Showing posts with label நய்யாண்டி - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம். Show all posts
Showing posts with label நய்யாண்டி - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம். Show all posts

Friday, October 11, 2013

நய்யாண்டி - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம்

நைய்யாண்டி"

தனுஷ் நடிப்பின் மேல் உள்ள நம்பிக்கையும்,
நஸ்ரியாவை புடிக்கும்ங்குறதுனாலையும்,
டைரக்டர் சற்குணம் "களவாணி" "வாகை சூடவா" மூலம் ரசிக்க வைத்தவர்,
தேசிய விருது வாங்கியவர் என்பதாலும்,
படம் பார்க்க முதல் நாளே....

கதை??!!

தேடிப்பார்த்தேன் கடைசி வரை புதுசா எதுவும் கிடைக்கவில்லை,
ஏற்கனவே வந்த கதைகளும், காமடிகளும் என்பதனாலையோ?!

டைரக்டர்

டைரக்டர் யாருன்னு குழம்புற மாதிரி இருக்குறதுனால,
அடிக்கடி டைட்டில் கார்டை தேட வேண்டி இருக்கு.

தனுஷ்

சாரி தனுஷ்..!!

"காதல் கொண்டேன்"
"புதுப்பேட்டை"
"மயக்கம் என்ன"
"3"
"மரியான்"
படங்களில் நடித்த தனுஷை,
படம் முடியுற வரைக்கும் தேடி பார்த்தேன் ம்ஹூம்,
எனக்கு தெரிந்தது "வேங்கை" தனுஷ் மட்டும் தான்.

நஸ்ரியா

படம் ஆரம்பிச்சதில இருந்து முடியுற வரைக்கும் வந்த கடுப்புகளுக்கு இருந்த ஒரே ஆறுதல்.
கேரளா தான்
அழகிதான்
ஆனா இந்த புள்ளைக்கு ஸ்லோ மோஷன்ல ஓடி வர்ற ஸீன் கொஞ்சம் ஓவர் தான். (காலியான மனசு)

நஸ்ரியாவுக்கு ஒரே ஒரு கேள்வி; தொப்புள் தெரியுற மாதிரி ஸீன் டூப் (யாருக்கு தெரியும்) போட்டதுக்கு,
எங்க மதத்துல இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்கன்னு சுனாமிய விட ரெண்டு அடி மேலாவே கொதிச்சியே தாயி,(உலக நடிப்புடா சாமி)
அதே மதத்தில கட்டி புடிச்சு உருளுறதுக்கும்,
முத்தம் குடுக்குறதுக்கு மட்டும் எழுதி இருக்காக்கும்?!!
சாக்கடையில இறங்கிட்டு நாறுதுன்னு மூக்க புடிக்குறதுக்கு பதிலா,
சாத்திக்கிட்டு வீட்டுக்குள்ள இருந்திருக்கலாம்.

வில்லன்

வில்லன் இருக்குறது நமக்கு மறக்காம இருக்க,
அப்பப்போ வந்து முகம் காட்டிட்டு போயிடுறாரு.
இதுக்கு பொண்ணோட (நஸ்ரியா) அப்பாவையே வில்லனா காட்டியிருக்கலாம்.
பட்ஜெட் மிச்சம்.

இசை

பாவம் அவருக்கு இசை பஞ்சம் போல
பின்னணி இசைக்கு தேசிய கீதத்தையும் கோவம் வர்ற மாதிரி,
நக்கலா யூஸ் பண்ணி இருக்காரு.
இரண்டு பாடல்கள் மட்டும் ரசிக்கும் ரகம்.


காமடி

சொல்றதுக்கு பெருசா ஒண்ணும் இல்ல,
கடைசியா வந்த படங்களில் பார்த்ததுதான்.
இருந்தாலும் எல்லாரையும் தாண்டி ஸ்ரீமன் மட்டும் கொஞ்சம் அதிகமா ரசிக்க வைக்குறாரு.



மொத்தத்துல "நைய்யாண்டி" திரைப்பட குழுவிற்கு ஆழ்ந்த வாழ்த்துக்கள்....! 



டிஸ்கி - வணக்கம் சென்னை  விமர்சனம் @ 3 pm