Showing posts with label நினைத்தது யாரோ - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label நினைத்தது யாரோ - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, January 30, 2014

நினைத்தது யாரோ - சினிமா விமர்சனம்

 

ஹீரோ  ஒரு உதவி இயக்குநர். ஒரு நாள்  ஷூட்டிங்க் ஸ்பாட்ல  ஹீரோயினை சந்திக்கறார். ஒரே  ஒரு சீன்ல சும்மா தலையை மட்டும் காண்பிச்சுட்டுப்போங்க என்ற வேண்டுகோளுக்காக அவரும் நடிக்கிறார். அதனால் காலேஜில் அவர் பேர் கெடுது . ஹீரோயினுக்கு செம கடுப்பு .ஹீரோவைக்கண்டாலே பயந்து ஓடறார். ஹீரோ விடாம  ஹீரோயின் பின்னாலயே சுத்தி எப்படியோ கரெக்ட் பண்ணிடறார். 2 பேரும் லவ்விங்க் . 


சொர்ணமுகி படத்தில் வருவது போல் ஹீரோ ஒரு வருசம் ஜெயிலுக்குப்போறார் தான் செய்யாத ஒரு குற்றத்துக்காக . அந்த  சைக்கிள்  கேப் ல  ஹீரோயினுக்கு  ஒரு கோடீஸ்வரன் கூட மேரேஜ்  ஆகிடுது. அவர் மவுன ராகம்  மோகன் மாதிரி ஜெண்ட்டில் மேன். ஹீரோயின்  சோகமா இருப்பதைப்பார்த்து உன் ஃபிளாஷ் பேக் என்ன -னு கேட்கறார்.புருசனா நினைச்சுச்சொல்லவேணாம், ஃபிரண்டா நினைச்சு சொல்லுங்கறார். 

 ஹீரோ யின் சொந்தக்கதை காதல் வந்த கதை எல்லாம் எடுத்து விடுது. கடுப்பான புருஷன் டைவர்ஸ்  பண்ணிடறார். இதுல தமிழ் சினிமா செண்ட்டிமெண்ட் என்னான்னா  புருஷன் - பொண்டாட்டிக்குள்ளே  கில்மா ஏதும் நடக்கலை . 


 காதலிக்கு மேரேஜ் ஆன மேட்டர்   தெரிஞ்சு  ஹீரோ தேவதாஸ் ஆகி மப்பில் 24 மணி நேரமும் இருக்கார். அவரை பழையபடி சரி ஆக்கி பெரிய டைரக்டர் ஆக்கனும்னு ஹீரோயின் பாடு பட்டு கூடவே இருந்து உதவி இயக்குநரை இயக்குநர் ஆக்கிடறார்,. 



 ஹீரோ கிட்டே ஃபிரண்ட்ஸ் எல்லாம் உசுப்பேத்தறாங்க . அதான் படமும் இயக்கியாச்சு , காதலிக்கும் டைவர்ஸ் ஆயாச்சு , மேரேஜ்க்கு அப்ளை பண்ணுங்கறாங்க . 


 க்ளைமெக்ஸ் ல  ஒரு ட்விஸ்ட் இருக்கு  அது என்ன என்பதை  வெண் திரையிலோ ,  ஒரு மாசம் கழிச்சு சின்னத்திரையிலோ காண்க. 



விக்ரமன் பேக்  டூ ஃபார்ம் .  படம் போட்ட முதல்  2 ரீல்களில் 5 காதல்  ஜோடியை காட்டி எல்லாரும் காதலை தூற்றுவது போல் எல்லாம் சீன் வெச்சு இதென்ன , தேறாது போலயே என எண்ண வைத்து பின்  டர்ன் அடிச்சு மெயின் கதைக்கு வந்து தான் எப்போதும் பாசிட்டிவ் அப்ரோச்சர் , தன் திரைக்கதையில் வில்லனுக்கே வேலை  இல்லை என நிரூபிக்கிறார் . 


 ஹீரோ  புதுமுகம்  ரேஜித் மேனன்,ஏதோ கேரளா பார்டர் ஆள் போல . மிக மென்மையான  ,பெண்களை க்கவரும் , மோகன் போன்ற  முகச்சாயல் உள்ள ஆள். அசால்ட்டா நடிச்சிருக்கார் . பாடல் காட்சிகளில் மட்டும் லேசான தடுமாற்றம் , மற்ற படி ஓக்கே , நல்ல எதிர் காலம் உண்டு 


 ஹீரோயின்  புதுமுகம்  நிமிஷா . ஒரு நிமிசத்தில் மனதில் பதியும் குடும்பப்பாங்கான  தோற்றம் . இவர் அணியும் கண்ணிய உடைகள்  விக்ரமன் பிராண்ட் . டீசண்ட் டிரஸ் செலக்சனில் விக்ரமன் எப்போதும்  பேர் எடுத்தவர், இதிலும்  நிரூபிக்கிறார் . 


படத்தில்  ஓப்பனிங்கில்  வரும் கிளைக்கதைகள்  தேவை இல்லாதது . அதே போல் இடைவேளைக்குப்பின்  ஹீரோ எடுக்கும்  ஷூட்டிங்க் காட்சிகள்  தாவணிக்கனவுகள் படத்தை  நினைவு படுத்தி  இருக்கு . அதிலும் எடிட்டிங்க்கிலும் கவனம் செலுத்தி  இருக்கலாம் 


 பாடல் காட்சிகளில் வழக்கம் போல் அனைத்தும் மெலோடி தான் , கை ரேகை போலத்தான் காதல்  எனும் பாடல் அள்ளிக்குது  கவிதை நயம்  மிக்க வரிகள் , படமாக்கிய விதமும்  சூப்பர் 

 அஜித்தின் மச்சான்  தான்  ஹீரோயினுக்கு கணவர்  ரோல் . நல்லா பண்ணி இருக்கார் . இவர் கதிரின் காதல் வைரஸ் -ல்  ஹீரோவாகவும் , சமீபத்தில் வந்த நேர்  எதிர்  -ல் வில்லனாகவும் வந்தவர் .


வழக்கமாக விக்ரமன் படங்களில் வரும்  ல ல லால ல இதில்  மிஸ்சிங்க் . அதே  போல்  ஒளிப்பதிவிலும் , லொக்கேஷனிலும் வழக்கமான பாணியில்  இருந்து விலகி காலத்துக்கு ஏற்ப தன்னைப்புதுப்பிக்க  முயற்சி செய்திருக்கிறார்., ஆனால் பாடல் காட்சிகளில் மட்டும் இன்னும்  பூவே  உனக்காக பாதிப்பு 


ஹீரோ படம் எடுக்கும் படத்தில்  ஹீரோவாக நடிப்பவர்  தேவை  இல்லாமல் பாடல் காட்சியில்  விஜயை இமிடேட் செய்கிறார் . அவர் வரும் காட்சிகள் எரிச்சல் . 


 ஹீரோயின் தங்கையாக வருபவர் அச்சு அசல்( முகச்சாயலில் )  ஷகீலாவின்  தங்கை  போல்  இருக்கார் . 


 ஹீரோ - ஹீரோயின்  இடைப்பட்ட காதல் மலரும் காட்சிகள் கவி நயம். 



 படம் பார்க்கும்போது போட்ட  ட்வீட்ஸ் 


1, விக்ரமன் ன் நினைத்தது யாரோ? படம் போட்டு 10 நிமிசம் ஆகியும் ஹம்மிங் தீம் காணோம் .வாட் எ மெ மிராக்கிள் # லா ல லா லா



2 விக்ரமன் செல்வராகவனை மறைமுகமா நக்கல் அடிக்கும் காட்சிகள் வெச்சிருக்கார் # ஐ சண்டை சண்டை


3 ஹீரோ கிட்டே கடனா வாங்குன 5 ரூபாயை ஹீரோயின் மணி ஆர்டர் பண்ணிடறார்.அந்த பண்பைப்பார்த்து ஹீரோ க்கு லவ் #வாவ்! வாட் எ சிச்சுவேசன்


4 ஹீரோயின் ஜாக்கிங் போற ஸீன் ல கேமரா கால் கிட்டே ஜூம் # உங்க சிம்பாலிக் டச் ல தீ வைக்க


5 ஹீரோயின் மழை ல நனைஞ்சிட்டு இருக்கு.பேக்கு ஹீரோ வாட்டர் கேன் குடுத்து முகம் கழுவிக்கச்சொல்றார்.#,ஏதாவது குறியீடா இருக்குமோ?



6 இன்னைக்கு சன்டே.சென்னை ல போட்டோ ஸ்டூடியோ எதுவும் திறந்திருக்காது னு ஒரு டயலாக் வருது .# டயலாக் ரைட்டர் வெளியூர் போல

7 இடைவேளை ட்விஸ்ட் எதுமே இல்லை.அதை சமாளிக்க அஜித் மச்சான் ரிச்சர்டு வர்ற சீன் காட்டி " இவர் தான் கதைக்கு வில்லன் " னு சொல்லி இன்ட்டர்வல்


8 நினைத்தது யாரோ படத்துக்கு பணம் போட்ட புரொடியூசர் யாரோ ? # ஊ ஊ

9  இளைய தளபதியை டான்ஸ் காட்சியில் யார் தான் இமிடேட் பண்றதுன்னு வரை முறை இல்லாம போச்சு.


இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  கிளைக்கதையில் படத்துக்கு தேவை இல்லாத கதையில்  ஐ டி யில் ஒர்க் பண்ணும் மாடர்ன் கேர்ள் காதலனுடன்  கில்மா பண்ணி மேரேஜ்க்கு முன்பே கர்ப்பம் ஆகிறாள் .  வ்ழக்கம் போல் அவன்  கழட்டி விட்றான். இது தற்கொலை செய்ய முயற்சிக்குது . இன்னும் 1980 ல யே  இருந்தா எப்படி ? இப்போதான்  பல சோதனை முறை வந்துடுச்சே . காதலன் மேல்  புகார் கொடுத்து மெடிக்கல் செக்கப் மூலம் குழந்தைக்கு அப்பா அவன்  தான் என நிரூபிக்கலாமே? 


2 கழட்டி விடனும்னு நினைச்சே பழகும் அவன் காண்டம்  இல்லாம   அவளை கண்டம் பண்றான். எப்படி ? பாதுகாப்பா  மேட்டரை முடிக்க மாட்டானா? 


3  மேரேஜ்  முடிஞ்ச பின்னும்  2 வருசம் எந்த ஊர்ப்புருசன் மேட்டர்  முடிக்காம  பொண்டாட்டியை ஷோ கேஷ் பொம்மை கணக்கா  சும்மா பார்த்துட்டு மட்டும் இருக்கான் ? 


4  சரி , அதையாவது  ஜீரணிச்சுக்கலாம். ஹீரோயின்  “ என் ,காதலனை பெரிய ஆள் ஆக்கிட்டுத்தான் வருவேன் அப்டினு கிளம்பும்போது அப்பவாவது  மேட்டரை  முடிச்சுட்டு அனுப்ப மாட்டானா? ( இதுதான் நல்ல சான்ஸ் , கண்டிஷன் பெயில் அப்ளை பண்ற மாதிரி , நீ காதலனை பெரிய ஆள் ஆக்கனும்னா  முதல்ல நீ அம்மா ஆகிடனும் )

 மனம்  கவர்ந்த  வசனங்கள்


1   மிஸ் , என் செல்லுக்கு  ஏதாவது  மிஸ்டு காலோ , மெசேஜோ வந்துச்சா? 

   பில் கட்டலைன்னு மெசேஜ் தான் வந்துச்சு 


2  என் முகத்தை ஏன் உங்க சிஸ்டம்  டெஸ்க் டாப்ல வெச்சிருக்கீங்க ? 


 மிஸ் , நீங்களே  உங்க முகத்தைப்பார்த்திட்டிருந்தா  போர் அடிக்கும், எல்லாரும்  ரசிக்கட்டும் 


( விக்ரமன் படங்களீலேயே  மிகக்குறைவான  அழகிய வசனங்கள் இதில் தான் . மிஸ்சிங்க் )

சி பி கமெண்ட் -  காதலர்கள் , விக்ரமன் ரசிகர்கள் , பெண்கள் பார்க்கலாம். 
நினைத்தது யாரோ - ஒரு உதவி இயக்குநரின் எளிமையான காதல்் கதை .க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் குட் -  ஈரோடு ஸ்ரீ  கிருஷ்ணா வில் படம் பார்த்தேன்


விகடன் மார்க் =41 ,


ரேட்டிங் = 2.75 / 5


டிஸ்கி -

இங்க என்ன சொல்லுது - சினிமா விமர்சனம்