Showing posts with label துணிவே துணை (1976) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label துணிவே துணை (1976) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Saturday, July 22, 2023

துணிவே துணை (1976) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லர் ) @ யூ ட்யூப்


 டூரிங்க்  டாக்கீஸ் , சாய்  வித்  சித்ரா   உட்பட பல  சினிமா  நிகழ்ச்சிகளில்  பல  சினிமா  பிரபலங்கள்  கூற்றுப்படி  தமிழ்  சினிமா  இண்டஸ்ட்ரியில் அதிகம்  பேருக்கு  உதவியவர்கள்  மூன்றே  பேர்  1  எம் ஜி ஆர் 2  விஜயகாந்த் 3  ஜெய் சங்கர் . தென்னகத்து  ஜேம்ஸ் பாண்ட்  என்று  அழைக்கப்பட  இவர்  அதிகமான  ஆக்சன்  படங்களில்  நடித்தது  ஒரு  காரணம் .  வாரா  வாரம்  வெள்ளிக்கிழமை  இவர்  படங்கள்  ரிலீஸ்  ஆகும்  அளவுக்கு  ஏராளமான  படங்களில்  நடித்து  வந்தார் , என் சம்பளத்தை  செட்டில்  செய்தால்தான்  படம்  ரிலீஸ்  ஆகும்  என  இவர்  எந்தப்படத்தையும் முடக்கியதில்லை . இவருக்கு சம்பள  பாக்கியை  செட்டில்  செய்யாத  தயார்ப்பாளர்  பட்டியல்  அதிகம் 


1955ல்  ரிலீஸ்  ஆன    A BAD DAY  AT BLACK ROCK    என்ற  அமெரிக்கப்படத்தின்  தழுவல்  ஆகவே  இது  அமைந்திருக்கிறது. அன் அஃபிஷியல்  தழுவல்  கதையான  இதை பஞ்சு  அருணாசலம்  தான்  தமிழுக்கு  ஏற்ற்வாறு  தழுவி  இருக்கிறார்


ஸ்பாய்லர்  அலெர்ட்

பொன்  வயல்  என்ற  கிராமத்தைப்பற்றி  போலீஸ்  டிபார்ட்மெண்ட்க்கு  வந்த  தகவல்கள்  மிக  விசித்திரம் ., கடந்த  ஆறு  மாதங்களாக  அந்த  ஏரியா  போலீஸ் ஸ்டேஷனில்  ஒரு  திருட்டுக்கேஸ்  கூட  பதிவாகவில்லை . அவ்வளவு  நல்லவங்களாகவா  ஊர் மக்கள்  இருப்பாங்க? என  போலீஸ்க்கு  சந்தேகம்,  இது  பற்றி  விசாரித்து  தகவல்  அறிவிக்க  ஒரு  போலீஸ்  ஆஃபிசரை   அனுப்புகிறார்கள்


அவருக்கு  அந்த  கிராமத்தில்  சில  அமானுஷ்ய  அனுபவங்கள்  கிடைக்கின்றன. ஒரு  அதிர்ச்சியான  சம்பவத்தை  நேரில்  பார்த்து  ஹார்ட்  அட்டாக்கில்  அந்த  போலீஸ்  ஆஃபீசர்  இறக்கிறார். அதே  ஆஃபீசரின்  சகோதரர்  இந்த  மரணத்தில்  மர்மம்  இருப்பதாக  நினைக்கிறார். அதே  கிராமத்துக்கு  இவரும்  வருகை  தருகிறார்.  அவருக்கு  நிகழ்ந்த  அதே  அமானுஷ்ய  சம்பவங்கள்  இவருக்கும்  நடக்கிறது , ஆனால்  இவர்  பயப்படாமல்  இதில்  பேய்  வேலை  எதுவும்  இல்லை. எல்லாம்  ஆசாமி  வேலைகள்  தான்  என்பதை  அறிகிறார்


 அந்த  ஊரில்  சட்ட விரோத  கும்பல்  ஒன்று  இருக்கிறது  என்பதைக்கண்டறிகிறார். இதற்குப்பின்  அந்தக்கும்பலை  எப்படி  வளைத்துப்பிடிக்கிறார்  என்பது  மீதி  திரைக்கதை 

  படத்தின்  முதல்  முப்பது  நிமிடங்கள்  அட்டகாசம்,  டோண்ட்  மிஸ்  இட் 


நாயகன்  ஆக  ஜெய்  சங்கர்  பிரமாதமாக  நடித்திருக்கிறார்.  விதி  படத்தில்  டைகர்  தயாநிதியாக  இவர்  நடித்ததுதான்  எனக்குத்தெரிந்து  கலக்கல்  ஜெய்  என  சொல்ல  வைத்த  நடிப்பு . அதற்கு  நேர்  மாறாக  தளபதி  படத்தில்  அமைதியான  கணவனாக  ஸ்ரீ வித்யாவிக்குத்துணையாக  நடித்திருப்பார் . ஆக்சன்  காட்சிகளில்  நல்லா  ஃபைட்  போட்டிருக்கிறார்


 நாயகி  ஆக  புதுமுகம்  ஜெயப்பிரபா தேவி  கச்சிதமாக  நடித்திருக்கிறார். லேடி  பாஸ்  ஆக  ராஜ  சுலோச்சனா  ஆர்ப்பாட்டமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்.  கெஸ்ட்  ரோலில்  விஜயகுமார்  வந்து   போகிறார்


 சவப்பெட்டி  தயாரிப்பாளர்  ஆக  எஸ்  ஏ  அசோகன்  ஆர்ப்பாட்டமான  நடிப்பு . நாயகியின்  அப்பாவாக  ஜமீன்  தாராக  செந்தாமரை .  காமெடி  டிராக்கிற்கு  சுருளி  ராஜன்.  வெண்ணிற  ஆடை  மூர்த்தி  கூட  ஒரு  ரோலில்  வருகிறார்


 எம் எஸ்  விஸ்வநாதன்    இசையில்  நான்கு  பாடல்கள்  , அவற்றில்  இரண்டு  பாடல்கள்  மெகா  ஹிட் 


பாபுவின்  ஒளிப்பதிவு  மிகவும்  பரப்ரப்பாகப்பேசப்பட்டது   இரண்டே  கால்  மணி  நேரம்  ஓடுமாறு  எடிட்டர்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்  ( எஸ்  பி   முத்து  ராமன் )


1  அந்தக்கால  கட்டத்திலேயே  ஹெலிகாப்டர்  சேஸ்  பிரமாதமாக  அமைத்தது .  ரசிகர்களிடையே  அது  பற்றி  பரபரப்பாகப்பேச  வைத்தது 


2  கள்ளக்கடத்தல்  பாஸ்  ஆக  ஒரு  லேடியை   வடிவமைத்த  விதம்  தமிழ்  சினிமாவுக்கு  அதுவே  முதல்  முறை 


3  முதல்  30  நிமிடக்காட்சிகள்  பிரமாதமான  மிஸ்ட்ரி  எலிமெண்ட்ஸ்  உள்ளடக்கியவை . ஒரே  மாதிரி  சம்பவங்கள்  ரிப்பீட்  ஆனாலும்  இரு  வேறு  போலீஸ்  ஆஃபீசர்கள்  அதை  எப்படி  மாறுபட்ட  விதத்தில்  டீல்  செய்கிறார்கள்  என  காடிய  விதம்  கிளாசிக் 

செம  ஹிட்  சாங்க்ஸ்

1   அரங்க  நாயகி \

2 அச்சம்  என்னை  நெருங்காது 

3   கையில்  பூ  எடுப்போம்

4   ஆகாயத்தில்  தொட்டில்  கட்டி 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஓப்பனிங்கில்  போலீஸ்  ஆஃபீசர்  நாயகன்  ஆன  சீக்ரெட்  ஏஜென் ட்  இடம்  நீங்க  போலீஸ்  என்பது  யாருக்கும்  தெரியக்கூடாது  என்கிறார். ஆனால்  அப்போதுதான்  முதல்  முறை  பார்த்த  பெண்ணிடம்  நாயகன்  உளறி  விடுகிறார். பெண்ணிடம்  ரகசியம்  சொல்வது  என்பது  மேடை  ஏறி  மைக்  பிடித்து  அறிவிப்பதற்கு  சமம்  என்பது  அவருக்குத்தெரியாதா? 

2  நாயகன்   தன்  தலைமுடி  கலரை  மட்டும்  மாற்றி  ஒரு  விக்  வைத்தால்  அவரை  யாருக்கும்  அடையாளம்  தெரியாதா?   எம் ஜி ஆர்  படங்களில்  ஒரு  தாடி  அல்லது  மரு  வைத்தால்  மாறு  வேஷம், இதில்  விக்  மாற்றினால்  வேறு  ஆள் ? 

3  பெரிய  கடத்தல்  பாஸ்  ஆன  அந்த  லேடி  நாயகனைப்பார்த்து  மயங்காமல்  நாயகியை  எதிர்த்த  பெண்  முதல்  இரவுக்குப்பின்  அவரிடம் மயங்கியது  கண்டு  நாயகன்  மேல்  ஆசைப்படுவது  அபத்தம், . அதை  விட  அபத்தம்  நாயகன்  அந்த  லேடியை  வாய்ப்பிருந்தும்  தொடாமல்  ராமன்  இமேஜ்  காப்பது  அவ்ளோ  நல்லவனாய்யா  நீ  என  கேட்கச்சொல்கிறது 


4  உங்களூக்கு  ஏதாவது  பிரச்சனை  எனில்  அந்த  ஏரியா  போலீஸ்  ஸ்டேஷனில்  உதவி  கேளூங்கள்  என  ஆஃபீசர்ஸ்  சொல்லியும்  தனக்கு  உணவு , தண்ணீர்  கிடைக்காதபோதும்  நாயகன்  போலீஸ்  ஸ்டேஷன்  விசிட்  கூட  அடிக்கவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   அந்தக்கால  மிஸ்ட்ரி  த்ரில்லர்  இப்போது  பார்த்தாலும்  ரசிக்கும்படி  இருக்கிறது . முதல்  அரை  மணி  நேரக்காட்சிகள்  அட்டகாசம், பின்  பாதி  மாமூல்  மசாலா  . ரேட்டிங்  2.75 / 5 


துணிவே துணை
சுவரொட்டி
இயக்கம்எஸ்பி முத்துராமன்
எழுதியவர்பஞ்சு அருணாசலம்
உற்பத்திபி.வி.தொளசிராமன்
நடிக்கிறார்கள்ஜெய்சங்கர்
ஜெயபிரபா
எஸ். ஏ. அசோகன்
ராஜசுலோச்சனா
ஒளிப்பதிவுபாபு (SIC A)
திருத்தியவர்ஆர் விட்டல்
இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்
தயாரிப்பு
நிறுவனம்
PVT புரொடக்ஷன்ஸ்
வெளிவரும் தேதி
  • 6 ஏப்ரல் 1976
நேரம் இயங்கும்
137 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்