Showing posts with label தூங்காவனம் - ஸ்பீடு (FDFS) விமர்சனம். Show all posts
Showing posts with label தூங்காவனம் - ஸ்பீடு (FDFS) விமர்சனம். Show all posts

Tuesday, November 10, 2015

தூங்காவனம் - ஸ்பீடு (FDFS) விமர்சனம்

ரபர ஆக்‌ஷன், நடந்தது என்ன என்பதே தூங்காவனம் படத்தின் ஒன்லைன்..

ரொம்ப நல்ல கெட்ட போலீஸாக கமல் ஹாசன். வழக்கமான நேர்மை, உண்மை, கடமை என எதுவுமின்றி பணம் இருந்தால் மார்க்கம் உண்டு பாணி ஆள். அவர் கையில் கிடைக்கிறது விலைமதிப்புள்ள போதைப்பொருள். பணத்திற்கு ஆசைப்பட்டு மிக லாவகமாக மறைத்து வைக்கிறார் கமல். இடையில் கமலின் ஆசை மகன் கடத்தப்பட யார் கடத்தினார்கள். ஏன் கடத்தினார்கள். யார் கடத்தினார்கள், எதற்கு கடத்தினார்கள் மகன் கிடைத்தானா இல்லையா? என்பது மீதிக் பரபர க்ளைமாக்ஸ்.

விஸ்வரூபம் படத்திற்குப் பிறகு இடையில் வந்த இரண்டு படங்களுமே குடும்பம், செண்டிமெண்ட் என கொஞ்சம் வேறு கதைக்களமே. ஆனால் மீண்டும் ஆக்‌ஷன் அவதாரத்தில் மிரட்டியிருக்கிறார். த்ரிஷா முதல்முறையாக போலீஸாக நடித்துள்ளார்.


த்ரிஷாவின் கேரக்டருக்காக பேசப்பட்ட படங்களில் இந்தப் படத்திற்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. இவர்கள் இருவரையும் விடவும் நடிப்பிலும், கவுண்டர்களிலும் அப்லாஸ் அள்ளுகிறார் பிரகாஷ்ராஜ். கமலை உக்காந்த இடத்திலிருந்து கொண்டு ஆட்டிப்படைத்திருக்கிறார்.

ஆஷா சரத் அவ்ளோ பெரிய நடிகையாக பாபநாசம் படத்தில் அறியப்பட்டவர் இந்தப் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் காட்டியது சற்றே ஏமாற்றம். கிஷோர் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். படத்தில் ஒரே ஒரு பாடல், வைக்கவே முதலில் தைரியம் வேண்டும்.

அதிலும் அது ரொமான்ஸோ அல்லது காதல் பாடலாகவோ இல்லாமல் இருப்பது தமிழ் சினிமாவின் அடுத்தக் கட்டத்தைக் காட்டுகிறது. பின்னணி பக்கா அதிரடி.. ஒர் இரவு எப்படிப் போகுமோ அதே வேகம் படம் முழுக்க. முன்பாதி அதற்குள் முடிந்துவிட்டதா பாணியில் இருக்கிறது. பின் பாதியில் கொஞ்சம் வேகம் குறைவு தான் எனினும் கதை விவரிக்க அந்த கதை நகர்வு அவசியமான ஒன்றாகவே படுகிறது.

ரீமேக் தான் ஆனால் கமல் படம் எனில் அது வேறு தான் என்பதற்கு இந்தப் படமும் ஒரு சான்று. ஆளவந்தான் படத்திற்குப் பிறகு தீபாவளியன்று வெளியாகும் கமல்ஹாசன் படம். அதுவே ஒரு சிறப்பு.. எனில் ஆக்‌ஷன் வேட்டையில் மீண்டும் ஸ்டைலிஷ் கமல்ஹாசன். கண்டிப்பாக கமல் பிரியர்களும் சரி, ரிமெக் பிரியர்களும் சரி தவறவிடக்கூடாத படம் இந்தத் தூங்காவனம். 

thanks vikatan