Showing posts with label நந்தி. Show all posts
Showing posts with label நந்தி. Show all posts

Saturday, February 12, 2011

தமிழ்வாணன் -ன் நந்தி - கிராமத்துக்காதல் - சினிமா விமர்சனம்

கல்லூரி ஹீரோ அகில், ரேணிகுண்டா ஹீரோயின் தனுஷா, கள்வனின் காதலி இயக்குநர் தமிழ்வாணன் ( எஸ் ஜே சூர்யா - நயன் தாரா) மூவரும் சேர்ந்த கூட்டணியில் உருவாகி இருக்கும் ஒரு கிராமத்துக்காதல் கதை தான் இந்த நந்தி..சப் டைட்டிலா வணங்கி செல்னு எதுக்கு போட்டிருக்காங்கன்னு கடைசி வரை தெரியவே இல்லை..

படத்துல முக்கியமா  குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டிய கேரக்டர் ஹீரோவின் அப்பாவா வர்றவர்.. செமயான ஆக்டிங்க்.ஒரு கிராமத்து அப்பாவைக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கார்.இவரும் ,காமெடியன் கம் இயக்குநர் சிங்கம்புலியும் செய்யும் அலப்பறைகள்சிரிக்க வைக்கிறது என்றாலும் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.

ஹீரோ அகில் போன படத்தை விட அதிக ஷாட்ஸ் வர்றார். தேறிடுவார்.அவருக்கு காதல் காட்சிகளை விட ஆக்‌ஷன் காட்சிகளில் தான் ரொம்ப இண்ட்ரஸ்ட் போல.

ஹீரோயின்  தனுஷா ரொம்ப பிஞ்சு முகம்.ரேனிகுண்டால பார்த்ததை விட இதுல கொஞ்சம் அழகு கம்மிதான்.. காரணம் ஒளிப்பதிவாளர் + கேரக்டர்.
அவர் டூயட் காட்சிகளில் கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்றார். ஜோதிகா ரசிகை போல.
படத்தோட ஓப்பனிங்க் சாங்கா வரும் சங்கு சக்கர சாமி வந்து சிங்கு சிங்குனு ஆடுச்சாம் செம டப்பாங்குத்துப்பாட்டு. ஆனால் அதற்கான நடன தாரகைகள் (குரூப் டான்சர்ஸ்) ரொம்ப முத்தல் முகங்கள் ( முகம் மட்டுமா?).

வத்தலான தேகமா இருந்தாலும் சரி, முத்தலான முகமா இருந்தாலும் சரி தமிழன் ரிஜக்ட் பண்ணிடுவான்கறதை தமிழ் இயக்குநர்கள் புரிஞ்சிக்கிட்டா தேவலை.சூப்பரா டான்ஸ் ஸ்டெப் போடற இந்த 35 + களை விட ,தட்டுத்தடுமாறும் 16 + களை  டான்ஸ் ஆடப்போட்டா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்..

பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து பண்ணி இருக்கலாம்.மயங்கினேன் மயங்கினேன்  பாட்டும்,தண்ணிக்குள்ளே தீப்பிடிச்ச பாட்டும் நல்ல மெலோடீஸ்.


காதலன் - காதலி வில்லன்னு குண்டுச்சட்டிலதான் குதிரை ஓட்டி இருக்காரு இயக்குநர். இன்னும் சுவராஸ்யமான சம்பவங்கள். திருப்புமுனைகளை திரைக்கதைல சேர்த்திருக்கலாம்.ஏன்னா காதலர்கள் அல்லாதவர்கள் இந்தப்படத்தை பார்க்க பொறுமை தேவை.

ஹீரோயினோட அப்பா திடீர்னு நல்லவர் ஆகறது நம்பற மாதிரி இல்லை.ஹீரோ அடிக்கடி “ என் பொறுமையை சோதிக்காதே “ன்னு வில்லன் கிட்டே பஞ்ச் டயலாக் பேசறாரு. அது ஆடியன்சுக்கா?வில்லனுக்கா? # டவுட்டு
வசனகர்த்தா வசன விருந்தை பந்தி பரிமாறியதில் நினைவில் நின்றவை

1. காலம் மாறிடுச்சு.. மாட்டுக்கு இங்கிலீஷ் மருந்து.. மனுஷனுக்கு கஷாயமா..? ஹூம்...

2. அப்பா.. வாப்பா.. அம்மா தண்ணி அடிக்கக்கூப்பிடுது.. இந்தா குடம்.

சிங்கம்புலி - போடா.. நான் தண்ணி அடிக்ககூப்பிட்டா மட்டும் அவ வர மாட்டேங்கறா...அவ மட்டும் கம்பெனி தரமாட்டா.. நான் தரனுமா?

3.ஹூம்  , விஞ்ஞானம் வளருது.. விவசாயம் வளர மாட்டேங்குது..

4. டேய்... நியூஸ் பேப்பரை பிரிச்சா.. பொம்பளை ஃபோட்டோ மட்டும் பாருங்கடா...நியூஸைப்படிச்சிடாதீங்க..

5. இந்த ஊர்ல டீக்கடை வெக்கறதுக்கு பாகிஸ்தான்;ல போய் பஞ்சு மிட்டாய்க்கடை வைக்கலாம் போல...

6.டேய்.. வராதவங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க.. கடைக்கு போய் கலர் வாங்கிட்டு வா..

சிங்கம்புலி - அவங்களே ஒரு கலரு.. அவங்களுக்கு ஒரு கலரா?

7. எல்லா உறவுகளும் ஒவ்வொரு கட்டத்துல விலகிடும்.ஆனா எப்பவும் விலகாத உறவு காதல் மட்டும்தான்.

8. ராத்திரி ஆனா பொண்டாட்டி கிட்டேயும், பகல்ல ஊர்க்காரங்க கிட்டேயும் என்னால பதில் சொல்லவே முடியல்ல... கேள்வி கேட்டே கொன்னெடுக்கறாங்க


9.உன்னை முதலாளி வேலையை விட்டுத்தூக்குனது ஓக்கே.. உனக்கு வேற வேலை கிடைச்சுடும். ஆனா என்னை ஏன் வேலையை விட்டுத்தூக்குனாரு? எனக்கு எப்படி வேற இளிச்சவாய முதலாளி கிடைப்பாரு?

10. நம்ம பொண்ணு ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கி குடுத்துட்டோம்.அவ ஆசப்பட்ட பையனையும் அவளுக்கே கல்யாணம் பண்ணி வெச்சா என்ன?

11. நல்ல காரியம் நடக்க இருக்கறது சந்தோஷம் தான். ஆனா கைல காசே இல்லை. எப்படி கல்யாணத்தை நடத்துவேன்?

சிங்கம்புலி - பணம்தான் பிரச்சனையா?என் பொண்டாட்டி கழுத்துல அநாவசியமா 20 பவுன் செயின் தொங்கிட்டு இருக்கு, அதை அபேஸ் பண்ணிடறேன்..

பொதுவாகவே கோடம்பாக்க இயக்குநர்கள் படத்தின் திரைக்கதை மீது நம்பிக்கை குறைந்தால் படத்துக்கு ஒரு அனுதாப பார்வை கிடைப்பதற்காக க்ளைமாக்ஸில் தேவையே இல்லாமல் ஹீரோவயோ, ஹீரோயினையோ சாகடித்து விடுகிறார்கள்.

கதை அனுமதிக்காத போது இந்த மாதிரி ஆண்ட்டி க்ளைமாக்ஸ் வைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர்கள் உணர இந்தப்படத்தின் தோல்வி ஒரு பாடமாக இருக்கும்.

ஏ பி சி செண்ட்டர்களில் சராசரியாக 20 நாட்கள் தான் ஓடும்.

ஆனந்த விகடன்ல இந்தப்படத்தோட விமர்சனம் போடறது டவுட்தான் அப்படி போட்டா மார்க 37.

குமுதம் ரேங்க்கிங் - சுமார்

டிஸ்கி- 3வது ஸ்டில்லில் ஹீரோயின் அழகாக தெரிவதற்காக கூட இருக்கும் தோழிகளை மொக்கை ஃபிகர்களாக தேர்ந்தெடுத்த இயக்குநரின் ஐடியாவை பாருங்க..

diSki 2 - பிரகாஷ்ராஜ்-ன் பயணம் - ஹைஜாக் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்