Showing posts with label நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு. Show all posts
Showing posts with label நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு. Show all posts

Monday, April 01, 2019

நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு

 பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி., நடவடிக்கைகள் மூலம், ஏழை எளிய மக்களிடம் இருந்த பணம், பறிக்கப்பட்டது. இதை மீட்டு, மக்களிடமே மீண்டும் ஒப்படைக்கும் பணியை, காங்., அரசு செய்யும்.- ராகுல்: #இலவசமா மாசம் 6000 ரூபா தர்றதா சொன்னதையே ஜனங்களால நம்ப முடியல, இதுல கட்டுன ஜிஎஸ்டியை ரிட்டர்ன் தர்றீங்களா? சும்மா அடிச்சு விடுங்க, காசா? பணமா?


==================


 காங்கிரஸ் தலைவர் ராகுல், குழந்தையை போன்றவர். அவர் கூறும் விமர்சனங்களை பெரிதுபடுத்த விரும்பவில்லை-மம்தா பானர்ஜி: # பப்புங்கறாரா? பாப்பாங்கறாரா?


================


3   ஏழைகளுக்கு வங்கியில் கணக்கு திறக்க கூட வழி செய்து தராதவர்கள் தான், இன்று, மக்கள் வங்கி கணக்கில், மாதந்தோறும், 6,000 ரூபாய் போடுவேன் என்கின்றனர் -மோடி:  # கறுப்புப்பணத்தை  மீட்டு ஆளுக்கு  ஒன்றரை லட்சம் தர்றதா யாரோ சொன்னாங்களே? அதே மாதிரி இதுவும் சும்மானாச்சுக்கும்

================ 

4  மே, 23க்குப் பின், முதல்வர், இ.பி.எஸ்., புழல் சிறைக்கு செல்ல வேண்டுமா அல்லது சேலம், மத்திய சிறைக்கு செல்ல வேண்டுமா என்பதை, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் முடிவு செய்வார். -செந்தில் பாலாஜி # அதுக்குள்ளே  அவர் ( ஸ்டாலின் ) பிரதமர் ஆனா வேணா வாய்ப்பு உண்டு


=============


எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையில் இருக்கும் உறுப்பினர்களை, அக்கட்சியில் கொண்டு போய் சேர்க்கணும்; அவ்வளவு தான் என்னோட வேலை. தீபா # ஒரு 10 பேர் இருப்பாங்களா? ஒரு ஷேர் ஆட்டோ பிடிச்சா போதுமே? கொண்டு போய் சேர்த்துடலாமே?


==========


6  - தி.மு.க.,வின் வெற்று தேர்தல் அறிக்கை திண்டிவனத்தில் முதல்வர் பேச்சு  # அவங்க அதை வெற்றி தேர்தல் அறிக்கைஞு நினைக்கறாங்க போல


===============


7  

ஜாதி மட்டுமே தேர்தலில் வெற்றியை தீர்மானிக்காது- திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி # அப்புறம் ஏன் கட்சிங்க எல்லாமே அந்தந்த தொகுதில எந்த ஜாதி ஓட்டு அதிகம் இருக்குனு பார்த்து அந்த ஜாதி வேட்பாளரை களம் இறக்குது?



==================

8  

மோடிக்கு எதிராக யார்? என்ற கேள்வி 2024-ல் வரலாம்; 2019-ல் வாய்ப்பேயில்லை : பிரதமர் மோடி #  யோகி தான்  அடுத்த பிரதமர் வேட்பாளர்னு பேச்சு இருக்குதே?



 மோடிதான் மோடிக்கு எதிரிங்கறாங்களே?


===========


மோடியை எதிர்த்து போட்டியிடட்டுமா?- தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிரியங்கா # இதைக்கூட சுயமா சிந்திக்க முடியலை, மற்றவர்களிடம் கருத்துக்கேட்க்றார்



==============

10   

‘நானும் காவலாளி’ விளம்பரத்தை வாபஸ் பெற்றது ரயில்வே  #  எல்லா ரயில்கள்லயும் எம் ஜி ஆர் நடிச்ச காவல்காரன், ராமராஜன் நடிச்ச எங்க ஊரு காவக்காரன் பட போஸ்டரை ஒட்டிடுங்க, யாரும் ஆட்சேபிக்க முடியாது



===================

11    பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்தால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டையே மாற்றிவிடுவார்கள்= கே.எஸ்.அழகிரி # அரசியல்வாதிகளின் பண்பாடு என்ன? வேற்றுமை கொள்கைகள் வேறு பட்ட கொள்கைகள் உள்ள கட்சியாக இருந்தாலும் தேர்தல் ச்மயத்துல மட்டும் ஒற்றுமையா கூட்டணீ வைப்பதுதானே?

============

12    

தமாகா கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம் # அண்ணாமலை சைக்கிள் இல்லாட்டி என்ன? பாட்ஷா ஆட்டோ  கிடைச்சிருக்கே?



==============


13 

மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல்: ஆ.ராசா எச்சரிக்கை   #  ஏன்? தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்களை எல்லாம் ஒளிச்சு வெச்சுடுவாரா?



==============


14 

பாஜக, அதிமுகவுக்கு வாக்களித்தால் நாடே சுடுகாடாகி விடும்: கனிமொழி எச்சரிக்கை  # கொளுத்தற வெய்யில்ல இப்பவே சுடு(கிற) காடாத்தாங்க நாடே இருக்குது



=================


15   

அமமுக வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவாக வாக்குகள் பெறாமல் இருந்தால் சரிதான்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்  # நோட்டா வுக்குப்போட்டியா இப்போ ஏகப்பட்ட கட்சிகள் இருக்கு போலயே?



==================


16  

வன்முறையே திமுகவின் கலாச்சாரம்; பிரியாணி சாப்பிட்டு பணம் கொடுக்காதவர்கள் திமுகவினர்: ஓபிஎஸ் விமர்சனம்  #  பிரியாணி சாப்பிட்ட பணம் ஆட்சிக்கு வந்த பின் தர்றதா சொல்லி இருப்பாங்களோ?



==============


17 

சரவண பவன் நிறுவனருக்கு ஆயுள்: ஜீவஜோதி வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் # மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு, மாட்டினால் ஜெயில் உண்டு



================

18 

ஸ்டாலின் தேர்தல் ஜுரத்தில் இருக்கிறார்; தோல்வி பயத்தில் என்னென்னவோ பேசுகிறார்: முதல்வர் பழனிசாமி விமர்சனம்  # எது பேசுவதாக இருந்தாலும் துண்டுச்சீட்டு பார்த்துத்தானே பேசுவார்?



====================


19 

மோடி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் இந்தியா பின்தங்கிவிட்டது: மதுரை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு  # வரி வசூல்ல ஜி எஸ் டி வசூல்ல முன்னணி ல இருக்கே?



=============


20   வேட்பு மனு தாக்கல் மற்றும் பரிசீலனை என ஆரம்பக் கட்டத்திலேயே 4 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  # நாளைக்கு  ட்தேர்தலில் தோற்றாக்கூட இந்த 4 க்கும் விளக்கம் தரத்தேவை இல்லை


==================
 

Sunday, March 31, 2019

எங்க ஊரு காவக்காரன்

  மக்கள், சின்னத்தைப் பார்த்து, தேர்தலில் ஓட்டளிப்பது இல்லை; அக்கட்சியின் தலைவரை பார்த்து தான் ஓட்டளிக்கின்றனர். -- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பழனிசாமி (அ.ம.மு.க) # அப்புறம் எதுக்காக குக்கர் சின்னம் தான் வேணும்னு அடம் பிடிக்கறாரு தினகரன்?


================


2  மோடி முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது: ராகுல் # அதனாலதான் ஏழைகளுக்கு மாதம் 60,000 ரூ இலவச அறிவிப்பை வெளியிட்டீங்களா?


===============


3  அடங்கொப்புரான் சத்தியமா, நான் காவல்காரன்'... என்ற, எம்.ஜி.ஆர்., பாடலை, பிரதமர் மோடியின், பிரசார பாடலாக, தமிழக பா.ஜ., தேர்தல் பிரசார குழு தயாரித்துள்ளது. # அடடா , ராமராஜம் நடிச்ச எங்க ஊரு காவக்காரன் படத்து;ல வர்ற > எங்க ஊரு காவக்காரன் அவன் எல்லாத்துலயும் கெட்டிக்காரன் “ பாட்டை மிஸ் பண்ணீட்டீங்களே?


================


நாங்கள் திருநீறு பூசி, இந்துக்களை ஏமாற்றி விடுவோம்,''-தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் # மக்கள் முகத்தில்  கரியைப்பூச ரெடியா இருக்காங்கப்பா


===============


5  ஜெ., இருந்திருந்தால் பன்னீர் செல்வம் மகனுக்கு 'சீட்' கிடைத்திருக்குமா- ஸ்டாலின் # கலைஞர் இருந்தவரை நமக்கே கட்சித்தலைவர் பதவி கிடைக்கலையே?


=============


6  குடும்பத்தை மட்டுமே வளர்த்த கட்சி தி.மு.க., மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு # மக்களூக்காக உழைக்கறாங்க, அதாவது தன் வீடு தன் மனைவி  தன் மக்கள் இப்படி


===============


மக்களுக்கு பிரதமர் மோடி உரை: 'உலக நாடக தின வாழ்த்துக்கள்' : ராகுல் காந்தி கிண்டல் #  அய்யோ ராமா எல்லாம் டிராமா அப்டிங்கறாரா?



============


'ராவணன் ராகுல் காந்தி; பிரியங்காவுக்கு முடிவில் சூர்ப்பனகைக்கு நடந்ததுபோல நடக்கும்'' - ராஜஸ்தான் பாஜக தலைவர் சர்ச்சைப் பேச்சு # நோஸ்கட் பண்ற மாதிரி பேசற தலைவர்கள் நாக்கை கட் பண்ணனும்



==============


9  

பயணச்சீட்டில் பிரதமரின் புகைப்படம்: ரயில்வே, விமானத்துறை அமைச்சர்களுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி #  அமைச்சர் சீட் கிழியப்போகுதோ?



=============

10  

கட்சித் தலைமை விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன்: பிரியங்கா காந்தி # அம்மாவும் , சகோதரனும் வேணாம்னா சொல்லப்போறாங்க?


==============

11  ஆரணி தொகுதியில் திமுக, காங்கிரஸ் என்பதற்குப் பதிலாக திமுக, அதிமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று பிரச்சாரத்தில் ராமதாஸ் மாற்றிப் பேசியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.#

பழைய நினைப்புதான் பேராண்டி பழைய நினைப்புதான்

 எப்படியும் ஜனங்க இவர் சொல்றத எல்லாம் சீரியசா எடுத்துக்கப்போறதில்லை, கவலைப்படேல்


======

12 

மோடியை 'டாடி' என சொன்னதில் என்ன தவறு? இந்திரா காந்தியை 'அன்னை' என்றுதானே அழைக்கிறார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


அம்மா அப்டினு யாரை வேணா கூப்பிடலாம், ஆனா அப்பானு அப்பாவை மட்டும் தான் கூப்பிட முடியும், அப்பா ஸ்தானம்னு வேணா சொல்லலாம்


================


13   இன்றைக்கு, கையில் வைத்திருக்கிற, 'ஸ்மார்ட் போன்' மூலம், அரசியல் உள்ளிட்ட அனைத்தையும் இளைஞர்கள் பார்த்து, தெரிந்து கொள்கின்றனர். அவர்களை ஏமாற்ற முடியாது-ராமதாஸ்:  # மாற்றம் , முன்னேற்றம் பத்தின மீம்ஸ் எல்லாம் மாம்ஸ் பார்த்திருப்பாரோ?


===============


14    'குடி'யால் நடக்கும் குற்றத்துக்கு, அரசும் உடந்தை என்ற ரீதியில், பொறுப்பேற்க வேண்டும். அதாவது, குற்றம் செய்ய ஒருவரை துாண்டுகிறது- சென்னை உயர் நீதிமன்றம்:  # குடியரசு என்பதை குடி அரசுனு தப்பா புரிஞ்சுட்டாங்க போல இந்த ஆட்சியாளர்கள்


===============


15 ஏழைகளுக்கு தரும் நிதியுதவியை தடுக்கும், ஒரே கட்சி, தி.மு.க., தான்-இ.பி.எஸ்.:   # அவங்களுக்கும் தேர்தல் நிதி குடுத்துடுங்க, கம்முனு இருப்பாங்க, பாவம் ஏழைக்கட்சி


==============


16   பிரதமர் மோடி, இந்தியாவின் கதாநாயகன். இந்தியாவை பாதுகாக்கும், 'ஸ்டன்ட் மாஸ்டர்! -ராஜேந்திர பாலாஜி #  தேர்தல் கிட்டே வரும்போது மட்டும் பாகிஸ்தான் கூட சண்ஐ போடுவாரு?



===========

17  தி.மு.க.,வை தொடங்கிய அண்ணாதுரை, கடைசி வரை ஏழையாகவே வாழ்ந்து, மறைந்தார். அந்த கட்சியின் இப்போதைய தலைவர்கள், ஏழ்மையை ஒழிக்க மாட்டார்கள்; ஏழைகளையே ஒழித்துவிடுவர்-   ராமதாஸ் # வறுமையை ஒழிப்போம்னு அரசியல்வாதிகள் சொல்வதற்கு அர்த்தமே ஏழைகளை நாட்டை விட்டு துரத்தி விடறதா இருக்குமோ?


==============


18   மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து, நான் தான் முதலில் தெரிவித்தேன்-சுப்ரமணியசாமி # எங்கே என்ன முறைகேடு நடந்தாலும் உங்களூக்கு மட்டும் தகவல் கிடைச்சுடுதே அது எப்படி?> இன்ஃபார்மர் டீம் வெச்சிருக்கீங்களோ?


=================


19 இன்று, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள், பெண்களுக்கு பாதுகாப்பான கட்சிகளாக இருக்கின்றன-= ராமதாஸ் # இவருக்கு இன்னும்  பொள்ளாச்சி மேட்டர் தெரியலை போல 




==============

20  நாடு சுதந்திரம் அடைந்த பின், இரு அறிவுரைகளை, காந்தி வழங்கினார். அதில், காங்கிரசை கலைக்க வேண்டும் என்பது ஒன்று -வெங்கையா நாயுடு # காந்தி உருவாக்குன காங்க் இப்போ இந்திரா காங்

ராஜீவ் காந்தி காங்
ராகுல் காந்தி காங் கிரஸ்னு  பரிணாம வளர்ச்சி அடைஞ்சிடுச்சே? அடுத்த தேர்தல்ல பிரியங்கா காந்தி காங்க் ஆனாலும் ஆகலாம்


=============

Saturday, March 30, 2019

நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு



1   

பின்லேடனுக்கு கூட இவ்வளவு நெருக்கடி வந்திருக்காது: கார்த்தி சிதம்பரம் வேதனை


இதுக்குதான் உழைச்சு சாப்பிடனும்கறது,அரசியல்வாதி ஆகிட்டாலே ரெய்டு. ஜெயிலு பெயிலு வாழ்க்கைதான்

============


2  

அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு- முதல்வரை சந்தித்து கடிதம் கொடுத்தார் சரத்குமார்


அப்பாடா, அதிமுக வுக்கு அவர் குடும்பத்துல இருந்து 4 ஓட்டு கிடைச்சிடுச்சு


=============


3  

கனிமொழி வெற்றி பெற வேண்டி திருச்செந்தூரில் ராஜாத்தி அம்மாள் வழிபாடு # பகுத்த்றிவு சம்மர் வெக்கேஷனுக்கு  டூர் போய் இருகு போல



 கனிமொழிக்கு அரோகரா அரோகரா



==============

4  

மத்தியில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும் தமிழகத்துக்கு திமுக எதையும் செய்யவில்லை: சென்னை தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு   # ஏன் செய்யலை? 2 ஜி வழக்கில் ஊழல் செஞ்சாங்க

சர்காரியா  கமிஷன் அடிச்சாங்க

==================



5    

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது; அமமுக வேட்பாளர்களுக்கு பொது சின்னம் ஒதுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு  #   அடடா, இனி நம்ம பருப்பு வேகலையேனு எதிர்க்கட்சிகள் எள்ளி நகையாடுமே?



==============


6   

பாஜக ஆட்சியில் படித்த இளைஞர்கள் உணவு டெலிவரி செய்கின்றனர்: தயாநிதி மாறன் விமர்சனம்


படிக்காத இளைஞர்களை அந்தப்பணிக்கு அமர்த்தினா  எப்படி அட்ரஸ் படிச்சுப்பார்த்து டேர் டெலிவரி பண்ணூவாங்க?

================


ஒளிமயமான எதிர்காலம்': சிவாஜி பாடலை எம்ஜிஆர் பாடல் என கூறிய பிரேமலதா


பெரிய பிரச்சனை இல்ல, அடுத்த கூட்டத்துல ஒரு எம் ஜி ஆர் பாட்டை சிவாஜி பாட்டுன்னு சொல்லிடுங்க, தானிக்கு தீனி சரியாப்போச்சு


==============


8   தேர்தலில் போட்டியிட, எனக்கு விருப்பம் இருக்கிறது. ஆனால், அதற்கு நேரம், காலம் வர வேண்டும்.-குஷ்பு   #   சரி சரி  கண்ணைத்துடைங்க


ராகு காலம் முடிஞ்சு ராகுல் காலம் வருதுன்னாங்க, இவருக்கு  மட்டும் இன்னும் ராகு காலம் தான் போல


ரஜினி கட்சிக்கு தாவிடுங்க, எப்படியும் அண்ணாமலை சீட் குடுத்துவாப்டி



===================


 வறண்ட பூமியான தமிழகத்தில், தாமரை மலராது.-

பாரிவேந்தர் 


 பூமி வறண்டு போகக்காரணமே  சூரியனோட தாக்கம்தான்னு ஒரு அர்த்தம் வருதே, கூட்டணீக்கட்சியையே தாக்கறாரே? 


================


10 மதுரை - போடி அகல ரயில் பாதை பணிகள், 20 ஆண்டுகளாக நிறைவடையவில்லை- EVKS

 அப்போ அதுக்கு திமுக வும் ஒரு காரணம்கறதை ஒத்துக்கறாரா?ஏன்னா அந்த  கால கட்டத்துல திமுக வும் ஆளும் கட்சியா இருந்ததே?


================

1  

நான் பனங்காட்டுக்காரி; சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்: தமிழிசை # அந்தப்பக்கம் பணம் காட்டும் காரர்கள் இருந்தாலும் அஞ்ச மாட்டீங்களா?



==============

47 சதவீத ஆண்கள் மதுவுக்கு அடிமை: நாட்டில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு அரசை ஏன் பொறுப்பாக்க கூடாது?- அரசுக்கு உயர் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு # மானம் முக்கியமா? வருமானம் முக்கியமா?ன்னா நம்மாளுங்க வருமானம் தான் முக்கிய்ம்பாங்க



================


இடம் மாறினாலும் தடம் மாறாத  ஒரே ஆள் நான்தான் - நாஞ்சில் சம்பத் # அதே மாதிரி  திமுக , மதிமுக, அதிமுக , அமமுக இப்படி 4 இடம் மாறி மாறி போனதும் நாம ஒரு ஆள் தான்


================


4  , 

அடிமட்டத்தில் இருந்து வந்து முதல்வர் ஆனவன் நான்: எடப்பாடி பழனிசாமி உருக்கம் # அடிமட்டம்னா  தரைல  விழுந்து வணங்கி வந்தவர்னு அர்த்தமா?



==============


5   என்னைத் தனிப்பட்ட முறையில் சீண்ட வேண்டுமென நினைத்தால், ஆஸ்திரேலியாவும் தெரியும், சிங்கப்பூரும் தெரியும். இவ்வளவுதான் சொல்வேன். இதற்கு மேலும் ஆழமாகச் சொல்ல வேண்டுமெனில், பிஞ்சிலே பழுத்த பழமாக உள்ளவர்கள் விளையாட வேண்டாம்'' -இளங்கோவன். # சினிமா ஹீரோ மாதிரி பஞ்ச் டயலாக் எல்லாம் பேசறாரு, பஞ்ச் பேசி பிழைக்க வந்தவரோ?


===================

6  மோடி அரசு மீது, தொடர்ந்து அரசியல் ரீதியாக கேள்விகளை எழுப்பி வருவதால், என் தந்தை மீது, பல பொய் வழக்குகளை போட்டு வருகின்றனர்.- கார்த்தி சிதம்பரம் # வழக்கை சந்திக்காம ஜாமீன் கேட்டு கேட்டு காலத்தை ஓட்டறீங்களே? அது ஏன்?


===================


துணை முதல்வரும், அமைச்சர் ஜெயகமாரும், என் வீட்டிற்கு வந்து, ஆதரவு கேட்டனர். அதேபோல, பல அமைச்சர்களும் பேசினர். அதன் அடிப்படையில், அ.தி.மு.க., கூட்டணியை ஆதரிக்க முடிவெடுத்தோம்=சரத்குமார்:  # அப்போ உங்க வீட்டுக்கு யாரு வந்து ஆதரவு கேட்டாலும் உடனே அவங்களுக்கு ஆதரவு கொடுத்துடுவீங்களா?ரெய்டு வராம இருக்கத்தான்னு சொல்றாங்களே?


===============


 ஜெ.,வும், விஜயகாந்தும், சாதாரணமானவர்களை, சக்திமிக்கவர்களாக ஆக்கும் குணம் படைத்தவர்கள்-பிரேமலதா #அப்போ ஓபிஎஸ் சாதாரணமானவர் அப்டிங்கறாரா?


==============

9   அ.தி.மு.க., அரசு, இணைப்பு தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பல பொய் வரலாறுகளையும், பொய் வாக்குறுதிகளையும் வாரி இறைத்துள்ளது-முத்தரசன் # தேர்தல் வந்துட்டாலே அரசியல்வாதிகள் மெய் மறப்பது இயல்புதுதானே?


==================


10 அ.தி.மு.க., கூட்டணி என்பது, தெளிந்த நீரோடை போன்றது; அதில் இருக்கும் நீரை, எடுத்து குடிக்கலாம். ஆனால், தி.மு.க., கூட்டணி என்பதோ, தேங்கிக் கிடக்கும் குட்டை தண்ணீரைப் போன்றது. அது, குடிப்பதற்கு லாயக்கு இல்லாதது.-ராமதாஸ் #  திமுக , அதிமுக இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்னு யாரோ சொன்னாங்களே?



===================

Thursday, March 28, 2019

நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு

ரஜினி, அரசியலுக்கு வரமாட்டார். வந்தால், சிறையில் தான் இருப்பார் -  சு சாமி:  # 

கருத்து சொல்றாரா? மிரட்றாரா?


===============


2   : ஈரோடு அல்லது திருப்பூரில் போட்டியிட விரும்பினேன். கூட்டணி கட்சிகளுக்கு வழங்க வேண்டியதால், தேனியில் போட்டியிட, தலைமை கேட்டுக் கொண்டது  - EVKS 


 ஈரோடுதான் என் கோட்டை, வேற பக்கம் போட்டி இட்டா கோட்டை விட்டுடுவோம்னு சொல்லி இருக்கலாமே?


=============


3  தேர்தலுக்கு பின், அ.தி.மு.க.,வினர், எங்களுடன் இணைவர். நாங்கள், எந்த காலத்திலும், அவர்களுடன் இணைய மாட்டோம்.  = தினகரன்:  # 

 முள்ளு மேல சேலை விஒழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் ஜனங்களுக்கு ஒரு நட்டமும் இல்ல


================

4   அ.தி.மு.க.,வுடன் இணைவதை விட, கடலில் குதிப்பதே மேல்-தினகரன்:

நீச்சல் தெரியும்கற தெனாவெட்டுல பேசிட்டு இருக்காரு


=============


எந்தத் தலைமைத் தேர்தல் அதிகாரியும், நீண்ட காலம், அந்தப் பணியில் இருக்க விரும்புவதில்லை.-முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி, நரேஷ் குப்தா # உங்க பேரைக்கேட்டாலே அரசியல்வாதிகளுக்கு “குப்”னு வேர்த்துடுதாமே? மிஸ்டர் குப்தா


==============


6  லோக்சபா தேர்தல் முடிவில், மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு, எந்தத் தேசியக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. எனவே, கூட்டணி ஆட்சி தான் அமையும் -நவீன் பட்நாயக்   # நாயக் நஹி கல்நாயக் ஹூங் மை அப்டிங்கறாரு


===============


7 -   தி.மு.க.,வின் வேட்பாளர்களை, வாரிசுகளா என்று, ரத்தப் பரிசோதனை செய்யாதீர்கள் -  ஸ்டாலின் 

சோதனை , ரெய்டுன்னாலே அரசியல்வாதிகளுக்குப்பிடிக்கறதில்லை


=============

8   தேர்தல் ஆணையம், ஆட்சியாளர்களின் கைப்பாவையாக செயல்படக் கூடாது' என, ஐகோர்ட் கண்டித்துள்ளது. எனவே, தேர்தல் ஆணையம், சார்பு நிலையாக செயல்படாமல், நடுநிலையாக செயல்பட வேண்டும்.-முத்தரசன்

பாவைன்னா கேவலமா?னு சம்பந்தம் இல்லாம பெண்ணுரிமை இயக்கங்கள் வந்துடப்போகுது


================

9  -  கடந்த லோக்சபா தேர்தலில், மோடிக்கு ஆதரவாக எப்படி அலை வீசியதோ, அதேபோல் இந்தத் தேர்தலில், மோடிக்கு எதிரான அலை வீசுகிறது -, திருமா 

அப்போ  ஜெயிச்சாக்கூட உங்க சொந்த செல்வாக்குல ஜெயிச்சதா இருக்காது?


=================

10  தற்போதுள்ள, மோடி தலைமையிலான அரசு அகற்றப்பட வேண்டும். இதற்காகவே, காங்கிரஸ் போராடுகிறது. நாட்டைக் காப்பாற்றும் வகையில், வாழ்வா, சாவா நிலையில், காங்கிரஸ் உள்ளது.-

கபில் சிபல் 


# அப்போ கட்சி ரொம்ப வீக்கா இருக்குனு சொல்ல வர்றாரா?


=================

11   

பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்



கட்சியையே பதிவு பண்ணலை, இவர் எங்கே எப்போ மக்கள் மனசுல பதிய வைக்கப்போறாரு?


===========


12   தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டுக்கு, சிவன் கோயில் பட்டர்கள் சென்று, பூரண கும்ப மரியாதை கொடுத்து ஆசி வழங்கினர்  

பகுத்தறிவு தேர்தல் சமயங்களில் மட்டும் லீவ் எடுத்துக்கும் போல


=================


13 ஆ.ராசாவின் சொத்துப் பட்டியலில் எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த 2014-ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த சொத்து விவரங்களே இந்தத் தேர்தலிலும் தாக்கல் செய்துள்ளார். 


  பதவி கிடைத்த பின் தானே  பொதுவா அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு கூடும்?


=================


14 

தேர்தலில் அதிமுகவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத்தரும் தொகுதி பொறுப்பாளர்களுக்கு 5 பவுன் தங்கம் வழங்கப்படும்=செங்கோட்டையன்


வெறும் ஒண்ணே கால் லட்ச பரிசுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யனுமா?னு யோசிக்க  மாட்டாங்களா?


=================


15 

சேவக அரசிடம் இருந்து  தமிழகத்தை எங்கள் கூட்டணி மீட்கும்: வைகோ 


மக்கள் சேவையே செய்யாத கட்சிக்குதான் ஆதரவு தருவார் போல?


==================

16  

திமுகவில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா?- ட்விட்டரில் கனிமொழிக்கு தமிழிசை பதிலடி



உதய சூரியனுக்கே ஓட்டுப்போடுங்கள் எனும் கருத்தை வேணா யார் வேணா எப்போ வேணா கட்சில சொல்லலாம்


===============


17   

நான் ஒரு கால்டாக்ஸி; வேட்பாளர்கள் அதில் பயணிக்கட்டும்: தேர்தலில் போட்டியிடாதது குறித்து கமல்ஹாசன் பதில்



ட்ரெய்லர்ல ( பாராளூமன்ற தேர்தல்)   ஹீரோ வர மாட்டாரு, ஆனா மெயின் பிக்சர் ( சட்டமன்ற தேர்தல்) ல அவசியம் வருவாருனு சொல்ற மாதிரி இருக்கு


==================



18 

ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000, ராகுல் திட்டம்: ‘பம்மாத்து அறிவிப்பு’ என அருண் ஜேட்லி சாடல் #  சுருக்கமா சொல்லனும்னா அது மோடி அறிவித்த ஒவ்வொருவர் அக்கவுண்ட்டிலும் 15 லட்சம் ரூபா என்பதற்கு சமம். 2ம் நடக்காது



==============


19   


பாஜகவில் இணைகிறார் ஜெயப்பிரதா  #   இனி ரத யாத்திரை போனா அது ஜெயப்ரதா யாத்திரை எனப்படுமோ?



=================


20 

உ.பி. ஆட்சியாளர்கள் ‘டி ஷர்ட்’ விற்கின்றனர்: பாஜக மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு



 அதை காபி அடிச்சு நீங்களும் காபி சர்ட் விற்கலாமே?


================