15 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தையே திடுக்கிடவைத்தது, நாவரசு கொலை
விவகாரம்! கடந்த ஏப்ரல் 20-ம் தேதிதான் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி ஓடிவிட்டதால், மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.
ஆமா.. நம்மாளூங்க தப்பி ஓடும் வரை வேடிக்கை பார்த்துட்டு , அதுக்கப்புறமா ஆள் விட்டு தேடுவாங்க..
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் நாவரசு. இவரது தந்தை பொன்னுசாமி, அந்தக் காலகட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தார்.
ஆமா.. நம்மாளூங்க தப்பி ஓடும் வரை வேடிக்கை பார்த்துட்டு , அதுக்கப்புறமா ஆள் விட்டு தேடுவாங்க..
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் நாவரசு. இவரது தந்தை பொன்னுசாமி, அந்தக் காலகட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தார்.
1996 நவம்பர் 6-ம் தேதி திடீரென்று நாவரசு காணாமல் போனார். 'காணாமல் போனாரா... கடத்தப்பட்டாரா?' என்று போலீஸ் குழம்பியது. நாவரசு காணாமல் போவதற்கு முன்பு கடைசியாக ஜான் டேவிட்டுடன் நடந்து சென்றதைப் பார்த்த மாணவர்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அதன் பிறகு ஜான் டேவிட்டை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். நாவரசு படித்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த ஜான் டேவிட், கரூரைச் சேர்ந்தவர். 'தனக்கு ரெக்கார்டு நோட் எழுதிக்கொடுக்கும்படி ஜூனியரான நாவரசுவை ஜான் டேவிட் டார்ச்சர் செய்தபோது, 'ஜாக்கிரதை... என் தந்தை பல்கலைக்கழகத் துணைவேந்தர்’ என்று கோபமாகச் சொல்லி இருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜான் டேவிட், 'சமாதானமாகப் போவோம்' என்று பொய்யாகச் சொல்லி நாவரசுவைத் தனியாக அழைத்துச் சென்று கண்மூடித்தனமாகத் தாக்கியதில், நாவரசுக்கு உயிர் பிரிந்துவிட்டது. அதன் பிறகு, உடலைத் துண்டு துண்டாக அறுத்து அப்புறப்படுத்தி இருக்கிறார் ஜான் டேவிட்' என்று முதல் கட்ட விசாரணையில் அப்போதைய கடலூர் மாவட்ட எஸ்.பி-யான ரவிச்சந்திரன் தெரிவித்து இருந்தார்.
15 நாட்களுக்குப் பிறகு பல்கலைக்கழகக் குளத்தில் சிதைந்த நிலையில் ஒரு ஆணின் தலை கிடைத்தது. சென்னை தாம்பரத்திலிருந்து கிளம்பிய 21 ஜி பஸ்ஸில் ஒரு பார்சலில் தலையில்லா முண்டம் கிடைத்தது. மரக்காணம் அருகே ரயில்வே டிராக் பக்கம் கை, கால்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றை எல்லாம் போலீஸார் ஒன்றுபடுத்தி, 'நாவரசுவின் உடல்தான்’ என்று உறுதி செய்தனர். சவாலான இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், 1998-ல் ஜான் டேவிட்டை குற்றவாளி எனக் கருதி இரட்டை ஆயுள் தண்டனை அளித்தது. இதை எதிர்த்து, ஜான் டேவிட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். போதிய ஆதாரம் இல்லை என்று சொல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியம், வி.பக்தவத்சலு ஆகியோர் ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர். இதையடுத்து, கிறிஸ்துவ போதகராக மாறி தேவாலயத்தில் பணியாற்றி வந்தார் ஜான் டேவிட்.
பாவம். அந்த மதத்துக்கே தீராத களங்கம்
பாவம். அந்த மதத்துக்கே தீராத களங்கம்
2002-ம் வருடம் தமிழக அரசு இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தகம் சர்மா தலைமையிலான பென்ச், ''மாணவர் நாவரசு கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக உள்ளது.
இந்த வழக்கில் சரியான விசாரணை நடத்தாமல், ஜான் டேவிட்டுக்கு கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது!'' என்று குறிப்பிட்டதோடு, ''ஜூனியர் மாணவரான நாவரசுவை, ராகிங் என்கிற பெயரில் திட்டமிட்டு சீனியர் மாணவர் ஜான் டேவிட் கொலை செய்தது, ஆதாரப்பூர்வமாகவும், சாட்சிகள் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டு இருப்பதால், ஜான் டேவிட்டுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. எனவே, ஜான் டேவிட் கோர்ட்டில் உடனடியாக சரணடைய வேண்டும்!'' என்று தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.
உடுமலைப்பேட்டையில் வசித்து வரும் நாவரசுவின் தந்தை பொன்னுசாமி, மலையாண்டி கவுண்டனூர் என்கிற ஊரில் பொன்.நாவரசு மெட்ரிக் பள்ளி ஒன்றைத் துவக்கி நடத்தி வருகிறார். அவர் அமெரிக்காவில் மகள் வீட்டுக்குச் சென்று இருந்த காரணத்தால், அவர் சார்பாக, மைத்துனர் சிவ.சத்தியசீலன் பேசினார்.
''மருத்துவம் படிக்கப்போன நாவரசுவை, கதறக் கதறக் கொன்ற கொலைகாரன் இத்தனை காலமும் வெளியில் நடமாடியதை நினைக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கும். குற்றம் செய்தால், சட்டத்தின் முன்பு தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்து இருக்கிறது!'' என்றார் சோகத்துடன்.
டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல் தனஞ்செயன், ''இந்த வழக்கில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்காக ஆஜரான பிரபல வழக்கறிஞர் சுசில்குமார் எதிர்த் தரப்புக்காக வாதாடினார்.
ஜான் டேவிட்டின் சூட்கேஸிலும் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கருவிகளிலும் நாவரசுவின் ரத்தம் படிந்து இருந்தது முக்கியமான ஆதாரமாக இருந்தது. நாவரசுவுக்கு முன்பே, ஜான் டேவிட் பலரை ராகிங் செய்ததற்கான சாட்சியங்கள், கொலைக்குப் பிறகு பதற்றத்துடன் ஜான் டேவிட் நடமாடியதைப் பார்த்த சாட்சிகளை மேற்கோள் காட்டினேன்.
ஜான் டேவிட்டுக்கு திருமணம் ஆனதையும், அவர் மத போதகராக இருப்பதையும் காட்டி அனுதாபம் பெற முயன்றதைக் கடுமையாக எதிர்த்தேன். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஜான் டேவிட்டுக்கு கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்!'' என்றார்.
கடலூர் மாவட்ட போலீஸார் ஜான் டேவிட்டை தேடியபோதுதான், ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்ற தகவல் கிடைத்துள்ளது. உடனே, இன்டர்போல் போலீஸ் உதவியுடன் ஜான் டேவிட்டைத் தேடும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள்!
கடைசியாக வந்த தகவல் - சென்னை, கரூர் மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ஜான் டேவிட் சென்னை அடையாறில் தங்கி, வேளச்சேரியில் உள்ள பி.பி.ஓ., கம்பெனியில் பணிபுரிந்ததை கண்டுபிடித்தனர். போலீசார் தேடுவதையறிந்த ஜான் டேவிட், பாண்டிச்சேரிக்கு சென்று விட்டார். இந்நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு கடலூர் மத்திய சிறையில் ஜான் டேவிட் தானாகவே வந்து சரணடைந்தார்.
கடைசியாக வந்த தகவல் - சென்னை, கரூர் மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ஜான் டேவிட் சென்னை அடையாறில் தங்கி, வேளச்சேரியில் உள்ள பி.பி.ஓ., கம்பெனியில் பணிபுரிந்ததை கண்டுபிடித்தனர். போலீசார் தேடுவதையறிந்த ஜான் டேவிட், பாண்டிச்சேரிக்கு சென்று விட்டார். இந்நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு கடலூர் மத்திய சிறையில் ஜான் டேவிட் தானாகவே வந்து சரணடைந்தார்.