Showing posts with label நெஞ்சத்தைக்கிள்ளாதே - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label நெஞ்சத்தைக்கிள்ளாதே - சினிமா விமர்சனம். Show all posts

Wednesday, September 09, 2020

நெஞ்சத்தைக்கிள்ளாதே (1980) - சினிமா விமர்சனம்

நெஞ்சத்தைக்கிள்ளாதே  - சினிமா  விமர்சனம்

 

  செம ஹிட் படம்னு  தெரிஞ்சும்  இத்தனை  நாட்களா  பார்க்காம  விட்டு வெச்சதுக்குக்காரணம் அட்லீ  அட்டக்காப்பி  அடித்த  ராஜாராணி  படத்தின்  ஒரிஜினல்  வெர்சன் ஆன   மவுன ராகம்  படத்தின்  கதை  கூட இந்தப்படத்தில் இருந்து  தான்  எடுக்கப்பட்டிருக்கு  என  பலரும்  சொல்லக்கேட்டதால். ஆனா  இந்தப்படத்தின்  முடிவு தான்  மவுனராகம்  பட  தொடக்கம். , கிட்டத்தட்ட  பாகம் 2  போல .

 

ஹீரோயின்க்கு ஒரு அண்ணன். பாசமானவன், ஆனா  அண்ணி  கொடுமைக்காரி . அதனால  அண்ணன்  வேற  ஒரு பொண்ணோட  கனெக்சன் ல இருக்கான். ( முதல்  மரியாதை  சிவாஜி , வடிவுக்கரசி, ராதா   பாத்திர  வடிவமைப்பு கூட   இந்த  அண்ணன் , அண்ணி , காதலி  கேரக்டர்களின் தாக்கமாக  இருக்கக்கூடும்)

 

ஹீரோயின் கூட இரு ஆண்கள்  பழகறாங்க . பந்திக்கு  முந்து   பாவையிடம்  காதலைச்சொல்வதிலும்  முந்து  தத்துவப்படி  முதலில்  தன் காதலைச்சொன்னவன்  எவனோ  அவனை  நாயகி  காதலிக்க சம்மதம்  சொல்றா

 

ஆனா  நாயகியின்  காதலன்  சந்தேக  புத்திக்காரன்.ஏற்கனவே நாயகிக்கும், அவர் அண்ணிக்கும்  பல  வாய்க்கா தகறாரு  இருக்கறதால  காதலனின் பெற்றோர்  பெண்ணைப்பற்றி விசாரிக்க  வந்தப்ப  அண்ணி  இல்லாததும் , பொல்லாததுமா சொல்லி  குழப்பி  அனுப்பிடறா

 

அவங்க  பேச்சைக்கேட்டு   காதலன்  நாயகி கிட்டே  “ நீ  ஏற்கனவே  கர்ப்பம் ஆகி கலைச்சவளாமே? உண்மையா ? என கேட்க  அன்றோடு அந்த  காதல்  பணால்

 

பின்  நாயகி அண்ணனின்  விருப்பப்படி /  வற்புறுத்தலால்  ஏற்கனவே  ஒரு ஆள்  ப்ரப்போஸ்   பண்ண  தயங்கியவன்னு சொன்னனே அவனை  கல்யாணம்  பண்ணிக்கறா, ஆனா  தன் பழைய  காதலன்  நினைவில்  இருந்து  அவரால் மீண்டு   வர  முடியல.

 

 இந்த  மாதிரி  தருணத்துல  நாயகி  தன் கணவனுடன் தங்கி  இருக்கும்  அபார்ட்மெண்ட்டில்  முன்னாள்  காதலன்  குடி வர்றான். அதுக்குப்பின்  என்ன நடந்தது என்பதே  பின் பாதி  திரைக்கதை

 

நாயகியா  சுஹாசினி  இதில் தான் அறிமுகம் , கலக்கி  இருக்காங்க, ஆக்சுவலா  மனதில் உறுதி  வேண்டும், சிந்து  பைரவி  மாதிரி  சில  குறிப்பிட்ட  படங்களில்  அவர் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்த்து , ஆனா  டி வி நிகழ்ச்சிகளில்  சினிமா விமர்சனம்  பண்ணும்போதும் , இன்ன பிற  டாக் ஷோக்களிலும்  அவரது  செயற்கையான  சிரிப்பும் ,  சில  முக  சேஷ்டைகளும்  அவரை  அந்நியப்படுத்தி விட்டது . ஆனா  எல்லாருக்குமே இந்தப்படத்தில்  அவர் நடிப்பு  ரொம்பப்பிடிக்கும், அற்புதமான  முக  பாவனைகள்

 

அண்ணனாக ஜெண்டில்மேன்  சரத்பாபு. அநாயசமான  நடிப்பு. மனைவியின்  டார்ச்சர்களை சகித்துக்கொள்வது   அருமை

 

நாயகியின் சந்தேக புத்திக்காதலனாக  மோகன். அசால்ட்டா நடிச்சிருக்காரு. கணவனா  பிரதாப்  போத்தன். இவர்  நடிப்பும் ஓக்கே ரகம்

 

பாடல்கள் , இசை  மிகப்பெரிய  +/ தமிழ்  சினிமாவின் முதல் ஜாகிங் பாடலான ( பாடல் முழுக்க இருவரும் ஜாகிங் போகும்போதே ஒலிக்கும் பாடல்  என்பதால் ஜாகிங் பாடல்)  பருவமே  புதிய  பாடல் பாடு  அருமையான  படமாக்கம்

 

சபாஷ்  இயக்குநர்

 

1  நாயகி மேல்  இருவர் ஆசைப்பட்டாலும்  நாயகிக்கு  யார் மேலும்  காதல்  இல்லை . முதலில்  ப்ரப்போஸ்  செய்தவர்க்கு ஓக்கே சொல்வது   2 ஜி ஊழல்  வழக்கில்  ஆ ராசா முதலில்  வருபவருக்கே  முன்னுரிமைனு சமாளிச்ச மாதிரி  நாயகி லெஃப்ட் ஹேண்டில்  காதலை  டீல் பண்ணுவது  புதுசு

 

2   அண்ணியைக்கடுப்படிக்க  நாயகி செய்யும் குறும்புகள்  அக்மார்க் டைரக்ச்ன்  டச். பின் வரும்  ட்விஸ்ட்டில்  இதை  கனெக்ட்  பண்ணி இருப்பது  நல்ல ஐடியா

 

3  நாயகன்  , நாயகி  இருவருக்குமான  காதல்  காட்சிகள்  ஆகட்டும் , கணவன் , மனைவிக்கான  காட்சிகள்  ஆகட்டும்  காட்சிகளில்  அதீத  கண்ணியம்

 

 திரைக்கதையில் சில  நெருடல்கள்

 

1        அண்ணனுக்கும், அண்ணிக்கும் என்ன பிரச்சனை  என்பது  சரியாக  சொல்லப்படவில்லை . முதல் மரியாதையில்  இயக்குநர்  பக்காவாக  காரணத்தை  ஃபிலாஸ்பேக்கில் விளக்கி இருப்பார்

2        அண்ணன்  சின்ன வீடு வெச்சிருப்பதை  நியாயப்படுத்த  உடல் ரீதியான தொடர்பெல்லாம் இல்லை, சும்மா பேச்சு மட்டும் தான் என தங்கையிடம்  விளக்குவது எல்லாம் நம்பும்படி இல்லை

3        அண்ணி  சிடு சிடு கேரக்டராக  இருப்பதால்  அண்ணன்  சின்ன வீடு வெச்சாரா? அண்ணன்  சின்ன வீடு வெச்சிருப்பதால் அவரைப்பழி  வாங்க  அண்ணி அப்படி செய்தாரா? என்பது  சரியாக  சொல்லப்பட வில்லை

4        சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம்  வீட்டை ரெண்டு பண்ணும்  அண்ணி சின்ன வீட்டு விவகாரத்தில்  தாம் தூம்னு குதிப்பார் என  பார்த்தால்;  பெருசா  கண்டுக்கலை

5        நாயகிக்கு தன்னிடம் பழகும்  இரு ஆண்களும்  எதுக்காகப்பழகறாங்க   என்பது தெரியாமலா  இருப்பார்?  பிரதாப்  போத்தனுக்கு தன் மீது காதல்  உண்டு என்பதை  அவர்  அறியாதது  ஆச்சரியம்

 சி.பி ஃபைனல் கமெண்ட் -   செயற்கைத்தனம்  எதுவும் இல்லாத  நீட்டான  ஃபேமிலி மெலோ டிராமா . பார்க்காதவங்க  அவசியம்  பாருங்க , யூ ட்யூப்பில் கிடைக்குது . ரேட்டிங் 3.25  /. 5