17 வயசு பொண்ணு , அதே வயசு மைனர் பையன் இவங்களுக்குள்ள நிகழும் காதல் மாதிரி ஏதோ 1 , ஒரு கட்டத்துல கட்டில்ல 2 பேரும் ஒரு கேம் விளையாடிடறாங்க , பிரியறாங்க . பொண்ணு மாசமா இருக்கு , டி என் ஏ டெஸ்ட் பார்த்தா அப்பா அந்தப்பையன் இல்லை , யார் கெடுத்திருப்பாங்க என்ற அரிய தகவலை கண்டு பிடிப்பது தான் பின் பாதிக்கதை
படத்தோட ஹீரோவா அசால்ட் ஜோதிகா . இவரு ஆக்டிங்க்கு மெனக்கடலை , தன் கணவர் சூர்யாவோட சிங்கம் 1,2,3 பாகங்களைப்பார்த்து அசால்ட்டா முடிச்ட்டாங்க , இவரோட பாடி லேங்குவேஜ் பிரமாதம் , சூர்யா இவர் கிட்டே கத்துக்க வேண்டியது அடக்கி வாசிக்கும் வசன உச்சரிப்பு , ஜோ சம்பந்தப்பட்ட காட்சிகள் ஹரி தான் இயக்கி இருப்பாரோனு டவுட் கிளப்பற மாதிரி காமரா பறக்குது , செம ஸ்பீடு காட்சிகள் , எடிட்டிங்
படத்தோட அடுத்த ஹீரோ ஜிவி பி . இவரும் குறை சொல்ல முடியாத நடிப்பு , ஆரம்பக்கட்ட்சிகளில் பாலா படங்களுக்கே உரிய மட்டமான முக ஒப்பனை ஹீரோவா வந்தாலும் போகப்போக கருணை மனசுடன் அவரை அழகா காட்டி இருக்காரு
இன்னொரு நாயகியா அந்த புதுமுகம், தமிழுக்கு நல் வரவு , காதல் காட்சிகளீல் சில இடங்களீல் யதார்த்தம் , பல இடங்களில் நாடகத்தனம்.
இளையராஜாவின் பிஜிஎம் பற்றி சொல் வது மயில் தோகையை வர்ணிப்பது போல
வில்லனாக வருபவர் கச்சித நடிப்பு , ஜோ வின் கணவரா வர்றவர் தம்பி மாதிரி இருக்கார்
ஜோ வின் மகள் அவரை எடுத்தெறிந்து பேசுவது செயற்கை திணிப்பு
இடை வேளை ட்விஸ்ட் , க்ளைமாக்ஸ் அதிரடி வழக்கம் போல்.
நச் டயலாக்ஸ்
1 முறைக்காத.நீ சாதாரணமாப்பாத்தாலே முறைக்கற மாதிரிதான் இருக்கு #Naachiyaar
2 நான் அந்த மாதிரி ஆள் இல்ல சார்
எல்லா பொறம்போக்குகளும் அப்டிதான் சொல்றாங்க #Naachiyaar
3 என்னடா ,இப்பதான் பொண்ணைப்பாத்த ,அதுக்குள்ள இருமுடி கட்டீட்ட போல #Naachiyaar
4 என் லவ்வர் தாங்க எனக்கு
அம்மா
என்னை மாதிரி பசங்களுக்கு காதலி தாங்க அம்மா #Naachiyaar
என்னடா சொல்ற?புரியல
5 எதுக்கு என் கிட்ட இருந்து ரத்தம் எடுக்கறீங்க?
உனக்கு பொம்பள வியாதி இருக்கா?னு பாக்க
நான் ஆம்பளைங்க,எனக்கு எப்டீ பொம்பள வியாதி வரும்? #Naachiyaar
6 நீ தென் கலையா?வட கலையா?
தோப்பனார் தென்கல ,அம்மா வடகல
நினச்சேன் #Naachiyaar
7 பணம் கறது மீத்தேன் மாதிரி,அதல பாதாளம் வரை போய் நாசம் பண்ணீடும் #Naachiyaar
8 ட்விட்டரு ,FB , வாட்சப் னு நெட்ல குடி இருக்கற பொண்ணுங்களைக்கூட நம்பிடலாம் ,ஆனா ஊமக்கோட்டான் மாதிரி இருக்கற பொண்ணுங்களை மட்டும் நம்பவே கூடாது #Naachiyaar
9 முதல்ல விசாரிச்ட்டு அப்றமா அடிக்கலாமில்ல?
;சாரி,நான் அடிச்ட்டுதான் விசாரிக்கற பழக்கம் #Naachiyaar
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 மைனர் பையன் ,மைனர் பொண்ணு லவ் பண்ற கதைதான் ,அதனால இயக்குனர் திரைக்கதைல மேஜரா எதுவும் யோசிக்கல போல.இடைவேளை வரை சுமார் , ஸ்லோ #Naachiyaar
சபாஷ் டைரக்டர்
1 வழக்கமா பட ஹீரோவை ரொம்ப கேவலமான மேக்கப்ல காட்றவர் இதுல கொஞ்சம் திருந்தி இருக்கார்
2 வழக்கமா வன்முறை ல கொடிகட்டிப்பறக்கும் இவரது சை க்கோத்தன இயக்கம் இதில் குறை வு
3 ஒரு ஆச்சரியமான மாற்றம் படத்தில் யாரும் கஞ்சா அடிக்கலை,
4 பின் பாதி திரைக்கதை இயக்கம் கனக்ச்சிதம்
5 பாலாவுக்கு பொதுவா காமெடி அவ்வளவா வராது , ஆக்சன் காட்சிகளீல் கூட இயல்பான காமெடியை கொண்டு வர முயற்சி செய்தது அழகு
லாஜிக் மிஸ்டேக்ஸ் & திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 ஒரு கோடீஸ்வர வீட்டில் வேலை பார்க்கும் நாயகி செலவுக்கு 200 ரூபா கேட்பதை அந்த வீட்டு ஓனர் 10 நிமிசம் டைம் எடுத்து தன் மனைவியிடம் வியாக்கியானம் பேசுவது செம செயற்கை
2 பொதுவா அழகான பொண்ணுங்க எதுனா உதவி கேட்டா பிற்கால நலன் கருதி ஆம்பளைங்க டக்னு செய்வதுதான் வழக்கம். பிசாத்து 200 ரூ பாய்க்கு அவர் ப்ம்முவது காமெடி
3 பா ரஞ்சித் , பாலா போன்ற இயக்குநர்கள் கதைக்கு சம்பந்தம் இருக்கோ இல்லையோ பிராமணர்களை போகிற போக்கில் திட்டுவது போல வோ நக்கல் அடிப்பது போலவோ காட்சிகள் , வசனங்கள் வைப்பது ஏனோ?
4 முந்தைய படமான தாரை தப்பட்டை கொடுத்த அடியின் காரணமா இதில் வன்முறைக்கு கடிவாளம் போட்டிருப்பது ஓக்கே , போலீஸ் ஆஃபீசராக வரும் ஜோதிகா தன் கார் டிரைவரை வாடா போடா என பேசுவது ஓவர்
5 அதே போல் க்ளைமாக்ஸ் காட்சியில் தன் உயர் அதிகாரி லேடியிடம் பஞ்ச் டயலாக் பேசுவதும் செயற்கை
சி.பி கமெண்ட் -நாச்சியார் − பாலா தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி சராசரி மசாலா்.முன் பாதி சராசரி விடலை லவ் ,சுமார் ,பின் பாதி அதிரடி ஸ்பீடு.பாலா ரசிகர்களுக்கு பிடிக்காது,சராசரி ரசிகர்களுக்கு Ok.ஜோதிகா,BGM குட்.விகடன் 41 , ரேட்டிங் 2.75 / 5
பெண்களும் பார்க்கலாம்,. அதிகம் வன்முறை , கச்சடா காட்சிகள் இல்லை,
மீடியமா எல்லா செண்ட்டர்களிலும் ஓரளவு ஓடிடும்
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) - 41
குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) - 3/5
c @ erode aanoor