Showing posts with label த்ரில்லர். Show all posts
Showing posts with label த்ரில்லர். Show all posts

Friday, September 07, 2012

RAAZ 3 - பாலிவுட் சினிமா விமர்சனம் 18+

http://tamil.webdunia.com/articles/1208/30/images/img1120830012_1_2.jpg 

படத்தோட கதைக்குள்ளே போறதுக்கு முன்னே ஆண் பெண் காதல், திருமண வாழ்வு பற்றி ஒரு கிளான்ஸ் பார்த்துடலாம். என்ன தான் சின்சியர் லவ்வா இருந்தாலும் பெரும்பாலான  ஆண்க ளின்  காதல் மேரேஜ் ஆகி கொஞ்ச நாள்ல காதலின் ஆழம் குறைஞ்சுடும்.பெண்களின் காதல் மேரேஜ்க்குப்பின் தான் அதிகரிக்கும். ஆனா ஆண் அப்போ வெரைட்டி தேட ஆரம்பிச்சுடுவான். பெண்கள் பெரும்பாலும் வெரைட்டிக்கு அலைவதில்லை. பாதுகாப்பான கணவன் அல்லது காதலனின் அரவணைப்பு போதும்னு நினைக்கறவங்க..


படத்தோட மெயின் வில்லி  பிபாஷா பார்வைல கதையை சொல்லலாம். சோனியா அகர்வால் மாதிரி இவங்க ஒரு பிரபல நடிகை..  எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் பிபாஷா பாசா தான் அதுல ஹீரோயின். புகழின் உச்சத்தை தொட்டவங்க.. பல அவார்ட்ஸை அள்ளினவங்க.. அவங்களுக்கு சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் மாதிரி ஒரு டைரக்டர் கூட பழக்கம்.. அவர் தான் படத்தோட ஹீரோ


 சினி ஃபீல்டுல பழக்கம்னா என்ன அர்த்தம்னு சொல்லத்தேவை இல்லை.. கமல் கவுதமி மாதிரி அவங்க மேரேஜ் பண்ணிக்காமயே லிவிங்க் டுகெதரா  வாழந்துட்டு வர்றாங்க.. 


 ஆண்ட்ரியா எப்படி சோனியா அகர்வால் வாழ்க்கைல குறுக்கே வந்தாங்களோ அந்த மாதிரி ஒரு புதுமுக நடிகை திடீர்னு புகழின் உச்சிக்கு வந்துடறாங்க.. அதை பிபாஷா பாசாவால் தாங்கிக்க முடியலை.. தான் மட்டும் தான் நெம்பர் ஒன் ஹீரோயினா வரனும், நிலைச்சு இருக்கனும்னு நினைக்கறாங்க.. 


http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/07/Esha-Gupta-Hot-in-Raaz-3-Movie-Stills-560x390.jpg


அதுக்கு அவங்க கைல எடுக்கும் ஆயுதம் தான் பிளாக் மேஜிக். அதாவது லோக்கம் பாஷைல சொல்லனும்னா பில்லி சூன்யம்.. செய் வினை.. ஒரு மந்திரவாதியின் உதவியோட செய்வினை வைக்கறாங்க.. அப்படி வெச்சா என்ன ஆகும்னா  செய்வினை வைக்கப்பட்ட நபருக்கு விபரீதமான கற்பனை வரும்.. அவங்க கண்ணுக்கு மட்டும் பேய் தெரியும்.. 


 மன உளைச்சலுக்கு ஆளாகி காளி பட ஷூட்டிங்க்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரகளை செஞ்ச மாதிரி இந்த புதுமுகம் செய்யறாங்க.. இதுக்கு ஹீரோவான டைரக்டரும் உதவி பண்றாரு,.. அவர் தான் அந்த திரவத்தை புதுமுகத்துக்கு ஊற்றுத்தரும் ஆள்.. அந்த திரவம் உள்ளே போனா கற்பனைல பேய் வரும்.. 



 ஒரு நைட் அந்த புதுமுகம் டைரக்டரை அவ கூடவே தங்கச்சொல்றா.. பயம் தான் காரணம்.. 2 பேருக்கும் கச முசா ஆகிடுது..  இப்போ டைரக்டர்  திடீர்னு நல்லவர் ஆகிடறார். பிபஷா பாசா கிட்டே இனிமே அந்த புதுமுக ஹீரோயினை தொந்தரவு பண்ணாதே.. இனி அவ என் ஆள்.. அப்டிங்கறார்.. 

http://english.samaylive.com/pics/gallery/bips-raaz5_1346233591.jpg
 உடனே பிபாஷா பாசு சன் டிவி நித்யானந்தாவை மிரட்ன மாதிரி ஒரு வீடியோ கேசட்டை காட்டி இதுல நாம 2 பேரும் கில்மா பண்ணின மேட்டர் இருக்கு. ரிலீஸ் பண்ணிடுவேன்னு மிரட்றா.. அப்படி ரிலீஸ் பண்ணினா அவ மானமும் சேர்த்துத்தானே போகும்கற காமன் சென்ஸ் கூட இல்லாம அந்த லூஸ் டைரக்டர் தொடர்ந்து அந்த புதுமுகத்துக்கு செய் வினை வைக்கறாரு,.,. 



இப்போ புதுமுகம் ஒரு சீன்ல உடம்பூ பூரா ஒட்டுத்துணி கூட இல்லாம ( ஒட்டுத்துணி இல்லாத பிட்டுப்படம் ) ஒரு ஹோட்டல்ல எல்லா மீடியாக்கள் முன்னால அலறி அடிச்சு பேய்க்கு பயந்து வர்றப்போ எல்லாரும் அதை ஃபோட்டோ எடுத்து பத்திரிக்கைல போடுடறாங்க..  இதனால அவங்க கவுரவம் (!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!) பாதிக்கப்படுது. பேர் கெட்டுடுது. நோ சான்ஸ் இன் சினிமா.. பழைய படி பிபாசா பாஸ் நெம்பர் ஒன் ஆகறாங்க.. 


 இந்த சதி வலைல இருந்து அந்த புதுமுகத்தை டைரக்டர் எப்படி காப்பாத்தறார் என்பதே  மிச்ச மீதிக்கதை.. 


 படத்தோட முதுகு எலும்பு, தொடை எலும்பு, எல்லா அலும்பும் பாப்பா பிபாஷா பாஷு தான்.. 42 பல்லும் தெரிய ( 32 + 10 ) சிரிக்க வைக்கும் ஓப்பன் யுனிவர்சிட்டி பாடி.. போனா போகுதுன்னு கொஞ்சூண்டு டிரஸ் மட்டும் போடும் அவரது பூனம் பாண்டித்யம். எல்லாம் அபாரம்.. நடிப்பு? அதுவும் தான்.. அவர் ஏற்று நடிக்கும் முதல் வில்லி கம் பேய்த்தன கேரக்டர் இதான்னு நினைக்கறேன் குட்.. 



 படத்தோட இன்னொரு ஹீரோயின்  இசா குப்தா.. நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர். ஆனா பிரமாதமா ஒண்ணும் நடிக்கலை.. அதே சமயம்  மோசம்னு சொல்ற மாதிரி சொதப்பலை.. சமாளிச்சிருக்கு..  லிப் டூ லிப் கிஸ் வேணா நல்லா குடுக்குது.. எது வருதோ இல்லையோ ரொமான்ஸ் மட்டும் நல்லா வருது. ( நமக்கு ஐ மீன் ஆடியன்ஸ்க்கு அதானே தேவை )


 ஹீரோ Emraan Hashmi   கூட பிரமாதமா பண்ணி இருக்க வேண்டிய கேரக்டர் தான்.. ஏனோதானோ என்ற நடிப்புதான்.. இயக்குநர் என்ன நினைச்சுட்டார்னா பிபாஷா பாசா இருக்க பயம் ஏன்? அவர் நடிப்பை மட்டும் கவர் பண்ணுவோம்னு.. யோசிச்சுட்டார் போல.. 



http://www.gulte.com/content/2012/07/news/Raaz-3-Movie-Hot-Photos-106.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. எட்டாம் நெம்பர் ஹோட்டல் ரூம் 3 ஆம் நெம்பர் ஆக மாறி உருகி வழிவது செம திகில்.. அந்த காட்சியில் பின்னணி இசை, எடிட்டிங்க் கட் எல்லாம் கலக்கல்.. 


2. புதுமுகம் சிஸ்டமில் ஏதோ பார்த்துட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு கை வந்து அவரை இழுப்பது திக் திக் திகில் காட்சி.. 3 டி யில் பார்த்தால் இன்னும் கலக்கலாக இருந்திருக்கும் ( படம்  3 டி தான், ஆனால் ஈரோட்டில் சாதா) 


3. மந்திரவாதி, வேலைக்காரி இருவரும் கொலை ஆகும் காட்சிகள் த்ரில்லிங்க்.. தியேட்டர்ல ஒரு பய மூச்சு விடலை.. கப் சிப்.. 


4. படத்தில் பிபாஷா பாசாவை எந்த அளவுக்கு உபயோகிக்க முடியுமோ அந்த அளவு யூஸ் பண்ணியது.. அவர் ஸ்விம்மிங்க் பூலில் ( நீச்சல் குளம்ப்பா ) எழுந்து வரும் சீனில் செம கிளு கிளு.. பக்கத்துல ஒரு ஆள் அவனும் எந்திரிச்சுப்பார்க்கறான் ( உக்காந்து பார்ப்பதை விட எந்திரிச்சுப்பார்த்தா ஏதாவது எக்ஸ்ட்ரா தெரியுமா?ன்னு ஒரு நப்பாசைதான் )


5. ஆக்சுவலி இது ஒரு திகில் படம் கம் த்ரில்லர் ஃபிலிம், ஆனா போஸ்டர் டிசைன்,  ஸ்டில்ஸ், டி வி விளம்பரம் எல்லாவற்றிலும் ஏதோ கில்மா படம் மாதிரி விளம்பரம் செஞ்சது மார்க்கெட்டிங்க் டெக்னிக் குட்.. 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiRxDHmcHhVEXY6qKUoP0rH29Qd0sLJSv5knyYBEJ4ZeZvrUbucejYBVrm9w0R2Lweq4HTwTEAf5Pv345pUrdbViW6286RSuLbvMJ780e6v1dvRE-864LM2uQC0f8cctf_bcnY1uVuvY2z/s1600/Photos%252BBipasha%252BBasu%252BLatestt%252BRaaz%252B3%252BMovie%252BHot%252BStills-751971.jpg

 இயக்குநரிடம் பல கேள்விகள்



1. ஒரு வாதத்துக்காக பேய் இருக்குன்னே வெச்சுட்டாலும்  இருட்டுக்குள்ள்ளே ஒளிஞ்சிருக்கும் ஹீரோயினை பேய்க்குத்தெரியாதா? பேய் ஏன் தேடுது? தத்திப்பேயா? பவர் இல்லாத பேயா? 


2.  ஹீரோ பேண்ட் பாக்கெட்ல  அவ்ளவ் பெரிய பாட்டிலை எப்போ பாரு வெச்சுக்கிட்டே சுத்தறாரு. தத்தி ஹீரோயின் ஒரு டைம் கூட அதை என்ன? என கேட்கவே இல்லை.. பொதுவா பொண்ணுங்க எல்லாத்தையும் நோட் பண்ணுவாங்க.. சைடு பாக்கெட் ஏன் புடைச்ச மாதிரி இருக்குன்னு பார்க்க மாட்டாளா? 


3. செய்வினை கம் பில்லி சூனியம் வைக்க அந்த திரவத்துல சும்மா 4 சொட்டு கலந்தா போதும். அதுக்கு சும்மா குட்டி பாட்டில்  20 மில்லி பிடிக்கும் அளவு பாட்டில் எடுத்துக்கலாமே? என்னமோ சயிண்டிஸ்ட் கணக்கா எதுக்கு விண்ட்டேஜ் ஆஃப் பாட்டில் சைஸ்க்கு அவ்ளவ் பெரிய  பாட்டில்?


4. ஹீரோயின் பயமா இருக்குன்னு ஹீரோவை துணைக்கு தன் வீட்ல படுக்க சொல்றார்.. ஓக்கே.. நடு ராத்திரில சத்தம் கேட்டதும் என்ன இதுக்கோசரம் அந்த லூஸ் தனியா வெளியே போகுது.. ? ஒண்ணா மூடிக்கிட்டு ஐ மீன் கதவை மூடிக்கிட்டு தூங்கனும். அல்லது ஹீரோவை எழுப்பி விடனும்.. 


5.  வில்லி ஹீரோவை கில்மா டிவிடியை ரிலீஸ் பண்ணிடுவேன்னு மிரட்றது கேனத்தன்மா இருக்கு.. பொதுவா சினி ஃபீல்டுல இருக்கறவங்க எல்லாம் பல களன் கண்டவங்க தான்..  இதனால பெரிய பாதிப்பு ஒண்ணும் வரப்போறதில்லை.. அவர் என்ன ராணுவ அமைச்சரா? அப்படி பயப்பட?அப்படியே ரிலீஸ் செஞ்சாலும் அந்த பத்தினி மேட்டரும் தானே சந்தி சிரிக்கும் ?


http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/07/Hot-Bipasha-Basu-in-a-seductive-pose-in-Raaz-3-Movie-Stills-560x390.jpg


6.  ஏக்தா ஏக்தா தூர் ஹை பாடல் பல்லவிக்கான இசை பஹலா பஹ்லா ப்யார் ஹை பாட்டின் உருவல்..


7.  ஹீரோ ஹீரோயின் கிட்டே ஏன் உண்மையை சொல்ல தயங்கறார்? இந்தா பாரம்மா , அவ தான் வில்லி.. அவ தான் இதை கொடுக்கச்சொன்னா.. நீ ஜாக்கிரதைன்னு ஆரம்பத்திலேயே சொல்லிட்டா மேட்டர் ஓவர்.. 


8. கதைப்படி பேய் மனுஷ கண்ணுக்கு நேருக்கு நேர் தெரியாதாம். கண்ணாடில பார்த்தா தெரியுமாம்.. அதனால க்ளைமாக்ஸ்ல ஹீரோ கண்னாடில பார்த்து பார்த்து பேய் கூட ஃபைட் பண்றாரு.. நான் பேயா இருந்தா முதல் வேலையா அந்த கண்னாடியை உடைச்சிருப்பேன்;/./ 



 9. பொதுவா இந்த மாதிரி விஷம் கலக்கற வேலை, மருந்து கலக்கற வேலை எல்லாம் அந்தந்த வீட்டு வேலைக்காரங்களை பிடிச்சுத்தான் செய்வாங்க அதான் பாதுகாப்பு. சீப் அண்ட் பெஸ்ட்.. ஏன்னா சம்பந்தப்படது ஒரு பொண்ணோட மேட்டர்.. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல வெச்சா என்ன ஆகும்? ஒரே கேரவுன் வேன்ல சிம்புவையும், நயன் தாராவையும் 10 நிமிஷம் விட்டு வெச்சா என்னாகும்? இந்த ஜி கே கூட இல்லாம வில்லி பிபாஷா பாசு  லூஸ் மாதிரி ஹீரோவை  ஹீரோயின் வீட்டுக்கு தனியா அனுப்புவாரா?


10. வில்லி அந்த திரவத்தை ஹீரோயின் சாப்பிடும் மதுவில் கலக்கச்சொல்றா. ஹீரோவுக்கு அதுல இஷ்டம் இல்லை.  ஆனா மிரட்டலுக்காக அதை செய்யறான். மேட்டர் ரொம்ப சிம்பிள்.. ஹீரோ ஹீரோயின் கிட்டே நீ வெறி பிடிச்ச மாதிரி நடி,.. நான் கலந்துட்டதா அவ கிட்டே சொல்லிக்கறேன்னா மேட்டர் ஓவர்.. 

11. ஒரு சீன்ல மிட் நைட்ல திடீர்னு எந்திரிச்சு வரும் ஹீரோயின் ஹீரோ ஏதோ மிக்ஸ் பண்றதை பார்க்கறா.. அவளுக்கு டவுட்டே வர்லை.. மப்புல இருந்தாளா? 

12. ஓப்பனிங்க் சீன்ல அவார்டு தனக்குத்தான்னு டென்ஷனோட இருக்கும் வில்லி ஏன் தன் ஃபேவரைட் இயக்குநர் ( அவர் தான் ஜட்ஜ்) கிட்டே அவார்டு யாருக்குன்னு கேட்டுக்கலை/)

http://1.bp.blogspot.com/-rhLjDriy7q4/TfNMqKVFefI/AAAAAAAAADc/C6m9eg9ViMQ/s1600/bipasha-basu-10.jpg
 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இது உங்களுக்கு நிகழ்ந்த தோல்வி இல்லை.. திறமைக்கு நேர்ந்த அவமரியாதை


2. என் கிட்டே பொறாமைத்தீ பயங்கரமா எரிஞ்சுக்கிட்டு இருக்கு. இந்த உலகத்தை  விட்டே அவளை துரத்தனும்னு வெறி இருக்கு.. 


3. என்னோட வலி, ஏமாற்றம், துக்கம் எல்லாத்தையும் சரி பண்ண உன்னால மட்டும் தான் முடியும்.. 


4. உங்க கண்ணுக்கு  தெரியும் அந்த கெட்ட ஆவி ஏன் எங்க கண்ணுக்கு தெரியல..? 


5. நான் உன்னைக்கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் பின்னால நாய் மாதிரி வருவேன்னு எதிர்பார்க்கிறியா? 



6.. அவளை சிரிச்ச முகத்தோட இனி பார்த்தேன் உன் முகத்துல ஜென்மத்துக்கும் நீ சிரிப்பையே பார்க்க முடியாது 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9mEnHFLMXHlZ0YHNzvTyqbntb3VdEl1MLmqeJOUzMhvWq7y_QOPvzJu0d5UAzZsbjJvLnSdOolUDGrAEAPWsipiyXr_57-8KvzydWcTQzFqmBlf7836OVmnfxLnhWF0a8FDnkkCIQNII/s1600/bipasabasu+hot+pics+%2525282%252529.jpg

 சி,பி கமெண்ட் - திகில் பட விரும்பிகள், கில்மா சீன் பிரியர்கள் பார்க்கலாம். அதுவும் 30 வயசுக்கு மேற்பட்டவர்கள்.. பெண்கள் பார்க்க தகுதி இல்லாத படம்.

இந்த அரை குறை கில்மா, திகில் படத்தை ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் பார்த்தேன் 


Wednesday, September 05, 2012

THE 13TH FLOOR -ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://movies.maxupdates.tv/wp-contents/uploads/2010/01/The-Thirteenth-Floor.jpg 

ஒரு கணிணி விஞ்ஞானி தன் ஆராய்ச்சில புதுசா ஒண்ணு கண்டு பிடிக்கிறார்..அப்போ அவர் உதவியாளர் பக்கத்துல இல்லை.  தன்னோட கண்டு பிடிப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதறார்.. அப்போ யாரா தன்னை நோட் பண்றாங்க.. ஃபாலோ பண்றாங்க அப்டினு ஒரு உள் உணர்வு..உடனே நேரா தான் வழக்கமா போகும் ஒரு நைட் கிளப்க்கு போறார். அங்கே இருக்கும் பேரர் ஒருவர்ட்ட ஒரு கவரை கொடுத்து  தன் பேரை சொல்லி யாராவது இந்த கவரை கேட்டா கொடுத்துடுன்னு சொல்லிட்டு போறார்.. 


 முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஒரு ஆள் கிட்டே அந்த மாதிரி ஒரு ரகசியத்தை ஒப்படைக்கலாமா?ன்னு நானும் யோசிச்சேன்.. அதுக்கு காரணம் சஸ்பென்சான ட்விஸ்ட்டா பின்னால வருது.. அந்த கவரை நாம எதிர்பார்த்த மாதிரியே அந்த சர்வர் பிரிச்சு படிச்சுடறான்.. கம்ப்யூட்டர் சயிண்ட்டிஸ்ட்டோட பி ஏ தான் நம்ம ஹீரோ.. 


 மர்ம நபரால் அந்த சயிண்ட்டிஸ்ட் கொலை செய்யப்படறார்.. கொலை செய்யப்பட்ட  நபரோட கோட் பாக்கெட்ல ஹீரோவோட பேரும் அவர் விசிட்டிங்க் கார்டும் இருக்கு.. இன்னும் பல பாதகமான அம்சங்கள் அவருக்கு எதிரா சாட்சியா இருக்கு.. போலீஸ் ஹீரோவை கொலையாளின்னு சந்தேகப்படுது.. 


பிரைவேட் டிடெக்டிவ் ஹீரோவை விசாரிக்கறார்.. அப்போ  ஒரு 70 மார்க் ஃபிகர் ஒண்ணு வருது.. கொலை செய்யப்பட்ட  சயிண்ட்டிஸ்ட்டோட பொண்ணுன்னு தன்னை சொல்லிக்குது.. ஆனா அந்த சயிண்ட்டிஸ்ட் கிட்டே பி ஏ வா பல வருஷம் வேலை பார்த்த ஹீரோவுக்கோ , மற்றவங்களுக்கோ அவளைப்பற்றித்தெரியல.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJuTpEex1xUXucF8OClJep65wXs4LMwo4GElV-Yf6YYul-klnw1VCAigsI5faQP9Sgyi9lvJqb6UKunGb2BdTZkz_RX1bBc8bTaSdUJ9wD1rpPZXXC0mLcVtfFpNxIoVbvdE3DEOGX9Q/s400/The+Thirteenth+Floor.jpg


சயிண்டிஸ்ட் கிட்டே கவரை வாங்கின பேரர் போலீஸ்ல சாட்சி சொல்றாரு.. அதாவது ஹீரோவும், சயிண்ட்டிஸ்ட்டும் சந்திச்சாங்க.. கொலை செய்யப்படறதுக்கு கொஞ்ச நேரம் முன்பு இருவரும் சந்திச்சாங்கன்னு சொல்லிடறார்.. இது போதாதா? போலீஸ்க்கு.. அவரை கைது பண்ணுது. 



இந்த இடத்துல அந்த சயிண்ட்டிஸ்ட் எந்த மாதிரி ஆராய்ச்சி செஞ்சார்னு பார்க்கலாம்..  ஆங்கிலத்துல சொன்னா virtual reality (VR) simulation.

நம்ம ஊர்ல அந்தக்காலத்துல முன்னோர்கள் சொல்வாங்களே கூடு விட்டு கூடு பாய்தல்.. அது மாதிரி.. இப்போ உதாரணத்துக்கு ராவணன் சீதையை அடைய ராமன் மாதிரி வேஷம் போட்டுட்டு அல்லது ராமர் உருவத்துல போனான். ராமர் உருவம் வந்ததும் அவர் மனசும் ராமர் மாதிரி அடுத்தவங்க மனைவியை மனதாலும் நினைக்காத தன்மை வந்துடுச்சுன்னு சொல்வாங்களே..  அதுக்கு நேர் எதிர்.. 


 அதாவது  இப்போ உங்களுக்கு உலக அழகி ஐஸ்வர்யா ராயை கிஸ் பண்ண ஆசை.. ஆனா அபிஷேக் வந்தா மட்டும் தான் அவர் அதுக்கு ஓக்கே சொல்வார்.. நீங்க என்ன பண்றீங்க. வெர்ச்சுவல் ரியாலிட்டி மூலமா அபிஷேக் உருவத்துல போய் மேட்டரை முடிச்சுட்டு வந்துடறீங்க.. உருவம் தான் அவருது.. மனசு, எண்ணம், செயல்பாடுகள் எல்லாம் உங்களுது.. 


 இந்த ஆராய்ச்சில தான் அந்த சயிண்ட்டிஸ்ட் வின் பண்ணி இருக்கார்.. . 


இந்த கொலைக்கேஸ் விசாரணை நடந்துட்டு இருக்கும்போது அந்த சயிண்ட்டிஸ்ட்டோட மகள் ஒரு குண்டைத்தூக்கி போடறா.. அதாவது அவ மேரேஜ் ஆனவ்.. ஆனாலும் தன் அப்பாவின் பி ஏவான ஹீரோவை வை ஒன் சைடா லவ்வி இருக்கா.. மனசுக்குள்ளே.. அது அவ புருஷனுக்கு பிடிக்கல.. எந்த புருஷனுக்குத்தான் அது பிடிக்கும்..? 


அதனால அவ புருஷன் தான் ஹீரோவை   மாட்டி வைக்க கொலை செஞ்சிருப்பாரோ அப்டினு சந்தேகப்படறா.. 

என்ன நடக்குது? யார் தான் உண்மையான குற்றவாளி? என்பதெல்லாம் மிச்ச மீதிக்கதை.. க்ளைமேக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் உண்டு..  


 http://www.movie-roulette.com/photos_big/the-13th-floor-2-1.jpeg


 படம் ரிலீஸ் ஆன  கால கட்டம் 1999. கதை நடக்கும் கால கட்டம் 1990.. கொலை விசாரணை எல்லாம் முடிஞ்சு படம் முடியறப்போ 2024.. அது போக ஹீரோ பேக் டூ பாஸ்ட் ட்ராவல் பண்றது   1937

 அதனால படத்தோட முதல் ஹீரோ ஆர்ட் டைரக்டர் தான்.. அசால்ட்டா ஒர்க் பண்ணி கை தட்டல் வாங்கிக்கறார்..

Daniel F. Galouye.  என்னும் நாவல் ஆசிரியர்  எழுதிய நாவலான Simulacron-3 (1964) கதையை பேஸ் பண்ணி எழுதப்பட்ட திரைக்கதை,,. இயக்குநர் Josef Rusnak


 படத்தோட பெரும்பாலான சம்பவங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ்ல, கலிஃபோர்னியாவுல நடக்குது,.,. நல்லா ரவுண்ட் அடிச்ச திருப்தி..


ஹீரோ ஆள் தோற்றத்தில் குறை களையப்பட்ட விஜய் ஆண்டனி மாதிரி இருக்கார்.. நல்ல நடிப்பு.. இவர் கமல் மாதிரி 3 கெட்டப்ல வர்றார்.. இந்தப்படம் தமிழ்ல ரீமேக் செஞ்சா அல்லது உல்டா செஞ்சா கமல் தான் பெஸ்ட் சாய்ஸ்.. ஆக்‌ஷன் காட்சிகளை விட காதல் காட்சிகளில் இவருக்கு சுறு சுறுப்பு கம்மி.. ஏன்னா பாப்பா பக்கத்துல வந்து வாகா நின்னும் கூட அண்ணன் கம்முன்னே இருக்கார். 


 ஹீரோயின் நல்ல அழகு.. டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லேட்டின் முகத்தை என்லார்ஜ் பண்ணி கொஞ்சம் பிரைட்னெஸை குறைச்சு, புன்னகையை கூட்டினா எப்படி இருக்கும்? அதான் இவர்..  குட் செலக்‌ஷன்;. 


 பல இடங்களில் நுணுக்கமான நடிப்பு.. குறிப்பா  ஹீரோ ரூபத்துல வந்திருப்பது தன் கணவன் தான் என அசால்ட்டா அடையாளம் காணும் இடங்கள், ஹீரோவிடம் ஆல்ரெடி தான் லவ்விய மேட்ட்ரை நாசூக்கா சொல்வது என  ஆங்காங்கே பளிச் பளிச்.. 



வில்லனாக வரும் சயிண்ட்டிஸ்ட்டின் மாப்ளையும், ஹீரோயினின் கணவர் இன்னும் பெட்டரா பண்ணி இருக்கலாம்.. அவரை விட அந்த பார் பேரர் நடிப்பில் முந்துகிறார்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtszbVWx9ZlQs-SfSOAuJpJwnlxXZkVh26Amf5Wjuy_OnIVeWcsQXWZZePmVeGTytdFUAxJ7QVEZL3GNy0FzfqvzpVe_AstFkSCs1CNv_EYrvtSImWn4axGXz7u6iK3rtjDxRugfVpTynX/



மனம் கவர்ந்த வசனங்கள்



1.  உங்களுக்கு செல்வாக்கு ஜாஸ்தியா இருக்கு?


 ரெகுலரா ஒரே இடத்துலயோ, ஹோட்டல்லயோ  தங்குங்க, உங்களுக்கும் அந்த செல்வாக்கு வரும். 



2.  வெளி உலகத்தை பார்க்கவே மாட்டியா? எப்போ பாரு கம்ப்யூட்டரை கட்டிட்டு அழுதுட்டே இருக்கே? 



3. யார் யார் ராத்திரி எங்கெங்கே போறாங்கன்னு என்னை கேட்டா எனக்கு எப்படி தெரியும்?



4. அவர் இங்கே வந்தா என்ன பண்ணுவார்?


 எல்லாரையும் போலத்தான்.. ஆடுவாரு, குடிப்பாரு. பொண்ணுங்க கூட கூத்தடிப்பாரு.. 


 பொண்ணுங்க கூடவா? ஆச்சரியமா இருக்கே?


 ஏன்? அவரை உங்களுக்கு நல்ல பழக்கம்னீங்க.. அவர் எப்படிப்பட்ட கேரக்டர்னு உங்களுக்குத்தெரியாதா? 

 தெரியும்.. ஆனா இந்த அளவு தெரியாது.




5. நாம ஆல்ரெடி பார்த்து பேசி பழகுன மாதிரி இருக்கே? 


 ஒரு வேளை முன் ஜென்மத்துல நமக்குன்னு இன்னும் ஒரு லைஃப் இருந்ததோ என்னவோ?


 இன்னொரு லைஃப்னா? புரியலை.. 


 போகப்போக புரியும்.. 



6. ஏய்.. மிஸ்டர்.. போலீஸ் விசாரணைல உனக்கு சிகரெட் பிடிக்கற பழக்கம் இல்லைன்னு சொன்னே... ஆனா  இப்போ தம் அடிக்கிறியே?


 அதுக்குப்பிறகு பழகிட்டேன்.. 



7. நீ நிழலை நிஜம்னு நம்பி இருக்கே.. நான் நிஜத்தை நிழல்னு நம்பி இருக்கேன்.. அதான் நமக்கிடையே உள்ள வித்தியாசம்



8. என் பொருளை இன்னொருத்தர் சொந்தமாக்கிக்க நான் விட மாட்டேன்.. விரும்பவும் மாட்டேன். 


 நீ என்ன மிருகமா? 


 ஆமா, அப்படி ஆக ஆசைப்படுறேன்.. 


http://www.brightlightsfilm.com/blog/wp-content/uploads/2010/08/13th-Floor.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. படத்தோட டைட்டில் பார்த்தா என்னமோ  பேய்க்கதை மாதிரி இருக்கு. சயின்ஸ் ஃபிக்சன்  என்பதற்கோ, இன்வெஸ்டிகேஷன் ஆஃப் எ கர்டர் என்பதற்கோ எந்த விதமான க்ளூவோ , லீடோ டைட்டில்ல இல்லை.. என் சிபாரிசு - : THE SURPRISE MURDER"  OR  " LONG LONG AGO I WAS MURDERED"


2.  ஹீரோயின் தன் பர்சனாலிட்டி கணவனை விட்டுட்டு ஏன் ஹீரோ மேல மையல் கொள்கிறாள்? என்பதற்கு சரியான விளக்கம் இல்லை..  சம்பிராதயப்படி அவள் கணவனை கொடுமையானவனா காட்டி இருக்கலாம்.. அல்லது எதுக்கும் லாயக்கில்லாதவனா காட்டி இருக்கலாம்..


3. ஹீரோயினை அவள் கணவனா வர்ற வில்லன் பல டைம் டேஸ்ட் பார்த்தவன் தான். ஆனா காணாததைக்கண்டவன் போல் எதுக்கு ஹீரோ உருவத்துல வந்து ரொமான்ஸ் பண்றான்?


4. சயிண்ட்டிஸ்ட்டா வர்றவர் கில்மா மேட்டர்ல மன்னன் என்பதற்கும், கதைக்கும் என்ன சம்பந்தம்? கொலை செய்ததாக சந்தேகப்படும் லிஸ்ட்டில் எந்தப்பெண் பெயரும் வர்லை. பின் எதுக்கு அந்த தேவை இல்லாத  பல்லி வால் ?


5. கதைப்படி  வேற ஒரு காலத்துக்குப்போறவர் 2 மணி நேரம் தான் அங்கே இருக்க முடியும் என்ற கான்செப்ட் ஓக்கே.. அந்த 2 மணி நேரம் முடிஞ்சதும் ஹீரோ நிகழ்காலத்துக்கு வர்றார்.. அப்போ அங்கே ஏற்படும் குழப்பங்கள் என்ன? மறுபடி ஹீரோ அங்கே போகும்போது “ எங்கேப்பா ஆளையே காணோம்? திடீர்னு மாயமா மறைஞ்சுட்டே?ன்னு யாரும் கேட்கவே இல்லையே? 


http://www.tribute.ca/tribute_objects/images/movies/13th_Floor/07.JPG



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. திரைக்கதை உத்தி..  இந்தக்கதையை க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை முதல்லியே சொல்லி அல்லது அதை யூகிக்கும்  வாய்ப்பை ஆடியன்சுக்கு முன் கூட்டியே கொடுத்திருந்தா சப் என முடிந்திருக்கும் சாதா கதை தான்.. ஆனால் அதை சாமார்த்தியமாக மறைத்து கதை சொன்ன விதம் அழகு


2. ஹீரோ, ஹீரோயின் செலக்‌ஷன் கனகச்சிதம்.. இருவருக்கும் இடையே யான பாடி கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ்  டச் எல்லாம் அருமை..


3. இசை, ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு மூன்றும் மூன்று வெவ்வேறு கால கட்டத்துக்கு போகும்போது அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்றபடி மாறுவது அம்சம்..




சி.பி கமெண்ட் - சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் ஸ்டோரி ரசிகர்கள், பெண்கள் அனைவரும் பர்க்கலாம்.. கொஞ்சம் தூசு தட்னா தமிழில் ரீமேக்க நல்ல படம்..



http://13thflooroffice.files.wordpress.com/2011/06/bridesmaids_movie_poster.jpg%3Fw%3D500%26h%3D365

Thursday, August 16, 2012

நான் - NON-STOP க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSeERahkW3FrinX3kv96aJlBYM1FIcymjisKUBvAi9Cwa8fCd3A3hSpsB5SS9dt9QINCdZNT2PeYbHhSENnKSaBIb8j-3Ez8me5LN1fMMh5x3LtboFBedITOkgjrkyhqMrudgvdvuN9Hw/s1600/Naan-Songs.jpg

சின்ன வயசுலயே  கலைஞர் மாதிரி கிரிமினல் மைண்ட் உள்ள ஒருத்தர் ஜெ பண்ற மாதிரி ஆர்ப்பாட்டம்,ஆணவம், படோடபம் எல்லாம் இல்லாம மு க ஸ்டாலின் மாதிரி அடக்கி வாசிச்சு கமுக்கமா , அமுக்கமா, டாக்டர் ராம்தாஸ் மாதிரி சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை பச்சோந்தியா மாத்திக்கிட்டுப் பண்ற ஆள் மாறாட்ட தில்லு முல்லுகள் தான் கதை..


சின்ன வயசுலயே ஹீரோ தன் அம்மா தப்பு பண்றதை பார்த்து அப்பா கிட்டே சொல்லிடறான், அப்பா தற்கொலை, ஆனாலும் மாறாத அம்மாவை வீட்டுக்குள்ள வெச்சு கொளுத்திடறான் வித் தட் கள்ளக்காதலன்.. 


ஜெயில்ல  சில வருஷம் இருந்துட்டு வெளீல வந்து பஸ்ல ஊருக்குப்போறப்ப எங்கேயும் எப்போதும் மாதிரி ஒரு விபத்து, அருகில் அமர்ந்திருக்கும் ஒரு முஸ்லீம் ஆள் அவுட்.. அந்தாளோட சூட்கேஸை அபேஸ் பண்ணி அவர் கிட்டே இருக்கும் சர்ட்டிஃபிகேட் வெச்சு காலேஜ் சேர்ந்துடறான்.. 


காலேஜ்ல ஒரு பணக்காரப்பையன் நட்பு கிடைக்குது.. அவன் பங்களாவுலயே சர்வண்ட்  கம் பேயிங்க் கெஸ்ட்டா தங்கிடறான்.. அந்த பணக்காரப்பையன் ”மாமே” மாதிரி லேடீஸ் மேட்டர்ல வீக்.. பல பொண்ணுங்களோட சுத்தறவர்..ஆனா அவரை நல்லவர்னு நம்பி ஒரு பொண்ணு லவ் பண்ணுது.. 


 ஒரு கட்டத்துல ஹீரோவால தனக்கு பிரச்சனை வரும்னு  பணக்காரப்பையன் நினைக்கறான்.. ஹீரோ முஸ்லீமா ஆள் மாறாட்டம் பண்ணிட்டு இருக்கும் இந்துன்னு தெரிஞ்சுடுது.. 2 பேருக்குமான வாக்குவாதத்துல  சண்டைல ஹீரோ  அவனை கொலை பண்ணிடறார்..


http://chennaionline.com/images/gallery/2012/July/20120730015206/vijay-Antony-in_Naan_movie_photos_stills_01.jpg

 பாடியை புதைச்சுடறார்.. ஹீரோவுக்கு கோவை குணா மாதிரி மிமிக்ரி தெரியும்.. அதனால செத்துப்போன ஆள் குரல்ல ஃபோன்ல மட்டும் அப்பப்ப பேசி அவங்க பெற்றோரை,காதலியை  அவன் உயிரோட எங்கேயோ தலை மறைவா இருக்கற மாதிரி நம்ப வைக்கிறான். 


 இந்த மேட்டர் அந்த பணக்காரப்பையனோட நண்பன் ஒருத்தனுக்கும் தெரிஞ்சுடுது.. அவனையும் க்ளோஸ் பண்ணிடறான் ஹீரோ..


 இப்போ அந்த பணக்காரப்பையனோட காதலிக்கு டவுட் வந்துடுது.. அவளை எப்படி நம்ப வைக்கிறான், போலீஸ்க்கு எப்படி அல்வா தர்றான்? என்பதுதான் மிச்ச மீதிக்கதை.. 


 சும்மா சொல்லக்கூடாது திரைக்கதை பக்கா.. ஹாலிவுட் பட சுடல்தான்.. ஆனாலும் திறமையா பண்ணி இருக்காங்க  ( நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்- வடிவேலு)


 சம்சாரம் ஃபாத்திமா தான் தயாரிப்பு. கணவர் விஜய் ஆண்ட்டனி தான் ஹீரோ.. சம்சாரம் ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும் போல அண்ணன் ரொம்பவே அடக்கி வாசிக்கறார்.. அவர்க்கு நடிப்பு வர்லைங்கறது திரைக்கதை அமைப்பால தெரியவே இல்லை.. ஆள் நல்லா ஜை ஜாண்டிக்கா இருக்கார்..  கூலிங்க் கிளாஸ் போட்டுட்டா அம்சமா இருப்பார், ஆனா ஒரு சீன்ல கூட அப்படி வராதது ஏமாற்றமே.. 


ஹீரோயின் ரூபா மஞ்சரி. ஹேர் ஸ்டைல் சூப்பர் .. இந்த மாதிரி ரவுண்ட் ஃபேஸ் ஃபிகர்ங்களுக்கு கர்லிங்க் ஹேர்ஸ்டைல் பக்காவா செட் ஆகும்.. அவரோட டிரஸ்சிங்க் சென்ஸ் அழகு.. கண்ணுக்கு ஐ டெக்ஸ் மையை நம்பாம என்னென்னமோ தடவி இருக்கார்.. எதிர் காலத்தில் தவிர்த்தா அவருக்கும், கண்ணுக்கும் நல்லது.. 


 பணக்காரப்பையனா ஆனந்த தாண்டவம் ஹீரோ  சித்தார்த் வர்றார்.. அமெரிக்கன் ஸ்டைல் ஹேர் ஸ்டைல் அக்மார்க் பணக்காரப்பையன் லுக்,.. ஆள் சோ க்யூட்.. அசால்ட்டா நடிச்சிருக்கார்.. 


அனுயா 6 காட்சிகளில் வந்தாலும் அள்ளிக்கறார். ஆல்ரெடி சிவப்பா இருக்கும் அவர் கன்னத்தில் அதீத சிவப்பு ஒப்பனை பண்ணி இருப்பது எதுக்கு? ஸ்லீவ்லெஸ் டிரஸ் தான் அணிவேன் என்ற இவரது பிடிவாதத்துக்கு ஒரு சபாஷ்.. இவரை இன்னும் யூஸ் பண்ணி இருக்கலாம் ( படத்துல)


போலீஸ் ஆஃபீசரா வர்றவர் நல்லா பண்ணி இருக்கார் என்றாலும் ஒரு வி ஐ பி ஹீரோவை போட்டிருந்தா படத்தோட மார்க்கெட்டிங்க் நல்லா இருந்திருக்கும்..


http://www.mottaboss.com/stills/jul12/30/vijay_antony_naan_movie_audio_launch_stills_b1747.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஹீரோவுக்கு அப்பாவா காலேஜ்ல வந்து ஒரு சீன்ல நடிச்சுட்டு போறவர் ஹீரோ கிட்டே மிரட்டி பணம் பறிக்க  ஹோட்டல்ல ஹீரோவை சந்திக்கறார்.. அப்போ காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ஏதோ கலாட்டா பண்ண ஹீரோ அவங்களை  பீர் பாட்டிலை உடைச்சு ரகளை பண்ற சீன் பார்த்து அரண்டு மிரண்டு தலை தெறிக்க ஓடும் சீன்.. அட்டகாசம்.. தியேட்டரே அப்ளாஸ் மழையில் 


2. ஹீரோ ஃபோர்ஜெரி சிக்னேச்சர்ல கேடி என்பதை படத்தின் முதல் சீன்லயே காட்டி விடுவது பின் வரும் பல காட்சிகளுக்கு உதவியா இருக்கு.. 


3. தயாரிப்பாளர் தன் மனைவி என்பதால் ஹீரோ அடக்கியே வாசித்து இருப்பது. வாய்ப்பு இருந்தும் எந்த பெண்ணையும் அவர் படத்துல தொடலை.. டி ஆர்க்குப்பின் தமிழ் சினிமாவில் பெண்ணை தொடாத ஹீரோ என்ற பட்டம் கிடைக்கலாம்.. ( படத்துல வர்ற எல்லாப்பெண்னையும் தொடும் ஹீரோ பட்டம் சாட்சாத் சிம்புவுக்கே என்பது கோலிவுட் டைரிக்குறிப்பு)


4. திரைக்கதை அமைப்பு மிகத்தெளிவாக, அமைதியாக எந்த அவசரமும் இல்லாம அதி புத்திசாலித்தனம் எல்லாம் இல்லாம நார்மலா போவது பிளஸ்..



5.  படத்தின் கதை, திரைக்கதை வாய்ப்பளித்தும் எந்த இடத்திலும் கவர்ச்சியை  புகுத்தாமல் மிக கண்ணியமாக காட்சிகளை வடிவமைத்த விதம் செம

http://www.mottaboss.com/stills/jul12/30/vijay_antony_naan_movie_audio_launch_stills_a1733.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள், ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  சக மாணவனுக்கு ஹீரோ போலி கையெழுத்து போட்டு உதவறார்.. தப்பு தான்.. ஆனா ஹெச் எம் நாளை ஸ்கூ;லுக்கு வரும்போது அம்மா அப்பாவை கூட்டிட்டு வான்னு சொன்னா போதாதா? ஏன் அப்பவே அனுப்பனும்? ஏன்னா அந்த ஸ்கூல் எல்லா மாணவர்களையும் ஸ்கூல் பஸ்ல பிக்கப் பண்ணிட்டு டிராப் பண்ற பஸ்.. பாதிலயே அனுப்புனா எப்படி?


2. பாதில வீட்டுக்கு வரும் ஹீரோ வீடு உள் பக்கம் பூட்டி இருப்பதை பார்த்து கதவை தட்டறான்.. உடனே கள்ளக்காதலனை பாத்ரூமிலோ கட்டிலுக்கு அடியிலோ ஒளிச்சு வைக்காம அம்மாக்காரி கதவை திறக்கறா.. மாமா இங்கே வந்துட்டுப்போனதை அப்பா கிட்டே சொல்லிடாதேங்கறா.. அவ்ளவ் ஏன் ரிஸ்க்? கதவைத்திறந்ததும் “ என்னப்பா? என்ன பிரச்சனை? ஏன் நேரத்துலயேவந்துட்டே? வா ஸ்கூலுக்கு போலாம், விசாரிக்கலாம்னு கேட்டிருக்கலாம்..கதவை திறந்து போட்டபடி அவன் கூட கிளம்பினா கள்ளக்காதலன் எஸ் ஆகிடுவான்


3. தன் அம்மாவையும், கள்ளக்காதலனையும் ரூம்ல வெச்சு சாத்தி எரிக்கறார் ஹீரோ.. அப்ப தப்பிக்கற ஐடியாவுல தான் அவர் டிரஸ் எல்லாம் பேக் பண்ணி வெச்சிருக்கார்.. அது ஒரு விபத்து மாதிரி தான் எல்லாருக்கும் தெரியுது.. அப்புறம் எப்படி அவர் போலீஸ்ல மாட்டி ஜெயில்க்கு போறார்? என்பதற்கு படத்தில் விளக்கம் ஏதும் இல்லை ( எடிட்டிங்க்ல கட் ஆகி இருக்கலாம் ஃபுட்டேஜ் பிராப்ளமா?)


4. ஹீரோ இந்து, அவர் முஸ்லீமா ஆள் மாறாட்டம் பண்றார்.. கையெழுத்து, தொழுகை எல்லாம் கத்துக்கறார்.. ஆனா முஸ்லீம்களின் முக்கிய அடையாளமான சுன்னத் ஆபரேஷன் ஏன் செஞ்சுக்கலை..? அவர் மாட்றதே அதை வெச்சுத்தானே? ஒரு கிரிமினல் அது கூட யோசிக்க மாட்டானா?


5. ஹீரோ முஸ்லீம் கிடையாது என்பதை இன்னொரு ஆண் கண்டுபிடிப்பது ஹாலிவுட்டுக்கு ஓக்கே. எப்பவும் சுடும்போது நேட்டிவிட்டி கலக்கனும்.. ஹீரோ ஒரு பொண்ணு கூட கில்மா பண்றப்ப அந்த லேடி கண்டு பிடிச்சா கில்மாவுக்கு கில்மா.. லாஜிக்குக்கு லாஜிக் .. உறுத்தல் ஏதும் இருக்காது..

http://www.dailomo.com/tamil/content_images/1/images1/sms-heroine-anuya/anuya-hot-sexy-photos-1s.jpg


6.  இழவு விழுந்த வீட்டில் ஒரு வாரம் வரை உறவினர் கூட்டம் இருக்கும். ஆனா ஹீரோவின் அப்பா இறந்த அடுத்த நாளே வீடு வெறிச்சோடி இருக்கு.. ஹீரோவின் அம்மா தன் கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே கில்மா.. ஹால்ல பையன்..  என்னதான் மிட் நைட்னாலும் யாரும் அவ்ளவ் தைரியமா அப்படி செய்ய மாட்டாங்க


7. சித்தார்த்  2 ஃபிகர்களை தள்ளிட்டு அவுட்டோர் போய்ட்டு 2 நாள் கழிச்சு வர்றார்.. அப்போ அவர் கிட்டே உங்க லவ்வர் வந்துட்டுப்போனாங்க என்பதை ஹீரோ ஏன் சொல்லலை? அதானே பிரச்சனை ஏற்பட முதல் காரணம்? அவ சொல்லிடுவான்னு தெரியாதா?


8. அதே மாதிரி 2 நாள் டூர் போகும் சித்தார்த் அந்த 2 நாள்ல தன் காதலி தன்னைத்தேடி வீட்டுக்கு வருவா-ன்னு தெரியாதா?ஃபோனை ஆஃப் பண்ணி வெச்சிருக்கும்போது காதலி என்ன ஆச்சுன்னு பார்க்க வராமலா இருப்பா?


9. ஹோட்டல்ல கலக்கலா ரவுடிகளிடம் பாயும் ஹீரோ சித்தார்த்திடம் மட்டும் பம்முவது ஏன்? அவர் காரணம் இல்லாமல்  ஹீரோவை அறையும்போது குறைந்த பட்ச எதிர்ப்பைக்கூட காட்டலையே? ( அவர் ரூமை காலி பண்ணச்சொல்லிடறார், அப்புறம் என்ன பயம்?ரூம்லயே தங்கனும்னாக்கூட அதுக்காக பொறுத்துப்போலாம்)


10. ஹீரோ டெட் பாடியை டிஸ்போஸ் பண்றப்போ, கார்ல போறப்ப பின்னணி இசையா திகிலா மியூசிக் போட்டு பயத்தை ஆடியன்ஸ்க்கு தோற்றுவிக்காம என்னமோ கல்யாணக்கொண்டாட்டத்துக்கு போடற மாதிரி துள்ளல் இசை ஏன்?


http://gallery.southdreamz.com/cache/pressmeet/naan/free-naan-movie-press-meet-events-gallery-vijay-antony-rupe-mankari-siddarth-stills-11_720_southdreamz.jpg


11. ஹீரோ ஒரு சீன்ல ரூம்ல ஒளிஞ்சிருக்கார் ஹீரோயின் வந்து பார்த்துட்டு கிளம்பறா. அப்போ மாடில இருந்து அவ போய்ட்டாளா? என எட்டிப்பார்க்கும்போது அந்த ரூம் லைட்டை ஏன் ஆஃப் பண்ணலை?  அதானே சேஃப்? அங்கே இருந்து அவ பார்த்தாக்கூட இருட்டுதான் தெரியும்.. கிரிமினல்க்கு அது கூடத்தெரியாதா?


12. ஹீரோ கார் ஓட்ட எப்போ கத்துக்கறார்? ஏன்னா சித்தார்த் வீட்டுக்கு வர்ற வரை அவர்க்கும் கார்க்கும் சம்பந்தமே இல்லை.. ஆனா திடீர்னு கார் அநாசயமா ஓட்ற மாதிரி காட்றாங்க


13. ஹீரோ சித்தார்த்தின் அப்பாவின் ஃபேமிலி ஃபிரண்ட்சை சந்திக்க ஹோட்டல்க்கு வர்றார். அப்போ சித்தார்த்தின் ஃபோன் அவர் வெச்சிருக்கார்.. சித்தார்த்தைத்தான் கொன்னுட்டாரே? அப்போ அந்த ஃபோனை சைலண்ட் மோடுல போட்டு வைப்ரேஷன்ல வெச்சுட்டா மேட்டர் ஓவர்.. கால் வந்தா அவருக்கு மட்டும் தெரியும்.. அவங்க 3 பேருக்கும் தெரியாது.. அதை விட்டுட்டு ஏன் தடுமாறுகிறார்?


14.இன்ஸ்பெக்டர் ஹீரோவை விசாரிச்சுட்டு அவரை வெளியே உக்கார வெச்சு பின் சித்தார்த்தின் காதலியை விசாரிக்கறார். அப்போ ஹீரோவை கூப்பிட்டு காதலி கிட்டே “ இவரை தெரியுமா?”ன்னு ஏன் கேட்கலை?


15. இவ்வளவு கிரிமினல் வேலை பண்ணும் ஹீரோ லேடீஸ் மேட்டர் பக்கம் ஏன் போகவே இல்லை.. வாய்ப்பு இருந்தும் தவிர்க்க என்ன காரணம்? அதை வெச்சு இன்னும் இண்ட்ரஸ்ட்டா கதையை நகர்த்தி இருக்கலாமே?


http://1.bp.blogspot.com/-EOIsPU1zE0o/T6N1QKh_FfI/AAAAAAAAl10/g7qfD-Yl0eY/s1600/Rupa%2Bmanjari%2Bactress%2B%2B%25287%2529.JPG


16. ஹீரோ அடிபட்டு ஹாஸ்பிடல்ல படுத்து இருக்கார்.. கைல தலைல எல்லாம் கட்டு.. போலீஸ் ஹீரோவை பற்றி விசாரிக்க ஃபேக்ஸ் அனுப்புது.. அதாவது ஒரிஜினல் முஸ்லீம் வீட்டுக்கு.. ஹீரோ டக்னு அந்த அட்ரஸ் போய் சமாளிக்கறார்.. அதெப்பிடி ஒரே நாள்ல காயம் சரியாகிடுமா?



17. அட்ரஸ் வெரிவிஃபிகேஷன் பண்ண கான்ஸ்டபிள் இங்கே இருக்கும் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவிக்கும்போது ஆள் இருக்கார்னு சொல்லி இருப்பார்.. அப்போ இன்ஸ்பெக்டருக்கு டவுட் வராதா? இங்கே ஹாஸ்பிடல்ல இருந்த ஆள் அங்கே எப்படி போனார்? ஏன் போனார்?னு.. ஏன் அவரே நேரடியா ராமநாத புரம் போய் அதை க்ளியர் பண்ணலை?அதே போல் ஃபேக்ஸ் போற அதே டைம் இவரும் எப்படி அங்கே போறார்? ஃபிளைட்ல போனாக்கூட முடியாது


18. ஹீரோ 2 கொலை பண்றப்ப க்ளவுஸ் போடவே இல்லை.. கைரேகை காட்டி கொடுத்திருக்கும். எப்படி சித்தார்த்தை கொன்னது அவர் நண்பர் தான்னு நம்பவைக்க முடியும்? ரேகையை வெச்சு கண்டு பிடிக்க மாட்டாங்களா?


 19. ஏடி எம் மிஷின்ல ஹீரோ சித்தார்த் அக்கவுண்ட்ல இருந்து பணம் எடுக்கறார்.. கொலை செய்யப்பட்ட நாள்க்குப்பிறகு சித்தார்த்த் அக்கவுண்ட்ல இருந்து பல்க் அமவுண்ட் எடுக்கப்பட்டிருக்குன்னா போலீஸ்  உடனே ஏ டி எம் வீடியோ காமராவுல ஹீரோவை பார்த்திருக்காதா?


20. அனுயா ஹீரோ மேல கிரேஸ் ஆனது எப்படி? ஹீரோ அவரை கண்டுக்கவே இல்லை. அதிகம் பேசுனதும் இல்லை.. அன் டைம்ல அவர் வீட்டுக்கு எந்த நம்பிக்கைல போறார்?


21. ஹீரோயின்  மது மஞ்சரி ஒரு சீன்ல என் ஆளை நீ இன்னும் பார்த்ததில்லைன்னு அனுயா கிட்டே சொல்றா.. இந்தக்காலத்துல செல்ஃபோன்ல கவர்னர் கில்மாப்படமே ரிலீஸ் ஆகுது..  அப்படி இருக்கும்போது தன் செல் ஃபோன்ல சேவ் பண்ணி வெச்சிருக்கற லவ்வர் ஃபோட்டோவை ஹீரோயின் அனுயா கிட்டே காட்டி இருந்தா ஆள் மாறாடம் அப்பவே தெரிஞ்சிருக்குமே?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfn5JT3NT-9_V6hxcYyUtkj4W2p-MV_lyCta5UoZPm5zBvWQIN_u8QHCf0l9g0bMIXhADU081YYe2_OYJ8QSt7ZogVkj20QsF4esiq8tJybIi1K3avCI7EFZ1sMg_d6d0J3dq0-mY8xou_/s1600/Naan-Movie-New-Stills+(6).jpg

 மனம் கவர்ந்த வசனங்கள்



1. சார், எனக்கே என் சைன் இவ்ளவ் அழகா போட வராது.. ஆனா இவன் போட்டிருக்கான் பாருங்க



2. உன் பேரென்ன?

 ஏன்?


அழகான பொண்ணு எங்காவது தட்டுப்பட்டா அவங்க பேர் கேட்டு வெச்சிக்குவேன் அது என் பழக்கம் ..புரியலை? இதான் ராகிங்க்




3. சீனியர் பொண்ணை பார்த்து அழகா இருக்கேனு தைரியமா சொல்றியே, அது எப்படி?


எஸ்.. நீ அழகு .. அதான்


4. XQS மீ மிஸ்.. நாங்க கொஞ்சம் பர்சனலா பேசனும்.. நீங்க.... ப்ளீஸ்..

 ம்க்கும், அப்போ நீயே அவளை டிராப் பண்ணிடு,,

  வித் பிளஷர் ( ஐடியாவே அதுக்குத்தானே?)



5. பிடிச்சிருக்குன்னு சொல்றே, ஆனா லவ்வலைன்னு சொல்றே.. புரியலையே?


ஹி ஹி எனக்கு எல்லா பொண்ணுங்களையும் பிடிக்கும், ஆனா இந்த காதல், கல்யாணம் எல்லாம் ஒத்து வராது


6. டேய்./. காலேஜ் எல்லாம் எப்படி இருக்கு?


 அது நல்லா தான் இருக்கும், அவன் எப்படி படிக்கறான்னு கேளுங்க


7. அங்கே கார்ல இடம் இல்லைன்னா டோண்ட் ஒர்ரி.. என் மடில இடம் இருக்கு ஹி ஹி



8. லவ்வுக்கு பொசசிவ் நெஸ் தேவை தான்.. ஆனா ஓவரா போய்ட்டா டேஞ்சர்


9. இங்கே யாருமே 100% பர்ஃபெக்ட் இல்லை


10. அசோக் கேரக்டர் எப்படி?


 தானும் படிக்க மாட்டான், யாரையும் படிக்கவும் விட மாட்டான் ( கிராமங்கள்ல இதையே “ தானும் படுக்க மட்டான் , தள்ளியும் படுக்க மாட்டான்னு” பழமொழியா சொல்வாங்க )


11. ஏதோ சின்னப்பிரச்சனை.. அதைப்போய் பெருசு பண்ணிட்டு..

 இப்போ எல்லாம் சின்ன சின்ன பிரச்சனைகள் தான் பெரிய தப்பு உருவாக காரணமா இருக்கு

http://onlyfilmy.com/files/2012/08/Rupa-Manjari-776x1024.jpg



விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42


 குமுதம் ரேங்க் -  ஓக்கே


 டைம்ஸ் ஆஃப் இண்டியா - 3 /5


 டெக்கான் கிரானிக்கல் - 6/10



http://images.suite101.com/2689805_com_thetalente.jpg

மேலே உள்ள படம் தான் ஒரிஜினல்... நன்றி - அதிஷா

சி.பி கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். லேடீஸும் பார்க்கற மாதிரி கண்ணியமான நெறியாள்கை.. படத்துக்கு டி வில சரியா விளம்பரம் தர்லை, அது பெரிய மைன்ஸ், சன் டி வி சன் பிக்சார்ஸ் இதை வாங்கி இருந்தா இதை 100 நாள் படம் ஆக்கி இருப்பாங்க.. ஜஸ்ட் மிஸ்.. ஈரோடு தேவி அபிராமில படம் பார்த்தேன்

நான் படத்தை நான் இயக்கி இருந்தால் வைக்கும் டைட்டில் த ஹிந்து - 420 ( THE HINDU - 420)

கமர்ஷியல் ரன்னிங்க் ரேஸில் அட்டகத்தியை “ நான்” முந்தினாலும் விகடன் மார்க்கில் பிந்தும். காரணம் லாஜிக் மிஸ்டேக்ஸ் எக்கச்சக்கம்


 டிஸ்கி -

அட்டகத்தி - சினிமா விமர்சனம்

 

EK THA TIGER - ரொமான்ட்டிக் ஆக்‌ஷன் - பாலிவுட் சினிமா விமர்சனம்

 

 

 

 

http://haihoi.com/Channels/cine_gallery/naan_movie_stills_siddharth_venugopal_rupa_manjari_1f79bef_S_194.jpg

Monday, July 23, 2012

நயாகரா-சுஜாதா - சிறுகதை

http://www.kirukkal.com/images/sujatha_OEA_old_1.jpg 

எனக்கும் நீர் வீழ்ச்சிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப்போவதில்லை. பாண தீர்த்தத்தில் ஒரு முறை தடுக்கி விழுந்து, தாமிரபரணியில் சேர்ந்துகொள்ள இருந்தேன். அதே போல், ஒகனேக்கலில் பாசி வழுக்கி காவிரியில் கலக்க இருந்தேன். அப்புறம் அகஸ்தியர் ஃபால்ஸில்… எதற்கு விவரம்? நீ.வீக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்கிற சினே ரியோ புரிந்தால் சரி. வீழ்ச்சியைக் கண்டாலே எனக்கு ஞமஙம என்று மூக்கில் உறுத்தும். அடுத்த பஸ்ஸைப் பிடிப்பதற்குள் ஜலதோஷம் பிடித்துக்கொண்டுவிடும்.



இருந்தாலும் அமெரிக்காவுக்குப் போய் நயாகராவைப் பார்க்காமல் வந்தால்,

1. ஜன்மம் சாபல்யம் அடையாது.

2. திரும்பி வந்ததும் ஜனங்கள் வெறுப்பேற்றும் (”என்ன சார் அவ்வளவு தூரம் போயிட்டு நயாகரா பார்க்கலை… உச்… உச்… உச்” எக்ஸெட்ரா).

எனவே, நயாகரா பார்க்கச் சென்றோம்.

அமெரிக்காவில் நகரங்களைச் சுற்றிப் பார்க்க வசதியாக எங்களிடம் ஒரு ‘ஸீ யு.எஸ்.ஏ.’ ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் டிக்கெட் இருந்தது. ரொம்ப சல்லிசான டிக்கெட். அதை வைத்துக்கொண்டு அந்த கம்பெனியின் ஏரோப்ளேனில் ஏறிக்கொண்டு எங்கே வேண்டுமானாலும் போகலாம், புறப்பட்ட இடத்துக்குத் திரும்ப வராத வரையில். ‘பரவாயில்லையே’ என்று வியக்காதீர்கள். இந்தச் சுதந்திர சீட்டில் ஒரே ஒரு சிக்கல். பெரும்பாலான ஃப்ளைட்டுகளுக்கு அட்லாண்டா போய்த்தான் போக வேண்டும்.

உதாரணம் நியூயார்க்கிலிருந்து பஃபலோ போவதற்கு, நியூயார்க் அட்லாண்டா, அட்லாண்டா பஃபலோ என்ற ரூட்டில்தான் போக முடியும். இது சென்னையிலிருந்து பெங்களூரு போக, சென்னை டெல்லி, டெல்லி பெங்களூரு போகிற மாதிரி! எனவே அவர்கள் ஒன்றும் சும்மா கொடுத்துவிடவில்லை என்பது உங்களுக்குத் தெள்ளென விளங்கும் (‘தெள்’ என்றால் என்ன?) எனவே பத்து நகரங்களைப் பார்ப்பதற்குள் எத்தனை முறை அட்லாண்டா பார்த்திருப்போம் என்று நீங்கள் சுலபமாகக் கணக்கிட்டுக்கொள்ளலாம். அட்லாண்டா விமான நிலையத்தில் சிப்பந்திகள் அனைவரும். ”என்ன அண்ணா, மறுபடியும் வந்துட்டேளா” என்று விசாரிக்கும் அளவுக்குப் பரிச்சயமாகிவிட்டார்கள்.


நான் சொல்ல வந்தது நயாகரா பற்றி அல்லவா? நயாகராவுக்கு பஃபலோதான் விமான நிலையம். அங்கே போக வழக்கம் போல அட்லாண்டா விமான நிலையத்தில் காத்திருந்தபோது, பொடி நடையாகப் போய் ஒரு காபி சாப்பிட்டு வரலாம் என்று சென்று திரும்பியபோது, என் மனைவியின் அருகில் இரண்டு இந்தியர்கள் உட்கார்ந்துகொண்டு கையைத் தீவிரமாக ஆட்டிப் பேசிக்கொண்டு இருந்தார்கள். கிட்டே போனதில், ஒருவர் பிஸ்வாஸ். மற்றவர் சின்ஹா. பெங்காலிக்காரர்கள்.


இந்தியர்கள் எந்த மாநிலத்தவர்கள் என்று கண்டுபிடிக்க அவர்கள் ஒரு வாக்கியம் இங்கிலீஷ் பேசினால் போதும். மலையாளியை காலேஜ் என்று சொல்லச் சொன்னால் மதி. பெங்காலிகள் போல்ட்டை வோல்ட் என்றும் வோல்ட்டை போல்ட்* என்றும் சொல்லுவார்கள். எல்லாப் பெயருக்கும் ஓகாரம் சேர்த்துக்கொண்டு, ரங்கராஜன் என்பதை ரொங்கொரோஜன் என்பர்.

பிஸ்வாஸ், கல்கத்தாவில்ரொம்ப பிஸியான சர்ஜன் என்று தெரியவந்தது. சின்ஹா, மெட்டலர்ஜிஸ்டோ என்னவோ. இருவரும் லண்டனில் சந்தித்துக் கூட்டணி அமைத்துக்கொண்டு அமெரிக்கா வந்திருக்கிறார்கள். எங்களைப் போலவே இடங்களைச் சுற்றிப் பார்க்க ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் டிக்கெட் கைவசம் வைத்திருந்தார்கள். அதைப்பற்றிக் கேட்டபோது, ”சே! டிக்கெட்டா இது! அட்லாண்டா அட்லாண்டா!” என்றனர். ரொம்ப நொந்து போயிருந்தார்கள். சக சோகத்தால் சினேகிதமாகிவிட்டோம். இப்போது நயாகரா பார்க்க பஃபலோ போகிறோம் எனக் கேட்டதும் சந்தோஷப்பட்டு எங்களை ஆட்கொண்டு. ”கவலைப்படாதே. நாம் எல்லோரும் சேர்ந்தாற் போலப் போகலாம்” என்றனர். என் மனைவியும் ஒப்புக்கொள்ள, எனக்கு வயிற்றைக் கலக்கியது.


எனக்குத் தெரிந்த பெங்காலி நண்பர்கள் எல்லோரும் நல்லவர்களே. அவர்கள் சரோட் வாசிப்பார்கள். பிரிட்ஜ் ஆடுவார்கள். கவிதை எழுதுவார்கள். சங்கீதம், நடனம் எல்லாம் சரிதான். ஆனால், சுலபத்தில் கோபித்துக்கொண்டுவிடுவார்கள். கொல்கத்தாவில் ஒரு பெங்காலி நண்பருடன் பார்ட்னராக பிரிட்ஜ் ஆடிக்கொண்டு இருக்கும்போது, நாலு ஸ்பேடை டபிள் பண்ணி ஆயிரத்து இருநூறு பாயின்ட் கொடுத்துவிட்டேன் என்று, என் மேல் பெஞ்சு நாற்காலியை வீசினார். அதனால் இந்த பெங்காலி தமிழ் நட்பு, நயாகரா வரை தாங்குமா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. மேலும் அவர்கள் இரண்டு பேருக்குள்ளேயே உறவு அவ்வளவு பேப்பரில் போடும்படியாக இல்லை. சிநேகிதம் மெல்லிய கண்ணாடி போலிருந்தது. பிஸ்வாஸ் எதையாவது சொன்னால் அதற்கு நேர்மாறாக சின்ஹா சொல்ல, முணுக்கென்று சண்டை வந்துவிடும். சீ! நீ ஒரு மனுஷனா என்கிற தொனியிலே பெங்காலியில் ‘கீ!’ ‘கீ!’ என்று மூக்குக்கு மூக்கு தொட்டுக்கொண்டு எதிர்ப் பேச்சு துவங்கிவிடும்.

இருந்தும் இரண்டு பேரும் வலுக்கட்டாயமாக எங்கள் தோழமையை நாட, அவர்களுடன் சேர்ந்துகொண்டோம். ப்ளேனில் நாலு பேரும் வரிசையாக உட்கார்ந்துகொண்டோம். என் மனைவியிடம் சின்ஹா, ‘என்ன என்ன வாங்கினாய்’ என்று விசாரிக்க, நான் எழுத்தாளன் என்றதும் ‘சுனில் கங்குலியைத் தெரியுமோ?’ என்று பிஸ்வாஸ் கேட்க, ‘நான் தெரியாது’ என்று சொல்ல, நீ என்ன எழுத்தாளன் என்கிற மாதிரி பார்த்தார். பத்து நிமிஷத்துக்குப் பேசவில்லை. இவர்களிடமிருந்து பஃபலோவில் இறங்கின மாத்திரம் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் வந்துவிட்டது.


இறங்கினவுடன், ‘வா’ என்று மனைவியைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பாகேஜ் செக்குக்கு ஓடிப் போய் சடுதியில் பெட்டி படுக்கைகளை விடுவித்துக்கொண்டு கலர் கலராக நகரத்துக்குப் போகும் பஸ்சுக்குக் காத்திருக்க, என் பின்னாலேயே, ”ரொங்கொரோஜன்!”

”ஓ, ஹலோ மிஸ்டர் பிஸ்வாஸ்! ஐ வாஸ் லுக்கிங் ஃபார் யூ!”

”ஓட்டல் ஏற்பாடு பண்ணிவிட்டேன்.”

”அப்படியா சந்தோஷம்… ஸீ யூ!”

”உங்கள் இருவருக்கும் சேர்த்துத்தான்!”

”வாடகை ஒரு வேளை அதிகம் இருக்கப் போகிறது. நாங்கள்…”

”வாடகை பதினஞ்சு டாலர்!”

பதினைந்து டாலர் என்பது அமெரிக்காவில் ரொம்ப சீப். ”ஊருக்கு வெளியே இருக்குமோ என்னவோ?”

”சேச்சே! நயாகராவிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிறதாம்!”

”சன்னலைத் திறந்தால் நயாகரா தெரியுமாம்” என்றார் சின்ஹா. என்னால் நம்ப முடியவில்லை.

”ஓட்டல் பேர் என்ன?”

கார்டைக் காட்டினான். ”இந்த பஸ் போகிற வழியில் இறக்கிவிடுமாம். டிரைவர்தான் சொன்னான். அமெரிக்காவில் கொஞ்சம் தீர விசாரித்தால் செலவு இல்லாத இடம் கிடைக்கும்.”

நான் என் மனைவியைப் பார்க்க அவள், ”அங்கேயே போகலாம்” என்றாள்.

”வாருங்கள். எதற்கு முப்பது டாலரும் நாற்பது டாலரும் கொடுக்க வேண்டும்?” என்றார் பிஸ்வாஸ். பஸ்ஸில் ஏறினோம். பிஸ்வாஸ், சின்ஹா, நான், மனைவி என்ற நாலு பேரும் இ.பிரியாத நண்பர்கள் போல உட்கார்ந்துகொள்ள, ‘பஸ் டிக்கெட் நான்தான் வாங்குவேன், நான்தான் வாங்குவேன்’ என்று சண்டை போட்டு டிக்கெட் ஐந்து டாலர் என்று தெரிந்ததும், ‘ஓட்டல் போய் செட்டில் பண்ணிடலாம்” என்றார்கள்.


பஃபலோ நகரம் பிழைப்பதே நயாகராவுக்கு வரும் டூரிஸ்ட்டு களால்தான். எங்கு திரும்பினாலும் நயாகராவுக்கு வழி போட்டிருந்தது. பஸ் வெண்ணெய் போலச் செல்ல, தூரத்திலிருந்தே நீர்வீழ்ச்சி சுந்தரமாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. அங்கங்கே ஒளிந்துகொண்டு மறுபடி மறுபடி எட்டிப் பார்த்தது. நயாகரா, கனடா அமெரிக்க எல்லையில் இருப்பது உங்களில் ஜியாக்ரஃபி தெரிந்தவருக்குத் தெரிந்திருக்கும். கனடா சைடிலிருந்து பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கேள்வி. எங்களிடம் கனடியன் விசா இல்லை. அதற்கு மனுப் போடாமலிருந்தது என் மனைவிக்குக் குறை. ஷேக்ஸ்பியரின் ரோஜா போல, ஒரு நீர்வீழ்ச்சியை கனடாவிலிருந்து பார்த்தாலும் அமெரிக்காவிலிருந்து பார்த்தாலும் அது நீர்வீழ்ச்சிதான் என்பது என் சித்தாந்தம். பிஸ்வாஸைக் கேட்டேன், ”கனடியன் விசா இருக்கிறதா?”

”இல்லை. ஆனால், தற்காலிகமாக விசா தருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.”

”நான் கேள்விப்பட்டது, அதெல்லாம் கிடையாது. ஒரு வாரம் முந்தி மனுப் போட்டால்தான் கிடைக்கும் என்று.”

”கேட்டுப் பார்க்கலாம்! கொடுக்காமல் போய்விடுகிறார்களா, பார்த்துவிடலாம்.”

பஸ் டிரைவர் சிரித்துக்கொண்டே நால்வரையும் இறக்கிவிட்டு, ”அதோ பார் ஓட்டல்” என்று காட்டிவிட்டு விலகினான்.




http://newspaper.li/static/a5cfc9e0b3215237028ce0de10e3bf35.jpg

பிரமாதமாகத்தான் இருந்தது ஓட்டல் கட்டடம், சொன்னதெல்லாம் சரிதான். நயாகரா நீர்விழ்ச்சி அருகிலேயே இருப்பது தெரிந்தது. என்னால் நம்ப முடியவில்லை. ”பிஸ்வாஸ் நீங்கள் சரியாகக் கேட்டுக்கொண்டீர்களா? தினத்துக்குப் பதினைந்து டாலர் சொன்னானா? மணிக்கு பதினைந்து டாலரா?”

”தினத்துக்குத்தான். நீ வாயேன்” என்றார்.

அந்தப் பளபளப்பான ஓட்டல் கட்டடத்தில் போய் விசாரித்ததில் நாங்கள் தேடிச் சென்ற ந்யூ மெட்ரோ அதில்லை என்றும் அதற்கு அடுத்த கட்டடம் என்றும் தெரிய வந்தது.

”அடுத்த கட்டடமா? கட்டடமில்லையே! காலி மனையல்லவா இருக்கிறது?”

‘உன்னிப்பாகப் பாருங்கள் தெரியும்.”

பார்த்ததில் சின்னதாக ஒரு அமெரிக்கக் குடிசை போல ஒரு கட்டடம் தெரிந்தது. அதன் மூஞ்சியையே மறைக்குமாறு ‘ஓட்டல் மெட்ரோ வேகன்ஸி’ என்று சாக்பீஸில் எழுதியிருந்தது. அருகே சென்று பார்த்ததில் ஒற்றை மாடியுடன் மே ஃபிளவர் தினங்களில் கட்டிய கட்டடம் போல ஒன்று தெரிந்தது. வாயிற் கதவில் மணிப் பொத்தான் இருந்தது. அழுத்தியதில் சப்தம் வரவில்லை. கதவைத் தட்டினதில் லேசாகப் பொடி தூவித் திறந்துகொண்டது. உள்ளே டெலிவிஷன் அருகில் படுத்திருந்த நாய் என்னை ஒற்றைக் கண்ணால் பார்த்தது. இதுதான் ஓனரோ என்ற சந்தேகம் உடனே தீர்ந்தது. சுமார் எண்பது வயசு மதிக்கத்தக்க ஒரு கிழவர் மூக்கைத் தக்காளி நிறத்துக்குத் தேய்த்துக்கொண்டு வந்தார்.


”இங்கே ரூம் இருப்பதாக..?”

‘ட்வென்டி டாலர்ஸ்!”

”பஸ் டிரைவர் பதினைந்து என்று சொன்னான்.”

”ஓ.கே, ஃபிஃப்டீன்டாலர்ஸ்!” என்று ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து விரைவில் பதினைந்து பதினைந்து டாலருக்கு இரண்டு ரசீது எழுதி, ”ஐ டேக் அட்வான்ஸ்” என்றார்.

”ரூமைப் பர்க்கலாமா” என்றார் சின்ஹா.

”குட் ரூம், பே ஃபிஃப்டீன் டாலர்ஸ்.”

அட்வான்ஸாகப் பதினைந்து டாலர் கொடுத்துவிட்டு, எங்கள் இருவருக்கும் கொடுக்கப்பட்ட அறையை நோக்கிப் போனோம். சாவியைத் துவாரத்தில் தொடுவதற்கு முன்னமேயே கதவு திறந்துகொண்டது. உள்ளே ரூமை ஏழில் எட்டு பாகம் ஒரு கட்டில் அடைத்திருந்தது. குட்டியாக மேசை போட்டு, அதன் மேல் மேசை விளக்கு வைத்திருந்தது. உத்தரத்தில் இருந்த விளக்கைப் போடுவதற்கு ஸ்விட்சுடன் ஒரு கயிறு கட்டியிருந்தது. அதை இழுத்துப் பார்த்ததில், மாடியில் தடால் என்று உருண்ட சப்தம் கேட்டது.
பிஸ்வாஸ் என் அறையை எட்டிப் பார்த்து, ”உன் அறையும் இப்படித்தானா? ரொம்ப மோசம், இதற்குப் போய் பதினைந்து டாலரா? வழிப்பறி. கிழவனிடம் போய்ப் பணத்தைக் கேட்டு வேறு ஓட்டலுக்குப் போகலாம்” என்றார்.

”பாத்ரூம் எங்கே இருக்கிறது?” என்று என் மனைவி கேட்க, அந்த ஓட்டலில் தங்குபவர்கள் அத்தனை பேருக்கும், கிழவனுக்கும், நாய்க்கும் சேர்த்து ஒரே ஒரு பாத்ரூம்தான் என்பது தெரிய வந்தத
ு.
”வேண்டாம். வேறு இடத்துக்குப் போய்விடலாம்” என்றான் பிஸ்வாஸ்.

”நீதானே இங்கே அழைத்து வந்தாய்” என்றார் சின்ஹா.

”நீதான் பதினைந்து டாலரில் அறை வேண்டும் என்றாய்” என்றார் பிஸ். ‘நீதான் நீதான்…’ என்று இரண்டு பேரும் அடிதடிக்கு வந்துவிட்டார்கள். இடம் போதவில்லை.

”இது என்ன சோப்பா, மெழுகுவத்தியா?” என்று டேபிள் விளக்கை சின்ஹா போட்டுப் பார்க்க, ‘ஊய்’ என்று ஷாக் அடித்து விளக்கிலிருந்து பிசுபிசு என்று புகை வந்தது. விளக்கின் அடியில் ”டோண்ட் ஸ்விட்ச் ஆன்” என்று எழுதியிருந்தது. ”அமெரிக்காவில்கூட இந்த மாதிரி ஓட்டல் இருக்கிறது ஆச்சர்யம்தான்” என்றேன்.

”எங்கே அந்தக் கிழவன்?” என்று கீழே போய் விசாரிக்கப் போன பிஸ்வாஸ் உடனே திரும்பிவிட்டார். ”நாய் துரத்தறது” என்றார்.

”பதினைந்து டாலர் கொடுத்தாகிவிட்டது. ராத்திரி படுக்க மட்டும்தான் இந்த இடம்! என்ன போச்சு? முகம் கழுவிக்கொண்டு வாருங்கள். நயாகரா போய்ப் பார்க்கலாம்” என்றேன்.

நாய் போனதும் சின்ஹா பாத்ரூம் போய்விட்டார். கால்மணி கழித்து பிஸ்வாஸ் பாத்ரூம் வாசலில் காத்திருப்பது தெரிந்தது. ”இந்த ஆள் எப்போதும் இப்படித்தான். பாத்ரூம் போனால் ஒரு மணி நேரம்!” என்றார்.



http://image.shutterstock.com/display_pic_with_logo/205801/205801,1215720645,5/stock-photo-edge-of-niagara-falls-in-winter-14743486.jpg

”சேச்சே ! இவ்வளவு மோசம் என்று தெரியாமல் போய்விட்டது. ராஸ்கல் அந்த டிரைவரை உதைக்க வேண்டும். சின்ஹா! என்ன தூங்கிவிட்டாயா!”
அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று என் மனைவியை அவசரப்படுத்தி, வேறு ரூட்டாக நடந்து போய் நயாகரா பார்க்கச் சென்றோம். அங்கே நயாகராவின் அடிமடிக்கே அழைத்துப் போகும் படகுக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு க்யூவில் போய் நின்றால், ”ரொங்கோ ரோஜன்” என்று கேட்க பின்னால் சின்ஹாவும் பிஸ்வாசும்!


நயாகராவில் எத்தனை காலன் ஒரு நிமிஷத்துக்கு ஊற்றுகிறது. எத்தனை மெகா வாட் சக்தி பண்ணுகிறார்கள், எத்தனை அழகு என்றெல்லாம் விவரம் கொடுத்து உங்களை அறுக்க விரும்பவில்லை. நயாகராவில் எனக்குப் பிடித்தது படகு அதன் அடியில் செல்லும்போது ஆரவாரமும் நம்மேல் படரும் குளிர் மழையும்தான். இந்தக் குளிர் மழையில் சின்ஹாவை பிஸ்வாசும், பிஸ்ஸை சின்னும் படம் பிடிக்க, காமிரா லென்ஸ் முழுவதும் நீர் கோத்துக்கொண்டுவிட, ‘சொன்னேன். கேட்டாயா?’ என்று நயாகராவைவிடச் சத்தமாக சண்டை போட்டுக்கொண்டே வந்தார்கள். படகைவிட்டு மேலே வந்து நாங்கள் கழன்றுகொள்ள விருப்பப்பட, ”வா கனடா பகுதிக்கு நடந்து போகலாம்” என்றார் பிஸ்வாஸ். ”வேண்டாம் விசா கொடுக்க மாட்டார்கள்” என்று சொல்ல, ”யார் சொன்னது? பாஸ்போர்ட்டுகளை சரண்டர் பண்ணிவிட்டால் ஒரு மணி நேரத்துக்கு அனுமதி கொடுப்பார்கள். அங்கேயிருந்து பார்ப்பதுதான் உத்தமம்” என்றார்.


நிஜமாகவே இங்கிருந்து தெரிந்த கனடியப் பகுதி கலகலப்பாகத்தான் இருந்தது. வ்யூவிங் டவர், வண்ண வண்ண விளக்குகள், ஜிலுஜிலுப்பு எல்லாமாக ஆசை காட்டியது. போய்த்தான் பார்க்கலாமே என்று பாலத்தைக் கடந்து கனடியப் பகுதிக்குச் சென்றோம். வாட்டசாட்டமாக ஒரு போலீஸ்காரி, ”லெட் மி ஸீ யுவர் பாஸ்போர்ட்ஸ்” என்றாள். ஆளுக்கு ஐந்து சென்ட் வாங்கிக்கொண்டாள். ”இங்கே நில்லுங்கள் பிஸ்வாஸ்” என்று பவ்யமாகச் சொன்னாள். ‘பார்த்தாயா!’ என்று என்னைப் பார்த்து கண்ணடித்தார். காத்திருந்தோம். அந்தப் பெண் மற்றொரு அதிகாரியைக் கொண்டுவந்து எங்களைச் சுட்டிக்காட்டினாள். பற்பல அமெரிக்கர்கள் உற்சாகமாக லைனைக் கடந்து சென்றுகொண்டிருக்க, எங்கள் நாலு பேரை மட்டும் தண்டையார்பேட்டை ஐ.டி. ஆஸ்பத்திரியில் போல் ஒதுக்கி வைத்திருந்தார்கள். மற்றொரு வெள்ளைகார ஆபீஸர் வந்து இடது கையால் எங்கள் பெயர்களை ஒரு ஃபாரத்தில் எழுதி நிரப்பி, ”விசா இல்லை. அது இல்லாமல் கனடிய மண்ணில் அனுமதி கிடையாது. திரும்ப அமெரிக்கா செல்லுங்கள்” என்றார்.

சின்ஹாவுக்குக் கோபம். ”எதற்காக எங்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்ல முடியுமா?”

”விசா இல்லை. அனுமதி இல்லை.”

”நாங்கள் இந்தியர்கள் என்பதால்தானே இந்த மாதிரி நடத்துகிறீர்கள்?”

”அதெல்லாம் இல்லை.”

”அமெரிக்கர்களை மட்டும் அனுமதிக்கிறீர்கள்?”

”அவர்களிடம் விசா இருக்கிறது.”

”எப்படித் தெரியும்?”

”எங்களுக்குத் தெரியும். பாருங்கள். அதிகம் வாதாடினால் உங்களைச் சிறைக்கு அனுப்புவோம்” என்று காகிதங்களை எங்களிடம் கொடுத்தார்.

”இந்தக் காகிதங்களை நயாகராவிலேயே போடுகிறோம்” என்று பிஸ்வாஸ் சிரித்தார்.

”அது உங்கள் இஷ்டம்! இந்தக் காகிதம் இல்லையென்றால் மறுபடி அமெரிக்காவில் அனுமதி கிடைக்காது. உங்கள் வாழ்நாளை இந்தப் பாலத்தின் மத்தியிலேயே கழிக்க விருப்பமென்றால் சரி.”
நான் அவசரமாகக் காகிதங்களை வாங்கி வைத்துக்கொண்டேன்.

சின்ஹா திரும்பும் வழியெல்லாம், ”இந்தியர்கள் என்றால் எவ்வளவு மட்டமாக ட்ரீட் பண்ணுகிறார்கள்” என்று அரற்றிக் கொண்டே வந்தார்.

”நாம் அந்த மாதிரி நடந்துகொள்கிறோம்” என்றார் பிஸ்வாஸ்.

”நாம் என்ன தப்பாக நடந்துகொண்டுவிட்டோம்?”

”இல்லீகல் இமிக்ரேஷன்.”

”அதைப் பற்றி உனக்கென்ன தெரியும்?”

”உனக்குத்தான் தெரியுமோ?”

இருவரும் கனடிய அமெரிக்க எல்லைக்கோட்டில் நின்று கொண்டு இரைச்சலாகச் சண்டை போட்டுக்கொண்டார்கள். கம்யூனிஸம், மார்க்ஸிஸம், விவேகானந்தா… என்று என்னென்னவோ வார்த்தைகள் எல்லாம் கேட்க, நான் மனைவியை அழைத்துக்கொண்டு விரைவாக நடக்க, சட்டென்று பிஸ்வாஸ், ”ரொங்கொரோஜன் எங்கே போகிறாய்?” என்று காலரைப் பிடித்து நிறுத்தினார். விதியே என்று நடந்து அமெரிக்கப் பகுதிக்கு வந்தோம்.

சின்ஹா தாகமாக இருக்கிறது என்று கோக்கோ கோலா மெஷினில் ஒரு ஐம்பது சென்ட் நாணயத்தைப் போட்டார். அமெரிக்காவில் இருந்த ஒரே ஒரு பழுதடைந்த கொக்கோ கோலா மெஷின் அது. காசை வாங்கிக்கொண்டு சும்மா இருந்தது.

சின்ஹா அதை அடித்து உதைத்து பற்பல சித்ரவதைகள் செய்து பார்த்தார். ஹ§ம்! போட்ட காசையோ, கோக்கோ கோலாவையோ தர மாட்டேன் என்று சொல்லிவிட்டது.

”அமெரிக்கர்கள் இத்தனை விஞ்ஞான முன்னேற்றம் அடைந்து என்ன பிரயோசனம்? ஒரு கோக்கோ கோலா மிஷினைச் சரியாக வைத்துக்கொள்ளத் தெரியவில்லையே!”

”உனக்கு ஒரு கோக்கோ கோலா கிடைக்கவில்லை என்றால் மேற்கத்திய நாகரிகத்தைச் சாடுவது என்ன நியாயம்?”

”இதெல்லாம் வைத்து என்ன பிரயோசனம்? ஒழுங்காக வைக்க வேண்டும், இல்லை மிஷின் வைக்கவே கூடாது.”

”இந்த ஒரு மிஷின் வேலை செய்யவில்லை. எத்தனை மிஷின் வேலை செய்திருக்கிறது அதாவது எத்தனை கோக் சாப்பிட்டிருக்கிறோம்.”

”தட்ஸ் நாட் தி பாயின்ட்.”

”தட் இஸ் தி பாயின்ட்!”

”நீ ஒரு பூர்ஷ்வா… அடிவருடி!”

”நீ ஒரு சிவப்பு எலி…”

யார் சிவப்பு எலியோ, இரண்டு பேருக்கும் முகம் சிவந்து போனதென்னவோ வாஸ்தவம்.

கம்யூனிஸம் காபிடலிஸம் என்று குடுமியைப் பிடித்துக் கொண்டிருக்கும் சமயம் நான் என் மனைவியின் கையைப் பிடித்து இழுத்து, ”வா ஓடலாம்!” என்றேன்.

அதிகாலை எழுந்து சொல்லாமல்கொள்ளாமல் பஸ் ஏறி திரும்ப ப்ளேன் பிடித்து, உட்கார்ந்ததும் பெருமூச்சுவிட்டேன்.

”அப்பாடா ஒழிஞ்சாங்க.”

”ரொங்கோரோஜன்!” என்று பின் ஸீட்டில் ஒரு குரல் கேட்டது!


http://www.niagarafallslive.com/images/HorseshoefromSkylon.jpg

Saturday, July 21, 2012

ஓர் உத்தம தினம்- சுஜாதா - லவ் & சஸ்பென்ஸ் - சிறுகதை

ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயே புல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது. களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்று கவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது. பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள் சிற்றடி வைத்து இறங்கி, அவளருகில் வந்து அவள் மார்பைச் சுதந்திரமாகத் திறந்துகொண்டு, ஏங்கி ஏங்கிப் பால் குடிக்க… அதன் சின்ன விரல்கள் அவள் முலையை நெருட… உள்ளுக்குள் திகட்டிய சந்தோஷத்தைக் கலைக்க விருப்பமின்றி இன்னும் இன்னும் என்று ஒரு விளிம்பைத் தொட்டு ஒரு கணத்தில் சகலமும் வெடித்துப் புலனாகி விழித்தபோது, ”நீங்களா?” என்றாள்.


சத்தீஷ் திருப்திப்பட்ட நிலையில் மல்லாந்து படுத்துக்கொண்டு புன்னகையுடன் தூக்கத்தின் இரண்டாம் பாகத்தைத் துவங்கினான். கஸ்தூரி தன் உடைகளை அவசரமாகச் சரிசெய்துகொண்டு எழுந்து, ஜன்னலைத் திறந்து சில்லென்ற காற்றிலும் சூரிய வெளிச்சத்திலும் முகத்தை அலம்பிக்கொண்டு திரும்பி நிதானமாகக் கணவனைப் பார்த்தாள்.


என் கனவில் புகுந்து என் கனவைக் கலைக்காமல் எனக்குள் நிரம்பிய என் கணவனே!


”எழுந்திருங்க” என்று தலையைக் கலைத்தாள். அவன் விழித்து அவளைப் பரிச்சயமே இல்லாத புதியவளைப் போலப் பார்த்துப் புன்னகைத்து, ”ஹேப்பி பர்த்டே தில்லு! ம்ம்ம்… உன்னை வாசனை பார்க்கணும், வா!” என்று கையை விரித்து விரல்களால் அழைத்தான்.


”ம்ஹ¨ம். நான் மாட்டேம்பா. எனக்கு எத்தனையோ வேலை இருக்கு.”


”ஒரு தேங்க்ஸ் முத்தம்கூடக் கிடையாதா?”

”கிடையாது.”

டெலிபோன் ஒலிக்க, அதைப் படுக்கையில் இருந்தே எடுத்து ஆன்டெனாவை நீட்டிக்கொண்டு, ”ஹலோ?” என்று அதட்டினான். சற்று நேரத்தில், ”உனக்குத்தான்” என்று கொடுத்தான்.


”என்ன எழுந்துட்டியா, ஹேப்பி பர்த்டே” மஞ்சுவின் குரலை டெலிபோன்கூட அசைக்க முடியாது.


”தேங்க்ஸ் மஞ்சு.”

”உனக்கு என்ன வயசுன்னு கேக்கலை. வயசு முக்கியமா என்ன? இந்த வருஷமாவது பெத்துண்டுடு. ரொம்பத் தள்ளிப் போடாதே.”


”மஞ்சு, இன்னிக்குக் காலையில என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு கனா கண்டேன். அதை உனக்கு விரிவா சொல்லியே ஆகணும். எப்ப வரே?”


”எப்ப வேணும்னாலும் வரேன். தில்லுவோட பர்த்டேக்கு வராம இருப்பேனா? உன் ஹஸ்பண்ட் என்ன பிளான் வெச்சிருக்கார்னு கேட்டுக்கோ.”

”அவருக்கென்ன… வழக்கம்போல் ஆபீஸ் போவார்.”

சத்தீஷ் படுக்கையிலிருந்தே, ”இல்லை… இல்லை… நாமிருவரும் வெளியே போறோம்” என்று ஜாடை காட்டினான்.

”மஞ்சு, அவர் எங்கேயோ வெளியே போகப் பிளான் வெச்சிருக்கார்.”

”ஆல் தி பெஸ்ட் தில்லு. போன் பண்ணிட்டு மத்யானம், சாயங்காலம், ராத்திரி எப்பவாவது ஒரு சமயம் வந்து உன் கன்னத்தில் முத்தம் கொடுத்துட்டுத்தான் போவேன். பை தில்லு! மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்!”

டெலிபோனை வைத்தபோது அது ‘டிரிரிக்’ என்றது பறவைபோல.

”மஞ்சுதானே! ஒழிஞ்சுதா?”

”சே! இன்னிக்கு யாரையும் திட்டக் கூடாது. அப்படிப்பட்ட நாள் இன்னிக்கு.”

அவளைப் பிடித்து இழுத்துக் கன்னத்தை உரசிக் கூந்தலுக்குள் கை செலுத்தி நிமிர்த்தி, ”ம், என்ன கனா? சொல்லு!” என்றான்.

”கையெடுங்க. சொல்றேன்.”

”எடுத்தாச்சு.”

”அந்தக் கை.”

”அதுபாட்டுக்கு அது. சொல்லு, என்ன கனா?”

”ஜன்னல் வழியா கிருஷ்ண விக்கிரகம் மாதிரி… ஐயோ, என்ன விஷமம்! நான் சொல்லமாட்டேன்.”

”சரி, இப்ப?” இடுப்பை வளைத்து அவளைத் தன்னிடம் இழுத்துக்கொண்டு முகத்துக்கு முகம் ஒரு இன்ச் பண்ணிக்கொண்டு ”ம், சொல்லு” என்று இழுத்தான்.

”ஜன்னல் வழியா தங்கக் கலர் குழந்தை வந்து அப்படியே எம் மேல படிஞ்சு உடம்பெல்லாம் முலாம் பூசினாப்ல குளுகுளுன்னு ஊர்றது.”

”மை டியர் தில்லு! அது குழந்தை இல்லை நானு! வி ஹேடு செக்ஸ்.”

”ச்சே! உங்களைப் போல எல்லாத்தையும் போட்டு உடைக்கிற ஆசாமி கிடையாது.”

இடுப்பின் உடைகளைத் தளர்த்தத் துவங்கவே, விஷயம் கவலைக்கிடமாகும் என்று கஸ்தூரி நழுவி எழுந்து பாத்ரூமுக்குச் சென்றாள்.


பல் தேய்த்து முகத்தில் தண்ணீர் தெளித்துக்கொள்ளும்போதும் உற்சாகம் மிச்சமிருந்தது. ஜன்னலைத் திறக்க வானம் மேகங்களற்று ‘விம்’ போட்டு அலம்பினாற் போல இருந்தது. கொன்றை மரத்தில் அந்த மாம்பழக் குருவியைப் பார்த்தாள். அவள் பிறந்த தினத்துக்கென்றே தனிப்பட்ட விஜயம் போல் தங்கத் தலையை வைத்துக்கொண்டு, ‘ச்சீயோ, ச்சீயோ’ என்று தேவதூதனைப் போலக் கூப்பிட வந்திருக்கிறது.

நடுவே, தெளிவாக அந்தக் குருவி அவளைத் ‘தில்லு’ என்று பெயர் சொல்லி அழைத்ததை கஸ்தூரி எல்லா கோயில்களிலும் சத்தியம் பண்ணுவாள். நிச்சயம் இன்றைக்குப் பிறந்த தினம்தான். எனக்கு மட்டுமில்லை. எனக்குள் உத்தரவாதமாகப் புகுந்திருக்கும் அதற்கும்தான்.

சத்தீசுக்குக் காபி போட்டுக்கொண்டு போர்வையை விலக்கி, அவன் தலையைக் கலைத்து, ”எழுந்திருங்க. ஆபீஸ் போக வேண்டாம்?” என்று கேட்டாள்.

”இன்னிக்கு ஆபீஸ் லீவு! உனக்குப் பிறந்த நாள் இல்லையா?”

”நாள் முழுக்க வீட்லயா இருக்கப் போறீங்க?”

”வீட்ல இருக்கலாம். வெளியவும் போகலாம். அல்லது ஏ.ஸி. போட்டுட்டுக் கட்டிண்டு படுத்துரலாம். இன்னிக்கு ராணி நீதான்.”

”கோயிலுக்குப் போயாகணும்.”

”ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு எம்.டி.ஆர். போகலாமா?”

”முதல்ல கோயில். அப்புறம்தான் பாக்கியெல்லாம். ஜெயநகர் போய் அம்மாவையும் சரண்யாவையும் பார்த்துட்டு வந்தே ஆகணும்.”

”சாயங்கால ஃப்ளைட்ல பம்பாய் போறதுக்குள்ளே முடிச்சிரணும்.”

”பாம்பே போறீங்களா? சொல்லவே இல்லையே?”

”போர்டு மீட்டிங். நாளன்னிக்கு மார்னிங் ஃப்ளைட்ல திரும்பி வந்துடுவேன்.”

புதுசாக கார், லாரி வாங்கினவர்கள் எல்லாம் பள்ளத்து பிள்ளையாருக்கு முன் வரிசையாகத் தத்தம் வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். மல்லிகையும், அகர்பத்தியும், பட்டுப் புடவையும், இளங் காலையும், விபூதியும் கலந்து ஆரோக்கியமாக வாசனை அடித்தது. சத்தீஷ் பாசாங்கோடு மனைவியைக் கவனித்துக்கொண்டு இருந்தான். கஸ்தூரி வேண்டிக் கொண்டாள்.

”கடவுளே! ஏன் இத்தனை உத்தமமான தினம்?”

”இந்தாம்மா புஷ்பம்” என்று ஒரு சிறுவன் பளிச்சென்று திருநீறும் இந்த வயசுக்கு வேஷ்டியுமாக வந்து கொடுத்துச் சிரித்தான்.

பிளாட்ஃபாரத்தில் நடக்கையில், ”எல்லாமே நல்லபடியாக இருக்கு. காலங்கார்த்தால அந்தக் கனா, அந்தக் குருவி என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டது, இந்த அழகான பையன்….” என்று கூறினாள்.

”த பாரு, இன்னி முழுக்கவே இப்படித்தான். சொல்லிண்டிருக்கப் போறியா? மஞ்சள், குருவி, கிருஷ்ண விக்கிரகம், விநாயகர் பிரத்தியட்சம், இப்படி…?”

”நிச்சயம் எனக்கு இன்னிக்கு என்னமோ ஆயிருக்கு. உடம்பு பூரா பதர்றது.”

மாருதியில் ஏறிக்கொள்ள, ”தில்லு, உலகத்திலேயே ரொம்ப சுலபமான விஷயம் எது தெரியுமா?” என்று கேட்டான்.

”தெரியும், சொல்ல வேண்டாம்.”

”யு வான்ட் தி சைல்டு இல்லையா? வேணும்னா சந்தேகத்துக்கு சாம்பாரா வீட்டுக்குப் போய் இன்னுமொரு முறை ஊர்ஜிதம் பண்ணிரலாமா?”

”சே, புத்தி போறதே!”

ஜெயநகரில் மணிப் பொத்தானை அழுத்தியபோது சத்தீஷ், ”இதோ பாரு! அரை மணி, அதுக்கு மேல் அரட்டை கிடையாது” என்று கிசுகிசுத்தான். கதவு திறக்க, ”ஹலோ, கர்னல்!”

அப்பாவைத் தாரிணியின் குழந்தைகள் உள்பட எல்லோரும் ‘கர்னல்’ என்றுதான் கூப்பிடுவார்கள்.


கஸ்தூரியைப் பார்த்ததும் கட்டிக்கொண்டு உச்சியில் முத்தம் கொடுத்து, ”ஓ மை ஸ்வீட் தில்லு, ஹேப்பி பர்த்டே” 


”தேங்க்யூ கர்னல்.”


”இங்கிலீஷ் தேதிப்படி லெவன்த் செப்டம்பர், இன்னிக்கு உனக்கு 25. நீ பிறந்தப்ப விஜயவாடா டூர் போயிருந்தேன் கிருஷ்ணா ரிவர்ல வெள்ளம் அதிகமாயி ரயில் எல்லாம் குளோஸ் பண்ணிட்டான். டக்கோடா ஃப்ளைட்டைப் பிடிச்சுக் காலங்கார்த்தால வந்துட்டேன். தில்லு டியர்! பெரி யாழ்வார் பாசுரம் சொல்லிண் டிருக்கியா?”

”தவறாம! தினம் பெரியாழ்வாருக்காகத்தானே நான் எழுந்திருக்கிறேன்” என்றான் சத்தீஷ்.

”தட்ஸ் மை கேர்ள். சின்ன வயசிலேயே நாலாயிரமும் ஒப்பிப்பா. மாப்பிள்ளை, இவ முழுப் பேர் கஸ்தூரி திலக்கா. நாங்க எல்லோரும் தில்லுன்னுதான் கூப்பிடுவோம். கஸ்தூரின்னு பேர் எப்படி வந்ததுன்னு தெரியுமா?”

”கர்னல் இதை என்கிட்டேயே முப்பது தடவை சொல்லியாச்சு” என்றான் சத்தீஷ்.

கஸ்தூரி, கணவனை முறைக்க… அவன் கடிகாரத்தைச் சுட்டிக் காட்டினான். ”வர்றோம் கர்னல்” என்றான்.

”சேச்சே, லஞ்ச் சாப்பிட்டுட்டுதான் போறீங்க!”

”தேர் கோஸ் மை எம்.டி.ஆர்.”

”அம்மா, நீங்க சும்மாருங்கோ. அவா வேற ஏதாவது பிளான் போட்டு வெச்சிருப்பா” என்று இடைமறித்தாள்.

அம்மா தனியாகக் கூப்பிட்டு, ”இன்னும் குளிக்கிறியா?” என்றாள்.

”ஆமாம்மா.”

”எல்லாம் போறும். அப்புறம் நாளாயிருந்துன்னா பிற்காலத்தில் வளர்க்கிறது கஷ்டம். இந்தப் புரட்டாசிக்கு இருபத்தஞ்சு முடிஞ்சுர்றது உனக்கு.”

அப்பா வந்து, ”தில்லு, மாப்பிள்ளை டூர் போறாராமே. இங்கே வந்து இரேன்?” என்றார்.

”இல்லைப்பா, ராத்திரி துணைக்கு வேலைக்காரப் பொண்ணு வரும். செக்யூரிட்டி இருக்கு. சௌக்கிதார் இருக்கான்.”

”எங்காத்திலெல்லாம் வந்து படுத்துப்பியா, ரிச் கேர்ள்.”

”அப்படி இல்லைப்பா. இவர் இல்லாதபோதுதான் வீட்டை ஒழிக்க முடியும்.” முக்கிய காரணம் அதில்லை. தனியாக வீடியோ பார்க்க வேண்டும் என்று தில்லு தீர்மானித்துவிட்டாள்.

ரேஸ் கோர்ஸ் வழியாக ஆபீசுக்கு வந்து பதினைந்து நிமிஷம் என்று சொல்லிவிட்டுச் சென்றான். பேண்ட் வாத்தியமும் பொய்க்கால் குதிரையுமாக கணேசா ஊர்வலம் ஏரியில் முங்குவதற்காக டெம்போவில் சென்றுகொண்டு இருக்க, பொய்க்கால் குதிரைக்காரன் கூலிங் கிளாசும், பொய்த் தாடியும், ஜிகினா ஜிப்பாவுமாக அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போனான்.

சத்தீஷ் திரும்பி வந்து, ”முக்கியமா மூணு ஃபைல் பார்த்துட்டேன். ஏர் டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிடுத்து. சாயங்காலம் வரை நாம ஃப்ரீதான். எங்கே போகணும் சொல்லு?” என்றான்.

”எங்கேயாவது!”

”சரி லெட்ஸ் கோ டு ‘எங்கேயாவது’….”

ஸோஃபியா கான்வென்ட்டின் ஆரோக்கியமான ‘ஹன்’களும் கூட்டம் கூட்டமாகச் சட்டை அணிந்த ஆயிரம் உற்சாகப் பெண்களும்… நீச்சல் குளத்தில் உன்னதமாகக் குதித்த ஒரே இளைஞன். மரத்தடியில் டிராஃபிக் சந்தடியில் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்த உழைப்பாளி. கீரை விற்றுக்கொண்டு இருந்த கறுப்புப் பெண்ணின் அருகில் சாக்கின் மேல் தூங்கிக்கொண்டிருந்த தேவதைக் குழந்தையின் அரைஞானில் முடிந்திருந்த தாயத்து. இந்த சுசுகியில் ஒரே மாதிரி ஜீன்ஸ் அணிந்து பையனும் பெண்ணும் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள் என்னைப் போல…. என்னைப் போல.

ஏன் இந்தத் திகட்டும் சந்தோஷம்? விண்ட்சர் மேனரில் ஐஸ்க்ரீம் புடிங் வகைகளிலேயே பத்து தினுசு சாப்பிட்டாள். பெங்காலி போலிருந்த இளைஞன் சின்தஸைஸர் டிரம் அடிக்க… மைக்கை முழுங்குகிற மாதிரி வைத்துக்கொண்டு ஸ்டீவி வாண்டர் பாடினான்.

மிக அழகான ஒரு வெயிட்டர் இளைஞன் அவளருகில் பூச்செண்டு கொண்டுவந்து, ”மேடம்! ஹேப்பி பர்த்டே” என்றான். ஆச்சர்யப்பட்டு சத்தீஷைப் பார்க்க, அவன் மனோகரமாகக் கண்ணடித்தான். அந்த மலர்க் கொத்து செலஃபன் தயவில் புதுசு கலையாமல் அவளை அணைத்துக்கொண்டது. பக்கத்து டேபிள் குண்டுகுழந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. இவள் ‘வா’ என்று அழைத்ததும் ஓடி வந்துவிட்டது.

”பிங்க்கு பேட்டே இதர் ஆவோ.”

‘லேஸ் மேக்கர்’ போக வேண்டாம் என்று கப்பன் பார்க்கில் கொஞ்ச நேரம் லைப்ரரியில் உலவிவிட்டு, ஒரு கவிதைத் தொகுப்புடன் வெளியே வந்து, மண்டபத்தின் அருகில் மர அடர்த்தியின் கரும் பச்சை நிழலில் ஒரு பெஞ்ச் காலியாக இருக்க, அதில் அவள் உட்கார்ந்துகொள்ள அவள் மடி மேல் தலைவைத்து,

”ஜென்னி கிஸ்ட் மீ படிக்கட்டுமா?”

”படிங்க.”

”ஜென்னி என்னை முத்தமிட்டாள் சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து வந்து! காலம் என்னும் கள்ளனே! உன் பட்டியலில் எத்தனையோ இனிய விஷயங்களைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறாயே, இதையும் சேர்த்துக்கொள். நான் களைத்திருக்கிறேன் என்று சொல். நான் சோகமாக இருக்கிறேன் என்று சொல். ஏழை என்று சொல். உடல் நலமில்லை என்று சொல். வயசாகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல். ஆனால், ஜென்னி என்னை முத்தமிட்டாள் என்பதையும் சொல்.”

பிற்பகலின் அமைதியில் தூரத்தில் நகரத்தின் சந்தடி கேட்க மடி மேல் கணவனை அமைதியாக அழுத்திக்கொண்டு அவன் முகத்தையே ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள். நிச்சயம் இன்றைக்குத்தான் நிகழ்ந்திருக்கிறது!

இரண்டு நாளுக்காக மெத்தென்ற பெட்டியில் அவன் சூட், வெள்ளை வெளேர் சட்டைகள், அவன் மாத்திரைகள், ஷேவிங் சாதனங்கள், ஆஃப்டர் ஷேவ் லோஷன், தங்க விளிம்பிட்ட சீப்பு, ஆண் பிள்ளை கர்ச்சீப், அவன் ஃபைல்கள் எல்லாவற்றையும் அடுக்கிவைக்கையில், குறும்பாகத் தன்னுடைய ‘ப்ரா’ ஒன்றையும் இடையில் செருகி மூடினாள்.

பம்பாய் ஃப்ளைட் எட்டரைக்குத்தான் கிளம்பும் என்றார்கள். பேப்பர் கப்பில் சத்தீசுடன் காபி சாப்பிட்டுவிட்டு இருவரும் புத்தகம் பார்த்தார்கள். ஏர்போர்ட் ஜனங்களை வேடிக்கை பார்த்தார்கள். குல்லாயும், தொப்பியும், குங்குமமும், இடது பக்கம் ஸாரியும், அரசியலும், சூட்டும் கோட்டும், வெற்றியும், சவரம் செய்த பச்சை முகங்களும், நாசூக்கான அழுகைகளும்…

”நான் களைத்திருக்கிறேன் என்று சொல், ஏழை என்று சொல், உடல் நலமில்லை என்று சொல், வயசாகிக்கொண்டிருக்கிறேன் என்று சொல், சத்தீஷ் என்னை முத்தமிட்டான் என்பதையும் சொல்.”

செக்யூரிட்டி கேட்டில் நுழையுமுன் சத்தீஷ் திரும்பிக் காற்றில் ‘கேஸி’ என்று வரைந்துகாட்ட, அதன் அந்தரங்க அர்த்தம் அவள் கன்னங்களில் ரத்தம் பாய, கண்ணாடிக்குப் பின்னாலிருந்து சின்னதாக நாலு விரல் டாட்டா காட்டிவிட்டு மறைந்தான்.

மாருதியை பேஸ்மென்ட்டில் நிறுத்திவிட்டு, கதவைத் தன் சாவியால் திறந்து உள்ளே வந்து உடை மாற்றி, படுக்கையறைக்குச் சென்று, பசியின்றி ஒரு சாண்ட்விச் தயாரித்து, ‘விசிஆரை’ இணைத்து, கல்யாண கேஸட்டை நுழைத்து, ரிமோட் கன்ட்ரோலை எடுத்து, மூன்று தலையணைகள் அமைத்து, விளக்கைத் தணித்துவிட்டு, ‘ப்ளே’ பொத்தானை அழுத்தினாள்.

எதிரே டெலிவிஷன் திரையில் மறுபடி சத்தீஷைக் கல்யாணம் செய்துகொள்ள ஆரம்பித்தாள். சத்தீஷ் சின்னப் பையன் போல கன்னத்தில் மை, நெற்றியில் அலையும் தலைமயிர், மஞ்சள் சரிகை வேட்டியில் பஞ்சகச்சம், அசௌகரியத்தில் வாத்தியாரைக் கனவுக் கண்களுடன் பார்த்துக்கொண்டே, அவ்வப்போது சாஸ்திரத்துக்கு மந்திரம் சொல்ல, கண்கள் மையிட்ட கண்கள் அலைய சத்தீஷ் எவ்வளவு அழகாக இருக்கிறான்.

நெற்றியில் அம்மா அவனுக்குப் பொட்டு இடுகிறாள். அத்தை, சித்தி, தாரணி, பேபி அம்மா எல்லாரும் மஞ்சள் நீரை இறைத்துக்கொண்டே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். கால் அலம்பிப் பாய் மேல் வைக்கிறார்கள். சத்தீஷ் கட்டை விரலைப் பிடித்துப் படிப் படியாகச் சம்பந்தாசம்பதமில்லாமல் பேசுகிறான். என்னைவிட சத்தீஷ்தான் நெர்வஸ்.

கர்னலின் மடியில் உட்கார்ந்திருக்க என்னை நெற்றியில் எங்கோ பார்க்கிறான். தாலி கட்டிய பின் அம்மாவின் கண்களில் கண்ணீர். எல்லோருமே கட்டிப் பிடித்துக்கொண்டு, கை குலுக்கிக்கொண்டு, இது என்ன புது வழக்கம்?

ரிசப்ஷனில் ஜெயராமன் கச்சேரியில் சிமென்ட் கலர் சூட்டு போட்டு நிற்க, மத்தியானத்திலிருந்து ப்யூட்டீஷியன் எனக்குச் செய்த அலங்காரம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ஏதோ விக்ரமாதித்தன் பதுமை மாதிரி, அலுங்காமல் ஆயில் மேக் அப் என்று எண்ணெய் வழிந்துகொண்டு…

வீடியோ முடிந்து கீற்றல் வந்த பின்னும் சற்று நேரம் திரையையே பார்த்துக்கொண்டு இருந்தாள். பின் அணைத்தாள்.

”அன்புள்ள கடவுளே, நான் உனக்கு எப்படி இந்த மகத்தான, உத்தமமான தினத்துக்கு வந்தனம் சொல்ல வேண்டும்? ஏன் இத்தனை சந்தோஷம்? ஏன் இத்தனை வெளிச்சம்? ஏன் இத்தனை உற்சா கம்? ஏன் இப்படி ஒரு ஸ்படிக சுத்தமான தினம்? தயவுசெய்து இதற்கு மேல் சந்தோஷம் தராதே. தாங்காது. எனக்கு இது போதும். இது போதும்!”

கஸ்தூரி தூங்கிப் போய்ப் பத்து நிமிஷத்தில் டெலிபோன் ஒலித்தது!



சி.பி -  ( accident to her husband)