Showing posts with label நாட்டுநடப்பு. Show all posts
Showing posts with label நாட்டுநடப்பு. Show all posts

Tuesday, February 15, 2011

நாடு ஏன் இப்படி குட்டிச்சுவரா போச்சு?

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_180507000000.jpg
1.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி: கடந்த தேர்தலில், இலங்கைத் தமிழர் பிரச்னை தான், தேர்தல் முடிவைத் தீர்மானிக்கப் போகிறது என, எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் தவறான பிரசாரம் செய்தன. குறிப்பாக, சோனியாவைப் பற்றி, "சிடி' போட்டு அவதூறு பரப்பின. அதையும் மீறித்தான் எங்களுக்கு வெற்றி கிடைத்தது. அதுபோலத்தான், இந்தத் தேர்தலும் இருக்கும். ஸ்பெக்ட்ரம் மீதான ஓட்டெடுப்பாக இது இருக்கப் போவதில்லை.



வழக்கமா கலைஞருக்கு தி மு க காரங்க தானே ஜால்ரா அடிப்பாங்க.. நீங்களுமா?

---------------------------------------------------------------------------------

2.இ.கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன் பேட்டி: ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக, பல தரப்பினர் கோரிக்கை விடுத்ததின் பேரில் விசாரணை நடத்தியதில், ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழல் சுமத்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வந்ததை, அரசு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா, தனக்கு ஆதாயம் தேடிக்கொண்டு சதி திட்டம் தீட்டியுள்ளார்; லஞ்சம் வாங்கி உள்ளார்; லஞ்சம் கொடுத்துள்ளார்; தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு உதவி புரிந்துள்ளார்.

ஆமா.. வேண்டியவங்களுக்குத்தான் உதவி பண்ணுவாங்க... வேண்டாதவங்களுக்கா உதவி பண்ணுவாங்க?ஆனா அண்ணன் இப்போ கம்பி எண்ணுறதைப்பாத்தீங்க இல்ல... பாவம் கட்டு கட்டா நோட்டை எண்ணுனாரு...

-------------------------------------

3. சமூக ஆர்வலர்கள் சாடல் : ம.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் பேச்சு: சட்டசபை தேர்தலுடன், லோக்சபா தேர்தலையும் சந்திக்கும் அவசரம் வந்துள்ளது. இந்த ஊழலால் தி.மு.க., தொண்டனே அவமானப்பட்டு நிற்கிறான். கோர்ட் மட்டும் இல்லாதிருந்தால் நாட்டை விற்றிருப்பர். இலவச வீடு வழங்கும் திட்டத்தில், கொடுக்கப்படும் பணத்தில், கழிவறை கூட கட்ட முடியாது. ஓட்டுக்கு பணம் கொடுத்தாலோ, வன்முறையில் இறங்கினாலோ சும்மா இருக்க மாட்டோம். காலை 7 மணிக்கே சென்று ஓட்டு போட்டு விடுங்கள். இல்லாவிட்டால், மற்றவர்கள் போட்டு விடுவர்.

தி மு க தொண்டன் அவமானப்பட்டு நிக்கறான், ஓக்கே. தி மு க தலைவனுங்க யாரும் அவமானப்படலையே...ராசாவை தூக்கில் போட்டாக்கூட நம்ம கலைஞரு “ ஒருவரை தூக்கில் போடுவதால் மட்டுமே அவர் குற்றவாளி ஆகி விட மாட்டார்”னு முரசொலில எழுதப்போறாரு.

--------------------------------------------------


4. காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சித்ததற்காக, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள தி.மு.க., பேச்சாளர் வாகை முத்தழகன் பேட்டி: கருணாநிதியிடம் அவர் மகன்கள் கூட நம்பிக்கை வைக்க மாட்டார்கள்; தொண்டர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களில், நானும் ஒருவன். தலைவர் என்பவர் உண்மைகளை விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணிக்காக என்னை பலிகடா ஆக்கிவிட்டார். குறையுள்ளவன் தான் மாற்று முகாம் தேடிப் போவான்; என்னிடத்தில் நிறைகள் தான் அதிகம்.

எல்லாம் இருந்து என்ன பண்றது? ஜால்ரா அடிக்கத்தெரியலையே...வாலி, வைரமுத்துவெல்லாம் பாருங்க.. என்னமா ஜால்ரா அடிச்சு பொழப்பை ஓட்டறாங்க..விசுவாசமா இருந்தா மட்டும் போதாது... கேக்கறவங்க காது கூசுற அளவு ஜால்ரா அடிக்கனும்.அப்பத்தான் கழகத்துல முன்னேற முடியும்.

-------------------------------------------------------------


5எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேட்டி: உலக மக்கள் பிரச்னை எல்லாம் தமிழன் எழுதியிருக்கிறான். ஆனால், தமிழர்கள் பிரச்னை என்று வந்தால், பிறமொழி எழுத்தாளர்கள் யாருமே பெரிதாக கவலைப்படவுமில்லை; எழுதவுமில்லை. நவீன படைப்பு இலக்கியவாதிகள் ஈழம் குறித்து பதிவு செய்யத் தவறிவிட்டனர்

அவங்களுக்கு அதுக்கெல்லாம் எங்கே டைம் இருக்கு...?தேகம் பற்றிய சந்தேகங்களுக்கு நாவல் எழுதவே நேரம் சரியா இருக்கு.
அப்படியே மீறி எழுதுனாலும் மீறி மீறி போனா 100 புக் விக்கும்.அது பதிப்பக வாடகைக்கு கூட கட்டாது.. 100 டிகிரி, திருப்பூர் பனியனும்,அருப்புக்கோட்டை அகிலாவும்னு நாவல் எழுதுனா 2 லட்சம் புக் விக்குது
 
  --------------------------------------------------
 http://narumugai.com/wp-content/uploads/2010/10/Sameera_Reddy1.jpg
6.தமிழக காங்., எம்.எல்.ஏ., யசோதா: எனது தொகுதியில் உள்ள ஆதனூருக்கு பாலம் தேவை என, அ.தி.மு.க., ஆட்சியிலும் கேட்டேன்; கிடைக்கவில்லை. இந்த ஆட்சியிலும் ஐந்தாண்டுகளாக தொடர்ந்து கேட்டு வந்தேன்; கிடைக்கவில்லை.

உங்களை யாரு கலைஞர்ட்ட டைரக்ட்டா கேக்க சொன்னது? நீரா ராடியா கிட்ட சொல்லி இருந்தா வாங்கற கமிஷனை வாங்கிட்டு ஆக வேண்டியதை பார்த்திருப்பாங்க... இன்னும் பச்சப்புள்ளயாவே இருந்தா அரசியல்ல குப்பை கொட்ட முடியாது.

-----------------------------------------------------


7.தமிழக சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன்: புழல் சிறையில், நாடாவால் தூக்கு போட்டு, ஒரு கைதி இறந்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. "இதுபோன்ற சம்பவங்கள் தொடரக் கூடாது' என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நல்லா விசாரிச்சு பாருங்க . அந்த தூக்கை போட்டதே அந்த ஜெயிலராத்தான் இருப்பான்.நீங்க சொல்றது எப்படி இருக்குன்னா  ராசாவிடம் இனி ஊழல் பண்ண வேணாம்னு அறிவுறுத்தி உள்ளேன்னு நம்ம தன்மானங்கெட்ட தலைவரு சொன்ன மாதிரி இருக்கு.

--------------------------------------

8முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி: நம் வீட்டு பிள்ளைகள், சினிமாவை நம்பி ஓடுகின்றனர். நடிகரின் கட்-அவுட்டுக்கு பால் ஊற்றுகிறான்; பால் இல்லை என்றால் பீர் ஊற்றுகிறான். அவன் ஹீரோவுக்கு பிடித்தது பீர்; அதனால் அதை ஊற்றுகிறான். இது கேவலமான கலாசாரம்.

நீங்க சொல்றது கரெக்ட்தான். ஆனா 2011 எலக்‌ஷன்ல யார்கிட்டே பிச்சை எடுக்கலாம்?கலைஞரா? ஜெ-வா?ன்னு இன்னும் முடிவு பண்ணாம பச்சோந்தி மாதிரி மாத்தி மாத்தி குழப்பறாரே.. அந்த கேவலமான கலாச்சாரத்துக்கு இது மோசம் இலை.

-----------------------------------------------------

9. தமிழக அரசின் துணை மானியக் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்: அரசுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் செலுத்த வேண்டிய மின்வரி மற்றும் மின்வரி மீதான தண்ட வட்டித் தொகை 1,235 கோடியே 13 லட்சம் ரூபாய், மின் வாரிய பங்கு மூலதனமாக மாற்றப்பட்டுள்ளது.

நல்லா விசாரிங்கப்பா.. கடைசில கலைஞர் டி வி நிர்வாகம் கணக்குல அதை வரவு வெச்சிருக்கப்போறாங்க..

---------------------------------------------
10. நடு நிசி நாய்கள் படம் பல கலாச்சார சீரழிவுகளை உள்ளடக்கியது. படம் வந்தால் பல சர்ச்சைகளை சந்திக்க நேரிடும். - இயக்குநர் கவுதம் மேனன்


அப்போ சீன் எடுக்கும்போதே வேணும்னே தான் எடுத்திருக்கீங்க...தமிழ்க்கலாச்சாரம் எக்கேடு கெட்டா என்ன? உங்களுக்கு கல்லா நிரம்புனா சரி...
--------------------------------------------

டிஸ்கி -1  சமீரா ரெட்டியின்  முதல் ஸ்டில்லுல அவர் சரியா ஏன் தலை சீவலை? அவரோட 2வது ஸ்டில்லுல அவர் போட்டிருக்கற செயின் நல்லா தெரியுது.. ஆனா டாலர் சரியா தெரியலன்னு யாராவது கவலைப்பட்டா நான் கடுப்பாயிடுவேன் . ஹி ஹி .

டிஸ்கி -2  - நாடு குட்டிச்சுவர் ஆகறது இருக்கட்டும்.. நீ ஏன் இப்படி குட்டி சுவரா இருக்கேன்ன்?னு கேக்கறவங்களுக்கு நாடு எவ்வழி குடிமகன் அவ்வழி.. ஹி ஹி

Tuesday, September 14, 2010

நாட்டு நடப்பு - சிரிப்போ சிரிப்பு

1.இந்த வாரத்தின் சிறந்த பிஸ்னெஸ் மேக்னெட் பிர்லா விருது சன் டி வி கலாநிதி மாறனுக்கு, எந்திரன் பட டிரைலரைக்கூட விட்டு வைக்காமல் விழா நடத்தி காசு பார்த்தமைக்காக. (ஹூம்,பல்லு இருக்கறவங்க பக்கோடா சாப்பிடறாங்க,கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடியறா,நமக்கென்ன?)

2. இந்த வாரத்தின் சிறந்த ஜோக்காண்டி ஜெர்க்கப்பன் விருது  ஐ ஜி சிவனாண்டி அவர்களுக்கு,அண்ணாமலை யுனிவர்சிட்டி ஸ்டூடண்ட் ஜோதி ஈவ் டீசிங்க்கால் தற்கொலை செய்யவில்லை,என சப்பைக்கட்டு கட்டி கேசை திசை திருப்பியதற்காக.

3 .  இந்த வாரத்தின் சிறந்த கலாச்சாரக்காவலன் விருது மிட்டாய் எனும் படத்தின் இயக்குனருக்கு,ஹீரோயின் ஒரே சமயத்தில் 2 பேரை கல்யாணம் செய்வது போலும் ,அவர்களுடன் வாழ்வது போலவும் திரைக்கதை அமைத்ததற்கு. (மனசுக்குள்ள ஜூனியர் சாமினு நினைப்பா?)


4. இந்த வாரத்தின் சிறந்த மல்டிகில்டி பல்டி டஹால்டி விருது ஹிந்தி நடிகர் ஷைனி ஆஜோவின் வீட்டு பணிப்பெண் அனாமிகாவுக்கு ,நடிகர் மேல் ரேப் புகார் அளித்து பின் கோர்ட் விசாரணையில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை,யாரும் என்னை எதுவும் செய்யவில்லை என பல்டி அடித்து அரசாங்கபணத்தை,நேரத்தை வீணாக்கியமைக்காக.( சே,எத்தனை டி போட வேண்டியதா போச்சு)


5. இந்த வாரத்தின் சிறந்த கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் கஞ்சா கார்மேகம் 
 விருது  ஒரிஸா மாநில ஷாபி இஸ்லாம்க்கு,தபால் மூலம் 6 மாதங்களாக கஞ்சா கடத்தியதற்கு.(அடா அடா,என்ன ஒரு கிரியேட்டிவ் திங்க்கிங்டா சாமி)

6. இந்த வாரத்தின் சிறந்த ஏழை ஜாதிக்கு குரல் கொடுக்கும் ஏகலைவன் விருது  பிரதமர் மன்மோகன்சிங்க் அவர்களுக்கு,வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாகக்கொடுங்கள் என உத்த்ரவு இட்ட உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை அலட்சியப்படுத்தியமைக்காக.(வேஸ்ட்டாப்போனாலும் எங்களுக்கு கொள்கை தானே முக்கியம்?)

7. இந்த வாரத்தின் சிறந்த செட்டில்மெண்ட் செம்மல் செவலக்காளை விருது
ஹிந்தி நடிகர் ஷைனி ஆஜோவிற்கு,தன் வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணை ரேப் செய்து பின் கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைத்தமைக்காக. (அண்ணே,அடுத்த புராஜக்ட் எப்போண்ணே?)

8. இந்த வாரத்தின் சிறந்த தழுவாத கைகள் தங்கமுத்து விருது ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூம்மாவுக்கு, 22 குழந்தைகள் பெற்றமைக்கு. (குடும்பத்தை உருவாக்கச்சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித்தந்தார் எங்கப்பா)

9. இந்த வாரத்தின் சிறந்த ஆர்வக்கோளாறு ஆர்யமாலா விருது டென்னிஸ் வீராங்கனை ஷைனிக்கு,விளையாட்டு மைதானத்தில் கொடுக்கப்பட்ட பணமுடிப்புப்பரிசை என் டி டிவி கேமராக்கள் பார்க்கிறது என்பதைக்கூட உணராமல் அங்கேயே எண்ணிப்பார்த்தமைக்காக.(எங்கே ஓடிடப்போவுது அம்மணி?)

10. இந்த வாரத்தின் சிறந்த அவசரக்குடுக்கை அனந்த “பதமாஸ்” விருது எமதர்மராஜாவுக்கு,ஒரே வாரத்தில் சினி ஃபீல்டின் முக்கிய ஆட்களான நடிகர் முரளி,பாடகி ஸ்வர்ணலதா,இயக்குநர் கே எஸ் ரவி 3 பேரின் உயிர்களை எடுத்தமைக்கு.