துருவங்கள் 16 (2016) என்ற வித்தியாசமான க்ரைம் திரில்லர் படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக அருண் விஜய் நடிப்பில் மாபியா சேப்டர் 1 (2020) என்ற ஆக்சன் திரில்லர் படத்தைக்கொடுத்தார், எடுபடவில்லை .
நெட் பிளிக்ஸ் ரிலீஸ் ஆக 2020 ல் வந்த "நவரசா" வெப் சீரிஸில் "பிராஜெக்ட் அக்னி " ஓகே ரகம் .டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ரிலீஸ் ஆன தனுஷ் நடித்த மாறன் (2022) எடுபடவில்லை .இவை போக நரகாசுரன் என்ற படம் முடிந்தும் சில சிக்கல்களால் வெளியாகவில்லை
ஸ்பாய்லர் அலெர்ட்
சம்பவம் 1 - வில்லன் ஒரு போலீஸ் ஆபிஸர் . பணம் வாங்கிக்கொண்டு எதையும் செய்யும் கெட்டவர் . ஒரு நாள் மந்திரியின் மகன் ஹிட் அண்ட் ரன் கேசில் மாட்டிக்கொள்ள அவனை லாக்கப்பில் அடைக் கிறார் . மந்திரியின் மகன் ஓவராக சவுண்ட் விட அவனை லாக்கப்பில் அடி வெளுக்கிறார் ஆனால் மந்திரியிடம் பணமும் வாங்கிக்கொள்கிறார் .. இவருக்கும், மந்திரிக்கும் பகை ஏற்படுகிறது
சம்பவம் 2 - நாயகன் +2 படிக்கும் மாணவன் .சக மாணவியான நாயகியைக்காதலிக்கிறார் . நாயகியின் அப்பா பள்ளி ஆசிரியர் .ஒரு நாள் நாயகி திடீர் எனக்காணாமல் போகிறார் .அவரைத்தேடும் படலத்தில் நாயகனும் , நாயகியின் அப்பாவும் தனித்தனியே கிளம்புகிறார்கள்
சம்பவம் 3 - வில்லனின் மகன் சினிமாவில் டைரக்டர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பவர் .அவரது கதையைத்திருடி ஒரு பிரபல இயக்குனர் படம் எடுக்க இருக்கிறார் .அதைத்தடுக்க வில்லனின் மகன் முயற்சிக்கிறார்
மேலே சொன்ன 3 சம்பவங்களை இறுதியில் எப்படி இணைக்கிறார்கள் என்பது மீதி திரைக்கதை
வில்லன் ஆக சரத்குமார் அனுபவம் மிக்க நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .படம் முழுக்க அத்தனை கேரக்ட்டர்கள் இருந்தும் இவர் மட்டும் தான் ஆடியன்ஸூட ன் கனெக்ட் ஆகிறார்
நாயகன் ஆக துஷ்யந்த் , நாயகி ஆக அம்மு அபிராமி இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் , ஆனால் அதிக ஸ்பேஸ் இல்லை
வில்லனின் மகனாக அதர்வா நடித்திருக்கிறார் . இவரது கேரக்டரை போதைக்கு அடிமை ஆனவர் போல சித்தரித்தது எதுக்கு ? மெயின் கதைக்கும் இவருக்கும் அதிக சம்பந்தம் இல்லை
நாயகியின் அப்பாவாக ரகுமான் . பரவாயில்லை ரகம்
ஜேம்ஸ் பிஜோய் தான் இசை .பாடல்கள் சுமார் . பின்னணி இசை பரவாயில்லை ரகம் .ஒளிப்பதிவு டிஜோ டோமி . குட் ஒன் .எடிட்டிங்க் ஸ்ரீஜித் சாரங்க் . 2 மணி நேரம் படம் ஓடுகிறது
சபாஷ் டைரக்டர்
1 முழுக்க முழுக்க நல்லவன் , முழுக்க முழுக்க கெட்டவன் , கொஞ்சம் நல்லவன், கொஞ்சம் கெட்டவன் என மனிதர்களில் மூன்று விதமானவர்கள் உண்டு என்று சொல்ல வந்த விதம் நன்று
2 வில்லனின் கேரக்ட்டர் டிசைன் , வில்லனின் நடிப்பு அருமை
3 க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் நன்று
ரசித்த வசனங்கள்
1 ஆறு மாசமாப் பழகுன பிரண்ட்ஸை நம்பறீங்க,ஆனா பிறந்ததுல இருந்து கூடவே இருக்கும் அம்மா, அப்பாவை நம்ப மாறீங்க,என்ன லாஜிக்கோ?
2 வாழ்க்கைல நாம நினைச்சபடி எதுவும் நடக்கலைன்னா டென்சன் ஆகக்கூடாது , வேற எதோ நல்லது நடக்கப்போகுதுனு நினைக்கணும்
3 ஹீரோ வெக்ஸ் ஆகி இருக்கும்போதுதான் அவன் லைஃபே சேஞ்ச் ஆகப்போகும் கேரக்ட்டர் இன்ட்ரோ ஆகும்
4 நான் கெட்ட போலீஸ் தான் ஆனா கெட்ட அப்பா இல்லை
5 கதையை மூளைல இருந்து எடுக்கக்கூடாது , இதயத்தில் இருந்து எடுக்கணும்
6 சினிமா ஒன்னும் நீ நினைக்கறமாதிரி ஈஸி இல்லை ., அதுக்கு பிராப்பர் பேக் கிரவுண்ட் வேணும்
7 ஸ் கூல் பொண்ணு மிஸ் ஆனா அது பாய்ஸ் மேட்டர் தான்
8 மனசுல இருப்பதை சொல்றதெல்லாம் க்ரைம் கிடையாது
9 போலீஸோட மகன் போலீஸாதான் ஆக்கனுமுனு சட்டம் இல்லை , அவனை அவன் போக்கில் விடு
10 நீங்க ஒரு நல்ல டீச்சர்னு நிரூபிச்சுட் டீங்க ,நம்பிக்கை துரோகம் , ஏமாற்றுதல் எல்லாத்தை யும் கத்துக்கொடுத்துட்டீங்க
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 போதைக்கு அடிமை ஆனவர் போல சித்தரித்த கமலின் சூரசம்ஹாரம் , போதைக்கு அடிமை ஆனவர்களை திருத்தும் ரஜினியின் ராஜா சின்ன ரோஜா ,சூர்யாவின் வாரணம் ஆயிரம் இவை மூன்றும் சரியாகபோகவில்லை . இதை மீறி எதற்காக அதர்வாவின் கேரக்ட்டர் டிசைன் அப்படி சித்தரிக்கணும் ? அவர் வரும் காடசிகள் செம போர்
2 ஒரு மினிஸ்ட்ரை லஞ்சம் வாங்கும் சாதா இன்ஸ்பெக்ட்டர் எதிர்ப்பது நம்பும்படி இல்லை
.அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -U /A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இந்தப்படம் சில வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டு இப்போ ரிலீஸ் ஆகுது .அதனால் அப்டேட் ஆகாத படம் என கொள்ளலாம் . டி வி ல போட்டா பார்க்கலாம் .விகடன் மார்க் 39 , குமுதம் - சுமார் . ரேட்டிங்க் - 2.25 / 5