Showing posts with label நயன் தாரா. Show all posts
Showing posts with label நயன் தாரா. Show all posts

Thursday, January 09, 2020

தர்பார் - சினிமா விமர்சனம்

tharbar movie के लिए इमेज परिणामரஜினி ஹேட்டர்ஸ்க்கு எல்லாம் ஒண்ணே ஒண்ணு சொல்றேன். 70 வயசுல ஒருத்தர் ஹீரோவா நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கி அந்தப்படத்தை தன் ஒத்தை ஆள் பர்ஃபார்மெனஸ்ல தூக்கி நிறுத்தறார்னா அது சாதா விஷயம் இல்ல . 70 வயசுல நம்மால சாதாரணமா  நடக்கவே முடியாது , மூன்று முகம் ல அலெகஸ் பாண்டியன்ல காட்டின சுறு சுறுப்பை வேகத்தை  இத்தனை வருசம் கழிச்சும் காட்டி கை தட்டல் வாங்கறார்னா அது தான் ரஜினி மேஜிக்.

சரி, படத்தோட கதை என்ன? வழக்கமான தமிழ் சினிமா டெம்ப்ளேட் கதை தான், ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர் , என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட், மும்பை நகர் ல போதைப்பொருள்  புழக்காட்டம் , பெண்கள் கடத்தல் அதிகமா இருக்கு , அதுக்குக்காரனமான ஆட்களை எல்லாம் போட்டுத்தள்ளறார். வில்லனோட மகனை  பிடிச்சு தந்திரமா தப்பின அவனை  தனது சமயோசிதத்தால் போட்டுத்தள்ளறார்

வில்லன் ஹீரோவை எப்படி ஃபேஸ் பண்றான்? ஹீரோ எப்படி வில்லனை வெல்றார் என்பதே கதை

 ஒரு இயக்குநரா   ஏ ஆர் முருகதாஸ் தனது முந்தைய படங்களான ரமணா , கஜினி, துப்பாக்கியில் காட்டிய திரைக்கதை மேஜிக்கை இதில் காட்ட தவறிட்டார். உதவி இயக்குநர்கள் உஷார் ஆக இருக்காங்க போல , ஆனா ரஜினி மேஜிக்கில் படம் தப்பிக்குது


 ஹீரோவா த ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார்  ரஜினி.அவரு ஸ்டைலா கண்ணாடியை திருப்பிப்போடுவது இன்னும் சலிக்கவே இல்லை , தியேட்டரில்  விசில் பறக்குது. நயனுடனான  லவ்வில் பம்மும் காட்சிகளில் ரஜினியின் அக்மார்க் காமெடி நடிப்பு பளிச். ரயில்வே ஸ்டேஷன் ல போடும் அந்த ஃபைட் சீன் கிட்டத்தட்ட பருத்தி  வீரன் “ ஊரோரம் புளியமரம்’ பாட்டு டைப் ஃபைட்டு . ஆனா அது பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகல . ஹையர் ஆஃபீசரிடம் நக்கல் பண்ணுவது , மனித உரிமை கமிஷன் ஆஃபீசரை மிரட்டுவது எல்லாம் தூள் , ஆனா நடைமுறைல  சாத்தியமே  இல்லை



 ஹீரோயினா  போஸ்டர்ல நயன் தாரா , ஆனா நிஜமா கதைல மகளா வரும் நிவேதா தான். நல்லா  நடிச்சிருக்கு பாப்பா  . அந்த ஹாஸ்பிடல் சீன் ஆக்டிங் எல்லாம் பெண்களைக்கவரும்


  நயன் இதுல கிட்டத்தட்ட தண்டம் தான், கஜினி ல யும் இதே போல், ஏ ஆர் எம் க்கு இவர் மேல் என்ன கோபமோ? ஓப்பனிங் சீனில் புறமுதுகு காட்டும் சீனில் அப்ளாஸ்


யோகி பாபு இன்னொரு தண்டம். ஆனா காமெடியன் இருக்காப்டினு டிஸ்ட்ரிபியூட்டர்ட்ட காட்டிக்க யூஸ் ஆகறாரு

வில்லன்கள் எல்லாம் பெருசா எடுபடலை . எப்பவுமே வில்லனை பவர் ஃபுல்லா காட்டனும். இதுல மெயின் வில்லன் ஒருத்தனைக்கத்தில குத்தும் முன் 50,000 ரூபா ஒர்த் உள்ள சோஃபா செட்டை குத்தி  கூர்மையை டெஸ்ட் பண்றான் , முடில , சுனில் ஷெட்டி நடிப்பு தமிழுக்கு சூட் ஆகலை  வில்லன்கள் எல்லாம் ஆளுங்களும் அவனுங்களும் சகிக்கலை , தலைல கொண்டை போட்டிருக்கானுங்க , குதிரைவால் கொண்ட  வேற

இசை அனிரூத் , இவரோட வைகாசி பொறந்தாச்சு - தண்ணிக்குடம் எடுத்து பாட்டை அட்லீ வேலை பண்ணுனது ஊரே சிரிப்பா சிரிச்சுது, மற்ற பாட்டுகளும் எடுபடலை , அனேகமா ரஜினி படங்கள்ள பாட்டுகள் மொக்கையா ஆனது இதுலதான். பிஜிஎம்ல விட்டதைப்பிடிச்சாலும் பாடல்களை சொதப்பினது  ஓவர்

 ஒளிப்பதிவு  அருமை , ரஜினியை யூத்தா காட்டி இருக்கு கேமரா , எடிட்டிங்  இன்னும் ஷார்ப்பா இருந்திருக்கலாம். ரெண்டே முக்கால் மணி நேரம் ல அரை மணி நேரம் ட்ரிம் பண்ணலாம்

 ரஜினி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து , பொது ரசிகர்களுக்கு ஒரு சராசரி மசாலா படம் , நெட்டிசன்கள் வறுப்பது போல் மொக்கைப்படம் எல்லாம் இல்லை
tharbar movie nayanthara के लिए इमेज परिणाम
நச் வசனங்கள்

1  ஹீரோ வுக்கானஓப்பனிங் பில்டப் பஞ்ச் பைவில்லன்
கேட்டை மூடுடா,எவன் வர்றான்னு பார்ப்போம் #dharbar


மிஸ்டர் ஆதித்யா! அடிக்கறது ரொம்ப தப்பு
அடிக்கறது தப்பா?ஆளுங்களையே தூக்கி இருக்கோம் #dharbar


3 என்ன இவரு கால் இப்படி தந்தி அடிக்குது அவளைப்பார்த்து இதுதான் கால் வைப்ரேஷனா>?


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

தர்பார் @ ஈரோடு சங்கீதா 11 am show
.. 7 லட்சத்துக்கு எடுத்திருக்காங்க,முதலீடை எடுக்க 10 நாட்கள் ஆகுமாம்.அதுக்குப்பின் வர்றது ல 3 லட்சம் மெயின்ட்டனென்ஸ் செலவு,எப்படியும் 3 லட்சம் லாபம் பார்த்துடலாம்கறார் ஓனர்" த நேம் ஈஸ் ரஜினி !#dharbar

ரஜினியின் ஹையஸ்ட் சம்பளம் தர்பார்லதானாம்,ஒயிட்லயே 100+ கோடியாம் #dharbar


பேட்ட பட ரஜினி ஏஆர் முருகதாஸ்க்கு பிடிச்சிடுச்சு போல,அதே ஸ்டைல்ல ரஜினியை டான்ஸ் ஆட வெச்சிருக்கார்,சும்மா கிழி #dharbar

இந்த டைம் ஏமாளி அசிஸ்டெண்ட் டைரக்டர் யாரும் சிக்கல போல,டைரக்டர் தடுமாறுகிறார்,கமலின் சூரசம்ஹாரம் மாதிரி முதல் பாதி #dharbar

2 கோடி சம்பளம் வாங்கற நயன் வர்றப்ப சீட்ல இருந்து எழுந்து மரியாத தர்றாரு 100+ கோடி சம்பளம் வாங்கற ரஜினி,வாட்டெ..... #dharbar

திடீர் னு கொடி பறக்குது சீன்ஸ் எல்லாம் வருது #dharbar

1992 ல பாக்யா வார இதழில் வந்த ஜோக்கைக்கூட ஞாபகம் வெச்சிருந்து யோகிபாபு சொல்றாரு,அடடே! அபாரம் பரிமளா!மொமெண்ட்
இன்னைக்கு அஷ்டமி,நாளை நவமி நாளான்னைக்கு (நாளை மறுநாள்) கவுதமியா? #dharbar

தங்கப்பதக்கம்ல சிவாஜி தடுமாறி பின் சமாளிக்கும் சீனை எல்லாம் அட்லீ ஒர்க் பண்ற லெவலுக்கு முருகதாஸ் இறங்கீட்டாரு",அடப்பாவமே! #dharbar

9  தியேட்டரில் விசில் பறந்த ஒரு சீன்
சார் புரோட்டாகால் படி நீங்க இப்ப யூனிபார்ம் போடக்கூடாது அது தெரிஞ்சுதான் போட்டுட்டு வந்திருக்கேன் ,போடா... #dharbar






Image



Image


சபாஷ் டைரக்டர்

1  எந்த உதவி இயக்குநர் குடியையும் கெடுக்காம   சொந்தமா யோசிச்சிருப்பார் போல , அதுக்கு ஒரு ஷொட்டு

2   பட ரிலீசை பிளான் பண்ணி பொங்கலுக்கு முன்பே விட்டது. 10 நாட்கள் ல அசலை அள்ளிடலாம்

3  ஹாஸ்பிடலில்   ஐசியூ வில் இருக்கும் பேஷண்ட் தப்பிப்பதும்  வாசலில் சும்மா லேசா காயத்துடன் இருப்பவர் மரணிப்பதும்,  புதுமையான நாட்சி அமைப்பு 

tharbar movie nayanthara के लिए इमेज परिणाम
 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

லாஜிக் மிஸ்டேக் 1 − என்கவுன்ட்ர்ல
போட்டுத்தள்றப்ப ஆட்களோட பின்மண்டை ,முதுகு இப்டிதான் சுடனும்,ஆனா நம்ம ஆளு நேருக்கு நேர் நின்னு சுடறாரு,ஓட விட்டு சுடலை #dharbar


இன்னும் 2 மணி நேரத்துல நீங்க சாகப்போறீங்க னு பேஷண்ட் கிட்ட ஒரு டாக்டர் சொல்வது தார்மீக முறைப்படி தவறாச்சே? !#dharbar

என்னதான் ஹீரோ ஒரு சூப்பர் ஸ்டாரா இருக்கட்டுமே? அவரோட ஹையர் ஆபீசர் முதல்ல சல்யூட் அடிப்பதும் அதுக்குப்பிறகு ரஜினி சல்யூட் அடிப்பதும் ஓவர் #dharbar

4  வசனங்கள் இன்னும் பல நச் சேர்த்திருக்கலாம், 






 விகடன் மார்க் ( யூகம்)   41

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)  3/5 


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க்    2.5 / 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-தர்பார்−முதல் பாதி தனுஷ் பட டைட்டில் போலவே பட்டாஸ்,பின் பாதி தடுமாற்றம்,ஓவர்ஆல் படம் ஓகே தான்,ஆனா பாட்ஷா ,படையப்பா லெவல் இல்ல,பேட்டக்கு ஒரு படி கீழே,காலா,கபாலிக்கு ஒரு படி மேலே,ரஜினி கண்களில் ஒரு வெறி புதுசு,ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ,விகடன் 41 ரேட்டிங் 2.5 / 5 #dharbar

Saturday, August 10, 2019

கொலையுதிர் காலம் - சினிமா விமர்சனம்


kolaiyuthirkaalam എന്നതിനുള്ള ചിത്രംஒரு பெரிய எஸ்டேட் ஓனரம்மா தன்னை மாதிரியே அச்சு அசலா  ஓவியம் வரைஞ்ச ஒரு  செவித்திறன் இல்லாத பேச்சாற்றல் இழந்த சிறுமியை சந்திக்கிறார். அவரை தத்து எடுத்து வளர்த்து அவர் இறக்கும்போது அந்த சிறுமியை யே வாரிசாக்கி உயில் எழுதி வைக்கிறார். சிறுமி வளர்ந்து ஆளாகி எஸ்டேட், அனாதை இல்லங்கள் எல்லாவற்றையும் நிர்வகிக்க  ஸ்பாட்டுக்கு  வரும்போது மர்ம நபரால்  துரத்தப்படுகிறார்,க்ளைமாக்ஸ் என்ன ஆச்சு என்பதை வெண் திரையில் காண்க


 நாயகியா 2 கோடி சம்பளம் வாங்கும் லேடி ஸூப்பர் ஸ்டார் தலைவி நயன் தாரா ( இதுக்கு முன்னால அனுஷ்கா வை தலைவின்னீங்களே?ன்னு லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது, முதலாம் தலைவி , இரண்டாம் தலைவி , மூன்றாம் தலைவினு நாமளும் லிஸ்ட் வெச்சிருக்கோமில்ல? )


இதுக்கு முன்னமே  இதே சாயலில் நானும் ரவுடிதான் , ல நடிச்ச கேரக்டர் தான். அசால்ட்டா பண்ணிட்டார் . படத்துல அநியாயத்துக்கு சிக்கனம் , இவருக்கு மூணே மூணு சி சர்ட் , 2 ஜீன்ஸ்  , ஒரு லெக்கிங்ஸ் , ஒரு சுடி பாட்டம் அவ்ளோவ் தான் காஸ்ட்யூமே.,ஒரே பங்களாவுலயே கதை நடப்பதால் செலவே இல்லை, மொத்தப்படமே ஒண்ணே முக்கால் மணி நேரம் தான் என்பதால்  ஃபிலிம் செலவும் மிச்சம், இடைவேளைக்குப்பின் வில்லன், ஹீரோயின் என ரெண்டே கேரடக்ர்கள் என்பதால்  துணை நடிகர்கள் சம்பளமும் மிச்சம்., படம் ஒரு வாரம் ஓடினாலே போட்ட காசு எடுத்துடலாம்


வில்லன் ஒரு மஞ்ச மாக்கானா இருக்கான், 1980 கள் ல வந்த வில்லன் மாதிரி  மாஸ்க் போட்டு சுத்திட்டு இருக்கான் ( அனேகமா  இது 1980 கள்ல வந்த ஒரு நாவலா இருக்கலாம்)திரைக்கதை அமைக்கும்போது இயக்குநர் இந்தக்காலத்துல கொலை காரனும் , கொள்ளைக்காரனும் இப்படித்தான் இருக்காங்களா? என உறுதி செய்து பின் ஷூட்டிங் போய் இருக்கலாம்

 தியேட்டரிக்கல் அப்டேட்டட்  ட்வீட்ஸ்


1  பொட்டி வந்திடுச்சேய் #KolaiyuthirKaalam 5.45 pm fdfs


நச் வசனங்கள்


1   தானமா கிடைச்ச எதுவுமே உனக்கு தகுதி இல்லைன்னா நீ அதை இழந்துடுவே


2  நல்லவங்க தான் செய்ய வேண்டிய நல்ல காரியங்களை சீக்கிரமா செஞ்சுட்டு  சீக்கிரமாவே இந்த உலகை விட்டுப்போய்டறாங்க


3 தனக்கு எதுவும் இல்லைன்னாலும் தன்னை சுத்தி இருக்கறவங்களுக்கு எல்லாம் கிடைக்கனும்னு நினைக்கறவங்க அபூர்வம், அப்படிப்பட்ட நல்ல எண்ணம் கொண்டவ தான் இந்தப்பொண்ணு 


 சபாஷ் இயக்குநர்


1  நயன்  தாராங்கற ஒரே ஒரு ஆள் கால்ஷீட் மட்டும் கிடைச்சா போதும் கதை திரைக்கதை எதுவும் தேவை இல்லை என நினைச்ச அந்த அதீத தன்னம்பிக்கை 


2  நயன் தாரா நடிச்ச படங்கள்லயே மிக கம்மியான டிரஸ் போட்ட படம் பில்லா , டூ பீஸ் டிரஸ். படம் பூரா மூணே மூணு செட் டிரஸ் மட்டுமே போட்ட படம் இதுதான்




 ;லாஜிக் மிஸ்டேக்,  திரைக்கதையில் சில சொதப்பல்கள்


1  ஒரு பெரிய ட்ரஸ்ட்டோட தலைவி  மேடை ஏறிப்பேசறாரு , அவர்  தோற்றம் கண்ணியமா இருக்க வேண்டாமா? லோகட் ஜாக்  போட்டு ( அது சர்ட்டா? ஜாக்கெட்டா?)  1 பட்டனை கழட்டி வேற காத்தாட விட்டிருக்கார்



2  ஒரு  சீன்ல  நயன் தாரா ஒரு தோட்டத்துல ஒரு சிலைக்கு முன் விளக்கு  ஏத்துவார், இடம் அமெரிக்கா , பனி, பனிப்புகை வாய் வழியா வருது. ஜில் க்ளைமேட் , தீப்பெட்டி ஓப்பன்  ஸ்பேஸ் ல நமுத்துப்போய் இருக்காதா? பத்த வெச்சதும் உடனே எப்படி பத்துது?


3  எஜமானி அம்மா ஆசிரமத்துக்குள்ளே போறப்ப தன் செரு;ப்பைக்கழட்டி மரியாதையா போறார்,. ஆனா அவர் கூட வரும் அல்லக்கைக 2ம் செருப்போடவே  போறாங்களே?


4   கோடிக்கணக்கான சொத்துக்கு  வாரிசு இவர்தான்னு உயில் எழுதும்போதே சட்டப்படி அது நயனுக்கு சொந்தம் தான்,. ஆனா நயன் வந்து சில பேப்பர்ல சைன் பண்ணி அதை ரெஜிஸ்டர் பண்ணாதான் செல்லும்னு ஒரு டயலாக் வருது



5  ஃபிளைட்ல வந்து இறங்குன நாயகி மஞ்சள் கலர் சி சர்ட் போட்டிருக்கார். அன்னைக்கு நைட்டும் அதே சர்ட் ( வந்ததும் குளிச்ட்டு மாத்திக்க மாட்டாரா?) அடுத்த நாளும் அதே கலர் சட்டை

6  வில்லன் டெட் பாடியை கார்ல  டிரைவர் சீட்ல உக்கார வெச்சு  ஸ்டியரிங்கை தொட்டதும் கார் மூவ் ஆகுது. எக்சலேட்டரை அமுக்க தேவை இல்லையா?


7  நாயகியைத்துரத்தும்  வில்லன் ஒரு இடத்தில்   கதவை உடைத்து தன் கையை  கதவு கேப்பில் விடறார், நாயகி கையில் கத்தி இருக்கு ., அந்தக்கையை அல்லது மணிக்கட்டில் ஒரு கீறு கீறுனா ஜோலி முடிஞ்சது அதை விட்டுட்டு நாயகி கதவோட சேர்த்து ஒரு அசம்ப்சன்ல வில்லன் கால்ல குத்தறார் . அது கதவு ல ஒரு இஞ்ச் பாய்ஞ்சு பின் தானே உடலில் ,லைட்டா படு ம்? 


8  நாயகி செம ஃபிகரு . மாற்றுத்திறனாளி வேற , வில்லன் அவரை ரேப் பண்ண ட்ரை பண்ணவே இல்லை

9   நாயகியின் வேலைக்காரியை கொலை செய்த வில்லன் அப்பவே அவருக்கு முதுகு காட்டி அமர்ந்திருக்கும் நாயகியை அங்கேயே போட்டுத்தள்ளி இருக்கலாம், ஆனா செய்யலை 

10  க்ளைமாக்ஸ்ல   திடீர்னு ஒரு ட்விஸ்ட் வருது. அடுத்த பாகத்துக்கான லீடா? புரியலை 




சி.பி கமெண்ட்-கொலையுதிர் காலம் − முதல் பாதி ஸ்லோ ஸ்க்ரீன்ப்ளே,பட் குட்,பின்பாதி ஹீரோயின்− வில்லன் ஒரே பங்களாவில் சேஸ் பண்ணிட்டே இருப்பது பின்னடைவு,நயன் மட்டுமே +
ஏ சென்ட்டர் க்ரைம் த்ரில்லர் ,விகடன் 41 ,ரேட்டிங் 2.75 /5 #KolaiyuthirKaalam

Friday, May 17, 2019

மிஸ்டர் லோக்கல் - சினிமா விமர்சனம்

mr local poster માટે છબી પરિણામ
ஹீரோ சாதா கார் ஷோ ரூம்ல வேலை செய்யறார், ஹீரோயின் டிவி சீரியல் தயாரிக்கற   நிறுவனத்தோட எம் டி ( ராடன் டி வி ராதிகா ரோல் மாடல்?)தமிழ் சினிமா ல லவ் சப்ஜெக்ட் ஃபார்முலா என்ன? நாயகி அலைய விடுவா,.  கண்டுக்கவே மாட்டா, நாயகன் நாய் மாதிரி அவ பின்னாலயே அலைவான், க்ளைமாக்ஸ்ல 2 பேரும் சேருவாங்க

 அதே கேவலமான கதை தான் , சிவா மனசுல சக்தி  , பாஸ் என்கிற பாஸ்கரன் , ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற சூப்பர் ஹிட் படங்களைத்தந்த இயக்குநர் எம் ராஜேஷ்  ஆல் இன் ஆல் அழகுராஜாவில் சறுக்கினார், அதற்குப்பின் வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க ள்ல எந்திரிச்சார், எம் ராஜேஷ் கேரியர்ல யே படு மொக்கைப்படம் இதுதான்

கதையோட ஒன் லைன் மன்னன் என்றாலும் அதில் இருந்த மாஸ் இதுல 10% கூட இல்லை 

 காமெடியனா வர்ற யோகிபாபுக்கு ஒரு அட்வைஸ், நீங்க ஒண்ணும் கவுண்டமணி கிடையாது ஒவ்வொரு படத்துலயும் உங்களை விட 2 மடங்கு வயசான பெரியவரை அடேய் புடேய் அந்த மண்டையா இந்தத்தலையாஅப்டினு திட்டறது . நம்ம முகத்தை நாம கண்ணாடில பார்க்கனும்.காமெடி கவுண்ட்டர் குடுக்கறேன்கற பேர்ல மரண மொக்கை போடறது


 அடுத்து  சதீஷ். இவருக்கும் மனசுக்குள்ளெ சந்தானம்னு நினைப்பு ,இவரும் கிட்டத்தட்ட மதுரை முத்து , ஈரோடு மகேஷ் மாதிரி மொக்கை ஜோக்கர் தான். ஒரு படத்துக்கு மினிமம் 10 ஜோக்காவது சொல்லனும்னு டார்கெட் வைங்க சார். ஒரு கல் ஒரு கண்ணாடில சந்தானம் 107 ஜோக் சொல்வார்


 அடுத்து ரோபோ   ஷங்கர் ., இவர் பர்ஃபார்மென்ஸ் அருமை . மூணு காமெடியன்களல இவருக்கு தந்த சம்பளம் தான் வீ ண் போகலை 

 ஹீரோவா சிவகார்த்திகேயன், கேப் கிடைக்கும்போதெல்லாம்   சதீஷை , ரோபோ ஷங்கரை , யோகிபாபுவை காலை வாரிவிடறதுலயே குறியா இருக்கார். இவர் மனசுக்குள்ளே ரஜினி மாதிரி விஜய் மாதிரி மாஸ் ஆகனும்னு ஆசை வெளிப்படையா தெரியுது, கொஞ்சம் குறைச்சுக்குங்க சார் 


நாயகியா தலைவி நயன் தாரா , இவரோட ஆடை அலங்காரங்கள் அருமை, மன்னன் விஜய சாந்தியின் திமிர் நடிப்பில் 50% கொண்டு வந்தாலே வெற்றி தான், ஆனா   25 %  கூட கொண்டு வரலை

 எல்லாப்படங்கள்லயும் வர்ற மாதிரி ஃபாரீன் மாப்ளை  மொக்கையா  அமைவது போல் இதிலும்


 ஹீரோவுக்கு தங்கச்சியா ஒரு ஃபிகரு வருது நம்ம கானகசுந்தரி கனகா மாதிரி 


 இசை சுமார் பிஜிஎம் ரொம்ப சுமார் 

 ஒளிப்பதிவு   சுமார்




nayan hot માટે છબી પરિણામ


நச் டயலாக்ஸ்


தமிழ்நாட்ல இருக்கற பெரும்பாலான பசங்களுக்கு அவங்கவங்க கேர்ள் பிரண்ட் தான் மெய்ன் எதிரி


என்ன மேடம்?எம் டி யா இருந்தா தப்பு பண்ணுனா சாரி கேட்க மாட்டீங்களா?உங்களுக்கு 2 கொம்பா முளைச்சிருக்கு?    

3  மேடம்,அடிக்கடி இப்டி கோபமாப்பாக்காதீங்க,மனசை என்னமோ பண்ணுது,சமஜ் மே ஆயா?இன்னைக்கு நைட் ஆட்டுக்கல் பாயா


நம்ம வீடை வித்தா ஒரு கோடி வருமா?

தெரில ,அதை ஹவுஸ் ஓனர்கிட்டதான் கேட்கனும்


5  

சதீஷ் ==அடுத்த ஜென்மத்துலயாவது நான் ஹீரோவாப்பிறக்கனும் ,நீ ஹீரோ பிரண்டா பிறக்கனும்
சி கா == நான் கூட ஹீரோ பிரண்டா வந்தவன்தான்,அதுக்கப்புறம் மேலே மேலே.....




nayanthara hot માટે છબી પરિણામ
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  ரஜினிமுருகன் ,ரெமோ,சீமராஜா இந்த 3 படங்களுக்கும் ஓவர்பில்டப் குடுத்தாங்க.இதுல ர மு செம ஹிட்,ரெமோ சுமார்,சீ ரா பிளாப்,நாளை ரிலீஸ் ஆகும் Mr லோக்கல் சத்தம் இல்லாம வருது.மார்க்கெட்டிங் ,ப்ரமோ பத்தலை.ஓப்பனிங் அடிபடும்

2  நாளைய இளைய தளபதி
நாளை மறுநாளைய சூப்பர் ஸ்டார்
சிவகார்த்திகேயன் in & as .
Mr லோக்கல் @ கேரளா கோட்டயம் அனஸ்வரா 183 ஆடியன்ஸ் / 886 சீட்ஸ்

3 விஜய் புதுப்படத்துல புட்பால் கோச்சரா வர்றதால நம்மாளு முந்திக்கிட்டாரு,ஓப்பனிங் சீனே கோல் போடறதுதான்,குறியீடு


சோசியல்மீடியா ல பணம் கொடுத்து படத்தை டிப்ரமோட் பண்றாங்கனு ஒரு தாக்கல் சீன் வருது,சீமராஜா எபக்ட்


5  மிஸ்டுகால் கட்சி
டெல்லி பாஜக
அட்டாக்கிங்


6  கம்பெனி எம் டி தலைவி நயன் தாரா தன் ஆபீசுக்கு ஒரே டிராயரும் ஸ்லீவ்லெஸ் பனியனும் போட்டு வர்றாங்க.ஆனா நல்லாதான் இருக்கு,ஆனா இல்ல


7  எம் ராஜேஷ் அட்லீ ஆகிட்டாரு போல. கிட்டத்ட்ட மன்னன் கத தான் போல


8  தானைத்தலைவி நயன் தாரா டிரஸ ் கோடு எல்லாம் அபாரம்,படத்துல பாராட்ற மாதிரி அது 1 தான் இதுவரை


9  டிராமா மாதிரி இருக்கு,தேறுவது கஷ்டம்,தலைவி நயனுக்காக பொறுத்துக்க வேண்டியதா இருக்கு ,இடைவேளை


10  இயக்குநர் எம் ராஜேஷ் சார் ,ரோபோ ஷங்கர்,சதீஷ்,யோகிபாபு இவங்களுக்கெல்லாம் காமெடி போர்ஷன் ரெடி பண்ணுனது எல்லாம் சரி,ஆனா திரைக்கதை அமைப்பதில் கோட்டை விட்டுட்டிங்களே!அது போதாதுனு மன்னன் சாயல் பெரிய பின்னடைவு
 

11  MR.லோக்கல் படம் அவரது முந்தைய படமான சீமராஜாவின் சாதனையை மிஞ்சுமா..?
மிஞ்சிடும்.அதுவே தோல்விதான்,அதை விட இது தோல்வின்னா மிஞ்சிடும் கேட்டகிரிதானே?


12 ரஜினி மாதிரி ஆக ஆசைப்படறவங்களுக்கு ரஜினி படத்தையே அட்லீ வேல செஞ்சா போதும்னு நினைக்கறது தப்புனு புரிய வெச்சிருக்கு


13  ஹீரோ ,ஹீரோயினுக்கு ரத்தம் தந்து (ரத்ததானம்)உயிரைக்காப்பாத்தறாரு.இப்ப இருவர் உடலிலும் ஓடுவது ஒரே ரத்தம்.அப்ப அண்ணன் தங்கை சாரி தம்பி அக்கா முறை ஆகிடாதா?


14  தலைவி நயனுக்கு இந்தப்படத்துல செல்லப்பேரு டோராபுஜ்ஜி, ஐரா புஜ்ஜினு வெச்சிருக்கலாம்










சபாஷ் டைரக்டர்





லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)


1  லாஜிக்மிஸ்டேக் 1 = 23000 ருபா மதிப்புள்ள கேக் ஆர்டர் பண்றப்ப பைவ் ஸ்டார் ஹோட்டல்ல அட்வான்ஸ் கேட்க மாட்டாங்களா?.ரெடி ஆனதை வேணாம் கேன்சல்ங்கறாரு ஹீரோ


2   நயன் தாரா ஒரு சீன்ல என் கம்பெனி வருட வருமானம் 10 கோடி ரூபா அப்டிங்குது, ஆனா படத்துல அவர் பன்ற அலப்பறைகள் எல்லாம் பார்த்தா அம்பானி வீட்டு ஃபிகர் மாதிரி இருக்கு


3  ஒரு சீன்ல தலைவி நயன் செல் ஃபோனை கோபமா தூக்கிபோடற சீன்,  அதை எடுக்கும்போது  கேமரா மேன் இயக்குநர் கவனம் செலுத்தாம விட்டுட்டாங்க , வேகமா ஓங்கறவர் மெதுவா எறியறார்


4   அடுத்த 2 வ்து சீன்லயே அவர் தூக்கிப்போட்ட மொபைல் எந்த சேதாரமும் இல்லாம அவர் கைல அப்டியே இருக்கு 

5   வில்லன் செம மொக்கைப்பீசா இருக்கான் எந்த மடையனாவது தன்னோட மைனசை தன் வருங்கால மனைவி கிட்டே புட்டு புட்டு வைப்பாங்க்ளா? 



சி.பி கமெண்ட் -mr லோக்கல் − ரஜினி மாதிரி ஆகலாம்னு நினைக்கறவங்களுக்கு சரியான பாடம்.நாடகத்தனமான திரைக்கதை.சிறார்களுக்கும்,சீரியல் ரசிகைகளுக்கும்,விஜய் ரசிகர்களுக்கும் பிடிக்கும்.சீமராஜாக்்கு ஒரு படி கீழே,ஆல்இன்ஆல்அழகுராஜாக்்கு 2 படி கீழே ,விகடன் 39 ,ரேட்டிங்க் 2.25 / 5


 பின் குறிப்பு. பேக்கரில 10 ரூபாக்கு வெஜிடபிள் பப்சும் , 15  ரூபாக்கு முட்டை பப்சும் கிடைக்குது, கேவலம் பப்சுக்கு ஆசைப்பட்டு அபாரமான படம், பின்னிப்பெடல் எடுத்துட்டாங்க அப்டினு அடிச்சு விடாதீங்க விமர்சகர்களே!  வாசகர்கள் உங்க மேல வெச்சிருக்கற மரியாதையை இழக்காதீங்க 

Friday, May 27, 2016

இது நம்ம ஆளு - சினிமா விமர்சனம்


நயன் தாரா கூட ஊடல், நிஜ வாழ்வில் தாலி கட்ட வாய்ப்பிலை, பார்த்தாரு சிம்பு, சொந்தப்படம் எடுப்போம் , படத்துலயாவது தாலி கட்டுவோம்னு முடிவு பண்ணாரு. அதான் இது நம்ம ஆளு


ஹீரோ ஹீரோயினை பொண்ணுப்பார்க்கப்போறாரு. பார்த்ததும் ஓக்கே ஆகிடுது.பொதுவா பொண்ணுங்க நம்ம வாயைப்பிடுங்கி எதுனா போட்டு வாங்குவாங்க,    அந்த ஃபார்முலா படி  மாப்ளை கிட்டே பொண்ணு உங்க பழைய லவ் எதுனா இருக்கா?னு கேட்குது.

 ஹீரோ ஒரு லவ் பற்றி சொல்றாரு, ஃபிளாஸ்பேக்.

ஹீரோயின் பற்றி விசாரிக்க ஹீரோ ஃபிரண்ட் ஒரு டிடக்டிவ் வைக்கறாரு. அது தெரிஞ்சு ஹீரோயின் கடுப்பாகிடுது. இவங்க ஊடல் என்னாச்சு? ஹீரோ யாரைக்கல்யாணம் பண்ணாரு என்பதுதான் மிச்ச மீதி கதை


 படத்தின் முதல்  ஹீரோ வசன கர்த்தா தான் . பிரமாதமான கவுண்ட்டர் டயலாக்ஸ், ஷார்ப்பான் கவுண்ட்டர்ஸ், 10 பேர் கொண்ட குழு தான் இப்டி எழுதி இருக்க முடியும்.


ஹீரோவா சிம்பு. 3 விதமான கெட்டப் , 3 ஜோடி . இப்பவெல்லாம் ஒரு ஜோடியோட நடிச்சா யாரும் ஹீரோவை மதிப்பதே இல்லை. டிரஸ்ஸிங் சென்ஸ்  பக்கா . வழக்கமா அவர் செய்யும் விரல் சேட்டைகள் எல்லாம் இல்ல. பக்கா ஜெண்ட்டில்மேன் லுக்,  ஐ டி கம்பெனி ஒர்க்கர் போலவே தோற்றம் டீசண்ட், டான்ஸ் ஸ்டெப்பில் இன்னும் கலக்கி இருக்கலாம்.



ஹீரோயினா மேல் உதட்டு மச்ச அழகி , அஞ்சே முக்கால் அடி உச்ச அழகி நயன் தாரா, காதலிக்க இவருக்கு சொல்லியா தரனும் . அதுவும் ஆல்ரெடி காதலிச்சவரை காதலிப்பது போல் நடிக்க 2 கோடி சம்பளம். இதுவல்லவா வாழ்க்கை? பட்டாசைக்கிளப்பி இருக்கார் .


2 வது  ஹீரோயினா ஆண்ட்ரியா. சிம்பு அருகே க்ளோசப்  காட்சிகளில் இன்னும் யூத்தா காட்டிக்க மெனக்கெட்டிருக்கலாம். ஆண்ட்டி போல் இருக்கார் .

சூரிதான் காமெடி , நீண்ட இடைவெளிக்குப்பின் செம ஒர்க் அவுட். இவர்து ஒன் லைனர்களுக்கு சந்தானம் காமெடிக்கு இணையான்  கைதட்டல்கள்


 சந்தானம் கெஸ்ட்  ரோல்.  பெரிதாக  எடுபடவில்லை. இன்னும்  போர்சன் கொடுத்திருக்கலாம்.

ஹீரோ ஹீரோயின் அப்பா கேரக்டர்கள்  நல்ல குணச்சித்திர நடிப்பு . வெல்டன்.


இசை  டி ஆர் குறளரசன். 2 பாட்டு செம ஹிட்டு . பிஜிஎம்  நீட்.


பாண்டிராஜ்  திரைக்கதை வசனம் இயக்கம்.  குட்.

க்ளைமேக்சில் உங்க 2 பேரையும் வெச்சு படம் எடுத்து முடிப்பதற்குள்  ஷப்பா என புத்திசாலித்தனமான ரியலிஸ்டிக் டயலாக்


நச் டயலாக்ஸ்

GOD மேல நம்பிக்கை இருக்கோ இல்லையோ CARD மேல CREDIT CARD மேல நம்பிக்கை இருக்கு # இ ந ஆ

2 ஏன் என்னையே பாத்துட்டு இருக்கீங்க?



பார்க்கற மாதிரி இருக்கறதால # இ ந ஆ


3 கவுச்சி பிடிக்கும்னு சொன்னேன்.ஆனா கவர்ச்சி பிடிக்கும்னு சொல்லலையே?# இந ஆ

4 மடியற பிகருங்களை கடவுள் உனக்காக படைச்சதா நினைச்சுக்கோ.மடியாத பிக்ரை மத்தவங்களுக்காக படைச்சதா நினை


5 நயன் = தம் அடிப்பீங்களா?
சிம்பு.= எனக்கு வேணாம்.நீங்க வேணா அடிங்க

6 நம்ம கிட்டே இருந்து வாந்தியும் நம்மைப்பத்தி வதந்தியும் எப்பவும் வரவே கூடாது # இ ந ஆ


7 சிம்பு டூ சூரி = எவன் எவனோ நடிக்கறான்.நீ நடிச்சா என்ன குத்து

8 லவ் பண்ணப்போறேன்


எத்தனை நாளுக்கு?
பார்ட் டைமா?புல் டைமா?


வாட்?

லைப் டைம் # இ ந ஆ

9 லவ் பண்றது கஷ்டம் இல்லை.கஷ்டம் இல்லைன்னா லவ்வே இல்லை # இ ந ஆ

10 வாழ்றான்யா.1 போனா 1 வருது .1 வந்தா 1 போகுது # இ ந ஆ


11 இம்மீடியட்டா இம்ப்ரெஸ் ஆகனும்னு எதிர்பார்க்கறீங்களா?

12 சில குடும்ப குத்து விளக்குங்க புது நெம்பர் வந்தா எடுக்க மாட்டாங்க

13 பொண்ணோட ஜடையை வெச்சே அவ ஜாதகத்தையே சொல்றவன் நான்.எங்கப்பா பொண்ணோட நடையை வெச்சே # இந ஆ


14 இவ தான்னு ஹார்ட்ல ஃபிக்ஸ் பண்ணிட்டா எவ வந்தாலும் கேட்டுக்கு வெளியே தான்


நாங்கெல்லாம் பூட்றதே இல்ல
யார் வேணாலும் வரலாம் போலாம்,ஓப்பன் #இந ஆ--

15 நீங்க அழகா இருக்கீங்கன்னு என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் சொல்றாங்க , பட் உங்கள நான் அழகு -னு சொல்ல மாட்டேன்

ஆனா அவங்க சொல்றது accept பண்றேன் #இந ஆ

16 நாம யாருக்காச்சும் கொடுத்தோம்னு தான் இருக்கனும்.
நாம யாரையும் கெடுத்தோம்ன்னு
இருக்க கூடாது.#இந ஆ

17 காம்பினேசன் நல்லா இருக்கும்ன்னு பார்த்தா . இவ

டாமினேசன் அதிகமா இருக்கும் போலயே # இ ந ஆ


18 நீங்க ரொம்ப நல்லவங்க தான் ப்ரதர்.எல்லாரும் 2 ,3 லவ் பண்றாங்க
ஆனா நீங்க எதையும் மறைக்கிறதில்ல
உங்க கட்ஸ் எனக்கு புடிக்கும் # இ ந ஆ

19 டியர், நமக்குக் கல்யாணம் ஆன பிறகு என்னை எங்கே கூட்டி போகப் போற?
பெட்ரூம்க்கு தான்..# இ ந ஆ


20 உன் பக்கத்துல நான் இருந்தா என்ன பண்ணுவ.?



அப்படியே கட்டிப்புடிச்சு.....
டேய்,இது யு சர்ட்டிஃபிகேட் படம் ஏ சர்டிஃபிகேட் ஆக்கிடாதீங்கடா # இ ந ஆ


21 என்னப்பா, இவ எஸ் ஜே சூர்யா பட ஹீரோயின் மாதிரி இருக்கா? # இ ந ஆ



22 பாத்ததுக்கே ஒரு புல் அடிச்சது போல் இருக்கே?





கல்யாணத்துக்குப்பின் பாரு.பேய் அடிச்சது போல் இருக்கும் # இந ஆ


23 நயன் = எத்தனை பேரைடா லவ் பண்ணுவே?


சிம்பு = முதல்ல நீங்க நிறுத்துங்க # அப்ளாஸ் டயலாக்


24 நானும் எத்தனை நாள் தான் வெர்ஜினாவே சுத்திட்டு இருக்க?# இ.ந ஆ



25 டேய்.நானே கடுப்புல இருக்கேன்
அதைக்கொஞ்சம் விடுப்புல அனுப்பு


26 கில்மா பிகருக்கு இவ்ளோ பில்டப்பா? # இந ஆ



27 ஏண்டி உன் பக்கத்துல ஏதோ ஸ்வீட் வாய்ஸ் கேட்குதே யாரு?
அடேய்.அது எங்க அம்மா டா
FRONT டை கவர் பண்ணச்சொன்னா பேக்கை கவர் பண்றான் # இ ந ஆ


28 ஓல்டு லேடின்னு நினைச்சேன்.கோல்டு லேடியா இருக்கு # இந ஆ


29 மாப்ளை வெட்கப்படறாரு போல
பார்யா.வந்துட்டாரு ஆர்யா # இந ஆ




30 எப்டியாவது கோல் போடனும்
உணர்ச்சிவசப்படாத.கூல் # இந ஆ


31 நீ இவளை லவ் பண்ண 2 காரணம். 1 உன் பருவம் 2 அவ புருவம்.அவளோட புருவம் உன் முதல் காதலி புருவம் போலவே # இ ந ஆ



32 நீ ஏன் விளம்பரத்துக்கு அலையறே?
ஈசியா ரீச் ஆகிடலாம் இல்ல ?# உள் குத்து வசனம்

33 சொன்னா கேளுங்க.எனக்கு நடிப்பு வராது.அதுக்குன்னு நிறையப்பேரு இருக்காங்க

34 ஓசி ல வாழ்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?



35 தேடி வர்ற பிகரை விடறதும் தப்பு.
விட்டுட்டுப்போன பிகரை தேடிப்போறதும் தப்பு # இ ந ஆ பென்ச் மார்க் டயலாக்



36 ஏன் போன் கட் பன்றே?
என்னை ஹர்ட் பன்ற மாதிரி பேசினா? # இந.ஆ



37 என்ன நினைச்சே இப்போ?
நான் என்ன சொல்லனும்னு நினைச்சியோ உன் மனசில அதையே தான் என் மனசில் நினைச்சேன் # இந ஆ


38 இதுக்கெல்லாம் நான் FEEL பண்றதா இருந்தா நான் எப்பவோ செத்திருக்கனும் - சூரி # இந ஆ


39 பொதுவா பசங்க எப்போ பிகரை கழட்டி விடலாம்னு தான் யோசிப்பாங்க # இ ந ஆ



40 உனக்கு ஏற்கனவே ஒரு ப்ரியா
அவளுக்கு ஒரு ஆர்யா.அவ்ளோதாண்டா # இந ஆ



41 ஆடி மாசம் கோடி பாசம்
புதுசு புதுசா பழமொழியை உருவாக்காதீங்கடா # இந ஆ


42 ஒரு பொண்ணை மட்டும் லவ் பண்ணிட்டோம்னு வை என்ன பொழப்புடா இது ன்னு புலம்ப.விட்டுடுவாளுக # இந ஆ



43 என்னை நல்லா வெச்சு பார்த்துக்குவியா?
வெச்சுப்பேன்
டேய் # இந ஆ


44 நம்ம குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?



சுருதி ,ஐஸ்வர்யா ,ப்ரியா



ம்ஹூம் சிம்பு ,பிரபு ,தனுஷ் ,ஆர்யா
அடேய் 2 பேரும் அவங்கவங்க லவ்வர்ஸ் லிஸ்ட்


45 இவ என் கிட்டேதான் இப்டி பண்றாளா? இல்ல எல்லார்ட்டயும் இப்டித்தானா?# இந ஆ


46 பரதேசி கூட வேணா வாழ்ந்துடலாம்.ஆனா பிரைவசி இல்லாம வாழ முடியாது


47 எல்லாரும் என் லவ்வை வெச்சு காமெடி பண்றீங்க.இப்போ நீ சொன்ன மாதிரி நான் சொல்லி இருந்தா எப்டி நீ feel பண்ணுவே ?# இந ஆ

48
டேய்.என் கிட்டே நீ ரொம்ப உண்மையா இருக்கே.நான் அப்டி இல்லையோன்னு FEEL பண்ண வைக்கறே # இந ஆ



49 பொண்ணுங்க சாமி மாதிரி.சாமியை கும்பிடத்தான் முடியும்.



பின்னே வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கும்மியா அடிக்க முடியும் ?# இந ஆ


50 வண்டியை தூசு படாம பார்த்துக்கோ


அப்போ ஷோ ரூம்ல தான் வைச்சிருக்கனும் # இந ஆ


51 எல்லாருக்கும் லவ் பண்ற பொண்ணைக்கட்டிக்கும் பாக்யம் கிடைப்பதில்லை # இந ஆ



52 சம்பந்தி.உங்க சம்சாரம் தான் நீங்க லவ் பண்ணின முத பொண்ணுனு இப்போதானே சொன்னீங்க?
அது தண்ணி அடிக்கும் முன் சொன்னது #,இந ஆ



53 அடேய்.எமன் கைல லெமன் கிடைச்ச மாதிரி உன் கைல பொண்ணு கிடைச்சது # இந ஆ



54 கிஸ் அடிக்கறதுல நீ பிஹெச்டி முடிச்சவன் ஆச்சே.உனக்கு எதுக்கு கமல் பட ரெப்ரன்ஸ் ?# இந ஆ



55 ஜில்லுனு காத்து
நீ கொஞ்சம் ஜன்னலை சாத்து # இந ஆ



56 உன்னைப்பிரிஞ்சு என்னால இருக்கவே முடியாது
எல்லாப்பொண்ணுங்க கிட்டேயும் இதே டயலாக் தாண்டா சொல்றீங்க? # இந ஆ






தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

பயாலஜி மிஸ் பவித்ரா = DNA ரிப்போர்ட் என்ன சொல்லுது?



சினிமா ரசிகன்.=ஊரே INA ரிப்போர்ட் பாசிட்டிவ்னு சொல்லிட்டிருக்கு


2 இது நம்ம ஆளு =137 நிமிடம் # இன்னும் 6 நிமிசம் சேத்துனா 143 ,மேட்ச்க்கு மேட்ச் லவ் சப்ஜெக்ட்

3 குறளரசன் இன்ட்ரோ.அமைதி அடக்கம்.அடடே #,இ ந ஆ

4 சிம்பு டீசன்ட் லுக் நயன் சிம்ப்பிள் கிக் கேக்

5 முடியலையே பாட்டு சீனில் சிம்பு நயன் காஸ்ட்யூம் டிஸைன் பக்கா


6 ஆன்ட்ரியா இன்ட்ரோ அழகு


7 ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்ட போன்லெஸ் ராக்கெட் ஆன்ட்ரியா

8 பாண்டிராஜ் வசனம் எழுத ரொம்பவே மெனக்கெட்டு இருக்கார்.இடைவேளை வரை 70 நிமிடப்படத்தில் 38 ஷார்ப் டயலாக்ஸ் # இ ந ஆ


9 இது நம்ம ஆளு.இடை வேளை வரை ஓக்கே. முக்கோணக்காதல் கதை.போர் அடிக்காமல் சுவராஸ்யமாகப்போகும் திரைக்கதை.ஒன் லைனர்.வசனங்கள்.+

10 அஜித் ரசிகர் படத்தில் விஜய் ரெப்ரன்ஸ் - தெறி ஸ்டெப் போட வெய்ட்டிங்

11 இது நம்ம ஆளு ரொமான்டிக் காமெடி பிலிம்.ஹிட் என தகவல்.சிம்பு & ரசிகர்களுக்கு வாழ்த்து




சபாஷ் டைரக்டர்


1  திரைக்கதைக்கு  அதிகம் மெனக்கெடாமல்   சிம்பு வின் டைரியிலிருந்து சில பக்கங்கள் எடுத்துக்கிட்டது


2  சிம்பு - நயன் 2 பேரையும் எதுனா பேசுங்க என சொல்லி விட்டு அதையே ஷூட் பண்ணி 6 ரீல் எடுத்துக்கொண்டது


3   சிம்பு  நயன் தாரா வுக்கு தாலி கட்டும் சீன் வெச்சு சிம்புவையும்  அவர்  ரசிகர்களையும் விசில் அடிக்க வெச்சது

4  ஷார்ப்பான வசனங்கள் சமீபத்திய ஹிட்ஸ்
1 ஒரு கல் ஒரு கண்ணாடி ( 117)
2 பில்லா-2 ( 28)
3 இதுநம்ம ஆளு (63)



லாஜிக் மிஸ்டேக்ஸ்  & திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1   ஆண்ட்ரியா அவ்ளவ் சின்சியரா லவ் பண்ணிட்டு அப்பா சொன்னதும் அசால்ட்டா விட்டு விடுவது நம்பும்படி இல்லை


2 பின் பாதி திரைக்கதையில்  நயன்  சிம்பு சம்பந்தப்பட்ட ஃபோன் உரையாடல்கள்  , எஸ் எம் எஸ்  அனுப்பும் காட்சிகள்   போர் அடிக்குது. இழுவை


3   க்ளைமாக்சில்  நயன் கை மணிக்கட்டில் கட் பண்ணி தற்கொலைக்கு முயல்வதாய் மிரட்டல் விடும் காட்சி அமெச்சூர்த்தனம்.இதெல்லாம் 1980 லயே பார்த்தாச்சு பாஸ்


4 சம்ப்ந்திகள்  இருவரும்  சரக்கு அடித்து விட்டு பேசும் காட்சியில்  பழைய காதல் பற்றி பகிர்வது செயற்கை. அருகில் கிச்சன்  ரூமில் மனைவியை வைத்து பேசுவது நம்ப முடியாதது.  அதை அப்போதே அவுட் செய்வதும் டிட்டோ ரகம். செயற்கை


5  திரைக்கதையில்  போடாபோடி,  சிவா மனசுல சக்தி  சாயல் இருப்பதை தவிர்த்திருக்கலாம்



சி.பி கமெண்ட் -இது நம்ம ஆளு - முன் பாதி காதல் காமெடி பின் பாதி கொஞ்சம் ஸ்லோ.வசனம் செம.இசை பக்கா. விகடன் =42 ,ரேட்டிங் = 3/5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு)= 42


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)= ok