2014 ஆம் ஆண்டு மலையாளம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டஇந்தப்படம் இண்டர்நெட் வசதி பெருகிய பின் நடக்கும் ஆன் லைன் சேட்டிங் , அதனால் ஏற்படும் குற்றங்கள் பற்றி பேசுகிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
சம்பவம் 1
நாயகன் ஒரு போலீஸ் ஆஃபீசர். நகரில் அடுத்தடுத்து ஐந்து ஆண்கள் கொலை செய்யப்படுகிறார்கள் . பொது வாழ்க்கையில் அந்த ஐந்து பேருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை , அதனால் பர்சனல் வாழ்க்கையை அலசி ஆராய்ந்ததில் அவர்கள் ஐந்து பேரின் ஃபேஸ் புக் அக்கவுண்ட்டிலும் பொது நண்பர் ஒருவர் இருக்கிறார்..அவரைப்பற்றி விசாரணை நடக்கின்றது
சம்பவம் 2
நாயகி 17 வயது நிரம்பிய அழகி . அவள் தன் 12 வயது முதல் ஆன் லைனில் பலருடன் சேட்டிங்கில் இருக்கிறாள், அது அவளுக்கு ஒரு டைம் பாஸ்.அவளது பெற்றோர் அவளுக்கு சரியான அன்பு, பாசம், கவனிப்பு, நேரம் எதையும் ஒதுக்கவில்லை ,அதனால் இப்படி ஆகிறாள் ,மலேசியாவைச்சேர்ந்த நாயகி இந்தியாவில் கோவையில் ஒரு இளைஞனுடன் சேட்டிங் செய்கிறாள் , ஆரம்பத்தில் சாதா சேட்டிங்கில் ஆரம்பித்த அவர்கள் நட்பு பிறகு ஆன் லைன் வீடியோ கால் நட்பாக வளர்ந்து நேரில் சந்திக்க முடிவெடுக்கும் அளவுக்கு நட்பு இறுகுகிறது
இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு வந்த அந்த இளைஞன் குறிப்பிட்ட இடத்தில் காத்திருக்க நாயகி வரவில்லை . பிறகு அலைந்து திரிந்து அவள் வீட்டைக்கண்டு பிடித்துப்போனால் அங்கே அவள் தற்கொலை செய்து இறந்திருக்கிறாள்
மேலே கூறிய இரண்டு சம்பவங்களும் எந்தப்புள்ளியில் இணைகிறது என்பதுதான் திரைக்கதை
போலீஸ் ஆஃபீசராக சரத்குமார் கம்பீர நடிப்பு , ஆனால் அந்த ஒட்டுத்தாடியை தவிர்த்திருக்கலாம், அவர் கூடவே இருக்கும் இரு ஆஃபீசர்கள் சும்மா வந்துட்டுப்போறாங்க
நாயகியாக இஷிதா கண்களைக்கொள்ளை கொள்ளும் அழகு. 17 வயதுப்பெண்ணாக கச்சிதமாக வந்து போகிறார்
அவரது காதலனாக அர்ஜூன் லால் நிறைவான நடிப்பு , வசதி மிக்க நபரான அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஆன் லைன் சேட்டிங்க்கு அடிமை ஆவது கச்சிதமாக காட்டப்படுகிறது. நடிப்பும் கனகச்சிதம்
டாக்சி டிரைவராக மனோஜ் கே ஜெயன் , நாயகியின் தந்தை ஆக ராஜன் பி தேவ், காதலனின் அம்மாவாக ஃபாத்திமா பாபு அனைவரும் கொடுத்த கேரக்டரை கச்சிதமாக உள் வாங்கி நடித்திருக்கிறார்கள்
நிகில் வேணுவின் எடிட்டிங்கில் கச்சிதமாக 2 மணி நேரத்தில் படத்தை ட்ரிம் பண்ணி இருக்கிறார்
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருப்பவர் ஜான் ராபின்சன்
க்ரைம் த்ரில்லர் மாதிரி ஆரம்பித்து ஃபிளாஸ்பேக்கில் ரொமாண்டிக் ஸ்டோரி ஆக டோன் ஆப் ஆகும் கதை மீண்டும் த்ரில்லர் ஜோனுக்குள் வரும்போது ஆடியன்சுக்கு சரியாக கனெக்ட் ஆகவில்லை
இதை ரொமாண்டிக் த்ரில்லராக எடுக்கலாமா? க்ரைம் த்ரில்லராக எடுக்கலாமா? என இயக்குநர் கொஞ்சம் குழம்பி இருக்கிறார் என்பது தெரிகிறது
ஜெசின் ஜார்ஜ்ஜின் இசையில் பாடல்கள் சுமார் ரகம், பிஜிஎம் அதை விட சுமார் ரகம் . ஒளிப்பதிவு குட்
சபாஷ் டைரக்டர்
1 நாயகியின் ஃபேஸ் புக் ஐடியின் பாஸ்வோர்டை அவளது காதலன் கண்டுபிடிக்கப்பயன்படுத்தும் யுக்தி குட்
2 நாயகியின் ஃபிளாஸ்பேக் கதையை கார்ட்டூன் வடிவில் கவிதை போல தந்த விதம் , வெரிகுட் பிரசண்ட்டேஷன்
3 இந்தக்கால இளைஞர்கள் மனம் கவர்ந்த விதத்தில் ஆன் லைன் சேட்டிங்கை படம் ஆக்கிய விதம்
4 மெயின் கதையோடு டாக்சி டிரைவர் மனைவி கதை , போலீஸ் ஆஃபீசரின் 13 வயது மகள் கதையை சாமார்த்தியமாக இணைத்தவிதம்
5 க்ளைமாக்ஸ் காட்சி சட்டத்துக்கு உட்படாததாக இருந்தாலும் அப்ளாஸ் அள்ளும் காட்சி
ரசித்த வசனங்கள்
1 வீட்டு வாடகை எப்போதான் தர்றதா உத்தேசம் ?
டோண்ட் ஒர்ரி, காந்தி ஜெயந்தி அன்னைக்கு தந்துடறேன்
எப்படி ? அவனை மிரட்டி பணம் தர ஒத்துக்க வெச்சுட்டேன் பார்த்தியா?
ஆனா இப்போதைக்கு நீங்க அவன் கிட்டே இருந்து பணம் வசூலிக்கவே முடியாது
ஏன்?
ஏன்னா இன்னைக்கு தேதி அக்டோபர் 3 , இனி இன்னும் ஒரு வருசம் நீங்க காத்திருக்கனும்
2-டெய்லி நேரில் சந்தித்துப்பழகும் பெண்களையே இப்பவெல்லாம் நம்ப முடியறதில்லை , ஆனா இண்ட்டெர்நெட்டில் பழகிய பெண்ணை நம்ப முடியுமா?
3 இசை , கலை இரண்டிலும் அதிர்ஷ்டம்தான் துணை நிற்கனும், எப்போ ஜெயிப்போம்னு சொல்ல முடியாது
4 டேய்.. உன் ஆளை அடுத்த சேட்டிங்ல ஆறு ஃபோட்டோஸ் அப்லோடு பண்ணச்சொல்லு
எதுக்கு ஆறு?
ஒண்ணு உனக்கு , மீதி அஞ்சு எங்க அஞ்சு பேருக்கும் தலா 1
5
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 தற்கொலை செய்த பெண்ணின் லேப் டாப்பை போலீஸ் ஏன் கைப்பற்றவில்லை ? காதலியின் லேப் டாப் காதலன் கைக்கு எப்படி வந்து சேர்கிறது ?
2 காதலன் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முயற்சிக்கும்போது பாஸ்வோர்டு தெரியாமல் குத்து மதிப்பாக ஒவ்வொன்றாக போட்டு வரும்போது குறிப்பிட்ட முயற்சிக்கு மேல் செல் ஃபோன் நெம்பர்க்கு பாஸ்வோர்டு ரி செட்டப் ஆப்சன் வருமே? அப்படி வராதது ஏன் ?
3 சீரியசான கதையில் எம் எஸ் பாஸ்கரின் மொக்கை காமெடி டிராக் எரிச்சல் .
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- கதைக்களம் எசகு பிசகானது என்றாலும் காட்சிகள் கண்ணியம், வாய்ப்பிருந்தும் கிளாமர் காட்சிகளை இயக்குநர் தவிர்த்திருக்கிறார், குட்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஆன் லைன் சேட்டிங் , லவ்வர் , மர்டர் என கதை செல்வதால் 2 கே கிட்ஸ்க்கு எண்ட்டர்டெயின்மெண்ட் படமாகவும், நைண்ட்டீஸ் கிட்ஸ்க்கு அவரவர் மகள்களுக்கான விழிப்புணர்வுப்படமாகவும் எடுத்துக்கொள்ளலாம். பார்க்கத்தகுந்த இந்தப்படம் யூ ட்யூப்பில் கிடைக்கிறது , நான் ஜெ மூவிசில் பார்த்தேன் , ரேட்டிங் 2.25 /5
Asha Black / Nee Naan Nizhal | |
---|---|
Directed by | John Robinson |
Written by | John Robinson |
Screenplay by | John Robinson, Santhosh Laxman |
Story by | John Robinson |
Produced by | Bindhu John Varghese |
Starring | Ishitha Chauhan Arjun Lal R. Sarathkumar Krishnabhaskar Mangalasserri |
Cinematography | Alby |
Edited by | Nikil Venu |
Music by | Jecin George |
Production company | Nimita Productions |
Release date |
|
Country | India |
Languages | Malayalam Tamil |