்ணில போகலாம் . ஆனா சுடிதார் டாப்பே எப்படி நழுவி போகும்?
அடுத்த ஷாட்டில் அவர் ஆத்தில் இருந்து எழும்போது பாட்டம்
கூட காணோம் . என்னய்யா லாஜிக் இல்லா மேஜிக் ?
என்ன தான் கிளு கிளுப்பா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா?
மனம் கவர்ந்த வசனங்கள்
1 . இந்தக்காட்டில் சிங்கம் , புலி இருக்காமே ? உண்மையா?
பின்னே ? காட்டில் சிம்ரனா இருப்பாங்க ?
2 இன்னைக்கெல்லாம் படிச்சவங்க தான் நாட்டை கெடுத்து குட்டிச்
சுவர் ஆக்கிட்டு இருக்காங்க
3 தனியா ஃபிகர் இருக்கும்போதே பிக்கப் பண்ண முடியல /
இதுல இவன் வேற
4 என்னது? கடைசில நம்ம கேசை கண்டு பிடிச்சது ஒரு கேசா?
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
1 எச்சரிக்கை -,நேற்றும் இன்றும் - பெண்களைக்கேவலப்படுத்தும் காட்சிகளுடன் கிட்டத்தட்ட கில்மாப்படம் போல்- குடும்பப்பெண்கள் தவிர்க்கவும் 18+
2 சந்தனக்கடத்தல் மன்னன் அமரர் வீரப்பன் ன் வேன் என் கவுன்ட்டர் சீனுடன் பரபரப்பான ஓப்பனிங் # நேற்று இன்று
சி பி கமெண்ட் -நேற்று இன்று -வீரப்பன் காட்டில் பதுக்கிய பணத்தை வேட்டை ஆடும் ஆக்சன் த்ரில்லர்- விகடன் மார்க் =41 ,ரேட்டிங் = ச் ( பெண்கள் தவிர்க்க)
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 41
குமுதம் ரேட்டிங்க் = ok
diski 1 =
வடகறி - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2014/ 06/blog-post_591.html
2
வெற்றிச்செ ல்வன் - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2014/
3