Showing posts with label நீர்ப்பறவை. Show all posts
Showing posts with label நீர்ப்பறவை. Show all posts

Wednesday, December 19, 2012

ஜெயமோகன் -ன் நீர்ப்பறவை வசனங்கள் - ஆஹா 50 !

http://gallery.southdreamz.com/cache/movie-gallery/neerparavai/neer-paravai-tamil-movie-vishnu-sunaina-images-11_720_southdreamz.jpg 

1. மீனவன சுட்டுக் கொன்னுட்டா, பத்திரிக்கையில கூட இந்திய மீனவன்னு போடாம தமிழக மீனவன்னு தலைப்பப் போட்டு மேட்டரை முடிச்சுடறாங்க 


2. என் கணவர் உடம்பு மட்டும் தான் கரைக்கு வந்தது, உயிர் கடலுக்குள்ள தான் இருக்கு 


3. குடிப்பழக்கத்தை ஒருத்தன் நிறுத்திட்டான்னா, ஒன்னு அவனுக்கு அல்சர் வந்திருக்கும் இல்ல, காதல் வந்திருக்கும் 

4. மீனவனுக்குன்னு எங்காயாச்சும் தனி தொகுதியிருக்கா?  



5. முஸ்ஸிம் மக்கள் ஆதரிக்கவில்லைன்னா திட்டுறீங்க.. சரி கூட்டமா வந்தா தீவிரவாதம்னு சொல்றீங்க. அதுக்காக நாங்க வாராமய இருக்க முடியும் ?



6. இலங்கை ராணுவம் மீனவன் ஒருவனை சுட்டுக் கொன்றால், தமிழக மீனவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என்றுதான் சொல்கிறோம். அதனை ஏன் இந்திய மீனவன் என்று சொல்லக்கூடாது’ 


7. மனிதனின் உள்ளம் மட்டும்தான், அவன் தன் இனம் என்பதை மறந்து ரத்தவெறியோடு செயல்படுகிறது.


8.  உடனே தெருவுக்கு வந்திருவீங்களே..?

 நாங்க எங்க உரிமைக்காக போராடினா அது தீவிரவாதமா..?


9.  அம்மா, கை நடுங்குது , சரக்கு அடிக்க காசு குடு 


 கண்ட சரக்கை வாங்கிக்குடிச்சு உடம்பை கெடுத்துக்காம நல்ல சரக்கா வாங்கிக்குடிக்கோணும் 


 சரக்குக்கு பையனுக்கு காசு தரும் ஒரே அம்மா நீயாத்தான் இருக்க முடியும்  


10. கல்லா கட்றியோ இல்லையோ , நல்லா கள்ளா காட்றே? 



 http://cutmirchi.com/upimages/1350572629_sunaina-3ff1bd1c.jpg


11.  நான் சாதா கவிஞன் .ம் .என்ன எழுச்சிக்கவிஞனா மாத்திடாதே?



இந்தா இதை அடி , சரக்கு செம . எந்ந்திரிச்சு நின்னு ஆடுவே 



12. நமக்குள்ளே ஒத்துமை இல்லை,கவர்மெண்ட் பஸ்  டிரைவரை ஒருத்தன் அடிச்சுட்டா ஊர்ல எந்த பஸ்சும் ஓடாது, ஆனா கடல்ல ஒரு மீனவனை சுட்டுக்கொன்னாக்கூட நாம ஏன் நம்ம எதிர்ப்பை பதிவு பண்றதில்லை? 



13. முஸ்லீம் - நீங்க கூட்டம் போட்டா அது புரட்சி , அதுவே நாங்க கூட்டம் போட்டா அது தீவிரவாதம்? 


14. இதை அவன் பேசலை , அவனுக்குள்ளே இருக்கும் “அப்பா” பேசறார், பேச வைக்குது 



15. என்னப்பா? வீட்ல ஏதும் பிரச்சனையா? 


 நோ , பையன் கிட்டே சத்தமா கொஞ்சிட்டு இருந்தேன் .. போய்யாங்



16. மீனவர்கள் சார்பா 4 எம் எல் ஏ இருந்தா அவனவன் அலறி அடிச்சுட்டு பிரச்சனைன்னா வருவான்.



17. பாவ மன்னிப்பு கேட்க வந்தோம் ஃபாதர் 


என்ன பாவம்? 

 பிறந்ததே பாவம் 


 ஏன் தள்ளாடறீங்க..?

 ஹி ஹி பாவம் ஓவர் 



18. சுனைனா - தட்டுங்கள் திறக்கப்படும் , கேளுங்கள் கொடுக்கப்படும் , பைப்பிள்ல சொல்லி இருக்கு 


டொக் டொக் 

 எஸ் 


20 ரூபா கடன் வேணும் 



19. டைஃபாய்டு மாதிரி , காய்ச்சல் மாதிரி குடி ஒரு  வியாதி 



20. நாளைக்குத்தர்றேன்னு சொல்லி உங்க பையன் 50 ரூபா கடன் வாங்குனாரு 


நாளைக்கு - அவன்  அகராதில அடுத்த ஜென்மத்துல -ன்னு அர்த்தம் 


http://cine-talkies.com/movies/tamil-actress/sunaina/sunaina-104.jpg



21. யப்பா , அவனைத்திருத்தறேன்னு சொல்லி  ரொம்ப வலைச்சு ஒடிச்சறாதீங்க , பாவம், சரக்கு கேட்டா வாங்கிக்குடுங்க.. 







22 போதைலயும் ஒரு நிதானத்தை கடைப்பிடிப்பவர்கள் நாங்க, தெரியுமில்ல?

 யூ ஹேவ் குட் ஃபியூச்சர்

 சரி, இப்போ வெள்ளையா ஒரு உருவம் நம்மை கிராஸ் பண்ணிட்டுப்போச்சே, அதுதான் ஃபாதரா?



23. ஒழுக்கமா இருக்கறதுதான் நம்மளை மாதிரி ஏழைங்களோட மிகப்பெரிய சொத்து 



24. எழுச்சிக்கவிஞன் எழுச்சிக்கவிஞன்னு சொல்லிட்டு அடுத்தவன் பாட்டையே பாடிட்டு இருக்கியே, உன் சொந்தப்பாட்டை எப்போ பாடுவே?


25. உள் காய்ச்சல் இது. ஊசி போட்டா அந்த சுகம் போயிடும்



26. தம்பி, நீ ஏதோ சொல்ல வ்ர்றே, ஆனா எனக்குத்தான் எதுவும் விளங்க மாட்டேங்குது 



27. உன் பின்னாலயே நான் வர்றேனே, என்னை மதிக்கவே மாட்டியா? ஏன் என் கூட பேசறதே இல்ல?


எவ்ளவ் தூரம் பின்னாலயே வர்றே? னு பார்க்கத்தான்



28. ஒழுங்கா இருக்கியா?

 யா யா , ஆனா சண்டே வந்தா மட்டும் ஒழுக்கத்துக்கு லீவ் விட்டுடுவோமாக்கும், ஹி ஹி 




29. நீ தோற்ற இடத்துலயே ஜெயிக்கனும், பலவீனமானவர்க்ளை ஜெயிக்க விடனும், அதுதான் வீரம்



30. என்னை என்ன செய்யச்சோன்னாலும் செய்யறேன், ஆனா வேலைக்கு மட்டும் போகச்சொல்லக்கூடாது ,அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு 







http://1.bp.blogspot.com/_QPkk0qlpQU8/TQwmzWK2GHI/AAAAAAAAAUk/WqMupzBi_BM/s1600/nandita+das.jpg

31 ஆல மர நிழல்ல புல் பூண்டு முளைக்காது


32.  எங்களை மாதிரி வயசான ஆள் சொன்னா எவன் கேட்கறான்? உன்னை மாதிரி இளசுங்க சொன்னாத்தான் வயசுப்பொண்ணுங்க சொன்னாத்தான்
 கேட்கறாங்க 


33. நான் கறுப்பா இருக்கும் வெள்ளைக்காரன், அளவாத்தான் குடிப்பேன் ,

34. இந்தியா முழுக்க ஒரு விதி இருக்கு, அது மீனவன் அல்லாதான் மீன் பிடிக்கக்கூடாது 


35.  இல்லாதவங்களுக்கு கடவுள் இரங்கி வருவான் ( இறங்கியும்) 



36. சுறா மீன் வெயிட் ஜாஸ்தி , எப்படி கடல்ல நீந்துது?


 தண்ணீர்ல அதனோட வெயிட் கம்மி 

 அப்போ இப்போ நாம தூக்கிட்டுப்போகும் மீன்களை ஒரு அண்டா தண்ணில கொண்டு போனா வெயிட் கம்மியா இருக்குமா?  



37. மாத்தறதே மாத்தறீங்க , நல்ல ஃபிகர் இருக்கற இடமா மாத்துனா நல்லாருக்கும் 

 உன் அவசரத்தைப்பார்த்தா பாலியல் புகார்ல உள்ளே போய்ட்டுத்தான் மறுவேலை போல 



38. இனிமே மீனவன் சாவு மழை பெய்யும் நியூஸ் மாதிரி சாதாரணமா ஆகிடும் :((


39. அமெரிக்கா , ஆஸ்திரிஏலியாவுல ஆறு மாசம்   பனி  நம்ம நாட்டுல மட்டும் தான் 12 மாசமும் மீன் பிடிக்க உகந்த சூழல் 


40. மீனைப்பிடிப்பவனை விட , மீனை தின்பவனை விட இடைல வாங்கி விக்கறானே, அவனுக்குத்தான் வருமானம் ஜாஸ்தி , அவன் தான் பணக்காரன்.


http://2.bp.blogspot.com/-JfwQnBa7GQg/TbvTwvH0UFI/AAAAAAAAB7E/yKAHVxDMU4E/s1600/I-AM-AFIA-nandita-das-6.JPG



41. கெட்டுப்போன பேரு பணம் வந்துட்டா காணாமப்போயிடும் 


 ஆமா, பணம் வந்த வழியை யாரும் பார்க்க மாட்டாங்க.. பணம் இருந்தா சரி




42. ஏய், காபி போடு 


 எனக்கு காபி குடிக்கும் பழக்கம் இல்லை.. 

 ஓய், காபி எனக்கு 



43. ரொம்ப நல்லவனா இருந்தா மறந்துடுவாங்க.அப்பப்ப கொஞ்சம் கெட்டவனாவும் இருக்கனும், அப்போதான் ஞாபகத்துல வெச்சுக்குவாங்க 



44. என்னை விரும்பற பொண்ணை நான் அவளை விரும்பலைங்கறதுக்காக எப்படி தங்கச்சின்னு சொல்ல முடியும்? அவ மனசு என்ன பாடு படும்?  பிடிக்கலைன்னா ஒதுங்கிடனும், படுத்தக்கூடாது



45. உன் கிட்டே எனக்குப்பிடிச்சதே உன் காதலிக்கு நீ உண்மையா இருப்பதுதான் 



46 , முதுகா இது? ராஜ நாகம் படம் எடுத்தது மாதிரி 



47. உனக்கு வெட்கமா இல்ல? 

 போடி, ஆரம்பிக்கும்போது இப்டித்தான் சொல்வே


48. சாரி, இருட்ல எதுவும் தெரியாது , மீ வாண்ட் லைட் .. யூ டியூப் லைட் 



49. நீ தான் என் கடல் . புரியுதா? 


 ம்ஹூம்


ம்க்கும்



50 யோவ்.. எப்பவும் “திங்கறதுலயே “ குறியா இருக்காதய்யா


http://www.bollywoodpicturesonline.com/new_jpg/nandita_das_002_dm.jpg




டிஸ்கி -1 படத்தில் இயக்குநர் சீனு ராமசாமியும் இணைந்து வசனம் எழுதி இருப்பதாக டைட்டில் சொல்லுது. ஆனா என் கெஸ்ஸிங்க் என்னான்னா அவர் வசன மேற்பார்வை மட்டும் பார்த்திருப்பார்.அங்கங்கே சில கரெக்‌ஷன் , எடிட்டிங்க் பண்ணி இருப்பார். சப்போஸ் அவர் எழுதி இருக்க வாய்ப்பு  உள்ள ஒரே வசனம்  சுனைனா பேசும் - சாத்தானே ! அப்பால போ! மட்டுமாத்தான் இருக்கும், மீதி எல்லாமே ஜெமோ தான் எழுதி இருக்கனும்  



டிஸ்கி 2 - முறைப்படி வசனகர்த்தா  ரைட்டர் ஜெயமோகன் சார் படம் தான் இதுல போடனும், ஆனா பாருங்க அப்புறம் எல்லாரும் என்னை ஆணாதிக்க வாதின்னு சொல்லிடுவாங்க. இந்த அட்ரா சக்க பெண்களுக்கு 100% இட ஒதுக்கீடு தரும்னு உலகத்துக்கே தெரியும் , ஹி ஹி




http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/11/neerparavai_movie_review.jpg





 

Thursday, December 06, 2012

விகடன் விமர்சனக் குழு - நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நீர்ப்பறவை

ன்ன ஆச்சு?  படத்துக்குப் போனோம்... ஒரு டூயட் கூட இல்லை... ஹீரோயின் கிட்டத்தட்ட இல்லை... ஹீரோதான் வில்லன். நாலு பிட் வசனத்தைத்தான் படம் முழுக்கத் திரும்பத் திரும்பப் பேசுறாங்க. ஆனா, படம் முழுக்கக் குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சுட்டே இருந்தோமே... இது எப்படி?'' - 'நடுவுல கொஞ்சம்  பக்கத்த காணோம்’ படம் பார்த்து வெளியே வந்து நீண்ட நேரத்துக்குப் பிறகும் நமது 'மெடுலா ஆப்லங்கேட்டா’வில் அலைமோதிய சிந்தனை இதுதான். பாஸ்... பட்டையைக் கிளப்பிட்டீங்க.



நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடும்போது விஜய் சேதுபதிக்குத் தலையில் அடிபட்டு, கடந்த ஒரு வருட நினைவுகள் மறந்துவிடுகின்றன. அந்த மறதிப் பட்டியலில் அடுத்த இரண்டே நாட்களில் மணம் முடிக்க இருக்கும் காதலியும் இருந்தால்... நண்பர்களின் பி.பி. எப்படி எகிறும்? அதைச் சிந்தாமல் சிதறாமல் நமக்கும் அப்படியே கடத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பாலாஜி தரணீதரன். 'ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்’ ஐடியாவில் இத்தனை ஜோக்கும் த்ரில்லும் புதைத்து அசர அடித்திருக்கிறது 'என்.கே.பி.கே.’ கூட்டணி!



'மறதி’ நாயகனாக விஜய் சேதுபதி. 'என்னாச்சி?’, 'ப்பா... பேய் மாதிரி இருக்காடா!’, 'யாருக்குடா கல்யாணம்?’, 'நீ சொன்னா இந்த பில்டிங் மாடில இருந்துகூடக் குதிப்பேன்டா!’ என அதே வசனம், அதே ரியாக்ஷன்தான் படம் முழுக்க. ஆனால், சின்னச் சின்ன சேட்டைகள் மூலம் கலக்குகிறார் விஜய்.



விஜய் சேதுபதியின் நண்பர்களாக அறிமுகமாகி இருக்கும் ராஜ்குமார், விக்னேஷ், பகவதி பெருமாள் ஆகிய மூவரும் அட்டகாசம்.


'காதல்ங்கிறது ஆழ்மனசுல அடிச்ச ஆணி மாதிரி. மெடுலா ஆப்லங்கேட்டால அடிபட்டாலும் மறக்காது!’ என்று அள்ளிவிட்டு பக்ஸ் வாங்கும் பல்பு, 'அவன்தான் மாப்பிள்ளை பேரை மறந்துடுறான்ல. இந்தத் தடவை பக்ஸ் பேரைச் சொல்லு!’ என்று கோத்து விடும் சரஸ்... நண்பர்களின் ஒவ்வொரு ஸ்டாப் ப்ளாக்குமே செம காமெடி மேளா!



தெரு கிரிக்கெட்டுக்கு ஐ.பி.எல். பாணி ஷாட்கள், நண்பர்களின் குளோசப் டென்ஷன் என நிலவரத்தின் கலவரத்தைப் பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்துகிறது பிரேம்குமாரின் ஒளிப்பதிவு. (நிஜத்தில் இவரேதான் அந்த மெமரி லாஸ் ஹீரோ!)


படம் முழுக்க ரிப்பீட் அடிக்கும் வசனங்களுக்கு, சோகம், டென்ஷன், நெகிழ்ச்சி, வருத்தம் என்று டோன் மாற்றியதில் டிஸ்டிங் ஷன் அடிக்கிறது சித்தார்த் விபினின் பின்னணி இசை. நிஜ சம்பவத்தில் தொடர்புஉடைய சிலரைப் படத்திலும் அப்படியே உலவவிட்டு இருப்பது... அடடே! 



முன்-பின் பாதிகளில் அலுப்புத் தட்டும் சில காட்சிகளில் பலமாகக் கத்திரி வைத்துஇருந்தால், இன்னும் தீப்பிடித்து ஓடியிருக்கும் இந்த காமெடி எக்ஸ்பிரஸ்.




'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ - படிக்க சுவாரஸ்யமான காமெடி நாவல்!



லங்கைப் பேரினவாத அரசின் கடற்படைத் துப்பாக்கிகளுக்குப் பலியாகி, வெறுமனே செய்தியாக மட்டுமே கடந்துபோன பல நூற்றுக் கணக்கான மீனவர்களில் ஒரு பறவை, இந்த 'நீர்ப்பறவை’!



 குடிநோய் என்னும் கொடுமை, சிறுபான்மை யினரின் மனத்துயர், மதநல்லிணக்கம், மீனவர் கள் வாழ்வியலில் தோய்ந்த சடங்குகள், விதிகள், 'இந்திய’ மீனவர் என்று குறிப்பிடப்படாத தமிழக மீனவர்கள் மீது ஏவிவிடப்படும் படுகொலைகள் எனப் பல மதிப்பீடுகளை ஒரே படத்தில் பேச முயன்றதற்காக இயக்குநர் சீனுராமசாமிக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.



ஈழத்தில் இருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்த சிறுவன் விஷ்ணு, தமிழக மீனவத் தம்பதிக்குத் தத்துப்பிள்ளை ஆகிறான். குடிநோய்க்கு அடிமையாகிப் பிச்சை கேட்டும் ஏமாற்றியும் காசு வாங்கிக் குடித்துத் திரியும் 'நீர்’ப்பறவையாக இருப்பவனை நெஞ்சுரம் கொண்ட மீனவனாக மாற்றுகிறது சுனைனாவின் காதல். ஆனால், அவன் வாழ்க்கை யின் மகிழ்ச்சி நீரோட்டத்தைச் சில தோட்டாக்களால் இலங்கைக் கடற்படை இல்லாமல் ஆக்கிவிடுகிற இனத் துயரம்தான் 'நீர்ப்பறவை’யின் சிறகுகள் உதிர்ந்த கதை.



ஓர் அசல் குடிகாரனாக மாறி சலம்பித் திரியும் கடற்புரத்து இளைஞனுக்கான முகவெட்டும் உருவமும் அட்டகாசமாகப் பொருந்துகிறது விஷ்ணுவுக்கு. சரக்கு மயக்கத்தில் சலம்புவதும் காதல் மயக்கத்தில் கிறங்குவதுமாக அசத்துகிறார். கிறிஸ்துவப் பழக்கங்களில் ஊறிப்போனவராக ஜெபிப்பது ஆகட்டும், குடிகார விஷ்ணுவைக் கண்டு 'சாத்தானே... அப்பாலே போ’ என்று விலகுவது ஆகட்டும்... எஸ்தராகவே மாறியிருக்கிறார் சுனைனா. வயதான எஸ்தராக வரும் நந்திதா தாஸ், ''விஷ்ணு இறந்ததை ஏன் அரசாங்கத்திடம் சொல்லவில்லை?'' என்று நீதிபதி கேட்கும்போது, ''சொன்னா மட்டும் என்ன பண்ணு வீங்க?'' என்று எழுப்புகிற கேள்வி, ஜீரணிக்க முடியாத நிதர்சனம்.



விஷ்ணுவின் அப்பா லூர்துசாமியாக வரும் 'பூ’ ராமு மகனைத் திருக்கைவால் கொண்டு வெளுப்பது, அதே மகன் திருந்தியதும் சமுத்திரக்கனியிடம் படகு செய்யச் சொல்லிச் சிபாரிசுக்காக நிற்பது, படகில் தன் பெயரைப் பார்த்துக் கண்ணீர்விடுவது என ஒரு பாசக்கார மீனவரின் பாத்திரத்தில் உப்பு நீராக நிறைகிறார்.




'நீங்க பெரிய கூட்டம் போட்டா, அது போராட்டம். ஆனா, நாங்க நாலு பேர் கூடினா, அதுக்குப் பேர் தீவிரவாதமா?’, 


'மீனவனுக்கு ஒரு முப்பது தொகுதி இருந்தா, அவன் குரலும் ஓங்கி ஒலிக்கும்யா’ 


என்று ஆங்காங்கே அரசியல் பேசுகிறார் சமுத்திரக்கனி. சாராயம் விற்கும் வடிவுக்கரசி, பங்குத் தந்தை அழகம்பெருமாள், 'உப்பளம்’ இமான் ஆகியோர் படத்தின் நல் மன மாந்தர்கள்.  



'மீனுக்கு சிறு மீனுக்கு’, 'பற பற பற பறவை ஒன்று’, 'தேவன் மகளே’ என்று வைரமுத்துவின் வரிகளை ஈர இசையுடன் இதயக் கரை சேர்க்கிறது ரகுநந்தனின் இசை. நெய்தல் நிலத்தை, கடலின் நிறங்களை, உயிர்களின் ரணங்களைப் பதிவு செய்திருக்கிறது பாலசுப்ரமணியெம்மின் ஒளிப் பதிவு.
படத்தின் முற்பாதியை நெடுக ஆக்கிரமிக்கும் குடிக் காட்சிகளின் சில சிறகுகளைத் தயக்கமின்றி வெட்டியிருந்தால் இன்னமும் அழகாக இருந்திருக்கும் பறவை.



இயற்கைச் சீற்றங்கள் உலகின் எல்லா மீனவர்களும் சந்திக்கும் பிரச்னை. ஆனால், இலங்கைக் கடற் படையின் தாக்குதல் நம் மீனவர்கள் மட்டுமே சந்திக்கும் பிரச்னை என்பதை அழுத்தமாகச் சொன்னதில்தான் உயரே உயரே பறக்கிறது 'நீர்ப் பறவை’!


thanx - vikatan


Friday, November 30, 2012

நீர்ப்பறவை - சினிமா விமர்சனம்

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/10/Neerparavai2.jpgஹீரோ ஒரு சரக்கு சங்கரலிங்கம். எப்போ பாரு குடி. குடிக்கு அடிமை. தண்ணி அடிக்க காசு வேணும்னா ஊரெல்லாம் கை ஏந்தத்தயங்காத ஆள்.அம்மா, அப்பா மீனவ்க்குடும்பம்.ஹீரோயின் சர்ச்ல ஒர்க் பண்றாங்க. ஹீரோயினைப்பார்த்ததும் ஹீரோவுக்கு காதல். குடிக்கு அடிமை ஆனவர் காதலுக்கு அடிமை ஆகிடறார். (2ம் 1 தான். ஆளை முடிச்சுக்கட்டிடும்).


ஹீரோவை ஹாஸ்பிடல்ல சேர்த்து ஆளை குடிபோதைப்பழக்கத்தில் இருந்து  மீட்டுடறாங்க.அவங்க ஏரியா மீனவர்கள் ஹீரோவை மீன் பிடிக்க விடலை. காரணம் ஹீரோ மீனவப்பரம்பரை இல்லை. தத்துப்பிள்ளை.ஆனா ஹீரோயின் நீ கடல் போய் மீன் பிடிச்சு மீனவன் ஆகுங்கறா. காதலி வாக்குக்காக ஹீரோ என்ன செஞ்சார்,  என்ன ஆச்சு? என்பதே மிச்ச மீதிக்கதை .


ஹீரோ விஷ்ணு கேரக்டரை உணர்ந்து பண்ணி இருக்கார். வெண்ணிலா கபாடிக்குழு , குள்ள நரிக்கூட்டம் போல் இதுவும் நிதானமாக ஸ்கோர் செய்ய வாய்ப்பு உள்ள படம்.  பேரை காப்பாற்றி இருக்கிறார். ஆனாலும் குடிகாரர் கேரக்டர் எப்படி இருக்கனும் என்பதை சிவா மனசுல சக்தி ஜீவா கேரக்ட்ர் பார்த்து இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்.


 ஹீரோயின் சுனைனா .இளஞ்சிவப்பு உதட்டழகி. கடல் ஓர கிராமக்கதை என்பதால் மேக்கப் போட வாய்ப்பு கம்மி .தூசு படிந்தாலும் வெள்ளிக்குத்துவிளக்குக்கு மதிப்பு போயிடுமா? ஜொலிக்கிறார். வழக்கொழிந்த பஃப் கை ஜாக்கெட் கம் சர்ட் மாடலில் டைட் டிரஸ் டாப் , பாவடை போட்டுக்கொண்டு படம் நெடுக உலா வருகிறார். குடிவெறியரான ஹீரோ காதலை சொல்ல  கிட்டே வரும்போது “ சாத்தானே! அப்பால் போ! என பயந்து மருகும்போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறார். ஆனால் சினேகாவுக்கு கிட்டத்தட்ட தங்கை மாதிரி புன்னகை இளவரசியான இவரை ஏன் சோனியா அகர்வாலுக்கு அக்கா போல் மெல்லிய சோக இழையை முகத்தில் ஒட்ட வைத்து இருக்கிறார்? இயக்குநர். புரியாத புதிர்.



சரண்யா அம்மா கேரக்டர். தென் மேற்குப்பருவக்காற்றில் கலக்கியது போல் இதிலும். சரக்கு அடிக்க பையனுக்கு காசு தரும் சீனில் செம நடிப்பு. அவர் வசனம் பேசும் உச்சரிப்புஸ்டைல் பலர் பின் பற்ற வேண்டிய பாடம். அப்பாவாக வருபவர் நடிப்பும் நிறைவு .

இயக்குநர் சமுத்திரக்கனி முஸ்லீம் மீனவராக வருகிறார். கொஞ்ச நேரம் தான். ஆனால் மனதில் நிற்கிறார். இவரும் சீமான் போல் கை தட்டல் வாங்கும் குணச்சித்திர நடிகர் லிஸ்ட்டில் .


ஹீரோயின் சுனைனாவின் வயதான கேரக்ட்ர்க்கு நந்திதா தாஸ். வாய்ப்பு ரொம்ப குறைவு . வந்தவரை நிறை குடம்


http://www.indiancinemagallery.com/Gallery2/d/835356-1/Neer+Paravai+stills+_17_.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. கதைக்களம் ராமேஸ்வரம் தங்கச்சி மடம் என்பதால் கடலின் பல்வேறு கோணங்களை காமெராவில் அழகுபடுத்திக்காட்டியது. ஒளிப்பதிவு பக்கா.. குறிப்பா கடல் ஓர நண்டுகளை பாடல் காட்சியில் காட்டுவது, கடல் நீரை செங்கடல் , நீலம், பச்சை , கரும்நீலம் என வகைப்படுத்தி வண்ணக்கோலம் கண்ணுக்கு குளுமை


2. ஹீரோவைப்பார்த்தாலே பயந்து போய் விலகும் சுனைனா முதல் முறையாக காதல் பார்வையை அள்ளி வழங்கும் காதல் மலரும் காட்சி



3. மீனுக்கு கடல் மீனுக்கு ,பர பர ,தேவன் மகளே  என 3 கலக்கலான மெலோடி சாங்க், இசை , காட்சிப்படுத்தியமை அனைத்தும் அழகு ( பர பர பாட்டு 2 டைம் ஸ்ரேயா கோசால் , சின்மயி இருவரும் தனித்தனியா )


4. படத்துக்கு நேர்த்தியாக திரைக்கதை எழுதியது , இலக்கியவாதி எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்கள்  பக்க பலமாய்



http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-neerparavai-movie-stills/images/tamil-cinema-neerparavai-movie-stills15.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்



1. மீனவர்கள் பிரச்சனை பற்றிய படம் என நீங்கள் சொன்னவிதம், அளீத்த பேட்டிகள் எல்லாம் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களுக்கு இழைத்த கொடுமைகள் பற்றி , அதற்கான தீர்வு பற்றி படம் இருக்கும் என்ற இமாலய எதிர்பார்ப்பைப்பொய்த்து விட்டீர்கள். அந்த மேட்டர் ஜஸ்ட் வந்து போகுது. மக்கள் மனதில் குடிப்பழக்கம் தவறு என்பதை உணர்த்திய அள்வில் கால் பங்கு கூட மீனவர்களை அநியாயமாக கொல்லும் விஷயம் பதிவாகவில்லை, இது மிகப்பெரிய பின்னடைவு


2. மீனவர் பற்றி , அவர்கள் சந்திக்கும் கடல் பிரதேச பிரச்சனை பற்றி சொல்ல 1000 விஷயங்கள் இருந்தும்  அதைச்சொல்லாமல் படத்தின் முதல் பாதியை குடிப்பிரச்சனைக்கு தாரை வார்த்தது ஏன்?


3. ஓப்பனிங்க்ல கொலையாளி என கைது செய்யப்படும் நந்திதா தாஸ் விசாரணையில் மயக்கம் போடும்போது விசாரணை செய்யும் போலீஸ் ஆஃபீசர் காட்டும் பதட்டம் ஓவர். நந்திதாவின் அம்மாவோ , மகனோ காட்ட வேண்டிய பதட்டத்தை போலீஸ் ஆஃபீசர் காட்றார்.



4. கிறிஸ்டியனான சுனைனா ஹீரோவுக்கு 50 ரூபா தரும்போது இடது கைல  தர்றார். லட்சுமி வலது கை தானே பரிமாற்றங்கள்?


5. சுனைனா அந்தப்பணத்தை திரும்ப வாங்க வரும்போது சரன்யா வீட்டுக்குள் இருந்து பணம் தர்றார். சுனைனா வாசப்படில நின்னு வாங்கறார். கிராமங்களில் அப்படி பழக்கம் இல்லை. அப்டி செஞ்சா செல்வம் போயிடும். சரண்யா வாசலுக்கு வெளீல வந்தோ , சுனைனாவை வீட்டுக்குள்ளே வரச்சொல்லியோ பண்ம் கொடுத்திருக்கலாம்



6. ஒரு காட்சியில்  ஹீரோயின் மழையில் குடை பிடித்து  நிற்கிறார். ஹீரோ அவர் எதிரில் 4 அடி தள்ளி மண்டி போட்டு இருக்கார். ஆனா அவர் சட்டை நனையவே இல்லை . வாட்டர் ப்ரூஃபா?


7. மொத்தக்கதையும் ஃபிளாஸ்பேக் உத்தியில் நாயகியின் பார்வையில் சொல்லப்படுது. அப்போ ஹீரோ தனியா இருக்கும் காட்சி , ஹீரோயின் இல்லாமல் இருக்கும் காட்சிகள் 30 நிமிடம் வருதே? அது எப்படி? இதை தவிர்க்க ஃபிளாஸ்பேக்கை ஹீரோ பார்வையில் அல்லது பொதுவா காட்டி இருக்கலாம்

http://cdn3.supergoodmovies.com/FilesFive/neerparavai-movie-press-meet-stills-5637e45b.jpg


8. வயசுக்கு வந்த பொண்ணு சர்ச் வாசல்ல பப்ளிக்கா படுக்குமா? அரன்மனை மாதிரி இடம் இருக்கே? ஹீரோயின் வாசல்ல படுத்திருக்கும் காட்சியும் , ஹீரோ மப்பில் அருகே வந்து படுக்கும் காட்சியும் செயற்கை



9. பொது வெளியில் கிணற்ற்டியில் குளிக்கும் கிராமத்துப்பெண்கள் மஞ்சள் , ஆரஞ்சு போன்ற லைட் கலர் பாவாடை கட்டிக்குளிக்க மாட்டாங்க. கறுப்பு, பிரவுன், மெரூன் டார்க் கலர் தான் கட்டுவாங்க. சீன் படங்களில் கில்மாவுக்காக அப்படி காட்சி வெச்சா கேட்கமாட்டோம். ரசிச்சுட்டு போயிடலாம், ஆனா இது கண்ணியமான படம் ஆச்சே?


10. கொலைக்குற்றவாளியான நந்திதாவை ஜாமீனில் எடுக்கனும்னா ஏதாவது வக்கீல் ஆஃபீஸ் போகனும். அதை விட்டுட்டு அவரை விசாரணை செய்யும் போலீஸ் ஆஃபீசரிடமே என்ன பண்ண? ஜாமீன் எடுக்கனும் என ஐடியா கேட்கும் காட்சி எதுக்கு?



11. ஆரம்ப்ம் முதலே காதலுக்கு கெத்து காட்டி வரும் சுனைனா ஹீரோவை மீனவனாக மாற்ற எடுக்கும் முயற்சியில் ஏன் கெஞ்சனும்? ஹீரோ ஏதாவது ஒரு வேலைக்குப்போனா போதும். ஆனா மீனவனாத்தான் ஆகனும்னு ஏன் கண்டிஷன் போடறாங்க? அதுக்கு காரணம் காட்டி இருக்க வேணாமா?


12. யாராலும் பிடிக்க முடியாத உளுவை சுறாவை ஹீரோ பிடிச்சுட்டு வந்து அம்மா , அப்பா கிட்டே கொடுத்துட்டு அடுத்த நிமிஷமே ஹீரோயினைப்பார்க்க அதே டிரஸ்ல வர்றார். அப்போ ஹீரோயின் “ ஊரே உன்னைப்பற்றித்தான் பேசுது. அரிய வகை மீனைப்பிடிச்சுட்டியாமே?” சன் டி வி ல சொன்னாங்களா?



13. சுனைனாவுக்கு கதைப்படி 21 வயசு. அவர் 36 வயசுல அவ்ளவ் மாற்றம் ஆகி நந்திதா தாஸ் ஆகிடுவாரா? டைட்டானிக் படத்துல 2 வெவ்வேறு ஹீரோயினை காட்டியதுக்குக்காரணம் வயசு வித்தியாசம் 21 - 90 . ஸ்டார் வேல்யூவுக்ககவா?அவருக்கு காட்சிகளும் அதிகம் இல்லையே? ஒரு வேளை சுனைனாவின் கால்ஷீட் பிரச்சனையா?


14. ஹீரோ பஞ்சம் பிழைக்க வேற ஊர் போனப்ப ஓனர் தங்கச்சி ஹீரோ மேல ஆசைப்படறது இந்தக்கதைக்கு தேவை இல்லாதது

http://cine-talkies.com/movies/tamil-actress/sunaina/sunaina-104.jpg




ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்  - 43


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே


 சி.பி கமெண்ட் - கண்ணியமான காதல் கதை , நேர்த்தியான் திரைக்கதைதான். ஆனால் மீனவர் பிரச்சனை சரியாக சொல்லப்படவில்லை . இயக்குநரின் நோக்கம் நல்ல நோக்கம் தான். ஆனால் அதை மக்களுக்கு சொன்ன  விதம் இன்னும் நல்லா அழுத்தமா சொல்லி இருக்கலாம்னு தோணுது . ஈரோட்டில் அபிராமியில் படம் பார்த்தேன்.


டிஸ்கி - படத்தில் ஜெயமோகனின் அபாரமான வசனங்கள் 64 இடங்கள் இருக்கு. நினைவில் நின்றவை 46.அது தனிப்பதிவாய் பின் ஒரு சந்தர்ப்பத்தில் . மின் தடை கையை கட்டிப்போட்டு விட்டது  .

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_8939.html

 

 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOn48BD80JIk8BdYPvn9zfiyNV1N3W7m8-5Q9NjAPsyiR9FCVeuIWf5zjJTRRnYfWxVij_7scICkdeyMBlpyTX_ZteXovzgWsBRlQIesCt27oEEQ-1eCMhFrg4_vLIR3PYOfDYKVcNp-8/s320/sunaina+hot+in+yathumagi+(10).jpg