Showing posts with label நிழல் நிஜமாகிறது (1978 )– சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா). Show all posts
Showing posts with label நிழல் நிஜமாகிறது (1978 )– சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா). Show all posts

Thursday, September 10, 2020

நிழல் நிஜமாகிறது (1978 )– சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) கே பாலச்சந்தர்

 

நிழல் நிஜமாகிறது (1978  )– சினிமா  விமர்சனம்   ( ரொமாண்டிக் மெலோ டிராமா)  கே பாலச்சந்தர்

 

நிழல் நிஜமாகிறது - தமிழ் விக்கிப்பீடியா


ரெண்டே  வீடு . ஆறே ஆறு  கேரக்டர்கள் , ரெண்டரை  மணி  நேரம் சுவராஸ்யமா ஒரு படம் தர முடியுமா? கே  பாலச்சந்தரால்  முடியும்

கேரளத்தில்  வெளிவந்த  அடிமைகள்  எனும்  மலையாளப்படத்தின்  தழுவல் தான்  இது

 

வழக்கம் போல  இது ஒரு நாயகியை  மையப்படுத்திய கதை. நாயகி ஒரு சமையல்காரி,  பணிப்பெண்ணா  தொழில்  அளவில்  இருந்தாலும் மனதில்  மகாராணி  மாதிரி  கற்பனை  பண்ணிக்கற  ஒரு நல்ல  கேரக்டர், துடுக்கான  பொண்ணு

 

இவர்  பணி  புரியும்   வீட்டில்  ஒரு அண்ணன், தங்கை . எதிர்  வீட்டில்  அண்ணன்காரனின் நண்பன். அவன்  இங்கே  சாப்பிட  ரெகுலரா  வர்றான். அண்ணனின்  நண்பனுக்கும்  தங்கைக்கும்  காதல், ஆனா  இருவரும்  அதை வெளில  சொல்லிக்கலை, அதாவது  பரஸ்பரம்  அவங்களுக்குள்ளேயே  வெளிப்படுத்திக்கலை

 

 சமையல்காரப்பொண்ணா  இருக்கும்  பெண்ணை   அண்ணன்  கரெக்ட்  பண்ணிடறான். அதுவும்  ஏமாந்துடுது. கர்ப்பம்  ஆகி   மேரேஜ்  பண்ணிக்கச்சொல்லறப்போ  அண்ணன்  காரன்  சுயரூபம்  வெளிப்படுது

 

 அவன் தாலி  கட்ட  சம்மதிக்கலை . அந்த  சமையல்காரப்பொண்ணு அண்ணனின்  நண்பன் கிட்டே  முறையிடுது. அவரு   ஒரு  ஏற்பாடு பண்றாரு . அண்ணன்காரன்  கிட்டே  பேசி  மேரேஜ்  பண்ணிக்கச்சொல்றேன் என  வாக்கு  தர்றார்

 

 அந்தப்பொண்ணுக்கு  குழந்தை  பிறக்குது. தங்கைக்கு  அண்ணன்  மேல  தான் தப்புனு தெரியாது , தன் காதலன்  தான்  தப்பு பண்ணிட்டான்னு  நினைக்குது

 

 இதுக்குப்பின் திரைக்கதையின் சுவராஸ்யமான  சம்பவங்கள்  என்ன?    கே  பாலச்சந்தர்  டச்  உடன் கூடிய  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  என்ன? என்பதை  யூ  ட்யூப் ல் கண்டு  மகிழுங்கள்

 

அண்ணனா சரத்பாபு , அவரு  அண்ணாமலைல  நெகடிவ் ரோல்  பண்ணதைப்பார்த்திருக்கேன், இப்போதான்  ஒரு பெண்ணை  ஏமாற்றும் ரோலில் பார்க்கிறேன், பொதுவா இவருக்கு  ஜெண்ட்டில்மேன்  எனும் பெயர் சினி ஃபீல்டில் உண்டு , பெரும்பாலும்  இவர்  பண்ணும் ரோல்கள் டீசண்ட்டான ந்நல்லவர் ரோலாகத்தான் இருக்கும் , இது விதி விலக்கு போல

 

தங்கையாக  சுமித்ரா. காதலை  மனசுக்குள்  வைத்துக்கொண்டு  வெளியே  அடவாடிப்பொண்ணு மாதிரி  காட்டிக்கும்  ரோல், பிரிச்சு மேஞ்சிருக்கார். ஒரு சுவராஸ்யமான  தகவல், இந்தப்படத்தில்  கமலுக்கு ஜோடியாக நடித்தவர்  20 வருடங்கள்  கழித்து  சிங்கார வேலன் ல  கமலுக்கு அம்மா  கேரக்டர், என்ன கொடுமை சார் இது ?


சுமித்ரா வுக்கு ஜோடியா  கமல். ஓப்பனிங்  சீன்ல  இவர் வில்லன் கேரக்டரோ?னு நினைச்சேன், பெண்களை  மட்டம்  தட்டும்  சீன்கள்  சிலதெல்லாம் பண்ணி இருந்தார், ஆனா  ஹீரோ கேரக்டர் . 2 பாட்டு  இவருக்கு , 2ம் செம ஹிட்டு  கம்பன்  ஏமாந்தான்  பாட்டு  செம்-ன்னா  அந்தப்பாட்டுக்கான லீட் சீனில்

  சுமித்ரா வுக்கு  தரப்பட்ட  காட்சி  கே பி  டச், இலக்கணம்  மாறுதோ   அதை விட  கலக்கல்  சாங் 


என்னடா  எல்லா கேரக்டரையும் சொல்லியாச்சு  மெயின்  கேரக்டர்  சொல்லலையேனு பார்க்கறீங்களா?  ஷோபா  இதில் தான்  அறிமுகம் , என்னா ஒரு ஆக்டிங் . அவ்ளோ சின்ன வயசுல எவ்ளோ மெச்சூரிட்டி அதே  சின்ன வயசுல பாலுமகேந்திரா  சகவாசத்தால  மனம் உடைந்து  தற்கொலை  செய்த  நடிகை  என நினைக்கும்போது  நிஜமாவே மனசை  என்னமோ பண்ணுது


பல காட்சிகளில்   ஷோபா  கற்பனையில்  மகாராணி  போல்     கற்பனையில்  கெட்டப்  மாறி ராணி  தோரனையில்  யாரங்கே  என உத்தரவிடுவது  கலக்கல் , க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  காட்சியில்  இவரது  வசனம்  அப்ளாஸ்  வாங்கி இருக்கும் அந்தக்காலத்தில்


 செவித்திறன்  அற்ற  மாற்றுதிறனாளி  கேரக்டர்  ஒண்ணு  இருக்கு , என்னப்பா  சம்பந்தமே  இல்லாம எதுக்கு   இந்த  கேரக்டர்  என நினைத்தேன். சம்பந்தப்படுத்தி  இருக்காங்க , பொறுமையான  , பக்குவமான  நடிப்பு


இசை  , ஒளிப்[பதிவு , எடிட்டிங்  எல்லாம் பக்கா 



 சபாஷ் டைரக்டர் 


1   முதல்  45   நிமிடங்கள்  மாறி மாறி  இரு  லவ் ஜோடிகளின்  காதல்  மலரும் சம்பவக்கோர்வைகள்  தான்  காட்சிகள் , அழகா இருக்கு


2    கமல்  ஏதாவது  ஆணாதிக்க  வசனங்கள்  பேசும்போது  அவர்  முன் கோபப்படும்  சுமித்ரா  தனிமையில்  வெட்கப்படுவது  கிளாசிக்


3  சரத்ப்பாபு   ஷோபாவை  பலவந்தமாக  கட்டிப்பிடிப்பது,

 கமல்  சுமித்ராவை  பலவந்தமாக  கட்டிப்பிடிப்பது , 

 செவித்திறன்  அற்ற  மாற்றுத்திறனாளி  கேரக்டர் ஷோபாவை   பலவந்தமாக  கட்டிப்பிடிப்பது,   என  அத்து மீறல்    காட்சிகளை  எல்லாம்  மிகச்சரியாக  திரைக்கதையில்  காட்சிப்படுத்திய  விதம்  அக்மார்க்  கே பி டச் 


4  சுமித்ரா  கெட்டப்பில்  ஷோபா  கிச்சனில்  கலக்கும் சீன்



நச்   வசனங்கள்


1  அக்கிரமத்தை  அதட்டிக்கேட்பவன்  கம்யூனிஸ்ட்னா நான் கம்யூனிஸ்ட் தான்


2   எதிர்ப்பு இருந்தாதான்  எதிலும் ஒரு சுவராஸ்யம் இருக்கும், எதிர்க்காத்து அடிக்கும்போதுதான் நான் தம்  பத்த வைப்பேன்


3   தவிச்ச  வாய்க்கு தண்ணி  தந்தா  தங்கம்  தந்த  மாதிரிம்பாங்க 


4   உங்களுக்கு  சீக்கிரமே  கல்யாணம்  ஆகும்


 அட நீங்க வேற  நானே  கோயில், குளம்னு சுத்திட்டு  இருக்கேன்


 ஒரு பூசாரி  கிடைக்காமயா போய்டுவான்?


5   கல்யாணமும் , சாவும்  டக்னு  வந்துடனும்


6  கிழவியைக்கூட கல்யாணம்  பண்ணிக்குவேன் ஆனா ஒரு கண்டிஷன் எனக்கு கிழவியைப்பிடிச்சிருக்கனும்


7 பொண்ணுக்கு ஆசைப்படத்தான்  தெரியும்னு இல்ல , அழவும் தெரியும் 


8   ஒருத்தன்  நிழலை  பூஜை  பண்றான் , ஒருத்தன்  நிஜத்தை  வேணாம்னு சொல்றான்


9   அட என்னப்பா? ஒரு விளையாட்டுக்காகவாவது  என் மேல  யாரும் சந்தேகப்பட மாட்டீங்களா? 


10   ஒரு பொண்ணுக்கு  புருஷன் அயோக்கியனா  அமைஞ்சுட்டாக்கூட பரவாயில்லை , ஆனா கோழையா  அமைஞ்சுடக்கூடாது 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில  நெருடல்கள் 


1  ஷோபா  கேரக்டர்  ஒரு புத்திசாலியாகக்காட்டப்படுது, ஆனா  அவர்  சரத்பாபு  4 பேர்  முன்னாடி  தன்னைக்காதலிக்காம  அதாவது  காதலன்  போல் காட்டிக்காம ரகசியக்காதலனாத்தான்  இருக்கான் என்பதில்  சந்தேகம் வர்லையா?  பொதுவா  அந்தக்காலப்பெண்கள் தன்  காதலன்  இவன் தான்னு தண்டோரா போட்டுக்குவாங்க,  ஊர் உலகத்துக்கு தெரியட்டும்னு ஒரு சேஃப்டிக்கு , அந்த  டெக்னிக்கை  இவர்  ஏன் ஃபாலோ  பண்ணலை? 


2  கமல்  சுமித்ராவிடம்  சரத்பாபுவைக்காட்டிக்குடுக்க வேணாம், அட்லீஸ்ட்  தான் ஷோபா கர்ப்பத்துக்கு  காரணம்  இல்லைனு ஏன் அடிச்சுப்பேசவே இல்லை ?


3  ஷோபாவின்  பேரான திலகம்  என்பதை  தன் நெஞ்சில்  பச்சை  குத்தி  இருப்பதை  கமலிடம் காட்டும்  கேர்கடர்  ஷோபாவிடம் கடைசி  வரை  காட்டாதது  ஏன்?


 சி.பி கமெண்ட் -     சூப்பர் ஹிட் பாடல்கள்  2 க்காகவும், ஷோபா  முதல்  படம் என்பதற்காகவும்  தவற விடாமல் பார்க்க  வேண்டிய படம் , ரேட்டிங்  2.75 / 5 . போர் அடிக்காம படம்  ஜாலியாப்போகுது 



 டிஸ்கி -  இந்தப்படம்  பார்க்க  பரிந்துரைத்தவர்  கூட எங்க ஊர் பொண்ணுதான். ஒரு க்ளூ , இவரும்  ஒரு எழுத்தாளர்.அந்த  ரைட்டர்  யார்?னு சரியா  யூகிப்பவர்களுக்கு 1000  பொற்காசுகள்  பரிசு  அவர் தருவார் . அவருக்கு நன்றி , ஜமீந்தார்  ஃபேமிலி , அவர் பதிவுக்கு  ஒரு லைக்  ஒரு கமெண்ட்  போடறவங்களுக்கே 100  ரூபா தர்றாராம்


Nizhal Nijamagiradhu.jpg