Showing posts with label நண்பன். Show all posts
Showing posts with label நண்பன். Show all posts

Monday, May 04, 2015

அல்ட்டிமேட் ஸ்டார் அஜித் குமார் - சிறப்புப்பார்வை

தன்னம்பிக்கை கலைஞனாக ஜொலிக்கும் அஜித்துக்கு இன்று பிறந்த நாள்.
''என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியையும் நானே செதுக்குனதுடா'' என்று 'பில்லா 2' திரைப்படத்தில் அஜித் வசனம் பேசியிருப்பார். அந்த வசனம் தான் அஜித்தின் வாழ்க்கையும் கூட.
வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் வித்தியாசம் இல்லாமல் இடைவெளி இல்லாமல் வாழும் நடிகர் அஜித் என்பதைத் தெரிந்துகொள்ள அஜித் வரலாறைப் புரட்டியே ஆக வேண்டும்.
பைக் மெக்கானிக் நடிகன் ஆன கதை
பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்ட அஜித் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்தார். பைக், கார் மீது ஏற்பட்ட தீராக் காதலால் பைக் ரேஸ்களில் கலந்துகொண்டார். ரேஸில் கலந்துகொள்ள போதிய பணம் இல்லாததால் சின்னச் சின்ன விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
மிக விரைவில் அஜித்துக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. 1991-ல் தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். துரதிர்ஷ்ட வசமாக அப்படத்தின் இயக்குநர் மரணம் அடைந்தார். அதற்குப் பிறகு 1992-ல் 'பிரேம புஸ்தகம்' என்ற தெலுங்குப் படத்தில் ஹீரோவாக நடித்தார். 1993-ல் 'பிரேம புஸ்தகம்' ரிலீஸ் ஆனது. இதே ஆண்டில் தமிழில் செல்வா இயக்கத்தில் அஜித் நடித்த 'அமராவதி' ரிலீஸ் ஆனது.
அதற்கடுத்து 'பாசமலர்கள்', 'பவித்ரா', 'ராஜாவின் பார்வையிலே' போன்ற படங்களில் நடித்தார் .
வஸந்த் இயக்கத்தில் அஜித் நடித்த 'ஆசை' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அஜித்தை தமிழ் சினிமா நடிகனாக ஏற்றுக்கொண்ட தருணம் இது.
'காதல் கோட்டை', 'காதல் மன்னன்' படங்கள் அஜித்தின் சினிமா கேரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக அமைந்தன. ஆசை நாயகன் அஜித் காதல் நாயகனாகவும், ஆக்‌ஷன் ஹீரோகவும் மாறிய காலகட்டம் இது.
'வாலி', 'அமர்க்களம்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படங்கள் மூலம் அழுத்தமான முத்திரை பதித்தார்.
'முகவரி', 'சிட்டிசன்', 'பூவெல்லாம் உன் வாசம்', 'வில்லன்', 'அட்டகாசம்', 'வரலாறு', 'கிரீடம்', 'பில்லா', 'மங்காத்தா', 'ஆரம்பம்', 'வீரம்', 'என்னை அறிந்தால்' என படங்களின் வெற்றிப் பட்டியல் நீள்கிறது.
அஜித்தை ஏன் கொண்டாடுகிறார்கள்?
அஜித் தொட்டதெல்லாம் ஹிட்டாகவில்லை. வெற்றிப் படங்களை மட்டுமே தந்து வசூல் சக்கரவர்த்தியாக திகழவில்லை. ஆனால், ஏன் அஜித்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா உலகமே கொண்டாடுகிறது. காரணம், அஜித் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதராக இருக்கிறார். அது எப்படி சாத்தியமானது என்பதை நீங்கள் கொஞ்சம் பொறுமையுடன் படிக்க வேண்டியது அவசியம்.
உதவி இயக்குநர்களின் தோழன்
அஜித் நடித்த பல படங்கள் சறுக்கல்களைச் சந்தித்தன. தோல்விப் படங்களுக்காக அஜித் கவலைப்படவில்லை. கார் ரேஸ் கவனத்தையும் திருப்பி சினிமாவில் மட்டும் முழு மூச்சாக இறங்கினார்.
அதற்காக உதவி இயக்குநர்களை இயக்குநராக்கி அழகு பார்க்கவும் அஜித் தவறவில்லை. பெரும்பாலான இயக்குநர்களுக்கு முதல் பட வாய்ப்பைக் கொடுத்தது அஜித் தான்.
சரணின் முதல் படம் 'காதல் மன்னன்'. ஜேடி ஜெர்ரியின் முதல் படம் 'உல்லாசம்'. எஸ்.ஜே சூர்யாவுக்கு முதல் படம் 'வாலி'. முருகதாஸின் முதல் படம் 'தீனா'. ஏ.எல்.விஜய்யிடன் முதல் படம் 'கிரீடம்'.
ரமேஷ் கண்ணாவின் முதல் படம் 'தொடரும்'. ராஜூ சுந்தரத்தின் முதல் படம் 'ஏகன்'. சிங்கம் புலியின் முதல் படம் 'ரெட்'. 'ராசி', 'ஆழ்வார் ' என்று பல படங்கள் அறிமுக இயக்குநர்கள் படங்கள்தான்.
நடிகர்களின் நண்பன் அஜித்
'பாசமலர்கள்' படத்தில் அரவிந்த் சாமியுடனும், 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் விஜய்யுடனும் அஜித் நடித்தது குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பிறகு அஜித்தும், பிரசாந்தும் 'கல்லூரி வாசல்' படத்தில் இணைந்து நடித்தனர். 'உல்லாசம்' படத்தில் அஜித்தும், விக்ரமும் இணைந்து நடித்தனர்.
'பகைவன்' படத்தில் அஜித் - சத்யராஜ், 'நீ வருவாய் என' படத்தில் பார்த்திபன் - அஜித் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. 'ஆனந்த பூங்காற்றே', 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படங்களில் அஜித்தும் - கார்த்திக்கும் நடித்தனர்.
'தீனா' படத்தில் சுரேஷ் கோபி, 'மங்காத்தா' படத்தில் அர்ஜூன், 'ஆரம்பம்' படத்தில் ஆர்யா, 'என்னை அறிந்தால்' படத்தில் அருண் விஜய் என அஜித்துடன் நடித்தவர்களின் பட்டியல் நீண்டது.
ரிஸ்க் எடுக்கப் பழகியவர்
எந்த வித பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்த அஜித் தோல்வியைக் கண்டது கலங்கியதில்லை. முதுகுத் தண்டில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்த போதிலும் சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுக்கத் தயங்கியதில்லை.
இதனால் அஜித் உடல் குண்டானது. ஆனால், அதற்காக கிண்டல் செய்பவர்களைக் கண்டு மனம் வருந்தாமல் உடல் எடையைக் குறைத்தார்.
'ஆரம்பம்' திரைப்படத்தின் போது கூட காலில் அடிபட்டு ஆப்ரேஷன் செய்யும் அளவுக்கு அஜித் ஆளானார்.
அக்கறையில் அண்ணன்
தன்னுடன் இருப்பவர்கள், நடிப்பவர்கள் நலனில் அக்கறை காட்டுவதில் அஜித்துக்கு அலாதிப் பிரியம் உண்டு.
'வான்மதி' படத்தில் நடித்த போது அஜித்துக்கும், ஸ்வாதிக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இருரும் காதலிக்கவில்லை என்று மறுத்தனர். அதற்குப் பிறகு, ஸ்வாதிக்கு நடிக்க வாய்ப்புகள் வரவில்லை. சுந்தர்.சி இயக்கத்தில் அஜித் 'உன்னைத் தேடி' படத்தில் நடிக்கும் போது, ஸ்வாதிக்கு வாய்ப்பு கொடுத்தார்.
தமிழ் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த தமன்னா இடைவெளிக்குப் பிறகு 'வீரம்' படத்தில் நடிக்க வைத்தார்.
கௌதம் மேனன் கடன் பிரச்னையில் தவித்த போது அஜித் உங்கள் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று முன்வந்தார். 'என்னை அறிந்தால்' படத்தின் ரிசல்ட் குறித்த முனைப்பில் பரபரப்பாக இருந்த கௌதம் மேனனிடம், படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு எப்படி? என்று அஜித் கேட்கவில்லை. உங்கள் பிரச்னை தீர்ந்ததா? என்றுதான் கேட்டார்.
தன் வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள் 12 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்.
விளம்பரம் பிடிக்காதவர்
தன் படமாக இருந்தாலும் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளார் சந்திப்பு, வெற்றி விழா என எதிலும் கலந்துகொள்ளாதவர் அஜித். என் படத்தை ரசிகர்கள் பார்க்கவேண்டும் என்று கூட சொல்லியதில்லை.
கார் ரேஸ் - தீராக் காதலன்
கார் ரேஸில் கடும் பயிற்சியால் ஃபார்முலா 2 பந்தயத்தில் கௌரவமான இடத்தைப் பிடித்தார். 30 வயதைக் கடந்த பிறகு சிறுவயதைக் கனவை நிறைவேற்றிக்கொண்டவர்.
'தீனா' படத்தில் ஒரு காட்சி வரும். தன் தங்கை சின்ன வயதில் ஆசைப்பட்டதையெல்லாம் டீன் ஏஜ் கடந்த பிறகு வாங்கிக் கொடுப்பார்.
சின்ன வயசுல ஆசைப்பட்டது. ஆனா, கொஞ்சம் லேட்டா கிடைச்சிருக்கலாம். எப்பவுமே கிடைக்கலைன்னு ஆகிடக்கூடாதுல்ல என்ற தொனியில் வசனம் பேசி இருப்பார். கார் ரேஸைப் பொறுத்தவரையில் அஜித்துக்கு அப்படித்தான் நடந்தது.
அடுத்த எம்ஜிஆர் அஜித்: சோ புகழாரம்
எம்ஜிஆரால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஈர்க்க முடிந்தது. அதனால்தான் எம்ஜிஆரை தலைவராக ஏற்றுக்கொண்டதோடு, ரசிகர்கள் வழிபடுகின்றனர். மிகப்பெரிய ரசிகரகளை ஈர்ப்பதில் எம்ஜிஆருக்கு அடுத்து அஜித் இருக்கிறார் என்று சோ ராமசாமி புகழ்ந்தார்.
அஜித் மீது இருக்கும் பாப்புலாரிட்டி அளப்பரியது. ஒரு படம் தோல்வி அடைந்தாலும் அதை விட அதிக எதிர்பார்ப்புடன் அடுத்த படத்துக்காக காத்திருக்கிறார்கள். காரணம், அஜித் நடிகராக மட்டுமில்லை. நல்ல மனிதராகவும் ஜெயித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்து அஜித் தன் செயல்களில் இருந்து மாறவே இல்லை. ஆனால், மக்கள் அஜித்தைப் பார்த்து தங்கள் கண்ணோட்டங்களை மாற்றிக்கொண்டார்கள். அதனால்தான், அஜித் படத்தில் பெரிதாய் நடிக்கத் தேவையில்லை. வந்தாலே போதும் என்று குதூகலிக்கிறார்கள்.
விஜய் , சூர்யா பார்வையில் அஜித்
விஜய்: ''அஜித்திடம் எனக்குப் பிடித்தது அவர் தன்னம்பிக்கை தான். என்னுடைய பர்சனல் வாழ்க்கையில் அவருக்கு மிகப் பெரும் பங்குண்டு. நான்தம்பி என்றால் அவர் அண்ணன்.'' என்றார் விஜய்.
சூர்யா : ''அஜித் சார் எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கார்னு தான் சொல்லுவேன். நேருக்கு நேர், நந்தா, கஜினி படங்கள்ல நடிக்க அஜித் சாருக்கு தான் முதல்ல வாய்ப்பு வந்தது'' என்றார் சூர்யா.
இந்த பாப்புலாரிட்டியை அழுக்குப் படாமல், ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அஜித் மேன்மேலும் மிளிர வேண்டும் என்று நாமும் வாழ்த்துவோம்.


வாசகர்  கருத்து 

 1 Csaba  
அஜித் தொட்டதெல்லாம் ஹிட்டாகவில்லை. வெற்றிப் படங்களை மட்டுமே தந்து வசூல் சக்கரவர்த்தியாக திகழவில்லை. ஆனால், ஏன் அஜித்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா உலகமே கொண்டாடுகிறது காரணம், அஜித் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதராக இருக்கிறார். - அருமையான பதிவு, கட்டுரையாளருக்கு பாராட்டுகள்.


Raajsinger  
கர்வம் ,சின்னபுத்தி ,சுயநலம் வீண்பெருமை இதுதான் வாழ்க்கைக்கு தேவை என வாழும் சில மனிதர்கள் (நடிகர்கள் ) நடுவே தனித்தன்மையுடன் வாழும் தல வாழ்க நலம் மட்டும் பலத்துடன் ...



நன்றி  - த இந்து

Monday, May 13, 2013

நண்பர் பட்டாபட்டியின் மரணமும் , அவர் பற்றிய நினைவுகளும்

நெட்டுக்கு வந்த புதிதில் எனக்கு பன்னிக்குட்டி ராமசாமி மூலம் அறிமுகம் ஆனவர் தான் பட்டா பட்டி. இவரை நகைச்சுவைக்காகவும் , காங்கிரஸ் கட்சியின் தீவிர எதிர்ப்புக்காகவும் எனக்கு மிகவும் பிடிக்கும்.தனக்கு மனதில் சரி என பட்டதை எந்த ,முலாமும் இல்லாமல் அப்படியே வெளீப்படுத்துவது அவரிடம் நான் கண்டு பிரமித்த ஒன்று.

 ஏன்னா பொதுவா நாம மனசுல நினைச்சதை டக்னு வெளில சொல்லிட முடியாது . 4 பேர் என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு அப்புறமாத்தான் அது பற்றி பேசுவோம். ஆனா நண்பர் பட்டாபட்டி  நேருக்கு நேர் தன் வாதங்களை , கருத்துக்களை முன் வைப்பவர் .

ட்விட்டரில் பல முறை என்னுடன் பேசி இருக்கிறார். காலையில் இருந்து மனசே சரி இல்லை ;((((((

 பிளாக் உலகில் அவரது நெருங்கிய நண்பர்கள் விளங்காதவன் , ராம்சாமி , விக்கி உலகம்  வெங்கட் , வீடு சுரேஷ் , நக்கீரன் , வால் பையன் ,  மங்குனி அமைச்சர் , சிரிப்புப்போலீஸ் ரமேஷ் என பட்டியல்கள் நீண்டு கொண்டே போகும் . 

 அவர் சிங்கப்பூரில் நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த தகவலை எனக்கு சுரேஷ் தான் ஃபோன் பண்ணி இன்று காலை 10 45 க்கு சொன்னார். ஆஃபீஸ் வேலையாக வெளியில் இருந்ததால் என்னால் எதுவும் எழுத முடியவில்லை . ட்விட்டரில் மட்டும் தகவல் சொன்னேன். 




 அவரது உடல் நாளை காலை கோவை வருகிறது . அவர் பிரிவால் வாடும் நண்பர்கள் அனைவருக்கும் இரங்கல்கள் 


கோவை அவரது இல்ல முகவரி தெரிந்தவர்கள் கீழே கமெண்ட்டாகப்போடவும் 

 அவரது பிளாக் முகவரி - http://pattapatti.blogspot.in/

அவரது ட்விட்டர் முகவரி -

அவரது ஃபேஸ்புக் முகவரி -https://www.facebook.com/patta.patti?fref=ts 

 அவரது மரணத்தில் நாம் கற்க வேண்டிய பாடம் 


1.குடிப்பழக்கம் உள்ளவர்கள் அறவே அதை விட்டொழிக்கவும் . குடிப்பதைப்பற்றி பெருமையாகப்பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அது இன்னும் குடிக்க தூண்டும் 

2. குடிப்பது சிறுமை.அதை பெருமையாக யாரும் நினைக்காதீர்கள்.உங்கள் போதைக்கு உங்கள் குடும்பத்தை ஊறுகாய் ஆக்காதீர் ;-((



3. 35 வயது ஆனவர்கள் அடிக்கடி அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை மெடிக்கல் செக்கப் செய்து கொள்க 


4. வேலை வேலை என பிரஷருடன் வேலை செய்தல்  தவிர்க்க முயலவும் , குடும்பத்துக்காக தினமும் நேரம் ஒதுக்கவும் 


 நண்பர்களின் நினைவுகள் 


1. வீடு சுரேஷ் - நானும்...வௌங்காதவனும் காந்திபுரத்தில் உள்ள ஒரு பாரில் சரக்கடித்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தோம், பேசிக் கொண்டிருக்கும் போதுதான் தமக்கு நெருங்கிய நண்பர் பட்டாபட்டி என்கின்ற விசயத்தைக் சொன்னார் நான் அவரின் ஒன்றிரண்டு பதிவுகளைப் படித்திருக்கின்றேன், ஆனால் பழக்கமில்லை அவருடைய கமண்டுகள் குபீரென்று சிரிப்பை வரவழைக்கும், கோவை மாவட்டத்திற்கே உரித்தான எள்ளல்,நக்கல் அவரிடம் விரவிக்கிடக்கும். நக்கீரனுக்குப் போனைப்போட்டு பட்டாபட்டி பேசுவதாக மிமிக்ரி செய்தாப்டி வௌங்காதவன், நக்கீரனும் நம்பி ரொம்ப நேரம் பேசினார்....! அப்பொழுது வௌங்காதவன் என்னிடம் சொன்னார் இப்ப விளையாட்டா நக்கீரனை கலாய்ச்சோம், அடுத்த லீவில் நான் வரும் போது பட்டாவும் வருவாப்டி அன்னிக்கு நான், நீ, பட்டாபட்டி, நக்ஸ் நாலு பேரும் இதே பார்ல சரக்கடிப்போம் என்றார்.....வௌங்காதவன் வருகிறான்.....பார் இருக்கு பட்டாபட்டிதான் இல்ல......!


2. விக்கி உலகம் வெங்கட் - கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் “வாய்யா...போய்யா...மாப்ளே...மாமா”ன்னு பேசிட்டு இருந்த மனுசன் இன்னிக்கி இல்ல...ச்சே என்ன உலகம்டா இது...நல்லவிங்கள எல்லாம் இம்புட்டு சீக்கிறம் கொண்டு போயிருது...- சுயம்!  

Friday, January 20, 2012

விஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்ச்சி, அம்பலம் ஆனது கடிதம் ஜாலி கலாட்டா

http://tube.tamilcloud.com/wp-content/uploads/2011/11/3.jpg

 ட்விட்டர் நண்பர் கட்டதுரை காமெடி கலக்கல் மன்னன்.. அவர் நம்ம நண்பர் மாயவரத்தான் அவர்களின் கட்டுரை.காம்ல காமெடியா நண்பன் விமர்சனத்தை எள்ளல் பாணில எழுதுனாரு.. அது செம ஹிட் ஆகி  ரெக்கார்டு பிரேக் பண்ணிடுச்சு.. அட்ரா சக்க இணய தளத்தோட  முக்கியமான , முக்காதமான கொள்கை (!!) என்னான்னா சொந்தமா ஒரு ஹிட் போஸ்ட் போட ட்ரை பண்ணனும்.. அது முடியாத பட்சத்துல ஆல்ரெடி ஹிட் ஆன போஸ்ட்டை ரீ மிக்ஸ் பண்ணி போடனும்.. ஹி ஹி ஹி

அன்புத் தலைவா விஜய். உன் அப்பாவி ரசிகன் எழுதிக் கொள்(ல்)வது.

கடுப்பைக் காட்டுறதுக்கு முன்னாடி, உனக்கு பொங்கல் வாழ்த்தை சொல்லிடுறேன்!

சி.பி - வீழ்த்துவதற்கு முன் வாழ்த்தா? அவ்வ்வ் நடக்கட்டும்.. 

முதல்ல யாரைக் கேட்டு இந்த படத்திலே நடிக்க நீ ஒத்துக்கிட்டே? நீ ரீமேக்ல மட்டும்தான் நடிப்பேன்னு உலகத்துக்கே தெரியும். ஆனா  இப்புடி செத்தவன் வாயில வெத்தலையை வெச்ச மாதிரியான ஒரு கேரக்டர்லே உன்னை பார்க்க முடியாம பாப்கார்னை வாய்ல திணிச்சுகிட்டு நான் குலுங்கிக் குலுங்கி அழுதது எனக்கு மட்டும் தான் தெரியும் தலைவா!


சி.பி - ஆமா எங்கண்ணன் கொள்கையே யார் மேக்காக இருந்தாலும் அது ரீ மேக்காக இருக்கனும்


கதை – அந்த கருமத்தை நான் என் வாய்ல வேற சொல்லணுமா?


சி.பி - சும்மா கை சிக்னல்லயே சொல்லுங்கண்ணே, 2 லைன் கதைக்கு எதுக்கு வீர உரை?

புள்ளைங்க விருப்பப் படுறதை படிக்க வைங்க – இதான் ஒன் லைனர், முழுக் கதை எல்லாமே!
தலைவா, உனக்கு படிப்பு வராம உங்க அப்பா நடிக்க வைச்சாரு. உனக்கு நடிப்பாவது வரணும்னு நாங்களும்,15 வருஷமா உன் மொக்கை படத்தை எல்லாம் ஹிட்டு படமாக்கினோம்.  இப்ப வந்து விருப்பப்பட்டதை படின்னு அட்வைஸ் பண்ணினா நாங்க எங்க போறது?  முதியோர் கல்வியிலே ஏது தலைவா விருப்பப் பாடம்?!


சி.பி - அவர் படிக்கலைன்னு யார்யா சொன்னது? வாரா வாரம் குமுதம் விகடன் எல்லாம் படிக்கறவராம்.. 

காட்டு காட்டுன்னு காட்டுவியே, இதுல ஒரு தடவை கூட பஞ்ச் டயலாக்கை நீ காட்டவே இல்லியே. நீ ஏன் தலைவா, இப்படி ஒரு படத்தை ஒத்துகிட்ட?


சி.பி - ஷங்கர் புக் பண்றப்பவே வாயை திறக்கவே கூடாதுன்னு கண்டிஷன் போட்டுட்டுதான் அட்வான்ஸே குடுத்தாராம்..

சீனுக்கு சீன், கேமரா ஆங்கிள் கூட துளிக்கூட மாத்தாம எடுக்க ஷங்கர் எதுக்கு தலைவா? டெய்லி 200 ரூவா பேட்டா வாங்குற அசோசியேட்டு டைரக்டர் கூட இதை எடுக்கலாமே!? இதெல்லாம் தெரிஞ்சிருந்தும் நீ எதுக்கு தலைவா ஒத்துக்கிட்ட?


சி.பி - சத்யன் மேடைல பேசி ஒரு காமெடி பண்றாரே.. அந்த ஒரு சீன் புதுசுங்கோவ்.. 

வழக்கமா ரோலிங் ஷட்டரை பொளந்துக் கிட்டு வர நீ,சைலண்டா ஒரு கோல்ஃப் விளையாடுறவன் பையை முதுகிலே சொமந்து கிட்டு வர! அதிலேயே என் மனசு நொறுங்கி போய்டுது.


தலைவா, அது மட்டும் இல்லாம, உன்னை ராகிங் பண்ணறதுக்காக,  உன் ஜீன்ஸ்குள்ளேயே ஒருத்தன் தண்ணியை ஊத்துறான்.  ஏர்லே டைவ் அடிச்சு அவன் குரல் வளையைக் கடிச்சுத் துப்பாம, ரூமுக்குள்ள போய், கரண்டு ஷாக் குடுக்குற! உன் கண் பார்வையிலேயே ஆயிரம் மெகா வாட் ரெடி பண்ணி க்ரிட்ல குடுக்கலாம். அதை விட்டுட்டு நீ என்னடான்னா குண்டு பல்பைப் புடுங்கி எதிரிக்கு ஷாக் குடுக்குறே. எதிரிக்கு மட்டுமா, எங்க எல்லாத்துக்கும் தான்! அந்த சீனிலேயும் தியேட்டரே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்குது. ஆனா உன் உண்மை ரசிகன் வயிரு எரியுது. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - உங்களுக்கென்னா ஈஸியா கேட்டுப்புட்டீங்க.. 5 ஃபெயிலியர் தொடர்ந்து குடுத்தாச்சு.. ஒரு ஹிட் அவசியம் தேவை.. வேற வழி இல்லை.. 

http://www.envazhi.com/wp-content/uploads/2011/01/shankar-new.jpg

ஹிந்தியில சூப்பர் ஹிட்டுன்னு ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கட் எடுத்தவங்க எல்லாம் பேசிக்கிறாங்க. அமிர்கான் அதுல இன்னும் சூப்பரா நடிச்சுருப்பாருன்னும் பேசிக்கிறாங்க. அதெல்லாம் 30 ரூவா டிக்கட் எடுத்து வந்து ஸ்கிரினுக்கு பக்கத்துல பாக்குற எனக்குத் தெரியாது தலைவா.


சி.பி - ஹிந்தி அளவுக்கு இது ஹிட் ஆகலைன்னாலும் இது ஒரு ஹிட் படம் தான் 

நீ ’நடிக்கற’துனால எவ்வளவு பிரச்னை பாத்தியா? பேரே தெரியாத இன்னொருத்தனைப் பாத்து உன்னை கம்பேர் பண்றாங்க. என்னைக்காச்சும் பேரரசு இப்படி ஒரு கெட்ட பேரை உனக்கு உண்டு பண்ணிருப்பாரா. யோசி தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - பேரரசா? அவர் இப்போ பரத் , அர்ஜூன் அப்டி இறங்கி ரொம்ப வருஷம் ஆகுது..ஊரரசா இருந்தவரு மனைவிக்கு அல்வா குடுத்த பாவத்துக்கு ஊசிப்போன அரசு ஆகிட்டார்..





விண்வெளியில பென்சிலிலா எழுதலாமே, எதுக்கு இவ்வளவு செலவு பண்ணி பேனா கண்டுபுடிக்கணும்னு நீ கேட்கும் போது, தியேட்டரே கைதட்டுது. ஆனா பக்கத்து சீட்டுக்காரனுங்க, ’இந்தப் படத்தை டப்பிங் பண்ணி உட்டுருக்கலாமே.. எதுக்கு இம்புட்டு செலவு பண்ணி ரீமேக் பண்ணிருக்கானுங்க’ன்னு கேட்குறாங்க. விவ(கா)ரமான பயலுங்க போல! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி -  அண்ணன் நடிக்கறது 90% ரீ மேக் தான்.. எல்லாத்தையும் டப் பண்ணி இருக்கலாம்னு  கேட்டுட்டா அப்போ பாவம் அவர் என்னதான் செய்வாரு.. சும்மா ஜுவ்வல்லரி விளம்பரமே நடிச்சுட்டு இருக்க வேண்டியதுதான்.. 


ஸ்க்ரின்ல வந்து போற எல்லா பயமக்களுக்கும் நல்லது பண்றியே.உன்னையே நம்பி இருக்குற, என்னைய மாதிரியான ‘சுறா’ ரசிகன் நிலைமையை நினைச்சுப் பாத்தியா? ஹிந்தியில கரினா கபூர் ஜீரொ சைஸ்ல இருந்தாங்கங்குறனால, பத்து நாள் டயரியால அடிபட்ட மாதிரி இருக்குற இலியானவை புடிச்சு போட்டிருக்காங்க. ஹன்சிகா மாதிரி பல்கியான ஃபிகரோட உன்னைப் பாத்துபுட்டு, இந்த மாதிரி பாக்க வயித்தெறிச்சலா இருக்கு தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?



சி.பி - அண்ணன் சைக்காலஜியே தெரில.. வேட்டைக்காரன்ல அனுஷ்காவை ஹீரோயினா போட்டதுல எல்லாரும் அனுஷ்கா பற்றியே பேசுனாங்களாம்.. அதனால யாரும் தன்னை டாமினேட்டோ, டைகர் மேட்டோ , ரோஸி மேட்டோ ( டாமி, டைகர், ரோஸி - ஆல் டாக் நேம்ஸ் ) பண்ணிடக்கூடாதுன்னு அடக்கி வாசிக்கற நடிகையை ஜோடி ஆக்கிட்டாரு போல.. 

அம்பது பேரு உன்னைச் சுத்தி நின்னாலும் கரண்டு கம்பத்தைப் புடுங்கி அம்பது செகண்டுலே எல்லாரையும் சாய்ச்சுப் புடுவியே தலைவா, இதுல வரவன் போறவன்கிட்ட எல்லாம் அறை வாங்குறியே தலைவா. இந்த கண்ராவிய பார்க்கவா நான் காசு குடுத்து உன்னைப் பார்க்க வந்தேன். நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - புக் பண்றப்ப ஷங்கர் சாமார்த்தியமா உங்களுக்குன்னு தனியா 8 அறை உண்டுன்னாராம்.. அண்ணன் ரூம்னு தப்பா நினைச்சு அக்ரீமெண்ட்ல சைன் பண்ணிட்டாராம்.. 


நீ ஸ்பெல்லிங்க மாத்தி சத்யன் அதை ஸ்டேஜ்ஜிலே படிச்சு எல்லாரும் கைதட்டி சிரிக்குறாங்க. அந்த மொக்கையைப் பாக்க சகிக்காம சீட்டுக்கு கீழே படுத்துகிட்டு நான் அழுதேன் தலைவா.  நான் என்னவோ வயிறு குலுங்கி சிரிக்கிறதா எல்லா பயலும் நினைச்சுக்கிட்டு குமுறி குமுறிச் சிரிக்கிறானுங்க தலைவா. உன் உயிர் ரசிகனுக்கு இந்த அவமானம் தேவையா? நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - சத்யன் ரோல் இப்படி ஹிட் ஆகும்னு தெரிஞ்சிருந்தா அந்த ரோல்லயும் அவரே நடிச்சு காமெடி பண்ணி இருப்பாரு அடடா ஜஸ்ட் மிஸ்னு இப்போ புலம்பறாராம்.. 

http://img.bollywoodsargam.com/albumsbolly/Ileana_Hot_Saree_Fashion/Ileana_Hot_Saree_Fashion_BollywoodSargam_laughing_479522.jpg

இண்டர்வெல் ப்ளாக்ல , பஞ்சவன் பாரி வேந்தன் (உன் பேருதான் தலைவா) ஃபோட்டோ பக்கத்துல சூர்யா போட்டோவைப் பாத்து பதறிப் போய் ஜீவாவும், ஸ்ரீகாந்தும் நீ காணம போய்ட்டியோன்னு திகைச்சுப் போய் நிக்குறாங்க. அதைப் பாத்துபுட்டு இண்டர்வெல்லுக்கு அப்புறம் நீ வரமாட்டியோன்னு நினைச்சு உன் ரசிகர்கள் பாதிப் பேரு தியேட்டரை விட்டு வெளியே போய்ட்டாங்க தலைவா. இந்த மாதிரி அப்பாவி ரசிகன் வாயில மண்ணை அள்ளிப் போட்டியே. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - படத்துல தான் பன்ச் இல்ல, கேரக்டர் நேம்லயாவது பஞ்ச் இருக்கட்டும்னு தான் அப்படி வெச்சாங்களாம். ( பஞ்ச் அவன் பாரி = பஞ்சவன் பாரி)

பொதுவா கனவு சீன் ஃபாரின் பாட்டுலே எல்லாம் தனியா நீ மட்டும் போய் மலை பக்கம் ஆடிக்கிட்டு இருப்பியே தலைவா. இதுலே கும்பல் கும்பலா வந்து உன் ஆட்டத்த காலி பண்ணி புட்டாய்ங்களே தலைவா. உன் குத்தாட்டத்த பாத்து ரசிகனானவன் வாயிலேயே குத்தி பழிவாங்கிட்டியே தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - நல்ல வேளை டான்ஸ் சீன்ல கிராஃபிக்ஸ் இருக்குன்னு ஒரு பயலும் கண்டு பிடிக்கலை.. 

நீ ஸ்கிரின்ல வந்த உடனே கை தட்டின உன் உயிர் ரசிகன் நாலு பேர்ல நானும் ஒருத்தன். இது உன் படம் இல்லைன்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தா, டிக்கட்டு காசுல மானங்கெட்ட மானிட்டர ஒரு குவார்ட்டர் குடிச்சுப்புட்டு, குப்புறப் படுத்து தூங்கிருப்பேனே தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - டைட்டில்லயே ஷங்கரின் நண்பன்னு தானே போஸ்டர் இருக்கு.. ? நீங்க கவனிக்கலை.. அதுக்கு அவர் எப்படி பருப்பு ஆக முடியும் ? சாரி பொறுப்பு ஆக முடியும்?


க்ளைமாக்ஸ்ல நீ குறுந்தாடி வச்சுகிட்டு வரப்பவே நீ தான் அந்த கொசகசா பஸபுகழ் விஞ்ஞானின்னு தியேட்டரில டயர்டாயி தூங்குற குழந்தைப்புள்ள கூட சொல்லிப்புடும். (இந்த விஞ்ஞானி பேரை சரியா சொல்றவனுக்கு ஏதாவது பரிசு குடு தலைவா!) சரி..படம் ஃபுல்லா அரை வாங்கியிருக்கியேங்கிற கடுப்புல உட்காந்த உன் ரசிகனை , க்ளைமாக்ஸ்லயும் மிதி வாங்கி  சின்னா பின்னமாக்கிட்டியே தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - வழக்கமா அண்ணன் படம் தான் சின்னா பின்னமாகும், இதுல ஒரு மாறுதலுக்கு அண்ணன் அப்படி ஆகி படத்தை காப்பாத்திட்டார். 
நீ விஞ்ஞானியா நடிக்குற துணிச்சல் உனக்கு இருக்கலாம் தலைவா. ஆனா 30 ரூவா குடுத்து முன்னாடி சீட்ல உட்காந்து பாக்குற என்ன மாதிரி ரசிகர்களுக்கு அந்த தைரியம் எல்லாம் இல்லை தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

சி.பி - அந்த துணிச்சல் இல்லாட்டி என்ன? இலியானாவுக்கும், குரூப் டேன்சர்களுக்கும் துணியே இல்ல, ரொம்ப கம்மிதான்.. அதை ரசிக்கறது.. 



எல்லாரும் முழு டவுசரைக் கழட்டிட்டு அடிக்கடி கால்ல உழுரானுங்க. நல்லவேளை, இலியானாவுக்கு அப்படி ஒரு சீன் வெக்கலை! நான் வீட்டுக்கு வந்து பேண்ட் கழட்டும் போது படம் நியாபகத்துக்கு வந்து தொலைக்குது. இது உண்மையிலேயே டைரக்டருக்கு வெற்றிதான் தலைவா. ஆனா உன் படத்துக்குப் போயிட்டு வந்தா மந்திரிச்சு உட்டா மாதிரி படம் முழுக்க வரும் உன் மூஞ்சி தானே தலைவா நாலு நாளைக்கு நியாபகத்து வந்து பயமுறுத்திட்டே இருக்கணும். நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - ஆனாலும் அண்ணன் மாஸ் தான்.. ஆனானப்பட்ட ஷங்கர் படமா இருந்தாலும் அண்ணன் கடைசி வரை அவர் பேண்ட்டை கழட்டவே இல்லை பார்த்தீங்களா?  அங்கே தான்  நிக்கறான் சந்திரன்..

குருவி படத்த பாத்து சட்டைய கிழிச்சுட்டு ஓடின பயமக்கள் எல்லா கைதட்டி படத்த ரசிக்குதுங்க. குருவி படத்தையும் ஹிட்டாக்கின என்ன மாதிரி ரசிகர்கள் மூட் அவுட்டு ஆய்டுவாங்கன்னு புரிஞ்சிக்க தவறிட்டியே தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - குருவி ஹிட்டா? 2012ல உலகம் அழிஞ்சுடும்யா//

இதே ரேஞ்சிலே இன்னொரு படம் நீ குடுத்தா நாங்க எல்லாம் ‘தல’ ரசிகரா மாறிடுவோம். அப்புறம் ‘ஆல் ஈஸ் வெல்’ அப்படீன்னு நீ சொல்ல முடியாது. புரியுதா தலைவா?!

 சி.பி - ஆல் ஈஸ் ஹெல் ( ALL IS HELL )

(ஹிந்தி படம் பார்க்காதவர்களுக்கு இந்தப் படம் ஒரு பொங்கல் விருந்து என்பதில் சந்தேகமே இல்லை. பொதுவான விஜய் ரசிகர்களின் உள்ளக்கிடங்கை தான் இங்கே எழுதியிருக்கிறேன். யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை!)

சி.பி - ஆமா, இந்த விஷயத்துல நாங்க எல்லாருமே நக்கீரன் கோபால் மாதிரி... முடிஞ்ச வரை துவைச்சு காயப்போடுவோம்.. கடைசில பிரச்சனைன்னு வந்தா மன்னிப்பு கேட்போம்.. ஏன்னா எங்க ஊர்ல 5 ரூபாவுக்கு 12  மன்னிப்பு..  

original post link -