Showing posts with label நந்தன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பொலிட்டிக்கல் டிராமா ). Show all posts
Showing posts with label நந்தன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பொலிட்டிக்கல் டிராமா ). Show all posts

Monday, September 23, 2024

நந்தன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பொலிட்டிக்கல் டிராமா )

                        



ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்-ன்  குடும்பம்   பரம்பரை பரம்பரையாக  ஊரின் பஞ்சாயத்துத்தலைவராக இருப்பவர்  குடும்பம் .இந்த முறை அந்த  ஊரை ரிசர்வ் தொகுதியாக அரசு அறிவிக்கிறது .ஒரு தலித்  வேட்பாளர் தான்  நியமிக்கப்பட வேண்டும் . அதனால்  தன அதிகாரத்துக்கு உட்பட்ட ஆளை  டம்மி வேட்பாளராக  நிறுத்தி  பாலிடிக்ஸ் பண்ண வில்லன் நினைக்கிறார் 


 நாயகன்  வில்லனிடம்  அடியாளாக  வேலை  பார்க்கும்  தலித் நபர் . தேர்தலில்  நின்று  பிரசிடண்ட்  ஆகிறார் பேருக்குத்தான் நாயகன்  பிரசிடண்ட், ஆனால்  அதிகாரம்  வில்லன் கையில் . ஒரு கட்டத்தில்  இருவருக்கும் மோதல் வர  வில்லன் நாயகனை  ராஜினாமா செய்ய வைக்கிறார் .இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை 


நாயகன் ஆக எம் சசிக்குமார்  தோற்றத்தில்  ஒரு தலித் நபர் ஆகவே  மாறி இருக்கிறார் . உடல் மொழியில்  அவர் காட்டும் பவ்யம், அடிமைத்தனம், எஜமான் விசுவாசம்  அனைத்தும் அருமை 

வில்லன் ஆக  இயக்குனர் பாலாஜி சக்திவேல் வழக்கமாக யாதார்த்தமான  நடிப்பை வழங்கும்  இவர் இந்தப்படத்தில்  கொஞ்சம்  ஓவர் டோஸ்  ஆக  ஓவர் ஆக்டிங்க் செய்திருக்கிறார் 

நாயகனின்  மனைவி ஆக  சுருதி பெரியசாமி  அதிக காட்சிகள்  இல்லை என்றாலும்  வந்தவரை சிறப்பு 

சில  காட்சிகளே  வந்தாலும்  ஆபீஸராக  வரும் சமுத்திரக்கனி  கம்பீரமான நடிப்பில் கை  தட்டல் பெறுகிறார்  

ஜிப்ரான்  தான் இசை .பாடல்கள்  பெரிதாக எடுபடவில்லை .பின்னணி இசையும் சுமார் ரகமே .,ஒளிப்பதிவு  ஆர் வி சரண் . வில்லன் மட்டும் பளிச்  என தெரிகிறார் .நெல்சன்  ஆண்டட்டனியின்  எடிட்டிங்கில்  படம் 107 நிமிடங்கள்  ஓடுகின்றது கதை  , திரைக்கதை , இயக்கம் , தயாரிப்பு  அனைத்தும்  சகாப்தம் சரவணன் 


சபாஷ்  டைரக்டர்


1 நாயகன் ,வில்லன் என இரு மெயின்  கேரக்டர்களுக்கு  இரு இயக்குனர்களை புக் செய்தது .. நடிப்பு சொல்லித்தரும் வேலை மிச்சம் 


2  பிரமாதமான  வசனங்கள் 


3 ரொம்ப  இழுக்காமல் ஒன்றே முக்கால் மணி நேரத்தில் படத்தை முடித்தது 





  ரசித்த  வசனங்கள் 


1  ஆள்வதற்குத்தான் அதிகாரம் தேவைன்னு நினைச்சு  இத்தனை நாட்களா ஒதுங்கி இருந்தே ன் , இப்போதான் வாழ்வதற்கே அதிகாரம் தேவைன்னுபுரிஞ்சுது 


2  போட்டியே இல்லை என்பது பெருமை இல்லை ,போட்டி போட இடம் தருவதுதான் ஜனநாயகம் 


3  ஒரு பிடி நிலத்தை சம்பாதிச்சு வைக்கலைன்னா இப்படித்தான்  ஊர் ஊரா ஓடிட்டு இருக்கணும் 


4  கோழியை  வெட்டுவது  அதன் மேல்  இருக்கும் கோபத்தால் அல்ல , குழம்பு வைக்கத்தான் 


5  அய்யா , அந்த சீட்ல உக்காந்து தப்புதான் , இனி என்  வீட்டில் கூட உக்கார மாட்டேன் 


6   வாழ  வழி இல்லாம போராடலாம், ஆனா நாங்க சாக வழி இல்லாம போராடறோம் 


7  போதும்  என்னும்  மனசுதான்  வசதி , இன்னும்  வேணும் என்னும்  மனசுதான்  வறுமை 


8   முப்பாட்டனா?  சீமான் மாதிரி எதுக்கு பேசறீங்க ? 


9   நம்ம நாட்டுக்கு வேணா பிரஸிடெண்ட்டா  எந்த மதத்தவர்  வேணா  இருக்கலாம், ஆனா  நம்ம ஊருக்கு பிரஸிடெண்ட்டா   நம்ம  ஜாதிக்காரப்பயதான் வரணும்,அதுதானே  நம்ம ஜாதிக்கே   பெருமை ?  




லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  முதல் 20 நிமிடங்களுக்குப்பின்  அடுத்து  என்ன காட்சி  வரப்போகிறது  என்பது  நமக்கு முன் கூட்டியே எளிதாக யூகிக்க முடிவது  பெரிய பலவீனம் 


2  நாயகனின்  கேரகடர்  மேல் அனுதாபம்  வர  வேண்டும்  என்பதற்காக  வலிய திணிக்கப்பட்ட  சோக காட்சி கள் , வில்லனின் கேரகடர்  மேல் வெறுப்பு   வர  வேண்டும்  என்பதற்காக  வலிய திணிக்கப்பட்ட  கொடூரக் காட்சி கள்   நாடகம்  பார்ப்பது போல  இருந்தது 


3  இயக்குனர்  பெரிதும்  நம்பிய க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டில்  நம்பகத்தன்மை இல்லை .இரு வேட்பாளர்களும்  ஒன்றாக  வருகிறார்களே  என சந்தேகம் வராதா?  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இது பொது மக்கள் அனைவருக்குமான படம் இல்லை . டி வி ல  போட்டா பார்த்துக்கலாம் .தியேட்டரில்  பார்க்கும் அளவு ஒர்த்  இல்லை .ஆனந்த விகடன் மார்க்  42 , குமுதம்  ரேங்க் - ஓகே  . ரேட்டிங்க்  2.25 /5 


நந்தன்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்சகாப்தம். சரவணன்
எழுதியவர்சகாப்தம். சரவணன்
தயாரித்ததுசகாப்தம். சரவணன்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுஆர்வி சரண்
திருத்தியதுநெல்சன் ஆண்டனி
இசைஜிப்ரான் வைபோதா
தயாரிப்பு
நிறுவனம்
சகாப்த பொழுதுபோக்கு
மூலம் விநியோகிக்கப்பட்டதுடிரைடென்ட் ஆர்ட்ஸ்
வெளியீட்டு தேதி
  • 20 செப்டம்பர் 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்