Showing posts with label தென்னிந்தியன் (2015)- திரை விமர்சனம். Show all posts
Showing posts with label தென்னிந்தியன் (2015)- திரை விமர்சனம். Show all posts

Monday, December 21, 2015

தென்னிந்தியன் (2015)- திரை விமர்சனம்

நடிகர் : சரத்குமார்
நடிகை :பாவனா
இயக்குனர் :பிபின் பிரபாகர்
இசை :ஷான் ரஹ்மான்
ஓளிப்பதிவு :ஸ்ரீராம்
சரத்குமார் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. இவர் சிறுவயதில் தன்னுடைய அப்பாவை கொன்ற ரவுடியான சுரேஷை கொல்வதற்காகவும், ரவுடியிசத்தை அடியோடு ஒழிக்கவேண்டும் என்ற லட்சியத்துடனும் போலீஸ் வேலையை செய்து வருகிறார். 

இந்நிலையில், சுரேஷ் இருக்கும் ஏரியாவிலேயே இன்ஸ்பெக்டராக பணி மாற்றம் கேட்டு வருகிறார். சுரேஷை கைது செய்ய சரியான தருணம் பார்த்து காத்திருக்கிறார். ஆனால், சுரேஷோ எம்.பி., கமிஷனர் ஆகியோரின் ஆதரவோடு அந்த ஏரியாவில் மிகப்பெரிய ஆளாக வளர்ந்து நிற்கிறார். இதனால், அவரை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்ய சரத்குமார் காத்திருக்கிறார். 

மறுமுனையில், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் நிவின் பாலி, தனது நண்பர்களுடன் வெளியூருக்கு சுற்றுலா செல்கிறார். அங்கு ரவுடிகளிடம் மாட்டிக்கொள்ளும் பாவனாவை காப்பாற்றுகிறார். இதனால் கோபமடைந்த அந்த ரவுடி கும்பலின் தலைவனான சுரேஷின் தம்பி, நிவின் பாலி மற்றும் அவரது நண்பர்களை கொல்ல முடிவு செய்கிறார். 

இது தெரியவந்ததும் நண்பர்கள் உடனே அங்கிருந்து புறப்பட தயாராகிறார்கள். ஆனால், இவர்கள் சென்ற கார் பழுதடையவே அங்கிருந்து கிளம்ப முடியாமல் தவிக்கின்றனர். 

இந்நிலையில், தன்னைக் காட்டிக் கொடுத்ததாக கூறி தனது கூட்டாளி ஒருவனை சுரேஷ் கொலை செய்வதை, நிவின் பாலியின் நண்பர்களில் ஒருவன் செல்போனில் படம்பிடித்து விடுகிறான். இதை பார்க்கும் சுரேஷ், அவர்களை பிடிக்க முயற்சி செய்கிறான். அப்போது, அவனிடமிருந்து நண்பர்கள் அனைவரும் தப்பித்து செல்கிறார்கள். 

கொலை செய்ததை படம்பிடித்த நண்பர்களை கொல்ல சுரேஷும் அவர்களை தேடி அலைகிறான். இறுதியில் நிவின் பாலி மற்றும் அவரது நண்பர்களின் கதி என்ன? சரத்குமாரின் லட்சியம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

சரத்குமார் தனக்கே உரிய பாணியில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக படம் முழுக்க வலம் வருகிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் அனல் பறக்க விடுகிறார். பாவனா, படத்தில் சில காட்சிகளே வந்தாலும், கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். 

நாயகன் நிவின் பாலி ஆக்‌ஷன் கலந்த எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் இவருக்கு டூயட் காட்சிகள் கிடையாது. இவருடைய நண்பர்களாக வருபவர்களும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 

வில்லனாக வரும் சுரேஷ், வில்லத்தனத்துடன் சிறப்பாக நடித்திருக்கிறார். கேரளா பின்னணியில் அழகான ஆக்‌ஷன் கதையை எடுத்திருக்கிறார் இயக்குனர் பிபின் பிரபாகர். மலையாளத்தில் வெளிவந்த ‘தி மெட்ரோ’ படத்தின் தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழிலும் ரசிக்கும்படி இப்படத்தை எடுத்திருப்பதுதான் சிறப்பு. 

மூன்றுவிதமான கதையை கூறினாலும், கதையில் விறுவிறுப்பு குறையாமல் அழகான திரைக்கதை அமைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியை யாரும் எதிர்பார்க்க முடியாதபடி வைத்திருப்பது சிறப்பு. 

ஷான் ரகுமான் இசையில் பின்னணி இசை சிலிர்க்க வைக்கிறது. ஒருசில பாடல்கள்தான் என்றாலும் ரசிக்க வைக்கின்றன. ஸ்ரீராம் ஒளிப்பதிவு படத்தின் கதைக்கு மெருகேற்றியிருக்கிறது. 

மொத்தத்தில் ‘தென்னிந்தியன்’ ரசிக்கலாம்.

http://cinema.maalaimalar.com/2015/12/14152739/Thenindian-movie-review.html
-