Showing posts with label நெஞ்சுக்கு நீதி (2022) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ). Show all posts
Showing posts with label நெஞ்சுக்கு நீதி (2022) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ). Show all posts

Friday, May 20, 2022

நெஞ்சுக்கு நீதி (2022) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )


 ஜெய்  பீம்  மாதிரி  ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு  இழைக்கப்படும்  அநீதிக்கு  போராடும்  ஹீரோவின்  கதைதான் இந்த  ஆர்ட்டிக்கிள் 15(2019) ஹிந்திப்படத்தின்  அஃபிசியல்  ரீமேக். ஒரு  நல்ல  கரைம்  த்ரில்லர்  கதையில்  சாமார்த்தியமாக ஜாதிய  ஏற்றத்தாழ்வுகளை  சுட்டெரிக்கும்  கூர்மையான  வசனங்களால்  ஒரு  மாறுபட்ட  த்ரில்லர்  மூவியைப்பார்த்த  அனுபவம்  கிடைக்குது 


பொள்ளாச்சி  பக்கம்  ஒரு  கிராமம். தலித்  சிறுமிகள் மூவர்  காணாம  போறாங்க. அதுல  ரெண்டு பேர்   மரத்தில்  தூக்கில்  தொங்கறாங்க, இன்னொரு  ஆள்  காணோம் , போலீஸ்  ஆஃபீசராக  வரும்  ஹீரோ  அந்த  கேசை  துப்பு   துலக்கி   போலீஸ்  துறை , அரசியல்  துறை  தலையீடுகளைத்தாண்டி  எப்படி  ஜெயிக்கிறார்  என்பதே  திரைக்கதை 


ஹீரோவா  உதயநிதி  ஸ்டாலின். தனிப்பட்ட  முறையிலும்  சரி  , அரசியல்  ரீதியாகவும்  சரி    சிற்சில  விமர்சனங்கள்  இருந்தாலும்  உதயநிதி , அருள் நிதி  இருவரையும்  ஒரு  விஷயத்துக்காக  பாராட்டியே  ஆக  வேண்டும் . தங்களுக்கு  என்ன  வருமோ  அந்த  மாதிரி  ரோலை  தேர்வு  செய்வது . ஓவர்  பில்டப்போ  , ஹீரோயிசமோ  காட்டாமல்  முடிந்தவரை  அடக்கி  வாசிப்பது . பணபலம்  ,பதவி  பலம்  இருந்தாலும்  சக்திக்கு  மீறி  எதுவும்  செய்யாததே  சபாஷ்  போட  வைக்குது


உதயநிதிக்கு இது  ஒரு  முக்கியமான  படம் . போலீஸ்  ஆஃபீசர்  ரோலுக்கு  அவரால்  என்ன  அளவு  நியாயம்  செய்ய  முடியுமோ  அந்த  அளவு பண்ணி  இருக்கார் , ஃபிட்டான  தொப்பை  இல்லாத   பாடி  , க்ளோஸ்  ஹேர் கட்  எல்லாம்  பக்கா, வசனங்களூம் , பிஜிஎம்மும்  அவருக்கு  பக்க பலம் . வெல்டன்  உதயநிதி 


ஹீரோயினாக   மனைவியாக  வரும் தன்யா  வுக்கு  அதிக  காட்சிகள்  இல்லை . தன்  தங்கைக்காகப்போராடும்   ஷிவானி  குட்  ஆக்டிங்க்.   ஆரி  அர்ஜூனன்  ஓக்கே ரகம் 


படத்தின்  முக்கிய  வில்லனாக , அரசியல்வாதியாக  வரும்   ராகுல்  தயாரிப்பாளர்களில்  ஒருவர்  போல .ஓக்கே ரகம்   சர்க்கிள்  இன்ஸ்பெக்டராக  வரும்   சுரேஷ்  சக்ரவர்த்தி  ஹீரோவுக்கு  முன்  கும்பிடு  போட்டு  குழையும்  நடிப்பிலும் சரி  ,  ஹீரோ  இல்லாத  போது  பண்ணும்  வில்லத்தனமும்  சரி  தெனாவெட்டான  நடிப்பு 


இளவரசு , மயில்சாமி  கொடுத்த  கேரக்டர்களை  சரியாக செஞ்சிருக்காங்க .  சாயாஜி  ஷிண்டே  ஒரே  காட்சியில்  வந்தாலும்  ஸ்கோர்  பண்றார் 


 இசை   திபு  நினன்  தாமஸ்  பிஜிஎம்மில்  பின்னி  இருக்கார்  2   பாடல்களூமே  குட்  என்றாலும்  கதகளி  பாட்டு  செம 


வாட்டாக்குடி  இரணியன்  படத்துக்குப்பின்  புரட்சிகரமான வசனங்கள்  இதில்  தான். வசனகர்த்தா  கலக்கி  விட்டார் 


 சபாஷ்  டைரக்டர் ( அருண்ராஜா  காமராஜ்)


1    ஒரு  அஃபிசியல்  ரீமேக்  படத்தை  வெற்றிப்படமாக  கொடுப்பது  எளிதல்ல . தமிழுக்கு  தக்கபடி  சில  சீன்கள்  மாற்றி  அதே  உயிரோட்டத்துடன்  தருவது  பாராட்ட  வேண்டியது. குறிப்பாக  ஒரிஜினல்  படத்தில்  வட  மாநிலத்தில்  நடக்கும்  கதையை  சாமார்த்தியமாக  பொள்ளாச்சி  பாலியல்  பலாத்கார  சம்பவத்துடன்  கோர்த்து   கதை  அமைத்ததும், ஹீரோ  கேரக்டரை  உயர்த்திப்பிடிக்கும்  வசனங்களை  திட்டமிட்டு  பயன்படுத்தியதும்  அட  போட  வைக்குது


2  ஹீரோ  சக  போலீஸ்  ஆட்களிடம்  அவர்கள்  ஜாதி  பற்றி  விசாரிக்கும்  இடம் தியேட்டரில்  கைதட்டலை  அள்ளி  விட்டது (  எற்கனவே  இதே  போல  ஒரு  காட்சி  ஜெய்பீம்ல  வந்தாலும்  இதுவும்  ஓக்கே  தான் ) 


3    ஒரிஜினல்  படத்தில்  தூக்கு  மாட்டிக்கொண்ட  இரு பெண்களும்  லெஸ்பியன்கள்  என்பது  போல  காட்சிகள்  நீளும் ,  தமிழுக்காக  அதை அடக்கி  வாசிச்சிருக்காங்க 


4  இது  போன்ற  க்ரைம்  த்ரில்லரில்  குற்ரவாளியை  ஆரம்பத்திலேயே  அடையாளம்  காட்டினாலும்  அது  போக  மீதி  இரண்டு  குற்ரவாளிகளை  க்ளைமாக்சில்  காட்டும்  ட்விஸ்ட்  குட் \


5  கணவன்  மனைவியான  ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  ஃபோன்  மூலம்  உரையாடிக்கொள்வது  அப்பப்ப  கேஸ்  டீட்டெய்ல்  ஷேர்  செய்வது  தமிழ்  சினிமாவுக்கு  புதுசு 


6   திருப்பூரில்   பட்டியல்  இன  பெண்  என்பதால்  சத்துணவுப்பணியாளர்  சமைத்த  சாப்பாட்டை  கொட்டுவது  சாமார்த்தியமாக  கதை  ஓட்டத்தில்  சேர்த்தது ,    பெரியார்  அம்பெத்கார்  சிலைகள்  கூண்டுக்குள்  இருப்பதற்கான  விளக்கம்  எல்லாம்  அபாரம்  (  இவை  ஒரிஜினல்  வெர்சன்ல  இல்லை  ) 


7  பிறபடுத்தப்பட்ட  வகுப்பைச்சேர்ந்த  பெண்  டாக்டராக  இருந்தாலும்  எனக்கும்  முன்  அவ  கோட்  போடக்கூடாது  என  போலீஸ்  ஆஃபீசர்  சொல்ல  ஒரு  கட்டத்தில் அந்த  லேடி   டாக்டர்  போலீசை யே  மாட்ட  விட்ட  பின்  ஸ்லோமோஷனில்  கோட்  போட்டு  நடப்பது  கூஸ்பம்ப்  மொமெண்ட் 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ்   , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   தலித்  பெண்களை  ரேப்  செய்யும்  மூவரும்   ஈசியாக  தப்பிக்க  வாய்ப்பு  இருந்தும்  மடத்தனமாக  மரத்தில்  தொங்க  விடுவது  ஏன்?  போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்டில்  ரேப்  செய்தது  தெரியாதா?  சம்ப்ள  உயர்வு  கேட்டதற்கு  பதிலடியா ஒரு  பயம்  வரனும்  என  சால்ஜாப்  சொல்லப்படுது , சம்பந்தப்பட்ட  பெண்கள்  காணாமல்  போனாலே  போதுமே?


2   பாதிக்கப்பட்ட  மூன்று  பெண்களில்  ஒரு  பெண்  தப்பிக்கிறார்.   குற்ரவாளிகளில்  இருவர்  போலீஸ்  டிபார்ட்மெண்ட்  ஆட்கள்  அவர்கள்  மோப்ப  நாயை  வைத்து  அந்தப்பெண்ணை  சேஸ்  பண்ண வில்லையே?  ஏன்? 


3    காணாமல்  போன  சிறுமியைக்கண்டுபிடிக்க  ஹீரோ  அந்த  புரட்சி  பேசும்  ஆளை  உதவிக்கு  அழைத்தால்  ஈசியாக  வந்திருப்பாரே? அதை  விட்டுட்டு  சுற்றி  வளைத்து  இழுப்பது  ஏன்? 


  நச்  வசனங்கள்    (  தமிழரசன் பச்சமுத்து)


1    அப்பா  , நம்ம  தாத்தாவை  இங்கே  எரிக்காம    ஏன் அங்கே  எரிச்சோம்?

'நம்மல இங்க எரிக்க தாண்டா விடுவாங்க எரிய விடமாட்டாங்க', '


2   தீ கூட எங்களுக்கு தீட்டாச்சு', 


3   இந்திய  அரசியல்  சட்டத்தை  உருவாக்கிய  அம்பேத்காரையே  இன்னும்  ஜாதிய  தலைவராத்தான்  சிலர்  பார்க்கறாங்க ? 


4 நம்ம  வலிகளைப்போக்கத்தான்  கட்சினு  நினைச்சா   நம்ம  வலிகளை  வெச்சுத்தான்  கட்சினு  ஆகிடுச்சு 


5  சார்  , இது  கவர்மெண்ட்  ஸ்கூல்; அப்படி  பண்ணக்கூடாது 


  நாம  தான்யா  கவர்மெண்ட்  டே


6   உங்க  சட்டம்  சிஸ்டத்தைக்காப்பாத்தும் , நியாயத்தைக்காப்பாத்துமா? 

7  எல்லாத்தையும் ஹீரோ மாதிரி உடனே மாத்திர முடியாது'


, 'ஹீரோவ எதிர்பார்க்காதவங்க வேணும்


எல்லாரும் சமம்னா யார் ராஜா?

 சமம்னு நெனைக்கிறவன்தான் ராஜா'


, '9  கோட்டால போட்ட டாக்டர் கோட்', 


'10  நடுவுல நிக்கிறது இல்ல சார் நடுநிலை; நியாயத்தின் பக்கம் நிக்குறது தான் நடுநிலை', 



11  ஒருத்தன் நல்லவனா இருக்குறதும் கெட்டவனா இருக்குறதும் சாதியில இல்ல குணத்துல இருக்கு'


12 , 'வலியில கத்துனா கூட ஏன் கத்துறன்னு தான் கேப்பாங்களே தவிர, அடிக்கிறவன எதிர்த்து பேசமாட்டாங்க', 

'13  சட்டம் தான் இந்த நாட்டின் தேசிய மொழி'

14  இந்தி கத்துக்குறது ஆர்வம். கத்துக்கணும்னு கட்டாயப்படுத்துறது ஆணவம்'

15    2000    வருசமா    நாங்க பட்டினி  கிடந்ததே  அவங்களுக்குப்புரியல 16 


16   வதந்திகளை  பரப்பறதை  விட   வதந்தியை  நம்புவது  ஆபத்தானது 


17  ஜெயிலுக்குப்போனவன்னு   ஏன் யோசிக்கறீங்க? அரசியல்  பண்ண  ஒரு  ட்ரெய்னிங்னு நினைங்க


18   சரியானவங்க  கைல  சட்டம்  இருந்தா  போது ம் , தப்பானவங்க ச்ட்டத்தைக்கைல  எடுக்க  வேண்டிய  அவசியம் இல்லை 


19   ஒவ்வொரு  ஜாதிக்கும்  ஒரு  குணம்  இருக்கும், அதும்படிதான்  நடப்பாங்க 


20   இந்த  உலகத்துல  தப்பு  பண்றவங்க  5%  பேர்னா  அதை  வேடிக்கை  பார்க்கறவங்க 85%  பேரு , தப்புக்கு  துணை  போறவங்க  10%  பேரு 


சி பிஎஸ் ஃபைனல் கமெண்ட் -


நெஞ்சுக்கு நீதி −நேர்த்தியான திரைக்கதை,பொறி பறக்கும் புரட்சிகர வசனங்கள் ,நெஞ்சை நெகிழ வைக்கும் நெறியாள்கை,உதயநிதியின் கச்சிதமான நடிப்பு,வெரிகுட் க்ரைம் த்ரில்லர், எதிர்பார்க்கப்படும் விகடன் மார்க் 48 ,( 50 போடவும் வாய்ப்பு இருக்கு ) ரேட்டிங் 3.25 / 5