Showing posts with label தூண்டில் (2008)-தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ). Show all posts
Showing posts with label தூண்டில் (2008)-தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ). Show all posts

Saturday, February 03, 2024

தூண்டில் (2008)-தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ கே டி வி

 


  மனோரமா  தன்  மகன்  பூபதியை  நாயகன்  ஆக்கி  எடுத்த  சொந்தப்படமான தூரத்து  சொந்தம்(1992) தான்  இயக்குநர்  கே எஸ்  அதியமான்  இயக்கிய  முதல்  படம். அட்டர் ஃபிளாப் . அடுத்து புதிய  முகம் (1993) பாசமலர்கள் (1994)  ஆகிய  இரு  படங்களுக்கு  வசனம்  எழுதினார் . தொட்டாசிணுங்கி (1995)  ஓரளவு  ஹிட்  ஆகி  அவருக்குப்பெயர்  பெற்றுத்தந்தது ஆனந்த  விகடன்  இதழில்  தொடர்  ஆக  வெளி வந்து  படமான  சொர்ணமுகி (1998)  மெகா  ஹிட்  ஆனது . ஹம் துமாரா  ஹேங்  சனம் (2002) சுமார்  ஹிட் , பிரிய  சகி (2005) ஹிட், சாதி  கர்கே  பாஸ்  கயே யார்  (2006) சுமார்  ரகம் .அமளி  துமளி  (2014)  ஷூட்டிங் பாதியில்  நிற்கும்  படம் 


இந்த  தூண்டில்  படமும்  கமர்ஷியலாகத்தோல்வி தான். ஆனால்  காமெடி  டிராக்  செம  ஹிட்  ஆனது . ஒளிப்பதிவு   பிரமாதமாக  இருக்கும் நல்ல  கதாசிரியர்  ஆன  கே  எஸ்  அதியமான்  ஏன்  இப்படி  சொதப்பலாக  திரைக்கதை  அமைத்தார்  என  இந்த  விமர்சனத்தில்  பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன், நாயகி  இருவரும்  தம்பதியினர். ஆனால்  நாயகிக்கு  குழந்தை  பெறுவதில்  சிக்கல் . ட்ரீட்மெண்ட்டில்  இருக்கிறார். வாடகைத்தாய்  முறையில்  வேறு  ஒருவரின்  கரு  முட்டையை  தன்  வயிற்றில்  வாங்கி  கருத்தரித்து  குழந்தை  பெறுகிறார். குழந்தை   அம்மாவுடன்  ஒட்டுதலாக  இருக்கும்போது  ஒரு  பிரச்சனை  வருகிறது


  நாயகனின்  முன்னாள்  காதலியின்  கரு  முட்டை  தான்  அது . திருமணம்  செய்யாமல்  ஏமாற்றிய  நாயகனைப்பழி  வாங்க   வில்லி  தான்  திட்டமிட்டு  இப்படி  செய்து  குழந்தையை  பறித்து  செல்கிறார்.கோர்ட்டில்  கேஸ்  நடக்கிறது . இதற்குப்பின்  நடக்கும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக   ஷ்யாம் . கச்சிதமாக  நடித்திருக்கிறார். மனைவியாக   காதல்  சந்தியா  செண்ட்டிமெண்ட்  காட்சிகளில்  மிளிர்கிறார். திவ்யா  ஸ்பந்தனா  தான்  முன்னாள்  காதலி  கம்  வில்லி . காதலியாக  வரும்  காட்சிகளில்  இளமைக்கொண்டாட்டம் . ஆனால்  வில்லியாக  எடுபடவில்லை 

 வில்லன்  ஆக  ஆர்  கே . அவர்  கொண்டை  போட்ட  கெட்டப்பே  காமெடியாக  இருக்கிறது . அவரைப்பார்த்தால்  சிரிப்புதான்  வருகிறது . பயம்  வரவில்லை 


ரேவதி  டாக்டர்  ஆக  வருகிறார், விழலுக்கு  இரைத்த  நீர் 


  காமெடி  ட் ராக்கில்  விவேக்  கலக்கி  இருக்கிறார்


 காமெடியன்  ஒரு  ஃபாரீன்  பெண்ணைப்பார்க்கிறார். மனதை  பறி  கொடுக்கிறார்.  காமெடியனின்  அப்பாவை  அவளுக்கு  அறிமுகப்படுத்த  வற்புறுத்தியதால்  காமெடியனே  அப்பாவாக  மாறுவேடம் போட்டு   ரஜினி  மாதிரி  கலக்க  அந்த  ஃபாரீன்  பெண்  மகனை  விட்டு விட்டு  அப்பாவைக்காதலிக்கிறாள் . தாத்தா  கெட்டப்பில்  நாட்டாமை  சரத் ,விஜயகுமார்   மாதிரி  வந்து  வசனம்  பேசி  காதலியை  கரெக்ட்  செய்து  மணமுடிக்கும்  கதை  மெயின்  கதையை  விட  ரசிக்கும்படி  இருந்தது 


ஒளிப்பதிவு  கவியரசு .  ஃபாரீன்  லொக்கேஷன்  என்பதால்  கலர்ஃபுல்லாக  படம்  ஆக்கி  இக்ருக்கிறார். உதயசங்கர்  எடிட்டிங்கில்  இரண்டரை  மணி  நேரம்  ஓடும்படி  இழுத்து  இருக்கிறார். இன்னும்  ஷார்ப்  ஆக  2  மணி  நேரத்தில்  முடித்திருக்கலாம். அபிஷேக்  ராய்  இசையில்  பாடல்கள்  சுமார்  ரகம், பின்னணி  இசை  பரவாயில்லை  ரகம் 


கதை, திரைக்கதை , வசனம், இயக்கம் கே  எஸ்  அதியமான். சொர்ணமுகி , தொட்டாசிணுங்கி  ஆகிய  படங்களில்  வசனம்  மிகப்பெரும் பலமாக  அமைந்தது, ஆனாக்  இப்படத்தில்  அது  மிஸ்சிங்


சபாஷ்  டைரக்டர்


1    விவேக்கின்  காமெடி  டிராக்  படத்தின்  மாபெரும்  பிளஸ். எல்லா  காமெடி  சேனல்களிலும்  இது  அடிக்கடி  ஒளிபரப்பாகி  இப்படத்தைப்பார்க்க  வைத்தது 


2   டாரீன்  லொக்கேஷன்  செலக்சன்


ரசித்த  வசனங்கள் 


1  முட்டை  நிறைய சாப்பிட்டா  குழந்தை ஆரோக்கியமா  பிறக்கும்னு  டாக்டர்  சொன்னாரே? நிஜமா? 


கோழிக்குஞ்சு  வேணா  பிறக்கும்


2   அவளுக்குத்தமிழ்  தெரியும்னு  என் கிட்டே  ஏன் சொல்லாம  விட்டே?


  நீ  எங்கே  என்னை  சொல்ல  விட்டே? 


3  சார் , என்ன  பிஸ்னெஸ்  பண்ணிட்டு  இருக்காரு ?


 தட்  ஈஸ்  நன்  ஆஃப்  யுவர்  பிஸ்னெஸ் 


 ஓ  அப்படி  ஒரு  பிஸ்னெஸா?


4   அதிகமா  லேடி  பின்னால  போன  ஆம்பளையும், அதிகமா  பாடி  காட்டின  பொம்பளையும்  நல்லா  வாழ்ந்ததா  சரித்திரம், பூகோளம்  கிடையாது 


5  ஹாய்  வெள்ளைக்குட்டி  , ஸீ  யூ  அட்  வாடிப்பட்டி 


6  காதலிக்கிறவங்க  லட்சியம்  நிறைவேறனும்  என்பதற்காக  காதலை  விட்டுக்கொடுத்தல்  ஒரு  தியாகம்  தான்


7  இவங்க  என்  பாடி  கார்ட்ஸ் 


 இந்த  பாடிக்கு  எவ்ளோ  கார்ட்ஸ்?


8  வாட்  ஈஸ்  திஸ்  பெயிண்ட்  ?


 சந்தனம். காட்டெருமைக்கு  கொம்பும்,  நாட்டாமைக்கு  சொம்பும்  தவிர்க்க  முஜ்டியாதவை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  தன்  காதலியை  அம்போ  என  விட்டுச்செல்வதற்கு  சொல்லும் காரணம்  அல்லது  சால்ஜாப்  அபத்தமாக  இருந்தது 

2  வில்லன்  நாயகனுக்கு  ஃபோன்  பண்ணி  உன்  காதலிக்கு  ஒரு  ஜாப்  ஆப்புர்ச்சுனிட்டி  இருக்கு , நீ  உன்  காதலை  தியாகம்  பண்ணி  அவளை  விட்டுட்டுப்போய்ட்டா   அவளுக்கு  50  கோடி  கிடைக்கும்னு  சொன்னதும்  நாயகன்  நாயகியை  அட்லீஸ்ட்  வீட்டில்  டிராப்  பண்ணிட்டாவது  போய்  இருக்கலாம், அப்படியே  தீவில்  தனிமையில்  இரவில்  விட்டு  விட்டா  போவார்கள் ?  அபத்தம் 

3  நாயகன்  யோக்கியன்  ஆக  இருந்தால்  ஐந்து  வருடங்கள்  கழித்து  தன்  காதலியின்   நிலை  என்ன?  என  செக்  செய்து  விட்டு  அவள்  லட்சியத்தை  அடைந்து  விட்டாளா?  என  செக்  செய்து  மேரேஜ்  பண்ணிக்க  இப்போ  முடியுமா?  என  யோசித்து  இருக்கலாம், காதலியைக்கண்டுக்கவே  இல்லை 


4   வாடகைத்தாய்  விஷயம் , கரு முட்டை  தானம்  செய்யும் விஷயம்  இதெல்லாம்  பெற்றோருக்குத்தெரியாமல்  பார்த்துக்கொள்ளும்  ரூல்ஸ்  அண்ட்  ரெகுலேசனை  டாக்டர்  ரேவதி  ஃபாலோ  பண்ணவே  இல்லை 


5  அந்த  பேக்கு  வில்லன்   திவ்யா  வை  அடைய  50  கோடி  செலவு  செய்தும்  அவரை  ஒன்றும்  செய்யவில்லை  என்பது  காதில்  பூ 


6  வில்லனைப்பற்றி  டி வி யில்  ஃபிளாஸ்  நியூஸ்  காட்டுகிறார்கள் , கைது  எனவும் சொல்கிறார்கள் , அடுத்த  ஷாட்டில்  திவ்யா  வில்லனிடம்  நீ  இவ்ளவ்  மோசமானவனா?  என  கேட்கிறார். அது  எப்படி? அவன்  ஜெயிலில்  தானே  இருப்பான் ? 


7   திவ்யா  வில்லி  ஆக  மாறுவதும்  நம்பும்படி  இல்லை , க்ளைமாக்சில்  தியாகி  ஆகி  குழந்தையை  தருவதும்  நம்பும்படி  இல்லை மனதில்  ஒட்டவில்லை 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இது  ஒரு டப்பாப்படம் . காமெடி  டிராக்  நல்லாருக்கே? படமும்  நல்லாருக்கும்  என  நினைத்து  நான்  சிக்கியது  போல  யாரும்  சிக்கிக்கொள்ள   வேண்டாம் . ரேட்டிங்  1 . 5 


இயக்கம்கே. எஸ். அதியமான்
தயாரிப்புஎம். ராஜ்குமார்
எஸ். எஸ். ஆர். தில்லைநாதன்
பி. காந்தீபன்
கதைகே. எஸ். அதியமான் (வசனம்)
திரைக்கதைகே. எஸ். அதியமான்
இசைஅபிசேக் ராய்
நடிப்புசாம்
சந்தியா
திவ்யா ஸ்பந்தனா
விவேக்
ரேவதி
ஆர்கே
ஒளிப்பதிவுடி. கவியரசு
படத்தொகுப்புவி. எம். உதயசங்கர்
வெளியீடுபெப்ரவரி 22, 2008
நாடு இந்தியா
மொழிதமிழ்