Showing posts with label தொரட்டி (2019) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label தொரட்டி (2019) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Saturday, March 30, 2024

தொரட்டி (2019) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ யூ ட்யூப் , ஜீ 5

    


      பல  திரைப்பட விழாக்களில்கலந்து  கொண்டு  பல  விருதுகளை  வென்ற  படம்  இது .ஆனால்  ரிலீஸ்  டைமில்  தியேட்டர்களிலே   ஏதோ  பிரச்சனை  காரணமாக  குறைவான  தியேட்டர்களில்  மட்டுமே  ரிலீஸ்  ஆகி  அதிக  மக்களைப்போய்  சேரவில்லை .அப்படி  சேர்ந்திருந்தால் பருத்தி  வீரன் , சுப்ரமணியபுரம்  போல  கவனிக்கத்தக்க  மெகா  ஹிட்  படமாக  ஆகி  இருக்கும்  என  பல  மீடியாக்களில்விமர்சனம்  வந்திருந்தன. இப்போது  ஜீ  ஃபைவ்  ஓடிடி  தளத்தில் , யூ  ட்யூபில்  காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


1980 களில்  ராமநாதபுரம்  மாவட்டத்தில்  நடந்த  உண்மை  சம்பவம்  இது   அந்தக்காலத்தில் ஒரு  அறுவடை   முடிந்த  பின்  அடுத்த  விவசாயத்துக்கு  தயார்  ஆகும்  முன்னே  நிலத்தை  ரெடி  பண்ண  ஆட்டு  மந்தையை  அந்த  நிலத்தில்  உலவ  விட்டு  ஆட்டுப்புழுக்கைகளைப்போட  வைத்து  அதையே  உரமாக்குவார்கள். அந்த  வேலையை  ஊர்  ஊராகச்சென்று  செய்து  வரும்  ஆட்டு  மந்தை  வைத்திருக்கும்  நபர்  தான்  நாயகனின்  அப்பா 


ஒரு  கிராமத்துல  அது  போல  உரம்  போட்டு  முடித்த  பின்  அதற்கான  கூலியைப்பெறும்போது  அந்த  நில  சொந்தக்காரர்  ஏமாற்றி  விடுகிறார்.இதனால் கோபம்  அடைந்து  அந்த  நிலம்  மலடாகப்போகட்டும்  என  சாபம் இட்டு  சில  உள்ளடி  வேலைகளை  செய்கிறார். அப்போது  அவனிடம்  மாட்டி  கை  கால் கள்  கட்டப்பட்டு  உயிருக்கு  ஆபத்தான  நிலையில்  நாயகனும், அவன்  அப்பாவும்  இருக்கிறார்கள் . 


 அப்போது  அங்கே  திருட  வந்த  மூவர்  இவர்களை  விடுதலை  செய்ய  நாயகன்  அந்த  திருடர்களுக்கு  நன்றிக்கடன் பட்டவன்  ஆகிறான். அவர்களுடன்  நட்பு  வளர்க்கிறான்


 அந்த  மூன்று  திருடர்களும்  நாயகனுக்கு  குடிப்பழக்கத்தைக்கற்றுத்தந்து  ஆளைக்கெடுத்து  விடுகிறார்கள்  


நாயகனுக்கு  அவனது  முறைப்பெண்ணையே  கட்டி  வைக்கிறார்  அப்பா. அந்த  மூன்று  திருடர்கள்  ஒரு  திருமண  வீட்டில்  தாலி  உட்பட  நகைகளைக்கொள்ளை  அடித்து  நாயகி  காவல்  காக்கும்  ஆட்டு  மந்தை  இருக்கும்  இடத்தில்  ஒளிந்திருக்கும்போது   நாயகி  திருடர்களைக்காட்டிக்கொடுத்து  விடுகிறாள் 


 திருடர்கள் ஜெயிலுக்குப்போகிறார்கள் . வெளியே  வந்ததும்  நாயகியைப்பழி  வாங்க  வில்லன்கள்  நினைக்கிறார்கள் . இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  நடித்து   தயாரிப்பாளர்  ஆக  பணமும்  போட்டிருக்கிறார்  சாமன்  மித்ரு. கச்சிதமான  நடிப்பு . புதிய  பாதை  பார்த்திபன்  மாதிரி  கேரக்டர்  ஆனால்  காமெடி , கிண்டல்  எல்லாம்  இல்லாத  சீரியஸ்  ரோல் . கச்சிதமாக  செய்திருக்கிறார் 


 நாயகி  ஆக  சத்யகலா  , கலக்கி  இருக்கிறார்.  படத்தில் நடித்த  அனைவரையும்  ஓரம்  கட்டி  தன்  தோளில்  மொத்தப்படத்தையும்  தாங்கி  நிற்கிறார்


 நாயகனின்  அப்பாவாக ஸ்டண்ட்  கலைஞர்  அழகு  சிறப்பான  குணச்சித்திர  நடிப்பு 


 வில்லன்கள்  ஆக  வரும்  மூவரும்  புதுமுகங்கள்  போல . கச்சிதம் , குறிப்பாக  வாய்  பேச  முடியாத  மாற்றுத்திறனாளியாக  வருபவர்  நடிப்பு  கலக்கல்  ரகம் 


ராஜா  முகமது  எடிட்டிங்கில்  படம்  128  நிமிடங்கள்  ஓடுகிறது .முதல்  30  நிமிடங்கள்  கழிந்த  பின்  தான்  கதை  செல்லும்  திசையே  புரிபடுகிறது 


 வேத்  சங்கர் , ஜிதின் கே  ரோஷன்  ஆகிய  இருவரும்  தான்  இசை 


கிராமிய  இசையில்  மாறுபட்ட  பாடலக்ள்  சினேகன்  எழுத்தில்  மனம்  கவர்கின்றன. எட்டு  பாடல்களில் ஐந்து  பாடல்கள் அபாரம் 



குமார் ஸ்ரீதர்  ஒளிப்பதிவு  தரம் .கிராமிய  அழகை  படம்  பிடித்திருக்கிறார்


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  பி  மாரிமுத்து .செயற்கையான  காட்சிகள்  எதுவும்  இன்றி  யதார்த்தமான  படமாகத்தந்திருக்கிறார்

சபாஷ்  டைரக்டர்


1 மாப்பிள்ளை ஓடிப்போயிட்டா  மாப்பிள்ளையோட  அம்மா  மணமகளுக்கு  தாலி  கட்டும் சம்பிரதாயம்   நாம் பார்க்காத  ஒன்று. அருமையான  கலாச்சாரத்தை  கவிதையாக  இயக்குநர்  பதிவு  செய்த  காட்சி 


2   கூடா  நட்பு  கேடாய்  முடியும்  என்பதுதான்  படத்தின்  ஒன் லைன்  , அதை  கவனமாகக்கையாண்டு  கதை  சொன்ன  விதம்  அருமை 


3   படம்  முழுக்க  வசனங்களிலும்  சரி , பாடல்  வரிகளிலும்  சரி  ஆட்டு  இடையர்கள்  வாழ்க்கையில்  உபயோகிக்கும்  வார்த்தைகள் , சொல்லாடல்கள்  என  பார்த்து  பார்த்து  செதுக்கிய  விதம்  


4    படத்தில்  பங்கு  பெற்ற  அனைத்து  நடிக  நடிகையர்கள்  நடிப்பும்  அருமை  என்றாலும்  நாயகி  சத்யகலாவின்  நடிப்பு  அட்டகாசம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்

1 குள்ள  நரிக்கூட்டத்துல 


2  ஏலே  ஏலே  ஏலே  எல்லாம்  உன்னாலே 


3  சவுக்காரம்  போட்டு 


4  உசுரை  உருக்கி  எலும்பை  நொறுக்கி  என்ன  செய்யுறே? 


5  ஆளில்லாக்காட்டுக்குள்ளே


  ரசித்த  வசனங்கள் 


1  எச்சில் கிளாஸ் கழுவறதுக்கு   எம் ஜி ஆர்  கெட்டப்பா ?


2  கை  கால்  ஊனமா  இருக்கறவனுக்குக்கூட  பொண்ணு  கொடுக்கலாம், ஆனா  குடிச்சுட்டு  வாழ்க்கையே  ஊனமா  இருக்கறவனுக்கு  எவன்  பொன்ணு  தருவான் ? 

3 பத்து  நாள்  கூத்துக்கு  சாமி  வேஷம்  போட  ஆள்  தேடல ,  ஆயுசுக்கும்  கும்பிடற  குலசாமியைத்தேடறேன்


4  வேண்டாதவங்க  சேர்க்கை  இப்படித்தான் , வேண்டுனது , விரும்புனது  எல்லாத்தையும்  இழக்க  வெச்சிடும் 


5 பத்து  விரலு  பாடுபட்டு  அஞ்சு  விரலு  பிசைஞ்சு  சாப்ட்டாதான்  சோறு  வயிற்றில் ஒட்டும்


6 எவளோ   எதுக்கோ கொழுப்பெடுத்து  அறுவாமனைல  ஏறுனாளாம் 


7  ஒரு  நல்ல ஆட்டுக்காரனுக்கு  அழகு  அவன்  உடலில் ஆட்டுக்கவுச்சி  வீசுவதுதான் 


8  விளக்கு  வைக்கும்  நேரம்  வந்தாலே  வீட்டு  நினைப்பு  வரனும்,அவன்  தான்  சம்சாரி 


9  எவ்ளோ  பசிச்சாலும்  கண்ட  இடத்துல  திங்கற  பழக்கம்  எனக்குக்கிடையாது 


10 தீ , தீ  என  சொல்லிட்டே  இருந்தா  இளப்பமாத்தான்  இருக்கும், ஒரு  வாட்டி  சுட்டுடனும்,  அப்போதான்  பயம்  இருக்கும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தான்  செல்லமாக  வளர்த்த  ஆட்டை  நாயகன் தன்  சகாக்கள்  மூவருக்கும்  படையல் போட  வலுவந்தமாக  அதை  வெட்டுவது  செயற்கை . அத்தனை  ஆடுகள்  இருக்கும்போது  அந்த  ஆட்டை  ஏன்  தேர்ந்தெடுக்கனும்? சும்மா  ஆடியன்ஸ்  இரக்கத்தை  சம்பாதிக்கவா? என்னதான்  ஒரு  குடிகாரன்  குடி  போதையில்  இருந்தாலும்  தன்  செல்ல  ஆட்டைக்கூடவா  அடையாளம்  தெரியாது ? 


2  நாயகியின்  பெற்றோர்  எதிர்ப்பை  மீறி  நாயகி  குடிகாரனான  நாயகனைக்கட்டிக்க  சம்மதிக்கிறாள். பெண்  பார்க்க  வரும்   நாயகன்  குடிபோதையில்  தாடி , மீசையுடன்  பஞ்சப்பரதேசி  மாதிரி  வருகிறான், அவனைப்பார்க்கும்போது  நமக்கே  வயிற்றைப்புரட்டுகிறது . பார்த்தாலே  வாமிட்  வர்ற  மாதிரி  கேவலமா  இருக்கும்  அந்தக்குடிகாரனை  எதுக்காக  நாயகி  கட்டிக்க  முன்  வருகிறாள் ? 

3  தங்களை  ஜெயிலுக்கு  அனுப்பிய அல்லது  சாட்சி  சொல்லிய  நாயகி  மேல்  வில்லன்கள்  மூவருக்கும்  கோபம்  இருப்பது  ஓகே , ஆனால்  விசாரணையின்போது   தங்களை  அடி  வெளுத்து  வாங்கிய  போலீஸ்  ஆஃபீசர்  மேல்  கொஞ்சம்  கூட  கோபமே  இருக்காதா?மெயின்  வில்லன்  கையையே  சிதைத்து  விட்ட  போலீஸ்  ஆஃபீசர்  மேல்  வஞ்சம்  இருக்காதா?


4  நாயகி  சாட்சி  சொல்லி  மாட்டி விட்ட  வில்லன்கள் மூவரையும்  அடையாளம்  தெரியாதா?அவர்கள்  ஜெயிலில்  இருந்து  திரும்பி  வந்தபோது  யார்  என்றே  தெரியாமல்  இருக்கிறாரே?நாயகி . முக  அடையாளம்  தெரியவில்லை என்றாலும்  மாட்டி விட்ட  மூவர் , இப்போ  வந்திருக்கும்  மூவர்  இந்த  ஒற்றுமை  கூடவா  தெரியாது ?


5  தன்  உயிரைக்காப்பாற்றிய  வில்லன்கள்  மூவர்  மீதும் நாயகன் பாசம்,  நட்பு கொள்வது  ஓக்கே , ஆனால்  அவர்கள்  மூவரும்  நாயகன்  மீது  எந்த  வித  பாண்டிங்கும் கொண்டிருப்பதாகத்தெரியவில்லை , அதை  நாயகன்  உணராதது  ஏனோ?


6  நம்மை  அவளுக்கு  அடையாளம்  தெரியலை , முகத்துல  துணி கட்டி  இருந்தோமில்ல  என்று  சாமார்த்தியமாக சமாளிஃபிகேசன்  வசனம்  வைத்திருக்கிறார்கள் .ஆனால்   அந்த  சம்பவம்  நடந்தபோது   தலை , கண் , நெற்றி  எல்லாம் ஓப்பனாகத்தானே  இருக்கு ? 

7 கடைவாய்  ரத்தம் ஒழுக  போலீஸ்  ஜீப்ல  என்  புருசனைப்பார்த்தப்போ  என்  ஈரக்குலையே  அப்டினு  நாயகி  ஒரு  டயலாக்  சொல்லுது .ஆனா  அப்டி  எல்லாம்  விஷூவலாக  நமக்குக்காட்டலை. போலீஸ்  அடிக்கக்கூட  இல்லை , சும்மா  தான்  ஜீப்ல  ஏத்திக்கூட்டிட்டுப்போறாங்க ( ஒரு  வேளை  எடிட்டிங்க்ல  கட்  ஆகி  இருக்கலாம் ) 


8  வில்லன்கள்  மூவரில்  ஒருவன் மனம்  மாறி  பிரிந்து  போகும்போது  அவனைக்கொலை  செய்வது ஏற்றுக்கொள்ளும்  விதமாகக்காட்சிப்படுத்தவில்லை . போலீஸ்   ரெக்கார்டில்  மூவரும்  கூட்டாளிகளாகத்தான்  பதிவு  இருக்கு. ஒருவன்  கொலை  செய்யப்பட்டது  தெரிந்தால்  மாட்டிக்கொள்வோம்  என்பது  தெரியாதா? அவனை  அப்படியே  போக  விட்டிருக்கலாம் 

9  நாயகியின்  கொலையை  நேரில்  பார்த்த  சிறுவனின்  சாட்சி  இருக்கும்போது , ஏற்கனவே  போலீஸ்  ரெக்கார்டில்  கிரிமினல்களாக  இருக்கும்  வில்லன்களை  சட்டத்தின்  பிடியில்  மாட்ட  வைப்பது  ஈசி , ஆனால்  சினிமாத்தனமாக  பழி  வாங்குவது  தேவை  இல்லாதது 


10  வில்லன்கள்  மூவரில்  இருவர்  சேர்ந்து  ஒருவரைக்கொலை  செய்தது  வேறு  யாருக்கும்  தெரியாது . நாயகன்  கச்சிதமாக  அந்த  மூன்றாவது  ஆள்  புதைக்கப்பட்ட  இடத்தைக்கண்டுபிடித்தது  எப்படி ? 


11 வில்லன்களில்  ஒருவன்  கை  விளங்காமல்  மாற்றுத்திறனாளியாக  இருப்பதும் , க்ளைமாக்சில் அவர்கள்  சாகும்போது  நமக்கு  அவர்கள்  மீது  பரிதாபம்  வருவது  போல  காட்சி  அமைத்ததும்    திரைக்கதையின்  பின்னடைவு .இதில்  எம்  ஜி ஆர்  ஃபார்முலா  தான்  சரி .,  வில்லனை  அடிக்கும்போது  தியேட்டரில்  விசில்  பறக்கும் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ  படம்  தான் . லிப் லாக்  காட்சி  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நாம்  கவனிக்கத்தவறிய  ஒரு  நல்ல  படம் ,  கிராமியப்படங்களை  விரும்புவோர்  அவசிய ம்  காண  வேண்டிய  தரமான   படைப்பு  . ரேட்டிங்  3/ 5 


Thorati
Directed byP. Marimuthu
Produced byShaman Mithru
StarringShaman Mithru
Sathyakala
R Nandaa (Sundar Raj)
CinematographyKumar Sridhar
Edited byRaja Mohammad
Music byVed Shankar
Jithin K. Roshan
Production
company
Shaman Pictures
Distributed bySDC Picturez
Release date
  • 2 August 2019
Running time
128 minutes
CountryIndia
LanguageTamil