மக்களால் அதிகம் கவனிக்கப்படாத “புலி வருது “ பட ஓப்பனிங் 20 நிமிடகாட்சி , பிரமாதமாக பேசப்பட்ட ” யாவரும் நலம் ” இந்த 2 படங்களிலிருந்து அட்லீ ஒர்க் ( உல்டா ரீமிக்ஸ்) செய்து இருந்தாலும் சொந்த சரக்கும் கொஞ்சமாவது சேர்த்து தான் இந்த திரைக்கதையை ரெடி பண்ணி இருக்காங்க , நல்ல முயற்சி தான்
ஹீரோ தூங்கும்போது ஒரு கனவு வருது , அதில் ஒரு கொலை நடக்குது, விழிச்சுப்பார்த்தா கனவில் நடந்தது நிஜத்திலும் தொடருது, ஹீரோ கனவில் கண்டதை ஹீரோயின் நிஜத்தில் சந்திக்கறார் ( நூறாவது நாள் , 24 மணி நேரம் படத்துலயும் நளினி இப்படி கனவு காண்பார்)
இந்த சுவராஸ்யமான முடிச்சை வெச்சு ஒரு கோஸ்ட் த்ரில்லர் தந்திருக்காங்க
ஹீரோவா ஆரி நல்ல இயல்பான அமைதியான நடிப்[பு . ஓப்பனிங் சீன்கள்ல திரைக்கதை மொக்கை போட்டாலும், 4 வது ரீலில் இருந்து படம் சூடு பிடிக்குது. நல்ல கதைக்கரு அமைஞ்சும் , அந்த நாயகன் நாயகி லவ் போர்சன் , எக்ஸ்ட்ரா லக்கேஜ் தான்
நாயகிகளாக அதுல்யா ,ஆஸ்னா சவேரி 2 பேரும் கொடுக்கப்பட்ட வேலையை கரெக்டா பண்ணி இருக்காங்க ,. மேக்கப் தான் ஓவர்
ஹீரோவுக்கு நண்பரா வர்ற காளி வெங்கட் பெரிய காமெடி எதுவும் பண்ணலைன்னாலும் அப்பப்ப ஒன்லைனர் அடிச்சு சி செண்ட்டர் ஆடியன்சை கவர முயற்சிக்கறார்
சித்தாரா கெஸ்ட் ரோல் ,
இயக்குநர் இஷாக் ஆல்ரெடி அகடம் என்ற படத்தை இயக்கி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தவர் . இந்தப்படத்துக்கு சென்சார்ல 18 கட்டாம், யப்பா
ஒளிப்பதிவும் இயக்குநரே, பெரிய அளவில் மிரட்டவில்லை , பேய்ப்படமாக எடுக்காமல் சஸ்பென்ஸ் த்ரில்லராகவே எடுத்திருக்கலாம், இப்பத்தைய ட்ரெண்ட் பேய்ப்படம் என்பதால் இப்படி ஒரு திரைக்கதை அமைத்திருக்கக்கூடும்
நச் டயலாக்ஸ்
1 அறிவு இல்லாதவன்தான் முட்டாள்னு இல்ல.அறிவு இருந்தும் பணம் சம்பாதிக்கத்தெரியாதவன்தான் முட்டாள் #NageshThiraiyarangam
2 50,000 rs சம்பளம் வாங்கிட்டு 55,000 ரூ க்கு EMI கட்றவன்தான் சாப்ட்வேர் இஞ்சினியர் #NageshThiraiyarangam
3 3 வேளை சோறு ,தங்க இடம் கொடுத்தா போதும் ,வேலைக்கு வர 5 லட்சம் இஞ்சினியர்ஸ் காத்துக்கிட்டு இருக்காங்க #NageshThiraiyarangam
4 பொண்ணுங்களை கரெக்ட் பண்றப்ப மட்டும் இவன் பிரைன் பிரைட்டா"வேலை செய்யும் #NageshThiraiyarangam
5 வேலை வெட்டி இல்லாதவன்தான் பார்க் வருவான்,ஆனா பார்க் ல ஒரு வேலைங்கறியே,அப்டி என்ன வேலை? #NageshThiraiyarangam
6 காதலர்களுக்கு சர்வீஸ் பண்றது அந்த கடவுளுக்கே சர்வீஸ் பண்ற மாதிரி #NageshThiraiyarangam
7 ஊட்டில ஒரு பாட்டி ,கோவைல ஒரு பாட்டி ஒரே டைம்ல இட்லி சுட்டாங்க.யாரோட இட்லி முதல்ல வேகும்?
ஊட்டி பாட்டீது.ஏன்னா ஹைட்டான இடம் இல்லையா?
சபாஷ் 1971 IAS எக்சாம்ல கேட்கப்பட்ட கேள்வி இது,ஒரு பய இதுவரை பதில் சொல்லல #NageshThiraiyarangam
9 நைட் பூரா கூடவே இருந்தும் எதுவும் செய்யாதவன் பகல்ல மட்டும் என்ன செஞ்சிடப்போறான் ? #NageshThiraiyarangam
10 இந்த வேலை உனக்குத்தாம்மா
என்ன தகுதி ல தந்தீங்க?
நீ பொண்ணுங்கற ஒரு தகுதி போதாதா? #NageshThiraiyarangam
11 நீ பேசறது பொய்னு தெரியுது, ஆனா பேசறது நீ என்பதால் அதை ரசிக்கத்தோணுது #naaheshthiraiarangam
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 ஹீரோயின் பாத்ரூம்ல குளிச்ட்டு டர்க்கி டவல் கட்டீட்டு வெளில வருது,டவல் ஈரமா இருக்கு,ஆனா உடம்புல ஒரு நீர்த்திவலை கூட இல்ல ,அது எப்டீ?அவனவனுக்கு அவனவன் கவலை #naagheshthiraiarangam
சபாஷ் டைரக்டர்
1 பின் பாதி திரைக்கதை செம ஸ்பீடு
2 டூயட் காட்சிகள் , மொக்கை காமெடி என எந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கும் இல்லாதது
லாஜிக் மிஸ்டேக்ஸ் ; திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 அனாதைகள் உடம்பில் இருந்து ரத்தம் எடுத்து அதில் உள்ள பிளாஸ்மாக்களை பிரித்து எடுத்து மீண்டும் பேலன்ஸ் ரத்தத்தை அவங்க உடம்புலயே செலுத்தறதா வில்லன் க்ரூப்ல வசனம் வருது , எதுக்கு ரத்தத்தை மீண்டும் அவங்க உடம்பில் செலுத்தனும்?தேவையே இல்லையே?
2 ஹீரோயின் வில்லன் கேம்ப்பில் போய் வீடியோ எடுக்கும்போது வில்லன் பார்ப்பார் என தெரிந்தும் பெப்பரப்பே என ரூமில் அசால்ட்டாக வீடியோ கேமராவுடன் போவது நம்பும்படி இல்லை
3 தூங்குனாத்தானே கனவு வருது , பின் கொலை நடக்குது , நாம தூங்காம இருப்போம் என ஹீரோ முயல்வது நம்பும்படி இல்லை , யாரோ எவரோ கொலை செய்யப்படுவதால் இவருக்கு என்ன லாஸ்? இவர் ஏன் தூக்கத்தை கெடுத்து விழித்திருக்கவேண்டும் ? அது சாத்தியம் ஆகுமா? நமக்கு வேண்டப்பட்டவர் கொலை செய்யப்பட்டால், அல்லது கொலை செய்யப்படுவதாக இருந்தால் கூட ஓக்கே
சி.பி கமெண்ட்-நாகேஷ் திரையரங்கம் − ஆதரவற்ற அனாதைகளிடம் ரத்த தான மோசடி செய்யும் மருத்துவர்கள் பற்றிய கோஸ்ட் த்ரில்லர்,திரைக்கதை இழுவை,பேய்க்கதையாக எடுக்காமல் சஸ்பென்ஸ் த்ரில்லரா எடுத்திருக்கலாம் .விகடன் 40 ,ரேட்டிங் 2.5 / 5
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) - 40
குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) 2.5 / 5
ஈரோடு ஸ்ரீநிவாசா நாகேஷ் திரையரங்கம்