Showing posts with label தென்னிந்தியாவில் ‘எல் நினோ’ பாதிப்பு: பிப்ரவரி வரை மழை. Show all posts
Showing posts with label தென்னிந்தியாவில் ‘எல் நினோ’ பாதிப்பு: பிப்ரவரி வரை மழை. Show all posts

Saturday, December 12, 2015

தென்னிந்தியாவில் ‘எல் நினோ’ பாதிப்பு: பிப்ரவரி வரை மழை - ஐ.நா. சபை ஆய்வறிக்கை

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த அக்டோபரில் வீசிய புயல் லார் நகரை புரட்டிப் போட்டது. தற்போதைய ‘எல் நினோ’ காரணமாகவே அந்த நாட்டில் புயல், மழை பாதிப்பு ஏற்பட்டதாக ஐ.நா. சபை சுட்டிக் காட்டியுள்ளது. லார் பகுதியில் புயலால் வீட்டை இழந்த ஒரு தாய் தனது குழந்தையுடன் வெளியேறினார். (கோப்புப் படம்)

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த அக்டோபரில் வீசிய புயல் லார் நகரை புரட்டிப் போட்டது. தற்போதைய ‘எல் நினோ’ காரணமாகவே அந்த நாட்டில் புயல், மழை பாதிப்பு ஏற்பட்டதாக ஐ.நா. சபை சுட்டிக் காட்டியுள்ளது. லார் பகுதியில் புயலால் வீட்டை இழந்த ஒரு தாய் தனது குழந்தையுடன் வெளியேறினார். (கோப்புப் படம்)


‘எல் நினோ’ பருவநிலை மாற்றம் காரணமாக தென்னிந்தியாவில் சராசரியைவிட கூடுதல் மழை பெய்துள்ளது, அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை மழை நீடிக்கலாம் என்று ஐ.நா. சபை ஆய்வறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



‘எல் நினோ’ என்பது பூமியின் வெப்பநிலை ஏற்றத்தாழ்வை குறிப் பது ஆகும். உலகின் மிகப்பெரிய கடலான பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் நிலவும் வெப்ப நிலையின் ஏற்றத்தாழ்வை பொறுத்து எல் நினோவின் தாக்கம் கண்டறியப்படுகிறது. எல் நினோ ஏற்படும்போது ஒருபுறம் அதிக மழையும் மறுபுறம் கடும் வறட்சியும் நிலவும்.



பொதுவாக ஓராண்டுக்கு மட்டுமே எல் நினோவின் பாதிப்பு இருக்கும். ஆனால் கடந்த 1982-க் குப் பிறகு ஏற்பட்ட ‘எல் நினோக் கள்’ 3 ஆண்டுகள் முதல் 7 ஆண் டுகள் வரைகூட நீடித்துள்ளன.


தற்போது ‘எல் நினோ’ பருவ நிலை மாற்றம் காரணமாகவே தமிழகத்தில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது என்று ஐ.நா. சபை சுட்டிக் காட்டியுள்ளது.


இதுதொடர்பாக ஐ.நா. சபை யின் பொருளாதார, சமூக கமிஷன் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:



கடந்த 1998-ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய, பசிபிக் பிராந்தி யத்தில் கடுமையான ‘எல் நினோ’ (2015-2016) பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்தியாவின் தெற்கு, மத்திய பகுதிகள், கம்போடியா, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி, பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதி, தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதிகள் பாதிக்கப்படலாம்.


குறிப்பாக தென்னிந்தியா, இலங்கை, மாலத்தீவில் சராசரியை விட கூடுதல் மழைப்பொழிவு இருக்கும். இந்த மழைப்பொழிவு 2015 டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீடிக்கக்கூடும்.


இதற்கு நேர்மாறாக பசிபிக் கடலில் பப்புவா நியூ கினியா, திமோர்-லெஸ்டி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் அதிகரித்து கடும் வறட்சி ஏற்படும்.


பாரீஸில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாறுபாடு குறித்த மாநாட்டில் ‘எல் நினோ’ பாதிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது. ‘எல் நினோ’ உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர் கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக் கைகள் அவசியம்.



முன்னெச்சரிக்கை அறிவிப்பு, கண்காணிப்பு, நிவாரண நடவடிக் கைகளில் ஆசிய, பசிபிக் பிராந்திய நாடுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் தலைநகர் சென்னை உட்பட மாநிலம் முழு வதும் சராசரியைவிட அதிக மழை பொழிந்துள்ளது. பொது வாக வடகிழக்குப் பருவமழை யின்போது சென்னையில் 79 செ.மீட்டர் மழைப் பொழிவு இருக் கும். இந்த ஆண்டு இதுவரை 158 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த டிசம்பர் 1-ம் தேதி அன்று 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் 49 செ.மீ. மழை கொட்டியது. டிசம்பர் 4-ம் தேதி 40 செ.மீ. மழை பெய்தது.



இதுதொடர்பாக பாரீஸ் பருவ நிலை மாறுபாடு மாநாட்டில் பேசிய பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லாரண்ட் பேபியஸ், பருவநிலை மாற்றத்தின் காரணமாகவே சென் னையில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது, இது உலக நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை மணி என்று கூறியது நினைவு கூரத்தக்கது.

-தஹிந்து

  • Ramesh  India
    இந்த பதிவை முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லவும். முதற்கட்டமாக கால்வாய்களை,ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி துர் வாற வேண்டும். தண்ணீரை சேமிக்க வேண்டும்.

    about 8 hours ago
     (1) ·  (0)


    Selvam Up Voted
    • D
      Dandy  Switzerland
      ஆறுகளை ..குளங்களை அழிததட்கு தண்டனை தொடங்கிவிட்டது ..இனி மலைகளை அழித்த பாவத்திற்கு தண்டனை கிடைக்கும் ….ஈழ மக்கள் அழிப்பிற்கு மொத்தமாக சேர்ந்து கிடைக்கும்
      33805

      about 17 hours ago
       (1) ·  (0)


      ramesh Up Voted
      • S
        Sasibalan  India
        இது போன்ற எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு, இனியாவது தமிழ்நாடு அரசு தேவையற்ற இலவச திட்டங்களை கைவிட்டு, மக்கள் நலன் கருதி மழைநீர் வடிகால் வசதிகளை மேம்படுத்துவதில் உடனடி அக்கறை செலுத்த வேண்டும்.இல்லையேல் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற இயலாது.
        5185

        about 21 hours ago
         (6) ·  (0)


        jahangir · balakrishnan · Rathi · ramesh · Ghanesun · agampuram Up Voted
        • R
          Ramaseshan  India
          இந்த மழை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? அடுத்த பெரிய மழை வந்தால் அதை சமாளிப்பதற்கு திறனும் நிதி ஆதாரமும் இருக்கிறதா? சென்னை மக்கள் தான் மீண்டும் அனுபவிப்பார்கள்.
          2605

          about 22 hours ago
           (1) ·  (0)


          Rathi Up Voted
          • MY
            Muhammed Yaseen  India
            Allah protect us,,,

            about 23 hours ago
             (1) ·  (0)


            razin Up Voted
            • T
              Tree  Singapore
              உலக ஆறுகளை இணைக்க வேண்டும்.