அம்மா அப்பா வெச்ச பேரு மாடர்னா இல்லைன்னு நேமாலஜி நிபுணர்கள்ட்ட சொல்லி பேரை மாத்தி வெச்சுக்கறதுல எந்த பிரயோஜனும் இல்லை , நாம ஏதாவது சாதிக்கனும், அதில் தான் நம்ம வெற்றி இருக்கு. பேரில் ஏதும் இல்லை .இது ஒரு மெசேஜ் .
சிறு துரும்பும் பல் குத்த உதவும் . பத்திரிக்கையில் வந்த சிறு செய்தியும் திரைக்கதைக்கு உதவும் , அது போல் சமீபத்தில் ஸ்போர்ட்ஸ்ல ஜெயிச்ச ஒரு பொண்ணு அவர் பொண்ணே இல்லை , ஆண் என்ற சர்ச்சையில் சிக்கினாரே , அதில் இப்படியும் ஒரு கோணம் இருக்கலாம்னு ஒரு கதை .
மேலே சொன்ன 2 மேட்டரையும் அழகா கோர்த்து ரசிக்க வைக்கும் வகையில் திரைக்கதை அமைத்த இயக்குநருக்கு ஒரு சபாஷ் .
ஹீரோ சிவ கார்த்திகேயனுக்கு இது முக்கியமான படம். ஏன்னா அவர் தனி ஹீரோவா நடிச்சு ஹிட் ஆகும் முழு முதல் படம் இதுதான். டி வி ல காமெடி ப்ரோகிராம் நடத்திட்டு இருந்தவர் வெற்றிகரமான ஹீரோவா பரிமளிக்க முடியும் என்பதை முதன் முதலில் நிரூபித்தவர் என்ற அளவிலும் சிறப்புக்கவனம் பெறுகிறார் . ( சந்தானம் காமெடி யில் )
தனது பெயர் குஞ்சித பாதம் என்பதால் எல்லாரும் சுருக்கமாகக்கூப்பிடும்போது அவர் படும் அவமானங்கள் சிரிப்பாவும் , சீரியசாகவும் மாறி மாறி காட்டும்போது கலக்கறார். காதல்; , காமெடி கலாட்டா காட்சிகளில் நல்ல முன்னேற்றம். இதே நிலையை மெயிண்ட்டெயின் பண்ணினா முன்னுக்கு வரலாம் . ( சுள்ளான் தனுஷ் மாதிரி ஏய் டேய் சுளுக்கு எடுப்பேன் போன்ற பஞ்ச் டயலாக்ஸ் சொல்லாமல் இருக்கனும் ) , முன்னிரு படங்களை விட இதில் இவர் பாடி லேங்குவேஜ் ம் ஸ்க்ரீன் பிரசன்ஸ் எல்லாவற்றிலும் நல்ல முன்னேற்றம் .
ஹீரோயின் நெம்பர் 1 ப்ரியா ஆனந்த் . ஹீரோவை விட இவர் வயசு அதிகம் என்ப்து முகத்தை பார்த்தால் மட்டுமே தெரியுது . படம் முழுக்க கண்ணியமாக வருபவர் பாடல் காட்சிகளில் மட்டும் புற முதுகு காட்டும் பூமிகாவாக வருவது சிறப்பு . லோ கட் , லோ ஹிப் என கிடைச்ச பால் ல எல்லாம் சிக்சர் அடிக்கிறார் , ஐ லைக் இட் . இவருக்கு மேக்கப்பில் ஒரே ஒரு அட்வைஸ் , கண் இமைக்கு கறுப்பு கலர் ஷேடோ மட்டும் வேணாம் . பயமா இருக்கு . கேமராமேன் இன்னும் கவனம் செலுத்தி கேமரா ஆங்கிள் வெச்சிருந்தால் இவரது திறமை அமோகமாய் வெளிப்பட்ட்டிருக்கும்.. அடடா வட போச்சே
ஹீரோயின் நெம்பர் 2 நந்திதா .காய்ச்சல் வந்த காஞ்சனா மாதிரி இளைச்சிருக்கார் பாவம் . அத்லெட்டிக் வீராங்கனை கேரக்டர்க்கு ஆள் சும்மா வில்லு மாதிரி இருக்க வேணாமா? ஒரு லட்சுமிராய் அல்லது பார்வதி ஓமனக்குட்டன் மாதிரி உயரமான திமிலோக குதிரை ( இப்படி ஒரு வார்த்தை தமிழ்ல் இருக்கா? ) யை புக் பண்ணி இருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும் . இவர் ரன்னிங்க் வரும் காட்சிகள் , ஸ்லோ மோஷனில் ஓடி வரும் காட்சிகளில் கேமரா மேன் கொஞ்சம் கூட ஜெனரல் நாலெட்ஜோ செண்ட்ரல் நாலெட்ஜோ இல்லாமல் ஏனோதானோ என கேமரா ஆங்கிள் வைத்திருப்பது மன்னிக்க முடியாத வரலாற்றுப்பிழை , ஹி ஹி
ஹீரோயின் நெம்பர் 1 ப்ரியா ஆனந்த் . ஹீரோவை விட இவர் வயசு அதிகம் என்ப்து முகத்தை பார்த்தால் மட்டுமே தெரியுது . படம் முழுக்க கண்ணியமாக வருபவர் பாடல் காட்சிகளில் மட்டும் புற முதுகு காட்டும் பூமிகாவாக வருவது சிறப்பு . லோ கட் , லோ ஹிப் என கிடைச்ச பால் ல எல்லாம் சிக்சர் அடிக்கிறார் , ஐ லைக் இட் . இவருக்கு மேக்கப்பில் ஒரே ஒரு அட்வைஸ் , கண் இமைக்கு கறுப்பு கலர் ஷேடோ மட்டும் வேணாம் . பயமா இருக்கு . கேமராமேன் இன்னும் கவனம் செலுத்தி கேமரா ஆங்கிள் வெச்சிருந்தால் இவரது திறமை அமோகமாய் வெளிப்பட்ட்டிருக்கும்.. அடடா வட போச்சே
ஹீரோயின் நெம்பர் 2 நந்திதா .காய்ச்சல் வந்த காஞ்சனா மாதிரி இளைச்சிருக்கார் பாவம் . அத்லெட்டிக் வீராங்கனை கேரக்டர்க்கு ஆள் சும்மா வில்லு மாதிரி இருக்க வேணாமா? ஒரு லட்சுமிராய் அல்லது பார்வதி ஓமனக்குட்டன் மாதிரி உயரமான திமிலோக குதிரை ( இப்படி ஒரு வார்த்தை தமிழ்ல் இருக்கா? ) யை புக் பண்ணி இருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும் . இவர் ரன்னிங்க் வரும் காட்சிகள் , ஸ்லோ மோஷனில் ஓடி வரும் காட்சிகளில் கேமரா மேன் கொஞ்சம் கூட ஜெனரல் நாலெட்ஜோ செண்ட்ரல் நாலெட்ஜோ இல்லாமல் ஏனோதானோ என கேமரா ஆங்கிள் வைத்திருப்பது மன்னிக்க முடியாத வரலாற்றுப்பிழை , ஹி ஹி
நந்திதாவின் அப்பாவாக வருபவர் நடிப்பு கன கச்சிதம் , ஆனா அவர் மேனரிசம் , டயலாக் டெலிவரி ஸ்டைல் எல்லாம் கரகாட்டக்க்காரன் கனகா அப்பா மாதிரி இருக்கே?
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. தனுஷ் - நயன் ஆடும் டப்பாங்குத்துப்பாட்டை படமாக்கிய விதம் , டான்ஸ் மாஸ்டரின் உழைப்பு . பாடல் வரிகளில் நயன் தாராவின் பர்சனல் மேட்ட்ரை டச் பண்ணிய நக்கல்
2. முதல் பாதி முழுக்க காமெடிக்காட்சிகளில் களை கட்டிய விதம் . டைம் போனதே தெரியாமல் ஜாலி கலாட்டா காட்சிகள்
3. ஹீரோயின் ஸ்கூல் மிஸ் என்பது, அவர் ஒரு எல் ஐ சி ஏஜெண்ட் என்ற சின்ன சின்ன விஷயங்களை வைத்து செம காமெடி சிச்சுவேஷன் டயலாக்ஸ் எழுதிய விதம்
4. சிவா - ப்ரியா பாடும் முதல் டூயட் காட்சியில் ஒளிப்பதிவு பட்டாசு , இந்தப்பாட்டுக்கு இருவர் உடைகளும் மிக அழகு
5. படத்தின் பின் பாதியில் நந்திதா - சிவா லவ் உருவாகி விடுமோ என ஆடியன்ஸ் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை எகிற வைத்தது , கிட்டத்தட்ட டாக்குமெண்ட்ரி டைப்பில் வந்திருக்க வேண்டிய அபாயகரமான எப்பிசோடை சுவாராஸ்யமாக மாற்றிய விதம்
6. கொஞ்சம் நேரமே வந்தாலும் மனோபாலாவின் கலக்கல் காமெடி பின்னிட்டார்
7. காடு வெட்டி குரு , ராம்தாஸ் மாதிரி ஒரு அரசியல் தலைவரால் ஊரே பதட்டம் , கலவரம் என போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் ஹீரோயின் எக்சாம் எழுதப்போகனும் அதுக்கு ஹீரோ பண்ணும் ஐடியா சபாஷ் ரகம்.
8 . அருகே வா பாடல் காட்சியில் ஒளிப்பதிவு கண்ணுக்குள் நிற்குது ( கொஞ்சம் உக்கார வை ) பிக்சரைசேஷனும் அழகு
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. நந்திதாவின் அப்பா ஏன் மேலிடத்தில் புகாரே தர்லை ? ஏழை சொல் அம்பலம் ஏறுதோ இல்லையோ அது 2 வது விஷயம் , முதல்ல பதிவு பண்ணனும் இல்லை?
2. போட்டில கலந்துக்காம இருக்க அவ்வளவு பணம் தரத்தயாராக இருக்கும் வில்லன் சாதா ஏழைப்பெண்ணை எதுவும் செய்யாமல் விடுவது ஏன்?
3. க்ளைமாக்ஸ் காட்சியில் மராத்தான் ஓடும் ஹீரோ முகம் வியர்வையில் நனைந்து அருவி மாதிரி ஊத்தி எடுக்க வேணாமா? க்ளீனா மேக்கப்போட இருக்கே?
4. அதே போல் ஹீரோ க்ளைமாக்சில் ஓடி வரும்போது நந்திதா , ப்ரியா ஆனந்த் இருவர் முகங்களீலும் ரீ ஆக்ஷன் பத்தலை . இன்னும் எமோஷன் தேவை
5. திரைக்கதை சுவராஸ்யத்துக்காக நந்திதா - சிவா இருவருக்கும் இடையே ஏதாவது காதல் நடக்குமோ என எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய விதம் சப் .
6. மேரேஜ் ஆகாத ஒரு லேடி கோச் மேரேஜ் ஆகாத ஒரு பையன் வீட்டில் எந்த தயக்கமும் இன்றி தனிமையில் தங்குவது எல்லாம் சான்ஸ் கம்மி . அதே போல் அதுக்கு காதலி பெரிய எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் இருப்பதும் நம்பும்படி இல்லை
7. பின் பாதி திரைக்கதையில் கதையின் போக்கே மாறி விடுவதால் ஹீரோ ஹீரோயின் காதல் பின்னுக்குத்த்ள்ளப்பட்டு அவங்க க்ளைமாக்ஸில் சேரும்போது ஒரு உற்சாகம் வர்லை . சிம்பு லவ்வினாலும் பிரபுதேவா லவ்வினாலும் எனக்கொரு கவலை இல்லை என்ற நயன் தாராவின் அசால்ட்டுத்தனம் தான் தெரியுது
8. படத்தின் உயிர் நாடியாக படமாக்கப்பட்ட க்ளைமாக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கேமரா மேன் இன்னும் நல்லா உழைச்சிருக்கலாம் . கடைசி 5 நிமிட ஓட்டம் டெம்போ ஏத்தும் விதத்தில் படமாக்கப்படலை
9. பின் பாதியில் வரும் அந்த அத்லெட்டிக் மேட்டர் அப்படியே 3 பேர் 3 காதல் படத்தின் பின் பாதியிலும் வருதே , ஸ்டோரி டிஸ்கஷனை ஒரே ஹோட்டல் ல பக்கத்து பக்கத்து ரூமில் வெச்சுட்டீங்க்ளா?
10 , ஹீரோ ஒரு ப்ளே பாய் என்பது மாதிரியும், எந்த ஃபிகர் கிடைச்சாலும் ஓக்கே என்பது மாதிரியான ஓப்பனிங்க் காட்சிகள் இந்தக்கதைக்குத்தேவை இல்லை . அது ஹீரோ ஹீரோயின் காதலில் நம்பகத்தன்மையை குறைக்குது
மனம் கவர்ந்த வசனங்கள்
1. மிஸ்.வண்டியைப்பார்த்து ஓட்டிட்டுப்போங்க.
ம் உங்க பின்னால பிகரு.நீங்களும் பார்த்து ஓட்டிட்டுப்போங்க
2. தனுஷ் பஞ்ச் - நான் யார் பிரச்சனைலயும் தலையிட மாட்டேன்.ஆனா லவ் பெயிலியர் பசங்களுக்கு ஏதாவதுன்னா உடனே குரல் குடுப்பேன்
3. லவ்ங்கறது சிக்ஸ்பேக் மாதிரி.டெய்லி கவனமா மெயின்ட்டெயின் பண்ணனும்.நட்பு தொப்பை மாதிரி.எப்பவும் கூடவே இருக்கும்
4. ஹார்டு ஒர்க்கை விட ஸ்மார்ட் ஒர்க் தான் எப்பவும் முக்கியம்
5. நீங்க சாப்பிடும் அதே சாப்பாட்டைத்தான் நாங்களும் சாப்பிடறோம்.ஏழைங்கன்னா கோபம் வராதுன்னு நினைக்காதீங்க
6. வள்ளிக்கு நீ மராத்தான்ல நல்லா ஓடனும்னு கவலை.கீதாவுக்கு நீ வள்ளி கூடவே ஓடிடக்கூடாதுன்னு கவலை
7. 2 பீர் வாங்கிக்குடுத்துட்டு 2000 தடவை சொல்லிக்காட்றவன் தாண்டா நண்பன்
6. என்னடா இப்டி சொல்லிட்டே? நட்புன்னா என்னனு தெரியுமா ? ம் ஓசி ல பீர் வாங்கிக்குடிப்பது
7. பாவாடை சாமின்னு பேர் வெச்சுக்கிட்டு நான் படற அவஸ்தை இருக்கே.பாவாடை இங்கே வா.பாவாடை கொஞ்சம் தூக்கு னு சொல்றாங்க
8. உன் ல்வ் எனக்கு ஓக்கே.ஆனா பேருதான் இடிக்குது.குஞ்சிதபாதம்.என் பேருக்குப்பின்னால உன் பேரை சேர்த்தா கூச்சமா இருக்கு
9. அம்மா நம்ம கூட இருக்கும் வரை எந்த கஷ்டமும் தெரியாமதான் வளர்வோம்
10. ஒரு நாள் டைம் குடுங்க பதில் சொல்றேன்னா.ஊரை விட்டே போய்ட்டா.வீட்டைக்காலி பண்ண டைம் கேட்டிருப்பாளோ ?
11. ஸ்பெச்ல் க்ளாஸ் மாதிரி பிகரை கரெக்ட் பண்றது.ரெகுலரா அட்டென்ட்
பண்ணனும்.ஒரு நாள் மிஸ் ஆனாலும் வம்பு.வேற எவனாவது பிக்கப் பண்ணிடுவான்
12. அம்மா அப்பா நமக்கு வைக்கும் பேரு நம்மைக்கூப்பிட மட்டும் இல்லை.அது ஒரு தலைமுறையின் அடையாளம்
13. டேய்.அவ செம பிகர்டா.
எந்தப்பொண்ணைப்பார்த்தாலும் இதாண்டா சொல்றே ?
14. ஏதாவது பிரச்சனைன்னா போன் பண்ணுனு நெம்பர் தந்தேன் ஏன்
பண்ணலை.
எந்தப்பிரச்சனையும் வர்லையே.
அட்லீஸ்ட் அதையாவது சொல்லி
இருக்கலாம்.ஹி ஹி
15. டேய்.வர்றது என் ஆளோட தோழி டா .
அட.நாம எதிர்பார்த்த பெட்ரோமாக்ஸ் லைட் இதுதாண்டா
16. நைட் அன் டைம் ல எதுக்கு கூப்பிட்டீங்க ?
சாரிங்க.கை தவறி CALL போகிடுச்சு
17. நாங்க எல்லாம் மிடில் கிளாஸ்.எந்த ஒரு சின்ன ஆப்புர்ச்சுனிட்டியையும் மிஸ் பண்ணிட மாட்டோம்
18. அந்தப்பக்கமா ஏதாவது வேலையா வந்தா வீட்டுக்கு வாங்க னு அட்ரஸ் தந்தா.அவ வீட்டுக்கு போறதுக்காகவே அந்த பக்கமா போனேன்
19. காதல்ங்கறது கால் டாக்சி மாதிரி.நாம கூப்ட்டாத்தான் வரும்
20/ என்னது? உங்க பேரு கூகுளா ?
ஆமா.எல்லாரும் ஈசியா கண்டு பிடிக்கற மாதிரி ஒரு பேர் கேட்டேன்.கூகுள்னு வெச்சுட்டாங்க.ஹி ஹி
21. நாங்க எல்லாம் பிரச்சனையை பில் போட்டு வாங்கறவங்க
22. ஸ்கூல் பசங்க அவளை கீதா மிஸ் கீதா மிஸ் னு கூப்பிடுவாங்க.
என்னடா சொல்றே? பசங்க அவளை "கூப்பிடுவாங்களா?"
23. இந்த உலகத்துல லக் ,அதிர்ஷ்டம் எல்லாமே பொய் - நமக்கு நட்க்கும் வரை
24. எந்த் ஒரு பெரிய விஷயம் நடக்கறதுக்கும் ஒரு சின்ன விஷயம் தான் தூண்டுகோளா இருக்கும்.இதை கோ இன்சிடென்ட்னும் சொல்லலாம்
25. கே 7 கற பேரு நல்லாலை கே 9 ன்னு மாத்திடுங்க.கேசவன் இனி கே நயன் அதாவது கேனயன்
26. சார்.நல்லா இருக்கீங்ளா? உங்க ஒயிப் நல்லா இருக்காங்க்ளா?
யா.இதுதான் என் ஒயிப்.
ஓ.நல்லாவே இல்லை.நல்லா இருக்காங்கன்னீங்ளே
சி பி கமெண்ட் - எதிர் நீச்சல் - ஜாலி என்டர்டெயினர் வித் லவ் - சிவகார்த்திகேயனுக்கு முதல் முழு வெற்றி - ஏ பி சி என எல்லா செண்ட்டர்களிலும் ஹிட் அடிக்கும் , லேடீஸ் ஆடியன்சை கவரும்
எதிர்பார்க்கப்படும் விகடன் மார்க் -43
குமுதம் ரேங்க் - நன்று
ரேட்டிங் - 3.25 / 5