‘நீங்கள் விளிக்கிண்ட நம்பர் அட்டெண்ட் செய்யில்லா. பரிட்செக்கு பிஸியாகி.
சொற்ப நேரம் கழிச்சு கால் செய்யு’ - லட்சுமி மேனனுக்கு போன் செய்தால்
இப்படி ஒரு குரல் கேட்கிறது.
திரும்பவும் அழைத்தால் ‘நான்தான் அப்படி சொன்னேன். நம்பிட்டீங்களா!’ என்று
குதூகலச் சிரிப்போடு கேட்கிறார். பள்ளிக்கூடம், டியூஷன் என்று பரபரப்பாக
இருக்கும் லட்சுமி மேனனை அலைபேசியில் பிடித்தோம்.
லட்சுமி மேனனை சிம்பிள் ஏஞ்சல்னு எல்லோரும் கொண்டாடுறாங்களே. இது எப்படி சாத்தியமாச்சு?
‘கும்கி’ படம்தான் காரணம். பிரபு சாலமன் சார் அறிமுகம் எனக்கு பெரிய
அடையாளம். ‘சுந்தரபாண்டியன்’, ‘குட்டிப் புலி’, ‘பாண்டிய நாடு’, ‘நான்
சிகப்பு மனிதன்’, ‘மஞ்சப்பை’, ‘ஜிகர்தண்டா’ன்னு தொடர்ந்து பல படங்கள்ல
நடிச்சேன். அடுத்து ‘கொம்பன்’ ரிலீஸ் ஆகப் போகுது. நல்ல படங்கள் பண்ணா
மக்கள் என்றைக்கும் ஏத்துப்பாங்க. இப்பகூட நல்ல படங்கள்ல நான் இருக்கணும்னு
ஆர்வமா இருக்கேன். லைஃப்ல இப்படி ஒரு படம் பண்ணணும்னு எல்லாருக்கும் ஒரு
ஏக்கம் இருக்கும். அந்த ஏக்கத்தை நான் நடிக்குற ஒவ்வொரு படமும்
போக்கிடுது..
எந்த ஹீரோயின் மாதிரி நடிக்கப் பிடிக்கும்?
எனக்கு வித்யாபாலனை ரொம்பப் பிடிக்கும். எல்லோரையும் திரும்பிப் பார்க்க
வைக்கணும்னு நடிகைகள் வித்தியாசமா நடிக்க ஆசைப்படுவாங்க. ஆனா, வித்யாபாலன்
கொஞ்சமும் அலட்டிக்காம ‘டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’ன்னு தனியா தெரிஞ்சாங்க.
‘பாபிஜாசூஸ்’ படத்துக்காக பல கெட்டப்புல அடையாளம் கண்டுபிடிக்க முடியாத
அளவுக்கு மிரட்டுனாங்க.
லட்சுமி மேனன் விரும்புவது குடும்பப் பாங்கா, கவர்ச்சிகரமா?
மாடர்ன் காஸ்டியூம்ஸ் எனக்கு செட்டாகாது. மாடர்ன் டிரஸ் இருக்குற போட்டோக்
களை ஃபேஸ்புக்ல போட்டாக்கூட, ‘இது உங்களுக்கு நல்லா இல்லை. சேலை, தாவணி
யிலதான் சூப்பரா இருக்கீங்க. அதை மாத்தாதீங்க.. ப்ளீஸ்’னு சொல்லும்போது
எப்படி மீற முடியும்? இப்போதைக்கு ஹோம்லிதான்!
பாடகியாகணும்னீங்க.. அந்த ஆசை ஒருவழியா நிறைவேறிடுச்சா?
இமான் இசையில ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்துல பாடினதும் ரொம்ப
சந்தோஷப்பட்டேன். அதுல கஷ்டப்படாம, ரொம்ப சுலபமா பாடினதுக்குக் காரணம் என்
அம்மாவும், பாட்டியும்தான். இப்போ பிரசாந்த் நடிக்கும் ‘சாஹசம்’ படத்துல
ஒரு பாடல் பாடியிருக்கேன்.
தமிழில் படங்கள் குறைந்ததற்கு என்ன காரணம்?
தமிழில் இப்போதும் அதிக வாய்ப்புகள் வருது. நான்தான் குறைத்துக்கொண்டேன்.
நிறைய படம் ஒப்புக்கிட்டா படிப்பு தடைபடும். பிளஸ் 2 முடிச்சப்புறம் நிறைய
படத்துல நடிப்பேன்.
மலையாளத்துல திலீப்புடன் நடித்த ‘அவதாரம்’ படத்துக்கு நல்ல வரவேற்பா?
ஓரளவு ஓடியது. மலையாளத்தில் நடிக்கணும்கிற தனி ஆசையெல்லாம் கிடையாது. எங்கு
படம் கிடைக்குதோ, அங்கு நடிக்கணும்.. அவ்ளோதான். தமிழ்ல தொடர்ந்து படம்
கிடைக்கிறதால, இங்கு தொடர்ச்சியா நடிக்கிறேன். சினிமாவேகூட நான் மிகவும்
நேசித்த, தவமிருந்து கிடைத்த விஷயம் கிடையாது. அதுவா கிடைச்சுது..
நடிக்கிறேன். அதேநேரம், கிடைச்ச வாய்ப்பை நல்லா பயன்படுத்திக்குவேன். என்
கதாபாத்திரத்துக்குத் தேவையான உழைப்பு, அர்ப்பணிப்பை முழுசா தருவேன்.
சினிமாவுக்கு வந்துட்டதுல நண்பர்களை ரொம்ப மிஸ் பண்றீங்களா?
ஆமாப்பா. சீனியர், ஜூனியர்னு என்னை சுத்தி எப்பவும் நண்பர்கள் அதிகம்
இருப்பாங்க. நெனைச்ச டைம்ல கட் அடிச்சுட்டு சுத்துவோம். எனக்கு ஆண்
நண்பர்கள் அதிகம். ஆனா, இப்ப எங்கே சுத்தவும் நேரம் இல்ல. நண்பர்களை ரொம்ப
மிஸ் பண்றேன்.
ஆண் நண்பர்கள் அதிகம்னா, காதல் தொல்லை களும் இருக்குமே?
நோ நோ! உண்மையைச் சொல்லணும்னா இதுவரை யாருமே என்கிட்ட நேர்ல காதலைச்
சொன்னதில்ல. சின்ன வயசுல நான் அவ்ளோ அழகா இல்லையோ என்னவோ. என்னைவிட அழகான
பொண்ணுங்க நெறைய பேர் இருந்திருக்கலாம். அதனால, என்கிட்ட லவ்வை சொல்லாம
விட்டிருக்கலாம். ஆனா, எனக்கு காதல் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுக்காக
காதலிக்கணும்னு இல்லை. இப்போதைக்கு எனக்கு காதலிக்க நேரம் இல்லை.
உங்ககூட நடிச்ச ஹீரோக்கள் பத்தி..
சசிகுமார் சார் எது நடந்தாலும் அலட்டிக்கமாட்டார். விக்ரம் பிரபு நல்ல
நண்பர். ரெண்டு பேரும் ஒரே படத்துல அறிமுகமானதால, பயம் இல்லாம பேசிப்போம்.
விமல் இருக்குற இடம் எப்பவும் கலகலன்னு இருக்கும். நேரம் போறதே தெரியாது.
ஆனா, கிளாப் அடிச்சு ஷாட் ரெடியானா சீரியஸ் ஆகிடுவார். சித்தார்த்தின்
மிகத் தீவிரமான ரசிகை நான். ‘பாய்ஸ்’ படம் ரிலீஸானப்ப நான் மூணாங்கிளாஸ்
படிக்குறேன். சித்தார்த்தை நேர்ல பார்ப்பேன்னு நெனச்சுக்கூட பார்த்ததில்ல.
அவர்கூட நடிச்சது அதிசயமா, ஆச்சரியமா இருக்கு. ‘கும்கியில நல்லா
பண்ணீங்க’ன்னு சித்தார்த் வாழ்த்து சொன்னப்ப, வானத்துல பறக்குற மாதிரி
இருந்துச்சு. விஷால் சீனியரா இருந்தாலும் அன்பா பழகுவார். கவுதம்
கார்த்திக் என் வயசுக்காரர் என்பதால் ரொம்ப க்ளோஸ். ஒவ்வொரு சீன்லயும்
பட்டயக் கிளப்புறார். கார்த்தி இயல்பா பழகுறார். ‘இந்த வயசுல இவ்ளோ
மெச்சூரிட்டியா இருக்கே. உன் நடிப்பு யதார்த்தமா இருக்கு’ன்னு சொல்றார்.
அலைபேசியில் கலகலவென்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார் லட்சுமி மேனன்.
நன்றி - த இந்து
வாசகர் கருத்து
இதெல்லாம்
இந்திய கலாச்சாரத்துக்கு எதிரான கிடையாதா. கதைகலத்துக்கும் நடிகரின்/
நடிகையின் வயசுக்கும் ஒரு சந்பந்தம் வேண்டாமா . ஒரு மைனர் பொன்னை ஒரு
மேஜர் பொன்னாக நடிக்க வைப்பது , இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது இல்லையா ,
ஒரு மேஜர் பொன்னை மைனர் பொன்னாக நடிக்க வைக்கலாம், இது தவறு. நான்
சிகப்பு மனிதன் படம் எடுத்த இயக்குனரை எதிர்த்து கேசு போடமாடிர்களா ?
about 7 hours ago ·
(5) ·
(1) ·
reply (0) ·
Santhosh
என்னம்மா இப்பிடி பண்றீங்கலேமா ..