இயக்குநர் ஹெச் வினோத் 2014ல் சதுரங்க வேட்டையில் ஒரு கலக்கு கலக்கினார். திரைக்கதை, வசனம் தான் படத்தின் மாஸ் ஹீரோ . ஒருத்தனை ஏமாத்தனும்னா அவன் கிட்டே கருணையை எதிர்பார்க்கக்கூடாது, அவன் ஆசையைத்தூண்டனும் போன்ற பிரமாதமான வ்சனங்கள் பட்டி தொட்டி எல்லாம் ஹிட் ஆனது . 2017ல் தீரன் அதிகாரம் ஒன்று படம் ரிலீஸ் ஆனபோது அந்தப்படத்தில் கையாண்ட அவரது டீட்டெய்லிங் பலரையும் ஆச்சரியப்படுத்தியது
மூன்றாவது படமாக அமிதாப் பச்சன் நடித்த பிங்க் ஹிந்திப் படத்தின் ரீமேக் என்றபோது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தனர், காரணம் பிங்க் கில் அமிதாப் ரோல் அண்டர் ப்ளே ஆக்ட் பண்ணிய ரோல்., ஆனால் அதில் மாஸ் எலிமெண்ட் சேர்த்து கூஸ்பம்ப் ஃபைட்டுடன் அதையும் நேர் கொண்ட பார்வை என 2019 ல் ஹிட் ஆக்கினார். ஆனால் 2022ல் வெளியான வலிமை அவரது முதல் தோல்வி . காரணம் அவரும் அட்லீயின் பாதையில் ஏற்கனவே வெளிவந்த மெட்ரோ (2016) படத்தின் கதையை பட்டி டிங்கரிங் பார்த்ததுதான்
இப்போது வந்திருக்கும் துணிவு கூட மணி ஹெயுஸ்ட் வெப் சீரிசை பட்டி டிங்கரிங் செய்து ஷஙகர் ஜெண்ட்டில் மேன், இந்தியன் படத்தில் செய்தது போல் ஒரு வலிமையான ஃபிளாஸ்பேக்கை வைத்து ஒப்பேற்றி விட்டார்
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஒரு பிரைவேட் பேங்க் சேர்மன். அவன் வங்கி ஊழியர்கள் உதவியுடன் மக்களை மியூச்சுவல் ஃபண்ட்ஸில் பணம் முதலீடு செய்யத்தூண்டுகிறான். அதில் சேர்ந்த 25,000 கோடி பணத்தை பொய்யாக ஏற்படுத்திய இவனது கம்ப்பெனி ஷேர்களில் ,முதலீடு செய்து அதில் நட்டம் ஆனது போல பொய்க்கணக்கு காட்டி அந்தப்பணத்தை ஆட்டையைப்போட திட்டம் போடுகிறான்
அவனது பேங்க்கில் மக்கள் பணம் 1000 கோடி டெபாசிட்டாக வங்கிக்கணக்குகளில் இருக்கிறது. அதனுடன் கணக்கில் வராத பிளாக் மணி 500 கோடி இருக்கிறது இப்போ அந்த 500 கோடியைக்கொள்ளை அடித்தால் அந்த வங்கியை வெடி வைத்து தகர்த்து விட்டால் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் இழப்பீடும் பெற முடியும் என திட்டம் தீட்டுகிறான்
ஹீரோ விடம் இந்த திட்டத்திற்காக முதலில் அணுகுகிறான். 500 கோடி பிரஜெக்ட் எல்லாம் பண்ண முடியாது என ஹீரோ மறுக்க வில்லன் வேறு ஒரு கேங் செட் செய்கிறான். திட்டம் வெளியில் தெரிந்த ஹீரோவைப்போட்டுத்தள்ள முயற்சிக்க ஹீரோ எஸ் ஆகி விடுகிறார்
இப்போது வங்கியில் ஹீரோ , வில்லனின் ஆட்கள் , இன்னொரு கும்பல் என மூன்று கும்பல் கொள்ளை அடிக்க ஒரே நாளில் புகுந்து விடுகின்றன . இதற்குப்பின் யாருக்கு வெற்றி கிடைத்தது ? மக்கள் பணம் திரும்ப மக்களிடமே வந்ததா? என்பதுதான் மீதி திரைக்கதை
ஹீரோவாக அஜித் குமார். ஆரம்பம், வீரம் கால கட்டத்தில் அவாது சில்வர் கிரே ஹேர் ஸ்டைல் சால்ட் அண்ட் பெப்பர் லுகில் நன்றாக இருந்தது , ஆனால் முழுக்க முழுக்க நரை முடியுடன் நடிப்பதை அவர் இனி மறு பரிசீலனை செய்ய வேண்டும் . இடைவேளை வரை அவரது ராஜ்ஜியம் தான் , பின் பாதியில் இன்னொரு ஃபிளாஸ்பேக் வருகிறது. ஹீரோ இல்லாமல் வரும் அந்த ஃபிளாஸ்பேக் அஜித் ரசிகர்களுக்கு சோர்வைத்தந்தாலும் சாமான்ய பொது ஜனங்களுக்கு சுவராஸ்யமாகத்தான் இருக்கிறத
மஞ்சு வாரியர் தான் நாயகி, ஆனால் லவ் , டூயட் எதுவும் இல்லை. ஆக்சன் அவதாரம். நேர்மையான போலீஸ் கமிஷனராக சமுத்திரக்கனி கம்பீரம் சேர்த்திருக்கிறார் அவரது கேரக்டருக்கு. மகாநதி சங்கரின் போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரம், பட்டிமன்றப்பேச்சாளர் மோகன சுந்தரம் ஏற்று நடித்த மீடியா ரிப்போர்ட்டர் கேரக்டர் எல்லாம் அக்மார்க் ஹெச் வினோத் பிராண்ட் கேரக்டர் டிசைன்கள் ., அவர்களது பர்ஃபார்மென்ஸ்க்கு ஆரவாரமான வரவேற்பு
படத்தில் மூன்று பாட்டுக்கள் , மூன்றுமே தேவை இல்லாத ஆணிகள் தான். ஜிப்ரானின் இசையில் செல்லா செல்லா பாட்டு ஆல்ரெடி ஹிட்டு . பிஜிஎம் ஆங்காங்கெ தெறிக்கிறது . நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் ஏரியல் வியூ ஷாட்கள் எல்லாம் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக இருக்கிறது விஜய் வெலுக்குட்டியின் எடிட்டிங்கில் ரெண்டரை மணி நேரப்படதில் அரை மணி நேரம் போக மீதி எல்லாம் விறு விறுப்பாக நகர்கிறது
சபாஷ் டைரக்டர்
1 பேங்க் உள்ளே ஹீரோ வெளியே அவருக்கு உதவி செய்ய ஆட்கள் கான்செப்ட் மனிஹெய்ஸ்ட் வெப் சீரிசில் இருந்து சுட்டது . அதே போல் பணத்தை மக்களுக்கு தாரை வார்த்து கூட்டம், ஆதரவு சேர்ப்பதும்...
2 முதல் 40 நிமிடம் செம ஸ்பீடு திரைக்கதை , பின் பாதி படத்தில் பாதிப்படத்தில் ஹீரோ இல்லாமலும் சுவராஸ்யமாக போகிறது
ரசித்த வசனங்கள்
1 போறாத வேளை வந்தா பூ கூட பாம்பாகும்
2 சார், அந்த வீடியோ க்ளிப்பை நம்ம ஆஃபீஸ்க்கு அனுப்பவா?
உடனே அனுப்பாத, அவங்களா ஃபோன் பண்ணி ரெண்டு மூணு தடவை அப்டேட் கேட்கட்டும், டென்ஷன் ஆன பின் அனுப்பு, அப்போதான் உனக்கு இன்க்ரீமெண்ட் கிடைக்கும்
3 ஏம்மா, லேடி போலீஸூ , நேத்து நைட் வாட்சப்ல மெசேஜ் அனுபெச்சேன், ரிப்ளையே பண்ணலையே?
4 அடுத்த வாரம் எனக்கு ட்ரான்ஸ்ஃபர், மாசம் மாமூலே 5 லட்சம் வரும்
5 ஒரு கிரிமினல் போலீஸ் கிட்டே மாட்டும் முன் அவன் மக்களுக்கு ஹீரோவாத்தான் தெரிவான்
6 கமிஷனர் சார்.. யூ ஸ்மார்ட்.. என்னை ஜெயிக்க என்னோட வாழ்த்துகள்
7 கஸ்டமரை பொறி வெச்சுப்பிடிக்கனும், வெறும் பொறி இல்லை , வடை வெச்சு பிடிக்கனும்
8 இந்த டையை எதுக்கு கட்டக்குடுத்திருக்கோம்?
பேங்க் ஸ்டாஃப்ஸ் எல்லாரும் டீசண்ட்டா தெரியனும்னா?
இல்லை , தப்பித்தவறி உண்மையை மக்களிடம் சொல்லிடக்கூடாதுனு
9 எதுக்கு கடன் வாங்கனும் ? எதுக்கு கடன் வாங்கக்கூடாது , இதெல்லாம் மக்கள் தான் புரிஞ்சுக்கனும்
10 மக்களுக்கு அவங்களை எண்ட்டெர்டெய்மெண்ட் பண்றவங்கதான் பாஸ் , அவங்களை ச்ந்தோஷப்படுத்தறவன் தான் ஸ்டார்
11 கிரிக்கெட் டீம் ஒண்ணு பணத்தை வாங்கிட்டு தோத்துபோனாங்க . கொஞ்ச நாள் கழிச்சு அதே டீம் விளையாட வந்துது, ஜனங்க பழசை மறந்துடுவாங்க , அதே மாதிரிதான் பேங்க்ஸ் , ஃபைனான்ஸ் எல்லாம் ,மக்களோட மறதி தான் நம்மைக்காப்பாத்தும்
12 மக்கள் பொய்களை நம்ப ஆரம்பிச்சிட்டா வியாபாரிகள் அதை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சுடுவாங்க
13 மனுசன் ஏன் இவ்வளவு சுயநலமா இருக்கான் ?
சுயநலமா இருக்கறதாலதான் அவன் மனுசன்
14 எங்க பேங்க்கும், மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனியும் அண்ணன், தம்பி மாதிரி , தம்பி தப்பு பண்ணுனா அண்ணன் எப்படிபொறுப்பாக முடியும் ?
பளார்
எதுக்கு சார் அடிக்கறிங்க ?
தம்பி தப்பு பண்ணுனா அண்ணன் அடிக்கத்தான் செய்வான்
15 உதாரணத்தை மாத்தி சொல்றேன். ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தறோம், அவன் தப்பு செஞ்சா என்ன பண்ண?
தறுதலையா போற அளவுக்கு விடறவன் எதுக்குடா தத்து எடுக்கனும் ?
16 உங்க பேங்க்ல என் அக்கவுண்ட்ல மினிமம் பேலன்ஸ் 5000 ரூபா இருந்துதே?
எஸ் எம் எஸ் அலெர்ட் சார்ஜ் 40 ரூபா. அதை நீங்க கட்டலை , மினிமம் பேலன்ஸ் 5000 ல இருந்து அதை கட் பண்ணிட்டோம், இப்போ பேலன்ஸ் ரூ 4960 . இப்போ நீங்க மினிமம் பேலன்ஸ் 5000 ரூபா மெயிண்ட்டெயின் பண்ணலை, அதனால மாசம் 500 ரூபா ஃபைன், 10 மாசத்துல அந்த 5000 காலி
17 உங்க பேங்க்ல பணம் போடறதுக்கு உண்டியலில் போட்டு வெச்சாக்கூட அசலாவது அப்படியே இருந்திருக்கும்
18 1000 ரூபா திருடறவனை போலீஸ் லாக்கப்ல வெச்சு அடிக்கறீங்க , 25,000 கோடி மக்கள் பணத்தை திருடுனவனை பெரிய மனுசன்னு தயங்கறீங்க
19 மியூச்சுவல் ஃபண்ட்ல போட்ட பணம் எப்படி லாஸ் ஆச்சு ?
நாங்க் போட்ட ஷேர் லாஸ் ஆகிடுச்சு
ஏன்? நல்ல கம்ப்பெனியா பார்த்துப்போட வேண்டியதுதானே?
20 அவனுக்கு மக்கள் சப்போர்ட் இருக்கு சார்
முதல்ல அவனைப்போட்டுத்தள்ளுங்க, அதுக்குப்பின் நாமா ஏதாவது கதை கட்டி விட்டுக்கலாம் , உயிரோட இருக்கறவன் போடறதுதான் கேஸ் , உயிரோட இருக்கறவன் சொல்றதுதான் வரலாறு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஹீரோ ஒரு சீனில் பேங்க் கில் தகர்க்கப்பட்ட சுவர் கல்லை ஃபுட்பால் போல காலால் உதைக்கிறார்.. நிஜத்தில் அப்படி செய்தால் கால் பெருவிரல் காணாமல் போய் இருக்கும்
2 ஹீரோ ஒரு சாதா துப்பாக்கியோடு எல்லாரையும் சுட்டு வீழ்த்துகிறார். அடியாட்கள் , வில்லன் ஆட்கள் , போலீஸ் எல்லாரும் புதுப்புது துப்பாக்கிகளோடு களம் இறங்கியும் ஒன்றும் செய்ய முடியவில்லை
3 க்ளைமாக்சில் வில்லன்கள் மூன்று பேரையும் சேரில் கட்டிப்போட்டு க்ளாஸ் எடுப்பது , அடிப்பது எல்லாம் பார்க்க ஜாலியா இருக்கு , நடைமுறையில் சாத்தியம் இல்லை
4 மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஷெர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்யும்போது குறிப்பிட்ட 10 ஷேர்களில் மட்டும் முதலீடு செய்ய முடியாது . செபி ரூல்ஸ் அதை அனுமதிக்காது
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பொத்தாம்பொதுவாக வங்கிகள் , மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எல்லார் மேலயும் குற்றசாட்டு வைப்பதில் நியாயம் இல்லை என்றாலும் சுவராஸ்யமாக காட்சிப்படுத்தியமைக்காக பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 /5 ஆனந்த விகடன் மார்க் 43
Thunivu | |
---|---|
Directed by | H. Vinoth |
Written by | H. Vinoth |
Produced by | Boney Kapoor |
Starring |
|
Cinematography | Nirav Shah |
Edited by | Vijay Velukutty |
Music by | Ghibran |
Production companies | |
Distributed by | Red Giant Movies |
Release date |
|
Running time | 146 minutes[1] |
Country | India |
Language | Tamil |
Budget | ₹200 crore[2][3] |
Box office | est. |